Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு எதிரணியினரின் நிலைப்பாட்டிலேயே நாம்

Featured Replies

கூட்டு எதிரணியினரின் நிலைப்பாட்டிலேயே நாம்

2-f92179b2d8b4dc5f62ab2c3892becc84476b967b.jpg

 

பிரதமர் அறிவிப்பு; புதிய அரசியலமைப்்பு குறித்து மக்களே தீர்மானிக்க வேண்டும் என்கிறார் 
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

நாட்டில் ஒன்­பது மாகா­ணங்கள் உள்­ ளன. அதனை எட்­டாகுறைக்கவோ அல்­லது 15 ஆக கூட்­டவோ எம்மால்  முடி­யாது. வடக்கு,கிழக்கு இணைப்­பினை பல­ வந்­த­மாக செய்ய முடி­யாது. அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. அதனை மக்­களே தீர்­மா­னிக்க வேண் டும். அத்­துடன் தற்­போது இடைக்­கால அறிக்கை மாத்­தி­ரமே சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 

இப்­போது இது தொடர்­பான விவாதம் நிறை­வ­டைந்த பின்னர் அர­சி­ய­ல­மைப்பு பணிக­ளுக்­கான அடுத்தகட்ட நட­வ­டிக்­கையை தமிழ், சிங்­கள சித்­திரை புத்­தாண்டின் பின்­னரே ஆரம்­பிக்க முடியும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

கூட்டு எதிர்க்­கட்சி முன்­வைத்­துள்ள நிலைப்­பாட்­டி­லேயே நாமும் உள்ளோம்.

எம்மால் இணக்­கப்­பாட்­டுக்கு வர முடியும். நானும் சிங்­க­ளவன் தான். நாம் சிங்­க­ள­வர்­களை அழிக்க முனைய வில்லை. ஒற்­றை­யாட்சி, பெளத்த மத முன்­னு­ரிமை நீக்கும் நோக்கம் எமக்கு இல்லை. எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை முன்­னெ­டுத்து முன்­செல்­வதா? அல்­லது இடை­நி­றுத்தி விட்டு அழித்து விடு­வதா? என்­ப­தனை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று புதன்­கி­ழமை இடைக்­கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டின் இறை­மையை பாது­காக்கும் வகையில் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­மந்தன் வலி­யு­றுத்­தினார். இந்­நி­லையில் தற்­போது இடைக்­கால அறிக்கை தொடர்­பி­லேயே விவாதம் நடத்­து­கின்றோம். பாரா­ளு­மன்­றத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தின் பிர­கா­ரமே நாம் அர­சி­ய­ல­மைப்­பினை நிறு­வினோம். அத்­துடன் ஜனா­தி­பதி தேர்­தலின் போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது கொள்­கையில் அர­சி­ய­ல­மைப்பு சபையின் ஊடாக தீர்வு காண்­ப­தாக கூறினார். அதனை நாமும் கூறினோம். ஆகவே அர­சி­ய­ல­மைப்பு சபை­யினை உரு­வாக்­கு­வ­தற்கு மக்­களின் ஆணை உள்­ளது. இதன்­பி­ர­கா­ரமே அர­சி­ய­ல­மைப்பு சபை­யினை உரு­வாக்­கினோம்.

அர­சி­ய­ல­மைப்பு செயற்­பாடு

இதன்­படி மக்­களின் ஆணையை மீறி செயற்­பட முடி­யாது. மக்­களின் ஆணையை மீறு­மாறு எவ­ருக்கும் கூற முடி­யாது. அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் அர­சி­ய­ல­மைப்பு சபை­யினை அனை­வரின் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றினோம். இதற்கு அனை­வ­ரும ஆத­ரவு வழங்­கினர். இத­னை­ய­டுத்து ஆறு உப குழுக்­களை நிய­மித்தோம். மேல­தி­க­மாக குழு­வொன்று தேவைப்­பட்­ட­மை­யினால் மொத்­த­மாக ஏழு குழுக்­களை நிய­மித்தோம். அத்­துடன் அர­சி­ய­ல­மைப்பு பணி­க­ளுக்­கான காரி­யங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு வழி­ந­டத்தல் குழு­வினை நிய­மித்தோம். இவை அனைத்தும் அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யாகும். இதன்­படி உப குழு­வுக்கு வழங்­கப்­பட்ட பொறுப்­பு­க­ளுக்கு அப்பால் உள்ள விட­யங்­களை வழி­ந­டத்தல் குழு ஆராயும். இதன்­பி­ர­காரம் அர­சி­ய­ல­மைப்பு வரைபு, அரச நிர்­வாகம், அதி­காரம் பகிர்வு, தேர்தல் முறைமை, நீதித்­துறை ஆகி­ய­வற்றை வழி­ந­டத்தல் குழு ஆராயும்.

வழி­ந­டத்தல் குழுவில் என்ன நடக்­கின்­றது? எமக்கு அதன் காரி­யங்­களை தெரிய வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கோரினர். இதன் பிர­கா­ரமே வழி­ந­டத்தல் குழுவில் இது­வரை நாங்கள் என்ன ஆராய்ந்தோம். என்ன பேசினோம் என்­ப­தனை பாரா­ளு­மன்றம் அறி­வ­தற்­கா­கவே இடைக்­கால அறிக்­கையை சமர்ப்­பித்தோம். இதன்­படி இது­வரை வழி­ந­டத்தல் குழுவில் 73 கூட்­டங்­களை நடத்­தி­யுள்ளோம். 73 கூட்­டங்­களில் ஆராய்ந்த விட­யங்கள், பேசி­ய­வை­களை கோவை­யாக சமர்ப்­பித்­துள்ளோம். இது அர­சி­ய­ல­மைப்­புக்­கான வரைபு அல்ல. இடைக்­கால அறிக்கை மாத்­தி­ர­மே­யாகும். இந்த அறிக்­கையில் மாற்று யோச­னை­க­ளையும் உள்­ள­டக்­கி­யுள்ளோம்.

உப குழு அறிக்­கையை வாசிக்­க­வே­யில்லை

 இடைக்­கால அறிக்கை தொடர்பில் மூன்று நாட்­க­ளாக விவாதம் நடத்­து­கின்றோம் நாளை வரை ( இன்று) விவாதம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே விவா­தத்தின் பின்னர் அடுத்த கட்ட நட­வ­டிக்கை குறித்து பேசுவோம். இதன்­பின்னர் தான் எமக்கு வேலை உள்­ளது. எனினும் உண்­மையில் கூற போனால் சமர்ப்­பிக்­கப்­பட்ட உப குழுவின் அறிக்­கையை இது­வரை நாம் ஆரா­யவே இல்லை. அதனை இது­வரை நான் வாசிக்­கவும் இல்லை.

அடுத்த கட்ட நட­வ­டிக்கை

சித்­திரை புத்­தாண்டின் பின்னர்

ஆனால் இடைக்­கால அறிக்­கையை பயன்­ப­டுத்­தியும் உப குழு அறிக்­கை­களை சுட்­டிக்­காட்­டியும் மக்­க­ளி­டையே பயத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். அச்­ச­மூட்­டு­கின்­றனர். எனவே இது அர­சி­ய­ல­மைப்­புக்­கான இறுதி வரைபு அல்ல. அர­சி­ய­ல­மைப்­புக்­கான இறுதி வரைபு முன்­வைப்­ப­தற்கு அதி­க­ளவில் காலம் எடுக்கும். இவற்றை அவ­ச­ர­மாக செய்து விட முடி­யாது. இதன்­படி எப்­ப­டியும் அர­சி­ய­ல­மைப்­புக்­கான அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை மார்ச் மாதத்­திற்கு பிறகே முன்­னெ­டுக்க முடியும். ஏனெனில் உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க வேண்டும். அதற்கு பிர­சா­ரங்கள் செய்ய வேண்­டி­யுள்­ளது. இந்த நேரத்தில் அர­சி­ய­ல­மைப்பு பணி­களை முன்­னெ­டுக்க முடி­யாது. ஆகவே தமிழ் சிங்­கள புத்­தாண்­டுக்கு பின்­னரே அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்க முடியும். இதன்­போது அர­சியல் கட்­சி­க­ளுடன் பேசுவோம்.

இறுதி வரை­புக்­கான செயற்­பாடு

 அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தாயின் பொது மக்­களின் ஆத­ரவும் ஆலோ­ச­னை­களும் அவ­சி­ய­மாகும். அதன்­பி­ர­கா­ரமே அர­சி­ய­ல­மைப்பு வரைபு வரும். இதில் எந்­த­வொரு மறை­முக தன்­மையும் கிடை­யாது. எனவே இது தொடர்பில் விரி­வாக ஆராய்ந்து அதன்­பின்­னரே இறுதி அறிக்­கையை நாம் முன்­வைப்போம். மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்ற முடி­யாத பட்­சத்தில் திருத்­தங்கள் செய்­யப்­பட்டு அமைச்­ச­ர­வையில் முன்­வைக்­கப்­பட்டு மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு வந்து மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றுவோம்.

இதன்­பின்னர் தேவை­யாயின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்வோம். அதற்கு அப்பால் அர­சி­ய­ல­மைப்பு சபையில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யு­டன இறுதி வரைபு நிறை­வேறும் பட்­சத்தில் நேர­டி­யாக அமைச்­ச­ர­வைக்கு சென்று அதன்­பின்னர் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்து முன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேறும் பட்­சத்தில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­படும். இதுவே செயற்­மு­றை­யாகும். எனவே எவ்­வா­றி­ருப்­பினும் மக்­களின் தீர்­மானம் அவ­சி­ய­மாகும். எனினும் தற்­போது நாடு பிள­வு­பட போவ­தாக கூற முடி­யாது.

பிரச்­சி­னையின் வர­லாறு

அர­சியல் கட்­சி­க­ளி­டையே பல கருத்­துகள் உள்­ளன. எனினும் முதற்­த­ட­வை­யாக அனைத்து கட்­சி­களின் நிலைப்­பா­டு­களை அறிக்­கையில் உள்­ள­டக்­கி­யுள்ளோம். அத்­துடன் முக்­கி­ய­மாக முன்­னைய அர­சி­ய­ல­மைப்பு பணி­களின் போது அர­சியல் கட்­சிகள் அனைத்தும் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. ஆனால் தற்­போது அனைத்து கட்­சி­க­ளையும் இணைத்­துள்ளோம். ஜீ.எல் பீரிஸ் ஐக்­கிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் வரைபு முன்­வைத்த போது நாம் எரித்தோம். எனினும் எப்­ப­டி­யா­வது தேசிய பிரச்­சினை தீர்வு வழங்­கியே ஆக வேண்டும். எனவே தேசிய பிரச்­சி­னையை தீர்த்து நாட்டை வளர்ச்­சிக்கு உட்­ப­டுத்த வேண்டும். ஆகையால் அர­சி­ய­ல­மைப்பு பணி­களை முன்­னெ­டுத்து முன்­செல்­வதா? இல்லை, இடை­ந­டுவே அதற்­கான பணி­களை இல்­லாமல் செய்­வதா? என்­ப­தனை தீர்­மா­னிக்க வேண்டும். இந்த பிரச்­சி­னையை தீர்க்­கா­ததால் நாடு கீழ் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. ஆகவே முதலில் பிரச்­சினை என்ன என்­ப­தனை இணங்­காண வேண்டும். பண்டா- செல்வா ஒப்­பந்தம், டட்லி செல்வா ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டன. எனினும் அதனை நிறை­வேற்ற முடி­ய­வில்லை. அதன்­பின்னர் ஜே,ர் ஜய­வர்­தன ஆட்­சி­கா­லத்தில் மாவட்ட கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. அதன்­பின்னர் அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்­த­சட்டம் நிறை­வேற்றி மாகாண முறை­மையை கொண்டு வந்தோம். எனினும் அதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தனர். நாடு பிள­வு­படும் என்­றனர். ஆனால் தற்­போது 13 என்ற தீர்­வுக்கே அவர்­களும் வந்­துள்­ளனர். அந்­ந­ள­வுக்கு எதிர்ப்­புகள் வெளிக்­கி­ளம்­பின. அன்று நாம் மாவட்ட அதி­கார பகிர்வு கோரிக்­கையை நிறை­வேற்­றி­யி­ருந்தால் இந்த பிரச்­சினை எழுந்­தி­ருக்­காது.

நாமும் சிங்­க­ள­வர்­களே

எனவே யுத்தம் நிறை­வ­டைந்தும் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. எமக்கு ஒற்­றை­யாட்­சியை நீக்க வேண்­டிய தேவை­யில்லை. நாங்­களும் சிங்­க­ள­வர்­களே. இந்த பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யினர் சிங்­க­ள­வர்­க­ளே­யாவர். அப்­படி இருக்கும் போது பெளத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­காமல் இருப்­போமா? அத்­துடன் விகா­ரைகள் நிர்­மா­ணித்து பெளத்த வளர்ச்சி வழி­செய்த நாங்கள் சிங்­க­ளத்தை அழிக்க முற்­ப­டு­வோமா?.எனவே பெளத்த மத முன்­னு­ரி­மை­யையும் ஒற்­றை­யாட்­சி­யையும் நீக்கும் நோக்கம் எமக்கு இல்லை. எனவே இது தொடர்­பாக பெளத்த மகா சங்­கத்­தி­னரை நாம் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளோம். எனவே நாம் பயத்­தினால் ஒட­போ­வ­தில்லை.

கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் நாமும் இணக்கம்

  தற்­போது மக்கள் மத்­தியில் பயத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள கூட்டு எதிர்க்­கட்­சியின் நிலைப்­பாடு இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவர்­க­ளது நிலைப்­பாட்­டுடன் நாம் இணங்­கு­கின்றோம். ஒற்­றை­யாட்சி, பெளத்த மத முன்­னு­ரிமை, தேர்தல் முறைமை ஆகி­ய­வற்­றுடன் நாமும் இணங்­கு­கின்றோம். நிறை­வேற்று அதி­கா­ரத்தை தக்க வைப்­பது தொடர்பில் பேச்சு நடத்தி இணக்­கப்­பாட்­டிற்கு வர முடியும்.

பிர­த­மரின் உரைக்கு கூட்டு எதிர்­கட்சி வர­வேற்பு

இதன்­போது தனது உரையை தொடர்ந்த பிர­தமர் ,

நாங்கள் இவர்­க­ளுடன் இணங்­கி­னாலும் அதற்கும் எதிர்ப்பு வெளி­யி­டு­கின்­றனர். எனினும் அதற்கும் எதிர்ப்பு தெரி­விக்­கி­னற்னர். . அப்­ப­டி­யாயின் நாங்கள் என்ன செய்­வது? ஆகவே உங்­க­ளுடன் இணங்கி போவ­தற்கு நாம் தயார். நீங்கள் அதனை எதிர்த்தால் என்ன செய்­வது? . அத்­துடன் வடக்கு கிழக்கு இணைக்க கூடாது என கூட்டு எதிர்க்­கட்சி யோசனை முன்­வைத்­துள்­ளது.

(இதன்­போது கூட்டு எதிர்க்கட்சியினர் கோஷமிட்டு இதற்கு என்ன பதில் என்ன? என்று கோரினர்.) இதன்போது பிரதமர் குறிப்பிடுகையில்,

இந்த விடயத்தில் என்னால் தீர்மானம் எடுக்க முடியாது. நாட்டில் மொத்தமாக 9 மாகாணங்கள் உள்ளன. அப்படியாயின் அந்த ஒன்பது மாகாணத்தை எட்டாக குறைக்கவோ அல்லது 15 ஆக கூட்டவோ எம்மால் முடியாது. வடக்கு கிழக்கினை பலவந்தமாக எம்மால் இணைக்க முடியாது.அதற்கு இடமளிக்க முடியாது. அதனை மக்களே தீர்மானிக்க வேண்டும் என கூறிய போது சபாபீடத்தில் இருந்து கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, குமார வெல்கம ஆகியோர் மேசையில் தட்டி வரவேற்றனர்.

இதனையடுத்து தனது உரையை தொடர்ந்த பிரதமர்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 க்கு அப்பால் தீர்வு வழங்கவே திட்டமிட்டார். ஆனால் அதற்கும் நாம் ஒத்துழைக்க முடியும். எனவே கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டிலேயே நாமும் உள்ளோம். இதில் மாற்றம் இல்லை. எனவே புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரச்சினை தீர்க்க இடமளிக்க வேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk

  • தொடங்கியவர்
மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதா? குறைப்பதா?
 

image_594e9e5e67.jpg“மாகாணங்கள் இரண்டை ஒன்றிணைத்தல் அல்லது மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், இவற்றில் எதையென்றாலும், நாட்டு மக்கள் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே செய்ய முடியும்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

“அதனைவிடுத்து, மாகாணங்களை ஒன்றிணைக்குமாறு பலவந்தமாகச் சென்று, நாடாளுமன்றத்தால் கூற முடியாது” என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  

மாகாணங்கள் ஒன்றிணைக்கப்படக்கூடாது என்பதுடன், மாகாணங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு இருத்தலும் கூடாது என்று

வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை பற்றிக் குறிப்பிட்டுப் பேசும் போதே, ரணில் விக்கிரமசிங்க மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.  

அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. அதில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“நாட்டில் தற்போது 9 மாகாணங்கள் இருக்கின்றன. முழு நாட்டினதும் இணக்கமின்றி அதை பத்தாகவோ அல்லது எட்டாகவோ அல்லது பதினைந்தாகவோ ஆக்க முடியாது. நாட்டின் சகல மக்களும் இணங்கினால், எம்மால் அதை பதினைந்தாகவும் சரி அல்லது மூன்றாகவும் சரி எப்படியும் மாற்றியமைக்க முடியும். மக்கள் இணக்கம் தெரிவித்தால் நாம் அதை செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றார். 

“எனினும், அதை மக்களால் தான் முடிவு செய்ய முடியும். அதைவிடுத்து அதைச் செய்யுமாறு நாடாளுமன்றம் பலவந்தமாகச் சென்று கூற முடியாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களையோ அல்லது சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களையோ ஒன்றிணைக்குமாறு நாம் சொல்ல முடியாது” என்று பிரதமர் விக்கிரமசிங்க இதன்போது மேலும் குறிப்பிட்டார்.    

http://www.tamilmirror.lk/செய்திகள்/மாகாணங்களின்-எண்ணிக்கையை-அதிகரிப்பதா-குறைப்பதா/175-206499

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

நாட்டில் ஒன்­பது மாகா­ணங்கள் உள்­ ளன. அதனை எட்­டாகுறைக்கவோ அல்­லது 15 ஆக கூட்­டவோ எம்மால்  முடி­யாது. வடக்கு,கிழக்கு இணைப்­பினை பல­ வந்­த­மாக செய்ய முடி­யாது. அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. அதனை மக்­களே தீர்­மா­னிக்க வேண் டும். அத்­துடன் தற்­போது இடைக்­கால அறிக்கை மாத்­தி­ரமே சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 

இப்­போது இது தொடர்­பான விவாதம் நிறை­வ­டைந்த பின்னர் அர­சி­ய­ல­மைப்பு பணிக­ளுக்­கான அடுத்தகட்ட நட­வ­டிக்­கையை தமிழ், சிங்­கள சித்­திரை புத்­தாண்டின் பின்­னரே ஆரம்­பிக்க முடியும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

 

4 hours ago, நவீனன் said:

எம்மால் இணக்­கப்­பாட்­டுக்கு வர முடியும். நானும் சிங்­க­ளவன் தான். நாம் சிங்­க­ள­வர்­களை அழிக்க முனைய வில்லை. ஒற்­றை­யாட்சி, பெளத்த மத முன்­னு­ரிமை நீக்கும் நோக்கம் எமக்கு இல்லை. எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­களை முன்­னெ­டுத்து முன்­செல்­வதா? அல்­லது இடை­நி­றுத்தி விட்டு அழித்து விடு­வதா? என்­ப­தனை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

 

ரணில் என்ற நரி.. இப்படிப் பேசல்லைன்னா தான் ஆச்சரியப்படனும். நரி.. எப்போதும்.. வேசம் போட்டுக் கொண்டிருக்க முடியாது. சொந்தக் கூட்டத்திடம் ஊளையிட்டுத்தான் ஆக வேண்டும். :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.