Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொபேட் முகாபேயின் எழுச்சியும் வீழ்ச்சியும்

Featured Replies

ரொபேட் முகாபேயின் எழுச்சியும் வீழ்ச்சியும்

 

சிம்பாப்வேக்கு விடிவு பிறக்குமா?

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் 
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

 

வரும், ஆனால் வராது என்ற ஒரு சினிமா நகைச்­சுவைப் பாணியில் சிம்­பாப்வே அதிபர் முகாபே பத­வியை விட்டு வில­கு­வாரா? இல்­லையா? அல்­லது தூக்­கி­யெ­றி­யப்­ப­டு­வாரா போன்ற பல கேள்­வி­களின் மத்­தியில் அவர் கடந்த 21.11.2017 அன்று செவ்­வாய்க்­கி­ழமை பத­வியை இரா­ஜி­னாமா செய்­த­தாக பாரா­ளு­மன்­றத்தின் சபா­நா­யகர், பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்­க­ளுக்கு அவரின் கடி­தத்தை வாசித்­துக்­காட்­டினார். பாரா­ளு­மன்­றத்­திற்­குள்­ளேயே அவரின் கட்­சி­யினர், எதிர்க்­கட்­சி­யினர் என சக­லரும் மேசை­களில் தட்­டியும், ஒருவருக்கொருவர் கட்­டிப்­பி­டித்தும் தங்­களின் மகிழ்ச்­சி­யை வெளிப்­ப­டுத்­தினர். தலை­நகர் ஹ­ராரே உட்பட வேறு நக­ரங்­க­ளிலும், வீதி­க­ளிலும், அரங்­கு­க­ளிலும் மக்கள் ஆடிப்­பாடி தலை­வரின் வீழ்ச்­சியைக் கொண்­டா­டினர்.

இதற்கு முன்­ன­தாக இரா­ணுவத் தலை­வர்கள், தேசிய யூனியன் கட்சித் தலை­வர்கள், ஜனா­தி­பதி முகா­பே­யுடன் தொடர்ச்­சி­யான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டனர். அவர் பத­வியை விட்டு விலக வேண்டும் என்றும் அவ­ருக்கு சட்­டத்தின் பிடி­யி­லி­ருந்து விடு­பாட்டு உரி­மைகள் அளிப்­ப­தா­கவும் பல வாக்­கு­று­தி­களைக் கொடுத்­தனர். அவர் தனது ஆட்­சியில் மேற்­கொண்ட சர்­வா­தி­கா­ர­மான நட­வ­டிக்­கைகள், மக்­க­ளுக்கு காணியைப் பகிர்ந்து வழங்­கு­கின்றோம் என்ற கோஷத்­துடன் மேற்­கொள்­ளப்­பட்ட காணி அப­க­ரிப்பில் நிகழ்ந்த தவ­றுகள், தனது குடும்­பத்­தி­ன­ருக்கும், தன்­னுடன் இணைந்­த­வர்­க­ளுக்கும் அப­க­ரிப்பின் மூலம் ஊழ­லாகச் சேர்த்த சொத்­துக்கள் யாவற்­றி­லி­ருந்தும் கேள்­விகள் இன்­றியும் அவ­ருக்கு விடு­பாட்டு உரி­மைகள் அளிப்­ப­தா­கவே பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றன என செய்­திகள் கசிந்­த­வண்ணம் இருந்­தன. அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் நாட்­டுக்­குள்­ளேயும், வெளியேயும் அவர் அப­க­ரித்த சொத்­துக்­களின் பெறு­மதி 2 பில்­லியன் டொல­ருக்கு மேற்­பட்­டது என்று சி.என்.என். பல­வி­த­மான ஆதா­ரங்­களை காட்டி செய்­தி­களை வெளியிட்­டது. மக்­களின் குது­க­லிப்பு இவற்­றை­யெல்லாம் நிரூ­பிப்­ப­தாக எடுத்­துக்­காட்­டி­யது. ஒரு காலத்தில் மக்­களின் பேர­பி­மானம் பெற்ற விடு­தலை இயக்கத் தலைவர் ரொபேட் முகாபே இன்று மக்­களால் வெறுத்­தொ­துக்­கப்­பட்­டார்.

முகா­பேயின் கட்­சி­யான தேசிய காங்­கிரஸ் முகா­பேயை தலைமைப் பொறுப்­பி­லி­ருந்து நீக்­கி­யுள்­ளது. இக்­கட்சி இரா­ணுவ சதி­யையோ, வன்­மு­றை­யையோ விரும்­ப­வில்லை. அர­சி­ய­ல­மைப்பு ஏற்­பா­டு­களின் பிர­காரம் ஆட்சி மாற்றம் நடை­பெற வேண்­டு­மென்று கூறி­யது. முகா­பேயை பத­வி­யி­லி­ருந்து அகற்ற அவ­தூறுப் பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்தது. பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெற நட­வ­டிக்கை மேற்­கொண்­டது. ஆளும் கட்சி, எதிர்க்­கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தியது. முகாபே வயது முதிர்ந்­து­விட்டார். சுதந்­தி­ர­மாக எழும்பி நடக்க முடி­யா­த­வ­ராக இருக்­கிறார். அவ­ரது மனை­வி­யான முதல் பெண்­மணி கிரேஸ் ஆட்சி அதி­கா­ரங்­களைப் பறிக்கப் பார்க்­கின்றார். நாம் இதனை தடுத்து நிறுத்தி சிம்­பாப்­வேயில் ஆட்சி நிலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்­றது. சிம்­பாப்வே விடு­தலைப் போராட்­டத்தில் ஈடு­பட்ட முன்­னைநாள் போரா­ளி­களின் சங்­க­மா­கிய யுத்த வீரர்கள் சங்கம் இரா­ணு­வத்­துடன் மிக­நெ­ருங்­கிய தொடர்­பு­களைக் கொண்­டுள்­ளது. அதன் தலைவர் முகாபே சமா­தா­ன­மாக பத­வியை விட்டு விலக வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்தார். பதவி நீக்கம் செய்­யப்­பட்ட துணை ஜனா­தி­பதி உட­ன­டி­யாக வெளிநாட்­டிற்கு தப்பி ஓடி­விட்டார். தனது உயி­ருக்கு தீங்கு நிக­ழலாம் என்­கின்ற அச்­சத்தில் பாது­காப்­புக்­காக சென்­றுள்ளார்.

சென்ற வாரமும்,இந்த வாரமும் சிம்­பாப்வேயில் நடை­பெறும் அர­சியல் நிகழ்­வுகள் ஊட­கங்­களை ஆக்­கி­ர­மிப்புச் செய்­கின்­றன. சிம்­பாப்வே என்னும் போது இலங்­கை­யர்­க­ளா­கிய எமக்கு சிம்­பாப்வே கிரிக்கெட் அணிதான் ஞாப­கத்­திற்கு வரு­கின்­றது. முன்னர் ஆபி­ரிக்­காவின் ரொடீஷியா என அழைக்­கப்­பட்ட நாடு தான் 1980 க்குப் பின்னர் சிம்­பாப்வே என புதிய நாடாக அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­டது. கால­னித்­துவம் எவ்­வாறு ஆசிய, ஆபி­ரிக்க, இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களை கப­ளீ­கரம் செய்­தது என்­ப­தற்கு ஆபி­ரிக்க கண்­டத்தில் தென் ஆபி­ரிக்­காவும், ரொடீஷி­யாவும் சிறந்த உதா­ர­ணங்­க­ளாகும். இயற்கை வளங்கள் நிறைந்த ரொடீஷி­யா­விலும் தென் ஆபி­ரிக்­கா­விலும் வெள்ளையர்கள் (பிரித்­தா­னியர்) 19ஆம் நூற்­றாண்டில் மெது மெது­வாக குடி­யே­றினர். சுதே­சி­க­ளான ஆபி­ரிக்க கறுப்­பர்கள் 90% க்கு மேற்­பட்­ட­வர்­க­ளாக சனத்­தெ­ாகை யில் இடம்­பெற்­றனர். அர­சியல், இரா­ணுவம், பொரு­ளா­தாரம், விளை­யாட்டு போன்ற சகல துறை­க­ளிலும் ஆதிக்கம் செலுத்­தி­னர். மிகச் சிறு­பான்­மை­யி­ன­ரான வெள்ளைக் குடி­யே­றி­களின் ஆதிக்­கத்தை உடைத்­தெ­றிந்து பெரும்­பான்­மை­யி­ன­ரான கறுப்­பர்­க­ளிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்­ப­டைப்­ப­தற்­கான போராட்­டத்­திற்கு வழி­காட்டி தலைமை தாங்­கி­ய­தனால் தான் நெல்சன் மண்­டேலா உலக வர­லாற்றில் புகழ்­மிக்க ஸ்தானத்தில் மதிக்­கப்­ப­டு­கின்றார். அதே போன்று 1960களுக்குப் பின்னர் ரொடீஷி­யாவில் வெள்ளையரின் ஆட்­சிக்கு எதி­ராக போராடி வெற்றி கண்ட அமைப்­பு­க­ளுக்கு தற்­போது பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்த ரொபேட் முகாபே தலைமை தாங்­கினார்.1980 ஆம் ஆண்டு ரொடீஷியா நாடு சிம்­பாப்வே என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது. தலை­ந­க­ர­மான சாலிஸ்­ப­ரி ­ஹ­ராரே எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது. முகாபே ஜனா­தி­ப­தி­யானார். சிம்­பாப்வே அர­சியல் சாசனம் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­பதி முறையை உரு­வாக்­கி­யது. இம்மாத ஆரம்­பத்தில் துணை ஜனா­தி­ப­தி­யாக இருந்த எமசன் நன்­காங்வா பத­வி­யி­லி­ருந்து தூக்­கப்பட்டார். இரா­ணுவம் ஜனா­தி­பதி முகா­பேயை தற்­கா­லி­க­மாக கண்­கா­ணிப்பில் வைத்­தி­ருந்­தது. பத்­தி­ரி­கைகள் சிம்­பாப்­வேயில் இரா­ணுவ சதி என்ற கருத்­துப்­பட செய்­தி­களை வெளியிட்­டன. உண்­மையில் இரா­ணுவ சதி என்­பது இரா­ணுவம் முப்­ப­டை­களின் உத­வி­யுடன் ஆட்­சியை கவிழ்த்து இரா­ணுவ தலைவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்­ப­தாகும். சிம்­பாப்­வேயில் இவ்­வாறு நிக­ழ­வில்லை. அவரை சமா­தா­ன­மாகப் பத­வியை இரா­ஜி­னாமா செய்து துணை ஜனா­தி­ப­தி­யா­க­வி­ருந்த எமசன் நன்காங்­வா­விடம் பத­வியை ஒப்­ப­டைக்கக் கோரி­யது. இந்த வார தொடக்­கத்தில் தொலைக்­காட்­சியில் தோன்றி மக்­க­ளுக்கு உரை­யாற்­றிய முகாபே நானே ஜனா­தி­பதி, நானே அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் முப்­ப­டை­களின் பிர­தம தள­பதி என்றும் சூளு­ரைத்தார். எனினும் அப்­போது மூடிய கத­வு­க­ளுக்குப் பின்னால் திரை­ம­றைவில் முகா­பே பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என்ற முயற்­சிகள் நடை­பெற்­றன. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (21.11.2017) அன்று முகாபே சிம்­பாப்வே ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.

சிம்­பாப்­வேயில் பொது­மக்கள் தெருக்­களில் இறங்கி முகாபே இரா­ஜி­னாமா செய்­ய­வேண்­டு­மென்ற ஆர்ப்­பாட்டப் பேர­ணிகள் நடத்­தினர். பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் வகுப்­புக்­களைப் பகிஷ்­க­ரித்து ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தினர். நாடு பூரா­கவும் முகாபே பதவி விலக வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை வலு­வ­டைந்­தது. முகா­பேக்கு ஆத­ரவு வழங்­கி­னாலும் மக்கள் எண்­ணங்­க­ளுக்கு மாறாக இரா­ணுவம் செயற்­ப­டாது எனக் கரு­தப்­ப­ட்டது. மேலும் துணை ஜனா­தி­பதி எமசன் நன்கங்வா தேசிய காங்­கிரஸ் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதால் அடுத்த ஜனா­தி­ப­தி­யாகும் வாய்ப்புக்கள் பிர­கா­ச­மா­க­வுள்­ளன.

பல ஆட்சி அதி­கா­ரங்­களை பெண்­ம­ணிகள் தகர்த்­துள்­ளனர் என்­பது கதைகள், காவி­யங்­களில் மட்­டு­மல்ல, சம­கால அர­சி­யல்­க­ளிலும் நிகழ்ந்­துள்­ளன. முகா­பேயின் இரண்­டா­வது மனை­வி­யான கிரேஸ் அர­சி­யலில் களத்தில் முகா­பேக்கு அடுத்­த­தாக ஜனா­தி­ப­தி­யாக வேண்டும் என திட­சங்­கற்பம் கொண்டார். முகா­பேக்கு வயது 93. அவர் மனை­விக்கு வயது 54 என பத்­தி­ரி­கைகள் தெரி­விக்­கின்­றன. மனை­வியை பத­விக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­கா­கவே துணை ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­வரை முகாபே தூக்­கினார். இரா­ணுவம் துணை ஜனா­தி­ப­திக்கு ஆத­ரவு நல்கி­யது. கிரேஸ் அம்­மை­யாரும் அவ­ரது குழு­வி­னரும் பத­விக்கு வருவதை இரா­ணுவம் விரும்­ப­வில்லை. ஒரு காலத்தில் சிம்­பாப்வே ஆபி­ரிக்க தேசிய யூனியன் என்ற கட்­சிக்கும் கட்­சியின் ஆயு­தப்­பி­ரி­வா­கிய சிம்­பாப்வே ஆபி­ரிக்க தேசிய விடு­தலை இயக்­கத்­திற்கும் தலை­மை­தாங்கி நாட்டை வெள்ளைக்­கார ரொடீஷிய ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­திரம் பெற்றுக் கொடுத்த முகாபே, மிகப் பெரும் மக்கள் ஆத­ரவு பெற்­றவர். இரா­ணுவம், முப்­ப­டைகள்,பொலிஸ் யாவும் அவரால் வழி­ந­டத்­தப்­பட்­டவை என்­பதால் முகா­பேக்கு எவ்­வி­த­மான அவ­மா­னமும் ஏற்­பட இடம் கொடுக்­க­மாட்­டார்கள். ஆனால் முகா­பேக்கு பின்னர் யார் என்­கின்ற கேள்­விக்கே இப்­போது பதில் அளிக்­கப்­ப­டு­கின்­றது. நிச்­ச­ய­மாக அவரின் மனைவி கிரே­ஸுக்கு மக்கள் ஆத­ரவும் கிடை­யாது. முகா­பேயின் முத­லா­வது மனைவி புற்­று­நோயால் இறந்தார். அவர் உயி­ருடன் இருக்கும் போது ஜனா­தி­பதி செய­ல­கத்தில் தட்­டெ­ழுத்­தா­ள­ரா­கவும், தனிப்­பட்ட செய­லா­ள­ரா­கவும் மிகவும் குறைந்த தரத்தில் கட­மை­யாற்­றிய போது இரு­வ­ருக்கும் தொடர்பு ஏற்­பட்­டது. விடு­தலை யுத்தம் நடை­பெற்ற ஒரு நாட்டில் இவ்­வா­றான குழப்­பங்கள் நிகழ்­வது விரும்­பத்­தக்­க­தல்ல. ஆபி­ரிக்­காவின் தங்கம் மற்றும் பிளாட்­டின சுரங்­கங்­க­ளுக்கும், விவ­சா­யத்­திற்கும் பிர­சித்­த­மான சிம்­பாப்­வேயில் மட்­டற்ற இயற்கை வளங்கள் இருந்தும் மக்­களை ஏன் போய்ச் சேர­வில்லை என்ற வினா எழு­கின்­றது. தங்கம், பிளாட்­டினம் போன்ற கனிய வளங்­களின் வரு­மானம் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டு­கின்­றது. முகா­பேயும் அவரைச் சுற்­றி­யுள்­ள­வர்­களும் இரா­ணு­வத்­தி­னரும் தேசிய காங்­கிரஸ் கட்சி பிர­மு­கர்­களும் செல்­வத்தைச் சூறை­யா­டு­கின்­றனர். 40 வரு­டங்­க­ளாக ஆட்­சி­யி­லி­ருந்­த­ மு­காபே தொடர்ச்­சி­யாக சவால்கள் ஏது­மின்றி பத­வியை தக்­க­வைத்­த­தற்கு எல்­லோ­ரையும் கவ­னித்­த­மையே கார­ண­மாகும். இந்­தோ­னே­ஷி­யாவில் ஜெனரல் சுகார்ட்டோ, சுவர்­ணோஸின் பதவியை கவிழ்த்து ஆட்­சியைக் கைப்­பற்றி நீண்­ட­காலம் ஆட்சி செலுத்­தி­ய­மையும் இவ்­வா­றான வளக்­கொள்­ளை­ய­டிப்­புக்­களை முக்­கி­ய­மா­ன­வர்­க­ளுக்குப் பகிர்ந்­த­மையே கார­ண­மாகும்.

தென்­னா­பி­ரிக்கா பிர­தா­ன­மான அயல் நாடாகும். தென்­னா­பி­ரிக்கா சிம்­பாப்­வேயில் இரா­ணு­வச்­ச­திகள் ஏற்­ப­டு­வதை விரும்­ப­வில்லை. அது சமா­தான வழி­க­ளி­னூ­டாக ஆட்­சி­மாற்றம் நிகழ்­வ­தையே வர­வேற்­கின்­றது. சிம்­பாப்­வேயின் விடு­தலைப் போராட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கிய நாடு­களில் சீனா பிர­தா­ன­மா­னது. விடு­தலை இயக்க உறுப்­பி­னர்கள் அப்­போது சீனாவில் பயிற்சி பெற்­றனர். துணை ஜனா­தி­ப­தியும் அவ்­வாறு பயிற்சி பெற்­ற­வர்­களில் ஒரு­வ­ராவர். அவ­ருக்கு சீனத் தலை­வர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்புள்­ளது. அதே­போன்று முகாபே சீன – சிம்­பாப்வே உற­வுகள் மேம்­பட பாடு­பட்டார். 2001 / 2002 காலப்­ப­கு­தியில் முகாபே அரசு வெள்ளையர்­க­ளுக்குச் சொந்­த­மான பண்­ணை­களை தேச உட­மை­யாக்கும் போது பிரிட்டன், அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் சிம்­பாப்­வேயைக் கண்­டித்­தன. சீனா முகா­பேக்கு பேரா­த­ரவு வழங்­கி­யது. பாது­காப்புச் சபையில் சிம்­பாப்­வேக்கு எதி­ரான தீர்­மா­னங்கள் முன்­வைக்­கப்­பட்ட போது சீனா வீட்டோ அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி சிம்­பாப்­வேயை காப்­பாற்­றி­யது. ஏரா­ள­மான அபி­வி­ருத்தித் திட்­டங்கள், உட்­கட்­ட­மைப்பு மேம்­பா­டுகள் சீனாவின் உத­வியால் நடை­பெ­று­கின்­றன. சீனா அண்­மையில் முகா­பேயின் நட­வ­டிக்­கைகள் மீது அதி­ருப்தி கொண்­டுள்­ளது. எனினும் சிம்­பாப்வே–சீன உற­வுகள் சிறப்­பா­க­வுள்­ளன.

முகா­பேக்குப் பின்னர் சிம்­பாப்பே என்ற ஆய்­வுகள் நடந்­தே­றிக்­கொண்­டி­ருக்­கின்­றன. கால­னித்­துவ பிரிட்­ட­னி­ட­மி­ருந்தும் மிகச் சிறு­பான்­மை­யி­ன­ரான வெள்ளை யர்கள் பெரும்­பான்­மை­யி­ன­ரான கறுப்­பின மக்­களை அடி­மைத்­த­ன­மாக நடத்­திய வர­லாற்­றி­லி­ருந்து விடு­தலை பெற்­றுக்­கொ­டுத்த பிர­தான அர­சியல் இயக்­கத்தின் தலை­வ­ரான,மக்­களின் பேரா­த­ரவைப் பெற்ற விடு­தலைப் போரா­ளி­யான ரொபேட் முகா­பேயின் வீழ்ச்சி, சிம்­பாப்­வேயில் ஜன­நா­ய­கத்தை மக்­களின் உரி­மை­க­ளுடன் கூடிய புதிய சிம்­பாப்­பேயை உரு­வாக்­குமா என்ற கேள்வி பதி­லைத்­தேடி அலை­கின்­றது. வெறு­மனே முன்­னைய துணை ஜனா­தி­பதி, ஜனா­தி­ப­தி­யா­கவும் கட்சித் தலை­வ­ரா­கவும் பொறுப்­பேற்­பது மட்டும் மக்கள் எதிர்­பார்க்கும் தீர்­வல்ல. நீண்­ட­காலம் முகா­பேயின் நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மாக இருந்து அவரின் மக்கள் விரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு அவரின் வலது கர­மாக இருந்து செய­லாற்றி பின்னர் கட்­சி­யி­லி­ருந்தும் அகற்­றப்­பட்டு பத­வி­யி­லி­ருந்தும் தூக்­கி­யெ­றி­யப்­பட்ட துணை ஜனா­தி­பதி எமசன் மக்­களின் பெரு­வி­ருப்­பான ஜன­நா­யக மீட்­சியை, அடக்­கு­மு­றையை, சிம்­பாப்­வேயின் இயற்கை வளங்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டு­வதை தடுத்து நிறுத்­து­வாரா என்­பது கேள்­விக்­கு­றி­யா­க­வுள்­ளது. முகா­பேயின் வீழ்ச்­சியை கொண்­டா­டிய மக்கள் மீண்டும் ஒரு முகா­பேயை அரி­யா­ச­னத்தில் அமர்த்த விரும்­ப­வில்லை. முகா­பேக்குத் துணை­போன இரா­ணுவம், பொலிஸ், முப்­ப­டைகள், நீதி­ ப­ரி­பா­லனம், பணிக்­குழு ஆட்­சி­யினர் ஓரி­ரவில் நல்­லாட்சி ஏற்­ப­டு­வ­தற்கு கூட்­ட­ணி­க­ளாக செயற்­ப­டு­வார்­களா என்­பதைப் பற்றி அறி­வார்ந்த ரீதி­யா­கவும்,தர்க்க ரீதி­யா­கவும் ஆய்­வுகள் நடந்­த­வண்ணம் இருக்­கின்­றன. முகா­பேயின் ஊழல் நிறைந்த ஆட்சி தனி­நபர் சம்­பந்­தப்­பட்­ட­தல்ல. முகாபே தனது மனை­வி­யான முதல் பெண்­ம­ணி­யான கிரே­ஸுக்கு தனக்­குப்பின் ஆட்­சியை ஒப்­ப­டைப்­ப­தற்கு மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களே துணை ­ஜ­னா­தி­ப­தியும், இரா­ணு­வத்தில் ஒரு பகு­தி­யி­னரும் அதிருப்தி அடைந்த விட­யங்­க­ளாகும். இத்­த­ரப்­பு­களில் எவ­ரேனும் சிம்­பாப்வே மக்­களின் அடக்­கு­மு­றைக்­குள்­ளான வாழ்வு முறை­களோ, நாட்டின் அவல நிலை பற்­றியோ சிந்­திக்­க­வில்லை. முதல் பெண்­ம­ணி­யான கிரே­ஸுக்கு ஜனா­தி­பதி பதவி போகக்­கூ­டாது என்ற விட­யத்தில் மட்­டுமே அக்­கறை செலுத்தி இன்­றைய நிலை உரு­வா­கு­வ­தற்கு கார­ண­மாக இருந்­தனர். இந்தப் பின்­ன­ணி­களில் நோக்கும் போது சிம்­பாப்வே முகா­பேக்குப் பின்னர் புதிய பாதையில் பயணிக்கும் என்பது நம்பிக்கையுடன் எதிர்பார்க்கக்கூடிய விடயமாக தெரியவில்லை.

காலனித்துவவாதிகளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் ஆபிரிக்க கண்டத்தின் வளங்களை சுரண்டியதும் கொள்ளைடியடித்ததும் பெரும் பிரசார பேசுபொருளாக, நிறவெறிக்கு எதிராக அரசியல் இயக்கங்கள் நடத்திய நெல்சன் மண்டேலா, ரொபேட் முகாபே ஆகியோர் வரலாற்று நாயகர்களாகத் திகழ்ந்திருக்க வேண்டும். அந்தத் தகுதி நெல்சன் மண்டேலாவிற்கு உண்டு. வரலாறு முகாபேயை குப்பைத்தொட்டிக்குள் தூக்கி எறிந்துள்ளது. அதே நேரத்தில் அவர் இன்னாரு இடிஅமீன் அல்ல. சுதந்திரப் போராளியாக, தலைவனாக, கட்சித் தலைவனாக, ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கத்தின் தளபதியாக பல பரிமாணங்களில் வாழ்ந்த முகாபே ஒரு சர்வாதிகாரியாக, மக்களை ஒடுக்குபவராக, எந்த வளங்களை பிரித்தானிய காலனித்துவவாதிகள் கொள்ளையடித்தார்களோ அதே வளங்களை தானும் கொள்ளையடித்து, தம்முடன் இணைந்தவர்களுக்குப் பகிர்ந்து வழங்கிய முகாபே மக்களின் மனதிலிருந்து தூக்கியெறியப்பட்டு பல வருடங்களாகிவிட்டன. இராணுவம், பொலிஸ், முப்படைகளுக்கு முன்னால் மக்களின் எதிர்ப்புக்கள் தலைகாட்ட முடியவில்லை. ஒரு விடுதலைப் போராளி ஆட்சி அமைத்த பின்னர் அயோக்கியத்தனமாக ஆட்சிசெலுத்தியமை வரலாற்றில் புதிய விடயம் அல்ல. Animal Farm என்ற தனது புகழ்பெற்ற நூலின் மூலம் அதன் ஆசிரியரான ஜோர்ச் ஓவல் கூறிய வலிமையாக கருத்துக்கள் மீண்டும் வெற்றிநடை போடுகின்றன. (Power corrupts, absolute power corrupts absolutely) அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கிறது. பூரண அதிகாரம் பூரணமான ஊழலுக்கு வழிவகுக்கின்றது என்ற அவரின் கூற்று சிம்பாப்வே விவகாரத்தில் மெய்யாக்கப்பட்டுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-11-25#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.