Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2ஜி... ஊழல் இல்லை. ஆனால், 122 உரிமங்கள் ஏன் ரத்து செய்யப்பட்டன..?  கேக்கிறவன்  கேனையன் என்றால் வாயிலை கெட்ட வார்த்தை வருது.

  • தொடங்கியவர்

2ஜி... ஊழல் இல்லை. ஆனால், 122 உரிமங்கள் ஏன் ரத்து செய்யப்பட்டன..?

 
 

2 ஜி வழக்கு

176 என்கிற எண்ணுக்கு அடுத்து 10 பூஜ்யங்கள். இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கைப்படி இத்தனை இலக்க எண்கள், அதாவது 1.76 லட்சம் கோடி ரூபாய் 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தால் இழப்பீடு ஏற்பட்டதாகக் காண்பிக்கப்பட்டது. டைம்ஸ் இதழின் 2011 ஆம் ஆண்டுக்கான டாப் 10 அதிகார துஷ்பிரயோகப் பட்டியலில் அந்த வருடம் 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரம் இடம்பிடித்திருந்தது. இந்தியாவில் ஊழல் ஒன்றும் புதிதாக நடந்துவிடவில்லை என்றாலும் கணக்காய்வாளர் காட்டிய இழப்பீட்டு எண் அதுவரை இல்லாத அளவாக பிரம்மாண்டமாக இருந்தது. 

 

இதன் எதிரொலியாக 2012 ஆம் வருடம் உச்சநீதிமன்றம் 122 அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்தது. இந்த அலைக்கற்றை உரிம ரத்து கிட்டத்தட்ட 5.3 கோடி தொலைபேசி இணைப்புகளை பாதித்தது. இந்திய டெலிகாம் இணைப்புகள் மறுவரையறை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. ஏற்கெனவே ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்துக் கொண்டிருந்த அன்னா ஹசாரேவின், 'ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்க'த்துக்கு இது தீனி போடுவதாக இருந்தது. அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக மோடி தரப்பு 'ஊழலற்ற இந்தியா' என காங்கிரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய இதுவே காரணமாகவும் அமைந்தது.

ஆனால், இதற்கு எதிர் க்ளைமாக்ஸாக கடந்த வியாழனன்று இந்த 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி சைனி தலைமையிலான சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், ‘ஊழல் உண்மையில் நடக்கவில்லை, அப்படி நடந்ததாக பிம்பம் உருவாக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பாகக் கூறப்பட்டவை அனைத்தும் புரளியும் புனைவுமாக இருப்பதால், இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்' என்று கூறி தீர்ப்பளித்தார். புரளியும் புனைவுமாக இருந்தாலும் 122 அலைக்கற்றை உரிமங்கள் எதற்காக ரத்து செய்யப்பட்டது என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

2012 இல் அப்போது சில சமூக ஆர்வலர்களால், 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இரண்டு முக்கியக் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஒன்று, இயற்கைச் செல்வங்களை வெளிப்படையற்றத் தன்மையில் அரசே கையாளலாமா? இரண்டு, அலைக்கற்றை விநியோகத்தில், அப்போதைய தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா பாரபட்சமாக சுயலாப நோக்கத்துடன் செயல்பட்டாரா? என்பதுதான். 

அதற்கு கருத்து சொன்ன உச்சநீதிமன்றம், ‘நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்ட ஆவணங்களின்படி ராசா தனது சுயலாபத்துக்காக, சில கம்பெனிகளுக்கு ஆதரவாக கேட்ட விலைக்கு அலைவரிசைகளை விற்றார்' என்று கூறியது. நீதிமன்றத்தைப் பொருத்தவரை ராசா அலைக்கற்றைகளை விற்ற கம்பெனிகளின் உரிமங்களின் அடிப்படையில் அது தனது கருத்துகளை வெளியிட்டிருந்தது. 

மேலும் அலைக்கற்றை விநியோகம் 'முதலில் வருபவருக்கே முன்னுரிமம்' என்கிற அடிப்படையில் நடக்காமல் ஏலமுறையில் நடத்தப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்தால் மட்டுமே இப்படி அலைக்கற்றைகளை விநியோகிக்கச் சாத்தியம் என்று கூறி அந்த நிறுவனங்களுக்கு அபராதமும் விதித்தது. 

ஆனால், அண்மையில் தீர்ப்பளித்துள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றமோ இதனை வேறொரு கோணத்தில் அணுகுகிறது. "சி.பி.ஐ நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ள ரெக்கார்டுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல குற்றம்சாட்டப்பட்டவர்கள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை தரப்படும் என்பதிலோ, கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதிலோ, ஸ்வான் மற்றும் யுனிடெக் ஆகிய நிறுவனங்களின் தகுதி ஆய்வினைப் புறக்கணித்ததாகவோ எவ்வித ஆதாரங்களும் இல்லை” என்று அது தனது தீர்ப்பில் கூறியிருந்தது. 

2012 ஆம் ஆண்டு இந்த வழக்கில், ஒரு மனுதாரராக இணைந்த பத்திரிகையாளர் பிராஞ்சய் குகா இந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து... கருத்து கூறுகையில், “சைனியின் இந்தத் தீர்ப்பு இறுதியானப் பதிலாக இல்லாமல், இன்னும் பல கேள்விகளையே எழுப்பியுள்ளது. 2 ஜி அலைக்கற்றை விநியோகம் ஜனநாயகத்துக்குப் புறம்பாக நடந்தது என்பது அழிக்கப்பட முடியாத உண்மை” என்கிறார்.

 

இதில் கருத்து கூறியுள்ள மத்திய அரசு வழக்கறிஞரான சித்தார்த் லுத்ரா... “2012 இல் இந்த வழக்கு தொடர்பான பதிவுகள் உச்சநீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டபோது அது பொதுநலவழக்கு என்கிற அடிப்படையில் நீதிமன்றம் கருத்து கூறியது. ஆனால், சி.பி.ஐ நீதிமன்றம் விரிவான பார்வையில் இந்த வழக்கை அணுகியாக வேண்டும். அப்படி அணுகிய நிலையில், பதிவுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அதுதொடர்பான வலுவான ஆதாரங்கள் கொடுக்கப்படாததால் சைனி இந்தத் தீர்ப்பை அளித்துள்ளார்” என்று கூறினார்.

https://www.vikatan.com/news/tamilnadu/111654-there-is-no-scam-in-2g-spectrumbut-why-license-for-122-spectrum-cancelled.html

  • தொடங்கியவர்

2ஜி தீர்ப்பு... சி.பி.ஐ மீது குற்றப் பத்திரிகை!

 
 

 

p2a_1513959057.jpg‘குற்றச்சாட்டே சித்திரிக்கப்பட்டது’ என அழுத்தமாகக் குறிப்பிட்டு, 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளார் நீதிபதி ஓ.பி.சைனி. அவருடைய தீர்ப்பை, 2ஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு எதிரான குற்றப்பத்திரிகை என்றும் குறிப்பிடலாம். அந்த அளவுக்குத் தன் தீர்ப்பில் இந்த இரண்டு அமைப்புகளும் செய்த தவறுகளைப் பட்டியலிட்டுள்ளார் நீதிபதி ஓ.பி.சைனி.

‘‘2ஜி வழக்கில், ஐந்து முக்கியமான குற்றச்சாட்டுகளை, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ முன்வைத்தது.

1. அலைக்கற்றை உரிமம் பெறுவதற்கான தேதியை நிர்ணயம் செய்ததில் குளறுபடி, 2. பொது ஏலம் நடத்தாமல், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தது, 3. தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தது, 4. டிராய் பரிந்துரைத்தபடி நுழைவுக் கட்டணம்-பதிவுக் கட்டணத்தில் மாற்றம் செய்யாதது, 5. 2ஜி அலைக்கற்றையில் ஆதாயம் அடைந்த பணத்தை கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்தது ஆகியவை அந்தக் குற்றச்சாட்டுகள்.

அவற்றை அடிப்படையாக வைத்து, மத்திய அமலாக்கத் துறையும் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 19 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்து, இந்த நீதிமன்றத்தில் வாதிட்டது. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை வைத்த வாதங்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதங்கள், அதிகாரிகளின் சாட்சியங்கள், அரசுத்தரப்பு சாட்சிகள், எதிர்த்தரப்பு சாட்சிகள் என அனைத்தையும் தெளிவாகப் பதிவுசெய்து, ஆவணங்களைப் பரிசீலித்து, கடந்த ஏழு  ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்துள்ளேன். வாரத்தில் ஆறு நாள்களும், வருடத்தில் கோடை விடுமுறை நாள்களிலும் இந்த வழக்கை விசாரித்துள்ளேன். அப்படி என் மனசாட்சிப் படியும், உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப் பிலும் இந்த வழக்கை விசாரித்ததில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை சொன்ன குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது’’ என்கிறார் சைனி. தீர்ப்பில் அவர் கேட்டிருக்கும் கேள்விகள் ஆழமானவை.

p2_1513959076.jpg

தேதியை நிர்ணயித்ததில் என்ன தவறு?

அலைக்கற்றை விற்பனைக்கான கட்-ஆஃப் தேதி பற்றி எப்போது, எங்கே, என்னவிதமான விதிமுறைகளை ‘டிராய்’ வகுத்துக் கொடுத்துள்ளது? அதுபற்றி எந்தவிதமான விதிமுறைகளும் இல்லை. 2001-ம் ஆண்டு டிராய் வகுத்துள்ள விதிமுறைகளில், ‘அலைக்கற்றைகளின் இருப்பு, சந்தையில் அதற்கான தேவை, அதைக் கேட்டு வரும் ஆபரேட்டர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அவ்வப்போது அவற்றை விற்பனை செய்யுங்கள்’ என்றுதான் குறிப்பிட்டுள்ளது. அதன்பிறகு, 2003, 2007-ம் ஆண்டுகளில் சில திருத்தங்களை டிராய் செய்துள்ளது. ஆனால், அவை எதுவும் கட்-ஆஃப் தேதி குறித்தது அல்ல.

ஆ.ராசா கொள்கையை மாற்றவில்லை!

‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற கொள்கை, இந்த வழக்கில் மிகப்பெரிய குற்றமாகப் பேசப்பட்டது. அதை, ஆ.ராசாதான் கொண்டுவந்தார் என்ற அடிப்படையில், இந்த வழக்கின் தொடக்கத்தில் சி.பி.ஐ வாதிட்டது. ஆனால், ‘வழக்கே அது தொடர்பான பிரச்னை அல்ல’ என்பது புரியவந்துள்ளது. ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்பதில் பிரச்னை அல்ல; அதன்மூலம் எந்த நிறுவனங்கள் அலைக்கற்றையை வாங்கின என்பதுதான் பிரச்னை’ என்று இந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. ஏனென்றால், ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையை   ஆ.ராசா செயல்படுத்தவில்லை. அதற்கு முன்பே அந்தமுறையில்தான் விற்பனை நடந்துள்ளது. ‘இந்தக் கொள்கையை மாற்ற வேண்டும் என்று யார் பரிந்துரை செய்தார்கள்? அப்படிச் செய்த பரிந்துரையைக் கருத்தில் கொள்ளாமல் ஆ.ராசா எப்போது செயல்பட்டார்?’ என்பதற்கு சி.பி.ஐ-யிடம் பதில் இல்லை.

இப்படித்தான் விற்பனை நடக்கப்போகிறது எனப் பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் என எல்லாவற்றுக்கும் உரியமுறையில் ஆ.ராசா தெரிவித்துள்ளார். அதற்கான கடிதப் போக்குவரத்து ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன; சாட்சிகள் அதை உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், சிலர் தந்திரமாகச் செயல்பட்டு அது ஆ.ராசா செய்த தவறு என்று சித்திரித்துள்ளனர். தொலைத்தொடர்புத் துறை அதிகாரி மாத்தூர் சொன்ன முன்னுக்குப்பின் முரணான சாட்சி, அதை உறுதிப்படுத்துகிறது. ஆ.ராசா ஒன்றும் புதிதாக அந்த விதியைக் கொண்டுவரவில்லை. அதற்கு முன்பு இருந்த கொள்கையின் அடிப்படையில்தான் ஆ.ராசாவும் செயல்பட்டுள்ளார். அதை, நிதி அமைச்சகம் அனுமதித்துள்ளது; சட்ட அமைச்சகம் அனுமதித்துள்ளது; பிரதமர் அலுவலகம் அறிந்துள்ளது. பிறகு, இதில்,   ஆ.ராசாவை மட்டும் குற்றவாளியாக்குவதும், இதைக் குற்றம் என்று திரிப்பதற்கும் எந்த ஆதாரங்களையும் வாதங்களையும் சி.பி.ஐ கொடுக்கவில்லை.

p2bb_1513959106.jpg

நிறுவனங்களுக்கு எப்படித் தெரியும்?

‘2ஜி அலைக்கற்றை விற்பனைக்கான விண்ணப்பிக்கும் தேதி பற்றி, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது. அதனால்தான், ஸ்வான் டெலிகாம் உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன’ என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் சி.பி.ஐ என்ன சொல்ல வருகிறது? அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ராசாதான் முன்கூட்டியே தகவல் சொன்னார் என்று சொல்ல வருகிறதா? அப்படி ஒரு கூட்டுச்சதி நடந்திருந்தால், அதற்கான ஆதாரம் எங்கே? தனியார் நிறுவனங்கள், தாங்கள் ஈடுபட்டுள்ள தொழில் பற்றிய விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டதற்கு ஆ.ராசாவை எப்படி குற்றவாளியாக்க முடியும்? ஒரு தொழிலில் இருக்கும் தனியார் நிறுவனப் பிரதிநிதிகள், அந்தத் தொழிலை நடத்தும் அரசுத் துறை அலுவலகங்களுக்கு அலுவல் வேலை காரணமாக அடிக்கடி போவதும், அதிகாரிகள் முதல் அந்தத் துறை ஊழியர்கள் வரை அனைவரிடமும் தொடர்ந்து நெருக்கமாக இருப்பதையும் குற்றமாகச் சொன்னால், அதில் யாரைத் தண்டிக்க முடியும்? அப்படித் தண்டனை வழங்குவதற்குத் தகுதியான வகையில், எந்தக் குற்றத்தை சி.பி.ஐ நிருபித்துள்ளது?

தகுதியற்ற நிறுவனங்கள்!

‘ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்த நிறுவனங்கள் எப்படித் தொலைத்தொடர்புத்துறையில் தொழில் செய்யலாம், அதற்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்ற அடிப்படையில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ‘ரியல் எஸ்டேட் தொழில் செய்த டி.பி குரூப் நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் தொழிலில் ஈடுபட்டன. அதற்கு ராசா உதவினார்’ என்றும் மற்றொரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. ‘அந்த நிறுவனங்களின் தகுதியைப் பரிசீலிக்காமல், அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனங்களின் போர்டு மீட்டிங் தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பரிசீலிக்கும்போது, ரியல் எஸ்டேட் செய்த நிறுவனம் தொலைத்தொடர்புத்துறையில் இறங்குவதற்கு முடிவெடுத்து அதை முறையாகச் செய்துள்ளது தெரியவருகிறது. இன்றைக்கு, தனியார் நிறுவனங்கள் எதுவும் ஒரே தொழிலைச் செய்வதில்லை. அப்படித்தான் செய்ய வேண்டும் என்று யாரும் யாரையும் நிர்பந்தம் செய்யவும் முடியாது. அவர்களுக்குச் சாதகமாக ஆ.ராசா செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் உள்ளது? அதற்காக எந்த விதிமுறைகள் மீறப்பட்டன என்பதை சி.பி.ஐ நிரூபிக்கவில்லை.

கட்டணத்தில் மாற்றம்!

விண்ணப்பங்களுக்கான கட்டணம், நுழைவுக்கட்டணம் போன்றவற்றில் டிராய் பரிந்துரைகளை ஆ.ராசா மீறிவிட்டார் என்று குற்றம்சாட்டப் பட்டுள்ளது. முதலில், 800, 900, 1,800 மெஹாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை எந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றோ, அதன் விண்ணப்பம் மற்றும் நுழைவுக் கட்டணங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றோ குறிப்பிட்டு டிராய் எந்தப் பரிந்துரையையும் செய்யவில்லை. கட்டணம் தொடர்பாக அப்படி டிராய் கொடுத்த சில பரிந்துரைகள் ஆ.ராசாவின் தொலைத்தொடர்புத்துறைக்கு மட்டும் போகவில்லை; மத்திய நிதி அமைச்சகத்துக்கும் போயுள்ளது. நிதி அமைச்சகமும் அதற்கு  எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ‘பிரதமரை இதில் தவறாக வழிநடத்தினார் ஆ.ராசா’ என்று அரசுத் தரப்பு சொல்கிறது. ஆனால், பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு சாட்சியையாவது அதற்குச் சான்றாக சி.பி.ஐ தரப்பால் கொண்டு வர முடிய வில்லை. இது தொடர்பாக, ஆ.ராசா பிரதமருக்கு எழுதிய கடிதங்களைப் பிரதமர் பார்த்தார், படித்தார், அதில் முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தார் என்பதற்கு எந்தவிதமான ஆவணங்களையும் சி.பி.ஐ சமர்ப்பிக்கவில்லை.

p2b_1513959131.jpg

கலைஞர் டி.வி-க்கும் ராசாவுக்கும் என்ன தொடர்பு?

“ஆ.ராசாவும் கனிமொழியும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள்; கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியில் முக்கியப் பங்குதாரர்; கலைஞர் தொலைக்காட்சிக்கு லைசென்ஸ் பெறுவதற்கு ராசா உதவினார்; அதனால், கலைஞர் தொலைக்காட்சிக்கும் ஆ.ராசாவுக்கும் தொடர்பு இருக்கிறது. 2ஜி-யில் ஆதாயம் அடைந்த நிறுவனங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்ததன் மூலம், ராசாவுக்கு லஞ்சம் கொடுத்தன. அந்த லஞ்சம்தான் கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த 200 கோடி ரூபாய் பணம்” என்று சி.பி.ஐ வாதிட்டுள்ளது.

ஆ.ராசா, கனிமொழி இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள். ஒரு கட்சியின் எம்.பி-க்களும் அமைச்சர்களும் சந்திப்பதும் பேசுவதும் இயல்பானது. ஆ.ராசா இதேபோல் கனிமொழியை மட்டும் சந்திக்கவில்லை; அவர் சார்ந்த கட்சியின் அமைச்சர்கள், எம்.பி-க்கள், மாற்றுக் கட்சி எம்.பி-க்கள் எனப் பலரையும் சந்தித்துள்ளார். மேலும், இந்த அடிப்படையில் ராசா, கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்தார் என்பதற்கோ, அவர் சொல்லித்தான் சினியூக், குஷேகான் நிறுவனங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் முதலீடு செய்தன என்பதற்கோ, எந்த ஆதாரங்களையும் சி.பி.ஐ சமர்ப்பிக்கவில்லை. கலைஞர் தொலைக்காட்சிக்கும், அந்த நிறுவனங்களுக்கும் நடைபெற்ற பணப் பரிவர்த்தனை தனி. அதில் ராசாவைக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு ஆதாரங்கள் இல்லை.

p2d_1513959191.jpg

கோப்புகள்... ஆவணங்கள்!

தொலைத்தொடர்புக் கொள்கை பற்றிய முழுமையான, தெளிவான கோப்புகள் அரசாங்கத் திடமும் இல்லை; சி.பி.ஐ வசமும் இல்லை. இந்த வழக்குத் தொடர்பாக ஒவ்வொரு அதிகாரியும், ஒவ்வொருவிதமான கருத்தைப் பதிவு செய்துள்ளனர். வழக்கை விடுங்கள்... அவர்களின் துறை பற்றிய தகவல்கள், தொழில்நுட்பங்கள் தொடர்பாகக்கூட, அந்த அதிகாரிகள் முழுமையாகத் தெரிந்துவைத்திருக்க வில்லை. அந்த அளவுக்கு அவை  டெக்னிக்கலாக உள்ளன. இந்த நிலையில், சில அதிகாரிகளின் கருத்து களை வாக்குமூலங்களாகப் பதிவுசெய்து, அவற்றையே ஆதாரமாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ சமர்ப்பித்துள்ளது. 

இந்த விவகாரம் வெடித்த 2009-ம் ஆண்டு இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த சி.பி.ஐ., அதன்பிறகு ஒன்றுமே செய்யவில்லை. இந்த வழக்குக்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்ட சி.பி.ஐ முனையவில்லை. 2010-ம் ஆண்டு, ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தைப் பூதாகரமாக்கின. அதன்பிறகு அவசர அவசரமாகச் செயல்பட்ட சி.பி.ஐ., தங்களுக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. சி.பி.ஐ-க்கு இந்த விவகாரம் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஊடகங்களில் வெளியான செய்திகள், குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தவர்கள் அளித்த விவரங்கள் ஆகியவற்றை மட்டுமே வைத்துக் குற்றப்பத்திரிகையை எழுதியுள்ளது. முழுக்க முழுக்க சில உதிரித் தகவல்களை வைத்து, அவற்றை இணைத்துத் திரித்துத் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை இது.

தொலைத்தொடர்புக் கொள்கை, தொலைத்தொடர்புத்துறையின் செயல்பாடுகள் ஆகியவற்றைச் சரியாக ஆவணப்படுத்தி வைக்கவில்லை. பல முக்கியமான முடிவுகளை அதிகாரிகள் வெறுமனே தங்களுடைய சொந்தக் கையெழுத்தில் எழுதி வைத்துள்ளனர். அதில் டெக்னிக்கலாக உள்ள விஷயங்களும் புரியவில்லை; அந்தக் கையெழுத்தும் புரியவில்லை. தங்களுக்கே புரியாத வார்த்தைகளில் இருக்கும் இந்த விதிமுறைகளையும் கொள்கை முடிவுகளையும் நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்தி லாபமடைந்தன என்பதை ஏற்க முடியாது. இப்படிப்பட்ட பிழைகளால், இந்த வழக்கை சி.பி.ஐ உள்பட ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் புரிந்துகொண்டு தவறாக சித்திரித்துள்ளனர்.

p2c_1513959159.jpg

‘ஏலம் நடத்தவில்லை என்பதால்தான் நஷ்டம்’ என்பதற்கும், ‘அந்த முடிவை ராசாதான் எடுத்தார்’ என்பதற்கும் எந்தவிதமான ஆதாரமும் இல்லை. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை, சில விஷயங்களைத் தேடியுள்ளன. ஆனால், அவை கிடைக்கவில்லை. அதனால், விவகாரத்தைத் தங்களுக்கு ஏற்றவகையில் புரிந்துகொண்டு வழக்கை சித்திரித்துள்ளன. குற்றம் நடந்ததாகச் சொல்லும் சி.பி.ஐ., அதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. அதனால், அனைவரையும் விடுதலை செய்கிறேன்’’ என்றிருக்கிறார் சைனி.

நீதிபதி சைனி, சி.பி.ஐ-க்கு எதிராக எழுதியுள்ள இந்தக் குற்றப்பத்திரிகையிலிருந்து சி.பி.ஐ எப்படித் தப்பிக்கப்போகிறது?

- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: கே.ஜெரோம்


அதிலும் விடுதலை!

2ஜி தொடர்பான மூன்று வழக்குகளில் இரண்டு தீர்ப்புகளை நீதிபதி சைனி எழுதினார். சி.பி.ஐ பதிவுசெய்த வழக்கில், 1,552 பக்கங்களில் ஒரு தீர்ப்பும், அமலாக்கத் துறை பதிவுசெய்திருந்த வழக்கில் 105 பக்கங்களில் மற்றொரு தீர்ப்பும் எழுதியிருந்தார். அமலாக்கத் துறை தீர்ப்பில், “2ஜி வழக்கில் ஆதாயம் அடைந்த டி.பி குரூப் நிறுவனங்கள், கலைஞர் தொலைக்காட்சியில் 200 கோடி ரூபாயை முதலீடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால், அது ஆவணங்களின் அடிப்படையில் குற்றம் என்ற வகையில் தொடரப்படவில்லை. சி.பி.ஐ, ராசாவைக் குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவுசெய்துள்ளது. சி.பி.ஐ தொடர்ந்துள்ள 2ஜி வழக்கிலேயே குற்றம் எதுவும் நடக்கவில்லை எனும்போது, அதே குற்றச்சாட்டுகளையும் ஆவணங்களையும் அடிப்படையாக வைத்து அதன் நீட்சியாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கைப் பற்றி விவாதிக்கவும் ஆய்வு செய்யவும் எதுவுமில்லை. அதனால், இதிலும் அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


ரத்தான லைசென்ஸ் கிடைக்குமா?

ந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்போவதாக சி.பி.ஐ உடனே அறிவித்துவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் சைனி விசாரித்த இந்த வழக்குகள், முழுக்கவே உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் 122 லைசென்ஸ்களை 2012-ம் ஆண்டு பிப்ரவரியில் ரத்துசெய்தது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்ச். ‘இப்போது அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த லைசென்ஸ்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீண்டும் கிடைக்குமா’ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், ‘‘லைசென்ஸ்கள் ரத்துசெய்யப்பட்ட விவகாரம் சிவில் வழக்கு; சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது கிரிமினல் வழக்கு. எனவே, இந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாக வைத்து யாரும் தங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட லைசென்ஸுக்கு உரிமைகொண்டாட முடியாது’’ என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

தி.மு.க., வழக்கில் அ.தி.மு.க., மூளை:நன்றி சொன்னார் ராஜா?

 
 
Advertisement
 
தி.மு.க., வழக்கு, அ.தி.மு.க., மூளை,நன்றி, சொன்ன, ராஜா?
 

 

 

சென்னை:அலைக்கற்றை ஊழல் தொடர்பான வழக்கில், டில்லி, பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி, ஆறு ஆண்டுகளுக்கு முன், விசாரணையை தொடங்கினார். அப்போது, இந்த வழக்கை எப்படி நடத்திச் செல்வது என புரியாமல், தி.மு.க., தரப்பு தடுமாறியது. சட்ட வல்லுநர்கள் பலரையும் அணுகி, கருத்துக்களைக் கேட்டனர்.
அப்போது, பார் கவுன்சில் முன்னாள் தலைவர் ஒருவரிடம் கருத்து கேட்டபோது, இந்த விஷயத்தில், சட்ட வல்லுநரும்; முன்னாள் சபாநாயகருமான பி.எச்.பாண்டியனிடம் கருத்துக் கேட்டு, அதன்படி செய்யலாம் என கூறியுள்ளார்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கனிமொழி தரப்பினர், பி.எச்.பாண்டியனிடம் ஆலோசனைகள் கேட்டுள்ளனர்.அதன்படி, அலைக்கற்றை வழக்கில் ஏகப்பட்ட டாக்குமெண்ட்களை பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், வழக்கை விரைந்து நடத்தாமல், பொறுமையாகவே நடத்த வேண்டும்; எல்லா டாக்குமெண்ட்களையும் தீவிரமாக படித்து ஆராய்ந்த பின் தான், தீர்ப்பு வழங்க வேண்டும் என, நீதிபதி ஓ.பி.சைனியிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என, பி.எச்.பாண்டியன் சொல்லி இருக்கிறார்.
அந்த அடிப்படையில், சைனியை சந்தித்த கனிமொழி மற்றும் ராஜா தரப்பினர், பாண்டியனின் யோசனையை சொல்லி, அதையே நடைமுறைப்படுத்த வேண்டும் என சொல்ல, அதன்படியே செய்தார் நீதிபதி. இதையடுத்தே, இப்படியொரு தீர்ப்பு வந்துள்ளதால், ராஜா தரப்பினர், அ.தி.மு.க.,காரரான பி.எச்.பாண்டியனுக்கு நன்றி சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1924906

 
 
'2ஜி' தீர்ப்பு: மோடி - கருணாநிதி
சந்திப்பின் தாக்கமா?
 
 
 

தி.மு.க., தலைவர், கருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்ததை, '2ஜி' வழக்கு தீர்ப்புடன் முடிச்சு போட்டு, சில தரப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதற்கு, சரியான விளக்கம் அளிக்க, பா.ஜ.,வினர் தயங்குகின்றனர்.

 

'2ஜி' தீர்ப்பு: மோடி - கருணாநிதி சந்திப்பின் தாக்கமா?


மத்திய பா.ஜ., அரசு, ஊழல் எதிர்ப்பை, முக்கிய முழக்கமாக வைத்து, அரசியல் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரங்களில், '2ஜி' ஊழல் வழக்கு குறித்த விமர்சனம், பிரதானமாக இருந்து வந்தது.

 

நலம் விசாரிப்பு



இந்நிலையில், நவம்பர் துவக்கத்தில், சென்னை வந்த பிரதமர் மோடி, தி.மு.க., தலைவர்,
கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத் தில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கையை பிடித்தபடி, மோடி உரை யாடினார்.


இது, பா.ஜ.,வுடன் இணக்கமாக இருக்கும், ஆளும் அ.தி.மு.க.,வில், சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு, தி.மு.க., வுடன், பா.ஜ., கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அரசியல் வட்டாரங்களில்

பேசப்பட்டது.இப்பின்னணியில், '2ஜி' வழக்கு தீர்ப்பு வெளியாகி, அதில், தி.மு.க.,வினர் விடுதலை யானதும், தமிழக அரசியல் வட்டாரங் களில், மீண்டும் இந்த பேச்சு உயிர் பெற்றுள்ளது. தீர்ப்பின் பின்னணியில், பா.ஜ., இருக்கலாம் என்ற கருத்தும், 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., - தி.மு.க., கூட்டணி மலரும் என்றும், பல தரப்பிலும் கருத்துகள் பரப்பப் படுகின்றன.இதுகுறித்து, 'தீர்ப்புக்கும், பா.ஜ.,வுக்கும் தொடர்பு இல்லை. அதைமட்டும் தான், இப்போது சொல்ல முடியும்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் நழுவுகின்றனர்.

 

வாழ்த்து



அதேநேரத்தில், பா.ஜ., நிர்வாகிகளில் ஒருவரான நாராயணன் திருப்பதி, தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'ஆயிரமாயிரம் கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், மிகப்பெரிய வழக்கில் இருந்து விடுதலையான, கனிமொழி, ராஜாவுக்கு வாழ்த்துகள்' என, குறிப்பிட்டுள்ளார். அதற்கு, பலரும், 'அடுத்து என்ன; கூட்டணி பேச்சு தானே' என, 'கமென்ட்' பதிவு செய்துள்ளனர்.

 

இதுகுறித்து, தமிழக பா.ஜ.,வினர் கூறியதாவது:



வரும், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வின் நிலை, எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்போது, தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து, பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது.மேலும், '2ஜி' வழக்கு விசாரணை முடிந்து, நவம்பரில் தீர்ப்பு என, அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில், பிரதமர் மோடி, கருணாநிதியை சந்தித்தது,எங்களுக்கே ஆச்சரியமாக தான் இருந்தது.எனினும், இது, இறுதி தீர்ப்பு அல்ல. எனவே, இதை வைத்து, மேலிடத்தின் அணுகுமுறையை கணிக்க முடியாது. மேலும், முன்பை விட, தற்போது சற்று புத்துணர்வு

 

பெற்றுள்ள காங்கிரஸை விட்டு, தி.மு.க., விலகுமா என்பதும் கேள்விக்குறி.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

அம்பானி காரணம்?:



இந்திய கோடீஸ்வரர் களில் ஒருவரான அனில்அம்பானியின், 'ஏடிஏ' குழுமத்தின், மூன்று உயர் அதிகாரிகள், போலி நிறுவனங் கள் உருவாக்கி, அவற்றின் மூலம், 'ஸ்வான்' நிறுவனம் வழியாக,கலைஞர், 'டிவி' நிர்வாகிக்கு, 200 கோடி ரூபாய் கைமாற வழி செய்ததாக, '2ஜி' வழக்கில், சி.பி.ஐ., கூறியிருந் தது.ஆனால், அம்பானி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யாமல், அவரை தங்கள் தரப்பு சாட்சியாக, சி.பி.ஐ., சேர்த்திருந்தது.


நீதிமன்றத்தில், 'போலி கம்பெனி பெயரே நினைவுக்கு வரவில்லை' என, தன் நிறுவன அதிகாரிகளுக்கு ஆதரவாக, அம்பானி வாக்கு மூலம் தந்தார். அதனால், சி.பி.ஐ., வாதம் நீர்த்துப் போனது. நீதிபதி சைனி, 'நீங்கள், நிறைய விஷயங்களை மறந்து விடுகிறீர்கள்' என, கடிந்து கொண்டார்.சி.பி.ஐ., பிடி தளர்ந்த தற்கு, இந்த வழக்கில், பல முக்கிய புள்ளி களுக்கு தொடர்பிருந்ததே காரணம் என்றும், அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1924873

On 23/12/2017 at 11:20 AM, பெருமாள் said:

தோற்கடித்தது மட்டும் அல்ல ஒரு இனத்தையே அழித்த எண்ணும் அதுதான் . இந்த தி மு கா  போரை நிப்பாட்டுவதுக்கு என்று போய் டெல்லியில் சோனியாவின் காலில் விழுந்து அழுவது கனியை  இந்த பிரச்னையில் இருந்து மாட்டாமல் விடும்படி மட்டுமே.

2G வழக்குக்குக்காக தான் கருணாநிதிக்கு         போரை நிறுத்தவில்லை என்பது ஏற்று கொள்ள கூடியது அல்ல. கருணாநிதி போரை நிறுத்தாதற்கு காரணம் தமிழ் இனமும் அதன் அடையாளமும் அழிய வேண்டும் என்று விருபினார் அதனால் அழித்தார், இவர் ஒரு தெலுங்கர் திராவிடம் என்னும் பெயரால் தமிழ் உணர்வை தமிழ் நாட்டில் அழித்தார், ஈழத்தில் போர் நடத்த ஆதரவு கொடுத்து அழித்தார், இன்னமும் தெளிவாக கூறினால் சிங்களவனுக்கு நிகராக புலிகள் அழிய வேண்டும் என்று விரும்பியவர்கள் இவர்களே.

அதை விட 2G வழக்கு தான் காரணம் என்பது திராவிட கும்பலினால் பரப்பப்படும் ஒரு நொண்டி சாக்கு.

ஒரு கேள்வி கேற்கிரன் 2G வழக்கு தான் காரணம் என்றால்  அதற்கு முன்னர் தமிழ் இனத்துக்காக என்ன நன்மைகள் கருணாநிதி செய்தார் ??????

 

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Dash said:

2G வழக்குக்குக்காக தான் கருணாநிதிக்கு         போரை நிறுத்தவில்லை என்பது ஏற்று கொள்ள கூடியது அல்ல. கருணாநிதி போரை நிறுத்தாதற்கு காரணம் தமிழ் இனமும் அதன் அடையாளமும் அழிய வேண்டும் என்று விருபினார் அதனால் அழித்தார், இவர் ஒரு தெலுங்கர் திராவிடம் என்னும் பெயரால் தமிழ் உணர்வை தமிழ் நாட்டில் அழித்தார், ஈழத்தில் போர் நடத்த ஆதரவு கொடுத்து அழித்தார், இன்னமும் தெளிவாக கூறினால் சிங்களவனுக்கு நிகராக புலிகள் அழிய வேண்டும் என்று விரும்பியவர்கள் இவர்களே.

அதை விட 2G வழக்கு தான் காரணம் என்பது திராவிட கும்பலினால் பரப்பப்படும் ஒரு நொண்டி சாக்கு.

ஒரு கேள்வி கேற்கிரன் 2G வழக்கு தான் காரணம் என்றால்  அதற்கு முன்னர் தமிழ் இனத்துக்காக என்ன நன்மைகள் கருணாநிதி செய்தார் ??????

 

யுத்தம் நடந்த காலபகுதியில் போரை நிறுத்த சொல்லி  ஆரியரும் பார்க்காமால் திராவிடமும் பார்க்காமல் எல்லாருக்கும் போன் போனது ஏனென்றால் பொதுமக்களின் பாரிய அழிவை தடுக்க எல்லாருக்கும் போன் போன விடயம் இங்கு எல்லாருக்கும் தெரியும் மற்றும்படி கர்ணாநிதி ஒன்றும் செய்யவில்லை  இந்திய அமைதிப்படை திரும்பி போகும்போது என் உடன் பிறப்புக்களை அழித்துவிட்டு வருபவர்களை நான் வரவேற்கக்க மாட்டன் அடாத்து பண்ண அதையே சாட்டா வைத்து இதே ஜெயலலிதா டெல்லிக்கு பிரசர் குடுக்க கருணாவின் ஆட்சி பறிக்கபட்டது .பின்பு அதே ஜெயலலிதா எங்களுக்கு ஆதரவாய் எத்தனை தீர்மானம்களை போட்டவர் என்பதும் அதுக்கு பதிலடியா சிங்களவர்கள் போட்ட கார்ட்டூன் அநாகரிகத்தின் உச்சம் .அரசியல் ஒரு பரமபதம் அதை சரியாக விளையாடியாவர் இலங்கை தமிழ் அரசியலில் பாலா அண்ணே ஒருத்தர்தான். நீங்கள் என்னடா என்றால் சுமத்திரன் போல் சவுண்டு குடுக்கிறியள்.

1 hour ago, பெருமாள் said:

யுத்தம் நடந்த காலபகுதியில் போரை நிறுத்த சொல்லி  ஆரியரும் பார்க்காமால் திராவிடமும் பார்க்காமல் எல்லாருக்கும் போன் போனது ஏனென்றால் பொதுமக்களின் பாரிய அழிவை தடுக்க எல்லாருக்கும் போன் போன விடயம் இங்கு எல்லாருக்கும் தெரியும் மற்றும்படி கர்ணாநிதி ஒன்றும் செய்யவில்லை  இந்திய அமைதிப்படை திரும்பி போகும்போது என் உடன் பிறப்புக்களை அழித்துவிட்டு வருபவர்களை நான் வரவேற்கக்க மாட்டன் அடாத்து பண்ண அதையே சாட்டா வைத்து இதே ஜெயலலிதா டெல்லிக்கு பிரசர் குடுக்க கருணாவின் ஆட்சி பறிக்கபட்டது .பின்பு அதே ஜெயலலிதா எங்களுக்கு ஆதரவாய் எத்தனை தீர்மானம்களை போட்டவர் என்பதும் அதுக்கு பதிலடியா சிங்களவர்கள் போட்ட கார்ட்டூன் அநாகரிகத்தின் உச்சம் .அரசியல் ஒரு பரமபதம் அதை சரியாக விளையாடியாவர் இலங்கை தமிழ் அரசியலில் பாலா அண்ணே ஒருத்தர்தான். நீங்கள் என்னடா என்றால் சுமத்திரன் போல் சவுண்டு குடுக்கிறியள்.

அப்படி இல்லை, கருணாநிதியின் Ideology தமிழ் இன எதிர்ப்பு, தெலுங்கு ஆதிக்கம், அவர் எவ்வழி கொண்டும் தமிழ் இனத்துக்கு ஆதரவு தர போவதில்லை,இந்த தெலுங்கர் செய்வது தமிழ் இன அழிப்பு மட்டுமே.

  • தொடங்கியவர்

2ஜி வழக்கு தீர்ப்பு: மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை

 

 
rajakanimozhijpg

கனிமொழி, ஆ.ராசா | கோப்புப் படம்

2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, சட்ட நிபுணர்களுடன் சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏற்கெனவே தெரிவித்து இருந்தன. இதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன், சிபிஐ ஆலோசனையைத் தொடங்கியுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக முதல்கட்டமாக, சிபிஐயின் சட்ட நிபுணர்கள் ஆலோசித்து வருகின்றனர். சிபிஐ தரப்பில் ஆஜராகி சாட்சியம் அளித்தவர்களின் வாதங்கள் சரியாக வைக்கப்படவில்லை என்று கூறப்படுவதால், அதுதொடர்பான சட்ட நிபுணர்களிடம் சிபிஐ தரப்பில் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ''2ஜி வழக்கில் முறைகேடுகள் நடந்ததற்கான முகாந்திரங்கள் இருப்பதாக கருதியதால்தான், கடந்த 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்தது. எனவே, அப்போது நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட சான்றுகளை ஆராய்ந்து வருகிறோம். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் வாதங்களை தயாரித்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/india/article22284656.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.