Jump to content

தயிர் வடை செய்வது எப்படி? வட இந்திய ஸ்டைல் ரெசிபி!!


Recommended Posts

வீட்டிலேயே டேஸ்டியான தயிர் வடை செய்வது எப்படி? வட இந்திய ஸ்டைல் ரெசிபி!!

 

 தயிர் வடை அல்லது வட இந்திய ஸ்டைல் தயிர் வடை மிகவும் புகழ் பெற்ற வாய்க்கு ருசியான இந்திய ரெசிபி ஆகும். இந்த தெருவோர ஸ்டைல் உணவானது வெவ்வேறு இடங்களை பொருத்து வெவ்வேறு பேர்களில் அழைக்கப்படுகிறது. இந்த ரெசிபி ஆனது காரசாரமான மசாலா பொருட்களுடன் பருப்பு பேட்டர்களை கொண்டு செய்து அப்படியே இனிப்பு சுவை கொண்ட தயிரில் முக்கி எடுத்து கொத்தமல்லி சட்னி மற்றும் மாங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது இருக்கும் சுவையே தனி தான்.

இந்த தயிர் வடை ரெசிபியை எல்லா நேரங்களிலும் பார்ட்டி மற்றும் பண்டிகைகளின் போதும் செய்து சுவைக்கலாம். சட்னியுடன் இந்த தயிர் வடையை சாப்பிடும் போது கண்டிப்பாக உங்கள் நாக்கு இன்னும் வேணும் வேணும் என்று விரும்பி கேட்கும். இதை அப்படியே தயிரில் முக்கி எடுக்கும் போது மென்மையாக மாறுவதால் அப்படியே உங்கள் வாயில் கரையும்.

இந்த தயிர் வடை செய்வதற்கு கொஞ்சம் நேரம் செலவாகும் என்பதால் கொஞ்சம் முன்னதாக திட்டமிட்டு கொள்வது நல்லது. சரி வாங்க இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.


dahi bhalla

INGREDIENTS

உடைத்த கருப்பு உளுந்து - 1 கப்

உப்பு - 11/2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - 1/2 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன்

வறுத்த சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை(நறுக்கியது) - 1 கப்

எண்ணெய் - பொரிப்பதற்கு

தண்ணீர் - 1 டம்ளர்

கெட்டித் தயிர் - 400 கிராம் ச

ர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

சாட் மசாலா - 1டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்

மாங்காய் சட்னி - 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி சட்னி - 1டேபிள் ஸ்பூன்

மாதுளை பழ விதைகள் - அலங்கரிக்க

 

HOW TO PREPARE

உடைத்த உளுந்தம் பருப்பை இரவிலேயே ஊற வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும்.

அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் உப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் போன்றவற்றையும் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

இந்த மாவுக் கலவையை ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளவும் வறுத்த சீரகத்தை உரலை கொண்டு நுணுக்கி மாவுக் கலவையில் சேர்க்கவும்.

இப்பொழுது கொத்தமல்லி இலைகளை மேலாக தூவி கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவுக் கலவையை வடை மாதிரி தட்டி சூடான எண்ணெய் கடாயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

வடை ரெடியானதும் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். வடை மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்

 அதே நேரத்தில் ஒரு பெளலில் தயிரை எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும் நன்றாக கிளறி கெட்டிப் பதம் கொண்டு வரவும்.

பிறகு ஊற வைத்த வடையிலுள்ள தண்ணீரை நன்றாக பிழிந்து விடவும்

அதை ஒரு பெளலில் வைத்து அதன் மேல் இனிப்பு தயிரை ஊற்றவும்.

அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு, மாங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி இவற்றை சேர்க்கவும்.

மாதுளை விதைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை அப்படியே மேலே தூவி அலங்கரிக்கவும்.

 

INSTRUCTIONS

1. வடையின் மேல் பூந்திகளை தூவி விட்டால் இன்னும் மொறு மொறுப்பான சுவை கிடைக்கும்.

2. இந்த வடையுடன் பப்டி, வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலை சேர்த்து பரிமாறினால் தயிர் வடை சாட் ரெடியாகி விடும்

 

1. உடைத்த உளுந்தம் பருப்பை இரவிலேயே ஊற வைத்து அதன் தண்ணீரை வடிகட்டி மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும். 

dahi bhalla

 

dahi bhalla

 

dahi bhalla

2. அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் உப்பு, கொஞ்சம் பெருங்காயம் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் போன்றவற்றையும் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

dahi bhalla

 

dahi bhalla


dahi bhalla

 

dahi bhalla

3. இந்த மாவுக் கலவையை ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளவும்

dahi bhalla

4. வறுத்த சீரகத்தை உரலை கொண்டு நுணுக்கி மாவுக் கலவையில் சேர்க்கவும்.

dahi bhalla

 

5. இப்பொழுது கொத்தமல்லி இலைகளை மேலாக தூவி கலந்து கொள்ள வேண்டும். 

dahi bhalla

 

dahi bhalla

 

6. இந்த மாவுக் கலவையை வடை மாதிரி தட்டி சூடான எண்ணெய் கடாயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

dahi bhalla

dahi bhalla


dahi bhalla

 

7. வடை ரெடியானதும் அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். வடை மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.

dahi bhalla

dahi bhalla

8. அதே நேரத்தில் ஒரு பெளலில் தயிரை எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்

dahi bhalla

 

dahi bhalla

9. நன்றாக கிளறி கெட்டிப் பதம் கொண்டு வரவும்.

dahi bhalla

 

10. பிறகு ஊற வைத்த வடையிலுள்ள தண்ணீரை நன்றாக பிழிந்து விடவும்

dahi bhalla

11. அதை ஒரு பெளலில் வைத்து அதன் மேல் இனிப்பு தயிரை ஊற்றவும்.

dahi bhalla


dahi bhalla

 

12. அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், சாட் மசாலா, கரம் மசாலா, 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு, மாங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி இவற்றை சேர்க்கவும்.

dahi bhalla

 

dahi bhalla

dahi bhalla

 

dahi bhalla

dahi bhalla

dahi bhalla

13. மாதுளை விதைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை அப்படியே மேலே தூவி அலங்கரிக்கவும்.

dahi bhalla

dahi bhalla


Read more at: https://tamil.boldsky.com/recipes/dahi-bhalla/


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்ங்கப்பா......

செய்து பார்க்கத்தான் இருக்கு...

நம்ம மெதுவடையில இருந்து, தண்ணீல ஊற  வைத்து, தொடங்கலாம் போல இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாமோதரவிலாஸ் தயிர் வடைக்கு பேமஸ். முன்னால கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும். தயிருடன் கறிவேப்பிலை வெங்காயம் எல்லாம் தாளித்துப் போட்டிருப்பார்கள். உளுந்து வடைதான் அதில் போட்டிருப்பார்கள்.புட்டுடன் இரண்டு தயிர்வடை சாப்பிட அந்தமாதிரி இருக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் வியாழக்கிழமை பகல் (07) முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் கடமைப் பிரிவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. கிராமத்தின் பொதுமக்கள்  கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா ஆறு பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட  நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கோடா பரல்கள் அவ்விடத்தில்  அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/198146
    • ஒரு 25 வருடங்கள் கடந்து போயிருக்கும் உங்களை சந்தித்து. ஆயினும் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் மு.தளையசிங்கம் பற்றி கதைக்கும் போது உங்களில் இருந்து வெளிப்படும் புன்னகை, விமர்சனங்கள், கோபங்கள் ஆகியவற்றின் நினைவுகள் என்றும் மாறாது. குழந்தை முகமும், அறச் சீற்றமும் ஒருங்கே இணைந்த ஒருவராகவே என் நினைவுகளில் நீங்கள்.. முடிவிலியில் ஓய்வெடுங்கள்.
    • விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது கருத்து தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன், விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள். மிகவும் தாழ்வான முறையில் அவர்கள் தங்களது விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இவர்கள் எந்த காலத்திலும் தமிழர்கள் தரப்பாக இருந்ததில்லை, தமிழர்களுக்காக எந்தவொரு சேவையையும் செய்யவில்லை. பதவிகள் கிடைக்கின்ற போது அந்த பதவிகளை துஷ்பிரயோகம் செய்து தான் அவர்களுடைய தொழிலாக இருந்து வந்துள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/311851
    • மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வந்த 52 வயதுடைய இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 180 கோடி ரூபாய்  பணமோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வருகை தந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/198150
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.