Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துக் கணிப்பு !

Featured Replies

கருத்துக் கணிப்பு !

 

மூன்று விட­யங்கள் இன்­றைய அர­சியல் அரங்கில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு, செலவுத் திட்டம், புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடான அர­சியல் தீர்­வுக்­கான விவாதம் மற்றும் ஜன­வரி மாதத்தில் நடை­பெ­று­வ­தற்­காகத் திகதி குறிக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் ஆகிய மூன்­றுமே அந்த முக்­கிய விட­யங்­க­ளாகும். 

இந்த மூன்றும் தனித்­தனி விட­யங்கள். ஆயினும், இடைக்­கால அறிக்கை மற்றும் உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் என்­ப­வற்றில் அர­சாங்கம் நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­தி­ருக்­கின்­றது. இந்த நிலையில், இந்த இரு­கட்சி அர­சாங்கம், தன்னை தொடர்ந்து பத­வியில் தக்க வைத்துக் கொள்­வ­தற்­கான ஒரு மறை­முக நிகழ்ச்­சி­ நி­ரலை இந்த விட­யங்­களின் பின்­ன­ணியில் கொண்­டி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. 

பொது எதி­ரணி உட்­பட, மறு­த­ரப்பில் உள்ள அர­சியல் கட்­சி­க­ளையும், பொது மக்­க­ளையும் தெளி­வான ஒரு நிலைப்­பாட்டில் செயற்­ப­ட­வி­டாமல் குழப்­பி­ய­டித்து, அதன் ஊடாக அர­சியல் ரீதி­யான நலன்­களை அடை­வ­தற்­காக, வரவு ,செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டிய கால கட்­டத்தில் இந்த இரண்டு விட­யங்­க­ளையும் அர­சாங்கம் கையில் எடுத்­தி­ருப்­பதை, ஓர் அர­சியல் வியூ­க­மா­கவும் குறிப்­பி­டலாம். 

 

 

 

வரவு, செலவுத் திட்டம் 

வழ­மை­யான முக்­கி­யத்­துவம் கொண்ட ஒரு வரவு, செலவுத் திட்டம் என்­ப­தற்கும் அப்பால், இம்­முறை கொண்டு வரப்­ப­டு­கின்ற வரவு, செலவுத் திட்டம் அர­சியல் ரீதி­யாக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா போன்ற முக்­கிய நாடு­க­ளு­ட­னான இலங்­கையின் அய­லு­றவுக் கொள்கை, பொரு­ளா­தா­ரத்தின் அடித்­த­ளத்தில் சுழல்­கின்ற நிலையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இந்த மூன்­றா­வது வரவு செலவுத் திட்டம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

 நிறு­வ­னங்­களில் பணி­யாற்­று­கின்ற ஊழி­யர்­க­ளுக்கு வருட இறு­தியில் போனஸ் வழங்­கு­வது போன்று, வரவு, செலவுத் திட்ட காலத்தில், மக்­க­ளுக்கு அர­சாங்கம் சிறு சிறு சலு­கை­களை வழங்­கு­வது உண்டு. அந்த வகையில் சில உணவுப் பொருட்­க­ளுக்­கான வரிக்­கு­றைப்பை அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. வரவு, செலவுத் திட்டம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு ஒரு நாள் முன்­ன­தாக நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர நடத்­திய விசேட செய்­தி­யாளர் சந்­திப்பில் இந்த அறி­வித்­தலை வெளி­யிட்டார். 

இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற கிழங்கு, பெரிய வெங்­காயம், பருப்பு மற்றும் கரு­வாடு, தேங்காய் எண்ணெய், மரக்­கறி எண்ணெய் என்­ப­வற்­றுக்­கான விசேட வர்த்­தக வரி­களே குறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதி­க­ரித்துச் செல்­கின்ற வாழ்க்கைச் செல­வுக்கு ஈடு கொடுக்­கத்­தக்க வகையில் வரு­மான அதி­க­ரிப்­பின்றி நாட்டு மக்கள் அல்­லாடிக் கொண்­டி­ருக்­கின்ற  நிலையில் அர­சாங்­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்ள விலைக்­கு­றைப்­பா­னது, வர­வேற்பைப் பெறும் என்­பதில் சந்­தே­க­மில்லை. ஆனாலும், இந்த விலைக்­கு­றைப்­பா­னது, வாழ்க்கைச் செலவு சுமையில் பெரிய மாற்றம் எத­னையும் கொண்டு வரப் போவ­தில்லை. ஆயினும், உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் நடை­பெ­ற­வுள்ள சந்­தர்ப்­பத்தில், அர­சாங்கம் காட்­டி­யுள்ள விலைக்­கு­றைப்பு என்ற கவர்ச்­சி­யா­னது, தேர்­தலை இலக்­காகக் கொண்­டி­ருக்­கின்­றது என்றே பலரும் கரு­து­கின்­றார்கள்.  

இந்த அறி­வித்தல் பாமர மக்­களைச் சென்­ற­டைந்து, அதன் நன்மை என்ன என்­பதை, அவர்கள் முழு­மை­யாக அறிந்து கொள்­வ­தற்கு முன்­ன­தாக, பொது மக்கள் மீது சுமத்­து­கின்ற வரிச்­சு­மைகள் பற்­றிய அறி­வித்­தலை நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தனது வரவு, செலவுத் திட்ட உரையில் முன்­மொ­ழிந்­தி­ருக்கின்றார். அவற்றில் காபன் வரி என்ற புதிய வரி, கார்கள் மற்றும் பொது போக்­கு­வ­ரத்து சாத­னங்­க­ளான பேருந்­துகள் மட்­டு­மல்­லாமல் மோட்டார் சைக்­கிள்­க­ளுக்கும் நாளாந்த அடிப்­ப­டையில் அற­வி­டப்­படும் என அவர் கூறி­யுள்ளார். இது­போன்று பொது­மக்­களை மறை­மு­க­மாகப் பாதிக்­கத்­தக்க வேறு வகை­க­ளி­லான வரி அற­வீ­டு­க­ளுக்­கு­ரிய முன்­மொ­ழி­வு­களும் இந்த வரவு, செல­வுத்­திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களில்  கவனம் செலுத்­தி­யுள்ள திட்டம் 

கல்­விக்கு அதிக முக்­கி­யத்­து­வத்தை அளித்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்ற இந்த வரவு, செலவுத் திட்­டத்தை நீலத்­தையும் பச்­சை­யையும் உள்­ள­டக்­கிய ஒரு திட்­ட­மென அர­சாங்கம் அழைக்­கின்­றது. சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி நீல நிறத்தைக் கொண்­டது. ஐக்­கிய தேசிய கட்சி பச்சை நிறத்தைக் கொண்­டது. இந்த இரண்டு கட்­சி­க­ளி­னதும் கொடி நிறங்­க­ளான நீலமும், பச்­சையும் கடல் மற்றும் விவ­சாயத் துறை சார்ந்த அபி­வி­ருத்­தியைக் குறி­யீ­டாகக் காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. 

கடல் வளத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பொரு­ளா­தா­ரத்­தையும், நில­வ­ளத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட விவ­சாயம் உள்­ளிட்ட பொரு­ளா­தா­ரத்­தையும் அபி­வி­ருத்தி செய்யும் வகையில் இந்த வரவு, செலவுத் திட்­டத்தில் திட்­டங்கள் தீட்­டப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. பாரிய கடன் சுமையில் சிக்­கி­யுள்ள அர­சாங்கம், அதில் இருந்து விடு­ப­டு­வ­தற்­கா­கவே கடல் வள அபி­வி­ருத்­தியை முதன்­மைப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. 

.இலங்­கையை சர்­வ­தேச வர்த்­தக சந்­தைக்­கான மைய­மாகக் கட்­டி­யெ­ழுப்­பு­கின்ற பொரு­ளா­தாரத் திட்­டத்தின் சாயல் இந்த வரவு, செலவுத் திட்­டத்தில் படிந்­தி­ருப்­பதை நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர கோடிட்டுக்­காட்­டி­யி­ருக்­கின்றார். எதிர்­வரும் 2025 ஆம் ஆண்­டுக்குள் மேல் நடுத்­தர வரு­மா­ன­முள்ள நாடாக இலங்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான அடித்­தளம் இந்த வரவு, செல­வுத்­திட்­டத்தில் இடப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் நிதி அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். 

அதே­வேளை வடக்கு, கிழக்கு பிர­தேச மக்­களின் வாழ்க்கை நலன்­களில் கரி­சனை கொண்ட திட்­டங்­க­ளுக்கும் பல்­வேறு ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் குறித்த திட்­டங்­க­ளுக்கும் இந்த வரவு, செலவுத் திட்­டத்தில் இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருப்­பது கவ­னிப்­புக்­கு­ரி­ய­தாகும். மொத்­தத்தில் நெருக்­க­டி­க­ளையும் நிவா­ர­ணங்­க­ளையும் உள்­ள­டக்­கி­யுள்ள இந்த வரவு, செலவுத் திட்டம் அர­சியல் ரீதி­யான சூடான விவா­தங்­களை எதிர்­கொள்ள நேரிடும் என நிச்­ச­ய­மாக எதிர்­பார்க்­கலாம். 

அதே­வேளை, வரவு, செலவுத் திட்ட விவா­தங்­களைச் சூடேற்­று­வ­தற்கு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை, உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் ஆகிய சம­கால அர­சியல் விட­யங்­க­ளையும் அர­சி­யல்­வா­திகள் பயன்­ப­டுத்­து­வார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை. இடைக்­கால அறிக்­கையும், உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலும் உயி­ரோட்­ட­முள்ள சம­கால அர­சியல் விட­யங்­க­ளா­கவும், விவ­கா­ரங்­க­ளா­கவும் அமைந்­தி­ருப்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகும்.  

 

 

 

 குழப்­ப­க­ர­மான நிலைமை

இடைக்­கால அறிக்­கை­யா­னது, அர­சியல் தீர்­வுக்கு அடிப்­ப­டை­யான ஆட்சி முறை, மதங்­க­ளுக்­கான உரிமை, அதி­காரப் பகிர்வு போன்ற விட­யங்­களில் அல்­லாடிக் கொண்­டி­ருக்­கின்­றது. அந்த அறிக்கை குறித்து அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்­றத்தில் நடத்­தப்­பட்ட விவா­தத்தில் பல­த­ரப்­பட்ட கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணத்­தக்க வகையில் ஆரோக்­கி­ய­மான அர­சியல் நிலைப்­பா­டு­களை அந்த கருத்­துக்கள் கொண்­டி­ருக்­க­வில்லை. அத்­த­கைய கருத்­துக்­களில் உடன்­பாடு எட்­டத்­தக்க வகை­யிலும் அந்த விவாதம் அமை­ய­வில்லை. ஆளுநருக்கு நேர் முர­ணான நிலைப்­பா­டு­களை வலி­யு­றுத்­து­வ­தற்­கான ஒரு பிர­சார கள­மா­கவே அந்த விவாதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. 

நாட்டில் உள்ள அனைத்து அர­சியல் கட்­சி­க­ளி­னதும் பங்­க­ளிப்­புடன் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான ஒரு நட­வ­டிக்­கை­யா­கவே பாரா­ளு­மன்றம் அர­சியல் நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டது. முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த ஒரு மோச­மான யுத்தம் மூள்­வ­தற்குக் கார­ண­மாக இருந்த இனப்­பி­ரச்­சி­னைக்கு முடிவு காண்­ப­தற்­கான அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய இந்த அர­சி­ய­ல­மைப்பு குறித்து ஒரு சில தினங்­களே அந்த சபையில் விவா­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இந்த விவாதம் நடை­பெற்­ற­போது, இடைக்­கால அறிக்கை குறித்து நாட்டில் உள்ள மதத்­த­லை­வர்கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­க­ளுக்கு உரிய விளக்­க­ம­ளிக்­கப்­படும் என்றும், சர்­வ­கட்சி மாநாடும் நடத்­தப்­படும் என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­தி­ருந்தார். அது மட்­டு­மல்ல. கைத்­தொ­லை­பேசி வழி­யான (எஸ்.எம்.எஸ்) குறுந்­த­க­வல்­களின் ஊடாக பொது­மக்­க­ளு­டைய கருத்­துக்­களும் திரட்­டப்­படும் என்றும் அர­சாங்­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அர­சியல் தீர்வு உட்­பட பிரச்­சி­னை களுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை எவ்­வாறு உரு­வாக்­கலாம் என்­பது குறித்து ஏற்­க­னவே அர­சாங்கம் கருத்­த­றியும் குழுக்­களின் ஊடாக மக்­க­ளிடம் இருந்து கருத்­துக்­களைப் பெற்­றி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஆகவே, அந்தக் கருத்­துக்­க­ளுக்கு என்ன நடந்­தது, பொது­மக்­க­ளிடம் இருந்து நேர­டி­யாக மீண்டும் கருத்­துக்­களைப் பெறு­வதன் நோக்கம் என்ன என்ற கேள்­விகள் இப்­போது எழுந்­தி­ருக்­கின்­றன.

இந்த நிலையில் இடைக்­கால அறிக்கை தொடர்­பான அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் எதிர்­வரும் சித்­திரை மாதத்தில் அல்­லது அதன் பின்னர் முன்­னெ­டுக்­கப்­படும் என்ற தக­வலும் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது.  ஆயினும் இடைக்­கால அறிக்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சியல் தீர்­வுக்­கான முயற்­சியின் அடுத்த கட்ட நகர்­வுகள் எப்­படி அமையப் போகின்­றது என்­பதில்; தெளி­வா­ன­தொரு நிலைப்­பாட்டைக் காண முடி­ய­வில்லை. குழப்­ப­க­ர­மான நிலையே காணப்­ப­டு­கின்­றது. 

நாட்டின் ஆட்சி முறை மற்றும் அதிகாரப் பர­வ­லாக்கல் என்ற விட­யங்­க­ளுக்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அணி­யி­ன­ரான சிங்­களத் தரப்பில் இருந்தே எதிர்ப்பு கிளம்­பி­யி­ருக்­கின்­றது. அதே­வேளை, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை இந்த இடைக்­கால அறிக்­கையை வர­வேற்று, பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­காக தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் அபி­லா­ஷை­களின் அடிப்­ப­டை­யான விட­யங்­களில் விட்­டுக்­கொ­டுப்­புடன் அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கியி­ருக்­கின்­றது. 

இது, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு தமிழ் மக்கள் அளித்­துள்ள தேர்தல் ஆணைக்கு முர­ணான வகையில், தமிழ்த்­தே­சிய கூட்­டமைப்பின் தலைமை – குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்சி தன்­னிச்­சை­யாக மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்கை என குறிப்­பிட்டு, கூட்­ட­மைப்­புக்­குள்­ளேயே கடும் போக்­கி­லான மாற்றுக் கருத்­துக்கள் வெளிப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்த வகையில், இடைக்­கால அறிக்­கையை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனக்­கூறி ஈ.பி­.ஆர்.­எல்.எவ். கட்சி அதனை நிரா­க­ரித்­தி­ருக்­கின்­றது.

அதே­வேளை, ஈ.பி­.ஆர்­.எல்.எவ். தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி ஆகிய அர­சியல் கட்­சி­களும், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள சிவில் அமைப்­புக்­களும் இணைந்து அந்த எதிர்ப்பு நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. அது மட்­டு­மல்­லாமல், தேர்­தலில் கூட்­ட­மைப்பு பிள­வு­பட்ட நிலையில் களம் இறங்க வேண்­டிய அர­சியல் சூழலும் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது, இதனால், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இறுக்­க­மான ஓர் அணி­யாக அர­சி­யலில் தொடர முடி­யுமா என்ற சந்­தே­கமும் எழுந்­தி­ருக்­கின்­றது. 

எனவே, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையைக் கடந்து எழுந்­துள்ள தமிழர் தரப்­பி­லான எதிர்ப்பு மற்றும் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ரணி சார்ந்த சிங்­களத் தரப்பு ஆகிய இரு­முனை எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான வரைபைத் தயா­ரிக்க வேண்­டிய பாரிய பொறுப்பில் அர­சாங்கம் சிக்­கி­யி­ருக்­கின்­றது.

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல்

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­த­லா­னது, பல்­வேறு அர­சியல் வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்குப் பின்னர், தேர்தல் முறையில் மாற்­றங்­களைக் கொண்­ட­தாக, நீண்ட தாம­தத்தின் பின்னர் நடை­பெ­று­வ­தற்கு ஏற்­பா­டா­கி­யி­ருக்­கின்­றது. சில வேளை­களில், திட்­ட­மிட்­ட­படி, இந்தத் தேர்தல் ஜன­வரி மாதம் நடை­பெ­றாமல் பிறி­தொரு திக­திக்குப் பின்­போ­டப்­ப­ட­வும்­ கூடும். அவ்­வாறு நிகழ்ந்தால் அது ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரி­ய­தல்ல. 

ஆயினும், மிகவும் முக்­கி­ய­மா­னதோர் அர­சியல் சூழ­லி­லேயே இந்தத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு, அர­சாங்கம்  திட்­ட­மிட்­டுள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை, அதி­காரப் பர­வ­லாக்கல் தொடர்பில் எதிரும் புதி­ரு­மான கொள்கை நிலை­யி­லான விவா­தங்­களை உயி­ரோட்­ட­மாகக் கொண்­டுள்ள, இந்த அர­சியல் சூழ­லா­னது, உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை அடி­மட்ட அபி­வி­ருத்தி சார்ந்த தேர்தல் என்ற நிலையைக் கடந்து, இதனை முழுக்க முழுக்க அர­சியல் மயப்­பட்­ட­தாக மாற்­று­வ­தற்கு வழி­தி­றந்­துள்­ளது.

அடுத்த கட்ட தேசிய அர­சியல் நகர்­வு­களில், முக்­கி­ய­மான கொள்கை வழி அர­சியல் தீர்­மா­னங்­க­ளுக்­கான ஆரம்பப் புள்­ளி­யா­கவும் இந்தத் தேர்தல் அமையப் போகின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அடுத்த கட்ட இருப்பு என்ன என்­பதைக் கட்­டியம் கூறத்­தக்க பெறு­பே­று­களை பிர­ச­விக்கப் போகின்ற முக்­கி­ய­மான கள­மா­கவும் இந்தத் தேர்தல் அமை­யப்­போ­கின்­றது. அதற்­கான அறி­கு­றிகள் அர­சியல் களத்தில் மிகத் தெளி­வாகத் தோன்­றி­யி­ருக்­கின்­றன.

பல்­வேறு அர­சியல் பின்­ன­ணி­களில், பல முனை­க­ளி­லான அர­சியல் நெருக்­கு­தல்கள் இருந்­த­போ­திலும், இடைக்­கால அறிக்கை தொடர்பில் நாடு தழு­விய அள­வி­லான விவா­தத்­தையும், உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­த­லையும் இந்த கால கட்­டத்தில் இடம்­பெ­றாமல் தாம­தித்­தி­ருக்­கலாம். அல்­லது முந்­தியோ பிந்­தியோ இடம்­பெ­று­கின்ற வகையில் இவற்றை அர­சாங்கம் திட்­ட­மிட்­டி­ருந்­தி­ருக்­கலாம். ஆனால் அவ்­வாறு நடை­பெ­ற­வில்லை. 

வரவு, செலவுத் திட்­ட­மா­னது வரு­டந்­தோறும் நவம்பர் மாதத்தில் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டி­யது. அந்த நிகழ்ச்சி நிரலில் மாற்­றங்­களைச் செய்ய முடி­யாது. அது கடி­ன­மான காரியம். ஆயினும், சிக்­கல்கள் நிறைந்த விட­ய­மா­கிய அர­சியல் தீர்­வுக்­கான முயற்சி மற்றும், ஆட்சிப் போக்கை நிர்­ண­யிக்கத் தக்க வல்­ல­மையைக் கொண்­ட­தாக அமைந்­துள்ள உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் என்­ப­வற்றை அர­சாங்கம் இந்த வரவு, செல­வுத்­திட்ட காலப்­ப­கு­தியில் திட்­ட­மிட்ட வகையில் முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவே ஆய்­வா­ளர்கள் கரு­துகின்றார்கள். . 

ஒத்த நிலைப்­பாடு........?

அர­சியல் தீர்வு தொடர்­பான அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்­டிற்கு வலுச் சேர்த்து, நாட்டு மக்­களின் ஆணையைப் பெறு­வ­தற்­கான முயற்­சிகள் இந்த உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலில் முதன்மைப் பெற்­றி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

இந்த முயற்­சி­யா­னது, யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் கழிந்த பின்னர், ஓர் அர­சியல் தீர்வை எட்­டு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள முயற்சி தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களைப் புறந்­தள்ளச் செய்யும். அத்­துடன் ஒற்­றை­யாட்­சியின் கீழ் முன்னர் இருந்­த­திலும் பார்க்க மோச­மான நெருக்­க­டிகளைக் கொண்­டதோர் அர­சியல் நிலைப்­பாட்டை உரு­வாக்­கு­வ­தற்­குமே வழி­வ­குக்கும் என்றும் நிச்­ச­ய­மாக நம்­பலாம். 

ஏனெனில் வடக்கு, கிழக்கு இணைக்­கப்­ப­ட­மாட்­டாது. பௌத்­தத்­திற்கே முத­லிடம். ஒற்­றை­யாட்சி முறையில் மாற்­ற­மில்லை. இவற்­றுக்கு எந்த வகை­யிலும் பாதகம் ஏற்­ப­டாத வகை­யி­லேயே, ஒற்­றை­யாட்­சியின் கீழ் உச்­ச­கட்­டத்தில் அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்­பதே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும். மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யி­னரும், இதே கொள்­கை­யைத்தான் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

ஆக, தமிழ் மக்கள் விரும்­பு­கின்ற வகையில் வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறை­யி­லான ஆட்சி, பகி­ரப்­பட்ட இறை­யாண்­மை­யுடன் கூடிய அதி­கா­ரப்­ப­கிர்வு என்பன ஏற்கனவே எட்டாக்கனியாக மாறியிருக்கின்றன. ஏனெனில் சிங்களத் தரப்பினர் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இந்த விடயங்களில் தேவையான அளவில் விட்டுக் கொடுப்பை ஏற்கனவே செய்திருக்கின்றது. 

கருத்துக் கணிப்பா......?

எனவே, அரசாங்கத் தரப்பினரும், பொது எதிரணியினரும், அரசியல் தீர்வுக்கான தமது நிலைப்பாட்டுக்குரிய ஆணையை இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் சிங்கள மக்களிடம் இருந்து பெறுவார்கள். அதற்கான கருத்துக் கணிப்பாகவே இந்தத் தேர்தல் அமையும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை – தமிழரசுக்கட்சியானது, அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ள தனது நிலைப்பாட்டுக்கான ஆணையை தமிழ் மக்களிடம் இருந்து இந்தத் தேர்தலில் பெறுவதற்கு முயற்சிப்பார்கள் என்பதிலும் ஐயமில்லை. எனவே, இதுவும்கூட தமிழ் மக்கள் மத்தியிலான ஒரு கருத்துக் கணிப்பு நடவடிக்கை என்றே கருத வேண்டியிருக்கின்றது. 

ஏற்கனவே உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கைகளுக்கான கிராமப்புறச் சந்திப்புக்களில் தமிழரசுக் கட்சி இடைக்கால அறிக்கை தொடர்பில் தான் எடுத்துள்ள முடிவுகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றது. இதனால், இந்தச் சந்திப்புக்கள் பல இடங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டாலும், பல சந்திப்புக்கள் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, சிங்கள மக்களிலும் பார்க்க, நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என்பது தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் பற்றிய தலையெழுத்தை நிர்ணயிக்கின்ற ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. அந்த வகையில் இராஜதந்திர ரீதியில் திட்டமிட்டு இந்தத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றே கருத வேண்டியிருக்கின்றது.  

பி.மாணிக்கவாசகம்

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.