Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை விட­யத்தில் இலங்­கைக்கு உத­வுவோம் : மலே­ஷிய பிர­தமர் அப்துல் ரஸாக் அறி­விப்பு

Featured Replies

மனித உரிமை விட­யத்தில் இலங்­கைக்கு உத­வுவோம் : மலே­ஷிய பிர­தமர் அப்துல் ரஸாக் அறி­விப்பு

 

(நமது நிருபர்)

சர்­வ­தேச மட்­டத்தில் இலங்­கைக்கு மனித உரிமை விவ­கா­ரங்­களில் ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு மலே­ஷியா தயா­ராக இருப்­ப­தாக மலேஷிய பிர­தமர் அப்துல் ரஸாக் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார். மனித உரி­மைகள் விவ­கா­ரத்தில் இலங்­கையின் நிலைப்­பாட்டை

நியா­யப்­ப­டுத்­திய மலே­சிய பிர­தமர் நஜீப் ரசாக் மனித உரி­மைகள் தொடர்பில் மேற்­கு­லக நாடு­களின் வியாக்­கி­யா­னங்­களை தனது நாடு ஏற்றுக் கொள்­ள­வில்லை என்று தெரி­வித்தார்.

உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள மலே­சிய பிர­தமர் நஜிப் அப்துல் ரஷாக் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னைவை நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து உத்­தி­யோ­க­பூர்வ இறு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

இதன்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு மலே­சியா ஆத­ரவு வழங்­கி­யமை தொடர்­பிலும் ஏனைய சர்­வ­தேச மட்­டத்தில் இலங்­கைக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றமை தொடர்­பிலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நன்றி தெரி­வித்­தி­ருக்­கிறார்.

சர்­வ­தேச தேவை­க­ளுக்­காக மலே­சியா ஒரு­போதும் செயற்­ப­டாது. மேற்­கு­லகம் சில விட­யங்­களை நாடுகள் மீது திணிப்­ப­தற்கு முயற்­சிக்­கி­றது என்று இதன்­போது மலே­சியப் பிர­தமர் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

அந்த வகையில் இலங்­கைக்கு சர்­வ­தேச மட்­டத்தில் மலே­சியா ஆத­ரவு வழங்கும் என அந் நாட்டின் பிர­தமர் அப்துல் ரஷாக் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

இந்த இரு­த­ரப்பு சந்­திப்பில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, திலக் மாரப்பன, ராஜித சேனாரத்ன, சுசில் பிரேமஜயந்த, மலிக் சமரவிக்ரம, கயந்த கருணாதிலக்க , தலதா அத்துக்கோரள உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-19#page-1

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய சிறைகளில் வாடும் தமிழர்கள்: மனித உரிமை கமிஷன் நடவடிக்கை

Published: Thursday, April 18, 2002, 5:30 [IST] Subscribe to Oneindia Tamil

சென்னை: மலேசியச் சிறைச்சாலைகளில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழர்களை உடனடியாக விடுவிப்பதற்கு ஏற்பாடுசெய்யுமாறு, மலேசிய நாட்டு தேசிய மனித உரிமை கமிஷனுக்கு, தமிழக மனித உரிமை கமிஷன் கடிதம்அனுப்பியுள்ளது. தமிழகத்திலிருந்து வேலை தேடிச் சென்று பிடிபட்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள் மலேசிய சிறைச்சாலைகளில்கொடுமையான நிலையில் வாடுவதாக சமீபத்தில் "குமுதம்" வாரப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியிருந்தது.

இதைக் கண்ட தமிழக மனித உரிமை கமிஷன் உறுப்பினரான நீதிபதி சம்பந்தம், இந்த விஷயம் தொடர்பாகமலேசிய நாட்டின் தேசிய மனித உரிமை கமிஷனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தியின் மூலம், மலேசிய சிறைகளில் நிலவும் கொடூரமான சூழ்நிலை தெரியவருகிறது. மலேசிய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், குறிப்பாக தமிழகத்திலிருந்து வேலை தேடிச் சென்றதமிழர்கள் மிகப் பெரும் சித்திரவதைக்கு உள்ளாகியிருப்பதும் தெரிய வருகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக, மலேசிய தேசிய மனித உரிமை கமிஷனைச் சேர்ந்தவர்கள் சிறைச்சாலைக்குச்சென்று பார்க்க வேண்டும். மேலும், அங்கு வாடும் தமிழர்களை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்புவதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று அக்கடிதத்தில் சம்பந்தம் கோரியுள்ளார்.

மலேசியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சரியான சாப்பாடு கிடைக்காமல்கொடுமைப்படுத்தப்படுவதாகவும், சிறைச்சாலையில் உள்ள கழிப்பறையில்தான் அவர்கள் படுத்துத் தூங்கவேண்டியுள்ளது என்றும், ஓரினச் சேர்க்கைக்கு பிற கைதிகளால் அழைக்கப்படும் அவலம் இருப்பதாகவும் "குமுதம்"செய்தி வெளியிட்டிருந்தது.
 

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை விஷயத்தில் இலங்கைக்கு உதவ துடிக்கும் நீங்கள், முஸ்லீம் நாடான மலேசியாவின் பிரதமரான நீங்கள் ரோஹிங்க்ய முஸ்லீம்கள்மீதான மனித உரிமை மீறலை கண்டுக்கவே இல்லை அது ஏன் மலேசிய பிரதமரே?  அதே ரோஹிங்க்ய முஸ்லீம்களை அடிச்சு துரத்தின  இலங்கைக்கு மனித உரிமை விஷயத்தில் என்ன உதவி வேணும் எண்டு கேட்பது இலங்கைவாழ் முஸ்லிம்களை கோவபடுத்தாதா?

எப்படி உயிரை கொடுத்து பழகினாலும், மதம் என்று வந்துவிட்டால் பாகிஸ்தானுக்கும்,பர்மாவுக்கும் பாலஸ்தீனத்துக்கும் அப்புறம்தான் பக்கத்துவீட்டு வேற்று மதக்காரன் என்று வாழும் இஸ்லாமிய சமூகத்திற்கு ஒன்று புரிவதில்லை...

அவர்கள் பெருமைப்படும் இஸ்லாமிய தேசங்கள் எல்லாமே அவர்கள் வெறுக்கும் அமெரிக்காவின் கை பொம்மைகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.