Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்

Featured Replies

பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள்

மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தோரின் துயர நிலை

அரச படையினரின் மிகக் கொடூரமான ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் காரணமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணவு, இருப்பிட வசதி எதுவுமின்ரபெரும் இடர்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர்.

நடக்க முடியாத வயோதிபர்கள், நோயாளர்கள் வீதியோர மரநிழல்களில் பெரும் அவலத்துக்கு மத்தியில் அமர்ந்திருப்பதுடன் சிறு குழந்தைகள் பசியால் வாய்விட்டு அழும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.

அரச நிவாரண உதவிகள் எதுவும் இதுவரை வழங்கப்படாத நிலையில் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ள இந்த மக்களை பராமரிக்க முடியாத நிலையில் மாவட்ட செயலக அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, ஏறாவூர்பற்று, கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் பேரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கும் பணிகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கம் இம்மக்களின் தற்காலிக குடியமர்விற்கு எந்தவித ஏற்பாடுகளும் செய்யாத நிலையில் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் உதவியுடன் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை ஒரு வாரமாக இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுக்காத நிலை காணப்படுகின்றது. மூன்று, நான்கு குடும்பங்களை இணைத்து ஒரு கூடாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமைத்த உணவுகளை வழங்கும் அதேவேளை, சில அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் குறைந்த அளவிலான உணவுப் பொருட்களையும் சில முகாம்களுக்கு வழங்கியுள்ளன.

பெருமளவில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அரசாங்கம் கைவிட்டுள்ள நிலையில் அரச அதிகாரிகளின் முயற்சியினாலேயே அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சில ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நண்பர், உறவினர் வீடுகளில் தங்கியிருக்கும் மக்கள் தாங்கள் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருவதை தாங்கள் தங்கியிருக்கும் கிராம சேவகர் பிரிவில் பதியச் செல்லும் போது தங்களுடைய கிராம சேவகரிடம் இருந்து கடிதம் பெற்று வரும்படி திருப்பி அனுப்பும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இடம் பெயர்ந்த தங்களது கிராம சேவகரை சந்திக்க முடியாத நிலையில் பலர் பதிவு செய்யாமலும் உள்ளனர்.

முகாம்களில் உள்ள மக்கள், சிறு குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் பெரும் அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

முகாங்களில் கூடாரம் கிடைக்காத மக்கள் மர நிழல்களில் சமைத்துச் சாப்பிட்டு தங்களது வாழ்க்கையை கழித்து வருகின்றனர்.

இந்த மக்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கச்சேரி ஊடாக இம் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://www.thinakkural.com/news/2007/3/12/...s_page23162.htm

இதுகளுக்கு பாருங்க வானவில் ஒரு சனம் இல்லை ஆதரவா கதைக்க ஆனா சண்டை வேணுமா, சமாதானமா போகோனுமா, இப்படி மனுசனுடைய சக்திகளை சும்மா வீணாக்கிற புழுத்துப்போன கதைகளில தான் கன சனம் மண்டையைபோடுது( நான் உட்பட) ஆகவே நாளைக்கு சண்டை தொடங்கீற்றெண்டா எங்க எத்தினை ஆமி, புலி செத்தது என்று மரண அறிவித்தல்கள் தான் கதைப்பமே ஒழிய பாதிக்கப்படப்போர தற்போது ஏற்கனவே பாதிக்கப்பட்ட சனத்திற்கு என்ன எங்களால் செய்ய மு.................................................................டிய

தமிழீழத்து மக்கள் அனைவரும் எம் சொந்தங்களே. எனவே இந்த அவசர வேளையில் நாம் எல்லோரும் சேர்ந்து தான் எம் சகோதரர்களுக்கு உதவி செய்ய வேண்டும். புலம் பெயர் சகோதரர்களே TRO வின் கையை பலப்படுத்துங்கள். ஏனெனில் நாம் தான் உரிமையோடு எம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அனர்த்த நேரத்தில் வெளிநாடுகளில் தெருத்தெருவாக எம் மக்கள் உதவிகளை சேகரித்தது போல் மீண்டும் இந்த அவசர நேரத்தில் உங்களால் முடிந்ததை செய்து பசியினால் கொதிக்கும் வயிறுகளுக்கு சாப்பாடு தாருங்கள். நாம் யாரிடம் கேட்போம் ?? உரிமையோடு எம் உறவுகளிடம் தானே கேட்கலாம்.

தனிப்பட்டவர்களின் பெயரை சொல்லி கதைக்க வேணாம் சைவன் நீங்கள் எழுதிய கருத்து எலோரும் பார்க்ககூடியது அது சரியல்ல

Front-l.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசங்களை நோக்கி படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் ஷெல், பல்குழல் ரொக்கட் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து வந்து பெரும் அவலங்களுக்கு மத்தியில் பொது இடமொன்றில் தங்கியுள்ள பொதுமக்களைக் காணலாம். ...

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இவ்வாறான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தன்னாலான முயற்சிகளைச் செய்து வருகின்றது. வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் தாயகத்திலுள்ள ஒவ்வொரு குழந்தைகளையும், தங்கள் குழந்தைகளாக நினைப்பார்களானால் தமிழ்க் குழந்தைகள் சிங்களப் பேரினவாதிகளால்படும் துன்பங்களில் இருந்து, அவர்களை ஓரளவுக்காவது சிங்களப் பேரினவாதிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கமுடியும்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மூலம் வசதியற்ற, கைவிடப்பட்ட அப்பாவித் தமிழ்க் குழந்தைகளிற்கு உணவு வழங்குதல், குழந்தைகளை ஸ்பொன்சர் செய்தல் எனப் பல வழிகளில் உதவமுடியும். ஒரு குழந்தையை ஸ்பொன்சர் செய்வதற்கு ஆக $25.00 அமெரிக்க டொலர் மாதாந்தம் நன்கொடையளித்தால் போதுமானது. நாங்கள் மாதாந்தம் நூறு, ஆயிரக் கணக்கில் எமது காசை தேவையில்லாத ஆடம்பரமான வழிகளில் செலவளித்து கரியாக்குவதைவிட இவ்வாறு தாயகத்திலுள்ள வசதியற்ற, கைவிடப்பட்ட, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளிற்கு உதவி செய்தால் எமக்கு போறவழிக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

மனமுண்டானால் இடமுண்டு!

http://www.trosponsorachild.org/

bgfr8.png

Edited by மாப்பிளை

  • தொடங்கியவர்

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இவ்வாறான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தன்னாலான முயற்சிகளைச் செய்து வருகின்றது. வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் தாயகத்திலுள்ள ஒவ்வொரு குழந்தைகளையும், தங்கள் குழந்தைகளாக நினைப்பார்களானால் தமிழ்க் குழந்தைகள் சிங்களப் பேரினவாதிகளால்படும் துன்பங்களில் இருந்து, அவர்களை ஓரளவுக்காவது சிங்களப் பேரினவாதிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கமுடியும்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மூலம் வசதியற்ற, கைவிடப்பட்ட அப்பாவித் தமிழ்க் குழந்தைகளிற்கு உணவு வழங்குதல், குழந்தைகளை ஸ்பொன்சர் செய்தல் எனப் பல வழிகலில் உதவமுடியும். ஒரு குழந்தையை ஸ்பொன்சர் செய்வதற்கு ஆக $25.00 அமெரிக்க டொலர் மாதாந்தம் நன்கொடையளித்தால் போதுமானது. நாங்கள் மாதாந்தம் நூறு, ஆயிரக் கணக்கில் எமது காசை தேவையிலாத ஆடம்பரமான வழிகளில் செலவளித்து கரியாக்குவதைவிட இவ்வாறு தாயகத்திலுள்ள வசதியற்ற, கைவிடப்பட்ட, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளிற்கு உதவி செய்தால் எமக்கு போறவழிக்கு புண்ணியமானது கிடைக்கும்.

மனமுண்டானால் இடமுண்டு!

http://www.trosponsorachild.org/

bgfr8.png

மாப்பிள்ளை நீர் சொன்னது மிகச்சிறந்த முயற்ச்சி, எல்லஓரும் தம்மாலான பங்க்ளிப்பை நல்களாம், தனிப்ப்பட்ட முறையிலும், குழு சார்பாகவும்,

இப்போது இடம்பொயர்ந்து அனாதரவாக நிர்கதியற்று இருக்கும் மக்களிற்க்கு எப்படியுதவுவது...........?

இப்படி யோசிக்கிறன் இதில என்ன பையனும் இருந்து சாப்பிட ஒண்டுமில்லாம் அழுதா எனக்கு எவ்வளவு கவலையாக இருக்கும். யாரட்ட போய் அழுகிறது. பாவங்கள் ஏதேனும் செய்யோணும். அந்த இந்திய சாமியைப்பிடிக்க ஏலாதா அதுதான் வெள்ளைவேட்டி ஆள் அவருக்குளாள மனிதாபிமானம் என்று அவுஸ்திரேலியாவுக்கு கூப்பிட்டு சொல்லி குடுத்துவிடுறது. அல்லது சத்திய சாயி ஆக்கள பிடிச்சு அவர்களுக்குள்ளால் கொடுக்கப்பார்க்கிறது. சும்மா தமிழ நாட்டு களிசரை அரசியல் வாதிகளுக்கு போதிரம் கொடுக்கிறார். இந்த உதவியைச் செய்யாட்டி என்னவாம்?

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தோருக்கு

அவசிய நிவாரண உதவிகளைச் செய்வதில் கஷ்டம்

ஏனைய அமைப்புகளையும் உதவுமாறு ஐ.சி.ஆர்.சி. கோரிக்கை

கடந்த மூன்று நாள்களில் மட்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்களுக்கான தங்குமிட வசதிகளையும், உணவு, தண்ணீர் மற்றும் அவசர அத்தியாவசிய உதவிகளைச் செய்வதில் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகிறது.

அதனால், ஏனைய உதவி வழங்கும் ஏஜென்சிகளையும் அகதிகளுக்கு உதவுமாறு செஞ்சிலுவைக்குழு அழைப்பு விடுத் திருக்கிறது.

அண்மைக்காலத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று மதிப்பிடப்படுகிறது.

இதேவேளை

மட்டக்களப்பு மாவட்டத்தில் துரிதப்படுத்தப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கை களின் காரணமாக அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் உடனடித் தேவைகளுக்காக நூறு மெற்றிக்தொன் அரிசியும், பருப்பு, சீனி, பால்மா போன்ற உணவுப் பொருட்களும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு 50 லட்சம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் மீது அரச படையினர் தொடர்ச்சியாக பீரங்கி மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

புலிகளின் முகாம்கள் மீதே தாக்குதல் நடத்துவதாக அரச படையினர் கூறுகின்றனர்.

ஆனால் வெல்லாவெளி, கிரான், உன்னிச்சை, படுவான்கரை , பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர் பற்று ஆகிய பிரதேசங்களில் இருந்து ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து வந்துள்ளனர்.

தமது குடியிருப்புகள் மீது குண்டுகள் வந்து விழுவதாகவும் தாம் வீடு வாசல்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளோம், குடும்பத்தோர் பலரைக் காணவில்லை. இப்போது அகதிகளாக்கப்பட்டுள்ளோம் என்று இடம்பெயர்ந்து வந்தவர்கள் கூறுகின்றனர்.

ஒரே நேரத்தில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையானோர் இடம்பெயர்ந்து வந்துள்ளதால் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்

நான் மாப்பு தந்த இணைப்பில் ஸ்பொன்ஸர் பண்ண பதிவு செய்தேன் ஆனால் அவர்களின் சிஸ்டத்தில் பிழையிருபதாக தெரியுது ஏதும் அறிந்தவர்கள் சொல்லுங்கள்

நான் மாதாமாதம் 25 டொலர் ஸ்பொன்ஸர் செய்ய ம்முடிவெடுத்திட்டேன்

நன்றி மாப்புக்கு இனைப்பை தந்ததுக்கு

நான் சுமார் இருபத்தைந்து நிமிடங்களிற்கு முன் இணைத்த ஆதரவற்ற தமிழீழத்தில் வாழும் குழந்தைகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மூலம் ஸ்பொன்சர் செய்து ஒளிமயமான வாழ்வை கொடுப்பதற்கு இணைத்த லிங்க் அழுத்தப்பட்டு இதுவரை சுமார் மூன்று யாழ் கள உறவுகள் தாமும் மூன்று குழந்தைகளிற்கு வாழ்வளிக்க முன்வந்தது மகிழ்ச்சியைத் தருகின்றது. நான் கடைசியாக 20 நிமிடங்களிற்கு முன் பார்த்தபோது ஸ்பொன்சர் இலக்கம் 79இல் நின்றது. இப்போது 82 இல் நிற்கின்றது.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் யாழ் களத்திற்கு வரும் தமிழ் உறவுகள் வெறும் அரட்டைக்கும், வெட்டிப்பேச்சுக்குமாக வரவில்லை, மாறாக தெருவில் இறங்கி அல்லல்படும் தாயக உறவுகளிற்கு உதவிக் கொண்டுதான் இருகின்றார்கள், இன்னும், இன்னும் உதவுவதற்கு தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பதாகும்.

அல்லல்படும் குழந்தைகளிற்கு உதவவந்த அந்த மூன்று யாழ் கள உறவுகளிற்கும், உதவப்போகின்ற உறவுகளிற்கும் தலை வணங்கி எனது வணக்கத்தையும், நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!

http://www.trosponsorachild.org/child/sponsor_add.php

சுணங்கிவிட்டது

ஈழவன் இணைப்பு இப்ப வேலை செய்யுது எப்படி காசு கொடுத்தனீர்? விளக்க முடியுமா? பெட்டிசன் பகுதி தானே நிரப்பக்கேட்டுள்ளார்கள்?? நன்றிகள்

Displaced due to high security zone

Affected by Tsunami

Affected by landmines

Single parent family

Assistance needed for higher education

Any Category

which is the appropriate one iilavan for us to tick?

சுணங்கிவிட்டது

ஈழவன் இணைப்பு இப்ப வேலை செய்யுது எப்படி காசு கொடுத்தனீர்? விளக்க முடியுமா? பெட்டிசன் பகுதி தானே நிரப்பக்கேட்டுள்ளார்கள்?? நன்றிகள்

Displaced due to high security zone

Affected by Tsunami

Affected by landmines

Single parent family

Assistance needed for higher education

Any Category

which is the appropriate one iilavan for us to tick?

it is still 0082 even though it accepted my entry. what was going on? has it been working witout any problems?

யாழ்களத்தில் அரட்டைகள் அடிபிடிகள் மாத்திரமின்றி இப்படியான நல்லகாரியங்களும் அரிதாக நடைபெறுகின்றது. அதற்காக யாழ் களத்திற்கு அதன் அங்கத்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் இங்கு வரும் அனைவரும் ஒன்றினைந்து தங்கள் தங்களால் முடிந்த உதவிகளை நல்லவைகளைச் செய்ய இக் களம் ஒரு ஊக்குவிப்பாக இருப்பதை மறுக்க முடியாது. தற்போதைய நிலையுணர்ந்து அனைவரும் ஒன்றுபட்டு செய்ய முடிந்த அத்தனை உதவிகளையும் செய்ய முயற்சிப்போம்.

ஈழத்திலிருந்து

ஜானா

Sponsor No 0082

Password

Re Enter Password

Sponsor Name

Postal Address

Country

E-Mail

Telephone No

Category of child I wish to sponsor

Displaced due to high security zone

Affected by Tsunami

Affected by landmines

Single parent family

Assistance needed for higher education

Any Category

District from which I wish to sponsor

Jaffna Kilinochchi Mannar

Vavuniya Mullaitivu Trincomalee

Vaharai Batticaloa Amparai

Any district

some thing went wrong here on this area. If any one knows, please come forward to help us to sort out this matter. So many time we have entered our details and it still shows 0082 and also it doesn't show anywhere for the necessary payment or anything?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் ஜனா அவர்களே!

அங்கிருக்கும் தமிழ் உறவுகளை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது. புலத்தில் வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு செயற்படவேண்டும்.

இப்படியே சினிமா வசனம் பேசிக்கண்டு இருங்கோ இங்க உண்மையிலேயே நித்திரை கொள்ளாது 12.20 காலை வரை விழித்துஇருக்கிறேன் எவரேனும் எனது கேள்விக்கு பதில் போடுவார்கள் என்று. ஊம். இப்படியிருக்க நீங்கள் எல்லாம் ஒரு தமிழ மனிதர்கள்.நான் வருகிறேன்

இப்படியே சினிமா வசனம் பேசிக்கண்டு இருங்கோ இங்க உண்மையிலேயே நித்திரை கொள்ளாது 12.20 காலை வரை விழித்துஇருக்கிறேன் எவரேனும் எனது கேள்விக்கு பதில் போடுவார்கள் என்று. ஊம். இப்படியிருக்க நீங்கள் எல்லாம் ஒரு தமிழ மனிதர்கள்.நான் வருகிறேன்

நான் பின்வரும் தளத்தில் கிறெடிற் காட் மூலம் பணம் செலுத்தினேன். மற்றப்படி ஆங்கிலத்தில் இன்னொரு கேள்வி கேட்டீர்கள். நான் ஒரு தமிழனாகையால் அது புரியவில்லை.

http://www.troonline.dk/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

some thing went wrong here on this area. If any one knows, please come forward to help us to sort out this matter. So many time we have entered our details and it still shows 0082 and also it doesn't show anywhere for the necessary payment or anything?

saivan, I am also facing the same problem. I provided all the information asked and clicked submit button. It came back saying "Sucessfully Added". Not sure what to do next. Please let me know if you figure out anything. I hope they have automated payment option.

Mappillai, Thanks for providing the TRO sponser link.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இவ்வாறான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு தன்னாலான முயற்சிகளைச் செய்து வருகின்றது. வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள் தாயகத்திலுள்ள ஒவ்வொரு குழந்தைகளையும், தங்கள் குழந்தைகளாக நினைப்பார்களானால் தமிழ்க் குழந்தைகள் சிங்களப் பேரினவாதிகளால்படும் துன்பங்களில் இருந்து, அவர்களை ஓரளவுக்காவது சிங்களப் பேரினவாதிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கமுடியும்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மூலம் வசதியற்ற, கைவிடப்பட்ட அப்பாவித் தமிழ்க் குழந்தைகளிற்கு உணவு வழங்குதல், குழந்தைகளை ஸ்பொன்சர் செய்தல் எனப் பல வழிகளில் உதவமுடியும். ஒரு குழந்தையை ஸ்பொன்சர் செய்வதற்கு ஆக $25.00 அமெரிக்க டொலர் மாதாந்தம் நன்கொடையளித்தால் போதுமானது. நாங்கள் மாதாந்தம் நூறு, ஆயிரக் கணக்கில் எமது காசை தேவையில்லாத ஆடம்பரமான வழிகளில் செலவளித்து கரியாக்குவதைவிட இவ்வாறு தாயகத்திலுள்ள வசதியற்ற, கைவிடப்பட்ட, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளிற்கு உதவி செய்தால் எமக்கு போறவழிக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

மனமுண்டானால் இடமுண்டு!<<<<<

http://www.trosponsorachild.org/

bgfr8.png

இது உதவி அல்ல ! கடமை! செயற்படுவோம். !வெறுமனே வாய் மெல்லாமல் செயற்படுவதுதான் தீர்விற்கு ஒரே வழி.! நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவுகளுக்கு உதவி செய்வதற்கு நீங்கள் தந்த முகவரிகளில் பல முறை முயற்சித்துப்பார்த்துவிட்ட

தாயகத்திலுள்ள குழந்தைகளிற்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க முன்வந்த யாழ் கள உறவுகளிற்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியறிதலை தெரிவித்து தலைவணங்குகின்றேன்.

நீங்கள் கீழுள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம் நீங்கள் வாழும் நாட்டிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தொலைபேசி, முகவரியினை அறிந்துகொள்ள முடியும்.

http://www.trosponsorachild.org/contactus.htm (நீங்கள் வாழும் நாட்டின் மேல் கிளிக் செய்யவும்)

நீங்கள் அவர்களிற்கு ஒரு குழந்தையை ஸ்பொன்சர் பண்ணுவதற்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்தால் அவர்கள் ஓரிரு நாட்களில் குழந்தையை ஸ்பொன்சர் செய்யும் விண்ணப்ப படிவத்தை தபாலில் அனுப்பி வைப்பார்கள். இதன்பிறகு உங்களிற்கு http://www.trosponsorachild.org/ இணையத்தின்மூலம் நீங்கள் ஸ்பொன்சர் பண்ணியுள்ள குழந்தையின் விபரங்களை அறிவதற்கு, அவர்களிற்கு தனிப்பட்ட செய்திகளை அனுப்புவதற்கு, அவர்களின் முன்னேற்றத்தை ஒன்லைனில் அறிந்துகொள்வதற்கு தேவயான Login - User Name, Password என்பன வழங்கப்படும்.

கீழுள்ள இணைப்பை கிளிக்செய்யும் போது http://www.trosponsorachild.org/child/sponsor_add.php உடனடியாக உங்களிற்கு பதில் கிடைக்காவிட்டாலும், நீங்கள் ஒன்லைனில் நிரப்பி அனுப்பும் விண்ணப்ப படிவம் உங்கள் நாட்டு தமிழர்புனர்வாழ்வுக் கழக கிளைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் ஓரிரு தினங்களில் உங்களிற்கு தபாலில் எவ்வாறு நன்கொடையை அளிக்கவிரும்புகிறீர்கள் என்ற உங்கள் விருப்பத்தை கேட்கும் (One time payment / monthly credit card payment / cheque ....)விண்ணப்ப படிவத்தை அனுப்பிவைப்பார்கள். நீங்கள் ஒருகிழமையினினுள் உள்நாட்டு தமிழர் புனர்வாழ்வுக் கிளைமூலம் தொடர்பு கொள்ளப்படாவிட்டால், தயவுசெய்து கீழுள்ள இணைப்பை அழுத்தி உங்கள் நாட்டு உள்நாட்டு தமிழர் புனர்வாழ்வுக் கிளையை தொலைபேசியில் தொடர்புகொண்டு குழந்தையை ஸ்பொன்சர் செய்யும் உங்கள் விருப்பத்தை கூறுவிடுங்கள். அவர்கள் மேற்கொண்டு தேவையான விண்ணப்ப வடிவங்களை பூர்த்தி செய்வார்கள்.

http://www.trosponsorachild.org/contactus.htm (நீங்கள் வாழும் நாட்டின் மேல் கிளிக் செய்யவும்)

(உங்கள் கேள்விகளிற்கு நான் உடனடியாக பதில்தரமுடியாமைக்கு மன்னித்துகொள்ளுங்கள்)

நன்றி!

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்புவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thanks, I will contact my local TRO office.

saivan, I am also facing the same problem. I provided all the information asked and clicked submit button. It came back saying "Sucessfully Added". Not sure what to do next. Please let me know if you figure out anything. I hope they have automated payment option.

Mappillai, Thanks for providing the TRO sponser link.

இதே பிரச்சினையையே நான் கொண்டிருகின்றேன் அடுத்து என்ன செய்வது பணம் எப்படி செலுத்துவது

Successfully Added என்ற செய்தி கிடைத்தால் உங்கள் நாட்டு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினர் விரைவில் உங்களை ஈ மெயில், மற்றும் தபால் மூலம் மேலதிக விபரங்களை பெறுவதற்காகவும், உங்கள் ஒன்லைன் படிவத்தை Confirm பண்ணுவதற்காகவும் தொடர்பு கொள்வார்கள். ஒரு கிழமையினுள் நீங்கள் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினால் தொடர்புகொள்ளப்படாவிட்டால், தயவுசெய்து கீழுள்ள இணைப்பை அழுத்தி உங்கள் நாட்டு தமிழர் புனர் வாழ்வுக் கழக கிளையிற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்!

http://www.trosponsorachild.org/contactus.htm (நீங்கள் வாழும் நாட்டின் மேல் கிளிக் செய்யவும்)

நன்றி!

Edited by மாப்பிளை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.