Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

#LiveUpdates 100க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை! #GujaratResults

Featured Replies

#LiveUpdates  100க்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலை! #GujaratResults

 
 

குஜராத்தில் பா.ஜ.க - காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை வகித்துவந்த நிலையில் தற்போது  பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.

gujarat

 

குஜராத் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க முன்னிலையில் இருந்த பல்வேறு தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைவுடனே இன்றைய பங்குச்சந்தை ஆரம்பித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 663.83 புள்ளிகள் குறைந்து 32,799 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 201.35 புள்ளிகள் குறைந்து 10,131 புள்ளிகளில் வர்த்தகமாவதாகக் கூறப்படுகிறது.   

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில்  பா.ஜ.க முன்னிலை வகித்தாலும், காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க-104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 76 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத் மேற்கு ராஜ்கோட் தொகுதியில் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலை வகிக்கிறார். குஜராத் மேசானா தொகுதியில் துணை முதல்வர் நிதின் பட்டேல் முன்னிலை வகிக்கிறார்.

 

குஜராத் 

182 சட்டசபை உறுப்பினர்களைக்கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. இதனால், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

modi

 

68 உறுப்பினர்களைக்கொண்ட இமாசலப் பிரதேசத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க-வே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பின் வந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இரு மாநிலத் தேர்தல் முடிவுகளும் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/news/india/111090-updates-on-gujaratresults-and-himachalresults.html

  • தொடங்கியவர்

மோடியின் ஆயுதமும் குஜராத் தேர்தல் முடிவும்!

 
 

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், பா.ஜ.க 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

modi
 

 

182 சட்டசபை உறுப்பினர்களைக்கொண்ட குஜராத் சட்டசபைக்கு, கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில், தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. இதனால், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்

rahul
 

 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களால் குஜராத் மக்களுக்கு பா.ஜ.க மீது அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி, இன்றைய தேர்தல் முடிவுகளில் அப்பட்டமாக வெளியாகியுள்ளது.  வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பா.ஜ.க, காங்கிரஸ்  மாறி மாறி முன்னிலை வகித்தன. ஒருகட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க-வைவிட பத்து தொகுதிகளில் முன்னிலை வகித்தது.  இது, பா.ஜ.க-வுக்கு கண்டிப்பாக கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

'குஜராத் மண்ணின் மைந்தன்' என்று அழைக்கப்படும் பிரதமர் மோடி, குஜராத்தில் இரண்டாம் கட்ட பிரசாரத்தின்போது மக்கள் மத்தியில் கண்ணீர்விட்டு அழுதார். ”ஏன் என்னை வெறுக்கிறார்கள்?  குஜராத்தில் நான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதாலா” என்று வேதனைப்பட்டார். ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு ஆகியவற்றைத் தாண்டி, மோடியின் அன்று சிந்திய கண்ணீர்தான் இன்று வெற்றியை தேடித் தந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

குஜராத்தைத் தொடர்ந்து, இமாசலப் பிரதேசத்திலும் பா.ஜ.கவின் வெற்றி உறுதியாகியுள்ளது. 68 சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்ட இமாசலப் பிரதேசத்துக்கு, கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநிலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க-வே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பின் வந்த கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதன்படி, பா.ஜ.க இரு மாநிலங்களையும் கைப்பற்ற உள்ளது. இருப்பினும் காங்கிரஸ், இரு மாநிலத் தேர்தலிலும் பா.ஜா.க-வுக்கு கடுமையான போட்டியாளராகத் திகழ்ந்து, இனிவரும் காலங்களில் பா.ஜ.க மிகவும் கவனமாகக் காய் நகர்த்த வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. 

https://www.vikatan.com/news/india/111097-gujarat-election-battle-for-narendra-modi.html

  • தொடங்கியவர்

மோடி பிறந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

குஜராத் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பிறந்த மெஹ்சானா மாவட்டம், உன்ஜா தொகுதியில் காங்கிரஸ் கட்சி பெண் வேட்பாளர் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி கண்டுள்ளார்.

 
மோடி பிறந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்
 
அகமதாபாத்:
 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-9-1950 அன்று (அந்நாள் பம்பாய் மாகாணம்) குஜராத் மாநிலம், பிறந்த மெஹ்சானா மாவட்டத்துக்குட்பட்ட வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். இந்த ஊர் தற்போது உன்ஜா சட்டமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது.
 
நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் உன்ஜா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நாராயண் பட்டேல்(74) நிறுத்தப்பட்டார். அதே தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 2012-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 19 ஆயிரத்து 529 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்(40) என்பவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
 
கடந்த 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நாராயண் பட்டேலை எதிர்த்து போட்டியிட்ட ஆஷா பட்டேல் அப்போது தோல்வி அடைந்தார். அந்த நஷ்டக் கணக்கை தற்போதையை வெற்றியின் மூலம் லாபக் கணக்காக ஆஷா பட்டேல் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/18195928/1135355/BJP-loses-Narendra-Modi-s-hometown-to-Congress.vpf

  • தொடங்கியவர்

குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும் மோடிக்கும் கூறுவதென்ன? 5 முக்கிய அம்சங்கள்

 
பாஜக தொண்டர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் குஜராத் தேர்தலில் களமிறங்கிய பாரதீய ஜனதா கட்சியின் நூலிழை வெற்றி அக்கட்சிக்கு பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் இருப்பதால், இங்கே மோசமான செயல்பாட்டையோ அல்லது தோல்வியையோ கண்டிருந்தால் அது மாநிலத்திற்கு வெளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் குஜராத்தில் எளிதாக வெற்றி பெற்ற பாஜக, இம்முறை உள்ளூர் அரசாங்கத்தின் மந்தமான செயல்பாட்டினாலும் மற்றும் தொடர்ந்து 22 ஆண்டுகளாக பாஜகவை தேர்தெடுத்த வாக்காளர்கள் மத்தியிலும் சோர்வு நிலவிய சூழலில் தேர்தலை எதிர்கொண்டது.

தலித்துகள் மற்றும் மற்ற சாதியினரை தவிர்த்து தங்களுக்கென வேலைகளில் தனி இடஒதுக்கீடு கோரிய படிதார்கள் சமூகத்தின் அதிருப்தி அக்கட்சிக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது.

காங்கிரஸ் கட்சி பாஜகவை அதன் மிகப்பெரிய கோட்டையில் எதிர்கொள்வதற்காக ஒரு வித்தியாசமான கூட்டணியை அமைத்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, பாஜகவின் கவசத்தில் நிலவும் குறைபாடுகள் மீது கவனம் செலுத்தி ஒரு முக்கிய பிரசாரத்தை நடத்தினார் ராகுல் காந்தி. இதில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் நிலவிய கோபம் மற்றும் வர்த்தகர்கள் இடையே சரக்கு மற்றும் சேவை வரி குறித்து நிலவும் பிரச்சனைகளை முன்னிறுத்தினார்.

ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைREUTERS

தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் பாஜக தனது வாக்கு வீதத்தை இழந்து வருவதை காட்டியது.

தற்போது எழும் மிகப்பெரிய கேள்வியே பாஜக தோல்வியடைவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில் அது எவ்வாறு ஒரு சுமாரான வெற்றியை பதிவு செய்தது என்பதேயாகும்.

பாஜக கடைசி கட்ட பிரசாரத்தின்போது அதை களைவதற்கான அனைத்து வழிவகைகளையும் கையாண்டது. குஜராத் பெருமை மற்றும் தேர்தலில் பாகிஸ்தான் பாதிப்பை உண்டாக்கவுள்ளதாக கூறி இந்துக்களின் வாக்குகளை மோடி கவர நினைத்தார்.

இது காங்கிரஸ் தலைவர்களான கபில் சிபல் மற்றும் மணிசங்கர் ஐயர் போன்றோரை எதிர்வினையாற்ற வைத்தது.

காங்கிரசை பொறுத்தவரை இது ஒரு கசப்பும் இனிப்பும் கலந்த முடிவாகவே அமைந்தது. அதாவது சிங்கத்தை அதன் சொந்த குகையிலேயே எதிர்கொண்டாலும், இறுதிக் கட்டத்தில் தோல்வியுற்றது. காங்கிரஸ் உள்ளூரில் சிறந்த தலைவரை கொண்டிராத சூழலில், ராகுல் காந்தி தேவையான அனைத்து செயல்களையும் செய்து தனது கட்சி தேர்தலில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கு உதவினார்.

ஆனால், குஜராத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டது அத்தேர்தலில் சிறிதளவு ஏமாற்றத்தையே பதிவு செய்துள்ளது.

இவரது "பெரும்பான்மை" வெற்றி என்ற வாக்குறுதி தவறானதாகிவிட்டது. இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மையான வாக்குகளை பெறவில்லை.

எனவே, இத்தேர்தல் முடிவுகள் மோடிக்கும் பாஜகவுக்கும் கூறுவதென்ன?

ஐந்து முக்கியமான விடயங்கள் உள்ளன.

அமித் ஷாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முதலாவதாக, விவசாயிகள் மற்றும் சிறுதொழில் வர்த்தகர்கள் ஆகியோர் இதுவரை நிலவி வந்த பொருளாதார சூழல் குறித்து மகிழ்ச்சிகரமாக இல்லை.

வேலைவாய்ப்பின்மையே ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பாஜகவின் திட்டங்களுக்கு அபாயத்தை உண்டாக்கும் கட்டத்தை நெருங்கிய படிதார்கள் வேலைகள் குறித்து தங்களது முணுமுணுப்பை தெரிவித்தனர்.

சரக்கு மற்றும் சேவை வரி சிறு மற்றும் முறைசாரா வர்த்தகங்களை பாதித்தது. சரக்கு மற்றும் சேவை வரியின் தற்போதைய வடிவம் கண்டிப்பாக தொடர்ந்து நீடிக்க முடியாது.

இரண்டாவதாக, ராகுல் காந்தியின் தலைமையின் கீழுள்ள காங்கிரஸிடம் பா.ஜ.க அதன் முக்கிய இந்து வாக்குகளின் ஒரு பகுதியை இழந்து விட்டது. தற்போது காங்கிரஸிடம் சென்றுள்ள தனது முக்கிய வாக்குகளின் ஒரு பகுதியை பாஜக வென்றாக வேண்டுமென்பதே இங்கு முக்கியமான விடயமாகும்.

மூன்றாவதாக, 2019ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு மோடி அரசாங்கம் அதன் பொருளாதார மற்றும் அரசியல் செயல்பாடுகளை மாற்றுவதற்கான வாய்ப்புள்ளது. சாமானியர்களுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது அதிக ஆதரவை எதிர்பார்க்கலாம்.

நான்காவதாக, இதுவரை எதிர்பார்க்காத அரசியல் சார்ந்த பாதிப்பை குஜராத் தேர்தல் முடிகள் ஏற்படுத்தியுள்ளதால் மோடி மற்றும் அமித் ஷா தங்களது 2019ம் ஆண்டு தேர்தல் கூட்டணி குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. இதற்கு முன்னர் அவர்கள் செயல்படாத வகையில், தங்களது கூட்டணி கட்சிகளை சாந்தப்படுத்தவும் மற்றும் கவரவும் வேண்டும்.

ஐந்தாவதாக, கர்நாடகா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரும் 2018ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல் பாஜகவுக்கு பெரும் சவாலானதாக உள்ளது. குஜராத் போன்றல்லாமல் உள்ளூர் தலைவர் இன்றி மோடியை மட்டுமே சார்ந்து இந்த மாநிலங்களில் செயல்பட முடியாது. பாஜகவின் அதிகாரத்திற்கு தற்போதுதான் சவால்கள் உருவாகத் தொடங்கியுள்ளன.

http://www.bbc.com/tamil/india-42402310

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.