Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகலில் வேலைக்காரி இரவில் இன்போர்மர் – தீரன் திரைப்பட பாணியில் தகவல் வழங்கும் பெண் சிக்கினார்…

Featured Replies

பகலில் வேலைக்காரி இரவில் இன்போர்மர் – தீரன் திரைப்பட பாணியில் தகவல் வழங்கும் பெண் சிக்கினார்…

informer.jpg?resize=561%2C491
யாழ்.புறநகர் பகுதிகளில் பகல் வேளைகளில் வீட்டு வேலைக்கு செல்லும்  பெண் இரவு வேளைகளில் கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்து வந்த நிலையில் மானிப்பாய் காவற்துறையினரால்  கைது செய்யப்பட்டு உள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த 55 வயதான பெண்ணொருவரே கைது செய்யப்பட்டு உள்ளார்.

அது தொடர்பில் காவற்துறையினர் தெரிவிக்கையில் ,

“கடந்த காலங்களில் சங்கானையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் , சுதுமலையில் மதகுரு வீட்டில் இடம்பெற்ற நகை மற்றும் பணம் திருடபட்ட சம்பவம் , வட்டுக்கோட்டையில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு ஆகிய சம்பவங்களுடன் குறித்த பெண்ணுக்கு தொடர்பு உள்ளது.

இந்தப் பெண் வயோதிபர்கள் வாழும் வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை செய்யவதற்கு என வேலைக்கு சேர்ந்து கொள்வார். அங்கு வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு வீட்டில் பணம் , நகை என்பவற்றை வைக்கும் இடங்களை கண்காணித்து அது தொடர்பில் தன்னுடன் தொடர்பில் உள்ள திருடர்கள் , கொள்ளையர்களுக்கு தகவல்கள் வழங்குவார்.

குறித்த பெண் வழங்கிய தகவலின் பிரகாரம் திருடர்கள் கொள்ளையர்கள் அந்த வீடுகளில் இறங்கி திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடுவார்கள். பின்னர் தாம் திருடிய மற்றும் கொள்ளையடித்த நகை பணத்தில் தகவல் தந்த குறித்த பெண்ணுக்கு பங்கு கொடுப்பார்கள்.

அந்நிலையில் இந்தப்  பெண் தொடர்பில் எமக்கு கிடைத்த இரசிய தகவலின் அடிப்படையில் பெண்ணை கைது செய்தோம். கைது செய்த பெண்ணிடம் இருந்து 2 தங்க சங்கிலிகள் , மற்றும் மோதிரம் ஒன்று என்பன மீட்கப்பட்டு உள்ளன.” என தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2017/57741/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா படம் காட்டுறாங்கள் போலீஸ்காரன்கள்.

  • தொடங்கியவர்

இணைப்பு 2 -பகலில் வேலைகாரி – இரவில் இன்போர்மராக செயற்பட்ட பெண் வழங்கிய தகவலின் பிரகாரம் இருவர் கைது

jaffna-informer.jpg?resize=896%2C504

யாழ். புறநகர் பகுதிகளில் பகல் வேளைகளில் வேலைகாரியாகவும் , இரவு வேளைகளில் இன்போர்மராகவும் செயற்பட்ட பெண் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை கட்டுடை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயது இளைஞர்களே மானிப்பாய் இவ்வாறு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் சங்கானையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் , சுதுமலையில் மதகுரு வீட்டில் இடம்பெற்ற நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் , வட்டுக்கோட்டையில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு ஆகிய சம்பவங்களுடன் குறித்த கும்பலுக்கு தொடர்பு உள்ளது. முன்னதாக கைது செய்யப்பட்ட குறித்த பெண் வயோதிபர்கள் வாழும் வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை செய்யவதற்கு என வேலைக்கு சேர்ந்து கொள்வார்.

அங்கு வீட்டு வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டு வீட்டில் பணம் , நகை என்பவற்றை வைக்கும் இடங்களை கண்காணித்து அது தொடர்பில் தன்னுடன் தொடர்பில் உள்ள திருடர்கள் , கொள்ளையர்களுக்கு தகவல்கள் வழங்குவார். குறித்த பெண் வழங்கிய தகவலின் பிரகாரம் திருடர்கள் கொள்ளையர்கள் அந்த வீடுகளில் இறங்கி திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடுவார்கள். பின்னர் தாம் திருடிய மற்றும் கொள்ளையடித்த நகை பணத்தில் தகவல் தந்த குறித்த பெண்ணுக்கு பங்கு கொடுப்பார்கள்.

அந்நிலையில் குறித்த பெண் தொடர்பில் எமக்கு கிடைத்த இரசிய தகவலின் அடிப்படையில் பெண்ணை கைது செய்தோம். கைது செய்த பெண்ணிடம் இருந்து 2 தங்க சங்கிலிகள் , மற்றும் மோதிரம் ஒன்று என்பன மீட்கப்பட்டு உள்ளன. மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.

jaffna-informer-2.jpg?resize=1024%2C576

 

http://globaltamilnews.net/2017/57741/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.