Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போருக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

Featured Replies

போருக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

 

பல்­வேறு குழப்­பங்­க­ளுக்கு மத்­தியில் 93, உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அறி­வித்­தலை தேர்தல் ஆணைக்­குழு கடந்த 27 ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது.

அனைத்து உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­க­ளையும் ஒரே நேரத்தில் நடத்த முடி­யாத சட்ட சிக்­கல்கள், ஒரே­மு­றையில் நடத்த முடி­யா­விட்டால் பழைய முறை­யி­லா­வது தேர்­தலை நடத்­துங்கள் என்று கோரிக்­கை­வி­டப்­பட்­டி­ருக்கும் நெருக்­கடி, எல்லை நிர்­ணயம் சம்­பந்­த­மான வர்த்­த­மானி அறி­வித்­தலில் தவறு உள்­ளது. அதை இரத்து செய்ய வேண்­டு­மென ரிட்­ மனுத்தாக்கல், தேர்­தலை விரை­வாக நடத்த உத்­த­ர­வி­ட­வேண்­டு­மென சட்­டமா அதி­ப­ரினால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் மீளாய்வு மனு.

தேர்­தலை விரை­வு­ப­டுத்தும் பொறுப்பு சபா­நா­ய­க­ரிடம் ஒப்­ப­டைக்கும் முறையில் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் மூன்று தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை. இவை­யொரு புற­மி­ருக்க, நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும், மஹிந்த தலை­மை­யி­லான பொது எதி­ர­ணியும் இணைந்து போட்­டி­யிட வேண்­டு­மாயின் நாட்டின் பிர­தமர் பத­வி­யையும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் பத­வி­யையும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்க வேண்­டு­மென்­ப­துடன் எதிர்க்­கட்­சி தலைவர் ­ப­த­வி­யையும் பொது எதி­ர­ணி­யி­ன­ருக்கு வழங்க உடன்­பாடு கண்டால் மாத்­தி­ரமே இரு­த­ரப்­பி­னரும் இணைய முடி­யு­மென்ற பேரம் பேசும் நிலை­மை­யென ஏகப்­பட்ட குழப்­பங்­க­ளுக்கு மத்­தியில் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான முதல் கட்ட அறி­வித்தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதன் பிர­காரம் 341 உள்­ளூ­ராட்சி சபை­களில் 93 சபை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்கல் அதா­வது சட்­ட­சிக்­க­லுக்கு உட்­ப­டாத, 93 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான வேட்பு மனு­தாக்கல் எதிர்­வரும் டிசம்பர் 11 ஆம் திகதி முதல்14 ஆம் திகதி நண்­பகல் 12 மணி­வரை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­மென உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இதனைவிட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுக்கள் வாபஸ் பெறப் பட்டுள்ளமையால் சகல சபைகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கான ஏது நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

நடை­பெ­ற­வுள்ள தேர்­த­லா­னது பல குழப்­பங்­க­ளையும், நெருக்­க­டி­க­ளையும் கொண்­ட­தாக இருக்­கி­றது என்று கூறப்­ப­டு­கி­ற­போதும் சில மாற்­றங்­க­ளையும் புதிய அம்­சங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக காணப்­ப­டு­கி­றது என்ற விட­யத்தின் மீது கவ­னத்தைக் கொண்­டுள்­ளது.

கலப்­பு­மு­றை­யென்ற புதிய முறையில் நடத்­தப்­பட இருப்­பது, பெண்­களின் முக்­கி­யத்­துவம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருப்­பது. அடுத்த விடயம் தேர்தல் ஆணைக்­குழு அமைக்­கப்­பட்­டபின் நடை­பெ­று­கின்ற முத­லா­வது குட்டித் தேர்தல் என்­பது, 1977 ஆம் ஆண்டு தேர்­த­லுக்குப் பின் 1978 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட விகி­தா­சார தேர்தல் முறையில் விகி­தா­சார வாக்­க­ளிப்பு, தேர்தல் மாவட்டம் விருப்­பு­வாக்கு போனஸ் ஆசனம், தேசி­யப்­பட்­டியல் என்ற தேர்­தல்­மு­றையில் கடந்த 29 வரு­ட­மாக ஊறிப்­போன இலங்கைப் பிர­ஜைகள் நடை­பெறப் போகின்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கலப்பு முறை­யென்ற புதி­ய­தொரு தேர்­தல்­மு­றையை முதல் முதல் சந்­திக்கப் போகி­றார்கள். வாக்­க­ளிக்­கவும் ஆயத்­த­மாகி வரு­கி­றார்கள்.

பழைய விகி­தா­சா­ரத்­தாயின் மடி­யி­லி­ருந்து பிறந்த கலப்­பு­முறைக் குழந்­தை­யா­கக்­கூட இதைப் பார்க்­க­மு­டியும். இங்கு கலப்­பு­மு­றை­யென்­பது எதை அர்த்­தப்­ப­டுத்­து­கின்­ற­தென்றால் உள்­ளூ­ராட்சி முறையில் வட்­டாரத் தேர்தல் முறை­யையும், விகி­தா­சார தேர்தல் முறையும் கலந்த ஒரு புதிய வடி­வ­மாகும்.

இதன் பிர­காரம் உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்­றுக்கு வட்­டா­ரத்­தி­லி­ருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்ற உறுப்­பி­னர்­களும் வரு­வார்கள். அதே­வேளை, விகி­தா­சா­ரப்­பட்­டியல் மூலம் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்ற குறிப்­பிட்ட எண்­ணிக்கை கொண்ட உறுப்­பி­னர்­களும் குறித்த சபைக்கு தெரிவு செய்­யப்­ப­டுவர். உதா­ர­ண­மாக திரு­கோ­ண­மலை நக­ர­ச­பைக்கு தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள மொத்த உறுப்­பி­னர்கள் தொகை 23 ஆயின் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து 14, உறுப்­பி­னர்­களும், விகி­தா­சார முறையில் 9 உறுப்­பி­னர்­களும் தெரிவு செய்­யப்­ப­டுவர்.

புதிய தேர்தல் முறை­யின்­படி உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வட்­டார எல்லை நிர்­ண­யங்கள் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஒவ்­வொரு வட்­டா­ரத்­தி­லி­ருந்தும் அதி­கூ­டிய வாக்குப் பெற்ற ஒருவர் உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­ப­டுவர். சில உள்­ளூ­ராட்சி சபை­களின் வட்­டா­ரங்கள், இரட்டை உறுப்­பினர் வட்­டாரம் மூன்று உறுப்­பினர் வட்­டா­ர­மென தேவை கருதி அமைக்­கப்­ப­டலாம்.

உதா­ர­ண­மாக திரு­கோ­ண­மலை நக­ர­ச­பை­யையும் கொழும்பு மாந­கர சபை­யையும் எடுத்­துக்­கொள்­வோ­மாயின் திரு­கோ­ண­மலை நக­ர­ச­பைக்­கென 11 வட்­டா­ரங்கள் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதில் மூன்று வட்­டா­ரங்கள் இரட்டை உறுப்­பினர் கொண்­டவை. (அன்பு வழி­புரம், அப­ய­புரம், முரு­கா­புரி. இதன்­பி­ர­காரம் 11 வட்­டா­ரங்­களில் 8 வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தனித்­தனி அங்­கத்­த­வ­ராக 8 உறுப்­பி­னர்­களும் மூன்று வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து இரு உறுப்­பினர் வீதம் 6 உறுப்­பி­னர்­களும் (8+6=14) தெரிவு செய்­யப்­ப­டுவர்.

கொழும்பு மாந­க­ர­ச­பையைப் பொறுத்­த­வரை ஒரு­வட்­டா­ரத்தில் மூவர் தெரிவு செய்­யப்­படக் கூடிய வகையில் மூன்று வட்­டா­ரங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த தேர்­தலில் இன்­னொரு அம்சம் என்­ன­வெனில், ஒரு வேட்பு மனுப்­பத்­தி­ரத்தில் இரண்டு பகு­தி­க­ளாக தாக்கல் செய்­யப்­பட வேண்டும். ஒரு பத்­தி­ரத்தில் இரு பிரிவுப் படி­வங்கள் காணப்­படும்.

முத­லா­வது பகு­தி­யா­னது வட்­டார ரீதி­யாக போட்­டி­யி­டு­கின்ற வேட்­பா­ளர்­க­ளுக்­கு­ரி­யது. இது 60 வீதத்­தைக்­கொண்­டி­ருக்கும். விகி­தா­சா­ர­மு­றையில் 40 வீத வேட்­பா­ளர்கள் இரண்­டா­வது படி­வத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஏலவே குறிப்­பிட்­ட­துபோல் திரு­மலை நக­ர­ச­பையின் விகி­தா­சா­ரப்­பட்­டியல் 9 ஆகும். இதில் இன்­னு­மொரு விடயம் அவ­தா­னிக்­கப்­பட வேண்டும்.

விகி­தா­சாரப் பட்­டி­ய­லைப் பூர­ணப்­ப­டுத்­து­கிற போது ஒதுக்­கப்­பட்ட விகி­தா­சார உறுப்­பி­னர்­களை விட, 3 பெயர்கள் மேல­தி­க­மாக சேர்க்­கப்­பட வேண்டும். உதா­ர­ண­மாக திரு­கோ­ண­மலை நக­ர­ச­பையின் விகி­தா­சாரப் பட்­டி­ய­லான 40 வீதம் 9 பேராயின் இரண்­டா­வது விகி­தா­சாரப் படி­வத்தில் 12 பேரின் பெயர்கள் சேர்க்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு 44 பேர் விகி­தா­சார அடிப்­ப­டையில் தெரிவு செய்­யப்­பட வேண்­டு­மாயின் விகி­தா­சாரப் படி­வத்தில் 47 பேரின் பெயர்கள் சேர்த்துக் கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும்.

வியாக்­கி­யா­னப்­ப­டுத்திக் கூறு­வ­தாக இருந்தால் கலப்­பு­முறைத் தேர்­தலில் 60 வீதம் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்தும் 40 வீதம் விகி­தா­சார முறை­யிலும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

புதிய தேர்தல் முறையின் இன்­னொரு விசேட அம்­ச­மாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பது, பெண் வேட்­பா­ளர்கள் என்ற விட­ய­மாகும். இது இலங்கைத் தேர்தல் முறையில் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்த அர­சியல் மாற்­ற­மாக பார்க்­கப்­ப­டு­கி­றது. இலங்கைப் பாரா­ளு­மன்ற வர­லாற்­றி­லும்­சரி, உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடை­மு­றை­யிலும் சரி பெண்­களின் அர­சியல் பங்­கெ­டுப்பு என்­பது போது­மா­ன­தாக இருக்­க­வில்­லை­யென்ற விமர்­ச­னமும் குற்­றச்­சாட்­டு­களும் நீண்­ட­கா­ல­மா­கவே இருந்து வந்­துள்­ளது. வெறும் போலித்­தனம் கொண்ட பட்­டி­யல்­களால் பெண்கள் வேட்­பா­ளர்­க­ளாக நிறுத்­தப்­பட்­ட­போதும் அர்த்த வகைப்­பட்ட வகை­யிலோ அல்­லது அறிவு ஆளு­மை­மிக்க வேட்­பா­ளர்­க­ளாக அவர்கள் கட்­சி­க­ளாலோ அல்­லது தலை­வர்­க­ளாலோ நிறுத்­தப்­ப­ட­வில்­லை­யென்­ப­தே­யுண்மை. குறித்த வீதத்தை சேர்ந்த பெண் வேட்­பா­ளர்கள் இளை­ஞர்கள் பட்­டி­யலில் இடம்­பெற வேண்­டு­மென்ற சம்­பி­ர­தா­யத்­துக்கு அமை­வாக போலி­யாக அவர்கள் நிரப்­பப்­பட்­டார்­களே தவிர, அவர்­க­ளுக்­கு­ரிய முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­ட­வில்லை.

இருந்த போதி­லும் சில அதி­ச­ய­மான ஆளு­மைகள் பெண்­களில் உரு­வாகி இலங்கை அர­சி­ய­லுக்கு பங்­க­ளிப்பு செய்­துள்­ளார்கள் என்­ப­தற்கு முன்னாள் பிர­தமர் ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க, சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க போன்­ற­வர்­களை உதா­ர­ண­மாக கூறலாம்.

இதை மாற்­றி­ய­மைக்கும் வகை­யி­லேயே புதிய சட்­ட­மூ­லத்­துக்கு அமை­வாக, ஒரு கட்சி அல்­லது சுயேட்­சைக்­குழு சார்பில் இரண்டு பகு­தி­களைக் கொண்ட உள்­ளூ­ராட்சி வேட்பு மனுப்­பத்­தி­ரத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்­டிய பெண் வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை வரை­யறை செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­கையில் பார்ப்பின் வட்­டா­ர­மு­றையில் வேட்பு மனு­தாக்கல் செய்­யப்­ப­டும்­போது ஒரு உள்­ளூ­ராட்சி சபையின் மொத்த உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கையில்10 வீத­மா­ன­வர்கள் பெண் வேட்­பா­ள­ராக இருக்க வேண்டும். அதேபோல் விகி­தா­சார முறையில் கள­மி­றக்­கப்­படும் வேட்­பா­ளர்­களில் 50 சதவீ­த­மா­ன­வர்கள் பெண்­க­ளாக இருக்க வேண்டும். உதா­ர­ண­மாக திருகோ­ண­மலை நகர சபையின் மொத்த உறுப்­பி­னர்கள் 23 ஆயின் அதில்10 வீத­மா­ன­வர்கள் சுமார் மூன்று பேர் வட்­டாரப் பட்­டி­ய­லிலும் அதே­வேளை விகி­தா­சா­ரத்தில் 9 பேர் ஆயின் விகி­தா­சா­ரப்­பட்­டி­யலில் 50 வீத­மானோர் 5 பேர் பெண்­க­ளாக இருக்க வேண்டும். இதன் பிர­காரம் திரு­கோ­ண­மலை நகர சபை உறுப்­பி­னர்கள் 23 பேரில் 8 பேர் பெண்­க­ளாக இருப்பர்.

தேர்தல் ஆணைக்­குழு அமைக்­கப்­பட்டு சுமார் இரண்டு வரு­டங்­க­ளா­கிய நிலையில், ஆணைக்­குழு நடத்­தப்­போ­கின்ற முத­லா­வது கலப்­பு­முறைத் தேர்தல் இது. மக்கள் புது அனு­ப­வங்­களை பெறப்­போ­கிற வாக்­க­ளிப்பு முறை­யாக இது இருக்­கப்­போ­கி­றது. அது­வு­மன்றி கட்­சிகள் கட்டுப் பணம் செலுத்தும் அவ­சியம் உண்­டாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. விருப்­பு­வாக்கு முறைக்கு ஆப்பு வைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு புதிய தேர்தல் முறை­யொன்­றின்கீழ் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சித் தேர்­தலை அனு­ப­வ­மாகக் கொண்டு எதிர்­வரும் காலங்­களில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் ஆகி­ய­வற்றை நடத்­து­வ­தற்­கான ஒரு பரீட்­சார்த்­த­மான குட்டித் தேர்­த­லாக உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­போதும் இந்த தேர்­த­லினால் உண்­டா­கப்­போ­கின்ற அர­சியல் மாற்­றங்கள், கட்­சி­களின் தந்­தி­ரோ­பா­யங்கள், சாது­ரி­யங்கள் என்­ப­வற்­றிலும் மாற்றம் ஏற்­பட இட­முண்டு என்ற கருத்தை யாரும் மறு­த­லிக்க முடி­யாது.

ஏலவே அர­சியல் தீர்­வொன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்­குமுன் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­து­வது உசி­த­மில்­லாத செயல். சில சந்­தர்ப்­பங்­களில் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஆளும் கட்சி பலம் இழக்­கு­மாயின் எதி­ரணி பலம் பெற்­று­விடும். இவ்­வா­றான எதிர் நிலை­யொன்று உரு­வா­கு­மாயின் அர­சியல் தீர்வு விட­யத்தில் சவால்­களும், குந்­த­கங்­களும் ஏற்­பட்டு விடு­மென்ற அபிப்­பி­ரா­யத்தை தமிழ் தரப்­பினர் கொண்­டி­ருந்­தார்கள். இதன் கார­ண­மாக அர­சாங்கம் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­தாமல் காலங்­க­டத்­து­வ­தற்கு தமிழ்த்­த­ரப்­பி­னரும் பின்­ன­ணியில் உத­வி­வ­ரு­கின்­றார்கள் என்ற கருத்தும் சிலரால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

எல்லை நிர்­ண­யத்தில் தவறு இருக்­கி­றது, வர்த்­த­மானி அறி­வித்­தலில் தவறு இருக்­கி­றது. சிறு­கட்­சிகள் சிறு­பான்மை கட்­சிகள் எதிர்ப்பு தெரி­விக்­கின்­றன என்ற கார­ணங்­களை முன்­வைத்து தேர்­தலை நடத்­தா­மல்­ விடப்பார்க்­கி­றார்கள். எல்லை நிர்­ண­யத்தில் தவறு இருக்­கி­றது. உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் நிர்­ணயம் செய்து கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 17 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு இடைக்­காலத் தடை விதிக்­கும்­படி தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் பின்­ன­ணியில் அர­சாங்­க­மே­யுள்­ளது. காரணம் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்­கத்­துக்கு உடன்­பா­டில்­லை­யென்ற விமர்­ச­னங்கள் எல்லாம் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும், நாட்­டி­லுள்ள 93 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அறி­வித்தல் விடுக்­கப்­பட்டு, கட்­சிகள் தமது வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­திலும் கட்­டுப்­பணம் செலுத்­து­வ­திலும் பிர­சா­ரங்­களை மேற்­கொள்­வ­திலும் மும்­முரம் காட்டி வரு­வதைக் காணு­கின்றோம்.

பிர­தேச ரீதி­யா­கவும் தேசிய ரீதி­யா­கவும் கட்­சி­க­ளுக்­கி­டையே, ஒப்­பந்­தங்கள், கூட்­டுச்­சேர்­வுகள், ஆச­னப்­ப­கிர்­வுகள் என ஏகப்­பட்ட விட­யங்கள் அவ­சரம் அவ­ச­ர­மாக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. இவ்­வா­றான அவ­ச­ர­நி­லை­யில்தான் நாட்டில் இரண்­டொரு முக்­கி­ய­மான நிகழ்­வுகள் அல்­லது நகர்­வுகள் பற்றி அதி­க­மாக பேசப்­ப­டு­கி­ன்றன.

தேசிய அளவில் நடை­பெறும் நகர்­வாக, மைத்­திரி அணி­யையும் மஹிந்த அணி­யையும் இணைத்து தேர்­தலில் களம் இறக்கும் முயற்சி. இரண்­டா­வது விடயம். பிர­தேச அளவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அணிக்குள் வட­கி­ழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் வர­த­ராஜப் பெருமாள் தலை­மை­யி­லான பத்­ம­நாபா ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்­பினர் புரிந்­து­ணர்வு அடிப்­ப­டையில் இணை­யலாம் என்ற வதந்­தி­களும் செய்­தி­க­ளாக கசிந்து கொண்­டி­ருக்­கி­றது.

இவ்­வி­ரண்டு நகர்­வுகள் தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் விர­வி­வ­ரு­கிற போதும், மஹிந்த தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு அந்த நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொண்டு மைத்­திரி அணி­யினர் மஹிந்த அணி­யி­ன­ருடன் இணை­வார்கள் என்ற எதிர்­பார்ப்பு பூஜ்­ஜியம் பெறு­ம­தி­யா­கவே அமையும்.

அவ்­வாறு இணை­கின்ற நிலை­யொன்று உரு­வா­கு­மாக இருந்தால் தேசிய ரீதியில் இரண்டு விபத்­துகள் ஏற்­படும். ஒன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்த தேசிய அர­சாங்­கத்­துக்கு சாவு மணி அடிக்­கப்­படும். இரண்­டா­வது விடயம் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு என்­பது சாம்பல் மேட்டு கன­வு­க­ளா­கவே மாறி­விடும்.

இன்­னு­மொ­ரு­புறம் நோக்கின் மஹிந்த அணியும் மைத்­திரி அணியும் இணையும் சூழ்­நி­லை­யொன்று உரு­வாக்­கப்­ப­டு­மானால் த.தே.கூ. அமைப்போ, அல்­லது முஸ்லிம் காங்­கிரஸ் ஏனைய சிறு­பான்­மைக்­கட்­சிகள் அக்­கூட்­டுக்கு ஆத­ரவு நல்­க மாட்­டார்கள். அவ்­வாறு ஆத­ரவு வழங்கும் கூட்­டா­கவும் அது இருக்­கப்­போ­வ­தில்லை. இன்­னொரு திசையில் பார்ப்­போ­மானால், மஹிந்த அணியும் மைத்­திரி அணியும் இணையும் பட்­சத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி தன்னை சுதா­க­ரிக்க வேண்­டி­வரும். அவ்­வா­றான ஒரு சூழ்­நி­லையில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி தலை­மையில் த.தே.கூ. அமைப்பு, முஸ்லிம் காங்­கிரஸ், ஏனைய மலை­யக மற்றும் சிறு­பான்­மைக்­கட்­சிகள் ஒன்று இணைந்து ஒரு கூட்டாட்சியை அமைக்க முடியுமா என்பதும் விவாதத்துக்கும் தர்க்கத்திற்குமுரிய விவகாரமாகவே அமையும்.

பிரதேச விவகாரங்களைப் பார்ப்பின் வடகிழக்கில் பலம் பொருந்திய மக்கள் வாக்குப்பலம் கொண்ட கட்சியாக இருப்

பது த.தே.கூ. அமைப்பு அதை நீக்கி விட்டு இன்னொரு கட்சிக்கோ அல் லது அமைப்புக்கோ மக்கள் ஆதரவை வழங்கி பாரிய அளவில் வெற்றிபெற வைப்பார்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது. இது கடந்தகால அனுபவங் களின் ஒட்டுமொத்தமான விடை. இவ்வாறு இருக்கும்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினை இத்தேர்தலில் பலவீனப்படுத்த வேண்டுமென்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற செய்திகளுக்கும் குறைவில்லை.

சுயேச்சைக்குழுக்கள் என்ற வகை யில் ஒரு சாராரும், தேசியக் கட்சி களை வடகிழக்கில் பலப்படுத்த நினைக்  கும் இன்னொருசாராரும். புதிய அமைப்பு களூடாக களமிறங்க நினைக்கும் வேறு ஒரு சாராரும் என்ற வகையில் உள்ளூராட்சித் தேர்தல் இம்முறை களைகட்டும் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது.  

உதாரணமாக யாழ். மாவட்டத்தில் சாவகச்சேரி நகரசபைக்கு மட்டுமே தேர்தல் நடத்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை. இதுபோல், திருகோணமலையில் திருகோணமலை நகரசபை, கிண்ணியா நகரசபை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு.நகர் மாநகர சபை, காத்தான்குடி நகரசபை உட்பட பல பிரதேச சபைகளுக்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களில் எந்தவொரு சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்படாத நிலையில், கட்சிகள் இரண்டாம் கட்டப்போருக்குத் தயாராக வேண்டிய தேவையேற்பட்டிருந்தது. ஆனால் சகல சபைகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளமையினால் போட்டி பலமானதாகவே இருக்கப்போகின்றது.

திரு­ம­லை­நவம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-02#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.