Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் மணல் பிரச்சினைக்கு நடவடிக்கை இல்லை

Featured Replies

 
வடக்கில் மணல்  பிரச்சினைக்கு நடவடிக்கை இல்லை
 
 

வடக்கில் மணல் பிரச்சினைக்கு நடவடிக்கை இல்லை

வடக்­கில் கனி­ய­வ­ளத் திணைக்­க­ளம் அமைத்­தல் மற்­றும் மணல் தட்­டுப்­பாட்­டுக்­கான முடிவை எட்­டு­வது தொடர்­பில் மாவட்ட அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி முடி­வெ­டுப்­பது என முத­ல­மைச்­சர் தலைமை­யி­லான கூட்­டத்­தில் முடி­வெ­டுத்த நிலை­யில் இன்­று­ வரை எந்த முன்­னேற்­ற­மும் கிடை­யாது என கட்­டு­மா­னத் தொழி­லா­ளர்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வதா­வது:

மணல் மற்­றும் கிர­வல் விநி­யோ­கத்­தில் உள்ள தடங்­கல் தொடர்­பில் ஆரா­யும் சிறப்புக் கூட்­டம் கடந்த யூலை 31ஆம் திகதி யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன் மற்­றும் பொலிஸ்மா அதி­பர் பூஜித ஜெய­சுந்­தர, மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் ஆகி­யோ­ரின் தலை­மை­யில் இடம்­பெற்­றது.

இதன்­போது வடக்­கில் மணல் விநி­யோ­கத்­து­டன் தொடர்­பு­டைய திணைக்­க­ ளங்­க­ளின் கட்­டுப்­பாட்டு அலு­வ­ல­கங்­கள் இல்­லாமை பெரும் பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது.

ஆகவே இது தொடர்­பில் உரிய திணைக்­க­ளங்­கள் கவ­னம் செலுத்தி தீர்­வைப் பெற்­றுத்­தர வேண்­டும். கனி­ய­வ­ளத் திணைக்­க­ளம், புவிச்­ச­ரி­த­வி­யல் திணைக்­க­ளங்­க­ளின் கட்­டுப்­பாட்டு அதி­கா­ரி­கள் அநு­ரா­த­பு­ரத்­தில் உள்­ள­னர்.

இத­னால் அவர்­கள் அந்த மாகாண அதி­கா­ரி­க­ளின் சொல்­லின் கீழ் இயங்­கும் நிலமை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக அவர்­க­ளுக்கு இந்­தப் பிர­தே­சங்­கள் தொடர்­பில் போதிய விளக்­க­மின்மையால் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­கின்­றன.

 

வடக்­கில் மணல் தட்­டுப்­பாட்டை வைத்து பல­ரும் பல விலை­க­ளில் விற்­பனை செய்­கின்­ற­னர். இத­னால் அநா­வ­சி­யப் பிரச்­சி­னை­கள் எழு­கின்­றன. போன்ற பல விட­யங்­கள் சுட்­டி க்­காட்­டப்­பட்­டன. அவற்றில் வடக்­கின் 5 மாவட்­டத்துக்­கும் தேவை­யான கனிய வளங்­களை பெறு­வ­தற்­கான கூட்டு முயற்­சி­யாக 5 மாவட்டச் செய­லர்­க­ளையும் அழைத்து விரை­வில் ஆராய்ந்து ஒரு முடி­வை எட்­டு­வது.

5 மாவட்­டத்துக்­கும் நிர்­ண­யிக்­கப்­பட்ட விலையை தீர்­மா­னித்து அந்த விலை­யி­லேயே பொருளை வழங்­கு­வது.
மாகா­ணத்­துக்­குள் ஒரு மாவட்­டத்­தில் இருந்து இன்­னு­மோர் மாவட்­டத்துக்­கு கொண்­டு­போக முடி­யாத சூழ­லில் மாகா­ணத்துக்­கு வெளி­யில் கொண்டு செல்­லப்­ப­டு­வது தொடர்­பில் ஆராய்­வது.

கனி­ய­வ­ளங்­க­ளுக்­கான அனு­ம­தியை வழங்­கும் அலு­வ­ல­கம் அல்­லது குறைந்த பட்­சம் அதி­காரி வடக்­கில் இயங்க ஆவன செய்­வது போன்ற தீர்­மா­னங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இவ்­வாறு தீர்­மா­னங்­கள் மேற்­கொள்­ளப்­பட்டு 110 நாட்­கள் கடந்­து­விட்ட நிலை­யில் எந்­த­வி­த­மான முன்­னேற்­ற­மும் காணப்­ப­ட­வில்லை என­வும் வடக்­கின் சகல மாவட்­டத்­தி­லும் இன்­று­வரை மணல் விநி­யோ­க­மும் கிர­வல் விநி­யோ­க­மும் பெரும் பிரச்­சி­னை­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான பணி­கள் இடம்­பெ­ற­வில்லை என்­றும் சுட்­டிக்­காட்­டு­ கின்­ற­னர். யூலை மாதம் 31ஆம் திகதி இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் மேல­திக அர­சாங்க அதி­பர் (காணி), பிர­தேச செய­லா­ளர்­கள், இரா­ணுவ அதி­கா­ரி­கள் மற்­றும் பொலி­ஸா­ரு­டன், கனி­ய­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­கள், புவிச்­ச­ரி­த­ வி­யல் திணைக்­கள அதி­கா­ரி­க­ளும் கலந்து கொண்­டமை குறிப்­பி­ டத்­தக்­கது. –

http://newuthayan.com/story/49351.html

மண் கடத்தல் மூலம் சிங்கள போலீஸ் காடையர்களும், கனியவள அதிகாரிகளும் பெருமளவு இலஞ்சம் பெறுவதால் இந்தப் பிரச்சினையை சிங்கள அரசு தீர்க்க முன்வராது.

தற்போதை அதிகார வரம்புகள் மாகாண மக்களுக்கு அநீதியை உறுதிசெய்யவே உள்ளன. எனவே முழுமையான சமஸ்டி முறை தான் உள்ளூர் மக்கள் தங்கள் வளங்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்தும் வாய்ப்பை வழங்கும்.

சம்சும் கும்பலுக்கு இவை விளங்கப்போவதில்லை. 

கனிவள துறையின் இயக்குனராக தற்போது ஜேவிபி கட்சியை சார்ந்த சிங்கள வெறிபிடித்த ரொஹான் பெர்னாண்டோ என்ற பேராசிரியர் இருப்பதாக கூறுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.