Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

Featured Replies

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

 
 

'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும்' எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல்

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகக் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், டிசம்பர் இறுதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆர்.கே.நகர் தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், நவம்பர் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கல்செய்ய டிசம்பர் 4-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/108762-rknagar-byelection-date-announced.html

  • தொடங்கியவர்

நேற்று அதிமுக சின்னம் ஒதுக்கீடு; இன்று தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையத்தின் மீது சீறும் சமூக ஊடகம்

''நேற்று சின்னம், இன்று தேதி தேர்தல் ஆணையத்தின் நல்ல நாடகம்''படத்தின் காப்புரிமைTWITTER

பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான தேதி, அதிமுக-வின் ஓபிஎஸ்- இபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்பட்ட மறுநாள் அறிவிக்கப்பட்டிருப்பதைப் பற்றி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இரட்டை இலையை ஒதுக்கியது, தேர்தல் தேதி அறிவித்தது இரண்டுமே தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டதால் ஆணையம் சமூக ஊடகத்தில் கடும் கேலிக்கும், விமர்சனத்துக்கும் இலக்காகியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு அவரது மரணத்தை அடுத்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிளவுபட்டிருந்த அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னம் அப்போது முடக்கப்பட்டிருந்தது. அப்போது அதிமுக சசிகலா அணியின் சார்பில் டி.டி.வி.தினகரன் அப்போது ஆர்.கே.நகரில் போட்டியிடவிருந்தார். பணம் விநியோகம் உள்ளிட்ட முறைகேடுகளைக் காரணம் காட்டி அத்தேர்தலை ஆணையம் ரத்து செய்தது.

இப்போது அரசியல் நிலைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, சசிகலாவால் முதல்வராக முன்மொழியப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா குடும்பத்தினரையே தள்ளிவைத்து ஓ.பி.எஸ். அணியுடன் இணைந்ததை அடுத்து, அதிமுக-வின் அதிகாரச் சமநிலையில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுநாள் வரை ஆர்.கே.நகர் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படாமலே இருந்துவந்தது.

இந்நிலையில் இரட்டை இலை யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் மதுசூதனன் தலைமையிலான அ.தி.மு.க அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அடுத்த நாளே ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதிகளையும் இன்று ஆணையம் அறிவித்த நிலையில், ஆணையத்தின் முடிவு விமர்சனத்துக்கு இலக்காகி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல் அதன் நம்பகத் தன்மையைக் குலைத்துவிட்டதாக பொருள்படும் பதிவுகளை டிவிட்டரில் பலரும் இட்டிருந்தனர்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @drramadoss
 

நேற்று இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு. இன்று ஆர்.கே நகர் தேர்தல் அறிவிப்பு. ஏற்கனவே நான் கூறியது தான். நல்ல நாடகம் இங்கே நடக்குது!

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @drramadoss

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @er_nrajkumar
 

நேத்து சின்னம் கொடுத்து இன்றைக்கு #தேர்தல்அறிவிப்பு....

நவம்பர் 27 வேட்புமனு 
டிசம்பர் 21 தேர்தலாம்!!

இப்படிலாம் பன்ன தேர்தல் ஆணையத்தால் மட்டுமே முடியும்.#தேர்தல்_ஆணையம் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது#BJPfails
#RKNagar #AdmkFails

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @er_nrajkumar

தேர்தல் ஆணையம் அதிமுக-வுக்கு இணக்கமாகச் செயல்பட்டிருப்பதாகவும் அதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் சித்திரிக்கும் பதிவுகளும் டிவிட்டரில் வெளியாகி இருந்தன. இவ்வளவும் செய்துவிட்டு அதிமுகவை எதிர்த்து பாஜக வேட்பாளர் நிறுத்தும் என்று கேலி செய்து ஒரு பயனாளரும், மற்றொருவர் அதிமுக சின்னமான இரட்டை இலையின் காம்பில் தாமரை பூத்திருப்பதாக சித்திரித்தும் இன்னொரு பதிவரும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தனர்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @smhrkalifa
 

இவ்வளவும் பன்னிட்டு தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக பாஜக வேட்பாளரை நிறுத்தி தன் நேர்மையை நிரூபிக்கும் பாருங்க. #RKNagar

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @smhrkalifa

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @silambarasan_mu
 

நேற்று காவியின் இலை வந்தது இன்று #RKnagarதேர்தல் தேதி வந்தது மோடியின் பிளான் மக்கள் வீழ்த்துவார்கள்

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @silambarasan_mu

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @BlackyPriyan
 

நேற்று இரட்டைஇலை சின்னம் குறித்த அறிவிப்பு

இன்று ஆர்கே நகர் தேர்தல் தேதி அறிவிப்பு 

இதற்கிடையே எந்த தொடர்பும் இல்லை ...... #Rknagar #TwoLeaves

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @BlackyPriyan

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @saiprasanth_s
 

ஆர்.கே.நகர் தேர்தல் பாஜக போட்டியிடும் #தமிழிசை 

ஆர்.கே.நகர்ல உங்க கட்சி வேட்பாளர் தான் இரட்டை இலை சின்னத்துல போட்டியிடுறாங்க இதுகூட தெரியாம ஏன் நீ இருக்க#RKNagar

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @saiprasanth_s

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @isai_
 

இதுநாள் வரை ஆர்கே நகர் இடைத்தேர்தல் இழுத்தடிக்கப்பட்டதன் காரணம் இலுமினாட்டிகள் தான். தேர்தல் ஆணையத்திற்கோ, மோடிக்கோ, தமிழக அரசியல் தம்பதிகளுக்கோ துளியும் தொடர்பில்லை என தெரிவித்துக்கொள்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். #RKNagarBypoll

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @isai_

ஒரு சில அதிமுக ஓபிஎஸ். இபிஎஸ் அணித் தொண்டர்கள் இரட்டை இலை தங்களுக்கு ஒதுக்கப்பட்டதை வரவேற்றுள்ளார்கள்.

சின்னத்தை ஓபிஎஸ் இபிஎஸ் அணிக்கு ஒதுக்கும் முடிவை வரவேற்று ஒரு தொண்டர் இட்ட முகநூல் பதிவு

http://www.bbc.com/tamil/india-42108288

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.