Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகக் கோப்பையில் இருந்து இத்தாலி 'அவுட்' - பஃபான் கனவு தகர்ந்தது!

Featured Replies

உலகக் கோப்பையில் இருந்து இத்தாலி 'அவுட்' - பஃபான் கனவு தகர்ந்தது!

 
 

லகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இத்தாலி அணி தகுதி பெறவில்லை. ஸ்வீடன் அணியிடம் தோல்வி கண்டதையடுத்து, உலகச் சாம்பியன் அணி ரஷ்யாவுக்குப் பயணிக்கவில்லை.

இத்தாலி கேப்டன் ஜியான்லுகி பஃபான் கண்ணீர்

 

ஐரோப்பிய ப்ளே- ஆஃப் சுற்று 2-வது லெக் ஆட்டம், மிலனில் உள்ள சான்சிரோ மைதானத்தில் 74 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. பந்தை தக்கவைத்து ஆடினாலும், இத்தாலி வீரர்களால் கோல் அடிக்க இயலவில்லை. ஏராளமான வாய்ப்புகளை வீணடித்தனர். ஸ்வீடன் அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்ததையடுத்து, ஸ்டாக்ஹோமில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஸ்வீடன் அணி, உலகக் கோப்பைக்கு முன்னேறியது.

உலகக் கோப்பைத் தொடருக்கு, 1958-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் இத்தாலி அணி தகுதிபெறவில்லை. முன்னதாக, 1930,1958-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியிலும் இத்தாலி அணி விளையாடியதில்லை. தோல்வி அதிர்ச்சியால், அந்த நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

buffon

இத்தாலி அணியின் கேப்டன் ஜியான்லுகி பஃபான் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களைக் கரையச்செய்தது. தற்போது, 39 வயதான பஃபான் ரஷ்யா உலகக் கோப்பைத் தொடருடன் இத்தாலி அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். துரதிருஷ்டவசமாக அவரின் ஆசை தகர்ந்ததையடுத்து, நேற்றுடன் சர்வதேசப் போட்டியிலிருந்து விடைபெற்றார். இத்தாலி அணிக்காக 175 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இதுவரை 5 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ள பஃபான், ரஷ்ய உலகக் கோப்பையில் பங்கேற்றால், 6 உலகக் கோப்பையில்  விளையாடிய ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருப்பார். இத்தாலி அணி 4 முறை உலகக் கோப்பையை வென்ற அணி. கடைசியாக, 2006-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றிருந்தது... 

 

ஸ்வீடன் அணியின் கேப்டன் ஸ்லாட்டன் இப்ரோஹிம்விச், கடந்த ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து விடைபெற்றார். அதனால், அந்த அணியும் தடுமாற்றத்துடன்தான் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்னேறியுள்ளது. கடைசியாக 2006-ம் ஆண்டு, ஸ்வீடன் அணி உலகக் கோப்பையில் விளையாடியது. கடந்த இரு தொடர்களுக்குத் தகுதி பெறவில்லை. 

https://www.vikatan.com/news/world/107717-fifaworld-cup-2018-italy-disqualified.html

  • தொடங்கியவர்

60 ஆண்டுகளில் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத இத்தாலி

 

சுவீடன் அணியுடனான பிளோ ஓப் (play-off) சுற்றில் தோல்வியை சந்தித்த இத்தாலி அணி 1958ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறை FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது.

மிலான் நகரில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற சுவீடனுடனான இரண்டாவது கட்ட பிளே ஓப் போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிர்ப்பந்தத்துடன் களமிறங்கிய இத்தாலி அந்தப் போட்டியில் எந்த ஒரு கோலையும் புகுத்தாமல் ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொண்டது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் கட்ட பிளே ஓப் போட்டியில் சுவீடன் 1-0 என்ற கோல்களால் வெற்றியீட்டிய நிலையிலேயே குறித்த போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

 

இதன்மூலம் பிளே ஓப் சுற்றை 1-0 என வென்ற சுவீடன் 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு முதல்முறை தகுதி பெற்றது.

1930ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதை மறுத்த இத்தாலி, அதற்குப் பின் தற்போது மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் தகுதியை இழந்துள்ளது. இத்தாலி அணி இதுவரை நான்கு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்றிருப்பதோடு இரண்டு முறை இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ள ஒரு அணி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி 1984ஆம் மற்றும் 1992ஆம் ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர்களுக்கு தகுதி பெறாததே அந்த அணி பிரதான கால்பந்து தொடர் ஒன்றை இழந்த கடைசி சந்தர்ப்பங்களாகும்.  

இந்நிலையில், தனது சொந்த மண்ணில் 74,000 ரசிகர்கள் முன் பெரும் எதிர்பார்ப்போடு நேற்று (13) களமிறங்கிய இத்தாலி அணி போட்டியின் 73 வீதமான நேரத்தில் பந்தை தன் வசம் வைத்துக்கொண்டு 23 கோல் முயற்சிகளில் ஈடுபட்டபோதும் அவர்களால் கோல் ஒன்றை புகுத்த முடியாமல் போனது.

போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் இத்தாலி வீரர் மார்கோ பரொலோவுடன் சுவீடன் வீரர் பின்புறமாக மோதியபோது நடுவரிடம் இத்தாலி தரப்பு பெனால்டி கேட்டபோதும் போட்டியை தொடர நடுவர் சமிக்ஞை செய்தார்.

<

 

தொடர்ந்து முதல் கட்ட பிளோ ஓப் போட்டியில் கோல் புகுத்திய ஜொஹன்சனை போட்டியின் 15 ஆவது நிமிடத்தில் சுவீடன் இழந்தது. அவரது இடது முழங்காலில் முறிவு ஏற்பட்டதால் மைதானத்தில் இருந்து ஜொஹன்சன் வெளியேறினார்.  முதல் பாதியில் இத்தாலி அணிக்கு சாதகமாக போட்டி தொடர்ந்தபோதும் அந்த அணியால் கோல் புகுத்த முடியாமல் போனது.

முதல் பாதி: இத்தாலி 0 – 0 சுவீடன்

இத்தாலி மத்தியகள வீரர் பிளோரன்சி 53ஆவது நிமிடத்தில் உதைத்த பந்து எதிரணி கோல் கம்பந்தை நோக்கி பறந்தபோது அது கோலாக மாறும் என்று அவர் சற்று உற்சாகம் அடைந்தார். ஆனால் அந்த பந்து கம்பத்திற்கு வெளியால் பறந்தது.

போட்டி முடிவை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கும்போது இத்தாலி பக்கத்தில் பரபரப்பு அதிகரித்தது. அரங்கில் நிரம்பி வழிந்த இத்தாலி ரசிகர்கள் அந்நாட்டு தேசிய கீதத்தை பாட ஆரம்பித்தார்கள். எனினும் சுவீடன் தொடர்ந்து தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு இத்தாலிக்கு கடும் சவால் கொடுத்து வந்த நிலையில் இறுதி விசில் ஊதப்பட்டது.

சொந்த மைதானத்தில் இடம்பெற்ற மிகவும் தீர்மானம் மிக்க இந்த ஆட்டத்தை வெற்றி கொள்ளத் தவறியமையினால், 60 ஆண்டுகளின் பின் இத்தாலி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாமல் வெளியேறியது.   

முழு நேரம்: இத்தாலி 0 – 0 சுவீடன்

இந்த தோல்வியுடன் இத்தாலி அணியின் கோல் காப்பாளர் கியான்லிகி பபோன் கால்பந்து அரங்கில் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார். இதன்மூலம் அவர் ஆறாவது சாதனை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழந்தார். “என்னை மன்னித்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்” என்று போட்டிக்கு பின் அவர் அழுதபடி ராய் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். 

 

கடந்த 20 ஆண்டுகளாக இத்தாலி அணிக்கு விளையாடும் 39 வயதான பபோன், 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார்.    

பபொனின் ஜுவென்டஸ் கழக அணியைச் சேர்ந்த சக வீரர் அன்ட்ரி பார்சக்லி மற்றும் ரோமா மத்தியகள வீரர் டானியல் டி ரொஸ்ஸி ஆகியோருடன் ஜோர்ஜியோ சிலினி ஆகியோரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எதிர்பார்த்துள்ளனர். இவர்கள் மொத்தம் 461 போட்டிகளில் இத்தாலி அணிக்காக ஆடியுள்ளனர்.

2018 ஜுன், ஜூலை மாதங்களில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் 32 நாடுகளில் இதுவரை 29 நாடுகள் தேர்வாகியுள்ளன. எஞ்சியுள்ள மூன்று அணிகளை தேர்வு செய்வதற்கான தனுதிகாண் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறும்.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

2018 உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதிபெறாதது ஏன்?

Football is all about drama. இந்த நாடகத்தில் நெகட்டிவ் கிளைமேக்ஸ்தான் ட்விஸ்ட். இதோ, 2018 உலகக் கோப்பையிலிருந்து இத்தாலி வெளியேறியதைப் போல...1930 உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதிபெறவில்லை. 1958 உலகக் கோப்பையிலும் அதேநிலை. 2018 உலகக் கோப்பையிலும் அவர்கள் விளையாடப்போவதில்லை. ஆக, இத்தாலி உலகக் கோப்பையை மிஸ் செய்வது இது முதன்முறை அல்ல. ஆனால், 60 ஆண்டுகளுக்குப் பின் இது முதன்முறை. இத்தாலி கால்பந்து வரலாற்றில் இது செமத்தியான அடி. ‘THE END’ என முடிவுரை எழுதிவிட்டன அந்நாட்டுப் பத்திரிகைகள். கிட்டத்தட்ட பூகம்பம் ஏற்பட்டது போல பேரிழப்பு. இதிலிருந்து மீள நாளாகும்.

இத்தாலி

 


பெரிய அணிகள் உலகக் கோப்பையில் இடம்பெறாமல் போவது இயற்கை. 1966-ல் இங்கிலாந்து உலகச் சாம்பியன். ஆனால், அவர்களால் 1974, 1978, 1994-ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்கமுடியவில்லை. இங்கிலாந்துக்கு ஓகே; ஒருமுறை சாம்பியன். இத்தாலி அப்படி அல்ல, நான்கு முறை உலகச் சாம்பியன். இரண்டு முறை உலகக் கோப்பை ரன்னர் அப். இத்தாலியின் டிஃபன்ஸ் இரும்புக்கோட்டை. இருந்துட்டுப் போகட்டும். பழைய பெருமையெல்லாம் கால்பந்தில் எடுபடாதே! உலகச் சாம்பியனே என்றாலும் தகுதிச்சுற்றில் வென்றால்தானே அடுத்த உலகக் கோப்பையை நினைத்துப் பார்க்க முடியும்! இதுதான் பியூட்டிஃபுல் கேமின் பியூட்டி!
 

எங்கே சொதப்பியது...?  

806e8d71a7deebec05ff8193b35b28b7_17424.j


ரஷ்யாவுக்குச் செல்லும் ஃபிளைட்டை இத்தாலி மிஸ் செய்துவிட்டதை விட, அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது ஸ்வீடன் என்பதுதான் சுவாரஸ்யம். ஆம், 2006-க்குப் பின்முதன்முறையாக ஸ்வீடன் உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான டிரா வெளியானதுமே இத்தாலிக்குக் கிலி. காரணம், ஸ்பெயின், இத்தாலி என ஒரே குரூப்பில் பலம் வாய்ந்த அணிகள். ஸ்வீடனுக்கு எதிரான இரண்டு போட்டியிலும் இத்தாலியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. 180 நிமிடங்கள், 27 இலக்கை நோக்கிய ஷாட்கள், 40 கிராஸ்கள், 76 சதவீத possession, ஆனால், ஒரு கோல்கூட அடிக்கவில்லை. பின் எப்படி அவர்களால் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியும்? இத்தாலியின் இந்தப் பின்னடைவு ஆச்சர்யம்தானே தவிர அதிர்ச்சி இல்லை. 

 
ஒரு முறையான சிஸ்டம் இல்லையென ஃபெடரேஷன்மீது சிலர் குற்றம் சுமத்தலாம். பயோ டேட்டா வெயிட்டாக இல்லாதவரை மேனேஜராக நியமித்தது தவறு எனப் பழி போடலாம். இப்படி, தோல்விக்குப் பல காரணங்களை அடுக்கலாம். ஆனால், இத்தாலி கோட்டைத் தாண்ட முடியாததற்கு காரணம் வீரர்களே. 2016 யூரோ கோப்பைத் தொடரில் பங்கேற்ற இத்தாலி அணி படு வீக். பயிற்சியாளர் ஆன்டோனியோ கான்ட்டே மட்டும் மூளையைக் கசக்காமல் இருந்திருந்தால், அவர்கள் கதி அதோகதிதான். காலிறுதிக்குக் கூட வந்திருக்க மாட்டார்கள். 

download_17208.jpg

அனுபவத்திலிருந்து பாடம் கற்காத அணி விளங்கவே விளங்காது. அணி மட்டுமல்ல மேனேஜரும்தான். உதாரணம், இத்தாலி பயிற்சியாளர் கியான் பியரோ வென்சுரா. ஸ்வீடனுக்கு எதிரான உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றின் ஃபர்ஸ்ட் லெக்கில், இத்தாலி பிளேயிங் லெவனில் இருந்த ஏழு வீரர்கள் 30 வயதைக் கடந்தவர்கள். மிலன் நகரில் நேற்று நடந்த செகண்ட் லெக்கில் ஆறு சீனியர் பிளேயர்கள். இள ரத்தமே இல்லை. சீரி ஏ தொடரில் அதிக கோல்கள் அடித்த நேபோலி கிளப் வீரர் ஜார்ஜினோ எப்போதோ, இத்தாலி ஜெர்ஸி அணிந்திருக்க வேண்டியவர். நேற்றுதான் அவர் முதன்முறையாகக் களமிறங்கினார். அதுவும் டூ லேட். போதாக்குறைக்கு லோரென்ஸோ இன்சிக்னேவை பெஞ்சில் உட்கார வைத்து விட்டார் மேனேஜர். சில மேனேஜர்களுக்கு முக்கியமான கட்டத்தில்தான் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். வென்ச்சுரா அதற்கு நேர் எதிர்!

alessandro-florenzi-italy-sweden_4155335


ஸ்வீடனுக்கு எதிரான போட்டி மட்டுமே இத்தாலிக்குப் பிரச்னை இல்லை. கடந்த யூரோ கோப்பை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 2-0 என ஸ்பெயினை வென்றது இத்தாலி. இரண்டரை மாதங்கள் கழித்து டுரின் நகரில் நடந்த போட்டியில் மேட்ச் 1-1 என டிரா. இந்த செப்டம்பர் மாதம் மாட்ரிட் நகரில் நடந்த போட்டியில் 3-0 என இத்தாலியைத் துவம்சம் செய்தது ஸ்பெயின். கான்ட்டே இத்தாலி பயிற்சியாளராக இருந்தபோது 3 பேர் கொண்ட டிஃபன்ஸ் ஃபார்மட்டை செயல்படுத்தினார். இது கோல் அடிக்கப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என ஸ்பெயின் வீரர் ஜாவி தெரிவித்திருந்தார். ஆனால், வென்ச்சுரா 4-2-2 ஃபார்மெட்டை விடாப்பிடியாகக் கடைப்பிடிக்க, மிட்ஃபீல்டில் ஸ்பயெின் புகுந்து விளையாடியது. கடந்து ஐந்து ஆண்டு கால இத்தாலியின் கால்பந்து வரலாற்றைத் திருப்பினால், லக்சம்பர்க், ஹைதி அணிகளுக்கு எதிராகவும் டிரா செய்துள்ளது. இந்த அணிகளுக்கு எதிராக வெற்றிபெற முடியாமல் போனது, இத்தாலி எந்தளவு கோல் அடிப்பதில் வீக் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

 

இப்படியே போனால், உலகக் கோப்பையில் இத்தாலியின் செயல்பாடு படு மோசமாகி விடும். 2006-ல் உலகக் கோப்பை வென்ற பின், 2022 கத்தார் உலகக் கோப்பை வரை, இத்தாலி உலகக் கோப்பையில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றிருக்கும். ஆம், 2010, 2014-ல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இனி புதிய பயிற்சியாளராகப் பதவியேற்பவர் உடனடியாகக் கவனிக்க வேண்டிய விஷயம் இது. தவிர, முன்னணி வீரர்கள் டனிலோ டீ ரோஸி, கியான்லூயி பஃபான், ஆண்ட்ரே பர்ஸாக்லி எல்லோரும் ஓய்வுபெற்றுவிட்டதால், தரமான இளம் வீரர்கள் உருவெடுக்கவில்லை. இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் ஜாம்பவான்களுக்கு இணையான மாற்று வீரர்களைக் கண்டுவிட்டது. இத்தாலி அவர்களைப் பின்பற்ற வேண்டிய நேரமிது.

https://www.vikatan.com/news/sports/107809-how-did-italy-miss-to-qualify-for-world-cup.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தாலி தோற்றது ஜேர்மனிக்கு நாய்பேய் புளுகு...tw_blush:

  • தொடங்கியவர்
பயிற்சியாளரை நீக்கியது இத்தாலி
 

image_1918f6e624.jpg

ரஷ்யாவில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறாததைத் தொடர்ந்து, தமது பயிற்சியாளர் ஜியம்பியரோ வென்டூராவை இத்தாலி நீக்கியுள்ளது.

அந்தவகையில், கடந்தாண்டு ஜூன் மாதம் அன்டோனியோ கொன்டேயை பிரதியீடு செய்த ஜியம்பியரோ வென்டூராவின் 17 மாத பதவிக் காலம், சுவீடனுடனான உலகக் கிண்ண தகுதிப் போட்டியில், 1-0 என்ற மொத்த கோல்களில் இத்தாலி தோற்றதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.

ஜியம்பியரோ வென்டூராவின் கீழ், உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஸ்பெய்னுக்கெதிராக ஒரு புள்ளியை மாத்திரம் இத்தாலி பெற்றதோடு, சொந்த மண்ணில் இடம்பெற்ற மசிடோனியாவுடனான போட்டியிலும் சமநிலை முடிவையே பெற்றிருந்தது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பயிற்சியாளரை-நீக்கியது-இத்தாலி/44-207341

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.