Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ஜனாதிபதியின் தென்கிழக்காசிய பயணம்...அமெ­ரிக்க - சீன உறவுகள் மேலும் வலுவடையுமா?

Featured Replies

அமெரிக்க ஜனாதிபதியின் தென்கிழக்காசிய பயணம்

 

அமெ­ரிக்க - சீன உறவுகள் மேலும் வலுவடையுமா?

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் 
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

 

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் 12 நாட்கள் அரச பணம் ஒன்­றினை மேற்­கொண்டு தென்­கி­ழக்கு ஆசிய பிராந்­தி­யத்­திற்குப் புறப்­பட்­டுள்ளார். இவரின் பயணம் ஐந்து நாடு­க­ளுக்கு விஜயம் செய்து இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­துடன் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடை­பெறும் ஆசியன் மாநாட்­டிற்கும் சமூ­க­ம­ளிப்­ப­தாகும். வியட்­நாமில் ஏ.பி.ஈ.சி. மாநாடு11-, 12 ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­பதி ட்ரம்ப் வியட்­நாமில் விஜ­யத்தை முடித்­து­விட்டு பிலிப்பைன்ஸ் நோக்கி செல்வார். ஜப்பான், தென்­கொ­ரியா, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து நாடு­க­ளுமே அவ­ரது பய­ணங்­க­ளாகும். இவ­ரது அரச பயணம் அர­சியல், இரா­ணுவ, பொரு­ளா­தார விட­யங்­களை உள்­ள­டங்­கி­ய­தாகும்.  

உல­கிற்கு அச்­சு­றுத்தல் என மேற்கு ஊட­கங்­களில் அழுத்திக் கூறப்­படும் வட­கொ­ரிய தலை­வரின் அணு­வா­யுத முயற்­சி­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அல்­லது வட­கொ­ரி­யாவை அதன் நட்பு நாடான சீனா­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அணு­வா­யுத அச்­சு­றுத்­தலை இல்­லா­தொ­ழிப்­பது ஆகி­யவை அர­சியல், இரா­ணுவ நோக்­கங்­க­ளாகும். அதே­வேளை கொரிய பிராந்­தியக் கடலில் அமெ­ரிக்க யுத்தக் கப்­பல்கள் ஆயு­தங்­தாங்கி பிர­சன்­ன­மாக இருப்­பதும், தென்­கொ­ரியா யுத்­தத்தை விரும்­பாமல் இரா­ஜ­தந்­திர ரீதியில் பிரச்­சி­னையை தீர்க்க முயல்­வதும் டொனால்ட் ட்ரம்­புக்கு மகிழ்ச்சி தரும் விட­ய­மல்ல. இதை­யும்­விட ட்ரம்ப் முகங்­கொ­டுக்கும் உள்­நாட்டுப் பிரச்­சி­னை­களின் மத்­தியில் ட்ரம்பின் தென் கிழக்­கா­சிய பயணம் இடம்­பெ­று­கி­றது. அமெ­ரிக்­காவின் சர்­வ­தேச வர்த்­த­கத்தில் அமெ­ரிக்­கா­வுக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்க, ஜப்பான் இரு­த­ரப்பு வர்த்­த­கத்தில் வர்த்­தக மீதி அமெ­ரிக்­கா­விற்குப் பாத­க­மாக உள்­ளது. அதே­போன்று அமெ­ரிக்­காவின் முதன்மை ஸ்தானத்­தி­லுள்ள வர்த்­தக கூட்­டா­ளி­யான சீனா­வுடன் இரு­த­ரப்பு வர்த்­தகம் மிகக்­கூ­டிய அளவில் அமெ­ரிக்­கா­விற்கு வர்த்­தக மீதி பாத­க­மா­க­வுள்­ளது. அதேபோன்று அமெ­ரிக்­காவின் வர்த்­தக கூட்­டா­ளி­யான தென்­கொ­ரி­யா­வுடன் இரு­த­ரப்பு வர்த்­தகம் அமெ­ரிக்­கா­விற்கு வர்த்­தக மீதி பாத­க­மா­க­வுள்­ளது.

ட்ரம்ப் பன்­னி­ரண்டு நாள்கள் விஜ­யத்தை ஆரம்­பித்­த­தற்கு முதல் நாள் அமெ­ரிக்­காவில் நிகழ்ந்த தாக்­குதல் இரு­பது உயிர்­களைக் காவு கொண்­டுள்­ளது. இம்­மாதம் ஐந்தாம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்தில் தேவா­லய பிரார்த்­த­னையின் போது இடம்­பெற்ற தாக்­குதல் பெரும் அதிர்­வ­லை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. இந்தச் சம்­பவம் நடை­பெற்ற போது ட்ரம்ப் ஜப்பான் நாட்டில் இருந்தார். மனோ­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர்­களே இவ்­வாறு கொலைச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள் எனக் கண்­டித்­துள்ளார். அதே­போன்று ஐப்­பசி மாத இறுதி நாளன்று நியூயோர்க் நகரில் இனந்­தெ­ரி­யாத நபர் வாக­னத்தை மோதி எட்டு பேரைக் கொன்றான். பின்னர் கொலை­யாளி அமெ­ரிக்க கிறீன்கார்ட் திட்­டத்தின் கீழ் அமெ­ரிக்­கா­வுக்கு குடி­பெ­யர்ந்­தவர் எனத் தெரி­ய­வந்­துள்­ளது. அவன் ஐ.எஸ். பயங்­க­ர­வாத இயக்­கத்தைச் சேர்ந்­தவன் என நம்­பப்­ப­டு­கின்­றது. இவனும் குடும்­பமும் உஷ்­பெ­கிஸ்­தா­னி­லி­ருந்து குடி­யே­றி­ய­வர்கள். ஜனா­தி­பதி தேர்­தலில் சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டிப்பேன் என்ற கோஷத்தை முழங்­கிய ட்ரம்ப் பத­வி­யேற்­றதன் பின்னர் நிகழ்ந்த ஐ.எஸ். பயங்­க­ர­வாத தாக்­குதல் அவரின் செல்­வாக்கை சரியச் செய்­துள்­ளது.

''தீவி­ர­வாத இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம்'' என்றே ஐ.எஸ். பயங்­க­ர­வா­தத்தை ட்ரம்ப் குறிப்­பிட்­டு­கின்றார். இந்தப் பயங்­க­ர­வாத தாக்­குதல் 2001 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 11 ஆம் திக­திக்குப் பின்னர் அமெ­ரிக்­காவில் நிகழ்ந்த பாரிய பயங்­க­ர­வாதச் செய­லென வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது. கொலை­யாளி கிறீன்கார்ட் லொத்தர் விசாவில் குடி­யே­றி­யவர் என்­பதால் எதிர்­கா­லத்தில் இந்த லொத்தர் திட்­டத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும் என ஜனா­தி­பதி கட்­ட­ளை­யிட்­டுள்ளார்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் ட்ரம்பின் பிர­தான ஆலோ­ச­கர்கள் ரஷ்­யா­வுடன் இணைந்து செயற்­பட்­டார்­களா என காங்­கிரஸ் சபையில் விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றன. தேர்தல் நிறை­வுற்ற பின் அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் ரஷ்ய உள­வா­ளிகள் சம்­பந்­தப்­பட்­ட­தாக பிர­பல ஊட­கங்கள் ஐயப்­பா­டுகள் வெளி­யிட்­டன. நடை­பெறும் விசா­ர­ணைகள் ட்ரம்பின் கௌர­வத்­துக்கு பங்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது. ட்ரம்ப் ஐந்து நாடு­க­ளுக்கு விஜயம் மேற்­கொள்ளும் சந்­தர்ப்­பத்தில் அவரின் அமெ­ரிக்க உள்­நாட்டுப் பிரச்­சி­னைகள் எதிர்ப்­புக்­களைத் தோற்­று­வித்­துள்­ளன. அமெ­ரிக்­காவின் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தாலும் பல­வீ­ன­மான நிலை­யி­லேயே உள்ளார். ஜப்பான் விஜயம் சுவா­ர­சி­ய­மா­னது. ஏனெனில் ஜப்பான் நாட்டு அர­ச­மைப்பு 1947 இல் உரு­வாக்­கப்­பட்­டது. இரண்டாம் உல­க­மகா யுத்தம் ஜப்பான் மீது அணுக்­குண்டு வீசப்­பட்டு வர­லாறு காணாத பேர­ழிவைத் தந்­தது. இந்தப் பாடங்கள் ஜப்பான் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு யுத்­தத்­திற்­கெ­தி­ரான அணு­கு­மு­றையை கொடுத்­தது. சர்­வ­தேச முரண்­பா­டு­களை இரு­த­ரப்பு முரண்­பா­டு­களை ஆயுத ரீதி­யாக தீர்ப்­ப­தில்­லை­யென்ற பிர­தா­ன­மான ஏற்­பாடு அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. ஜப்­பா­னிய தேர்­தலில் மீண் டும் பிர­தமர் அபே மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் வெற்­றி­பெற்­றுள்ளார். 2012 இற்குப் பின்னர் ஸ்திர­மான ஆட்சி ஜப்­பானில் நடை­பெ­று­கின்­றது. அத்­துடன் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற்­ற­ப­டியால் அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­வாரா? என பிர­ப­ல­மான ஊட­கங்கள் கருத்து தெரி­வித்­துள்­ளன.

குறிப்­பாக பிணக்­குகள், இரா­ணுவ மோதல்கள் மூலம் தீர்க்­கப்­ப­டாது என்­கின்ற ஏற்­பாட்டை அபே திருத்த முற்­ப­டு­வாரா என்­பது பற்றி பல­வி­த­மான கருத்­துக்கள் நில­வி­னாலும் ஜப்பான் அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பாட்டை திருத்த முற்­ப­ட­மாட்டார் என்றே சொல்லத் தோன்­று­கின்­றது. இச்­சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி ட்ரம்ப் ஜப்­பானின் ஆத­ரவை அர­சியல், இரா­ணுவ நோக்­கத்­திற்­காக அதா­வது வட­கொ­ரி­யாவின் ஆத்­தி­ர­மூட்­டல்­களை எதிர்­கொள்­வ­தற்கு உத­வியைக் கோரு­கிறார். பிர­தா­ன­மாக கவ­னிக்க வேண்­டிய விடயம் யாதெனில் ஜப்­பானின் பாது­காப்­பிற்கு ஜப்­பானில் அமெ­ரிக்கப் படை­களின் பிர­சன்னம் பெரிதும் கைகொ­டுக்­கின்­றது. ட்ரம்ப் இரட்டை நோக்க விஜ­யத்தில் வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கையில் பொரு­ளா­தா­ரத்­தையும் இணைத்­துள்ளார். எவ்­வா­றெனில் அமெ­ரிக்க – ஜப்பான் இரு­த­ரப்பு வர்த்­த­கத்தில் வர்த்­தக மீதி அமெ­ரிக்­கா­வுக்கு மிக பாத­க­மாக உள்­ளது. வட­கொ­ரி­யாவின் அச்­சு­றுத்­தல்­களை எதிர்­கொள்ள அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து ஜப்பான் நவீன ஆயு­தங்­களைக் கொள்­வ­னவு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்­மொ­ழிந்­துள்ளார். இதனால் ஜப்­பானின் பாது­காப்பு பலப்­ப­டு­வ­துடன் அமெ­ரிக்க ஆயுத விற்­ப­னையால் அமெ­ரிக்­காவின் பாத­க­மான வர்த்­தக மீதியில் முன்­னேற்­றங்கள் எற்­படும் என்றார். அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யொ­ருவர் அந்­நி­லைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளமை அமெ­ரிக்­காவின் ஏக­வல்­ல­ரசு நிலை­மையில் வீழ்ச்­சியை காட்­டு­கின்­றது.

தென்­கொ­ரிய விஜ­யத்­திலும் முன்னர் குறிப்­பிட்ட இரட்டை நோக்­கங்கள் வட­கொ­ரியா பிரச்­சினை, அமெ­ரிக்க வர்த்­தகம் என்­பன முதன்மை வகிக்­கின்­றன. தென்­கொ­ரிய ஜனா­தி­பதி கொரியப் பிரச்­சி­னையை இரா­ஜ­தந்­திர வழி­களில் தீர்க்க வேண்­டு­மென விரும்­பு­கின்றார். அவ்­வாறே தேர்தல் பரப்­பு­ரை­க­ளிலும் பிர­சாரம் செய்தார். அமெ­ரிக்கா, கொரிய தீப­கற்ப பிர­தே­சத்தில் கடற்­பி­ராந்­தி­யத்தில் பெரும் ஆயுதம் தாங்கிக் கப்­பல்­களை நிறுத்­தி­யி­ருந்­தாலும் தென்­கொ­ரிய ஜனா­தி­பதி முன் இரா­ணுவ மோதலை விரும்­ப­வில்லை. தென்­கொ­ரிய மக்­களும் விரும்­ப­வில்லை. அமெ­ரிக்க – தென்­கொ­ரிய இரு­த­ரப்பு வர்த்­தக நிலையும் அமெ­ரிக்­கா­விற்குச் சாத­க­மில்லை. அமெ­ரிக்க – தென்­கொ­ரிய இரு­த­ரப்பு உறவு சிறப்­பாக இருந்­தாலும் திறந்த சந்தை வர்த்­தகப் போட்டி சுதந்­தி­ர­மா­னது. அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் தமது இரட்டை நோக்­கத்தை அடை­வதில் இடர்­பா­டுகள் உண்டு.

வியட்நாம், பிலிப்பைன்ஸ் விஜயம் பல­த­ரப்பு உற­வுகள் தொடர்­பா­ன­தாக இருந்­தாலும் ஜனா­தி­பதி ட்ரம்ப் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் ஈடு­ப­டுவார். வியட்­நாமில் ஏ.பி.ஈ.சி. மாநாடு11, -12 ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளது. பசுபிக் சமுத்­தி­ரத்தை அண்­டி­யுள்ள நாடு­களின் கூட்­ட­மாகும். அமெ­ரிக்கா, வியட்நாம், சீனா, அவுஸ்­தி­ரே­லியா உட்­பட 21 நாடுகள் அங்கம் வகிக்­கின்­றன. இவ்­வ­மைப்பு பொரு­ளா­தாரம், வர்த்­தகம் ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்த உழைக்­கின்­றது. ஜனா­தி­பதி ட்ரம்ப் வியட்­நாமில் விஜ­யத்தை முடித்­து­விட்டு பிலிப்பைன்ஸ் நோக்கி செல்வார். பிலிப்­பைன்ஸில்13-, 14 ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்ள ஆசியான் மாநாட்டில் பங்­கு­பற்­று­வ­தற்­காக செல்­கின்றார். ஆசியன் என்­பது தென்­கி­ழக்­கா­சிய நாடு­களின் கூட்­ட­மைப்­பாகும். சிங்­கப்பூர், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேஷியா, லாவோஸ், தாய்­லாந்து, இந்­தோ­னேஷியா, மியன்மார், கம்­போ­டியா, புருண்டி ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்­கின்­றன. அமெ­ரிக்கா அங்­கத்­தவர் இல்­லா­வி­டினும் பேச்­சு­வார்த்தை பங்­காளர் என்­கின்ற அந்­தஸ்து உண்டு. அம்­மா­நாட்டில் பங்­கு­பற்­றவே ஜனா­தி­பதி ட்ரம்ப் செல்­கின்றார். இங்கும் பல­த­ரப்பு விவ­கா­ரங்­க­ளுடன் இரு­த­ரப்பு விட­யங்­க­ளையும் பிலிப்பைன்ஸ் ஜனா­தி­ப­தி­யுடன் பேசுவார்.

ட்ரம்பின் விஜ­யத்தில் சீன விஜயம் மிக முக்­கி­ய­மா­னது. ட்ரம்ப் - சீன ஜனா­தி­பதி ஜூயின்யின் உச்­சி­மா­நாடு அவர் பத­வி­யேற்ற பின் இரண்­டா­வ­தாகும். ட்ரம்பின் உள்­நாட்டு அந்­தஸ்து வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள சந்­தர்ப்­பத்தில் சீன ஜனா­தி­ப­தியின் நிலையோ எதிர்­மா­றா­னது. சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் 19 ஆவது காங்­கிரஸ் அண்­மையில் முடி­வ­டைந்­தது. இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஜூயின் ஜனா­தி­ப­தி­யாக காங்­கி­ரஸால் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். பொலிற்­பீரோ எனப்­படும் அதி­காரம் வாய்ந்த குழுவில் தனது கொள்­கைக்கு உறு­து­ணை­யாக இருக்­கக்­கூ­டி­ய­வர்­களை தெரி­வு­செய்­துள்ளார். வேறு வார்த்­தையில் கூறினால் அவரின் இருப்பு மிகவும் பல­ம­டைந்­துள்­ளது. அது மட்­டு­மல்ல சீனத் தலைவர் மாவோக்குப் பின்னர் மிகப் பலம்­பெற்ற தலை­வ­ராக இவர் விளங்­கு­கின்றார் என பி.பி.ஸி. தெரி­வித்­துள்­ளது.

இரு­த­லை­வர்­களும் சந்­திக்கும் போது இரு­வி­ட­யங் கள் பேச்­சு­வார்த்­தையில் பிர­தான இடத்தை வகிக்­கப்­போ­கின்­றன. வட­கொ­ரிய பிரச்­சி­னையும், சீன அமெ­ரிக்க இரு­த­ரப்பு வர்த்­த­க­முமே இரண்டு விட­யங்­க­ளு­மாகும். வட­கொ­ரியா பிரச்­சி­னையால் சீனாவின் ஆத­ர­வின்றி வட­கொ­ரி­யாவை ஒரு வழிக்கு கொண்­டு­வர முடி­யாது. சீன - – அமெ­ரிக்க வர்த்­த­கத்தில் சீனாவே அதி­க­ளவு நன்­மை­களை அனு­ப­விக்­கின்­றது. அமெ­ரிக்­காவில் சீன முத­லீ­டுகள் அதி­க­ரித்­துள்­ளன. அமெ­ரிக்க மொத்த கடன்­களில் மூன்­றி­லொரு பங்கு சீனா­வுக்கு செலுத்­த­வேண்­டி­ய­தாகும்.

அமெ­ரிக்க உள்ளூர் சந்­தை­களில் அமெ­ரிக்க உற்­பத்திப் பண்­டங்கள் சீனப் பண்­டங்­க­ளுடன் போட்­டி­போட முடி­யா­துள்­ளது. அமெ­ரிக்­காவில் வேலை­யில்லா திண்­டாட்டம் அதி­க­ரித்­துள்­ளது. பல கம்­ப­னிகள் போட்­டி­போடும் ஆற்­றலை இழந்­துள்­ளன. இந்­நி­லையில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒருவர் சீனா­விடம் இரந்­து­நின்று வர்த்­த­கத்தில் சலுகை கோரும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளார். இரு ஜனா­தி­ப­தி­களும் சந்­திக்கும் போது சீன ஜனா­தி­ப­தியே பலம்­மிக்க நிலையில் காணப்­ப­டு­கின்றார்.

சீன ஜனா­தி­ப­தி­யின உறு­தி­யான தலை­மையில் பட்­டுப்­பாதைத் திட்டம் பெரும் முத­லீட்டில் 65 நாடு­களை உள்­ள­டக்கிச் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. இது பிராந்­தி­யத்தில் மட்­டு­மல்ல பூலோகம் பூரா­கவும் சீனாவின் செல்­வாக்கும் அர­சியல் ஆதிக்­கமும் மேலோங்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. பனிப்போர் காலத்­திற்குப் பின்னர் அமெ­ரிக்­காவின் அதி­கார நிலை முதன்­மு­த­லாக தளர்ந்­துள்­ளது. அத்­துடன் உல­க­போக்கு எவ்­வாறு மாறு­கி­றது என்­பது இன்­னு­மொரு விட­யத்­துக்­கூ­டாகப் பார்க்­கலாம். அமெ­ரிக்க ஜனா­தி­பதி தென்­கி­ழக்கு ஆசிய பிராந்­தி­யத்தில் ஐந்து நாடு­க­ளுக்கு விஜயம் செய்­வ­தென்­பது ஒரு காலத்தில் எடுப்பார் கைப்­பிள்­ளை­யா­க­வி­ருந்த ஆசியா இன்று எவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ளது என்­பதும் உலகப் போக்கு எவ்­வாறு மாறி­யுள்­ளது என்­ப­தையும் காட்­டு­கின்­றது.

மாவீரன் நெப்­போ­லியன் முன்னர் கூறிய கூற்று இன்று நிதர்­ச­ன­மா­கின்­றது. சீனா தூங்­கு­கின்­றது அது விழித்­துக்­கொண்டால் அதன் சக்தி அளப்­ப­ரி­யது என்று கூறினார். 1949 இல் தலைவர் மாசே­துங்கின் வழி­ந­டத்­தலில் கம்­யூ­னிஸப் புரட்­சியின் வெற்­றியும் பின்னர் பொரு­ளா­தாரச் சிற்பி டெங் சியாவோ பிங்கின் சீனச் சூழ்­நி­லையில் பொருளா­தார சீர்­தி­ருத்­தங்­களும் இன்று மிகப்­பலம் வாய்ந்த தலை­வ­ராக சீனாவில் மட்­டு­மல்ல உல­கத்­தி­லேயே சக்­தி­வாய்ந்த தலை­வ­ராக விளங்கும் ஜீ ஜின் இன்­றைய உயர்­நி­லைக்கு ஏற்­றி­வைத்­த­மையும் நெப்­போ­லி­யனின் கூற்றை மெய்­யாக்­கு­கின்­றது.

அண்மைக் காலங்­களில் தேசிய ஊட­க­ங­்க­ளிலும் சர்­வ­தேச ஊட­கங்­க­ளிலும் அமெ­ரிக்க, இந்­திய, ஜப்பான் ஆகிய நாடு­க­ளுக்குள் ஏற்­பட்ட அர­சியல் உறவு மேம்­பா­டுகள் சீனாவை குறி­வைத்துச் செயற்­படப் போகின்­றது என்ற ஊகத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. அமெ­ரிக்க ஜனா­தி­பதி இந்த ஐந்து நாள் விஜ­யத்தின் போது சீனத் தலை­வ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தப் போகின்றார் என்றும் பேச்­சு­வார்த்­தையின் போது வட­கொ­ரிய விவ­காரம், அமெ­ரிக்­காவின் வர்த்­தக பின்­ன­டை­வுகள் ஆகிய இரு விட­யங்கள் பேச்­சு­வார்த்­தையில் இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

நேற்­று­முன்­தினம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி சீனாவில் கால்­ப­தித்தார். அவ­ருக்கும் அவரின் துணை­வி­யா­ருக்கும் வர­லாறு காணாத வர­வேற்பு சீனாவில் கிடைத்­தது. இதற்கு முன்னர் எந்த அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்கும் இத்­த­கைய வர­வேற்பு சீனத் தலை­வர்­களால் அளிக்­கப்­ப­ட­வில்லை. சீனா­விற்கும் அமெ­ரிக்­கா­விற்கும் இடை யில் பல வர்த்­தக ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தி­டப்­பட்­டன. இதன் பெறு­மதி 9 பில்­லியன் டொலர்­க­ளுக்கு மேலானது என பி.பி.ஸி. தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார வர்த்தக வேலை யின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சீனா வின் தயவு அமெரிக்காவிற்குத் தேவைப்படுகின்றது. முற்பந்திகளில் கூறியதுபோல சீனா – அமெரிக்க வர்த்தக உறவுகள் அமெரிக்காவிற்கு 200 பில்லியன் டொலர்களுக்கு மேல் பாதகமான நிலை உள்ளது. இலங்கையர்களாகிய எங்களுக்கு அபிவிருத்திய டைந்து வரும் நாடு என்ற தோரணையில் இலங்கை யின் வர்த்தக மீதி எவ்வளவு பாதகமாக இருக்கின்றது என்பதையும் ஜி.எஸ். பிளஸ் போன்ற அந்நியச் செலாவணி சம்பாத்தியம் பெறும் நோக்கத்திற்காக எவ்வளவு தூரம் அரசாங்கம் செயற்படுகின்றது என் பதையும கண்கூடாகக் காணுகின்றோம். இன்று அமெ ரிக்காவிற்கும் இதேநிலை தான் ஏற்பட்டுள்ளது, இச் சூழ்நிலையில் அமெரிக்கா, இந்திய, ஜப்பான் உறவுகள் சீனாவிற்கு எதிரானது என்ற சில ஊடகங்களின் ஊகம் அதீத கற்ப னையாகும்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சீன வரவேற்பில் குளிர்ந்து போனார். தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் அதற்குப் பின்னரும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் பின்னர் அதேவாயால் புகழ்வதும் ட்ரம்பின் பாணி யாகும் எனக் கூறப்படுகின்றது. சீன ஜனாதிபதியை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார். சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பர். எந்த அமெரிக்க ஜனா திபதிக்கும் வழங்காத மாபெரும் வரவேற்பை ஜன ாதிபதி ட்ரம்பிற்கு வழங்கி சீனா மேலுமொரு இராஜ தந்திர நகர்வை நகர்த்தியுள்ளது. ஐந்து நாடுகளுக் கான விஜயத்தில் சீன விஜயம் தலையானதும் அமெரிக் காவின் முன்னுரிமைகளுக்காக முக்கியத்துவம் வழங் கப்படுவதுமாகும். நிச்சயமாக அமெரிக்க சீன உறவுகள் மேலும் வலுவடையுமென எதிர்பார்க்கலாம்.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.