Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாளுக்குத் தயார் நிலையில் துயிலுமில்லங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது.

   
2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், இம்முறை தாயகத்தில் உள்ள பெரும்பாலான துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தும் சூழல் அமைந்துள்ளது. போருக்குப் பின்னர், சிறிலங்கா படைகளால் அழிக்கப்பட்ட துயிலுமில்லங்கள், நினைவிடங்கள், துப்பரவு செய்யப்பட்டு, மாவீரர் நாள் நினைவுகூரலுக்காக தயாராகி வருகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில், தீவகம்,சாட் மற்றும் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லங்கள் மாத்திரம், இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டுள்ளன. இந்த துயிலுமில்லங்கள் துப்புரவு செய்யப்பட்டு, எஞ்சியிருக்கும் நடுகற்களைக் கொண்டு நினைவுச்சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த துயிலுமில்லங்களில் நாளை மாலை மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, கோப்பாய், கொடிகாமம், எள்ளங்குளம் துயிலுமில்லங்கள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதால், அவற்றுக்கு அருகில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர, பன்னிரு வேங்கைகள் மற்றும் கேணல் கிட்டு ஆகியோரின் நினைவுச்சின்னங்கள் அமைந்திருந்த வல்வெட்டித்துறை தீருவில் திடலிலும் மாவீரர்களை நினைவுகூரு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்கள் துப்புரவு செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. இங்கு எஞ்சியிருந்த நடுகற்களைக் கொண்டு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு- தேராவில் துயிலுமில்லம், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், அதனருகில் உள்ள ஒரு பகுதியில் மாவீரர்களை நினைவுகூர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முள்ளியவளை, துயிலுமில்லத்திலும், அவ்வாறே ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில், துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரணைப்பாலை துயிலுமில்லத்திலும், நினைவுகூரல் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

மன்னார் மாவட்டத்தில், பெரியபண்டிவிரிச்சான், ஆட்காட்டிவெளி துயிலுமில்லங்களிலும், வவுனியா மாவட்டத்தில், ஈச்சங்குளம் துயிலுமில்லப் பகுதியிலும் நினைவுகூரல் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் – ஆலங்குளம் துயிலுமில்லம் துப்புரவு செய்யப்பட்டு நினைவுகூரலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் தரவை, மாவடிமுன்மாரி துயிலுமில்லங்களிலும், அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் மாவீரர் நாளை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாளை மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படும்.

maveerar-naal-261117-seithy%20(2).jpg

maveerar-naal-261117-seithy%20(3).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=194570&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people, sky and outdoorImage may contain: one or more peopleImage may contain: sky, plant, outdoor and natureImage may contain: outdoor

தயாராகியுள்ள தீருவில் வெளி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரணைப்பாலை துயிலுமில்லத்தில் மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

இரணைப்பாலை  துயிலுமில்லத்தில் மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தும் தேசிய மாவீரர் நாளான இன்று  வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து துயிலுமில்லங்களும் தயாராகி வருகின்றன.

அந்தவகையில் கிளிநொச்சி இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லத்தின் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று மாலை சரியாக 6.05 மணிக்கு மாவீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெறும் என அறிவித்துள்ளனர்.

இரணைப்பாலை  துயிலுமில்லத்தில் மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

இரணைப்பாலை  துயிலுமில்லத்தில் மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

இரணைப்பாலை  துயிலுமில்லத்தில் மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

https://news.ibctamil.com/ta/internal-affairs/maveerar-day-in-iranaippalai--killinochi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாகரை கண்டலடியில் மாவீரர் தின நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

வாகரை கண்டலடியில்  மாவீரர் தின நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

மட்டக்களப்பு  வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்தின் மாவீரர் தின நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வேளையில் கொட்டும் மழை என்றும் பாராமல் சகல ஏற்பாடுகளையும் ஒழுங்கு செய்துள்ளனர்.

இந்நிலையில் வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை எவ்வித தடைகளுமின்றி அனைத்து நிகழ்வுகளும் இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகரை கண்டலடியில்  மாவீரர் தின நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

வாகரை கண்டலடியில்  மாவீரர் தின நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

வாகரை கண்டலடியில்  மாவீரர் தின நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

https://news.ibctamil.com/ta/internal-affairs/maveerar-event-in-batticalo-vakarai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20171127_133726-1024x576.jpg

20171127_133623-1024x576.jpg

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக அஞ்சலி செலுத்தினர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தடையையும் மீறி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் எம் கே சிவாஜிலிங்கம்.

இராணுவத்தடையையும் மீறி கோப்பாய் மாவீரர்  துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம்.
 காலை 11.45 மணிக்கு
 கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீபம் ஏற்றச் சென்றபோது மாவீரர் துயிலும்  இல்லத்தின் வாயிலை மறித்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸை குறுக்கே விட்ட் பாதையை மறைத்திருந்ததுடன் பெருமளவான சிவில் உடை தரித்த இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் பஸ்சிற்கு பின்பாக வீதியோரமாக ஈகைச் சுடரேற்றி  அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் வடமாகாண போக்குவரத்.துத்துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அஞ்லி செலுத்தப்பட்ட இடங்களில் விடுதலைப்புலிகளின் மாவீரர் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாடல்கள்
அங்கு உரயாற்றிய சிவாஜிலகங்கம் தெரிவித்ததாவது.எமது ணாவீரர்கள் விதைக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறைகளை அதனை ஆக்கிரமிரத்து வைத்துள்ள இராணுவத்தினர் இவற்றை விட்டு வெளியேற வேண்டும் எதிர் காலங்களில்எவ்வித அச்சுறுத்தல்கள் இன்றி சுதந்திரமாக மாவீரர்  நாளைக் கொண்டாட வழி சமைக்கவேண்டும்.நாங்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த இவர்களை நினைவு கூருவதனை எவரும் தடக்க முடியாது.எவர்கள் எதிர்பார்த்த இலட்சியம் நிளைவேறும் வரை தமிழர்கள் என்று மே நினைவு கூருவார்கள் என்றார்
20171127_114436-1024x576.jpgimage-0-02-06-e1d6bebe4c811321b6db7e7dfd20171127_111701-1024x576.jpg
20171127_114436-1024x576.jpg
image-0-02-06-e1d6bebe4c811321b6db7e7dfda14ba5261d76ffcd4b4c2bd2dc82c442c350fa-V-1024x768.jpg
20171127_111701-1024x576.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீருவிலில் மாவீரர் நாள் நிகழ்வு ஆரம்பம் 

Image may contain: 4 people, outdoorImage may contain: 1 person, crowd and outdoorImage may contain: 7 peopleImage may contain: one or more people, crowd and outdoorImage may contain: one or more people, crowd and outdoorImage may contain: sky, outdoor and nature

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: cloud, sky, outdoor and natureImage may contain: 1 person, outdoor

முழங்காவில் துயிலும் இல்லம் ஆயத்தநிலையில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing, sky, crowd and outdoor

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தின் இப்போதய நினைவேந்தல் நிகழ்வு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoorImage may contain: one or more people, outdoor and nature

உணர்வெழுச்சியுடன் தயாராகிறது சாட்டி(தீவகம்) மாவீரர் துயிலுமில்லம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, crowd and nightImage may contain: one or more people, crowd and nightImage may contain: night and crowd

கனகபுரம் துயிலும் இல்லம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sky, ocean and outdoorImage may contain: 3 people, people sitting and outdoor

முல்லைத்தீவு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்டம் ஆலங்குளம் மாவீரர் தின வீரவணக்க நிகழ்வு...!

வீரம் வீழ்ந்து விடாது.

Image may contain: 1 person, crowd, sky and outdoorImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: one or more people and people sittingImage may contain: 4 people, outdoorImage may contain: night and sky

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.