Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் உள்ளிட்ட 10 குழுமங்கள், 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: சென்னை,டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடக்கிறது

Featured Replies

ஜெயா டிவி அலுவலகங்களில் வருமான வரி சோதனை

 

 
JAYATVOFFICE

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் | படம் கே பிச்சுமணி

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றுவருகிறது. இச்சோதனை இந்தியா முழுவதும் இன்று காலையிலிருந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், சென்னையில் உள்ள ஜெயா டிவிக்கு சொந்தமான அலுவலகங்களையும் வருமான வரித்துறையினர் தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து ஒரு மூத்த வருவாய்த்துறை அதிகாரி தெரிவிக்கையில், ''ஆமாம், தேடும் பணிகள் நடைபெறுகின்றன- இதை கறுப்புப் பணத்திற்கு எதிரான ஆபரேஷன்களின் ஒரு பகுதி மட்டுமே இது. தமிழ்நாடு உள்ளிட்டு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் ஒன்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அதிகாரப்பூர்வ ஐடி சோதனை நடைபெறுகிறது. மேலும் தற்போதைக்கு இதற்கு மேல் எந்தவிவரமும் அளிக்க இயலாது'' என்றார்.

ஜெயா தொலைக்காட்சி நிர்வாகம் வி.கே.சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் தற்போது சிறையில் உள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article20008504.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

25 ஆண்டுகளுக்குப் பிறகு போயஸ் கார்டனில் சோதனை!

ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் தோட்டத்தில், இன்று அதிகாலையிலிருந்து வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது. 

Poes garden

 

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது வாழ்ந்த வீடான சென்னை போயஸ் தோட்டத்தில், இன்று காலை 6 மணியிலிருந்து வருமான வரித்துறை சோதனை நடந்துவருகிறது. இதற்கு முன்னர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது மட்டுமே போயஸ் தோட்டத்தில் சோதனை நடந்துள்ளது. இதையடுத்து, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் சோதனை நடக்கிறது. 

இன்று அதிகாலை 6 மணி அளவில் போயஸ் தோட்டத்தில் நுழைந்த 10 வருமான வரித்துறை அதிகாரிகள், தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, போயஸ் கார்டனில் செயல்பட்டுவந்த பழைய ஜெயா டி.வி அலுவலகத்திலும் தொடர் சோதனை நடந்துவருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், போயஸ் தோட்டம் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவரது உடமைகள் பலவும் அங்கேதான் உள்ளன. சில நாள்களுக்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றம், போயஸ் தோட்டத்தில் போடப்பட்டிருந்த அதிக போலீஸ் பாதுகாப்புகுறித்து, `எதற்காக போயஸ் கார்டனில் அதிகமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும்' என்று கூறியது. 

இந்நிலையில், சசிகலா உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறை சோதனை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/107250-it-raid-at-poes-garden.html

 

  • தொடங்கியவர்

”அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை”: திவாகரன் #LiveUpdates

* இந்த வருமானவரிச் சோதனைக்குப் பின்னல் ‘மத்திய அரசு உள்ளது தெளிவாகத் தெரிகிறது’ என தினகரன் கூறுகிறார்.

* ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தினகரனுக்கு சொந்தமான சாரதா பேப்பர் மில்லில் வருமான வரித்துறை ரெய்டு நடைப்பெற்று வருகிறது.

 

* ”எனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை இல்லை” என டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

* வருமான வரித்துறை ரெய்டு நடக்கும் ஜெயா டிவி நிறுவனத்துக்கு வெளியே காத்திருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு காபி, குடிநீர் வழங்கி வருகின்றனர். 

ஜெயா டிவி

* சசிகலாவின் சகோதரர் திவாகரனை வருமான வரித்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

* சென்னை அடையாறு இல்லத்தில் தினகரன் அவரது மனைவியுடன் கோ பூஜையில் ஈடுபட்டுள்ளார்.

கோ பூசையில் தினகரன்

* சென்னை படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையில் சோதனை

* ”அரசியலுக்கு வந்துவிட்டால் ஐ.டி. ரெய்டு என்பது சகஜம்” என டி.டி.வி.தினகரன் பேட்டி

டிடிவி தினகரன்

* புதுச்சேரி ஆரோவில் உள்ள தினகரனின் பண்ணை வீட்டிலும் சோதனை

புதுச்சேரி பண்ணை வீடு

புதுச்சேரி பண்ணை வீடு

 

* கோடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் தற்போது சோதனை நடந்து வருகிறது.

* சென்னை தி.நகரில் சசிகலா முதலீடு செய்துள்ள நகைக்கடையில் தற்போது சோதனை நடந்து வருகிறது.

கிருஷ்ணபிரியா இல்லம்

இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம்...

 

* தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இது தவிர ஹைதரபாத், பெங்களூரு டெல்லியில் 82 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. 

திவாகரன் கல்லூரி

திவாகரனின் கல்லூரி

 

* கோவையில் மணல் குத்தகைதாரர் ஆறுமுகசாமி வீட்டில், அலுவலக்த்தில், கோவை ராம் நகரில் உள்ள செந்தில் குரூப் நிறுவனங்களில் சோதனை

மன்னை நகர் இல்லம்

மன்னை நகரில் உள்ள திவாகரன் வீடு

* சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள சுரானா கார்ப்பரேசன் லிமிட்டெட் என்ற நிறுவனத்திலும், ஜெயா டிவியின் பொதுமேலாளர் உள்ளிட்ட அலுவலகத்தின் நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை.

 

* தினகரன் அணி புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயனின் அறந்தாங்கி அருகே உள்ள தெற்குப்பபை இல்லத்தில் தற்போது சோதனை.

தினகரன் இல்லம்

* தற்போது கோடநாடு பங்களாவில் மரவேலை பார்த்துவந்த சஜிவனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

* சசிகலா தொடர்பான 10 குழுமங்களுக்கு சொந்தமான போலி நிறுவனங்களை குறிவைத்து சோதனை நடந்து வருகிறது. 

திவாகரன் இல்லம்

திவாகரனின் திருவாரூர் இல்லம்

 

* சுரானா, சுனில், புதுச்சேர் ஸ்ரீ லட்சுமி, விண்ட் சுப்பிரமணியன் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் உள்ளனர்.

 

* தற்போது போயஸ் கார்டன் வீட்டில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சசிகலாவின் வழக்கறிஞராக நாமக்கல்லில் இருந்துவரும் செந்தில் வீட்டிலும், அறந்தாங்கி அருகே தினகரன் அணியின் மாவட்ட செயலாளர் வீட்டிலும், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜிடமும் அதிகரிகள் சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போயஸ் கார்டன்

போயஸ் கார்டன் பழைய ஜெயா டி.வி அலுவலகம்

* ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம், போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டி.வி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், வேளச்சேரி ஜாஸ் சினிமாஸ் வளாகத்தில், பெங்களூருவில் உள்ள தினகரன் ஆதரவாளர் மற்றும் கர்நாடகா அம்மா அணி செயலாளர் புகழேந்தி வீட்டில், திருச்சியில் உள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீட்டில் என நாடெங்கும் உள்ள சசிகலா தொடர்பான அனைத்து இடங்களிலும் சோதனை அதிரடியாக நடத்தப்பட்டு வருகிறது.

 

* சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜெயா டிவி

சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 160 இடங்களுக்கும் மேல் சோதனை நடந்து வருகிறது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான கலைக் கல்லூரி, அந்தக் கல்லூரியில் பணியாற்றும் அன்பு என்பவரது வீட்டில் என சோதனை நடந்து வருகிறது.

அதேபோல, சென்னை அடையாறு தினகரன் வீட்டில், தினகரன் வீட்டுக்குள் இருந்த நிலையில் திடீரென நுழைந்த அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். தினகரன் அணி மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், திவாகரன் உதவியாளர்கள் ராசுப்பிள்ளை, சுஜய் ஆகியோர் வீடுகளிலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டிலும் சோதனை நடந்துவருகிறது. 12 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், கொடநாடு எஸ்டேட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

diva_1_09081.jpg

மேலும், தஞ்சை அருளானந்தா நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில், மன்னார்குடியில் மன்னை நகரில் உள்ள தினகரனில் வீட்டில், சசிகலாவின் அண்ணன் மகன் மறைந்த மகாதேவன் வீட்டில், இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டிலும் அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/107245-it-raid-over-100-and-above-places-related-to-sasikala.html

  • தொடங்கியவர்

ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் உள்ளிட்ட 10 குழுமங்கள், 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை: சென்னை,டெல்லி உள்ளிட்ட 4 நகரங்களில் நடக்கிறது

 

 

 

download

சென்னை ஜாஸ் சினிமாஸ், மிடாஸ், சுரானா குழுமம் உள்ளிட்ட 10 நிறுவனங்களைக் குறிவைத்து இந்தியா முழுவதும் 4 பெருநகரங்களில் 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான வருமான வரித்துறை அலுவலர்கள் ஒரே நேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள், சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நான்கு பெருநகரங்களில் இன்று காலை 6 மணி முதல் ஆயிரக்கணக்கான வருமானவரித் துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சோதனையில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான ஜாஸ் சினிமாஸ், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மது ஆலைகள், ஜெயா தொலைக்காட்சி அலுவலகங்கள், நமது எம்ஜிஆர் பத்திரிகை, டிடிவி தினகரன், திவாகரன், விவேக், அவரது சகோதரர் கிருஷ்ணபிரியா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மணல் ஒப்பந்தக்காரர் ஆறுமுகசாமி அலுவலகங்கள் வீடுகள், காற்றாலை நிறுவனங்கள், சுரானா குழுமம், புதுவை லட்சுமி குரூப் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் டிடிவி தினகரன், சசிகலா, திவாகரன் இல்லம், மறைந்த மகாதேவன் இல்லம், விவேக் இல்லம், கிருஷ்ணபிரியா வீடுகளில் வருமானவரித் துறை சோதனை நடக்கிறது. சசிகலாவுக்குச் சொந்தமான நிறுவனங்களான மிடாஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் சோதனை நடக்கிறது.

சோதனை நடக்கும் இடங்கள்:

தமிழகத்தில் டிடிவி தினகரன் வீடு - அடையாறு, விவேக் ஜெயராமன் இல்லம் - மகாலிங்கபுரம், கிருஷ்ணபிரியா வீடு - தி.நகர், ஜெயா தொலைக்காட்சி - ஈக்காட்டுத்தாங்கல், நமது எம்ஜிஆர் பத்திரிகை அலுவலகம் - ஈக்காட்டுத்தாங்கல், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம் - ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, ஜெயா தொலைக்காட்சி அலுவலகம் - போயஸ் கார்டன், மிடாஸ் மதுபான ஆலை - படப்பை..

திருச்சி கே.கே.நகர் மங்கம்மாள் ராணி சாலையிலுள்ள சசிகலா சம்பந்தி கலியபெருமாள் வீடு, நீலகிரி மாவட்டம் கூடலூரிலுள்ள அதிமுக சசிகலா ஆதரவாளரும் மர வியாபாரியுமான சஜீவன் வீடு அலுவலகம் மற்றும் மர மில்கள்..

டிடிவி தினகரன் அணி புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயனுக்கு சொந்தமான அறந்தாங்கி அருகே உள்ள நெற்குப்பம் இல்லம் , திருச்சி ஐயப்பா நகர் அரசன் பேக்கரி அருகே உள்ள இல்லம்..

மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீடு, தஞ்சை மேலவஸ்தாசாவடி பகுதியில் உள்ள டிடிவி தினகரன் மனைவி அனுராதா இல்லம். அருளானந்த நகரில் உள்ள டாக்டர் வெங்கடேஷ் வீடு,

தஞ்சையில் உள்ள சசிகலா கணவர் நடராஜன். சசிகலா அண்ணன் மகன் டி.வி.மகாதேவன், தினகரன் ஆதரவாளர்கள் ராஜேஸ்வரன் ஆகியோரின் வீடுகள், வழக்கறிஞர் வேலு.கார்த்திகேயன் வீடு, திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ் வீடு, புதுக்கோட்டை காந்திநகரில் உள்ள சுந்தரவதன் வீடு.

திவாகரனின் நண்பர் சுஜய், செல்வம் வீடுகள், பெங்களூருவில் உள்ள அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் இல்லம். திவாகரனின் உதவியாளர் விநாயகத்தின் வீடு, வடுவூர் அக்ரி ராஜேந்திரன் வீடு, அம்மாபேரவை செயலாளர் ராஜேஷ்வரன் வீடு..

கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் - நாமக்கல் 2 நிறுவனங்கள், நாமக்கல் வழக்கறிஞர் செந்தில் வீடு, வணிகவளாகம், அலுவலகம், நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் அலுவலகம், பக்கத்தில் உள்ள கர்சன் எஸ்டேட். உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது.

இது தவிர மணல் ஒப்பந்தக்காரர் ஆறுமுகசாமியின் கோவை அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடந்தது. இது தவிர நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் வழக்கறிஞர் பாலுச்சாமி வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீடு, ஹைதராபாத்தில் உள்ள சுரானா குழுமம் மற்றும் டெல்லியில் உள்ள சில நிறுவனங்கள் உட்பட 187 இடங்களில் இந்தச் சோதனை நடக்கிறது.

பெரும்பாலான இடங்களில் சோதனை டிடிவி தினகரன், சசிகலா சார்ந்த நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள், கட்சிக்காரர்கள் சார்ந்த இடங்களில் நடப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article20008836.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

ரெய்டு நடக்கும் நேரத்தில் கோ பூஜை நடத்திய தினகரன்

 

 
patam2jpg

கோ பூஜையில் டிடிவி தினகரன்| படம்: சிறப்பு ஏற்பாடு

வருமான வரித்துறை சோதனை நடந்தபோது சாதாரணமாக இருந்தார் தினகரன். சோதனை நடக்கும் நேரத்தில் சாதாரணமாக மனைவி மகளுடன் வீட்டில் கோ பூஜை நடத்தினார்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் சசிகலா, தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன் உள்ளிட்ட அனைவரது வீடு அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனை மேலும் வேறு சில நிறுவனங்கள் சார்ந்த இடங்களில் நடந்தாலும் பெரும்பாலும் ஜெயா தொலைக்காட்சி, மிடாஸ், ஜாஸ் சினிமாஸ் சார்ந்த சசிகலா, தினகரன், திவாகரன் சார்ந்த உறவினர்கள் நண்பர்கள், கட்சிபிரமுகர்கள் வீடு அலுவலகங்களில் நடக்கிறது.

சோதனை நடந்த போது செய்தியாளர்கள், கட்சிக்காரர்கள் அடையாரில் உள்ள டிடிவி இல்லம் முன்பு கூடி நின்றனர். தினகரன் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்பட்டாலும் தினகரன் சாதாரணமாக தனது மனைவி அனுராதா மற்றும் மகளுடன் கோபூஜை செய்தார். சாதாரணமாக செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஒரு அலௌவலர் வந்தார் அவரும் சென்று விட்டார், மீண்டும் வருவாரா என்று தெரியாது என்று சிரித்தபடி கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article20008930.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஒரே நாளில் 187 இடங்களில் சோதனை... சோதனை வலையில் சசிகலா குடும்பம்! #ITRaid #JayaTV

 
 

Jaya TV

Chennai: 

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ், கிருஷ்ணபிரியா, விவேக், கலியபெருமாள், மகாதேவன் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி வீட்டிலும் சோதனை நடக்கிறது.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம்  தர்மயுத்தம் தொடங்கினார். தனி கோஷ்டியாக செயல்பட்ட அவருடன் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமையிலான அணி பேச்சுவார்த்தை நடத்தி இணைந்தனர். இப்போது, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணி கையில்தான் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகம் உள்ளது. ஆனால், ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ்கார்டன், ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ், கொடநாடு, சிறுதாவூர், பையனூர் பங்களாக்கள் என்று  பல சொத்துகள் சசிகலா குடும்பத்தின் பிடியில் இருக்கிறது.

நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் மற்றும் ஜெயா டி.வி-யில் டி.டி.வி.தினகரன் ஆதரவு செய்திகள் வெளி வருகிறது. அதோடு, மழை வெள்ளம், டெங்கு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்று தமிழக அரசுக்கு எதிரான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்தும் எடப்பாடி பழனிசாமி அரசை கடுமையாக விமர்சித்தும் செய்திகள் வெளிவருவதாக புகார்கள் உள்ளன. 'ஜெயா டி.வி-யையும் நமது எம்.ஜி.ஆர்  நாளிதழையும் கைப்பற்றுவோம்' என்று எடப்பாடி பழனிசாமி  அணி சொல்லி வந்தாலும் அவர்களால் அந்த நிறுவனங்களுக்குள் கால் வைக்க முடியவில்லை. 

தினகரன்

அதே நேரத்தில், ''எடப்பாடி  பழனிசாமி அரசு 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் கவிழ்ந்து விடும். தை பிறந்தால் வழிபிறக்கும்'' என்று  டி.டி.வி.தினகரன் பேசி வருகிறார். இதெல்லாம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதிலும்  டி.டி.வி.தினகரன் வைக்கும் வாதங்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது என்கிறார்கள். அதனால்தான், ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு விசாரணக்கு வரும்போது, எடப்பாடி பழனிசாமி  அணியினர், 'இரட்டை இலை சின்னத்தை முடக்க டி.டி.வி.தினகரன் சொல்கிறார்' என்றக் குற்றச்சாட்டைச் சொல்லி வருகிறார்கள்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்றுதான் டி.டி.வி.தினகரன் சந்தித்தார். அப்போது, மருத்துவ சிகிச்சையில் இருக்கும் நடராஜன் உடல்நிலை குறித்தும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் டி.டி.வி.தினகரன் பேசி விட்டு வந்தார். இந்நிலையில்தான், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் இங்கு சோதனை நடத்திய அதே நேரத்தில், ஜெயா டி.வி நிர்வாகிகள் தொடர்புடைய 10 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதை ஜெயா டி.வி நிறுவனம் உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 187 இடங்களில் தற்போது வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றுவருகிறது.

இதே நேரத்தில், இளவரசி மகன் விவேக் வீடு மற்றும் அவர் நிர்வாகம் செய்து வரும் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள 'ஜாஸ் சினிமாஸ்' அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. மேலும், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டிலும் சோதனை நடக்கிறது. இதுதவிர, மன்னார்குடியில் உள்ள நடராஜன் வீடு, பாண்டிச்சேரி டி.டி.வி.தினகரன் பண்ணை வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடக்கிறது. சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீட்டிலும் சோதனை நடக்கிறது. இளவரசியின் சம்பந்தி கலியபெருமாளின் திருச்சி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் உள்ள சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷ் வீட்டிலும் சோதனை நடக்கிறது. ஒரே நேரத்தில், சசிகலா குடும்பம் வருமான வரித்துறையால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.  திவாகரன் வீடு மற்றும் அவரது கல்வி நிறுவனங்களும் இந்த ரெய்டில் தப்பவில்லை. டி.டி.வி தினகரனின்  தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி வீட்டிலும் சோதனை நடக்கிறது.

 

கிருஷ்ணப்பிரியா

இதுகுறித்து டி.டி.வி.தினகரன் ஆதரவு வக்கீல் காசிநாத பாரதி கூறுகையில், ''இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. வருமான வரித்துறை சோதனை நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஒரு குடும்பத்தைக் குறிவைத்து இந்த சோதனை நடத்துவது ஏன் என்பதுதான்  எங்களுடைய கேள்வி. வருமான வரித்துறை மூலம் அச்சுறுறுத்த நினைக்கிறார்கள்'' என்று குற்றம் சாட்டினார். டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளும் திருவாரூர் முருகானந்தம் கூறுகையில், ''பி.ஜே.பி அரசின் பழிவாங்கும் செயல் இது பொதுமக்கள் நினைக்கிறார்கள். அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்த சோதனைகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். வருமான வரித்துறை சோதனையால், எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. தொண்டர்களின் செல்வாக்கு கூடத்தான் செய்துகொண்டிருக்கிறது. தொண்டர்களின் பலத்தோடு பொதுச்செயலாளர் சசிகலா குடும்பத்தினர் இந்த சோதனையை துணிச்சலாக எதிர்கொள்வார்கள்'' என்று கூறினார்.

நாஞ்சில் சம்பத் கூறுகையில், ''ஜெயா டி.வியையும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழையும் கைப்பற்றவே இந்தச் சோதனை நடக்கிறது. இதையெல்லாம் கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம்'' என்றார்.

தினகரன் சசிகலா

முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் கூறுகையில், ''அப்போலோ மருத்துவமனையில், அம்மா மருத்துவச் சிகிச்சையில் இருந்தது குறித்து வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அதையெல்லாம் எடுத்து அழித்துவிட்டு, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பழி போடவே இந்தச் சோதனைகள் நடக்கின்றன. ஏற்கெனவே வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய விஜயபாஸ்கர், ராம மோகனராவ், நத்தம் விஸ்வநாதன், சேகர் ரெட்டி போன்றவர்களின் வழக்குகள் என்னவானது? முதல் அமைச்சர் பெயர் உள்பட பலரது பெயர்கள் வருமான வரித்துறையின் புகார்ப் பட்டியலில் உள்ளது. அவர்கள் மீதெல்லாம் இந்த வருமான வரித்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? குறிப்பாக சசிகலா குடும்பத்தை குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் பி.ஜே.பி அரசுதான் காரணம். சென்னை வந்த மோடி, கருணாநிதியை சமாதானம் செய்துவிட்டு சசிகலா குடும்பத்தைப் பழி வாங்குகிறார்.'' என்றார்.

 

இதுகுறித்து பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ''தன்னாட்சி அமைப்பு வருமான வரித்துறை. அவர்கள் மீது அரசியல் சாயம் பூசக்கூடாது.'' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/107267-income-tax-raid-at-sasikala-relative-premises-in-tamilnadu.html

  • தொடங்கியவர்

தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் வீட்டில் ஐடி ரெய்டு!

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் இன்று காலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை, ஸ்டேட் பேங்க் காலணியில் உள்ள தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினரும் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் நெருங்கிய நண்பருமான வேலு கார்த்திக் வீடு உள்ளது. இன்று காலை 5 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் அங்கு வந்து சோதனை நடத்தத் தொடங்கினார்கள். தற்போது வரை சோதனை நடைபெற்றுவருகிறது.

IMG-20171109-WA0004_11000.jpg

 

வேலு கார்த்திக்கின் ஆடிட்டர் சரவணன், வருமான வரித்துறையினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார். வழக்கறிஞர் வேலு கார்த்திக், சசிகலா குடும்பத்தினரின் தூரத்து உறவினர். இவரது தந்தை வேலு மாவடியார், தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரபலமான காங்கிரஸ் பிரமுகர்.

 

IMG-20171109-WA0001_11138.jpg

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் அண்ணன் மகன் டி.வி.மகாதேவன் ஆகியோர்மூலம் வேலு.கார்த்திக் அ.தி.மு.க-வில் செல்வாக்கு பெற்றார். தற்போது, திவாகரனோடு நெருக்கமான தொடர்பில் இருக்கிறார். 

http://www.vikatan.com/news/tamilnadu/107273-income-tax-department-raid-in-bar-council-member-velu-karthik-house.html

  • தொடங்கியவர்

நிகழ்ச்சி ஒளிபரப்ப ஜெயா டிவி-க்குத் தடை! 

வருமான வரிச் சோதனையைத் தொடர்ந்து, ஜெயா டிவி-யில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத்  தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

jayatv

ஜெயா டிவி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகியவை, இளவரசி மகன் விவேக் ஜெயராமனின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இந்த நிலையில், இன்று காலை ஆறு மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயா டிவி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து, ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப ஒருசில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விவாதம், பேட்டி, நிருபரின் நேரடி ரிப்போர்ட், லைவ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ’தேவைப்பட்டால் நியூஸ் கார்டு மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளனர்.  ரெய்டு குறித்த செய்தியை சேகரிக்க சென்ற நிருபர்களுக்கு தண்ணீர், தேநீர் உள்ளிட்ட வசதிகளை செய்தி கொடுத்தது ஜெயா டிவி நிர்வாகம். 

ஜெயா டிவி அலுவலகம்  மட்டுமன்றி, சசிகலா, தினகரன், திவாகரன், பாஸ்கரன் ஆகியோரது வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனைமேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/tamilnadu/107279-it-raid-jaya-tv-programms-banned.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வளைச்சு வளைச்சு ரெய்டு நடத்துறாங்களே, இவற்றுக்கெல்லாம் காரணமான மூலகர்த்தா இரும்புப் பெண்மணி ஊழலரசி உயிரோடு இருக்கும்போதே ரெய்டு நடத்தியிருக்கலாமே? மத்திய அரசுக்கு அந்த தில்லு இருக்காது. இப்போ 'ஏப்பை சாப்பைகள்' அரியணையில் இருக்கும்போது இந்த அலப்பறை..! :)

  • தொடங்கியவர்

' ஸ்ரீனி வெட்ஸ் மகி!' - கல்யாண கெட்டப்பில் களமிறங்கிய ஐ.டி! #ITRaid

சசிகலா உறவினர்களை குறிவைத்து நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை, அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ' சசிகலா உறவுகளை குறிவைத்து நடத்தப்படப் போகும் சோதனை குறித்த தகவல்களை அதிகாரிகள் ரகசியமாக வைத்திருந்தனர். இதற்கென அதிகாரிகள் கையாண்ட யுக்தி, மன்னார்குடி சொந்தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

dinakaran

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, போயஸ் கார்டனுக்கு நெருக்கமாக இருந்த சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. சசிகலா குடும்பத்தை வழிக்குக் கொண்டு வரும்விதமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதன்பிறகு, சில மாதங்கள் அமைதியாக இருந்த ஐ.டி அதிகாரிகள், ஆர்.கே.நகர் தேர்தலின்போது தினகரனை குறிவைத்து களமிறங்கினர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டின் மூலம் அமைச்சர்கள் பலரும் சிக்கினர். அடுத்து வந்த நாட்களில் அதிகாரத்தை இருந்து தினகரனை ஒதுக்கி வைக்கும் காட்சிகளும் அரங்கேறின. இந்நிலையில், இன்று காலை நடந்த வருமான வரித்துறை சோதனையில் சசிகலா உறவினர்கள் அனைவரையும் வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர் அதிகாரிகள்.

தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன், டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார், கலியபெருமாள், கிருஷ்ணபிரியா என ஒருவரும் இந்தச் சோதனையில் இருந்து தப்பவில்லை. இந்தச் சோதனை குறித்து தினகரனோ விவேக் ஜெயராமனோ பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஜெயா டி.வியில் சோதனை நடந்தபோது, நிருபர்களுக்கு தேநீர் உபசரிப்பு உள்ளிட்டவைகளை வழங்கச் சொல்லியிருக்கிறார் விவேக். அடையாறு வீட்டில் இருந்த தினகரனும், கோ பூஜையை நடத்திக் கொண்டிருந்தார். 

it raid

வருமான வரித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். "சசிகலா உறவினர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவதை முன்கூட்டியே தீர்மானித்திருந்தோம். அவர்களின் பணப் போக்குவரத்து, வர்த்தகம் என அனைத்து விவரங்களையும் விரிவாக சேகரித்துவிட்டோம். மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியத்தின் உத்தரவுக்காகக் காத்திருந்தோம். வருமான வரி கட்டாமல் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரையில் இது நிர்வாகரீதியான ஒரு நடைமுறை. இன்று காலை நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனில் இருந்து கிளம்பியபோது, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து வாகனங்கள் வந்திருந்தன. ரெய்டுக்குச் செல்லப் போகும் தகவல் தெரியக் கூடாது என்பதால், காரின் முகப்பில் 'Srini Weds Mahi’ என்ற பேப்பரை ஒட்டினோம். திருமணத்துக்குச் செல்லும் வாகனம் போல, காரின் அடையாளத்தை மாற்றிவிட்டோம். நாங்கள் எதிர்பார்த்தது போல, ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். இன்று மாலைக்குள் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் வெளியிடப்படலாம்" என்றார் விரிவாக. 

நடிகர் ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தில், ஐடி ரெய்டு பற்றிச் சொல்லும் போது ‘இன்று இரவு உங்கள் வீட்டில் கல்யாணம்’ எனக் குறிப்பிடுவார் ரஜினி. அதே பாணியைத்தான் கடைபிடித்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/107298-srini-weds-mahi-it-officers-new-get-up.html

ரெய்டு பரபரப்பிலும் தினகரன் ‘கோபூஜை’ நடத்தியது ஏன்? 'தாமரை' வைத்து வழிபட்டது எதற்கு?- ஆச்சார்யர்களின் விளக்கம்

 

 
komatha%20poojaijpg

தினகரன் வீட்டில் கோமாதா பூஜை | படம்: ம.பிரபு

ஜெயா டி.வி., ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் கம்பெனி, தினகரன் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு, கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சி அலுவலகம் என சசிகலா, தினகரனுக்குத் தொடர்பு உள்ள 150 இடங்களில், வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பரபரப்புக்கு உள்ளான நிலையில், தினகரன் தன் வீட்டில் மனைவியுடன் சேர்ந்து, கோ பூஜை செய்தார்.

ரெய்டுக் காட்சிகள் அரங்கேறிய அதே வேளையில், கோபூஜை செய்ததும் இன்னும் பரபரப்பை எகிற வைத்திருக்கிறது. பசுவையும் கன்றையும் வைத்து, அவற்றிற்கு பூவும் பொட்டும் வைத்து, மனைவியுடன் தினகரன் பசுவைச் சுற்றி வந்து, தீபாராதனைகள் காட்டி பூஜைகள் செய்தார். குறிப்பாக, பசுவின் முதுகில், தாமரைப் பூவை வைத்து பூஜைகள் செய்தது அனைவரையும் கவனிக்க வைத்தது.

பொதுவாக கிரகப் பிரவேசம் முதலான விசேஷங்களின்போது கோபூஜை செய்வது வழக்கம். மற்றபடி, பசுவைப் பார்க்கிறபோது, அந்தப் பசுவுக்கு பழமோ உணவோ கொடுப்பார்கள். அமாவாசை முதலான நாட்களில் அகத்திக் கீரை வாங்கிக் கொடுப்பவர்களும் உண்டு. சாலையில், வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுவைப் பார்த்ததும், காரில் செல்பவர்கள் கூட, இறங்கிச் சென்று, பசுவைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு, வணங்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம்.

தமிழகம் முழுவதும் சசிகலா, தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வருகிற இந்த இக்கட்டான நிலையில், தினகரன் கோபூஜை செய்வது எதற்காக? பொதுவாக கோபூஜை செய்வதால் என்னென்ன பலன்கள் உண்டு என வேதம் அறிந்த, சாஸ்திரம் அறிந்த சிலரிடம் கேட்டோம்.

‘’தீர்த்த யாத்திரை என்கிறோம். இந்தியா முழுவதும் கங்கா, காவிரி, தாமிரபரணி, யமுனை என எவ்வளவு புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. இந்த நதிகளில் நீராடினால் புண்ணியம் பெருகும், பாவங்கள் தொலையும் என்கிறது சாஸ்திரம். ஆனால் இவற்றைச் செய்ய எவ்வளவு காலமாகும் யோசியுங்கள். ஏழு கோடி தீர்த்தங்கள் பரதக் கண்டத்தில் இருப்பதாகச் சொல்கிறது சாஸ்திரம். இவை அனைத்திலும் நீராடினால் என்ன பலன் கிடைக்குமோ, அவை ஒரேயொரு கோபூஜையில் கிடைப்பதாகவும் சொல்கின்றன ஞானநூல்கள்” என்கிறார் ஸ்ரீநிவாச சர்மா.

‘’இந்திய கண்டத்தில், எத்தனையோ கோயில்கள். அங்கே ஏராளமான தெய்வங்கள். அத்தனை தெய்வங்களையும் தரிசித்தால் என்ன பலன்கள் கிடைக்குமோ, அவ்வளவு க்ஷேத்திரங்களுக்குச் சென்றால் எவ்வளவு சக்தி நமக்குக் கிடைக்குமோ, அவை கோபூஜையில் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். அத்தனை சிருஷ்டிகளையும் செய்தவர் பிரம்மா. ஆனால் கோமாதா அவரின் சிருஷ்டி இல்லை. முப்பத்து முக்கோடி தேவதைகள் ஒரு பசுவில் குடிகொண்டிருக்கின்றனர். ஆகவே, கோபூஜை செய்தால், சகல தோஷங்களும் விலகும். முப்பத்து முக்க்கோடி தேவதைகளின் ஆசியும் கிடைக்கும். குறிப்பாக, பிரம்மஹத்தி முதலான தோஷங்களும் பாபங்களும் விலகும் என்பது ஐதீகம்’’ என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

தினகரன் நடத்திய கோபூஜையில் பசுவின் முதுகில் தாமரை. குறிப்பாக, கோபூஜைக்கும் தாமரைக்குமான தொடர்பு என்ன என்று கேட்டோம்..

‘’கோ என்பது லக்ஷ்மி அம்சம். வெண் தாமரையில் வீற்றிருப்பவள் சரஸ்வதி. செந்நிறத் தாமரையில் நிற்பவள் லக்ஷ்மி. அஷ்டபுஷ்பங்கள் என்று சொல்லும் போது, ரத்தபுஷ்பம் என சம்ஸ்கிருதத்தில் சொல்லப்படுகிற செந்நிறத் தாமரைப் பூவுக்கு தனி மகத்துவமும் வீரியமும் உண்டு. அதனால் தாமரையைப் பயன்படுத்தி கோபூஜை செய்வதே உத்தமம். கோபூஜை செய்வதால், கோ என்பது லக்ஷ்மியின் அம்சம் என்பதால், இழந்ததைப் பெற முடியும். எதையும் இழக்காமல் இருக்கும் வலிமையைத் தரும். லக்ஷ்மி கடாட்சம் நம்முடனேயே இருக்கும்.’’ என்று தஞ்சாவூர் ரமேஷ் ஜம்புநாத குருக்கள் தெரிவித்தார்.

கோபூஜையை மனைவியுடன் சேர்ந்துதான் செய்யவேண்டுமா என்று கேட்டதற்கு ஸ்ரீநிவாச சர்மா விளக்கம் அளித்தார். சாஸ்திரத்திலும் வேதத்திலும் தம்பதி சமேதராகத்தான் எதையும் செய்யவேண்டும். மந்திரம் சொல்லும்போதே, ‘தர்மபத்தினி’ என்று ஒரு வார்த்தை உண்டு. பூஜையாகட்டும், புண்ணிய க்ஷேத்திரமாகட்டும், புனித நீராடலாகட்டும் எதுவாக இருந்தாலும் மனைவியுடனே செய்தால்தான் பலன்கள் கிடைக்கும் என்கிறது சனாதன தர்மம். ஒருவேளை வேலை விஷயமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ மனைவி அருகில் இல்லாத வேளையில், கோபூஜை செய்தாலோ, புண்ணிய நதியில் நீராடினாலோ, மனைவியின் ரவிக்கையை கணவன் இடுப்பில் செருகிக் கொண்டோ கட்டிக் கொண்டோ அதைச் செய்யவேண்டும் என அறிவுறுத்துகிறது சாஸ்திரம். அதேபோல், கணவன் வெளியூரில் இருந்தாலோ, வெளிநாட்டில் இருந்தாலோ, அந்த சமயத்தில் கோபூஜை செய்தால், ஒரு மணைப்பலகையில் கணவரின் வேஷ்டி அங்கவஸ்திரத்தை அருகில் வைத்துக் கொண்டு, பூஜையில் ஈடுபடலாம்.

பொதுவாகவே, பட்டுக்கு எந்த தோஷமும் இல்லை. கோபூஜை மாதிரி பூஜைகள் செய்யும்போது, பட்டு வஸ்திரங்கள் அணிவதே நல்லது. இயலாத நிலையில், வேஷ்டி, புடவை கட்டிக் கொள்ளலாம். ஆனால் ஜீன்ஸ், சுடிதார் அணிந்து பூஜையில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதே உத்தமம்’’ என்றார்.

மன்னன் ஒருவன். தன் ராஜ்ஜியத்தில் உள்ள பல தேசங்களை இழந்திருந்தானாம். ஒருநாள் குதிரையில் சென்ற போது, அந்தக் குதிரையின் குளம்படியில் இருந்து தூசு பறந்து, அருகில் இருந்தவன் மூச்சுத் திணறி இறந்தான். இதில் தவித்துப் போன மன்னன், தன் குருவிடம் இதுகுறித்துக் கேட்டான். ‘உனக்கு நேர்ந்த தோஷத்தில் இருந்தும் பாபத்தில் இருந்தும் விடுபட, கோபூஜை செய் என அறிவுரை கூறினார் குரு. அதன்படி கோபூஜை செய்தான் மன்னன். பாவத்தில் இருந்து மட்டுமின்றி, இழந்துவிட்ட ராஜ்ஜியங்களையும் மன்னன் அடைந்தான் என்றொரு புராணக் கதை உண்டு.

”ஒரு பசுவைக் கொல்வதும் அந்தணனைக் கொல்வதும் மிகப்பெரிய பாவம் என்கிறது சாஸ்திரம். இவற்றையெல்லாம் பிரம்மஹத்தி தோஷம், பாவம் என்பார்கள். பசுவுக்குக் கீரை கொடுப்பதால், பித்ரு சாபம் நீங்கும். உணவு வழங்குவதால், நம் வீட்டில் உள்ள தனம், தானியம், ஆபரணம், பூமிக்கு எந்தப் பங்கமும் வராது. கோபூஜை செய்வதால், இழந்த ராஜ்ஜியத்தைப் பெறலாம். இழந்த கெளரவத்தையும் பதவியையும் பெறலாம். இனி இழக்காமல் தடுக்கும் சக்தியும் கோபூஜைக்கு உண்டு. பிரம்மஹத்தி முதலான தோஷங்களும் விலகும்’’ என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

http://tamil.thehindu.com/tamilnadu/article20009326.ece?homepage=true

 

 

'திருமண விழா' என்று சொல்லி 200 கார்கள் முன்பதிவு: 'ரெய்டு' தகவல் கசியாமல் இருக்க வருமான வரித்துறையினரின் நூதன ஏற்பாடு

 

 
download%204

ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாடகைக் கார்கள்

சென்னை முழுதும் வருமான வரித்துறை சோதனை நடத்தும் அதிகாரிகள் சோதனைக்குச் செல்ல வாடகைக் கார்களை அமர்த்தும்போது சாமர்த்தியமாக திருமணத்துக்கு தேவை என்று பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுதும், டெல்லி, ஹைதராபாத், புதுவை, பெங்களூரு உட்பட 10 நிறுவனங்களைச் சார்ந்த 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனையை ரகசியமாக திட்டமிட்டுள்ளனர்.

வருமான வரித்துறையினரின் நூதன ஏற்பாடு:

சோதனை பற்றிய விவரங்கள் யாருக்கும் கசிந்துவிடக்கூடாது என்பது குறித்து கவனமாக இருந்தததால், ஒவ்வொரு அடியையும் ரகசியமாக எடுத்து வைத்துள்ளனர். வழக்கமாக ஒரு குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தில்தான் கார்களை வாடகைக்கு எடுப்பார்கள், வருமான வரித்துறையினர்.

திருமணத்துக்காக 200 கார்கள்:

ஆனால் இந்த முறை பாஸ்ட் ட்ராக் நிறுவனத்தில் 200 கார்களை சோதனைக்காகப் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக 200 கார்களை வாடகைக்கு எடுக்கும்போது தகவல் கசிந்து அதன் மூலம் சோதனை விவரம் தெரிந்துவிடும் என்பதால் பெரிய செல்வந்தர் வீட்டுத் திருமணத்திற்கு கார் வேண்டும் என்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரே வாடகைக்கு முன்பதிவு செய்து வைத்துள்ளனர்.

கண்ணாடியில் ஒட்டிய திருமண அட்டை:

இன்று காலை கார்களை வாடகைக்கு எடுக்கும் போது, அனைத்து கார் ஓட்டுநர்களிடமும் கார் கண்ணாடியில் ஒட்டும்படி அட்டை ஒன்றைக் கொடுத்துள்ளனர். அதில் ஸ்ரீனி வெட்ஸ் மஹி (SRINI-weds-MAHI) என்ற வாசகங்கள் இருந்துள்ளன. மணமகன் வீட்டாருக்கு கார் வாடகைக்கு எடுப்பது போல் எடுத்து அதில் வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கார் ஓட்டுநர்கள் ஏமாந்தனர்:

கார் ஓட்டுநர்களிடம் இது பற்றி கேட்டபோது "எங்களுக்கு திருமணவிழாவுக்கு கார் தேவை என்று தான் சொன்னார்கள். கல்யாணவீட்டு சவாரி என்று வந்தோம். காரில் வந்தவர்களும் விலாசத்தை மட்டும் சொன்னார்கள், இங்கு வந்தபிறகுதான், மீடியாக்கள் வந்து பரபரப்பாக செய்திகள் வெளிவந்த பிறகுதான் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏற்றிவந்துள்ளோம் என்பதே தெரிந்தது" என்று கூறினர்.

'சிவாஜி' திரைப்பட பாணியில் ..

ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தில் இடைவேளைக்குப் பின்னர் வரும் திருப்புமுனை காட்சியில் '1 ரூபாய்' நாணய தொலைபேசியில் சுமனை அழைத்துப் பேசும் ரஜினி, "சார்.. உங்க வீட்டில் நாளை முகூர்த்தம்" என்பார். அதற்கு சுமன், "என்னய்யா சொல்ற" எனக் கேட்பார். ரஜினி, "இன்கம் டாக்ஸ் துறையில் முகூர்த்தம் என்றால் வருமான வரித்துறை சோதனை. எல்லா ஆவணங்களையும் பத்திரப்படுத்திக்கவும்" என்பார்.

கிட்டத்தட்ட சிவாஜி பட பாணியில்தான் இன்று அதிகாரிகள் முகூர்த்துக்காக எனக் கூறி கார்களை முன்பதிவு செய்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article20009740.ece?homepage=true

  • தொடங்கியவர்

`வருமான வரித்துறை ரெய்டுகள் கன்னித்தீவு கதைபோலத்தான்!' - கலகலத்த ஸ்டாலின்

சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளிலும்  அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலையிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்துவரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க-வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், ஐ.டி ரெய்டு பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

 
 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், `தமிழகத்தில், வருமான வரித்துறை ரெய்டு தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. குட்கா புகாரில் நடந்த ரெய்டு என்னவாயிற்று? ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரின் பேரில் நடந்த ரெய்டு என்னவாயிற்று? இப்படித் தொடர்ந்து நடந்துவரும் ரெய்டுகளின் நிலை என்ன என்பதுகுறித்து தெளிவு இல்லை. தினத்தந்தி ’கன்னித்தீவு’ தொடர் போலத்தான் வருமானவரித்துறை சோதனைகள்.  இதைப் பற்றி கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை' என்றவரிடம், `ரெய்டு அரசியல் நோக்கத்தோடு நடத்தப்பட்டதா' என்று கேட்டதற்கு, `என்னிடம் விளக்கம் கேட்பதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அவர் பதில் சொன்ன பிறகு, நான் கருத்து கூறுகிறேன்' என்று முடித்துக்கொண்டு கிளம்பினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/107286-mkstalin-comments-about-it-raids.html

  • தொடங்கியவர்

”கருணாநிதி வீட்டில் ரெய்டு இல்லையா?”: பொங்கும் சுப்பிரமணியன் சாமி

”கருணாநிதி வீட்டில் ரெய்டு இல்லையா?” என்றொரு கேள்வியை தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார் சுப்பிரமணியன் சாமி.

சுப்பிரமணியன் சாமி

 

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் இன்று அதிகாலை 4 மணியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் சோதனை நடந்து வருகிறது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் என தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இது தவிர ஹைதரபாத், பெங்களூரு டெல்லியில் 82 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் ரெய்டு நடந்துவரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி ஒரு புதிய கருத்தை வெளியிட்டு பரபரப்பை அதிகரித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சாமி, “நீதிமன்றத்தில் சசிகலா குறித்த தகவல்கள் மட்டுமன்றி எம்.கே மற்றும் அவரது மகள் கனிமொழி மோசடிகள் குறித்த 30 பக்க ஆவணத்தை அதிகாரிகளிடம் அளித்திருந்தேன். ஏன் அங்கு இதுவரையில் சோதனை நடத்தவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.vikatan.com/news/india/107307-why-no-raids-at-mks-yet-asks-subramanian-swamy.html

  • தொடங்கியவர்

வருமானவரித்துறை சோதனையில், மிடாஸ் மதுபான ஆலையில் நடப்பது என்ன?

 

தமிழகத்தில் சசிகலா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அளவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ், விவேக், மகாதேவன் உள்ளிட்டோர் வீடுகளிலும் இன்று காலையிலிருந்தே ரெய்டு நடந்து வருகிறது. சசிகலா குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையிலும் இன்று காலை முதல் ரெய்டு நடந்து வருகிறது.

வருமான வரித்துறை சோதனை, மிடாஸ்

 
 

காஞ்சிபுரம் அருகே உள்ள படப்பை மிடாஸ் மதுபான ஆலைக்கு காலை 6.30 மணிக்கு 8 பேர் கொண்ட வருமானவரித்துறையினர் நுழைந்தனர். அப்போதிலிருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஜென்ரல் ஷிப்ட் காலை 9 மணிக்கு தொடங்கும். அதற்காக காலை 8.30க்கு பணியாளர்கள் வந்தார்கள். அவர்கள் 9 மணியில் இருந்து அவர்கள் ஐந்து மணிவரை வேலை செய்வார்கள். அந்த பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படாமல் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். 1200 மிடாஸ் பணியாளர்களில் 900 பேர் பெண்கள். ஏற்கெனவே வேலை செய்து கொண்டிருந்தவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் காலையிலிருந்தே அந்த பணியாளர்கள் காத்திருந்தார்கள். மதியம் 2.30 மணிக்கு அதிகாரிகள் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்கள். இதைத் தொடர்ந்து பத்து நிமிடத்திலேயே அந்த பணியாளர்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டார்கள். ரெய்டு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் இல்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/107312-income-tax-raid-at-midas-liquor-company.html

  • தொடங்கியவர்

1900 அதிகாரிகள் 11 வழிகாட்டி குழுக்கள்: மெகா ரெய்டின் பின்னணி

 

 
d59a1698-26a2-429e-b200-399e485b3617%201

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இதற்கு முன் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் அதிகமான இடங்களில் ஒரு சேர நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜாஸ் சினிமாஸ், மிடாஸ், சுரானா குழுமம் உள்ளிட்ட 10 நிறுவனங்களைக் குறிவைத்து இந்தியா முழுவதும் 4 பெருநகரங்களில் 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சோதனையில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான ஜாஸ் சினிமாஸ், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மது ஆலைகள், ஜெயா தொலைக்காட்சி அலுவலகங்கள், நமது எம்ஜிஆர் பத்திரிகை, டிடிவி தினகரன், திவாகரன், விவேக், நடராஜன், மகாதேவன், விவேக் சகோதரி கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், டாக்டர் வெங்கடேஷ், ஜெயலலிதாவுக்காக வாதாடிய வழக்கறிஞர் செந்தில், விவேக்கின் மாமனார் பாஸ்கர், உள்ளிட்ட சசிகலா சொந்தங்கள், மணல் ஒப்பந்தக்காரர் ஆறுமுகசாமி அலுவலகங்கள் வீடுகள், காற்றாலை நிறுவனங்கள், சுரானா குழுமம், புதுவை லட்சுமி குரூப் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சோதனையில் என்றுமே இல்லாத அளவுக்கு 1900 க்கும் குறைவில்லாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தலைமையேற்று நடத்த உயர் அதிகாரிகள் 10 க்கும் மேற்பட்டோர் பல மாதங்களாக திட்டமிட்டு முடிவு செய்து ஒரே நாளில் சோதனையில் குதித்துள்ளனர்.

தமிழகத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அதிகாரிகள் இல்லாததால் பக்கத்து மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்துள்ளனர். இவர்களுக்காக 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கியது. பலமாதங்களாக சிறுக சிறுக தகவல்களை சேகரித்து யாரும் சந்தேகப்படா வண்ணம் திடீரென அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

ஒரு குடும்பத்தை சேர்ந்த இவ்வளவு எண்ணிக்கையிலான நபர்களின் வீடுகள் அலுவலகங்களில் இதற்கு முன் இவ்வளவு பெரிய சோதனை நடைபெற்றது இல்லை. சோதனை நடத்தும் கடைசி கட்டம்வரை என்ன செய்யபோகிறோம் எனபதை யாருக்குமே சொல்லவில்லை.

http://tamil.thehindu.com/tamilnadu/article20010483.ece?homepage=true

  • தொடங்கியவர்

விசாரணை வளையத்தில் இளவரசி குடும்பம்! - 'விடாது கருப்பு' வருமானவரித்துறை

 

விவேக் சசிகலா

Chennai: 

வருமானவரிச் சோதனையில் இளவரசி குடும்பமும் சிக்கி இருக்கிறது. இளவரசி மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, மகன் விவேக், சம்பந்திகள் கலியபெருமாள், பாஸ்கர் என்று ஒட்டுமொத்த குடும்பமுமே வருமானவரித் துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கில் சசிகலாவுடன் இளவரசியும் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா. அவரது வீடு சென்னை தி.நகரில் உள்ளது. மருத்துவச் சிகிச்சையில் இருந்த கணவர் நடராஜனைப் பார்க்கப் பரோலில் வந்த சசிகலா, அந்த வீட்டில்தான் ஐந்து நாள்கள்  தங்கி இருந்தார். தற்போது அந்த கிருஷ்ணபிரியா வீட்டிலும் சோதனை நடந்துவருகிறது. கிருஷ்ணபிரியா, சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் -இளவரசி தம்பதியின் மூத்த மகள்; இரண்டாவது மகள் ஷகிலா. கடைசி மகன் விவேக். இதில், 'ஜெயா டி.வி.', ஜாஸ் சினிமா ஆகியவற்றை விவேக் கவனித்து வருகிறார். இந்த விவேக்தான் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சசிகலாவை அடிக்கடி சந்தித்து வந்தார். விவேக் மாமனார் பாஸ்கர் வீடும் இந்தச் சோதனையில் இருந்து தப்பவில்லை.

சகோதரிகளுடன் விவேக்

இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா, 'கிருஷ்ணபிரியா  ஃபவுண்டேஷன்'  என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2015-ம் ஆண்டு வெள்ளத்தில், சென்னை தத்தளித்தபோது தனது அறக்கட்டளை மூலம் பல உதவிகளைச் செய்தார். மருத்துவ உதவி, கல்வி உதவி, மரம் நடுதல் என்று அவர் தனி ரூட்டில் பிஸியாக இருந்து வந்தார். நீட் தேர்வு வேண்டாம் என்று அனிதா தற்கொலை செய்து கொண்டபோது செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

இளவரசியின் இன்னொரு மகள் ஷகிலா. இவரது கட்டுப்பாட்டில்தான் மிடாஸ் சாராயக் கம்பெனி நிர்வாகம் உள்ளது என்கிறார்கள். இந்த நிறுவனத்தில் புழங்கும் கோடிக்கணக்கான பணம் இவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்வதில் முன்னணி நிறுவனமாக இருந்துவருகிறது. அ.தி.மு.க அணி மோதல் உருவான பிறகுதான் மிடாஸ் நிறுவனத்தின் சரக்கு விற்பனை டாஸ்மாக் நிறுவனத்துக்குக் குறைந்தது. இந்த நிறுவனத்தின் பணம் கறுப்பு, வெள்ளை என்று இரண்டு வடிவில் இருப்பதாகப் புகார் வந்துள்ளது. மேலும், பல நிறுவனங்கள், சொத்துகள் இளவரசி குடும்பத்தினர் பெயரில் உள்ளன. போலி நிறுவனங்கள் பெயரில் பல நூறுகோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளது என்ற புகார்கள் அடிப்படையில்தான் இளவரசியின் ரத்த உறவுகள் வீடுகளில், நிறுவனங்களில் வருமானவரித் துறை சோதனை நடந்தது என்கிறார்கள்.

இன்றைய வருமானவரிச் சோதனையில் இளவரசியின் குடும்பமே சிக்கி இருக்கிறது. அதாவது, 'ஜெயா டி.வி.', 'நமது எம்.ஜி.ஆர்.', மிடாஸ் நிறுவனம், கொடநாடு எஸ்டேட் எல்லாம் இளவரசி குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பல ஆயிரம் கோடி  ரூபாய் முதலீட்டில் உள்ள இந்தச் சொத்துகள், அதன் வரவு - செலவுகள் பற்றி இந்தச் சோதனையில் வருமானவரித் துறை அதிகாரிகள் கணக்குக் கேட்டார்கள். அதுவும் குறிப்பாக 'ஜெயா டி.வி.' கணக்கு மூலம் நடந்த பரிவர்த்தனைகள் குறித்து துருவித்துருவி விசாரித்து இருக்கிறார்கள்.

 

டி.டி.வி.தினகரன் அரசியல் 'மூவ்' களுக்குச் செக் வைக்கவே இந்தச் சோதனை என்று பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.  

http://www.vikatan.com/news/tamilnadu/107314-income-tax-raid-at-sasikala-relative-krishnapriyas-residence.html

 

  • தொடங்கியவர்

இளவரசி மகன் விவேக் வீட்டில் நாளை வரை சோதனை!

 

 
vivek_jayaraman

 

சசிகலா குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் இன்று அதிகாலை தொடங்கி சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, சசிகலா சகோதரர் திவாகரன் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, சசிகலா பரோலில் வரும் போது தங்கியிருந்த தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு, தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, டாக்டர் வெங்கடேஷ் வீடு மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், பெங்களூருவில் அம்மா அணி அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு, திருவாரூர் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் காமராஜ், திருவாரூர் கீழதிருப்பாலங்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், கோடநாடு எஸ்டேட், அவரின் உதவியாளராக இருந்தவர், மருத்துவர் உள்ளிட்டோர் வீடுகள் உட்பட  சுமார் 190 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்தச் சோதனையில் சுமார் 1,800 அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 'ஸ்ரீநி வெட்ஸ் மஹி' என்ற திருணத்துக்கு செல்வதுபோன்ற வாகனங்களில் சோதனை நடத்தும் அதிகாரிகள் வந்தனர்.

இந்நிலையில், அதிகாலை முதலே தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஜெயா டிவி மற்றும் ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றின் முதன்மை அதிகாரியும், மகாலிங்கபுரத்தில் உள்ள இளவரசியின் மகனுமான விவேக் வீட்டில் நாளை வரை சோதனை தொடர்ந்து நடைபெறும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.dinamani.com/tamilnadu/2017/nov/09/இளவரசி-மகன்-விவேக்-வீட்டில்-நாளை-வரை-சோதனை-2804758.html

  • தொடங்கியவர்

ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் வீட்டில் நடைபெற்றுவந்த சோதனை தற்காலிகமாக நிறுத்தம்

 

ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் வீட்டில் நடைபெற்றுவந்த சோதனை தற்காலிகமாக நிறுத்தம்
 
சென்னை:

சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லம், ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம், சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இல்லம், கோடநாடு எஸ்டேட் பங்களா என தொடரும் இந்த சோதனைகள் அரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டி.டி.வி தினகரனின் முக்கிய ஆதரவாளர்கள் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டுகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டி.வி மற்றும் ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓ விவேக் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் நாளை வரை சோதனை தொடரும் என கூறியிருந்தனர். நீலகிரியில் உள்ள கோடநாடு கிரீன் டீ எஸ்டேட்டில் நடைபெற்ற வருவமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்ததையடுத்து, எஸ்டேட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்து அடைத்தனர். நாளையும் அங்கு சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை மகாலிங்கபுரத்தில் ஜெயா டி.வி சி.இ.ஓ. விவேக் வீட்டில் நடைபெற்றுவந்த சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவர் வீட்டின் முன்பு போலீசார் மற்றும் விவேக் ஆதரவாளர்களிடைய தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சோதனை நிறுத்தப்பட்டது. மீண்டும் நள்ளிரவு 2 மணிக்கு மூத்த அதிகாரிகளுடன் சோதனை தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/09232347/1127842/IT-raid-conducted-in-jaya-tv-ceo-viveks-house-stopped.vpf

  • தொடங்கியவர்

அரசியல் வேண்டாம்; வியாபாரத்தைப் பாருங்கள்!' - சசிகலா குடும்பத்து வேர் வரை பாய்ந்த டெல்லி #VikatanExclusive

 

தினகரன்

Chennai: 

சிகலா குடும்பத்தினரோடு சேர்த்து அவர்கள் ஆதரவு நிர்வாகிகளையும் களையெடுக்கத் தொடங்கியிருக்கிறது வருமான வரித்துறை. 'அரசியலை விட்டு ஒதுங்குங்கள் என பலமுறை அறிவுறுத்தியும் அவர்கள் கேட்கவில்லை. இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் காட்டிய கெடுபிடிதான் ரெய்டுக்கு மூல காரணம்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

 

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த காலத்திலேயே, கார்டனின் போக்குவரத்துகளை வெகுசீரியஸாகக் கண்காணிக்கத் தொடங்கியிருந்தது வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு வந்த நாள்களில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, ராமமோகன ராவ் என கார்டனுக்கு நெருக்கமானவர்கள் வளைக்கப்பட்டனர். ரெய்டு நடந்துகொண்டிருந்த காலங்களில் ஐதராபாத்தில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் சென்னை வந்து தங்கினர். ' தங்கம், வைரம், பணம், வர்த்தகம் என ஒவ்வொரு துறையிலும் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற இந்த அதிகாரிகள், எப்போது வேண்டுமானாலும் ரெய்டுக்குப் பயன்படுத்தப்படுவார்கள்' என்ற தகவல் பரவியது. இது சசிகலா குடும்பத்துக்குக் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அந்த அதிகாரிகள், கடைசி வரையில் ரெய்டு நடவடிக்கைளுக்குப் பயன்படுத்தப்படவில்லை. சசிகலாவின் சகோதரர் திவாகரன், தனக்கு நெருக்கமான டெல்லி சோர்ஸ்கள் மூலம் சமாதானக் கொடியை பறக்கவிட்டார். ஆனாலும், அடுத்தடுத்து வந்த நாள்களில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை, தினகரன் மீதான வழக்குகள் என அ.தி.மு.க-வின் அஸ்திவாரத்தை அசைக்கும் வேலைகள் வேகம் எடுத்தன. இதன்பின்னர், சில மாதங்கள் அமைதியாக இருந்த வருமான வரித்துறை அதிகாரிகள், இன்று காலை 6 மணியில் இருந்து அதிரடி சோதனையை நடத்திவருகின்றனர். தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன், கிருஷ்ணபிரியா, கலியபெருமாள் ஆகியோரது வீடுகளிலும் கொடநாடு எஸ்டேட், மிடாஸ் சாராய ஆலை, நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வி என சசிகலா குடும்பத்தினரின் வர்த்தக நிறுவனங்களையும் குடைந்து கொண்டிருக்கின்றனர். சுமார் 180 இடங்களில் ரெய்டு நடந்துவருகிறது. 

சசிகலாசசிகலா குடும்பத்து உறவினர் ஒருவரிடம் பேசினோம். “இரட்டை இலை விவகாரத்தில் சட்டரீதியாகவே போராடிக் கொண்டிருக்கிறார் தினகரன். ‘நாங்கள் எவ்வளவு சொல்லியும், இப்படிப் பிடிவாதம் காட்டுவது நல்லதல்ல. உங்கள் குடும்பத்துக்கு 60 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது. அரசியலில் இருந்து ஒதுங்கிப் போய் வியாபாரத்தைப் பாருங்கள். உங்களை எதுவும் செய்ய மாட்டோம். அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்' என தினகரன் தரப்புக்குப் பலமுறை டெல்லி அறிவுறுத்தியது. இதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையமே நினைத்தாலும் இலை விவகாரத்தில் முடிவு சொல்ல முடியாத சூழலை உருவாக்கினார். இந்த விவகாரம் டெல்லி தரப்புக்குக் கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியது. சில நாள்களுக்கு முன்புகூட, 'எடப்பாடி பழனிசாமிக்குத்தான் சின்னம் கிடைக்கும். ஒதுங்குங்கள்' எனக் கூறியும் அவர் அமைதியாக இருக்க விரும்பவில்லை. அதேபோல், ஜெயா டி.வி மற்றும் ஜாஸ் சினிமாஸை நடத்திவரும் இளவரசி மகன் விவேக் ஜெயராமன் மீது தொடக்கத்தில் இருந்தே கடும் கொந்தளிப்பில் இருந்தனர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்.

‘தினகரன் தரப்பை வலுவாக்குவதும் கூட்டங்களைத் திரட்டுவதும் விவேக்தான். அவரை ஓரம்கட்டிவிட்டால் குடும்பத்து ஆட்கள் ஒதுங்கிவிடுவார்கள்' என டெல்லிக்குத் தகவல் பறந்தது. அதற்கேற்ப, எப்போது வேண்டுமானாலும் ஜாஸ் சினிமாஸில் ரெய்டு நடக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதற்குப் பதில் கொடுத்த விவேக் தரப்பினர், 'ரெய்டைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை. அனைத்துக்கும் முறையான கணக்கு வழக்குகள் இருக்கின்றன. ரெய்டு நடத்த விரும்பினால், அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்' எனத் தைரியமாகவே பதில் அளித்தனர். இன்று காலை விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீட்டையும் அதிகாரிகள் குடைந்து வருகின்றனர். சசிகலா சிறைக்குச் சென்ற பிறகுதான், கிருஷ்ணபிரியா அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். நீட் எதிர்ப்புப் போராட்டத்தை அவர் நடத்தியதை தமிழகத்தில் உள்ள சசிகலா குடும்பத்து எதிர்ப்பாளர்கள் ரசிக்கவில்லை. இன்று நடக்கும் ரெய்டில் கிருஷ்ணபிரியாவும் அவர் நடத்திவரும் பவுண்டேஷனும் தப்பவில்லை. இந்த ரெய்டில் சசிகலா குடும்பம் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கட்சி நிர்வாகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என விவரித்தவர், 

விவேக் ஜெயராமன்“இந்த ரெய்டை நடத்துவதற்குப் பல மாதங்களாகத் திட்டமிட்டுள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். சசிகலா குடும்பத்தின் பணப் போக்குவரத்துகளை தீவிர ஆய்வுசெய்த பிறகுதான் ரெய்டைத் தொடங்கியுள்ளனர். டாக்டர் வெங்கடேஷின் நண்பரான முன்னாள் கவுன்சிலர் ராஜேஸ்வரன் என்பவர் வீட்டில் இன்று ரெய்டு நடக்கிறது. இளைஞர் பாசறை பொறுப்புக்கு இவர் சமீபத்தில்தான் பதவிக்கு வந்தார். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அண்மையில் செயலாளராக நியமிக்கப்பட்ட பரணி கார்த்திக் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. இவர் குடவாசல் ராஜேந்திரனின் மருமகன். பரணி கார்த்திக் மணல் வியாபாரம் செய்துவருகிறார். திவாகரனுக்கு வலதுகரமாக இருப்பவர். திருச்சி கூட்டங்களுக்கு அவர்தான் உதவி செய்தார் என்பதை சிலர் மட்டுமே அறிவார்கள். அதாவது பணப் போக்குவரத்து எந்தெந்த நெட்வொர்க் மூலமாக நடக்கிறது என்பதை வருமான வரித்துறையினர் துல்லியமாகக் கண்காணித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டம் மற்றும் முட்டை கொள்முதலுக்கான டெண்டர் பணிகள் நடந்து வருகின்றன. 300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தப் பணிகளில் முன்னாள் அரசு ஆலோசகர் ஒருவர்தான் ஈடுபட்டு வருகிறார். இவர் சசிகலா குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர். இந்த ஒப்பந்தத்திலும் சசிகலா குடும்பத்தின் மறைமுக தலையீடு இருந்துள்ளது. இதைப் பற்றிய தகவல்களையும் அதிகாரிகள் திரட்டியுள்ளனர்" என்றவர், "அணிகள் இணைப்பின்போது, 'ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆரைக் கைப்பற்றுவோம்' என்றார் எடப்பாடி பழனிசாமி. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அமைச்சர்களின் ஊழல் விவகாரங்களை ஜெயா டி.வி வெளிக்காட்டத் தொடங்கியதையும் அவர்களால் ஏற்றுக் கொள்ளவில்லை. சசிகலா தரப்புக்குக் கூட்டம் கூடுவதுதான் பெரும் எரிச்சலைக் கொடுக்கிறது. இந்தக் கூட்டம் எல்லாம் உண்மையிலேயே ஆதரவா... இல்லையா என்பதை மத்திய உளவுப் பிரிவால் கணிக்க முடியவில்லை. எனவே, சசிகலா குடும்பத்தினரோடு துணை நிற்கும் கூட்டங்களை சிதறடிப்பதுதான் இந்த ரெய்டின் நோக்கம். இதில் எதுவுமே கிடைக்கப் போவதில்லை" என்றார் இயல்பாக. 

“கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியைக் கொன்று கொள்ளை முயற்சி நடந்தபோது, சசிகலா குடும்பத்தினர் மத்தியில் எவ்விதப் பதற்றமும் இல்லை. இதைப் பற்றிப் பேசிய கார்டன் நிர்வாகி ஒருவர், 'கொடநாட்டில் எதுவுமே இல்லை. கொள்ளையடிக்கப்பட்டிருந்தால் துணிமணிகளைத்தான் களவாடியிருக்க முடியும். அதனால் எங்களுக்கு எந்தவித பதற்றமும் இல்லை' எனப் பதில் அளித்தார். அந்தளவுக்கு மிகத் தெளிவாக பண விவகாரங்கள் பதுக்கப்பட்டுவிட்டன. அதுவும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலங்களிலேயே இந்த வேலைகளை மன்னார்குடி உறவுகள் செய்து முடித்துவிட்டனர்" என்கிறார் கார்டன் உதவியாளர் ஒருவர். 

 

'வருமான வரி முறையாகக் கட்டாவிட்டால் சோதனை நடக்கத்தான் செய்யும். இது இயல்பான நிர்வாக நடைமுறை' என ஐ.டி அதிகாரிகள் விளக்கம் கொடுத்தாலும், நாளை பிறந்தநாளைக் கொண்டாடப் போகும் எம்.நடராசனுக்கும் இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவுக்கும் டெல்லி கொடுத்த அதிர்ச்சி பரிசாகவே இதனைக் கருதுகிறார்கள் மன்னார்குடி சொந்தங்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/107272-delhis-it-move-towards-the-family-line-of-sasikala.html

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: ஐ.டி. ரெய்டும் 'சிட்டிசன்' திரைப்படமும்!

 

 
4

நாடு முழுதும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவர்களது உறவினர் இல்லங்களிலும் நிறுவனங்களிலும் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த நெட்டிசன்கள் கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Shankar A

       

ஒரு பசு பாதுகாவலர் வீட்டுலயே பிஜேபி ரெய்டு பண்ற அளவுக்கு நேர்மையான கட்சி பிஜேபின்னு யாரும் கௌம்பலையா ?

Murugan Manthiram

கவர்மென்ட் ஆபிசர்ஸ் காலைல 6 மணிக்கே வேலை செய்றாங்க. ஜெயா டிவி அலுவலகத்தில் ரெய்டு.

Hansa Hansa

நிறைய இடங்களில ரெய்டு செய்றது, உள்ள தள்றது எல்லாமே... நாடு சுபிட்சமாயிடும்னு தோண வைக்குது.

ஆனா, எங்களுக்கே தெரிஞ்ச கயவர்கள் வீடுகளில ரெய்டு பண்ணலையேன்னும் ஒரு டவுட்டு வந்து வந்து போகுது.

Udhai Kumar

இந்த ரெய்டு மூலம் அறியப்படுவது யாதெனில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்யப்பட்டதாகத் தோன்றுகின்றது.

Shan Karuppusamy

"ஆமா ரெய்டு நடத்தறீங்களே என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க?"

"இதுக்கு முன்னால நடத்துன ரெய்டுகளுக்கு என்ன நடவடிக்கை எடுத்தோம்?"

"ஒண்ணும் இல்ல"

"அதேதான் இதுக்கும்!"

சீ இராஜேந்திரன்

என்றாவது ஒருநாள் தனது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறும் என ஆவணங்களை மறைக்கத் தெரியாதவர் அல்ல சசிகலா குடும்பத்தார்.. ரெய்டாம் ரெய்டு.. போவியா..

ரஹீம் கஸாலி

ரெய்டு என்பது ஒருவரை பழிவாங்கவோ அல்லது வழிக்கு கொண்டுவரவோதான் பயன்படுகிறதே தவிர, இதனால் மக்களுக்கு ஒருதுளி கூட உபயோகம் இல்லை. #ரெய்டுத்துவம்

1
 

கிருஷ்ணா அறந்தாங்கி

இந்த ரெய்டுகள் முடிவில் சசிகலா வகையறாக்கள் மக்களிடம் "உத்தமர்கள்" ஆகிவிடுவார்கள்..

Vijay Sivanandam

என்னவோ இதுவரை ரெய்டு பண்ணப்பட்டவங்க எல்லோரையும் தூக்குல போட்ட மாதிரி.... அட போய் பொழப்பைப் பாருங்க.

D S Gauthaman

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்ததே, என்னதான் ஆச்சு?

தமிழக தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடந்துச்சே, என்னதான் ஆச்சு?

தினகரனிடம் பணம் வாங்கிய தேர்தல் கமிசன் அதிகாரிகள் யார் யார்?

சேகர் ரெட்டியின் நண்பர் ஓபிஎஸ் வீட்டில் ரெய்டு நடத்தாதது ஏன்?

கூவத்தூரில் பணம் வாங்கிய அதிமுகவினர் வீடுகளில் ஏன் ரெய்டு நடக்கல?

இப்போது இதே அதிமுகவின் ஆட்சிக்கு பிஜேபி முட்டுக் கொடுத்து வாழ்த்து சொல்கிறதே, இத்தனைக்குப் பிறகும் மோடி ஊழலுக்கு எதிரானவர்னு காமெடி பண்றவன் தான் ரியல் பக்தா!

5
 

Vijay Sivanandam

அதென்ன, ஆளுங்கட்சிக்காரங்கள்லாம் உத்தம சூப் மாதிரி அவங்க யார் வீட்லேயும் ரெய்டு நடக்கிறதில்லை..???

Suresh Eav

நியாயமான காரணத்திற்கு ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டினால் உடனே சிபிஐ ரெய்டு.

இது எந்த வித நியாயம் , அப்போது நடைபெறும் ஆட்சி ஜனநாயக ஆட்சிதானா???

வெங்கடேஷ் ஆறுமுகம்

பெப்சி கோக் கிட்ட பவண்டோ மோதுனா இப்படித்தான்.. #ரெய்டு

சால்ட்&பெப்பர் தளபதி @thalabathe

மோடி நேத்து நைட்டு சிட்டிசன் படம் பாத்திருப்பாரு போல, சசிகலா, தினகரன், திவாகரன், மாமன், மைத்துனன் அவர்களுக்கு பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் எல்லார் ஊட்லையும் ரெய்டு விடறாங்க.

மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS

ரெய்டு நடத்துவது மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு செய்யும் கடமைன்னு மத்திய அரசு நினைச்சிக்கிட்டு இருக்கு...!

ராக்கி @ItzRavi

ரெய்டு நடக்கும் வீட்டுக்குள்ளே மாட்டுக்கு பூஜை செய்யும் தினகரன்.

#கொஞ்சூண்டு கோமியம் தாறேன், குடுச்சுட்டு போங்க மொமண்ட்.

6
 

செல்வி @aselviku

ரெய்டு கண்டு அதிர்ச்சியில்லை: நாஞ்சில் சம்பத் - செய்தி

நீங்கதான் வைகோவின் சிஷ்யனாச்சே, இதுக்கெல்லாம் எப்படி அதிர்ச்சியடைவீங்க..

யுகராஜேஸ் @yugarajesh2

ஜெயா டிவி அலுவலகத்தில் IT ரெய்டு பண்ணுறதே அவங்க HD-ன்னு போட்டு ஊரை ஏமாத்துனதுக்காகத்தான் இருக்கணும்.

7
 

Sonia Arunkumar

முன்னலாம் அரசியல்வாதிங்க மத்தவங்களை மிரட்ட ரவுடிங்களை விட்டு மிரட்டுவாங்க இப்பலாம் ஐடி ரெய்டு, ஜிஎஸ்டி ரெய்டுதான். டிஜிட்டல் இந்தியாடா!

http://tamil.thehindu.com/opinion/blogs/article20010507.ece?homepage=true

  • தொடங்கியவர்

கோவை, நீலகிரியில் தொடரும் ரெய்டு: புலம்பித் தள்ளிய எம்.பி.

 

கோவை மற்றும் நீலகிரியில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கொடநாடு

 

'ஆபரேஷன் க்ளீன் பிளாக் மணி' என்ற பெயரில் தமிழகம் முழுவதும், சசிகலா, தினகரன் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையைத் தொடங்கினார்கள். கோவையைப் பொறுத்தவரை, சசிகலாவின் உறவினர் ராவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.பி நாகராஜன் ஆகியோரது வீடுகளை வருமான வரிச் சோதனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, கோவையில் தொழிலதிபர் ஆறுமுகசாமியும், கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைகளை மேற்கொண்டு வந்த சஜீவனும், ரெய்டில் சிக்கினர். அதன்படி, நீலகிரியில் கொடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட், இந்த எஸ்டேட்களின் கணக்குகளை நிர்வகிக்கும் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, கூடலூரில் உள்ள சஜீவன் வீடு, மர மில், ஃபார்ம் ஹவுஸ் என 6 இடங்களில்  நேற்று ரெய்டு நடந்தது.

அதேபோல, கோவை மண்டலத்தைப் பொறுத்தவரை, ஆறுமுகசாமியின் வீடு, அலுவலகங்கள், தியேட்டர், கல்வி நிறுவனங்கள், பேப்பர் மில், சஜீவனுக்குச் சொந்தமான இரண்டு ஃபர்னிச்சர் கடைகள் என 10 இடங்களில் சோதனை நடைபெற்றது.

ஆறுமுகசாமி வீடு

இந்நிலையில், நீலகிரியில் கர்சன் எஸ்டேட், சஜீவன் சம்பந்தப்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதேபோல, கோவையில் ஆறுமுகசாமியின் ரேஸ்கோர்ஸ் வீடு, அலுவலகங்கள், சஜீவனின் ஃபர்னிச்சர் கடைகளிலும் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா ஆதரவு எம்.பி நாகராஜன், "அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே ரெய்டு நடக்கிறது. ஏற்கெனவே, அன்புநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி, ஆவணங்களைக் கைப்பற்றினர். ஆனால், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பிரிவு ஏற்படுத்தி அ.தி.மு.கவை அழிக்க நினைக்கிறார்கள். இந்த மிரட்டலுக்கு உண்மையான அ.தி.மு.க எப்போதும் பயப்படாது. அ.தி.மு.கவை வீழ்த்திவிட்டு, இங்கு யாரும் காலூன்ற முடியாது" என்றார்.

நாகராஜன்

 

ஆனால், தனது பேட்டியில் நாகராஜன் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க என்றோ மத்திய அரசு என்றோ தாக்கிப் பேசவில்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/107376-it-raid-continues-for-second-day-in-coimbatore-and-nilgiri.html

  • தொடங்கியவர்

கர்நாடக அதிமுக செயலாளர்: புகழேந்தி வீட்டில் வருமான வரி சோதனை -பெங்களூருவில் கட்சி அலுவலகத்திலும் சோதனை

10chskopugalendhi

புகழேந்தி

10chskohouse

பெங்களூருவில் உள்ள புகழேந்தியின் வீடு.

10chskopugalendhi

புகழேந்தி

10chskohouse

பெங்களூருவில் உள்ள புகழேந்தியின் வீடு.

கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தியின் பெங்களூரு வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி பெங்களூருவில் உள்ள முருகேஷ் பாளையாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சசிகலாவுக்கு நெருக்கமானவரான புகழேந்தி, சிறையில் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார். கல்வி நிறுவனம், பர்னிச்சர் கடை உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் அதிமுக (அம்மா) அணி செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்ட புகழேந்தி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு எதிராக ஊடகங்களில் பேட்டி அளித்து வந்தார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை குடகிற்கு அழைத்து வந்து, உரிய பாதுகாப்பு அளித்தார். தமிழக அரசுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகித்ததாக சேலம் போலீஸார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு ஒரு பெண் அதிகாரி உட்பட 11 வருமான வரித்துறை அதிகாரிகள் புகழேந்தியின் வீட்டுக்குள் நுழைந்தனர். 3 அடுக்குகள் கொண்ட அவரது வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது புகழேந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வெளியே செல்லவும், பிறருடன் தொடர்பு கொள்ளவும் அனுமதி மறுத்தனர். இது தொடர்பாக தகவல் வெளியானதும் செய்தியாளர்களும், அதிமுகவினரும் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல ஸ்ரீராம் புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்காததால், 2 மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பிசென்றனர். இதேபோல நேற்று இரவு வரை புகழேந்தி வீட்டில் தொடர்ந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

 

புகழேந்தி பின்னணி

கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக இருந்தார். பெங்களூருவில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக கவனித்து வந்தார். அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா கைதானபோது புகழேந்தியும், அவரது குடும்பத்தினரும் தங்களது சொத்துகளை பிணையாக வழங்கி கையெழுத்திட்டனர்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு புகழேந்தி அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் ஆனார். சசிகலாவை கட்சி மூத்தவர்கள் விமர்சித்த நிலையில், புகழேந்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவரை ஆதரித்து பேசிவந்தார். சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்ட பிறகு, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

சசிகலாவுக்கு சிறையில் வசதிகளைச் செய்து கொடுத்த விவகாரத்தில் புகழேந்தியின் பெயர் அடிபட்டது. இரட்டை இலை சின்னத்தை மீட்க டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரா கைதானார். அவருக்கும் தினகரனுக்கும் இடைத்தரகராக பெங்களூருவைச் சேர்ந்த ஆஸ்திரேலியா பிரகாஷ் செயல்பட்டதாக டெல்லி போலீஸார் அறிவித்துள்ளனர். இவர், புகழேந்திக்கு நெருக்கமானவர். எனவே தேர்தல் ஆணைய வழக்கில் புகழேந்தியை விசாரிக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.

http://tamil.thehindu.com/india/article20088218.ece?homepage=true

  • தொடங்கியவர்

147 இடங்களில் தொடர்கிறது வருமான வரி சோதனை: 60 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டதாக தகவல்

 

 
download

போலி நிறுவனங்கள் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலா, டி.டி.வி தினகரனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா, டி.டி.வி தினகரன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய வருமான வரித்துறை புலனாய்வு இயக்குனர், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் அளித்துள்ளார். 147 இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.

 

மேலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலா, டி.டி.வி தினகரனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரி சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. 'ஆபரேஷன் கிளீன் பிளாக்மணி' என்ற சோதனை நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. 1800 அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த சோதனை, சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி உள்பட தமிழகத்தில் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. 215 சொத்துகள், 350 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சோதனை நடைபெறுவதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'ஆபரேஷன் க்ளீன் பிளாக்மணி' என்று பெயரிடப்பட்ட இந்த சோதனை 187 இடங்களில் நடந்ததை அடுத்து 40 இடங்களில் சோதனை முடிந்தது, இன்று மீண்டும் 147 இடங்களில் சோதனை தொடர்கிறது. டெல்லி, கொச்சி, ஹைதராபாத் போன்ற இடங்களிலிருந்து கூடுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடந்து வருகிறது.

ஜெயா டிவி இயக்குநர் விவேக் ஜெயராமன் வீடு, டிடிவி தினகரன் அலுவலகம், தி.நகரில் உள்ள விவேக் ஜெயராமன் சகோதரி வீடு, ஜெயா டிவி அலுவலகம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

டி.டி.வி. தினகரன் மனைவி அனுராதாவுக்கு சொந்தமான சென்னை அடையாறில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

நமது எம்ஜிஆர் அலுவலகம், ஜாஸ் கார்ப்பரேட் அலுவலகத்திலும் சோதனை தொடர்கிறது. திரையரங்கு உள்ள பீனிக்ஸ் மால் அலுவலகத்திலும் இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது. இதனால் இன்றும் திரைப்படக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்த சோதனையில் 60 போலி நிறுவனங்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. சோதனையில் எவ்வளவு கருப்புப்பணம் பிடிபட்டது, டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகைகள் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளன என மதிப்பிடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சசிகலா உறவினர்கள், நண்பர்களின் 317 வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இன்றும் சோதனை தொடர்வதை அடுத்து இறுதியாக கணக்கிடும் பணிகள் முடிந்த பின்னரே முழுமையான தகவலைத் தெரிவிப்போம் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவேக் ஜெயராமன் வீட்டில் இன்றும் வருமான வரி சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விவேக்கிடம் எழுத்துப்பூர்வமாக அறிக்கை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயா டிவி அலுவலகத்தில் விடிய விடிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் . விவேக், அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா இல்லங்களிலும் விடிய விடிய சோதனை நடைபெற்றது .

தஞ்சையில் 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மன்னார்குடியில் திவாகரனின் வீடு, கல்லூரியில் 2வது நாளாக வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா நகரில் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வீட்டிலும் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. நாமக்கல்லில் சசிகலா வழக்கறிஞர் செந்தில் வீட்டிலும் செந்தில் நண்பர் சுப்பிரமணியன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் அருகிலுள்ள கர்சன் எஸ்டேட்டிலும் நேற்றிரவு முடிவடைந்த சோதனை இன்று காலை மீண்டும் துவங்கியது. எஸ்டேட் மேலாளர் நடராஜனை அழைத்துச் சென்று அதிகாரிகள் இன்றும் விசாரணை நடத்துகின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article20088601.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆம்புலன்ஸில் பறந்த டாக்குமென்ட்! : 2-வது நாளாக தொடரும் மிடாஸ் ரெய்டு

தமிழகத்தில் சசிகலா மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் சில முக்கிய இடங்களில் மட்டும் சோதனை தொடர்கிறது.

midas

 

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ள சசிகலா குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வருமான வரித்துறையினர் நுழைந்தனர். அப்போதிலிருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பணியில் இருந்தவர்களையும் வெளியேற்றவில்லை. இதனால் காலையிலிருந்தே வெளியில் இருந்து வந்த பணியாளர்கள் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளே இருந்த பணியாளர்கள் வெளியே செல்ல முடியாமலும் ஓரிடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

மதியம் 2.30 மணிக்கு அதிகாரிகள் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்கள். இதைத் தொடர்ந்து பத்து நிமிடத்திலேயே அந்த பணியாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், நள்ளிரவு வரை ரெய்டு தொடர்ந்தது. இரவு 11.30க்கு ரெய்டு முடிந்ததும், ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்து டாக்குமெண்டுகளை அதிகாரிகள் அள்ளிக்கொண்டு போனார்கள். அதைத்தொடர்ந்து மிடாஸ் மதுபான ஆலை உள்ளே யாரும் நுழையாதவாறு இரவிலிருந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இன்று காலை 11.30க்கு இரண்டு கார்களில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், மிடாஸ் கம்பெனி உள்ளே நுழைந்திருக்கிறார்கள். மிடாஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாக அலுவலர்களை கம்பெனிக்கு வரவழைத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.  இரண்டாவது நாளாகத் தொடரும் ரெய்டின் காரணமாக மூன்று நாள்கள் மிடாஸ் நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/107400-income-tax-raid-at-midas-liquor-industry.html

  • தொடங்கியவர்

ரெய்டுக்கு 200 கார்கள்.... ஒ.பன்னீர்செல்வம் அனுப்பினாரா?

வம்பர் 9-ம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், நிறுவனங்கள் பரபரப்பாக இருந்தன. அன்று 187 பிரமுகர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டின் போது அதிகாரிகள் பயணித்த காரில் ‘ஸ்ரீனி வெட்ஸ் மகி’ என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தன. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கால் டாக்ஸி நிறுவனமான ‘ஃபாஸ்ட் ட்ராக்’ பெயர்கள் காரில் இருந்தன. இதைப் பார்த்த தினகரன் தரப்பினர், ‘‘கால் டாக்ஸி நிறுவனத்தின் உரிமையாளர், ‘ரெட்சன்’ அம்பிகாபதி. சென்னை நுங்கம்பாக்கத்தில் அவரது அலுவலகம் செயல்படுகிறது. இவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர். இதிலிருந்தே புரியவில்லையா?... ஓ.பன்னீர்செல்வம் சொல்லித்தான் அம்பிகாபதி அவரது நிறுவனத்தில் இருந்து கால் டாக்ஸிகளை அனுப்பியிருக்கிறார். எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் இந்த ரெய்டை நடத்தச் சொல்லி பிரதமர் மோடியைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள். ஆனால், பி.ஜே.பி-யின் கனவு பலிக்காது” என்கிறார்கள்.

ரெட்சன் அம்பிகாபதி ரெய்டு

 

இதுபற்றி ரெட்சன் அம்பிகாபதியிடம் கருத்து கேட்டோம்.

‘‘ரெய்டு நடந்த அன்று காலை நான் தேனியில் இருந்தேன். டி.வி. செய்தியில், எங்கள் நிறுவன கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றதைப் பார்த்தேன். உடனே, சென்னை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு விசாரித்தேன். ஐந்து நாள்களுக்கு முன்பு, 160 கார்களைத் திருமண நிகழ்ச்சி ஒன்றிக்காக முன்பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி, ரெய்டுக்கு முன்தினம் இரவு 9.30 மணிக்கு எங்கள் கார்கள் சென்றிருக்கின்றன. அதன்பிறகுதான் ரெய்டுக்கு கார்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது என்று என்னிடம் சொன்னார்கள். இதற்கு முன்பு ஒருமுறை தேர்தல் ஆணையத்தின் பயன்பாட்டுக்காக 300 கார்களை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்.

பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்தபோது, முன்னாள் பி.ஜே.பி. மாவட்டத் தலைவர் எங்கள் நிறுவனத்திடம் 100 கார்களைக் கேட்டார். அனுப்பினோம். இது எங்களுடைய பிசினஸ். நீங்கள்கூட போனில் நூறுக்கும் மேற்பட்ட கார்களைக் கேட்டு ஆர்டர் கொடுத்தால், நிச்சயம் அனுப்புவோம். இதற்கும் என்னுடைய அரசியலுக்கும் சம்பந்தமேயில்லை. நான், பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்தான். வருமானவரித் துறை, மத்திய அரசின் ஓர் அங்கம். அபபடியிருக்கும்போது ஓ.பி.எஸ். சொன்னதால்தான் நான் கார்களை அனுப்பியதாக அரசியல் வெறுப்பில் பேசுகிறார்கள். எங்கள் நிறுவன கார்கள் சொன்ன நேரத்தில் சரியாக ஒத்துழைப்பு தந்ததாக வருமான வரித்துறையிடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது. கார்களுக்கான வாடகை ரூபாயை முறைப்படி அந்தத் துறையினர் செலுத்திவிட்டனர். இதுதான் நடந்தது’’ என்கிறார்.

 

ஃபாஸ்ட் ட்ராக்கில்தான் போயிருக்கிறார்கள்!...

http://www.vikatan.com/news/tamilnadu/107453-200-carsis-it-sent-by-ops-for-raid-purpose.html

  • தொடங்கியவர்

தங்கத்தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு ஐ.டி அதிகாரிகள் எப்போது செல்வார்கள்?

 

டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களி்ல் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தற்போது வரை அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதன் ஒருபகுதியாக இன்று தினகரன் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் அலுவலக உதவியாளர் கனகராஜ் என்பவரது வீட்டில் ஐ.டி அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். இந்நிலையில் கனகராஜை கம்பத்தில் உள்ள தங்கத் தமிழ்ச்செல்வன் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று பிறகு மீண்டும் அவரது இல்லத்திற்கே அழைத்துவந்தனர். தற்போது கனகராஜ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் சூழலில் தங்கத்தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு ஐ.டி அதிகாரிகள் செல்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

IMG-20170724-WA0014_17072.jpg

 

இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்களில் விசாரித்த போது, "தங்கத்தமிழ்ச்செல்வனின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், தங்கத்தமிழ்ச்செல்வன் வீட்டில் இருக்கும் அனைவரும் செக்காணூரணிக்கு சென்றுவிட்டார்கள். தற்போது தங்கத்தமிழ்ச்செல்வன் வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில், அவர்கள் அனைவரும் இன்று இரவு அல்லது நாளை காலை வீட்டிற்கு வந்தபிறகே சோதனை நடத்த வாய்ப்பிருப்பதாக அறிகிறோம்" என்றனர்.

யாரையும் விட்டுவைக்காமல் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் அனைவரது இடங்களிலும் சோதனை நடத்திவரும் ஐ.டி அதிகாரிகள், தங்கத் தமிழ்ச்செல்வன் வீட்டிலும் சோதனை நடத்தலாம் என்ற நிலையில், இதனால் தேனியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதால் போலீஸ் உதவியை நாட வருமானவரித்துறை அதிகாரிகள்  திட்டமிட்டிருப்பதாக தகவலறிந்த வாட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. தங்கத்தமிழ்ச்செல்வனின் வீடு, கம்பம் அருகில் உள்ள நாராயணதேவன்பட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/107470-when-will-it-officers-raid-at-thanga-tamilselvan-house.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.