Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இலங்கை T20 போட்டி செய்திகள்

Featured Replies

இந்தியாவுக்கு எதிரான இலங்கை T20 குழாம் அறிவிப்பு

FB_IMG_1513347454073-696x464.jpg
 

இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் T20 தொடருக்கான 15 பேர் கொண்ட வலுவான இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20தொடரின் முதல் போட்டி டிரம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடு அடுத்த இரண்டு போட்டிகளும் முறையே டிசம்பர் 22, 24 ஆம் திகதிகளில் நடைபெறும்.

சகலதுறை வீரர் திசர பெரேரா தலைமையிலான இலங்கை குழாமில் மிகப்பெரிய அதிர்ச்சி தரும் மாற்றமாக அனுபவ வேகப்பந்து விச்சளர் லசித் மாலிங்க இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மாலிங்க கடைசியாக இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரே ஒரு T20 போட்டியில் இலங்கை அணிக்காக ஆடினார். தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 சர்வதேச போட்டிகளுக்கு அவர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

எனினும் தற்போதைய இந்திய சுற்றுப்பயணத்தை ஒட்டி மாலிங்க அண்மையில் முடிவடைந்த பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் சம்பியன்ஸ்களான ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் ஆடினார்.

தற்போதைய ஒருநாள் குழாமில் இடம்பிடித்திருக்கும் லஹிரு திரிமான்ன, தனஞ்சய டி சில்வா மற்றும் சுரங்க லக்மால்  T20 போட்டிகளுக்கு இணைக்கப்படவில்லை. அவர்களுக்கு பதில் தசுன் ஷானக்க, இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ இடம்பெற்றுள்ளனர்.

T20 போட்டிகளின் சிறப்பு வீரர்களான இசுரு உதான, சீகுகே பிரசன்ன மற்றும் டில்ஷான் முனவீர ஆகியோரும் தேர்வாளர்களின் பார்வைக்கு வரவில்லை.

முதல் T20 போட்டி கட்டக்கில் நடைபெறவிருப்பதோடு தொடர்ந்து அடுத்த இரண்டு ஆட்டங்களும் முறையே இன்தோர் மற்றும் மும்பையில் நடைபெறும்.   

இலங்கை T20 குழாம் 

திரச பெரேரா (தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக்க, நிரோஷன் திக்வெல்ல, சதீர சமரவிக்ரம, குசல் ஜனித் பெரேரா, அஞ்சலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, தசுன் ஷானக்க, சதுரங்க டி சில்வா, சச்சித் பதிரன, அகில தனஞ்சய, துஷ்மன்த சமீர, நுவன் பிரதீப், விஷ்வ பெர்னாண்டோ.

  • முதலாவது T20 – டிசம்பர் 20 – கட்டக்
  • 2ஆவது T20 – டிசம்பர் 22 – இன்தோர்
  • 3ஆவது T20 – டிசம்பர் 24 – மும்பை

http://www.thepapare.com/sri-lanka-t20-squad-for-india-report-tamil/

  • தொடங்கியவர்

இலங்கை அணி இந்த வருடத்தின் இறுதி சவாலை எப்படி சமாளிக்கும்?

Sri Lanka v India
 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, அங்கு இடம்பெற்று முடிந்த டெஸ்ட் தொடர் (1-0), ஒரு நாள் தொடர் (2-1) என்பவற்றினை பறிகொடுத்திருந்த போதிலும் குறித்த தொடர்கள் மூலம் பல சாதகமான விடயங்களினை பெற்றிருக்கின்றது.  

இலங்கை இளம் வீரர்கள் தமது இந்திய சுற்றுப் பயணத்தின் இறுதிக்கட்டமாக, அந்நாட்டு அணியுடன் கட்டாக் நகரில் புதன் கிழமை (20) ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் மோதுகின்றனர்.

வரலாறு

T-20 போட்டிகளில் 2009ஆம் ஆண்டிலிருந்து இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அணிகளும் விளையாடி வருகின்றன.

 

2014ஆம் ஆண்டு T-20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவை வீழ்த்தி வெற்றியாளராக மாறிய இலங்கை, தமது அயல் தேசத்துடன் இதுவரை 11 போட்டிகளில் மோதியிருக்கின்றது. இதில் 7 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற எஞ்சிய 4 போட்டிகளினையும் இலங்கை கைப்பற்றி இருக்கின்றது.

இறுதியாக, இவ்விரண்டு அணிகளும் இலங்கையின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரேயொரு T-20 போட்டியில் பலப் பரீட்சை நடாத்தி இருந்தன. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

இறுதியாக இந்திய மண்ணில் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட T -20 தொடரொன்றில் கடந்த வருடம் மோதியிருந்தது. அத்தொடரினையும் இந்தியாவே 2-1 எனக் கைப்பற்றியிருந்தது.  

இலங்கை அணி

நிறைவைடையப் போகும் இந்த ஆண்டில் இறுதியாக தாம் பங்கேற்கும் T-20 தொடரில் களம் காணவுள்ள இலங்கை, அண்மையில் தாம் பங்கேற்ற பாகிஸ்தான் அணியுடனான T-20 தொடரில் 3-0 என வைட்வொஷ் செய்யப்பட்டிருந்தது.  

எனினும், த்தொடரில் திசர பெரேரா தலைமையிலான இலங்கை தரப்பு அனுபவம் குறைந்த வீரர்களுடன் விளையாடிய போதிலும் எதிரணிக்கு மிகவும் சவால் தரும் வகையில் நடந்திருந்தது. குறிப்பிட்ட அந்த T-20 தொடரில் இலங்கை அணியினை வழிநடாத்துவதில் சிறப்பாக செயற்பட்டதனாலேயே இலங்கை அணியின் ஒரு நாள் மற்றும் T-20 தலைவர் பதவி திசர பெரேராவுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதோடு இலங்கை அணி இந்த T-20 தொடரின் மூலம் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவின் சேவைகளைப் பெற இருக்கின்றது.

இலங்கை அணி, பாகிஸ்தானுடனான தொடரினை பறிகொடுத்த போதிலும், இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற T-20 தொடர்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

அத்தொடர்களில் காணப்பட்ட முக்கிய வீரர்கள் பலர் பாகிஸ்தானுடனான கடைசி T-20  தொடரில் பாதுகாப்பு காரணங்கள் கருதி விளையாடி இருக்கவில்லை. ஆனால் தற்போது இலங்கை அந்த முக்கிய வீரர்களுடன் இந்தியாவை எதிர்கொள்கின்றது. இவர்களில் இலங்கை சார்பான அணியின் துடுப்பாட்டத்தினை வலுப்படுத்த உபுல்  தரங்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய முக்கிய வீரர்கள் காணப்படுகின்றனர்.

Tharanga-5-300x200.jpg உபுல்  தரங்க

இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தரங்க, அண்மையில் நடந்து முடிந்த பங்களாதேஷ் பிரீமியர் லீக் T-20 தொடரில் சில்லெட் சிக்ஸர்ஸ் அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடி 41.40 என்கிற சராசரியோடு 207 ஓட்டங்களினை குவித்திருக்கின்றார். அதோடு  இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரிலும் இலங்கையின் முன்னாள் தலைவரான தரங்க அதிக ஓட்டங்கள் சேர்த்த ஒருவராகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த வருடத்தில் இலங்கை அணிக்காக T-20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (194) குவித்த வீரராக திக்வெல்ல காணப்படுகின்றார். சில உபாதைகளினால் இலங்கை அணி விளையாடிய பல போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்திருந்த அஞ்செலோ மெதிவ்ஸின் சிறப்பாட்டமே இலங்கை தென்னாபிரிக்க அணியுடனான T-20 தொடரினை இந்த வருடத்தில் கைப்பற்ற காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dickwella-3-300x200.jpg நிரோஷன் திக்வெல்ல

இவர்களோடு சேர்த்து அசேல குணரத்ன, சதீர சமரவிக்ரம, குசல் ஜனித் பெரேரா (உடற்தகுதி சரியாகும் பட்சத்தில்), தசுன் சானக்க மற்றும் அணித் தலைவர் திசர பெரேரா ஆகியோர் இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்துக்கு துருப்புச் சீட்டு வீரர்களாவர். எனவே, பலமிக்க துடுப்பாட்ட வீரர்கள் அடங்கிய இலங்கை அணிக்குழாமே இந்தியாவை எதிர்கொள்கின்றது.

angelo-mathews-1-300x200.jpg அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணியின் பந்து வீச்சினை எடுத்துக்கொள்ளும் போது, இம்முறைக்கான இந்திய அணிக்கெதிரான குழாத்தில் லசித் மாலிங்க, T-20 போட்டிகளுக்கான சிறப்பு பந்துவீச்சாளர் இசுரு உதான ஆகியோர் அடக்கப்படவில்லை. இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி அதிக அனுபவத்தினைக் கொண்டிருக்கும் வீரரான லசித் மாலிங்க இல்லாமல் இருப்பது இலங்கை அணிக்கு பெரிய இழப்பாகும். அதோடு லசித் மாலிங்கவே இலங்கை சார்பாக இந்த வருடத்தில் T-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராகவும் காணப்படுகின்றார்.  

இம்முறை இலங்கை அணி புதிய பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கின்றது. இதில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சினை நுவான் பிரதீப்புடன் இணைந்து பகுதிநேர பந்து வீச்சாளர்களான திசர பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தசுன் சானக்க ஆகியோர் முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழல் வீரர்களினை எடுத்து நோக்கும் போது, இலங்கை இம்முறை வலது கை சுழல் வீரர் ஒருவரையும், இடது கை சுழல் வீரர் ஒருவரையும் களமிறக்க எதிர்பார்க்க முடியும். வலது கை வீரருக்கான பொறுப்பினை அகில தனன்ஞய எடுத்துக் கொள்ள, பாகிஸ்தான் அணியுடனான இறுதி T-20 தொடரில் அறிமுகமாகிய சத்துரங்க டி சில்வா இடது கை சுழல் வீரராக செயற்பட எதிர்பார்க்க முடியும்.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

உபுல் தரங்க, நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க, சதீர சமரவிக்ரம/குசல் ஜனித் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, தசுன் சானக்க, திசர பெரேரா(அணித் தலைவர்),சத்துரங்க டி சில்வா,  நுவான் பிரதீப், அகில தனன்ஞய

இந்திய அணி

இந்தியாவை எடுத்துப் பார்க்கும் போது, இந்தியா டெஸ்ட் மற்றும்  ஒரு நாள் போட்டிகள் போன்று T-20 போட்டிகளிலும் மிகவும் பலம் வாய்ந்த அணியாகவே காணப்படுகின்றது.

இந்தியா கடந்த மாதம் T-20 தரவரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் நியூசிலாந்து அணியுடனான தொடரினை 2-1 என சொந்த மண்ணில் வைத்து கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Rohit-Sharma-3-300x200.jpg ரோஹித் சர்மா

இந்திய அணியினை ஒரு நாள் தொடர் போன்று, இந்த T-20 தொடரிலும் ரோஹித் சர்மா தலைமை தாங்குகின்றார். இந்த தொடரில் இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருப்பது இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாகும். இலங்கை அணிக்கெதிராக நான்கு T-20 போட்டிகளில் விளையாடியிருக்கும் கோஹ்லி நான்கு போட்டிகளிலும் அரைச் சதம் கடந்திருந்தார்.

அதோடு அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவானும் இந்திய அணியில் உள்ளடக்கப்படவில்லை. இவ்வாறாக சில முக்கிய துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்தியா விடுகை தந்திருப்பினும் இந்திய அணியின் துடுப்பாட்டத்தினை குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது.

Rahul-1-300x200.jpg லோக்கேஷ் ராகுல்

இந்திய அணியின் துடுப்பாட்டத்துக்கு முதுகெலும்பாக இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லோக்கேஷ் ராகுல், அணித் தலைவர் ரோஹித் சர்மா ஆகியோரினை எதிர்பார்க்க முடியும். இதில் ராகுல் T-20 போட்டிகளில் 50 இற்கு கூடிய துடுப்பாட்ட சராசரியினைக் கொண்டிருக்கின்றார். அதேபோன்று ஐ.பி.எல் போட்டிகளில் அதிக அனுபவத்தினைக் கொண்டிருக்கும் ரோஹித் சர்மாவினையும் இலங்கைப் பந்து வீச்சாளர்கள் கவனமாக கையாள வேண்டி இருக்கின்றது.

மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் மஹேந்திர சிங் டோனி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு பலம் சேர்க்க கூடியவர்களாக காணப்படுகின்றனர்

 

 

இந்திய அணியின் பந்து வீச்சு துறையினை எடுத்து நோக்கும் போது மிகவும் சிறந்த வீரர்களை அவர்கள் கொண்டிருக்கின்றனர். இதில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்றோர் இலங்கை அணிக்கு அதிகம் நெருக்கடி தரக்கூடிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Chahal-300x200.jpg யுஸ்வேந்திர சாஹல்

அதோடு குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் அவ்வணியின் சுழற்பந்து வீச்சுக்கு பெறுமதி தரக் கூடிய ஆட்களாக காணப்படுவார்கள். இதில் சாஹல் இந்த வருடத்தில் T-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்து வீச்சாளர்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

எனவே, இரண்டு அணிகளும் பெரும்பாலும் இளம் வீரர்களினையே கொண்டிருப்பதால் நடைபெறவிருக்கும் T-20 தொடர் மிகவும் போட்டித்தன்மை மிக்கதாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி

ரோஹித் சர்மா(அணித்தலைவர்), லோக்கேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், மஹேந்திர சிங் டோனி, ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், மொஹமட் சிராஜ்

இலங்கைஇந்தியா T-20 தொடர் போட்டி அட்டவணை

முதலாவது T-20 போட்டி – டிசம்பர் 20 – கட்டாக் – மாலை 7 மணி
இரண்டாவது T-20 போட்டி – டிசம்பர் 22 – இந்தோர் – மாலை 7 மணி
மூன்றாவது T-20 போட்டி – டிசம்பர் 24 – மும்பை – மாலை 7 மணி

http://www.thepapare.com/

  • தொடங்கியவர்

இந்தியா  180/3

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா 87/10(16)

  • தொடங்கியவர்

93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!

 

இந்தியா, india

ந்தியா - இலங்கைக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

 

கட்டாக்கில் நடந்த முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இந்திய அணியின் இன்னிங்ஸைத் ஆரம்பித்தனர். ரோகித் ஷர்மா 17 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் கூட்டணி பலமான தொடக்கத்தை தந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே சொதப்பியது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் 1 ரன், குணரத்னே 4 ரன்கள், ஷனாகா 1 ரன், கேப்டன் பெரேரா 3 ரன்கள், தனஞ்செயா 7 ரன்கள் என ஒற்றை இலக்கங்களில் பெவிலியன் திரும்பினர் இலங்கை வீரர்கள். இறுதியாக இலங்கை அணி 16 ஓவர்களில் 87 ரன் மட்டுமே எடுத்து படுதொல்வி அடைந்தது. இந்திய அணி சார்பில் யுவேந்திர சாகல் 4 விக்கெட்டுகள், பாண்ட்யா 3 விக்கெட்டுகள், குல்தீப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/111389-india-beat-sri-lanka-by-93-runs-in-first-t20.html

  • தொடங்கியவர்

தோனி எத்தனையோ போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்; இனி சுதந்திரமாக ஆட வேண்டும்: ரோஹித் சர்மா விருப்பம்

 

 
dhoni

தோனி சுதந்திரமாக ஆடுவதை விரும்புகிறோம், என்கிறார் ரோஹித் சர்மா.   -  படம். | கே.ஆர்.தீபக்.

கட்டாக் டி20 போட்டியில் தோனி 4-ம் நிலையில் இறங்கி 22 பந்துகளில் 39 ரன்களை விளாசி இந்திய அணியை 180 ரன்களுக்கு இட்டுச் சென்றது பிறகு வெற்றியில் முடிய, இது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஆட்டம் முடிந்த பிறகு ரோஹித் சர்மா கூறியதாவது:

டாஸ் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்று நான் ஆரம்பத்திலேயே கூறினேன். ஆட்டம் முழுதும் பனிப்பொழிவு இருந்தது. 40 ஓவர்களும் பனிப்பொழிவு உண்டு என்று எதிர்பார்த்தோம். மாற்றம் எதுவும் இல்லை. இன்னிங்ஸின் பின் பகுதியில் பேட் செய்வது கடினமாக அமைந்தது.

தொடக்கத்தில் பேட்டிங் அவ்வளவு கஷ்டமாக இல்லை. ராகுலைத் தொடக்கத்தில் களமிறக்கியது நல்ல உத்தியாக அமைந்தது. ஒருநாள் தொடரில் ராகுல் இல்லை, ஆனால் இங்கு வந்து தான் அந்த அணியில் இருந்திருக்க வேண்டும் என்பதை நிரூபித்தார்.

தோனி, பாண்டே அருமையாக இன்னிங்ஸை முடித்தனர். நடுவில் பாண்டேவுக்கு சரியாக பேட்டிங் கிடைக்கவில்லை, எனவே இங்கு வந்து இவ்வாறு ஆடியது அருமையானது. தோனி கிளாஸ். 4-ம் நிலை அவருக்கு உண்மையில் சாதகமாக உள்ளது.

அவர் நமக்காக ஏகப்பட்ட போட்டிகளில் ஆடியுள்ளார். ஏகப்பட்ட போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். எனவே நாங்கள் அவர் 4-ம் நிலையில் பேட் செய்ய விரும்புகிறோம். இதனால் மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள், மேலும் தோனி நீண்ட காலமாக போட்டிகளை வெற்றிகரமாக பினிஷ் செய்து கொடுத்துள்ளார், இப்போது அவர் 4-ம் நிலையில் இறங்கி சுதந்திரமாக ஆட வேண்டும், நெருக்கடி, அழுத்தமில்லாமல் அவர் ஃப்ரீயாக ஆட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கடினமான பனிப்பொழிவில் சாஹல், குல்தீப் யாதவ் அருமையாக வீசினர்.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

http://tamil.thehindu.com/sports/article22121103.ece

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இ- 20 போட்டி இன்று நம்பிக்கை விதைக்குமா இலங்கை.?

இலங்கை - இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரின் இரண்­டா­வது போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது. முதல் போட்­டியில் அடைந்த தோல்­விக்கு பதி­லடி கொடுத்து தொடரை இழக்­காமல் இருக்க இன்­றைய போட்­டியில் இலங்கை அணி நிச்­சயம் வென்­றாக வேண்­டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்­தி­யாவின் கட்டக் நகரில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்ற இலங்­கைக்கு எதி­ரான முத­லா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியில் 93 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் இந்­திய அணி அபார வெற்றி பெற்­றது.

இலங்­கைக்கு எதி­ராக 93 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் பெற்ற வெற்­றி­யா­னது இரு­ப­துக்கு 20  கிரிக்கெட் வர­லாற்றில் இந்­தியா பெற்ற மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும்.

இதே­போல இலங்கை அணி சந்­தித்த மோச­மான தோல்­வியும் இதுதான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக பல்­லே­கலைமைதா­னத்தில் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்­றதே மோச­மான நிலை­யாக இருந்­தது.

இந்­தி­யா­வுக்கு சுற்­றுப்ப பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்­டிகள் கொண்ட தொடர்­களை இந்­தி­யா­விடம் இழந்த நிலையில் மூன்று போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 தொடரின் முதல் போட்டி கட்டாக் நகரில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்­றது. 

இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றிபெற்ற இலங்கை களத்­த­டுப்பை தேர்­வு­செய்­தது. 

அதன்­படி, ரோஹித் ஷர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக கள­மி­றங்­கினர். 5ஆ-வது ஓவரில் மெத்­தியூஸ் பந்தில் ரோஹித் ஷர்மா 17 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார். இத­னை­ய­டுத்து கள­மி­றங்­கிய ஷ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஜோடி நிதா­ன­மாக விளை­யா­டி­யது.

இந்­நி­லையில் 24 ஓட்­டங்­க­ளுடன் ஷ்ரேயாஸ் பெவி­லியன் திரும்ப அடுத்­த­தாக டோனி கள­மி­றங்­கினார். இரு­வரும் அதி­ர­டி­யாக விளை­யாட அணியின் ஓட்ட வேகம் உயர்ந்­தது. 

15ஆ-வது ஓவரில் 61 ஓட்­டங்கள் எடுத்த ராகுல், திஸ­ரவின் பந்தில் ஆட்­ட­மி­ழந்தார். 

இறுதிக் கட்­டத்தில் துடுப்­பெ­டுத்­தாட வந்த மணிஷ் பாண்டே 2 சிக்­ஸர்கள் அடிக்க, இந்­திய அணி 20 ஓவர்­களில் 180 ஓட்­டங்­களை எட்­டி­யது. டோனி 39 ஓட்­டங்­க­ளையும், பாண்டே 32 ஓட்­டங்­க­ளையும் பெற்று களத்தில் இருந்­தனர். 

இத­னை­ய­டுத்து, 181 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் இலங்கை அணி கள­மி­றங்­கி­யது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக நிரோஷன் திக்­வெல்ல, உபுல் தரங்க ஆகி யோர் கள­மி­றங்­கினர். திக்­வெல்ல 13 ஓட்டங்களுடன் ஆட்­ட­மி­ழந் தார். அடுத்­த­தாக குசல் ஜனித் பெரேரா கள­மி­றங்­கினார். மறு­மு­னையில் நின்ற தரங்க 23 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்த நிலையில் சஹால் பந்தில் ஆட்­ட­மி­ழக்க, குசல் ஜனித்தும் 19 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார். 

அவர்­களை தொடர்ந்து வந்­த­வர்கள் இந்­திய அணி­யி­னரின் பந்­து­வீச்­சுக்கு தாக்­குப்­பி­டிக்க முடியாமல் ஒற்றை இலக்க ஓட்­டங்­க­ளுடன் அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழந்­தனர். இதனால் இலங்கை அணி 16 ஓவர்கள் முடிவில் 87 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்திய அணி பந்து வீச்சில் சஹால் 4 விக்கெட்டுக்களை யும், பாண்டியா 3 விக்கெட் டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும், உனத் கட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/28493

  • தொடங்கியவர்

260 ரன்களைக் குவித்தது இந்தியா... ரோஹித், ராகுல் அதிரடி

 
 

இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. 

DRqBOAKVoAALD33_20255.jpg

 


இந்தியா இலங்கை இடையிலான இரண்டாவது டி-20போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். இருவரும் இலங்கை அணி வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். சூறாவளி ஆட்டம் ஆடிய ரோஹித் 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

DRqBNdcUMAEHgF1_20141.jpg

அடுத்த விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனியும் நிதானமாக ஆடினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ராகுலும் 49 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. இது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

https://www.vikatan.com/news/sports/111599-india-scored-260-runs-in-t20.html

 

 

ரோஹித் சர்மா சூறாவளி ஆட்டம்... 43 பந்துகளில் 118 ரன்கள்

 
 

இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். 

DRqEUaEV4AAjzfI_20507.jpg

 


இந்தியா இலங்கை இடையிலான இரண்டாவது டி-20போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். இருவரும் இலங்கை அணி வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். சூறாவளி ஆட்டம் ஆடிய ரோஹித் 35 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார்.

DRqBOAKVoAALD33_20206.jpg

அதில் ஐந்து சிக்ஸர்கள் அடக்கம். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, இலங்கை பந்து வீச்சாளர்களை திணறடித்தார். அதிரடியாக ஆடிய அவர் 10 சிக்சர்கள், 12 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

Kein automatischer Alternativtext verfügbar.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா 172(17.2)

  • தொடங்கியவர்

2-வது டி20 கிரிக்கெட்: 88 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

 

இந்தூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

 
2-வது டி20 கிரிக்கெட்: 88 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா
 
 
இந்தூர்:
 
இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பேரேரா பந்து வீச்சு தேர்வு செய்தார். 
 
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். பவுண்டரி லைன் மிகவும் சிறியதாக இருந்ததால் இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குணரத்னே வீசிய 9-வது ஓவரில் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். அவர் 23 பந்தில் 53 ரன்கள் சேர்த்திருந்தார். இந்தியா 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்தது.
 
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 12-வது ஓவரில் சதம் அடித்தார். 35 பந்தில் அதிரடி சதம் அடித்து, டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த டேவிட் மில்லரின் சாதனையை சமன் செய்தார். ரோகித் சர்மா 43 பந்தில் 12 பவுண்டரி, 10 சிக்ஸ் உடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 12.4 ஓவரில் 165 ரன்கள் குவித்தது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இது அதிபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
 
201712222253517736_1_ind-rohit._L_styvpf.jpg
 
அடுத்து டோனி களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தார். 35 பந்தில் அரைசதம் அடித்த ராகுல், அதன்பின் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 14 பந்தில் 38 ரன்கள் அடித்த லோகேஷ் ராகுல் 49 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
 
அதன்பின் வந்த ஹர்திக் பாண்டியா 10 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் ரன்ஏதும் எடுக்காமலும், டோனி 28 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. இலங்கை பந்து வீச்சாளர்களில் சமீரா 45 ரன்னும், பெர்னாண்டோ 61 ரன்னும், பெரேரா 49 ரன்களும் விட்டுக்கொடுத்தனர். இந்தியா 21 சிக்சர்கள் விளாசியது.
 
அடுத்ததாக 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் டிக்வெல்லாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர். டிக்வெல்லா 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் உபுல் தரங்காவுடம், குசல் பெரெரா ஜோடி சேர்ந்து அதிரடியாக ரன்குவித்தனர். இருவரும் பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினர். பெரெரா அரைசதம் அடித்தார். அரைசதம் அடிப்பார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தரங்கா 47 ரன்களில் சஹால் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய திசாரா பெரெரா டக் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து குசல் பெரெராவும் 37 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
 
201712222253517736_2_ind-chahal23._L_styvpf.jpg
 
அப்போது இலங்கை அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணியினர் பெவிலியனுக்கு அடுத்தடுத்து அணிவகுத்தனர். 17.2 ஓவர்களில் இலங்கை அணி 172 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மேத்யூஸ் காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சில் சஹால் 4 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும், உனத்கட், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி மும்பையில் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/22225350/1136182/India-beat-Srilanka-by-88-runs-to-capture-the-T20.vpf

  • தொடங்கியவர்

பின்தொடை காயத்தால் மெதிவ்ஸ் மீண்டும் அணியில் இருந்து விலகல்

20953999_1663149623758596_77436049798865
Sri-Lanka-tour-India-2017.jpg

நேற்று நிறைவடைந்த இந்தியாவுடனான இரண்டாவது T20 போட்டியில் இந்திய இன்னிங்ஸின் 12ஆவது ஓவரில் தனது 3ஆவது ஓவரை விசிக்கொண்டிருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் பின்தொடை பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியில் ஓய்வறைக்குத் திரும்பினார்.

அவர் இலங்கை இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடவும் வராத நிலையில் இந்தோரில் இடம்பெற்ற குறித்த போட்டியில் இலங்கை 88 ஓட்டங்களால் மோசமான தோல்வியை எதிர்கொண்டது.

‘அஞ்செலோ தொடரின் கடைசி போட்டியில் ஆட மாட்டார். அவர் சுமார் இரண்டு வாரங்கள் போட்டிகளில் இருந்து விலகி இருப்பார் என உடற்பயிற்சி நிபுணர் நிர்மலன் தனபாலசிங்கம் குறிப்பிட்டார்’ என்று இலங்கை அணி முகாமையாளர் அசங்க குருசிங்க Cricbuzz செய்தி இணையதளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

 

மெதிவ்ஸ் தொடைப் பிடிப்பு, கெண்டைக் கால் மற்றும் கணுக்கால் காயங்களால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார். இந்த ஆண்டு ஜனவரியில் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின்போது காயத்தால் அவர் முன்கூட்டியே நாடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்கள் போட்டியில் ஆடாத அவர் இங்கிலாந்தில் நடந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரிலேயே மீண்டும் அணிக்குத் திரும்பினார். அப்போது அவர் சிறப்பு துடுப்பாட்ட வீரராக மாத்திரமே போட்டிகளில் பங்கேற்றார்.

கடந்த செப்டெம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐக்கிய அரபு இராச்சிய சுற்றுப் பயணத்தை ஒட்டி இடம்பெற்ற பயிற்சியின்போது மெதிவ்ஸின் கெண்டைக் கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எட்டு வாரங்கள் போட்டிகளில் இருந்து வெளியேறிய அவர் இந்திய சுற்றுப்பயணத்திலேயே மீண்டும் அணியில் இணைந்தார்.

தற்போதைய இந்திய பயணத்தில் மெதிவ்ஸ் இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக உள்ளார். அவர் டெல்லியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் சதம் பெற்றதோடு மொஹாலியில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் சதம் ஒன்றை குவித்தார்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மும்பையில் இன்று இலங்கையுடன் கடைசி டி 20 ஆட்டம்: ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணி - இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

 

 
24CHPMSINDIANTEAM

சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இன்று களமிறங்குகிறது இந்திய கிரிக்கெட் அணி.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று தொடரைக் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே நடந்த 2 ஆட்டங்களையும் இந்தியா வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில் 3-வது ஆட்டம் இன்று மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தையும் வென்று தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா களமிறங்கவுள்ளது.

கட்டாக்கில் முதல் ஆட்டத்தில் இலங்கை 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இந்தூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இலங்கையை 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச் செய்து இந்தியா வெற்றி கண்டது. எனவே 3-வது ஆட்டத்தை அதேபோல வெற்றியுடன் முடிக்க இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்தத் தொடருக்குப் பிறகு இந்தியா நேரடியாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒரு நாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. எனவே இந்தக் கடைசி ஆட்டத்தை இந்தியா நல்லதொரு பயிற்சி ஆட்டமாக எடுத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 2 ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக ரோஹித் சர்மா 2-வது ஆட்டத்தில் வெளுத்து வாங்கினார். 2-வது ஆட்டத்தில் அவர் 43 பந்துகளில் 118 ரன்களைக் குவித்து ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரின் உலக சாதனையையும் (35 பந்துகளில் சதம்) அவர் சமன் செய்தார். அதைப் போலவே கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோரும் அபாரமாக ஆடி வருகின்றனர். மணிஷ் பாண்டே, தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அணியின் பேட்டிங்குக்கு வலு சேர்க்கின்றனர்.

கடந்த 2 ஆட்டங்களிலும் கே.எல். ராகுல் அரை சதமடித்து தேர்வாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளார். 2-ம் ஆட்டத்தில் தோனி, பேட்டிங் வரிசையில் முன்னதாக வந்து களமிறங்கி 28 ரன்களைக் குவித்தார். 3-வது ஆட்டத்திலும் அவரது பேட்டிங் வரிசையில் மாற்றமிருக்கும் என்று தெரிகிறது.

இதேபோல பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் மிரட்டி வருகின்றனர். யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இலங்கை பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகின்றனர். 2 ஆட்டங்களிலும் இவர்கள் இலங்கையின் பெரும்பாலான விக்கெட்களை வீழ்த்தி அவர்களது ரன் குவிப்புக்குத் தடையாக உளளனர். அதைப் போலவே வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சும் இந்திய அணிக்கு பலம் சேர்த்து வருகிறது. இந்த நிலையில் இந்தத் தொடரை இந்தியா வென்று விட்டதால் மும்பை ஆட்டத்தின்போது இளம் வீரர்கள் பசில் தம்பி, வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. மொத்தத்தில் தொடரைக் கைப்பற்றியதோடு 3-0 என்ற கணக்கில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய இந்தியா முனைப்புடன் களமிறங்குகிறது.

அதே நேரத்தில் இலங்கை அணி, டி20 தொடரில் ஆறுதல் வெற்றியைத் தேடும் நிலை உள்ளது. அந்த அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்.

இலங்கையின் உபுல் தரங்கா, குசால் பெரேரா, திக்வெலா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அதேபோல நுவன் பிரதீப், திசரா பெரேரா, விஷ்வா பெர்னான்டோ, தசுன் ஷனகா உள்ளிட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள் தங்களது அணிக்கு ஆறுதல் வெற்றியைத் தேடித் தரும் நோக்கத்தில் களமிறங்குகிறார்கள்.

 

அணி வீரர்கள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் அய்யர், மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், பசில் தம்பி, ஜெய்தேவ் உனத்கட்

இலங்கை: திசரா பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, மேத்யூஸ், குசல் ஜனித் பெரேரா, தனுஷ்க குணதிலகா, திக்வெலா, அசேலா குணரத்னே, சதீர சமரவிக்ரமா, தசுன் ஷனகா, சதுரங்கா டி சில்வா, சசித் பதிரனா, தனஞ்செயா டி சில்வா, நுவன் பிரதீப், விஷ்வ பெர்னான்டோ, துஷ்மந்த சமீரா - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article22267829.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு 136 ரன்கள் இலக்கு..!

 
 

இந்தியா இலங்கை இடையிலான மூன்றாவது டி-20 போட்டியில் இலங்கை அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. 

india-cricket-team-afp_806x605_515141178

 
 

இந்தியா - இலங்கை இடையிலான மூன்றாவது டி-20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய டிக்வெல்லா, ஒரு ரன்னில் உனத்டட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். போன போட்டியில் அதிரடியாக ஆடிய குஷால் 4 ரன்னிங் ஆட்டமிழக்க, தராங்கா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால், இலங்கை அணி 18 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அடுத்ததாக குணரத்னே 21 ரன்களும், சதீரா 36 ரன்களும் எடுத்தனர். அதனையடுத்து, 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தனர். 

https://www.vikatan.com/news/sports/111743-sri-lanka-scored-135-runs.html

6.png&h=42&w=42

43/2 *
 (7.5/20 ov, target 136)
  • தொடங்கியவர்

3வது டி-20 கிரிக்கெட்: இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒயிட்-வாஷ் செய்தது இந்தியா

 

 

மும்பையில் நடைபெற்ற 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை 3-0 என வென்று இலங்கை அணியை ஒயிட்-வாஷ் செய்தது.

 
 
3வது டி-20 கிரிக்கெட்: இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒயிட்-வாஷ் செய்தது இந்தியா
 
 
மும்பை:
 
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான  டி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
 
இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி  முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிக்வெலா மற்று உபுல் தரங்கா களமிறங்கினர். இரண்டாவது ஒவரிலேயே உனத்கட்டின் அபாரமான பந்துவீச்சில் டிக்வெலா அவுட்டானார்.
 
இதையடுத்து, களமிறங்கிய ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. ஒரு கட்டத்தில் இலங்கை அணி 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் சதீராவும் குணரத்னேவும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். சதீரா 21 ரன்களிலும், குணரத்னே 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. ஷனகா 24 பந்துகளில் 2 சிக்சருடன் 29 ரன்களுடனும், தனஞ்சயா 11 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
 
இந்திய அணி தரப்பில் உனத்கட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
 
201712242249164451_1_ind-unadkat._L_styvpf.jpg
 
இதைத்தொடர்ந்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். ராகுல் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சமீரா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ரோகித் 20 பந்துகளில் 27 ரன்கள் (4 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் - மணேஷ் பாண்டே ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தது. 
 
30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய பாண்டியாவும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மணிஷ் பாண்டேவும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது டோனியும், தினேஷ் கார்த்திக்கும் களத்தில் இருந்தனர். இந்த ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தது. இலங்கை அணி பந்துவீச்சில் சமீரா, ஷன்கா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
 
201712242249164451_2_ind._L_styvpf.jpg
 
இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் உனத்கட் ஆட்டநாயகன் மற்றும்  தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என வென்று இலங்கை அணியை ஒயிட்-வாஷ் செய்தது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/24224917/1136484/India-defeat-Sri-Lanka-by-5-wickets-to-win-the-3rd.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.