Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமுத்திரத்தில் மற்றொரு அமெரிக்கத் தளம்?

Featured Replies

இந்து சமுத்திரத்தில் மற்றொரு அமெரிக்கத் தளம்?

[11 - March - 2007] [Font Size - A - A - A]

*வாஷிங்டன் - கொழும்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா கவலைப்படுவதற்கு காரணங்கள் அதிகம்

அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையில் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட பெற்றுக் கொள்தலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும் உடன்படிக்கை (Acquisition and Cross - Servicing Agreement (ACSA) பிராந்தியத்திற்கு குறிப்பாக இந்தியாவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.

எனினும், இந்த விடயத்தில் புதுடில்லி மௌனமாகவிருப்பது கெடுபிடி யுத்த காலத்திற்கு பின்னர் உருவாகியுள்ள புதிய பூகோள அரசியல் சூழலையும், அமெரிக்கா தனியொரு வல்லரசாக மாறியுள்ளதையும் புலப்படுத்துகின்றது.

அமெரிக்க - இந்திய உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களும் வெளிவிவகார அமைச்சின் மௌனத்திற்கு காரணமாக அமையலாம்.

அமெரிக்கா எவ்வாறு சொன்னாலும் இதுவொரு இராணுவ உடன்படிக்கையாகும். மேலும், இது வாஷிங்டனிற்கு சாதகமாகவே உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்து சமுத்திரத்தில் செலவு எதுவுமில்லாமல் தளமொன்றை பெற்றுக் கொள்வதற்கு இது சமமானதாகும்.

தற்போதைய சூழலில் இந்த உடன்படடிக்கை மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு சாதகமானது. விடுதலைப் புலிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கம் வல்லரசுடன் தனக்குள்ள நல்லுறவை விளம்பரம் செய்வதற்கு இது பயன்படும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பூகோள ரீதியாக காணப்படும் உணர்வலைகளை கருத்தில் கொள்ளும் போது சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான உடன்படிக்கை சாத்தியமானதாகவிருந்திராது.

கொழும்பு `வொய்ஸ் ஒவ் அமெரிக்கா'விற்கான தொலைத் தொடர்பு கோபுரங்களுக்கு அனுமதி வழங்கியதும் திருகோணமலை துறைமுகத்தின் எண்ணெய் குதங்களை அமெரிக்க சார்பு நிறுவனங்களுக்கு வழங்கியமையுமே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தசாப்தகால கருத்து வேறுபாட்டிற்கு காரணமாக அமைந்தன.

இந்தியா - இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஜே.ஆர்.ஜெயவர்தனாவும், ராஜீவ் காந்தியும் பரிமாறிக் கொண்ட கடிதங்களில் இவை விரிவாக இடம்பெற்றுள்ளன.

" பாரம்பரிய நட்புறவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போது இந்தியாவும் இலங்கையும் தமது பகுதி ஏனைய நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளுக்க பயன்படுத்தப்படுவதை அனுமதிப்பதில்லை என்பதை மீள வலியுறுத்த வேண்டியது அவசியம் என்று அந்தக் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் வாஷிங்டனிற்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலையை கருத்தில் கொள்ளும்போது, இந்த உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் புதுடில்லிக்கு பாதகமானது எனக் குறிப்பிட முடியாது.

அதேவேளை, இந்தியா இந்த உடன்படிக்கை குறித்து கவலை கொள்வதற்கான சகல காரணங்களும் உள்ளன.

அமெரிக்காவுடன் `பெற்றுக் கொள்தலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்தலும்' உடன்படிக்கையை செய்து கொண்டுள்ள 90 ஆவது நாடு இலங்கையாகும். பல வருடங்களாக வாஷிங்கடன் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு கொழும்பை கேட்டு வந்துள்ளது.

கொழும்பு இதில் கைச்சாத்திடுவதற்கு பல வருட காலம் எடுத்துள்ளது முக்கியமானதாகும்.

மனிதாபிமான நடவடிக்கைகள், அமைதிப் பணிகள், கூட்டு நடவடிக்கைகள் என்பவற்றின்போது விநியோகங்கள் பரிமாற்றங்கள், மீள எரிபொருள் நிரப்புதல் போன்றவற்றை மேற்கொள்ள உடன்படிக்கை வழிவகுக்கின்றது.

அமெரிக்கா உலகின் பல பகுதிகளில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 20 மில்லியன் சனத்தொகையை கொண்ட இனப்பிரச்சினையில் சிக்கியுள்ள இலங்கை விரும்பினால் கூட இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட முடியாது. அதனிடம் இதற்கான உட்கட்டமைப்பு இல்லை.

`பெற்றுக் கொள்ளுதலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும்' உடன்படிக்கையின் செயற்பாடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரை விலக்கணங்கள் அரசியல் ரீதியாக சிக்கலானவையாகும்.

ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் வைத்தே இதனை ஆராய வேண்டும். அமெரிக்காவும் அதன் சகாக்களும் அங்கு அமைதிப் பணிப்பில் ஈடுபட்டுள்ளனரா? அல்லது யுத்தம் புரிகின்றனரா? யார் யாரிடம் கேள்வி எழுப்புகின்றார் என்பதை பொறுத்தே இதற்கான பதில் அமையும்.

இந்த உடன்படிக்கையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொருட்களில் உணவு, பெற்றோலியம் மற்றும் போக்குவரத்து இடம்பெற்றுள்ளன. ஆயுதங்களும் வெடி மருந்துகளும் வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளன.

எனினும், உணவும் எரிபொருளும் ஆயுதமாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான உதாரணங்கள் உள்ளன. மேலும், பொருட்கள் சேவைகளை வழங்கும் நாட்டின் அனுமதியில்லாமல், அதனை பெறும் தரப்பு இன்னொரு தரப்பிற்கு வழங்க முடியாது. அனைத்து பரிமாற்றமும் பரஸ்பர இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், இது மாத்திரம் போதுமா என்ற கேள்வியுள்ளது.

இலங்கையின் சார்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார். அமெரிக்கா சார்பில் தூதுவர் ரொபேட் பிளாக் கைச்சாத்திட்டிருக்கிறார்.

இந்த `பகிர்ந்து கொள்ளுதலும் பரஸ்பரம் பெற்றுக் கொள்ளுதலும்' உடன்படிக்கையானது பென்டகனுக்கு கீழே வருகின்றது. மேலும், இலங்கை அரசாங்கம் இது குறித்து அறிக்கை விடுவது அவசியமானதெனக் கருதியதாக தென்படவில்லை. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கையையே பாதுகாப்பு, வெளிவிவகார, தகவல்துறை அமைச்சுகள் விநியோகித்தன.

-இந்து-

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஜே.ஆர்.ஜெயவர்தனாவும், ராஜீவ் காந்தியும் பரிமாறிக் கொண்ட கடிதங்களில் இவை விரிவாக இடம்பெற்றுள்ளன.

" பாரம்பரிய நட்புறவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போது இந்தியாவும் இலங்கையும் தமது பகுதி ஏனைய நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளுக்க பயன்படுத்தப்படுவதை அனுமதிப்பதில்லை என்பதை மீள வலியுறுத்த வேண்டியது அவசியம் என்று அந்தக் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தமே இன்று இல்லாத நிலையில் இந்து அதைப் பற்றி நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் நல்ல நட்பு இருந்தால், ஏன் இந்தியாவை விட்டு விட்டு, இலங்கையில் தனக்கு தளம் அமைக்க அமெரிக்கா முயல்கின்றது என்பதை இந்து கண்டுகொள்ளவில்லை.

ஒப்பந்தங்கள் என்பதை, தங்களுக்கு தேவைப்படுகின்றபோது தான். நாளைக்கு இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலத்தினால், அந்தக் கணிப்பு பொய்த்துப் போகத் தான் செய்யும்.

நேபாளத்திலும், அமெரிக்கா தன் காலைப்பதிக்க முயற்சித்தது. ஆனால் ஓரளவு இந்தியா புத்திசாலித்தனமாகச் செயற்பட்டு, வெளியர்ர தலையீடு இல்லாமல் செயற்படுத்தியது. அடுத்த இலக்காக ஒன்று பங்களாதேஸ் அமெரிக்காவின் பார்வையில் படலாம். அங்கு நடக்கின்ற உள்நாட்டு அரசியல் குழப்பம் அது புகுந்து கொள்ளச் சாதகமானது.

ஒன்றிணைந்த வடகிழக்கு என்பது இந்திய ஒப்பந்ததில் இருக்குது அல்லது இருந்தது அதனை தற்போது செயலற்றதக்கியபின்னரும் எந்த வித எதிர்ப்பையும் காட்டாதா இந்தியா தளம் அமைப்பதை எல்லாம் கண்டு கொள்ள்ளுமா என்ன :P :P :P

  • தொடங்கியவர்

ஒன்றிணைந்த வடகிழக்கு என்பது இந்திய ஒப்பந்ததில் இருக்குது அல்லது இருந்தது அதனை தற்போது செயலற்றதக்கியபின்னரும் எந்த வித எதிர்ப்பையும் காட்டாதா இந்தியா தளம் அமைப்பதை எல்லாம் கண்டு கொள்ள்ளுமா என்ன :P :P :P

அப்படி சொல்ல முடியாது நிச்சயம் பிராந்திய வல்லரசான இந்தியாக்கு பாதிப்புதான். உலகத்திற்கே திருகோண மலை மேல எல்லாருக்கும் ஒரு கழுகுப் பார்வை இருக்கு. அதில் இந்தியாவிற்க்கும் அமெரிக்காவுக்கும்தான் போட்டி. அமெரிக்கா ஒப்பந்தம் போட்டல் நிச்சயம் இந்தியாவுக்கு வயிற்றைக் கலக்கும்

அப்படி சொல்ல முடியாது நிச்சயம் பிராந்திய வல்லரசான இந்தியாக்கு பாதிப்புதான். உலகத்திற்கே திருகோண மலை மேல எல்லாருக்கும் ஒரு கழுகுப் பார்வை இருக்கு. அதில் இந்தியாவிற்க்கும் அமெரிக்காவுக்கும்தான் போட்டி. அமெரிக்கா ஒப்பந்தம் போட்டல் நிச்சயம் இந்தியாவுக்கு வயிற்றைக் கலக்கும்

யோவ் முகக்குறிகளை பாருமப்பா :rolleyes::D

Edited by மக்ஸிமஸ்

  • தொடங்கியவர்

சரி சரி :P

இலங்கை சர்வதேசங்களின் விபச்சாரியாகியுள்ளது. எதுகுமேயில்லை மறைத்து வைப்பதற்கு. தன் நாட்டை பாதுகாப்பதுக்கு எந்த பேயிடமும் கூட்டுச்சேருவார்கள்(சோரம் போவார்கள்) என்று ஜெ ஆர் என்றவர் சொன்னார். அதன் படி நடக்கிறார்கள்.

பயத்தினால் நாட்டை பங்கு போட்டு எல்லாப்பேய்களுக்கும் கொடுத்துவிட்டார்கள்.

உரிமை கேட்ட தமிழ் மக்களுக்கு குண்டுமழையில் பசி, பட்டினி,அகதி வாழ்க்கை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்க உனது கருணை..தர்மம்....

ஏற்கனவே ஒரு நண்பர் கூறியுள்ளதுபோல சிறீ லங்கா சர்வதேச நாடுகளின் விபச்சார வீடாகிவிட்டது. சிறீ லங்காவின் உடலின் மீது ஏறி உடலுறவு கொண்டு, கக்கூசு இருந்துவிட்டு செல்வதற்கு சிறீ லங்கா பேரினவாதிகளிற்கு தேவையானது சர்வதேசம் தூக்கி எறியும் ஒரு சில எலும்புத்துண்டுகளே!

சிறீ லங்காவை "Pearl of the Indian Ocean!" என்று கூறுவதை விட

Prostitute of the Indian Ocean! என்று அழைப்பது மிகப்பொருத்தமாக இருக்கும்! :D:D:lol:

அப்பிடி நீர் உம்மட களிசட மனங்களினை அடையாலமாக வைத்து சொல்லுகிறீர். 4 பேர் வார போற இடம் என்று கூட மறந்து நீர் எழுதிறீர். அவனுக்கு இப்ப அமெரிக்கா தேவை அவன் என்ன விலை கொடுத்தாலும் தமிழனை அழிக்கப்போறான். அதில அவை உறுதியாய் இருக்கிறீனம். இங்க நீங்க இருக்கிறவையை சிலபேரையும் தமிழர் பிரச்சனையைக்கதைக்க கூடாது எண்டு மாற்றுவதற்கு கச்சிதமா வேலை செய்யிறீயள். இதில வெற்றிமேல வெற்றி பெருபவன் கடைசியில் சிங்களவன். தோல்வி எங்களுக்குமில்லை. ஆக பாதிக்கப்படப்போவது அப்பாவித்தமிழீழமக்கள். பாவம்கள். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடி நீர் உம்மட களிசட மனங்களினை அடையாலமாக வைத்து சொல்லுகிறீர். 4 பேர் வார போற இடம் என்று கூட மறந்து நீர் எழுதிறீர். அவனுக்கு இப்ப அமெரிக்கா தேவை அவன் என்ன விலை கொடுத்தாலும் தமிழனை அழிக்கப்போறான். அதில அவை உறுதியாய் இருக்கிறீனம். இங்க நீங்க இருக்கிறவையை சிலபேரையும் தமிழர் பிரச்சனையைக்கதைக்க கூடாது எண்டு மாற்றுவதற்கு கச்சிதமா வேலை செய்யிறீயள். இதில வெற்றிமேல வெற்றி பெருபவன் கடைசியில் சிங்களவன். தோல்வி எங்களுக்குமில்லை. ஆக பாதிக்கப்படப்போவது அப்பாவித்தமிழீழமக்கள். பாவம்கள். :D

ஆடு நனையுது என்று ஓநாய் ஒன்று அழுகுதாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.