Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய உலக ஏழு அதிசயங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உலக ஏழு அதிசயங்கள்

இந்த புதிய அதியங்கள் 2200 ஆண்டுகளுக்கு பிறது அறிவிக்க இருக்கின்றார்கள்.

இதற்காக ஏற்கனவே 21 அதிசயங்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள்.

அவற்றில் எது இடம் பிடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அறிவிக்க இருக்கும் திகதி 07.07.2007

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக அதிசயங்கள் பட்டியலில் மீண்டும் தாஜ்மகால்

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலக அதிசயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. புதிய உலக அதிசயங்களை தேர்வு செய்யும் போட்டியை சுவிட்சர்லாந்தை சேர்ந்த நியூ ஓப்பன் வேர்ல்ட் அமைப்பு அறிவித்திருந்தது. இந்த அமைப்பு கோடீஸ்வரர் பெர்னார்ட் வெப்பர் என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். கடந்த 2001ம் ஆண்டு முதல் புதிய உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்கும் ஓட்டெடுப்பு இன்டெர்நெட், தொலைபேசி. எஸ்எம்.எஸ் மூலம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நிபுணர் குழு புதிய 7 உலக அதிசயங்களை தேர்ந்தெடுத்து அறிவித்தது. உலகெங்கிலும் உள்ள 20 அதிசயங்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. கடந்த பல மாதங்களாக உலக அதிசயங்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடந்து வந்தது. இந்நிலையில் இரவுடன் வாக்கெடுப்பு முடிவடைந்தது. இதுவரை மொத்தம் 9 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 7 உலக அதிசயங்களின் பட்டியல்போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் அறிவிக்கப்பட்டது. அனைத்து இந்திய மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த தாஜ்மஹால் 7 அதிசயங்களில் ஒன்றாக இடம் பெற்றது.

தினமலர்

தாஜ்மகால் மிண்டும் வந்துவிட்டதோ அதுவும் பிரிஸ்பனில்....................எல்லாம் ஜம்முவுன் செயல் தான் :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அசத்திய 7 அதிசயங்கள்! *புதிய உலக அதிசயங்கள் அறிவிப்பு! * 3 ஆசிய சின்னங்களுக்கு பட்டியலில் இடம் * ஓட்டளிப்பில் 10 கோடி பேர் பங்கேற்பு * "ஈபிள் டவர்' தேர்வாகாததால் ஏமாற்றம்

fpn02bt3.jpg

லிஸ்பன்: உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த, புதிய 7 உலக அதிசயங்களின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இவற்றில் தாஜ்மஹால் உலக அதிசயமாக தேர்வாகியுள்ளது

போர்ச்சுக்கலில் லிஸ்பனில் உள்ள ஸ்டேடியத்தில், ஒலிம்பிக் போட்டி துவக்க விழா போல இதற்கான பிரமாண்ட விழா நடந்தது. பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, நடிகர் பென்கிங்ஸ்லி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். பாப் பாடகி ஜெனிபர் லோபஸ், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட பிற உலக அதிசயங்கள்: பெருஞ்சுவர் சீனா, பெட்ரா ஜோர் டான், கிறிஸ்து தி ரீடீமர் பிரேசில், மாச்சு பிக்சு பெரு, சிசென் இட்ஸா மெக்சிகோ மற்றும் கொலாசியம் இத்தாலி. தாஜ்மஹால் முதலில் அறிவிக்கப்பட்டாலும் இந்த அதிசயங்களுக்கு ஓட்டுகள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தவில்லை. ஆங்கில அகரவரிசைப்படியே பட்டியலிடப்பட்டுள்ளன. புதிய உலக அதிசயங்கள் இடம்பெற்றுள்ள நாடுகளில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளைப் பகிர்ந்தும் வெற்றியை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஏழு அதிசயங்களும் ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய கண்டங் களை சேர்ந்தவை. இந்தியா, ஜோர்டான் மற்றும் சீனா ஆகிய ஆசியாவை சேர்ந்த மூன்று அதிசயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நிபுணர்கள் 7 உலக அதிசயங்கள் பட்டியலை வெளியிட்டனர். அவை: 1.ஆர்டிமிடிஸ் கோயில், துருக்கி 2.தொங்கும் தோட்டம் பாபிலோன் (தற்போதைய ஈராக்) 3.கொலாஸஸ் ஆப் ரோட்ஸ், கிரீஸ் 4.ஹாலிகார்னஸஸ் மசூலியம், துருக்கி 5. அலெக் ஸாண்ட்ரியா லைட்ஹவுஸ், எகிப்து 6.கிஸா பிரமிடு எகிப்து 7.ஜீயஸ் சிலை, கிரீஸ். இந்த அதிசயங்களில் கிஸா பிரமிடு தவிர மற்றவை நிலநடுக்கத்தால் அழிந்துவிட்டன. இந்த பட்டியலுக்குப் பின் முறைப்படியாக எந்த பட்டியலும் அறிவிக்கப்படவில்லை. பல்வேறு சின்னங்கள் உலக அதிசயமாக கருதப்பட்டன. ஆனால் அவற்றுக்கு யாரும் அங்கீகாரம் தரவில்லை. பழங்கால அதிசயங்களில் பல, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்புடையதாக இல்லை. ஆகவே, தற்போது புதிய 7 உலக அதிசயங்களை கண்டறிந்து அறிவிப்பது அவசியம் ஆனது. இதற்காக சுவிட்சர்லாந்தை சேர்ந்த நியூசெவன் ஒண்டர்ஸ் நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டு முயற்சியைத் துவக்கியது. இந்நிறுவனத்தின் தலைவர் பெர்னார்டு வெபர் யுனெஸ்கோவின் முன்னாள் தலைவர். சர்வதேச அளவில் மிகச்சிறந்த இடங்களை பாரம்பரிய சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வரும் யுனெஸ்கோ நிறுவனம் உலக 7 அதிசயங்களை அறிவிப்பது பொருத்தமாக இருக்கும். புதிய 7 அதிசயங்களை அறிவிக்க பெர்னார்டு வெபருக்கு என்ன அவசியம் வந்தது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. நியூசெவன்ஒண்டர்ஸ் நிறுவனம் வர்த்த நோக்கில் செயல்படுகிறது என்றும் குற்றம் சாட் டப்பட்டது. ""யுனெஸ்கோ 660 கலாச்சார சின்னங்களையும், 166 இயற்கை சின்னங்களையும் பாதுகாத்து வருகிறது. புதிய 7 உலக அதிசய போட்டிக்கான பட்டியல் மிகச்சிறியதாகவே உள்ளது. இன்டர் நெட் மூலம் ஓட்டளிப்பது ஏற்கக்கூடியதாக இல்லை. ஒவ்வொருவரும் அறிந்த அதிசயமாக இருந்தால்தான் உலக அதிசயமாக தேர்வு செய்வதில் அர்த்தம் உள்ளது. உலகின் 7 அதியங்களை கண்டறிவது தொடர்பான எந்த திட்டமும் தற்போது யுனெஸ்கோவிடம் இல்லை,'' என்று யுனெஸ்கோ நிறுவன உயர் அதிகாரி அறிவித்துவிட்டார். நியூசெவன்ஒண்டர்ஸ் நிறுவனத்தை லாபநோக்கமற்ற நிறுவனமாக பதிவு செய்திருந்த பெர்னார்டு வெபர், இதனால் எதிர்ப்புகள் வந்த போதும், புதிய உலக அதிசயங்களை தேர்வு செய்யும் முயற்சியில் பின்வாங்க வில்லை. "உலக அதிசயங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றைப் பாதுகாக்கவும்தான் இந்த ஓட்டெடுப்பு' என்று தெரிவித்தார். "இயற்கை அதிசயங்களை அடுத்து நியூசெவன் ஒண்டர்ஸ் நிறுவனம் தேர்வு செய்து அறிவிக்கப் போவதாகவும்' அவர் நேற்று விழாவில் தெரிவித்தார்.

கடந்த 2005ம் ஆண்டில் முதல் சுற்றின் முடிவில், 77 இடங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இடம்பிடித்தது. இதையடுத்து 21 இடங்களில் ஒன்றாக தேர்வு செய்ய தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஓட்டுப்போட்டனர். ஆனால், சர்வதேச ஓட்டெடுப்பின் கணக்கில் அடுத்த சுற்றுக்கு தகுதி இழந்தது. இறுதி சுற்றுக்கு 21 அதிசயங்கள் தகுதி பெற்றன. அவை (மேலே குறிப்பிட்ட 7 அதிசயங்கள் தவிர்த்து): அக்ரபோலிஸ் கிரீஸ், அல்ஹம்ப்ரா ஸ்பெயின், அங்கோர்வாட் கம்போடியா, ஈஸ்டர் ஐலண்ட் சிலைகள் சிலி, ஈபிள் டவர் பிரான்ஸ், ஹாகியா சோபியா துருக்கி, கியோமிசு கோயில் ஜப்பான், கிரம்ளின் ரஷ்யா, நீஸ்வான்ஸ்டின் ஜெர்மனி, கிஸா பிரமடு எகிப்து, சுதந்திரதேவி சிலை அமெரிக்கா, ஸ்டோன்ஹென்ஜ் பிரிட்டன், சிட்னி ஓபரா ஹவுஸ் ஆஸ்திரேலியா மற்றும் திம்புக்து மாலி. இந்த 14 அதிசயங்களும் இறுதிப்போட்டியில் தோற்று தற்போது வெளியேறிவிட்டன. ஏழு அதிசயங்களை தேர்வு செய்ய உலகம் முழுவதும் இன்டர்நெட், தொலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலமாக ஓட்டு நடந்தது. இதில் 10 கோடிப் பேர் ஓட்டளித்தனர். என்றாலும், அதிசயங்கள் ஒவ்வொன்றும் பெற்ற ஓட்டு எண்ணிக்கை வெளியிடப் படவில்லை. நேற்று அதிகாலை முடிந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க நடிகை ஹிலாரி ஸ்வாங்க் கூறியபோது, "சர்வ தேச முடிவு ஒன்றை எடுப்ப தற்காக இவ்வளவு எண்ணிக் கையிலான மக்கள் ஓட்டளித்தது இல்லை,'' என்று கூறினார். இந்த ஏழு அதிசயங் களில் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட பாரிஸ் ஈபிள் டவர், நியூயார்க் சுதந்திர தேவி சிலை வெற்றி பெறவில்லை. காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மஹால் ஏற்கனவே உலகம் முழுவதும் அறிமுகம் ஆனது. அதன் பெருமையை உயர்த் துவதாக புதிய 7 உலக அதிசய தேர்வு அமைந்துவிட்டது.

கொலாசியம் இத்தாலி: இத்தாலியின் ரோம் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கொலாசியம், 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பிராமாண்ட அரங்காக விளங்கியது. இன்றைய விளையாட்டு ஸ்டேடியங்கள் கூட, இந்த அமைப்பிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளன. கொடிய மிருகங்களுடன் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகள், மரண தண்டனை, நாடகங்கள் இங்கு அரங்கேறியிருக்கின்றன. 157 மீட்டர் உயரம், 188 மீட்டர் நீளம் மற்றும் 156 மீட்டர் அகலம் கொண்டு நீள்வட்ட வடிவில் அமைந்துள்ளது இந்த அரங்கு. மின்னல் தாக்கியதால் இது சேதமடைந்து காணப்படுகிறது. கி.பி.,72ம் ஆண்டில் இது கட்டி முடிக்கப்பட்டது. 500 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது. சிசென் இட்ஸா மெக்சிகோ: மெக்சிகோவில் அமைந்துள்ள பாரம்பரிய வரலாற்று சின்னம்தான் சிசென் இட்ஸா. மெக்சிகோவில் மாயா நாகரி கத்தின் முக்கிய நகரமாக இது இருந்தது. பழங்கால நாகரிகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார அதிகார மையமாகவும் திகழ்ந்தது. குகல்கன் பிரமிடு என்று அழைக்கப்படும் இந்த கோயில் படிகளுடன் அமைந்துள்ள பிரமிடு போல் தோற்றமளிக்கிறது. மாயா நாகரிகத்தின் கடைசிக் கோயில் என்று அழைக்கப் படுகிறது. கி.பி.,600களில் இந்த கோயில் கட்டப்பட்டது. படையெடுப்புகளின் போது இப்பகுதி வன்முறைக்கு ஆளானது. தற்போது உலக அதிசய பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மாச்சு பிக்சு பெரு: கடலுக்கு மேலே 7,710 அடி உயரத்தில் அமைந்த மனித குடியிருப்புகள்தான் மாச்சு பிக்சு. பெரு நாட்டில் 1440ம் ஆண்டில் அப்போதைய இன்கா பேரரசின் குடியிருப்பு இது. அடுத்து நூறு ஆண்டுகளில் இது கைவிடப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக இதன் பெருமை வெளியுலகத்துக்கு தெரியவில்லை. 1911ம் ஆண்டில் அமெரிக்கர் இதை கண்டறிந்து வெளியுலகத்துக்கு தெரிவித்தார். மாச்சு பிக்சு ஒரு புதை குழி என்றும் அதனால்தான் அங்குள்ள கட்டடங்களின் கூரைகளில் தங்கம் பூசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. எதிரிகள் தாக்குதல் நடந்தால் பாதுகாப்பாக தங்கிக் கொள்ளும் இடம் என்றும் கூறப்படுகிறது. பெருஞ்சுவர் சீனா சீனப் பெருஞ்சுவர் கி.மு. 7ம் நூற்றாண்டில் துவங்கி பல நுாற்றாண்டுகளில் கட்டப்பட்டது. பல்வேறு மன்னர்கள் காலத்தில் அந்த கட்டுமானப் பணி தொடர்ந்தது. கி.பி., 16ம் நூற்றாண்டு வரை நன்கு பராமரிக்கப்பட்ட பெருமைக்கு உரியது. சீனப் பேரரசை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக கட்டப்பட்டது. மனிதன் கட்டிய கட்டடங்களில் மிக நீளமானது சீனப் பெருஞ்சுவர். 6,400 கி.மீ., நீளம் கொண்டது. விண்வெளியிலிருந்தும் இதைப் பார்க்க முடியும். பீடபூமி, மலைகள், பாலைவனங்கள் மற்றும் புல்வெளிகள் ஆகிய பகுதிகளில் இந்த சுவர் செல்கிறது. வெடிமருந்து மற்றும் விமானங்கள் வருகைக்குப் பின் இந்த சுவர் அளித்த பாதுகாப்பு முடிவுற்றது. தற்போது உலக அதிசயமாக நிலைத்து நிற்கிறது. பெட்ரா ஜோர்டான்: ஜோர்டானில் அமைந்துள்ள பாரம்பரிய சின்னம்தான் பெட்ரா. 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நெபடாயின்ஸ் என்பவர்களின் தலைநகராக விளங்கியது.அராபிய பாலைவனத்தின் முடிவுப் பகுதியிலும் சாக்கடலின் தென் பகுதியிலும் அமைந்துள்ளது. அழிந்து போன இந்நகரை 1812ம் ஆண்டு ஜோகான் பர்க்கார்ட் எனும் ஐரோப்பியர் கண்டறிந்தார். நீர்வள நிர்வாகத்தில் நெபடாயின்ஸ் நாட்டினர் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பதற்கு பெட்ரா மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. குடிநீர் கால்வாய்கள் மற்றும் நீர்க்குளங்களை அமைத்தனர். திடீர் வெள்ளங்களையும் கட்டுப்படுத்தினர். இங்குள்ள 137 மீட்டர் உயரமுள்ள அதிர்ஷ்ட கோயில் மத்திய கிழக்குப் பகுதியின் கலாசாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. கிறிஸ்து தி ரீடீமர் பிரேசில் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மலையின் மீது அமைந்துள்ள கிறிஸ்து சிலை 105 அடி உயரம், 700 டன் எடை கொண்டது. 1931ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1850களில் இந்த திட்டம் பரிசீலிக்கப்பட்டு வந்தாலும், 1921ம் ஆண்டு ஆர்க் கிடயோசிஸ் எனும் நிறுவனம் திரட்டிய நிதியால் கட்டப்பட்டது. கான்கிரீட்டால் ஆன இந்த சிலையை உருவாக்க 5 ஆண்டுகள் ஆனது. டிசில்வா கோஸ்டா என்பவர் வடிவமைத்தார். கடந்த 2003ம் ஆண்டிலிருந்து இங்கு எஸ்கலேட்டர்கள் செயல்படுகின்றன. இதனால் 220 படி கள் ஏறிச் செல்லாமலேயே சிலையை அருகிலிருந்து பார்க்க முடியும்.

தாஜ்மஹால் இந்தியா முகலாய சக்கரவர்த்தி ஷாஜகான் தனது ஆருயிர் மனைவி மும்தாஜுக்காக கட்டியதுதான் தாஜ்மஹால். உஸ்தாத் அகமது லகூரி என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1632ல் துவங்கி 1648ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. முகலாய கட்டடக் கலையின் நுட்பத் துக்கு இது மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங் குகிறது. பெர்சியா, துருக்கி, இந்திய மற்றும் இஸ் லாமிய கட்டட அடிப் படைகளை பின் பற்றி தாஜ் மஹால் திட் டமிடப் பட் டது. "உலக பாரம் பரியத்தின் உன்னதமான படைப்பு' என்று யுனெஸ் கோ தாஜ் மஹாலை பாராட்டியுள்ளது.காதலின் சின்ன மாக உலகம் முழு வதும் போற்றப் படும் தாஜ் மஹாலின் பெரு மையை புதிய உலக அதிசய தேர்வு மேலும் மெருகூட்ட செய் து விட்டது. 8வது அதிசயம்! பழங்கால 7 அதிசயங்களில் தற்போதும் நல்ல நிலையில் உள்ள எகிப்தின் கிஸா பிரமிடு புதிய 7 அதிசயங்களில் இடம் பெற வில்லை. இதனால் அதன் தற்போதைய நிலை என்ன என்பது அந்நாட்டினருக்கு தெளிவாக வில்லை. ஆகவே அதை எட்டா வது அதிசயமாக அவர்கள் கருதுகிறார்கள். பிரமிடு இடம் பெறாதது அந் நாட்டினரை வருத்தத் திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஈபிள் டவர் தேர்வாகாததால் பிரான்ஸ் நாட்டினர் கவலையடைந்துள்ளனர்.

நன்றி - தினமலர்

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அதிக மக்கள் தொகை உடையவர்களும், கணனியினை அதிகளவில் உபயோகிப்பவர்களுமான இந்தியர்கள், சீனர்களின் வாக்குகளினால் தாஜ்மகால், சீனாப் பெருஞ்சுவர் போன்றவற்றுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.

இந்த உலகமே ஒரு அதிசயம்... அதுக்கில இப்படியும் ஒரு பிரிவினை வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

புதிய 7 உலக அதிசயங்கள்

டுளைடிழநெ இல் ரநௌஉழ அமைப்பு மூலம் சனிக்கிழமை 07.07.2007 அன்று ஏழு உலக அதிசயங்கள் தெரிந்து எடுக்கபட்டுள்ளன. 21 உலக அதிசயங்கள் தெரிந்து எடுக்கப்பட்டு அதிலிருந்து ஏழு அதிசயங்கள் தெரிந்து எடுக்கபபட்டுள்ளன. முன்பு உலக அதிசயங்களாக இருந்த இத்திலியில் உள்ள சாய்ந்தகோபுரம்இ பிரான்ஸ்சில் உள்ள நுகைகநட கோபுரம்இ இராக்கில் உள்ள பபிலோன் தோட்டம் எகிப்தில் உள்ள பிரமிட் ஆகியன நீக்கபட்டுள்ளன. இந்த அதிசயங்களை தேர்ந்து எடுக்கப்பட்ட திகதியும் அதிசயம் தான் அதாவது ஏழாம்திகதி ஏழாம் மாதம் இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு (.07.07.07) என்பதாகும்.

உலகம் முழுவதிலும் இருந்து 10 கோடி மக்களின் பேராதரவுடன் புதிய 7 உலக அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

1. சீனப் பெருஞ்சுவர்: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிஇ படிப்படியாகக் கட்டி முடிக்கப்பட்டஇ உலகின் மிகநீண்ட மதில்சுவர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருந்து மத்திய ஆசியா வரை அமைந்துள்ளது. உலக பாரம்பய மையமாக யுனெஸ்கோவால் 1986-ல் தேர்வு செய்யப்பட்டது. இப்போது வாக்கெடுப்பு மூலம் பெருந்திரளான மக்களின் ஆதரவைப் பெற்று 7 அதிசயங்களில் இடம்பெற்றுள்ளது.

2. ஜோர்டானின் பெத்ரா: ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து தெற்காக 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெத்ரா. இளஞ்சிவப்பு நிறத்தில் காண்போரை வியப்படையச் செய்யும் வகையில் மலையைச் செதுக்கி உருவாக்கப்பட்ட வழிபாட்டிடங்களும்இ கோபுரங்களும் அமைந்த புராதன சின்னம் இது. வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன நகரமான பெத்ராஇ இந்தியாஇ சீனா மற்றும் தெற்கு அரேபியாவைஇ எகிப்துஇ சியாஇ கிரீஸ் மற்றும் ரோம் நகரத்துடன் இணைத்தஇ வர்த்தக மையமாகத் திகழ்ந்த நகரம்.

3. பிரேசிலின் யோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்து ரட்சகர் சிலை: 38 மீட்டர் உயரமும்இ 700 எடையும் கொண்ட பிரமாண்டமான இயேசு கிறிஸ்து சிலை இது. ஆண்டுக்கு 18 லட்சம் பேர் வந்து செல்லும் சுற்றுலாத்தலம். பிரேசிலின் கார்கோவடோ மலையில் 710 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிரேசிலின் அடையாளமாகத் திகழும் இந்தச் சிலை 1931-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

4. பெரு நாட்டின் “மச்சுபிச்சு’ கட்டுமானம்: இன்கா நாககம் உச்சத்தில் இருந்தபோது உருவாக்கப்பட்ட அற்புத நகரம். கடல்மட்டத்தில் இருந்து 2430 மீட்டர் உயரத்தில்இ மலைக்குன்றுகளின் மீது உருவாக்கப்பட்ட பிரமாண்ட நகரம். பெரு நாட்டின் உருபம்பா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த புராதனக் கட்டமைப்பைக் காணும்போது வியப்பால் விழிகள் விவதைத் தடுக்க முடியாது.

5. மெக்சிக்கோவில் உள்ள மாயர்களின் நகரமான சிச்சன் இட்சா: மெக்சிக்கோவில் உள்ள யுட்டகன் தீபகற்பத்தில் கி.பி. 500 வாக்கில் கட்டப்பட்ட நகரம் சிச்சன் இட்சா. மிகப் பிரமாண்டமான பிரமிடுஇ வானியல் ஆய்வு மையம்இ போர்வீரர்கள் கோயில் போன்ற புராதன கட்டுமானங்கள் உள்ளன. மாயர்களின் நகரம் இது.

6. ரோம் நகல் உள்ள கொலாசியம்: 50 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க கட்டப்பட்ட அரங்கு. ரோமப் பேரரசின் பெருமையைப் பறைசாற்றுவது. கி.பி. 80-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரங்கு 500 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்தது. “ஆம்பிதியேட்டர்’ என அழைக்கப்படும் “வட்ட அரங்கு’ வகையைச் சேர்ந்தது இது.

7. தாஜ்மகால்: முகலாய அரசன் ஷாஜகானால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. உலகெங்கும் காதல் சின்னமாகப் போற்றப்படுகிறது. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சனிக்கிழமை நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில் 7 உலக அதிசயங்கள் அறிவிக்கப்பட்டன. தாஜ்மகாலும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்ததைஇ இந்தி நடிகை பிபாசா பாசுஇ அட்டன்பரோ இயக்கிய காந்தி படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி ஆகியோர் மேடையில் அறிவித்தனர்.

இந்த உலகமே ஒரு அதிசயம்... அதுக்கில இப்படியும் ஒரு பிரிவினை வேண்டுமா?

இதை நீங்க தத்துவ பகுதியில் போட்டிருக்கலாம் பாருங்கோ..........

:huh: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய உலக அதிசயங்களும் ஏமாளி இந்தியர்களும்

புதிய உலக அதிசயங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு சுவிட்சர்லாந்தை ஒரு தனியார் நிறுவனம் new7wonders கிளம்பி இருக்கு. அவங்க யாரு அப்படிங்கறத்துக்கு சரியான விளக்கம் இல்ல (ஆனால் அவர்கள் தாங்கள் ஒரு profitable organisation என்பதை தெளிவாக கூறி இருக்கின்றனர்.). எந்த நாட்டின் அரசாவது இவர்களை அங்கீகரித்து இருக்காங்களா? அப்படி எதுவும் தெரியலை. ஜ.நாவும் இவங்களை அங்கீகரிச்ச மாதிரி தெரியலை. ஆனாலும் உலக அதிசியங்களை தேர்ந்து எடுக்குறேன் அப்படின்னு ஒரு ஏகப்பட்ட சுற்று தேர்தலை நடத்தி பொதுமக்களிடம் இருந்து ஒரு கணிசமான தொகையை கறந்துவிட்டாங்க. 1999 ஆம் வருசம் ஆரம்பித்த இந்த சுரண்டல் நேற்று முடிந்தது.

இவர்களின் தேர்தலை முறையை பாருங்களேன். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் உலக அதிசயங்களாக பரிந்துரை செய்யலாம். அப்புறம் ஓட்டெடுப்பின் வாயிலாக உலக அதிசயங்களை தேர்ந்து எடுப்பதாக சொல்லி இருக்கின்றனர். ஆனால் ஒட்டெடுப்பு முறையில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒட்டளிக்க எவ்விதமான தடையும் இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒட்டுக்களை அளிக்க வேண்டுமானால் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி வசதிகளை உபயோகப்படுத்துங்கள் என்று அவர்களின் தளத்திலேயே பரிந்துரை செய்துள்ளனர். ஏனெனில் நீங்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி வழியாக ஒவ்வொரு முறையும் ஓட்டளிக்கும் பொழுதும் இவர்களுக்கு ஒரு கணிசமான தொகை செல்கிறது இதன் மூலம் இந்நிறுவனம் பல கோடி வருவாயை ஈட்டி உள்ளது.

இந்த போட்டியின் முடிவுகளை இவர்கள் நேற்று அவர்களின் இணைய தளத்தில் அறிவித்து இருக்கின்றனர், மொத்தம் கிடைத்த ஓட்டுக்கள் எத்தனை அது போன்ற எந்த ஒரு விபரமும் இல்லை. அதே போல வெற்றி பெற்ற இடங்களை பாருங்கள் பெரும்பாலும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள இடங்களே (மொத்தம் 7 அதிசயங்களில் 3 தென் அமெரிக்க நாட்டில் உள்ளவை). ஏனெனில் அந்த நாடுகளில் உள்ளவர்கள் தான் அதிகபடியாக ஒட்டளித்து உள்ளனர்.

இந்த நிறுவனத்துக்கு ஜக்கிய நாடுகளின் (பொதுவாக இந்த உலகத்தின் பழமையான இடங்களை அங்கீகாரம் செய்வது ஜக்கிய நாடுகளின் ஒரு உபநிறுவனமான UNESCO - United Nations Education, Scienticfic and Cultural Organisation ஆகும்.) அங்கீகாரமோ இல்லை உலக நாடுகளின் அங்கீகாரமோ இல்லை அப்படி இருந்த பொழுதும் எப்படி இந்த ஊடகங்கள் அவங்க போட்ட ஜந்து,பத்து பிச்சைக்கு ஆசைப்பட்டு இதை இப்படி தாங்கிப்பிடிக்கின்றன என்று தெரியவில்லை? உள்ளூர் ஊடகம் தினமலர் முதல் கொண்டு சர்வதேச உடகங்கள் வரை இடத்துக்கு தகுந்த மாதிரி உங்க ஊருக்கு ஓட்டு போடுங்க அப்படின்னு மக்களை உணர்வுப்பூர்வமாக ஏமாற்றி புண்ணியம் தேடிக்கொண்டது. சில பொட்டி தட்டும் கலைஞர்களும் உணர்ச்சி பெருமும் இமெயில் மூலமாக இதை பலருக்கு கொண்டு சென்று புண்ணியம் தேடிக்கொண்டனர்.

இதுல ஒரு காமெடி என்னானா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் முதல் 200 இடங்களில் வந்ததும். அதுக்கு தமிழக அரசே கோவிலுக்குள் ஓட்டளிக்க வசதி செய்து கொடுத்தது தான். மீனாட்சி அம்மன் கோவில் எந்த வகையில் architectural acheivement என்று தெரியவில்லை. அப்படி பார்த்தால் தஞ்சை பெரிய கோவில், இராமேஸ்வரம் கோவில் போன்றவை ஏன் தேர்ந்தெடுக்க வில்லை? மதுரை மீனாட்சி கோவிலில் கூட்டம் அதிகமாக வருகிறது நல்லா கல்லா கட்டலாம் என்பதாலா?

இதுல செம காமெடி எகிப்திய பிரமீடுகள் 7 உலக அதிசயங்களுல் இல்லையாம். வாக்கெடுப்பு முடிந்த உடன் கிரேக்க பிரமீடுகள் முதல் 7 இடங்களில் இடம்பெறாதது கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. அதைப்பற்றி கேட்ட பொழுது அந்த நிறுவனத்தின் செய்தியாளர் சொல்கிறார் "We absolutely had no problem with this," Viering told the AP. As of Saturday, there will be eight world wonders including the Pyramids of Giza, she added. அடடா இது தெரிஞ்சி இருந்தா நாலு லாரியில் ஆளுங்களை கூட்டிட்டு போயி அவனுங்களை மிரட்டி எங்க தாத்தாவோட பழைய வீட்டையும் இதுல சேர்த்து இருப்பேனே.

அடுத்தா இவனுங்க உலகத்தின் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட இடங்களுக்கான தேர்தலை துவக்கி இருக்கிறார்கள். எவனாவது ஒரு புண்ணியவான் கூவம் நதியையும் அதன் நதிக்கரையையும் அதுல சேர்த்துவிட உள்ளூர் ஊடகங்களும் அதை ஊதிவிடும், வெட்டியா இருக்கும் பொட்டி தட்டும் கோஷ்டி அதுக்கும் நெஞ்சை நக்குற மாதிரி ஒரு இமெயிலை ரெடி பண்ணி fwd பண்ணும். தேர்தலுக்கே ஓட்டு போடாத உண்மை இந்தியர்கள் அதையும் உண்மையென நம்பி அதுக்கு கைகாசு போட்டு ஓட்டுப்போடுவான் நல்லா இருங்கடா.

  • கருத்துக்கள உறவுகள்

உலக அதிசயங்களில் தாஜ்மஹால் முதலிடம்

ஞாயிறுஇ 8 ஜூலை 2007( 11:35 ஐளுவு )

அதிசயங்களுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியாவின் தாஜ்மகால் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

புத்தாயிரம் ஆண்டில் 7வது ஆண்டான இவ்வாண்டில் 7வது மாதமான ஜூலையில்இ 7வது நாளான இன்று அதாவது 07.07.07 என்று வரும் இந்த தேதியில் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் புதிய 7 உலக அதிசயங்கள் எது எது என்கின்ற பட்டியல் வெளியிடப்பட்டது.

உலகம் முழுவதிலும் உள்ள ஆர்வலர்கள் தொலைபேசிஇ செல்பேசியில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.இ இணைய தளம் மூலமாக வாக்களித்தல் என இந்த தேர்தலில் அனைவரும் ஆர்வமாக வாக்களித்தனர். தாஜ்மகாலுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான இந்தியர்களும்இ பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தாஜ்மஹாலின் ரசிகர்களும் வாக்களித்தனர்.

வாக்களிப்பு மூலம் உலக அதிசயங்களை நிர்ணயிக்க முடிவு செய்து அதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினத்துடன் முடிந்துவிட்டது. முடிவு நேற்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வெளியிடப்பட்டது.

நேற்று அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பில்இ அதிக அளவில் வாக்குகளைப் பெற்ற இந்தியாவின் தாஜ்மகால்இ உலகின் புதிய அதிசயங்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் இருந்தே உலக அதிசயங்கள் பட்டியலில் இருந்து வரும் எகிப்து பிரமிடுஇ வாக்கெடுப்பு அடிப்படையில் இல்லாமல் சிறப்பு அந்தஸ்தில் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாக ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டது.

தாஜ்மகால்....

வாக்கப்பதிவில் வெற்றி பெற்றிருந்தாலும்இ பெறாவிட்டாலும் தாஜ்மஹால் எல்லோர் மனதையும் வெற்றி கொண்டிருப்பதை எவராலும்இ எப்போதும் மறுக்க முடியாது.

ஒரு பேரரசன்இ அதுவும் பல மனைவிகளைக் கட்டிக்கொள்ளலாம்இ பல பெண்களையும் வைத்துக் கொள்ளலாம் என்றவொரு தனித்த மத இன வழி பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்இ தனது மனைவியிடம் கொண்ட ஆழ்ந்த மாறாக் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒரு மாளிகையைக் கட்டியிருக்கலாம். ஒரு தோட்டத்தை அமைத்திருக்கலாம்இ அழகிய சிலையை வடித்திருக்கலாம்இ ஏன் அருமை உருதி மொழியில் கவிதையைக் கூட படைத்திருக்கலாம். ஆனால் மொகலாயப் பேரரசன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் மீது கொண்ட காதலைஇ அந்தக் காதலின் அனைத்து பரிமாணத்தையும் உணர்வோடு ஒன்று கலந்துவிட்ட அனைத்து உணர்ச்சிகளையும் வெளியில் வடித்த அற்புதம்தான் தாஜ்மஹால்.

கட்டடக் கலைகளில் இந்தோ-மொகலாய கட்டடக் கலைக்கு பெரும் சான்றாகத் திகழும் தாஜ்மஹால்இ அதையும் தாண்டி பார்த்தவர்இ பார்க்காதவர்இ கேட்டவர்இ கதையால் அறிந்தவர்இ வரலாற்றால் உணர்ந்தவர் என்று எல்லோர் மனதிலும் அழியாக் காதல் சின்னமாகவே பதிவாகியுள்ளது.

இவ்வளவு அழகான இத்தனை சிரமத்தை எடுத்துக்கொண்டு தாஜ்மஹால் எனும் ஓர் அரிய படைப்பை ஓர் பேரரசன் விட்டுச் சென்றதற்குக் காரணம்இ தனது மனைவி மீது கொண்ட காதல்தான் என்பது காதலுக்கு மட்டுமல்லஇ காதல் மணவாழ்க்கையிலும் நீடிக்கும் மறையாமல் தொடரும் உணர்வு அதுஇ காமத்தைக் கடந்த பிணைப்பு அதுஇ கருத்திற்கும் எட்டாத உணர்வு அதுஇ காலத்தின் மாற்றத்தினால் காணாமல் போகக்கூடிய பண்பல்ல காதல் என்பதையே தாஜ்மஹாலின் படைப்பும்இ இருப்பும் உணர்த்துகிறது. அதனால்தானோ என்னவோஇ ஆன்மிகப் பாதையில் மாமுயற்சி மேற்கொண்ட சிறீ அரவிந்தர்இ "அழியாக் காதலின் அற்புதச் சின்னம்" என்று இந்திய பண்பாட்டின் அடிப்படைகள் என்று தான் எழுதிய புத்தகத்தில் தாஜ்மஹாலைக் குறிப்பிடுகிறார்.

http://tamil.webdunia.com/newsworld/news/i...070708001_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

தாஜ்மகாலா அதிக வாக்குகளைப் பெற்றது?? சீனப்பெருஞ்சுவர் தான் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றதாகச் செய்திகள் வந்திருந்தனவே

  • கருத்துக்கள உறவுகள்

THE NEW 7 WONDERS OF THE WORLD

The New7Wonders organization is happy to announce the following 7 candidates have been elected to represent global heritage throughout history. The listing is in random order, as announced at the Declaration Ceremony on 07.07.07. All the New 7 Wonders are equal and are presented as a group b]without any ranking.

The Great Wall, China Petra, Jordan Christ Redeemer, Brazil Machu Picchu, Peru

Chichén Itzá, Mexico The Roman Colosseum, Italy The Taj Mahal, India

Official New 7 Wonders of the World status is subject to a final validation process, and will be confirmed during a forthcoming New7Wonders Inauguration Tour.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.