Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் பதவி துறக்க வேண்டும்

Featured Replies

சம்பந்தன் பதவி துறக்க வேண்டும்

 

2004 ஏப்ரல் மாதம் முடி­வுக்கு வந்­தி­ருக்க வேண்­டிய யுத்தம் விடு­த­லைப்­பு­லி­களின் பூரண செய­லி­ழப்­புடன் 2009 மே மாதம் வரை ஐந்து ஆண்­டுகள் எவ்­வாறு நீடித்­தது? யுத்­தத்தின் விளைவால் பல்­வேறு இனங்­களைச் சார்ந்த அப்­பாவி பொது­மக்கள் உட்­பட பெரும் எண்­ணிக்­கை­யானோர் கொல்­லப்­பட்­டார்கள் என்­பது இர­க­சி­ய­மல்ல. யுத்தம் முடிந்­த­வுடன் ஓர் ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தால், தேசத்­து­ரோகம் உட்­பட பல்­வேறு குற்­றங்­க­ளுக்கு ஆளா­க­வேண்­டி­ய­வர்கள் தாம் பெரும் வீரர்கள் என எடுத்­துக்­காட்ட மறைக்­கப்­பட்ட பல உண்­மைகள் வெளிச்­சத்­துக்கு வந்­தி­ருக்­கின்­றன.

யுத்­தத்தில் பலி­யா­ன­வர்­களின் எண்­ணிக்கை 50- – 60 ஆயிரம் வரையில் இருக்­கலாம். ஆனால் சிலர் அந்த எண்­ணிக்கை அதி­க­மா­ன­தென்றும் சிலர் குறை­வா­ன­தென்றும் கூறு­கின்­றனர். சுய இலா­பத்தில் அக்­கறை கொண்ட சிலர் மேற்­கொண்ட புத்­தி ­சா­து­ரி­ய­மற்ற தீர்­மா­னத்­தினால் எம்மை நாடி வந்த நல்­ல­தொரு சந்­தர்ப்­பத்தை நாம் இழந்­து­விட்டோம். 2004ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு வந்­தி­ருந்தால் நிலைமை முற்­று­ மு­ழு­தாக மாறு­பட்­டி­ருந்­தி­ருக்கும். துர­திஷ்­ட­வ­ச­மாக 2004ஆம் ஆண்டு இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்கு கிடைத்த சந்­தர்ப்பம் கைந­ழு­வி­யது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்­கை­ கூட வெகு­வாக குறைந்­தி­ருக்கும்.

இன்­றைய சூழ்­நி­லையில் தராக்கி என அழைக்­கப்­படும், ஊட­கத்­து­றையில் மிகவும் பிர­பல்­ய­மான தர்­ம­ரட்ணம் சிவராம் என்­ப­வரை ஒவ்­வொ­ரு­வரும் நன்கு அறிந்­தி­ருப்­பது நல்­லது. அவர் விடு­த­லைப்­பு­லி­களின் சார்­பா­ன­வரும், துணிச்சல் மிக்க ஊட­க­வி­ய­லா­ளரும் ஆவார். ஆனால் தமிழ் அர­சியல் கட்­சிகள் அனைத்­தையும் ஒரே குடையின் கீழ் கொண்­டு­வர வேண்­டு­மென மிகவும் ஆர்­வ­முடன் செயற்­பட்­டவர். ஆகவே தமி­ழர்கள், சிங்­க­ள­வர்கள், முஸ்­லிம்கள் என்ற பேத­மின்றி அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற அடிப்­ப­டையில், “தமிழ் கட்­சிகள் மூலை முடுக்­கு­களில் இருந்து ஒளித்து விளை­யாட முடி­யாது” என அவரால் எழு­தப்­பட்டு, ஆங்­கில தின­ச­ரியில் 11.-02-.2004 அன்று வெளி­யான கட்­டு­ரையின் மீது உங்­க­ளு­டைய கவ­னத்தை செலுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன். நீண்ட நாட்­க­ளாக இர­க­சி­ய­மாக மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பல விட­யங்கள் இவ­ரு­டைய அந்த கட்­டுரை மூலம் வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது. தராக்­கியின் இக்­கட்­டுரை வெளி­வந்த நேரத்தில் அதனை வாசித்­த­வர்கள் அக்­கட்­டு­ரையின் முக்­கி­யத்­து­வத்தை பற்றி தீவி­ர­மாக பரி­சீ­லிக்க தவ­றி­விட்­டனர். விடு­தலைப்புலிகள் ஆயு­தங்­களை கைவிட தயா­ராக இருந்­தனர் என்­ப­தையும் சகல தமிழ் அர­சியல் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைக்க முயற்­சிக்­கின்­றார்கள் என்­ப­தையும் உணர்ந்­திருந்தால் யுத்­தத்தால் ஏற்­பட்ட பெரும் அனர்த்­தத்­தி­லி­ருந்து நாட்டை காப்­பாற்­றி­யி­ருக்­கலாம்.

இக்­கட்­டு­ரையின் சாராம்சம் தராக்­கி­யி­னு­டைய “மர­ண­ சா­ச­னத்­திற்கும் உயி­லுக்கும்” ஒத்­த­தாகும். அக்­கட்­டு­ரையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பற்றி பின்­வ­ரு­மாறு கூறு­கின்­றது. “தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உண்­மையில் எப்­ப­டியோ அதிலும் பார்க்க கூடு­த­லாக மிகைப்­ப­டுத்­தியே காட்­டப்­ப­டு­கி­றது. பல­வி­த­மான பிற அழுத்­தங்கள் கொடுக்­கப்­ப­டாமல் இருந்­தி­ருந்தால் அது ஆரம்­பத்­தி­லேயே உள்­ளுக்­குள்ளே வலு­வி­ழந்து அற்­றுப்­போ­யி­ருக்கும். விடு­தலைப் புலி­க­ளா­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றது என்ற பெரும் மாயைக்கு முர­ணாக சில முன்­னணி தமிழ் அர­சி­யல்­வா­திகள் மனச்­சாட்­சிக்கு விரோ­த­மாக, பிள்­ளை­யையும் கிள்­ளி­விட்டு தொட்­டி­லையும் ஆட்­டு­கின்­றார்கள். அவர்­களே மனச்­சாட்­சிக்கு விரோ­த­மாக தங்­களின் இலாபம் கருதி புத்­தி­சா­லித்­த­ன­மான முறையில் புலி­களின் பெயரை பயன்­ப­டுத்­து­கின்­றனர். என்­னைக்­ கேட்டால் அவர்­களில் சிலர் தமிழ் மக்­க­ளு­டைய போராட்­டங்கள் அபி­லா­ஷைகள் ஆகி­ய­வற்றில் எவ்­வி­த­மான அக்­க­றையும் இல்­லா­த­வர்கள் என்றே கூறுவேன்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யா­லேயே ஆரம்­பிக்­கப்­பட்­டது என்­பதை தராக்கி மிகத் தெளி­வாக கூறி­யுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் என்ற கோதாவில் இரா.சம்­பந்தனே கையெ­ழுத்­திட்டார் என்­ப­தையும், ஏனைய மூன்று கட்­சி­களின் செய­லா­ளர்கள் என். கும­ர­கு­ரு­பரன், என்.பிர­சன்னா, சுரேஷ் பிரே­ம­சந்­திரன் ஆகியோர் முறையே அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ், ரெலோ, ஈ.பிஆர்.எல்.எப். சார்பில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­தனர். தராக்­கியின் இக்­கட்­டு­ரைக்கு மறுப்பு தெரி­விக்க எவ­ருக்கும் தைரியம் இருக்­காது.

தராக்கி தனது கட்­டு­ரையில் “வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஆர்­வ­முள்ள சில குழுக்கள் குறிப்­பாக மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த தமிழர் மறு­ம­லர்ச்சி கழ­கத்­துடன் புத்­தி­ஜீ­விகள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், சிவில் அமைப்­புக்கள், வர்த்­த­கர்கள், மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாணவத் தலை­வர்கள் ஆகியோர் பல மாதங்­க­ளாக மிகவும் சிர­மப்­பட்டு, தமிழ் அர­சியல் கட்­சிகள் ஒரே குடையின் கீழ், ஒரே கொள்கை, பொது சின்­ன­மான ‘உத­ய­சூ­ரியன்’ சின்­னத்தின் கீழ் 2004ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மென விரும்­பி­யி­ருந்­தனர் எனக் கூறி­யுள்ளார். அவர் மேலும், வடக்கில் இவ்­வாறு ஆத­ரவு தேடும் குழுக்கள், தமிழ் கட்­சிகள், அமைப்­புகள் ஆகி­யன தங்­க­ளுக்­கி­டையே காணப்­படும் ஆழ­மான வேறு­பா­டு­களை மறந்து, நீண்­ட­காலம் இரா­ணு­வத்­துடன் தொடர்­பு­களை கொண்­டி­ருந்­த­தையும், உரிமை மீறல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் பொருட்­ப­டுத்­தாது ஒரே குடையின் கீழ் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அவரின் கூற்­றுப்­படி அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் கட்சி ஆரம்­பத்தில் பொதுச்­சின்னம் விட­யத்தில் தயக்கம் காட்­டிய போதும் கடைசி நேரத்தில் ‘உத­ய ­சூ­ரியன்’ சின்­னத்தில் போட்­டி­யிட சம்­மதம் தெரி­வித்­தது. அத்­தோடு தராக்­கியின் கூற்­றுப்­படி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பொதுச்­சின்னம், பொதுக்­கொள்­கையின் அடிப்­ப­டை­யிலும் தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டு­மென்­பது தமிழ் தேசி­ய­வாத குழுக்­க­ளி­னதும் பெரும்­பா­லா­ன­வர்­களின் ஒன்­று­பட்ட கருத்துமாகும் எனக் கூறி­யுள்ளார்.

அவர் மேலும் கூறு­கையில், இந்த அபிப்­பி­ராயம் திங்­கட்­கி­ழமை திரு­கோ­ண­ம­லையில் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கிளைக்­கூட்­டத்தில் ஏக­ம­ன­தாக மேற்­கொண்ட தீர்­மா­னத்தில் அது பிர­தி­ப­லித்­தது. இதுதான் விடு­த­லைப்­பு­லி­களின் முடிவும் ஆகும். இந்த விட­யத்தில் கிளி­நொச்சி மௌனம் சாதித்­தது.

தராக்­கியின் கட்­டு­ரையில் “திரு­கோ­ண­மலை மாவட்­டக்­கிளை இதனை ஏக­ம­ன­தாக ஆத­ரித்­த­தென்றும், விடு­த­லைப்­பு­லி­களின் நிலைப்­பாடும் அதுவே என்றும் கிளி­நொச்சி மௌனம் சாதித்­தது” என்றும் மிகத் தெளி­வாகக் கூறி­யுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தமி­ழர்­களை பெரும்­பான்மை கொண்ட மாவட்­டங்கள் எட்டு ஆகும். ஆனால் சகல தமிழ் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைக்க வேண்­டு­மென அய­ராது உழைத்த தராக்கி எதற்­காக திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தையும், கிளி­நொச்சி மாவட்­டத்தையும் பற்றி விசேட அபிப்­பி­ராயம் தெரி­வித்து, ஏனைய ஆறு மாவட்­டங்­களை பற்றி எதுவும் குறிப்­பி­ட­வில்லை. உண்மை யாதெனில் தமிழ் கட்­சி­களை ஒரே குடையின் கீழ் கொண்­டு­வர வேண்­டு­மென்று மேற்­கொண்ட முயற்­சிக்கு எதி­ராக கிளி­நொச்­சியில் ஓர் சதித்­திட்டம் தீட்­டப்­பட்டு இருந்­ததை நன்கு அறிந்­தி­ருந்தார். என்னை ஒதுக்கி வைப்­பதே இந்த சதித்­திட்­டத்தின் நோக்­க­மாகும்.

அதுவே தமிழ்­ மக்­களின் ஒற்­று­மைக்கு குந்­தகம் விளை­வித்­த­தோடு, தமிழ் மக்­களின் பெரும் அழி­வுக்கும் முன்­னோ­டி­யாக அமைந்­தது. கிளி­நொச்­சியில் இயங்­கிய உண்­மை­யான குற்­ற­வா­ளிகள் தன்­னல நோக்­கத்­துடன் தமிழ் குழுக்கள், அர­சியல் கட்­சிகள், விடு­த­லைப்­பு­லிகள் அது­போல தராக்கி ஆகி­யோ­ரு­டைய தீர்­மா­னத்­துக்கு முர­ணாக செயற்­பட்­டுள்­ளார்கள். அவர்­களில் ஒருவர் மற்­றொ­ரு­வரின் ஆத­ர­வுடன் தமி­ழ­ரசுக் கட்­சி­யையும் அதன் சின்­னத்­தையும் துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ளார். ஆனால் தராக்­கியின் கூற்­றுப்­படி வெறும் பேப்­பரில் மட்­டுமே காணப்­பட்ட தமி­ழ­ரசுக் கட்­சியின் சின்­னத்­தையும் 2004ஆம் ஆண்டு தேர்­த­லுக்கு பயன்­ப­டுத்­தினர். அச்­ச­ம­யத்தில் ஒரே கட்சி, பொதுக்­கொள்கை உத­ய­சூ­ரியன் சின்னம் ஆகி­ய­வற்றின் கீழ் தேர்­தலில் ஆத­ரவு வழங்­கு­வ­தென்ற முடி­வுக்கு விடு­த­லைப்­பு­லிகள் தயா­ராக இருந்த நிலையில் இவர்கள் பொறுப்­பற்ற விதத்தில் விடு­த­லைப்­பு­லி­களே தமிழ் மக்­களின் ஏக­பி­ர­தி­நி­திகள் என்று தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் அறி­வித்­தனர்.

அக்­க­றை­யுடன் செயற்­பட்ட குழு­வி­னரின் விருப்­பப்­படி 2004ஆம் ஆண்டு இடம்­பெற்ற தேர்­தலில் போட்­டி­யிட்டு இருந்தால் மிகப்­பெ­ரும்­பான்மை வாக்­கு­க­ளோடு 22 ஆச­னங்­களும் கைப்­பற்­றப்­பட்­டி­ருக்கும். யுத்தம் நிறுத்­தப்­பட்டு தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்கும். பொது­மக்­களும் பல்­வேறு பிரச்சி­னை­க­ளுக்கு தீர்வு கண்டு அன்­றாட வாழ்க்­கை­யினை தொடர்ந்­தி­ருப்­பார்கள். ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக ஒரு சிலரின் சுய­ந­லத்­துக்­காக யுத்தம் நீடிக்­கப்­பட்டு முழு தமிழ் சமூ­கமும் சொல்­ல­மு­டி­யாத கஷ்­டங்கள், பெரு­ம­ள­வி­லான உயி­ரி­ழப்­புக்கள், சொத்­த­ழி­வு­க­ளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்­தது. 2004ஆம் ஆண்டு தொடக்கம் இறுதி ஐந்து ஆண்டு காலத்தில் இவர்கள் பட்ட துன்ப துய­ரங்கள் பற்றி நிறைய எடுத்துக் கூறலாம். நடந்த எல்லா சம்­ப­வங்­க­ளுக்கும் பொறுப்­புக்­கூற வேண்­டிய இந்த இரு நபர்­களை மக்கள் இல­கு­வாக அடை­யாளம் காண்­பார்கள்.

நாம் மறக்­கக்­கூ­டாது என தராக்கி கூறு­வது தமிழ் காங்­கிரஸ் கட்­சியும், தமி­ழ­ரசுக் கட்­சியும் இணைந்த அர­சியல் அமைப்பே தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யாகும் என்­பதே. 1976ஆம் ஆண்டு தமது தனிப்­பட்ட அடை­யா­ளங்­களை இன ஒற்­று­மைக்­காக விட்­டுக்­கொ­டுக்­கும்­படி தமிழ் கட்­சிகள் கேட்­கப்­பட்­டன என தராக்கி கூறி­யுள்ளார். அதனை நாம் செய்தும் உள்ளோம்.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் நிலைப்­பாடு பற்றி தராக்கி குறிப்­பி­டு­வ­தா­வது, “தமி­ழ­ரசுக் கட்சி நீண்­ட­கா­ல­மாக கொண்­டி­ருந்த தனது வீட்­டுச்­சின்­னத்தை கைவிட்டு வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்­தினால் உரு­வா­கிய தமிழ் தேசிய ஒற்­று­மையின் கார­ண­மாக தீர்­மா­னிக்­கப்­பட்ட உத­ய­சூ­ரியன் சின்­னத்தை ஏற்­றுக்­கொண்­டது.

அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் கட்­சியும், தமி­ழ­ரசுக் கட்­சியும் சக்­தி­மிக்க ஓர் பெரும் அமைப்­பாக ஒன்­றி­ணைந்து தமிழர் விடு­தலைக் கூட்­டணி என்ற புதிய அர­சியல் அடை­யா­ளத்தை ஏற்­றுக்­கொண்­டன. அத­னால்தான் ஒரு­கா­லத்தில் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளான மு.சிவ­சி­தம்­பரம், வீ.ஆனந்­த­சங்­கரி ஆகியோர் ஏற்­க­னவே இருந்த அர­சியல் அடை­யா­ளத்தை கைவிட்டு தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை தமது புதிய அர­சியல் அடை­யா­ள­மாக ஏற்­றுக்­கொண்­டனர். இன்று தமி­ழ­ரசுக் கட்சி பெய­ர­ளவில் வெறும் பேப்­பரில் மட்­டும்தான்”. தமிழ் கட்­சிகள் தமது அர­சியல் வேறு­பா­டு­களை கைவிட்டு ஒரே அணி, ஒரே சின்­னத்தின் கீழ் ஒன்­று­ப­டு­மாறு தூண்­டப்­ப­டு­கின்­றனர்.

இலங்­கை­யர்கள் தமது இன வேறு­பா­டு­களை கைவிட்டு, தாங்கள் ஆழ்ந்த நித்­தி­ரை­யி­லி­ருந்து விழித்­தெ­ழுந்து, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்னும் அங்­கியை அணிந்து செயற்­ப­டு­கின்ற மிகவும் ஆபத்­தான ஒரு நப­ரி­ட­மி­ருந்து, குறிப்­பாக தமிழ் மக்­க­ளையும், பொது­வாக இலங்­கை­யர்­க­ளையும் காப்­பாற்ற வேண்­டிய நேரம் வந்­து­விட்­டது. பொது­வாக தமிழ் மக்­க­ளுக்­கா­கவோ அல்­லது நாட்டின் நன்­மைக்­கா­கவோ அல்­லாமல் கூடு­த­லாக தனது இலா­பத்தை கருத்­திற்­கொண்டு, எது­வித தார்­மீக உரி­மை­யு­மின்றி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தவ­றாக பயன்­ப­டுத்­து­கின்ற இரா.சம்­பந்தனையே குறிப்­பி­டு­கின்றேன். எது­வித சந்­தே­க­மு­மின்றி இரா.சம்­பந்தன் மிகவும் திற­மை­சாலி மட்­டு­மல்ல விவே­க­முள்­ளவர்.

அவ­ருக்கு எங்கே, எப்­போது, எப்­படி செயற்­ப­ட­வேண்­டு­மென்­பதை பற்றி நன்கு அறிந்­தவர். சுமார் 40 ஆண்­டு­க­ளாக அவ­ரைப்­ பற்றி நான் நன்கு அறிந்­தவன். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ற அங்­கியை பாவித்து நன்­றாக அனு­ப­வித்­தது மட்­டு­மல்ல, அதன் ருசியை அறிந்து தான்­தோன்­றித்­த­ன­மாக அல்­லது தனது கட்­சியை சார்ந்த ஒரு ­சி­ல­ருடன் சேர்ந்து ஏனைய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­க­ாளி கட்சி உறுப்­பி­னர்­களை புறக்­க­ணித்து தீர்­மா­னங்­களை எடுத்து வரு­கிறார்.

ஆனால் அண்­மை­யில் ­கூட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒற்­றுமை பாது­காக்­கப்­பட வேண்­டு­மென்று புளு­கி­யுள்ளார். தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்­துள்ள ஆத­ரவு அனைத்து பிரிவு மக்­களும் தம்மை ஏற்­றுக்­கொண்­டார்கள் என்றும், அந்த நிலைப்­பாட்டை தொடர்ந்தும் காப்­பாற்­றப்­பட வேண்டும் என்றும் கூறி­யுள்ளார். உண்மை நிலை­மையை அறி­யாமல் மிக்க தன்­நம்­பிக்­கை­யோடு இருப்­பது மிகவும் அனு­தா­பத்­துக்­கு­ரிய விட­ய­மாகும். மக்­களை எல்லா நேரமும் ஏமாற்ற முடி­யாது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளி­களும் இவ­ரு­டைய தான்­தோன்­றித்­த­ன­மான நட­வ­டிக்­கை­களை வன்­மை­யாக கண்­டிக்­கின்­றார்கள்.

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லின் ­போது தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியை பிர­சாரம் எதுவும் செய்­ய­வி­டாது 22 ஆச­னங்­களை முறை­யற்ற வகையில் கைப்­பற்றி தமிழர் விடு­த­லைக்­ கூட்­ட­ணியை அழித்­த­மையை சிலர் மட்­டும்தான் அறிவர். முறை­யாக நடை­பெ­றாத அத்­தேர்­தலில் ஜன­நா­யகம் படு­கொலை செய்­யப்­பட்டு தலை­தூக்க முடி­யாத நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டது. இத்­தேர்­தலில் சில வேட்­பா­ளர்கள் அதி­ச­ய­ப்ப­டக்­கூ­டிய வகையில் ஒரு இலட்சம் வாக்­கு­க­ளுக்கு மேல் பெற்­றுள்­ளனர். ஏனைய சிலர் காலையில் தோற்­க­டிக்­கப்­பட்டு மாலையில் வெற்றி பெற்­றுள்­ளனர்.

பாரா­ளு­மன்­றத்தின் கால எல்­லையை ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மான முறையில் ஆறு ஆண்­டுகள் நீடித்­த­மையை ஆட்­சே­பித்து அவர் உட்­பட தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியைச் சேர்ந்த 18 பேர் தங்கள் பாரா­ளு­மன்ற பத­வியை துறந்து சர்­வ­தேச மட்­டத்தில் பெரும் நன்­ம­திப்பை தமிழர் விடு­தலைக் கூட்­டணி பெற்­றது. இதுவே தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பாரம்பரியம். ஏறக்குறைய அவர் வகிக்கும் பதவி அபகரிக்கப்பட்ட ஒன்றாகையால் ஜனநாயகம் பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமை அவருக்கு இல்லை. அவர் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவியும் அதே போன்றதே.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்ட போது அதற்கு அவர் செவிமடுக்கவில்லை. இந்திய வெளியுறவு செயலர் புதுடில்லிக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தபோது வேண்டுமென்றே மக்களை காப்பாற்றுவதற்கு தேடிவந்த சந்தர்ப்பத்தை பிரயோகிக்க தவறிவிட்டார். வன்னி இறுதி யுத்தத்தில் அகப்பட்டிருந்த மக்கள் விடுத்த அவலக்குரலுக்கு செவிமடுக்கவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பரிகாரம் தேடாமை எதிர்க்கட்சி பதவியை துறப்பது நியாயப்படுத்தக்கூடிய ஒன்றாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பதவியின் ஊடாக மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறியமையால் தனது பாராளுமன்ற பதவியையும், எதிர்கட்சி பதவியையும் துறப்பது கௌரவமான நடவடிக்கையாகும்.

தமிழ் மக்கள் மட்டுமின்றி சகல இன மக்களினதும் இன்றைய கடமை யாதெனில், காலம் கடந்தாலும் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களுக்கும் தொடர்ந்து படும் அல்லல்களுக்கும் காரணமானவர்களை கண்டுபிடிக்க ஓர் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுப்பதே. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாதகமான செயல்களை அம்பலப்படுத்துவதற்கு எமக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பம் இதுவாகும்.

வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் - த.வி.கூ.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.