Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டலோனியா சுதந்திர பிரகடனம் சாதிக்குமா? சோதிக்குமா?

Featured Replies

கட்டலோனியா சுதந்திர பிரகடனம் சாதிக்குமா? சோதிக்குமா?

 

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் 
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

 

கட்­ட­லோ­னியா மாநில அர­சாங்கம் 27.10.2017 இல் தனி­நா­டாக சுதந்­தி­ர­மான அர­சாக பிர­க­டனம் செய்­துள்­ளமை உலகம் பூராகவும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிலும் அச்சு ஊட­கங்­க­ளிலும் தற்­போ­தைய சூழ்­நி­லையில் பிர­தான பேசு­பொ­ரு­ளாக இடம்­பி­டித்­துள்­ளது. இதற்கு முன்­ன­தாக ஐப்­பசி திங்கள் முதலாம் திகதி கட்­ட­லோ­னியா மாநில அர­சாங்கம் அம்­மா­நில மக்­க­ளி­டையே தனி­நாட்­டுக்­கான கோரிக்­கையை முன்­வைத்து சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நிகழ்­த்தி­யது.

அவ்­வாக்­கெ­டுப்பை ஸ்பெயின் மத்­திய அரசு சட்­ட­வி­ரோ­த­மா­னது எனப் பிர­க­ட­னப்­ப­டுத்தி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை தடுக்க முயற்­சித்­தது. எனினும் 40வீத­மான கட்­ட­லோ­னிய மக்கள் வாக்­கெ­டுப்பில் பங்­கு­பற்­றினர். 90 வீதத்துக்கும் மேலான மக்கள் சுதந்­திர நாட்­டுக்­காக வாக்­க­ளித்­துள்­ளனர். அடுத்து என்ன நிகழும் என சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரிகள், ஊட­கங்கள் எனப் பல தரப்­பி­னரும் தமது அபிப்­பி­ரா­யங்­களை வெளியிட்­டனர். ஸ்பெயின் மத்­திய அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டு­களைப் பிர­யோ­கித்து கட்­ட­லோ­னியா அர­சாங்­கத்தை அகற்றிப் புதிய தேர்தல் நடத்­தப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளது.

ஸ்பெயின் நாட்­டினைப் பற்றி ஓர­ள­வுக்கு புரிந்­து­கொண்­டால் ­கட்­ட­லோ­னியா நெருக்­க­டியை அறிந்­து­கொள்ள முடியும். ஸ்பெயின் முன்னர் ஸ்பானியா என அழைக்­கப்­பட்ட நாடாகும். பிர­ப­ல­மான சர்­வா­தி­காரி பிராங்கோ ஜனா­தி­ப­தி­யாக ஆட்சி நடத்­திய நாடாகும். ஐரோப்­பிய கண்­டத்தில் வர­லாற்­றுப்­ பு­கழ்­மிக்க நாடு என்­ப­துடன் கடல் எல்­லை­க­ளையும்,தரை எல்­லை­க­ளையும் கொண்ட நாடாகும். ஒரு பக்கம் ஆபி­ரிக்க நாடான மொரோக்கோ ஏனைய அயல் நாடு­க­ளாக போர்த்­துக்கல், பிரான்ஸ் ஆகி­யவை உள்­ளன. ஸ்பெயின் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக அரச தலைவர் அர­ச­னாவார். ஆனால் மிகச்­சி­றந்த ஜன­நா­யகப் பண்­பு­களைப் பின்­பற்றும் நாடு. பாரா­ளு­மன்ற ஜன­நா­யக ஆட்சி நடை­பெறும் நாடாகும். பிர­தி­நி­திகள் சபை, செனட் சபை என பாரா­ளு­மன்றம் இரு சபை­களைக் கொண்­டது.

பொரு­ளா­தார செழு­மைக்கும் பெயர் பெற்­ற­ நா­டா­கும். ­பொதுத் தேர்­தலில் அதிக ஆச­னங்­களைப் பெற்ற கட்சி பிர­தமர் பத­வியைப் பெற்று அமைச்­ச­ர­வையை அமைக்கும். பிர­தமர் அர­சாங்­கத்தின் தலைவர் ஆவார். ஸ்பெயின் சமஷ்டி அர­ச­மைப்­புள்ள நாடாகும். கட்­ட­லோ­னியா மாநிலம் ஏனைய மாநி­லங்­களைப் போன்று தன்­னாட்சி அதி­கா­ர­முள்ள மாநி­ல­மாகும். ஸ்பெயின் அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டு­களின் படி எந்த மாநி­லமும் பிரிந்து செல்ல முடி­யாது அவ்­வாறு முயற்­சிப்­பது சட்­ட­வி­ரோ­த­மா­னது.

இந்தப் பின்­ன­ணியில் ஐப்­பசி 01ஆம் திகதி இடம்­பெற்ற சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஸ்பெயி­னுக்கு நெருக்­க­டியைக் கொடுத்­துள்­ளது. இவ்­வாக்­கெ­டுப்பை ஸ்பெயின் மட்­டு­மல்ல ஐரோப்­பிய ஒன்றியம், இங்­கி­லாந்து, அமெ­ரிக்கா ஆகி­யவை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஸ்பெயி­னுடன் இரு­த­ரப்பு இரா­ஜ­தந்­திர உற­வு­களைப் பேணி வரும் எந்த நாடும் உள்­நாட்டுப் பிரச்­சனை ஏற்­படும் போது ஸ்பெயினை மட்­டுமே ஆத­ரிக்கும். இதுதான் இரு­த­ரப்பு உற­வுகள் தொடர்­பான இரா­ஜ­தந்­திர நடை­மு­றை­யாகும். உள்­நாட்டு விவ­கா­ரத்தில் வேறு ஒரு நாட்டின் தலை­யீடு கார­ண­மாக உள்­நாட்டில் பிரச்­சினை தலை­தூக்­கு­மானால் தலை­யீடு மேற்­கொண்ட நாடு பிரச்­ச­ினைக்­குள்­ளாகும் பகு­திக்கு ஆத­ரவு அளிக்கும். கட்­ட­லோ­னியா விவ­கா­ரத்தில் எந்த மூன்­றா­வது நாடும் சம்­பந்­தப்­ப­டாத படியால் சுதந்­திர பிர­க­ட­னத்தை எந்­த­நாடும் அங்­கீ­க­ரிக்­க­மாட்­டாது.

ஐப்­பசி 27ஆம் திகதி சுதந்­திர பிர­க­டனம் வெளியிட்ட தினத்தில் ஆயி­ர­மா­யிரம் கட்­ட­லோ­னிய மக்கள் ஊர்­வ­லங்­களை நடாத்தி தங்­களின் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தினர். கட்­ட­லோ­னிய மக்­களின் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் ஸ்பெயி­னி­லி­ருந்து பிரி­வதை ஆமோ­திப்­ப­தா­கவே தோன்­றி­யது. ஆனால் சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை 29ஆம் திகதி கட்­ட­லோ­னியா தலை­நகர் பார்­சி­லோ­னி­யாவில் நடை­பெற்ற பிரி­வினை வேண்­டாம். ஸ்­பெ­யி­னுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்ற கோஷத்­துடன் ஆயி­ர­மா­யிரம் கட்­ட­லோ­னியா மக்கள் பங்­கு­பற்­றிய ஊர்­வ­லங்கள் கட்­ட­லோ­னியா நெருக்­க­டியில் ஒரு திருப்­பு­மு­னை­யாகக் கரு­தப்­ப­டு­கின்­றது.

கட்­ட­லோ­னியா பிர­தேசம் ஸ்பெயின் நாட்டின் வரு­மா­னத்தின் 20 சத­வீ­தத்­தினைப் பெற்­றுக்­கொ­டுக்கும் மாநி­ல­மாகும். ஏரா­ள­மான தொழிற்­சா­லைகள், சேவை நிறு­வ­னங்கள்,வர்த்­தக நிறு­வ­னங்கள்,வங்­கிகள் யாவும் கட்­ட­லோ­னி­யாவில் இயங்­கு­கின்­றன. அம்­மா­நி­லத்தின் பொரு­ளா­தார செழு­மைக்கும் மக்­களின் உயர்­வான வாழ்க்­கைத்­தரம், கல்வி, சுகா­தா­ரத்­து­றை­களின் முன்­னேற்­றத்­துக்கும் இவையே கார­ணங்­க­ளாகும். தனி­நாட்டு சுதந்­தி­ரத்­திற்­கான வாக்­கெ­டுப்பு நடை­பெற்ற இத்­தி­னத்­தி­லி­ருந்து இன்­று­வரை ஏரா­ள­மான தொழிற்­சா­லைகள், வங்­கிகள், வேறு துறைசார் நிறு­வ­னங்கள் கட்­ட­லோ­னி­யாவை விட்டு விலகி வேறு இடங்­க­ளுக்கு நட­வ­டிக்­கை­களை மாற்­றி­விட்­டன. அர­சியல் ஸ்திரத்­தன்மை இல்­லாத கட்­ட­லோ­னி­யாவில் தொடர்ந்து இயங்­கு­வ­தற்கு அந்­நி­று­வ­னங்கள் விரும்­ப­வில்லை.

ஐரோப்­பிய மக்கள் வெறும் கோஷங்கள், வெற்று வாக்­கு­று­தி­களில் நம்­பிக்கை வைக்­க­மாட்­டார்கள். அவர்கள் பொரு­ளா­தா­ரத்­திற்கும் தர­மான வாழ்­வுக்­குமே முக்­கி­யத்­துவம் அளிக்கும் மனப்­பாங்கைக் கொண்­ட­வர்கள். ஒரு மாதத்­திற்குள் பொரு­ளா­தார ஜீவ­நா­டிகள் வெளியேறிச் சென்­றமை கட்­ட­லோ­னிய மக்­க­ளி­டையே மன­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. இதன் விளை­வா­கவே ஞாயிற்­றுக்­கி­ழமை 29ஆம் திகதி இடம்­பெற்ற பாரிய ஸ்பெயின் ஆத­ரவு ஊர்­வ­லங்கள் என சீ.என்.என். தெரி­வித்­துள்­ளது.

கட்­ட­லோ­னிய சுதந்­தி­ரத்­திற்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் சுதந்­திர பிர­க­ட­னமும் ஐரோப்­பிய பிரி­வி­னை­வாத - தேசி­ய­வாத இயக்­கங்­களை மேலும் உற்­சா­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஸ்பெயினின் பாஸ்க் தேசி­யமும் நீண்­ட­கா­ல­மாக பிரி­வினை கோரிப் போரா­டி­யது. பின்னர் 1978 அர­சியல் சாச­னத்தில் கூடிய அதி­கா­ரங்­க­ளு­ட­னான தன்­னாட்சி வழங்­கப்­பட்­டது. ஐரோப்­பாவில் ஏனைய நாடு­களில் குறிப்­பாக ஸ்கொட்லாண்ட் பிரிட்­ட­னி­லி­ருந்து பிரிந்து தனி­நா­டாக வேண்­டு­மென்ற சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் பிரிட்­ட­னுடன் தொடர்ந்தும் ஒன்­றாக இருக்க வேண்­டு­மென மக்கள் விருப்பு தீர்ப்­ப­ளித்­தது. பிரிட்டன் ஐரோப்­பிய ஒன்றியத்தி­லி­ருந்து வெளியேற­வேண்டும் என்ற மக்கள் தீர்ப்பு மீண்டும் ஸ்கொட்லாண்ட் பிரி­வ­தற்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடை­பெற வேண்­டு­மென்ற கோரிக்­கை­யை­ உற்­சா­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆனால் பிரிட்டன் அதை நிரா­க­ரித்­து­விட்­டது. எனினும் கட்­ட­லோ­னி­யாவின் சுதந்­திர பிர­க­டனம் ஸ்கொட்­லாந்து பிரி­வி­னை­வா­தி­களை மேலும் உச்­சா­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இத்­தா­லியின் வட­ப­கு­தி­க­ளான லம்­பாடி,வெனட்டோ பகு­திகள் நீண்­ட­கா­ல­மாக பிரி­வி­னை­களை அல்­லது கூடிய அதி­கா­ர­முள்ள தன்­னாட்சி கோரிக்­கை­களை நோக்கி போரா­டி­யது. அங்கும் தன்­னாட்சி அதி­கார அலகு வழங்­கப்­பட்­டது. எவ்­வா­றி­ருந்­த­போ­திலும் கட்­ட­லோ­னிய சுகந்­திர பிர­க­டனம் லம்­பாடி, வெனட்டோ பகு­தி­களில் பிரி­வி­னை­வாதத்தை தூண்­டி­யுள்­ளது. அதே­போன்று பெல்­ஜியம் நாட்­டிலும் பிலிமிஸ் இன மக்கள் தமது மொழி கலா­சாரம் ஆகி­ய­வற்றை பாது­காப்­ப­தற்கும் மேம்­ப­டுத்­து­வ­தற்கும் அவர்­களின் பிர­தே­ச­மான பிலண்­ட­றஸ்க்குக்கு தன்­னாட்சி அதி­கா­ரம் ­வேண்­டு­மென்று கோரி பல­ கட்­சிகள் இயங்­கு­கின்­றன. கட்­ட­லோ­னி­யா ­சு­தந்­திர பிர­க­டனம் இவர்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

மத்­திய, கிழக்கு ஆபி­ரிக்க பகு­தி­களில் இடம்­பெறும் மோதல்­களில் இலட்­சக்­க­ணக்­கான அக­திகள் மேற்கு ஐரோப்­பா­வினுள் புக­லிடம் தேடி வரு­கின்­றதில் பல மேற்கு ஐரோப்­பிய நாடு­களில் தேசி­ய­வாத கட்­சி­யி­னரின் வளர்ச்­சியைத் தூண்­டி­யுள்­ளது. அண்­மையில் ஜேர்­ம­னியில் இடம்­பெற்ற பொதுத் தேர்­தலில் தேசி­ய­வாத கட்சி முன்­னரை விட கூடு­த­லான ஆச­னங்­களைப் பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. எமது வாழ்வு, வச­திகள், வளங்கள் ஏனை­யோரால் சுரண்­டப்­ப­டு­கின்­றன. எமது நாடு எமக்கே என்­கின்ற தேசிய வாத சிந்­த­னைகள் பல­ம­டைந்­துள்­ளன.

உதா­ர­ண­மாக பிரிட்­டனில் இடம்­பெற்ற ஐரோப்­பிய ஒன்றியத்தி­லி­ருந்து வெளியேற வேண்­டு­மென்ற வாக்­கெ­டுப்­பில்­ பி­ரிட்­டன் வெளியேற வேண்­டு­மென்ற கோரிக்கை வெற்­றி­ பெற்­ற­மைக்­கான காரணம் பிரிட்­டனில் அக­திகள் பிரச்­சினை மக்­களின் வாழ்­வுக்கு, பொரு­ளா­தார செழிப்­பிற்கு, வேலை­வாய்ப்பு, கல்­லூரி பிர­வே­சங்­களில் ஏற்­ப­டு­கின்ற பாத­க­மான தாக்­கங்­களே காரணம் என்ற கருத்தை பல முன்­னணி ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதில் வேடிக்கை என்­ன­வெனில் பல மேற்கு ஐரோப்­பிய நாடு­களில் குறிப்­பாக பிரிட்­டனில் அகதி புக­லிடம் கோரி­ அ­க­தி­ வாழ்க்கை பெற்ற இலட்­சக்­க­ணக்­கான இலங்கை வட­ப­குதி தமிழ் மக்­களில் பெரும்­பா­லானோர் ஐரோப்­பிய ஒன்றியத்தி­லி­ருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கோரிக்­கைக்கே வாக்­க­ளித்­தனர் என தமிழர் சார்­பான பத்­தி­ரி­கைகள் பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு செய்­திகள் வெளியிட்­டன. திரை­கடல் ஓடியும் திர­வியம் தேடு எனும் முது­மொ­ழிக்­க­மைய நாட்டின் பிரச்­சி­னையைக் காட்டி அக­தி­வாழ்க்கை பெற்­ற­வர்கள் ஏனையோர் அக­தி­க­ளாக வரு­வதை எதிர்ப்­பது கப­டத்­த­ன­மா­னது.

இது இவ்­வா­றி­ருக்க ஐப்­பசி முதலாம் திக­திய சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் 27ஆம் திக­திய சுதந்­திரப் பிர­க­ட­னமும் ஸ்பெயின் மத்­திய அர­சாங்­கத்தின் அர­சியல் சாசன அடிப்­ப­டையில் சட்­ட­ந­ட­வ­டிக்­கை­களை முடுக்­கி­யுள்­ளது. தாய் நாட்­டுக்கு எதி­ராக கிளர்ச்சி செய்­தமை, நாட்டைப் பிரிக்க சதி­செய்­தமை, நாட்டின் நிதி­வ­ளங்­களைக் துஷ்­பி­ர­யோகம் செய்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து கட்­ட­லோ­னிய மாநில தலை­வர்­களை பத­வி­யி­லி­ருந்து நீக்கி நேர­டி­யாக ஸ்பெயின் மத்­திய அர­சாங்கம் மத்­திய ஆட்­சியை அமுல்­ப­டுத்­தி­யுள்­ளது. மாநில தலை­வர்கள் பெல்­ஜியம் நாட்­டிற்குள் சென்­றுள்­ளனர்.

27 ஆம் திகதி பிர­க­ட­னத்தின் பின்னர் 31 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை முத­லா­வது அலு­வ­லக நாளாகும். திங்­கட்­கி­ழமை ஸ்பெயின் மத்­திய அர­சாங்­கத்தின் நிர்­வ­கிப்பு ஸ்திர­மாக இருந்­தது. கடந்த 31ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கட்­ட­லோ­னிய அரங்­சாங்க பத­வி­யினர் ஸ்பெயின் மத்­திய அரசின் கட்­ட­ளைப்­படி தத்தம் கட­மை­க­ளுக்கு சென்­றுள்­ளனர். புதிய பொலிஸ் அதிபர் கட்­ட­லோ­னியா பிர­தே­சத்­திற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். ஸ்பெயின் அரச கட்­டுப்­பாடு தள­ராமல் இருப்­ப­தாக தெரி­கி­றது.

கட்­டா­லோ­னியன் முன்னாள் ஜனா­தி­ப­தியும் அவ­ரது அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­களும் பெல்­ஜி­யத்­திற்கு பய­ண­மா­கி­யுள்­ளனர். ஸ்பெயினின் சட்­டமா அதிபர் இவர்கள் மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய சில மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் சென்­றனர். ஐரோப்­பிய ஒன்றிய சட்­டங்­களின் படி ஒரு பிரஜை இன்­னொரு நாட்­டிற்கு செல்­ல­மு­டியும். அந்­த­வ­கையில் இவர்கள் சென்­றுள்­ளனர். ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கித்­தவர் பாது­காப்­புக்­கா­கவே பெல்­ஜியம் சென்­றுள்­ளதாக தெரி­வித்­துள்­ளார்கள். அவர்கள் அர­சியல் தஞ்சம் கோரப் போகின்­றார்கள் எனவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அதே­நேரம் பெல்­ஜிய அர­சாங்க பேச்­சா­ளர்கள் எத­னையும் திட்­ட­வட்­ட­மாக கூற­வில்லை. எதிர்­வரும் மார்­கழி 21ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் பதவி நீக்கம் செய்­யப்­பட்ட கட்­ட­லோ­னிய தலை­வர்கள் பங்­கு­பற்­றப்­போ­வ­தாக தெரி­வித்­துள்­ளனர். புதி­தாக தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்ற அர­சாங்­கமே கட்­ட­லோ­னி­யாவை நிர்­வ­கிக்கும். மார்­கழி 21ஆம் திகதி தேர்­தலில் பிரி­வி­னை­வா­தத்தை ஆத­ரிப்­ப­வர்கள் வெற்­றி­பெற்றால் ஸ்பெயின் அர­சாங்கம் எவ்­வாறு கையாளும் என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

அதே­வேளை பிரி­வி­னையை ஆத­ரிப்­போரும் எதிர்ப்­போரும் சம­ப­லத்தில் இருப்­ப­தாக தெரி­கின்­றது. எனினும் மார்­கழி 21 தேர்தல் முடி­வுகள் பிரச்­ச­ினை­களின் தொடர்ச்­சியை வெளிப்­ப­டுத்தக் கூடும். நாட்டில் சதி செய்­தமை, பிரி­வினை கோரி­யமை, நிதி­களைத் துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­கக்கு முகம் கொடுக்க வேண்டும். அர­சி­ய­ல­மைப்பு விதி­களின் படி இவர்கள் சிறை­வாசம் அனு­ப­விக்­க­வேண்டி வரலாம். எனினும், மார்­கழி 21 பொதுத்­தேர்­தலில் பிரி­வி­னை­வா­தத்தை ஆத­ரித்து பத­வி­நீக்கம் செய்­யப்­பட்ட முன்­னைய தலை­வர்கள் கூடு­த­லான ஆச­னத்தை கைப்­பற்­று­வார்­க­ளானால் கட்­ட­லோ­னி­யாவில் குழப்­பங்கள் ஏற்­பட வாய்ப்­புக்கள் உண்டு. ஸ்பெயின் மத்­திய அரசு குழப்­பங்­களை கட்­டுப்­ப­டுத்த மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கைகள் மேலும் அமை­தி­யின்­மையை உருவாக்க முடியும்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கட்டலோனிய பிரச்சினை ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரைகாலமும் இரண்டு நெருக்கடிகளை சமாளித்தது 2008–2009 இல் ஏற்பட்ட நிதி நெருக்கடி, பின்னர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக மேற்கொண்ட தீர்மானம் ஆகியவை இரண்டு நெருக்கடிகளாகும். கட்டலோனியா மூன்றாவது நெருக்கடியாகும். ஐரோப்பிய ஒன்றியம் இவ்விடயத்தில் தெளிவாக இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகள் அங்கத்துவம் கொண்ட அமைப்பு. நாம் மேலும் அங்கத்தவர்களை உருவாக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கட்டலோனியா பிரிவினையை விரும்பவில்லை. உலகின் எந்தசெல்வாக்கு மிக்க நாடும் இன்றுவரை கட்டலோனியா பிரிவினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. சீனா தனது வழமையான இராஜதந்திர நடைமுறையைப் பின்பற்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாடு உள்விவகாரத்தை ஸ்பெயின் நாட்டு அரசியலமைப்பு, ஏனைய சட்டங்களின் படி தீர்த்துக்கொள்ளும் எனவும் நாம் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளது. கட்டலோனியா நெருக்கடி சற்று தளர்ந்துள்ளதாகவே தோன்றுகின்றது.

இவ்வாறான சூழ்நிலைகளில் ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு செயற்படப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அதேவேளை ஸ்பெயினுடன் தொடர்ந்து வாழவேண்டும் எனவும் பிரிவினை வேண்டாம் என்ற ரீதியில் ஸ்பெயின் ஆதரவுக் கட்சிகள் மார்கழி 21 பொதுத்தேர்தலில் ஓரளவு திருப்தியான ஆசனங்களைப் பெற்றால் ஸ்பெயினில் மட்டுமல்ல ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் ஒலிக்கும் பிரிவினைக் குரல்கள் தானாக ஒடுங்கிவிடும் என சர்வதேச ஊடகங்கள தெரிவித்துள்ளன.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.