Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் எக்ஸ்பிரஸ்

Featured Replies

காதல் எக்ஸ்பிரஸ்

p22.jpg
p22a.jpg
white_spacer.jpg
title_horline.jpg
p22c.jpg
white_spacer.jpg

p22b.jpg

 

 

 

 

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg
மின்னல் வேகத் தொடர் - 2 white_spacer.jpg
title_horline.jpg
 
காதல் எக்ஸ்பிரஸ்
ஷங்கர் பாபு
white_spacer.jpg

வக்கிரகங்களை வணங்கிக்கொண்டு இருந்த அவளைப் பார்த்துப் பிரமித்து நின்றான் கிரி.

எந்த நிமிடத்திலும் வானிலிருந்து ஒரு ரிஷியோ, கந்தர்வனோ வெளிப்பட்டு, ‘உனது தண்டனைக் காலம் முடிந்தது. அற்ப மானிடர்கள் உன்னை ஸைட் அடிப்பதைச் சகிக்க முடியவில்லை. புஷ்பக விமானம் இன்னும் சில நொடிகளில் வந்துவிடும். ஏறிக் கொள்...’ என்று அவளைக் கூட்டிச் சென்றுவிடுவார்களோ என்று உள்ளூர பயம் ஏற்பட்டது.

‘‘பூமி கிரகத்துக்கு முதன்முறையாக...’’ என்ற குரல் எங்கிருந்தோ ஒலிப்பதைக் கேட்டவாறு, அவளை ஆராய்ந்தான். 22 அல்லது 23 வயது இருக்கலாம்.

p42.jpg

பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். சில நகைகளுக்கு கௌரவத்தையும், கொஞ்சம் பூக்களுக்குத் திமிரையும் தந்திருந்தாள். பறக்கிற எண்ணம் மீன்களுக்கு வந்தால் குருடாகிப் போவாள் என்ற கவலையைத் தந்தாள். இவளைக் காதலித்தால் என்ன?

‘தேங்க் காட்! வாழ்க்கையே இப்பதான் அர்த்தமுள்ளதா தோணுது!’

‘அதுக்குத்தான் இப்படி அங்கங்கே அலைய விட்டுருக்கேன். ஆனா, நிதானமா யோசிச்சு...’

கிரி வேகமாக அவளை நெருங்கியபோது, அவளது தோழி புகுந்து ‘‘கன்யா, மாப்பிள்ளை வெயிட்டிங்! முகூர்த்தத்துக்கு நேரம் ஆகுது!” என்றாள்.

-ஜிக்புக்... ஜிக்புக்

 

https://www.vikatan.com

தொடரும்....

  • தொடங்கியவர்

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

காதல் எக்ஸ்பிரஸ்
மின்னல் வேகத் தொடர் (3) white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
white_spacer.jpg

கி ரி அவனையறியாமல் கன்யாவின் பின்னால் சென்றான். சோகத்தில் வேகமாக வளர்ந்த தாடி, இன்னொரு சந்நிதியில் உதிர்ந்துவிட்டது.

அங்கே மணக்கோலத்தில் இருந்த ஜோடி அருகே நின்றாள் கன்யா. அவசரமாகச் சடங்குகள் நடப்பதைப் பார்த்தவாறு அவளை வியக்கத் துவங்கினான் கிரி. என்ன அழகான இடுப்பு!

kadhal.jpg

சற்றுத் தள்ளி நின்றிருந்த மணமகன் தோழன், கன்யாவைக் கூப்பிட்ட பெண்ணிடம் மெல்லிய குரலில், ‘‘பயமா இருக்கு! பெரிய எடத்து விவகாரம். எந்த தைரியத்துல வந்திருக்கோம்? புரியல..! மாட்டினா தொலைஞ்சோம். மெள்ள நழுவிரணும்..!’’ என்றான்.

தாலி கட்டியதும் நிலவிய சந்தோஷச் சூழலில், கோழைகள் கைகொடுத்து விட்டு, ‘‘கன்யா, வந்ததுலேர்ந்து தலைவரைக் கண்டுக்கல. ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துடறோம்!’’ என்று அவசரமாக நகர்ந்தார்கள்.

கோயில் அலுவலர் ஒரு ரெஜிஸ்டருடன் வரவும், தம்பதியர் கையெழுத்திட, கன்யாவும் சாட்சிக் கையெழுத்துப் போட்டாள். ‘‘இன்னும் ஒரு விட்னெஸ் வேணும்மா!’’

கன்யா ‘காணாமல் போனவர்’களைத் தேடிவிட்டுத் தற்செயலாக கிரியைப் பார்த்து, ‘‘எக்ஸ்க்யூஸ் மி!’’ என்றாள்.

 

white_spacer.jpg

 

ஜிக்புக்... ஜிக்புக்

 

 

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

காதல் எக்ஸ்பிரஸ்
மின்னல் வேகத் தொடர் (4) white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
white_spacer.jpg

p56.jpg செ ன்னையின் அடியாள் சப்ளையர் போலிருந்த அவர் தன் தலைமை, துணை, உதவி ஜால்ராக்களுடன் கோயிலுக்குள் நுழைந்தார்.

‘‘கார்ல ஏறும்போதுதான் பார்த்தேன். மூணு ஜோடி. பைக்ல ஒருத்தன் போக, மீதி அஞ்சு பேர் கார்ல தப்பிச்சுட்டாங்க...’’

எக்ஸிக்யூடிவ் ஆடை ரவுடி ரெஜிஸ்டரைப் பார்த்து, ‘‘கல்யாணத்தை கன்யா, கிரின்னு ரெண்டு பேர் நடத்திவெச்சிருக்காங்க. கிரியோட அட்ரஸ் மட்டும் இருக்கு. உங்க பொண்ணு கல்யாணத்தை ஒருத்தன் முன் நின்னு நடத்தி வைக்கிறான்னா, அவனைச் சும்மா விடக் கூடாது. இவனத் தட்டுனா மீனாம்மா இருக்கிற இடம் தெரிஞ்சுடும்..!’’ என்றான்.

ரயில்வே ஸ்டேஷன். ‘‘இனி பயமில்ல...’’ என்றாள் பிளாட்ஃபாரத்தில் நின்றிருந்த கன்யா. ‘‘சந்தோஷமா இருடி! நாலஞ்சு நாள்ல உன் அப்பா கோபம் போயிடும்..!’’

மீனாவின் போன் ஒலித்தது. ‘‘மை காட்!’’ என்று கட் செய்தாள். ‘‘அப்பாவுக்குத் தெரிஞ்சுபோச்சு! யாரோ கிரியாம்... அவனத் தேடிக் கிளம்புறாங்க... எவன்டி அது?’’

கன்யா கையசைத்து, ‘‘எவனோ..! உதை படட்டும். நாம என்ன பண்றது?’’ என்றாள் அலட்சியமாக!

 
white_spacer.jpg
ஜிக்புக்... ஜிக்புக்

தொடரும்....

//www.vikatan.com

  • தொடங்கியவர்

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

காதல் எக்ஸ்பிரஸ்
மின்னல் வேகத் தொடர் (5) white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
white_spacer.jpg

‘‘டே ய், இன்னிக்குக் கோயில்ல...” என்று அறைக்குள் நுழைந்த கிரி திடுக்கிட்டான். அவனது நண்பன் கையில் கட்டு, முகத்தில் பிளாஸ்திரியோடு முனகினான்.

‘‘கிரி, இப்படி ஒரு ரவுடிக் கும்பலைப் பார்த்ததே இல்லடா! அடிச்சுட்டு, மருந்து போட்டுக் கட்டிட்டு, மாத்திரைகூடக் கொடுக்கு றாங்க. கேட்டா மருத்துவப் பிரிவுங்குறாங்க! அதுல ஒரு பொம்பளை குத்து விட்டா பாரு...”

p54.jpg

‘‘பொம்பளையா?’’

‘‘ஆமா! மகளிர் ரவுடிக்கும் 50% இட ஒதுக்கீடு செஞ்சிருக்காங்களாம். உன் போன் நம்பர், கம்பெனி அட்ரஸ் எல்லாம் வாங்கிட்டுப் போயிருக்காங்க. ஏன்டா, உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு இவனுங்க தலைவர் பொண்ணுதானா கிடைச்சுது? வேணாம்டா..! பெரிய எடம். தாங்க மாட்டோம். ஜோடி எங்க இருக்குதுன்னு சொல்லிடு!” என்றான் நண்பன் வேதனையோடு.

‘‘எனக்கு எதுவுமே தெரியாதுடா...’’ என்றான் கிரி பரிதாபமாக!

‘‘உனக்கு ஏன்டா புத்தி இப்படிப் போகுது... இப்ப வந்துருவாங்க. 1 டு 1.30 லஞ்ச் அவர்னு போயிருக்காங்க. இவ்வளவு சிஸ்டமேட்டிக்கான கும்பலோட விஷயத்துல ஏன்டா தலையிடறே..?’’

வேனின் ஓசை கேட்டது.

 
white_spacer.jpg

ஜிக்புக்... ஜிக்புக்

 

 

 

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg
மின்னல் வேகத் தொடர் (6)
காதல் எக்ஸ்பிரஸ் white_spacer.jpg
title_horline.jpg
ஷங்கர் பாபு
white_spacer.jpg
p106a.jpg வே னில் இருந்தவர்கள், கிரி வெளியே ஓடுவதைப் பார்த்து விட்டார்கள். அவர்களில் ஒருவன் தன் செல்போனின் கேமரா வசதியைப் பயன்படுத்தினான்.

‘‘இவனா? இப்பதான் லுங்கி கட்டி பழகியிருப்பான் போல. தாலாட்டுப் பாடினீங்கன்னா பய ஓடி வந்துருவான்! தலைவர் பொண்ணு கல்யாணத்தை நடத்திவைக்கிறான்னா, எவ்வளவு திமிர் இருக்கணும்! துரத்துங்கடா! யாரோட அடில இவன் மீனாம்மா இருக்கிற இடத்தைச் சொல்றானோ, அவங்களுக்குச் சிறப்புப் பரிசு!’’

வேன் விரட்டத் தொடங்கியது.

கிரி திசைக்குழப்பத்துடன் ஓடினான். எப்படியும் இம்சையாளர்கள் பிடித்துவிடுவார்கள் என்று தோன்றியது. ‘கோயிலுக்குப் போனமா, கும்பிட்டமான்னு வந்திருக்கணும். கையெழுத்துப் போட்டு, அட்ரஸ் எழுதி... சே! முட்டாள்தனம்! தேவதைன்னு போனதுக்கு தெருவுல ஓட விட்டுட்டாளே..! வேடிக்கை பார்த்ததுக்கு மெடிக்கல் பில் எவ்ளோனு தெரியலியே...’’

எதிரில் ஒரு ஆட்டோ மோதுவதுபோல் வந்து, வேகமிழந்து, ‘‘கிரி, உள்ள வாங்க..!’’ என்ற குரலுடன் கன்யா வெளிப்பட, கிரி பரவசமாக, சந்தோஷமாக, அவசரமாக ஏறிக்கொண்டான்.

ஆட்டோ வேகம் பிடித்தது.

 
white_spacer.jpg
ஜிக்புக்... ஜிக்புக்

https://www.vikatan.com

தொடரும்....

 

  • தொடங்கியவர்

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

மின்னல் வேகத் தொடர் (7)
காதல் எக்ஸ்பிரஸ் white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
white_spacer.jpg

p54.jpg ‘‘கா தலை மீனா வீட்ல ஒப்புக்கல. இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா, உங்களைக் கையெழுத்துப் போடவே கூப்பிட்டிருக்க மாட்டேன்!’’ என்றாள் கன்யா. இப்போது சுடிதாரில் இருந்தாள். அருகில் சிறிய லெதர்பேக். அழகாய் முடியைக் கோதிவிட்டுத் திரும்பிப் பார்த்து, ‘‘நான் கூப்பிட்டப்ப, நீங்களாவது மறுத்திருக்கலாமே..!’’ என்றாள்.

கிரி மௌனமாக இருக்க... ‘‘அழகான பொண்ணு உதவி கேட்டு மறுத்தா, பசங்க தலை வெடிச்சிரும், இல்ல..?’’

கிரி அசடு வழிந்து, வேனைத் தேடினான். ஆட்டோவின் வேகத்தில் அவளது தேகம் உரசியது.

‘‘போனாப் போகுதுன்னு விட மனசு கேக்கலை. நீங்க எழுதின அட்ரஸ் நினைவு இருந்தது. ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி உங்களை எச்சரிக்கலாம்னு வந்தா... எதிர்த்தாப்புல நீங்க ஓடி வரீங்க! நான்தான் காரணம். ஸாரி... ரொம்ப ஸாரி! உங்களை எங்கே இறக்கிவிடணும்?’’

‘‘உங்க தோழி எங்கே இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமே! சொல்லி, என்னைக் காப்பாத்துங்க. இவங்ககிட்ட மாட்டினேன், அவ்வளவுதான்..!’’

கன்யா யோசித்து... ‘‘இப்ப அவளைக் காட்டிக் கொடுத்தா, எல்லாமே பாழாயிடுமே! ஆனா, யாரோ குடை எடுத்துட்டுப் போகாததுக்கு நீங்க நனையறதும் பாவமா இருக்கு. ஒண்ணு பண்றீங்களா?’’ என்றாள்.

‘‘என்ன?’’

‘‘என்னோட வரீங்களா?’’

‘‘எங்கே?’’ என்றான் சிலிர்ப்பாக.

‘‘தெரியாது!’’ -

 

 

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg
மின்னல் வேகத் தொடர் (8)
காதல் எக்ஸ்பிரஸ் white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
white_spacer.jpg

p56.jpg ங்கு போகிறோம் என்று தெரியாமலா பேக்குடன் கிளம்பினாள்? ஒருவேளை... ஏதாவது சிகிச்சையில் இருப்பவளோ?

‘‘கன்யா, எங்கே போறோம்?’’ என்றான் கிரி.

‘‘கண்ல படற முதல் பஸ் எங்கே போகுதோ, அங்கே! ஆனா, இப்பக்கூட டயம் இருக்கு. நீங்க இறங்கறதுன்னா இறங்கிக்கலாம்.தெரியாத தேவதையைவிட, தெரிஞ்ச சாத்தானே மேல்ங்கிற மாதிரி ஆயிடக் கூடாது!’’

கிரி இதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் முன், துரத்திய வேனும் சிக்னலுக்காக அருகில் நிற்க, கன்யா அவசரமாக அவன் தலையை இழுத்துத் தன் மார்போடு சாய்த்து, அவனை மறைத்துக்கொண்டாள். மெல்லிய செயின் நெருடியது.

அவன் ‘34? 36?’ என்று யோசிக்க, ‘‘போய்ட்டாங்க..!’’ என்று எழுப்பினாள்.

‘‘உங்களோடு வரேன்’’ என்றான்.

‘‘பாருங்க, திருநெல்வேலி பஸ் வருது! போகலாமா?’’

‘‘தாராளமா! ஆனா கிரி, என்னோடு நீங்க தங்க, சில நிபந்தனைகள். நான் போகச் சொல்லும்போது, உடனே நீங்க என்னைவிட்டுக் கிளம்பிடணும்! நானா சொன்னால் ஒழிய, என்னைப் பத்தி எதுவும் கேட்கக் கூடாது!’’

 
white_spacer.jpg
ஜிக்புக்...ஜிக்புக்

 

https://www.vikatan.com

தொடரும்....

  • தொடங்கியவர்

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

மின்னல் வேகத் தொடர் - 9
காதல் எக்ஸ்பிரஸ் white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
white_spacer.jpg

p108.jpg ‘‘எ ன்னைப் பத்தி சொன்னா, கேப்பீங்கல்ல..? ஒரே பையன். படிச்சது கம்ப்யூட்டர். பன்னாட்டு கம்பெனி கஞ்சி ஊத்துது. அடுத்த வாரம் கார் வந்துரும். இன்னிக்கு வாழ்க்கை நல்லாயிருக்கு. நினைச்சதெல்லாம் கிடைச்சிருது. அதனால கொஞ்சம் பயமாவும் இருக்கு...’’ - பேசியபடியே அவளது கைப்பையைச் சுமந்தவாறு கிரி வேகமாக நடந்தான். கன்யா தன் செவித் திறனுக்கு வேலை கொடுத்தது மாதிரி தெரியவில்லை.

எப்போதும் போல் விடிந்த தினம், ஒரு பெண்ணைப் பார்த்தது, அவளுடனேயே பயணம் செய்வது என்று நம்ப முடியாத தினமாக மாறிப்போனதை வியந்தவாறே, ‘‘தோழிக்கு உதவப் போய் நீங்களும் ஓட வேண்டியதாப் போச்சே, கன்யா..!’’ என்றான் கிரி.

‘‘மீனாவுக்கு உதவலேன்னாலும் கூட, என்னோட திட்டம் எங்கேயாவது போறதுதான். இந்த வாழ்க்கை சலிச்சுப் போச்சு. என்னை நான் புதுப்பிச்சாகணும். காத்துல பறக்கிற காகிதம் மாதிரி பயணம் பண்ண ஆசை. காலண்டர் இல்லாத, கடிகாரம் இல்லாத, செல்போன் இல்லாத வாழ்க்கை வாழ ஆசை!’’

‘‘எனக்குக்கூட சில நேரம், அடுத்து என்ன பண்றதுன்னே தோணாதுங்க!’’

‘‘ரெண்டு திருநெல்வேலி. டிக்கெட் இருக்கா? எவ்வளவு பணம்னாலும் பரவா யில்ல...’’ என்றான் கிரி அவசரமாக.

அருகிலிருந்த நடுத்தர வயதுப் பெண், ‘‘இப்படி சொல்லித்தான் விலைவாசியை ஏத்திவுடறாங்க. இருக்கிறவங்க கொடுக்குறாங்க. இல்லாதவங்க என்ன பண்றது?’’ என்றாள் சலிப்பாக!

 
white_spacer.jpg
ஜிக்புக்...ஜிக்புக்

 

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

காதல் எக்ஸ்பிரஸ்
மின்னல் வேகத் தொடர்- 10 white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
white_spacer.jpg

p102.jpg வி டிந்தபோது நெல்லை. சொகுசான ஒரு லாட்ஜில் தங்கி, புத்துணர்வு பெற்றார்கள்.

கிரி, தன் கம்பெனிக்கு போனில் லீவு சொன்னான். நண்பனிடம், ‘‘என்னது, நீ பெங்களூரு ஓடிட்டியா? ஹா... ஹா... நான் பத்திரமா இருக்கேன்!’’ என்று மட்டும் சொன்னான். ஏ.டி.எம்-மில் புகுந்து பணத்துடன் வந்தான். புதிய பேன்ட், ஷர்ட் வாங்கி, அணிந்து வந்த அவனைப் பார்த்து ‘ம்!’ என்றாள் கன்யா.

இதற்கு எதற்கு ஒரு கண் சிமிட்டல்... உதடு பிதுக்கல்... அப்படி ஒரு முக வெட்டல்... தலை அசைத்தல்? பெண்கள் அல்ப விஷயங்களையும் ஆவணங்களாக்கிவிடுகிறார்கள்!

அவ்வப்போது அவளை ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டான். பஸ்ஸில் பரஸ்பரம் தோளில் சாய்ந்து தூங்கியது, அவளுடன் திரிவது, அவளது ஏவல்களைச் செய்வது, ‘‘அக்காவுக்குப் பூ வாங்கிக் கொடுங்க, சார்!’’ என்ற சிறுவனின் குரல் கேட்டு அவளைப் பார்த்ததும், ‘‘வாங்குங்க...’’ என்ற பதில் வர, வாங்கிக் கொடுத்தது... அளவுக்கு அதிகமாகச் சந்தோஷம் சேர்ந்துவிட்டதால், அதன் பாதுகாப்பு பற்றிய கவலைக்கு உள்ளானான் கிரி.

நெல்லையப்பர் கோயிலில், ‘‘ஹனிமூன் தம்பதிங்க போல... என்ன ஒரு ஜோடிப் பொருத்தம்!’’ என இரு பெண்கள் வியந்தார்கள். கிரி ‘பாஸ்’ என்று விழுந்து வணங்கினான். எழுந்தான். கண்மூடி வேண்டினான்.

பின்பு, கன்யா பக்கம் திரும்ப... அவள் திடுக்கென்று அந்தக் கேள்வியைக் கேட்டாள்...

‘‘என்ன... நான் உங்களை லவ் பண்ணணும்னு வேண்டிக்கிட்டீங்களா?’’

 
white_spacer.jpg
ஜிக்புக்...ஜிக்புக்

தொடரும்....

https://www.vikatan.com

  • தொடங்கியவர்

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

மின்னல் வேகத் தொடர் (11) white_spacer.jpg
title_horline.jpg
 
காதல் எக்ஸ்பிரஸ்
ஷங்கர் பாபு
white_spacer.jpg

திய உறக்கத்துக்குப் பின் கிரி, ‘‘சினிமாவுக்குப் போகலாமா?’’ என்றான். கன்யா எதையோ தீவிரமாக எழுதியவாறிருக்க, கிரி மட்டும் கிளம்பினான். பஸ் ஸ்டாண்டை, ரயில்வே ஸ்டேஷனை, மேம்பாலத்தை சுற்றிப் பார்த்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்தான். 9 மணி. திடீரென அவனுக்கு, திருநெல்வேலி அல்வாவுக்குப் புகழ்பெற்றது என்பது நினைவுக்கு வர, ஒரு கடைக்குச் சென்றான்.

ஒருவர் அல்வா வாங்கிக்கொண்டு கிளம்பவும், கடைக்காரர், ‘‘இதோட முடிஞ்சுது சார். நாளைக்கு வாங்க!’’ என்றார்.

p104.jpg

கிரி ஏமாற்றத்தோடு, அல்வாவுடன் சென்றவரை ‘ஹலோ’ என்று நிறுத்தி, ‘‘தப்பா நினைக்காதீங்க... ஒரு உதவி செய்ய முடியுமா?’’ என்று கேட்டான்.

‘‘சொல்லுங்க தம்பி!’’

‘‘அல்வா வாங்க வந்தேன். தீர்ந்து போச்சு. நான் வெளியூர். நாளைக்கு வர முடியாது. நீங்க உள்ளூர், நாளைக்குக்கூட வாங்கிக்கலாம். கோபப்படாதீங்க... உங்க அல்வா பார்சலைத் தர முடியுமா? என்ன விலைன்னாலும் பரவாயில்லை, ப்ளீஸ்! 200 ரூபாய் தரேன். 500?’’ என்றான் சிறு பதற்றத்துடன். எப்படியாவது வாங்கிக்கொண்டு போய் கன்யாவுக்குக் கொடுத்து, அவள் உண்பதைப் பார்க்க வேண்டும்!

அவர், ‘‘ரொம்ப அவசரப்படறியேப்பா! உனக்கு என்ன 23, 24 வயசு இருக்குமா?’’ என்றார்.

 

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg
மின்னல் வேகத் தொடர் (12) white_spacer.jpg
title_horline.jpg
 
காதல் எக்ஸ்பிரஸ்
ஷங்கர் பாபு
white_spacer.jpg

‘‘க ம்ப்யூட்டர் படிச்சிருப்ப. நல்ல சம்பளம் வாங்குறவனா இருப்ப... அரைக் கிலோ அல்வாவை ஐந்நூறு ரூபா கொடுத்து வாங்குற அளவு உனக்கு அவசரம்! நினைச் சதை உடனே முடிக்கணும், இல்ல...’’

‘‘...........................’’

‘‘தம்பி, உங்கிட்ட பணம் இருக்கு. ஆனா, எங்களை மாதிரி ஆட்களையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க... என் தம்பி உன்னை மாதிரி படிக்காதவன், சம்பாதிக்காதவன். சென்னைல ஒரு ரூம்ல இருந்தான். உன்னை மாதிரி ஒருத்தன் மூணு மடங்கு வாடகை தர்றேன்னதும் அவனைக் காலி பண்ணச் சொல்லிட்டாங்க... அளந்து செலவழிக்கிற நாங்களும் பூமியிலவாழ்ந்தாகணும்...’’

p111.jpg

கிரி பேசாமல் நின்றான். ‘‘ஸாரி....’’

 

‘‘அவசரப்படாம யோசிங்க. பணம் இருந்தா என்ன வேணும்னாலும் வாங்கிரலாம்னு நினைக்காதீங்க. நான் எந்த வயித்தெரிச்சல்லயும் சொல்லல தம்பி... பணத்துக்கு ஆசைப்பட்டு அல்வாவ நான் கொடுத்துட்டா, ஆசையா ஓடி வர்ற எம்புள்ளைக்கு நான் என்ன பதில் சொல்றது?’’ - அவர் மெள்ள நடந்து மறைந்தார்.

ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. யோசித்தவாறே அறைக்கு வந்தான். கதவை மெள்ளத் தள்ள, அது திறந்துகொண்டது. சட்டென அதிர்ந்தான்.

பிரா, பாவாடையோடு நின்று தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இருந்தாள் கன்யா!

 
white_spacer.jpg
ஜிக்புக்...ஜிக்புக்

https://www.vikatan.com

தொடரும்....

  • தொடங்கியவர்

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

மின்னல் வேகத் தொடர் (13) white_spacer.jpg
title_horline.jpg
 
காதல் எக்ஸ்பிரஸ்
ஷங்கர் பாபு
white_spacer.jpg

தி டுக்கிடும் வளைவுகளுடன் உள்ளாடை ஸ்பெஷல் அட்டைப் படம் போலிருந்தாள் கன்யா. ‘‘இதுக்கு மேல துடிக்கிற சக்தி எனக்கு இல்ல’’ என்று கதறியது கிரியின் இதயம்.

p104.jpg

 

இதற்குள் சொர்க்கத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்த பிக்சர் மெஸேஜ், கிரி நிற்பதைப் பார்த்துவிட்டது. ஒரு கணம் வெட்கம் மற்றும் அதிர்ச்சியை வழங்கிவிட்டு, நிதானமாகச் சிரிப்புடன் நைட்டியை அணிந்துகொண்டது.

‘‘ஸாரி! நான் இப்பதான்... தெரியாம... கதவைத் தட்டிட்டு வந்திருக்கலாம்...’’

‘‘ஓ.கே. லீவ் இட்! டிரெஸ் மாத்திட்டிருந்தேன். வந்துட்டீங்க. தப்பு என்னோடதுதான். கதவை லாக் பண்ணியிருக்கணும்’’ என்றவள்... தொடர்ந்து, ‘‘அழகுங்கறது சும்மா பேக்கிங்! உள்ளே ஆயிரம் சோக அழுகல் இருக்கு...’’ என்று தத்துவம் பேசிச் சோம்பல் முறித்து, அவனது ஆக்சிஜனை நிறுத்தியபோது...

சென்னையில், வரிசையாக நின்றிருந்த ஆட்டோக்களை இரண்டு பேர் விசாரிக்க, நீட்டப்பட்ட கேமரா செல்போனைப் பார்த்த ஒருவன், ‘‘திருநெல்வேலி பஸ்ல ஏறின மாதிரி இருந்தது...’’ என்றான்.

 

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg
மின்னல் வேகத் தொடர் (14)
காதல் எக்ஸ்பிரஸ் white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
white_spacer.jpg

றையின் ஏ.ஸி, ‘‘உன் வியர்வை என்னைக் கேவலப்படுத்துது...’’ என்றது கிரியிடம்.

கன்யா, ஒன்றாம் வகுப்பு சிறுமியின் முக பாவத்துடன், ‘‘ஓ.கே! சாப்பிடணும்... தூங்கணும்...’’

p102.jpg

என்றாள். வெகு இயல்பாக ஆன்மிகம், ரயில் டிக்கெட், அரசியல் பற்றியெல்லாம் பேசிவிட்டுத் தூங்கச் செல்லும் முன் குறும்புடன், ‘‘மேற்படி ஸீனை ரிப்பீட் செஞ்சு ஓடவிடுவே, இல்ல..?’’ என்றாள். ‘‘ஷாக்ல இருந்து வெளியே வந்து சேரு, மவனே!’’

‘‘உன்னைப் புரிஞ்சுக்கவே முடியல, கன்யா!’’

‘‘ஏன் புரிஞ்சுக்கணும்? புரிஞ்சு என்ன பண்ணப் போற? தேவையில்லாம எதையுமே புரிஞ்சுக்கக்

 

கூடாது. நாம ரயில் பயணிகள் அவங்கவங்க ஸ்டேஷன் வந்ததும் இறங்கிப் போயிட்டே

இருக்க வேண்டியது தான்!’’

அது சாத்தியமா?

‘நேற்று தற்செயலாகப் பார்த்த பெண், இதோ சில அடி தூரத்தில் தூங்கிக்கொண்டு இருக்கிறாள். அவள் ஒரு பனிக்கண்ட நகர்வையும், சில அணுகுண்டு சோதனைகளையும் என்னில் நிகழ்த்திக்கொண்டு இருக்கிறாள். இரவு ஒரு மணிக்கு எழுப்பி, ‘ஐ லவ் யூ...’ சொல்வது நன்றாக இருக்காது..!’

எப்படியோ தூங்கி, விடிந்தபோது, கன்யாவால் தலையணையால் அடித்து எழுப்பப்பட்டான்.

‘‘ஏன்டா, என்ன தைரியம் இருந்துதுன்னா, நான் டிரெஸ் மாத்திட்டிருக்கும்போது எட்டிப் பார்ப்பே! இனி, ஒரு நொடிகூட நீ இங்கே இருக்கக் கூடாது. வெளியே போடா..!’’ என்று கத்தினாள் கன்யா.

 
white_spacer.jpg
ஜிக்புக்... ஜிக்புக்...

 

 

https://www.vikatan.com

தொடரும்....

  • தொடங்கியவர்

காதல் எக்ஸ்பிரஸ்

மின்னல் வேகத் தொடர் (15) white_spacer.jpg

‘‘எ ன்ன சொல்றே?’’

‘‘உன்னோட பேசறதுக்கு நான் தயார் இல்ல. நீ தப்பான ஆள்...’’ என்றாள் கன்யா ஆத்திரத்துடன்.

‘‘கன்யா, சம்பவம் நடந்தது நேத்திக்கு...’’ - கிரி குழம்பினான்.

p103.jpg

‘‘உன் லக்கேஜ்..!’’- எறிந்தாள். ‘‘நேத்து நடந்திருந்தா என்னடா? என் கற்பு என்னத்துக்கு ஆறது? கெட் அவுட்..!’’

‘‘வேடிக்கையா இருக்கு. இவ்வளவு லேட்டா உணர்ச்சிவசப்படற ஆளை நான்

 

கேள்விகூடப்பட்டதில்லை!’’

‘‘கான்ஸ்டபிள், எஸ்.ஐ, எஸ்.பி,..’’ என்று வெறியுடன் கத்தியவாறு, ‘‘ஈவ் டீஸிங்ல உள்ளே தள்ளிருவேன். வெளியே போ!’’

‘‘கன்யா, ஆர் யூ ஜோக்கிங்? நிஜமாதான் சொல்றியா?’’

‘‘நல்லவங்க யாரும் இல்லியா? ஏன்டா, நீ டிரஸ் மாத்தறப்ப நான் பார்த்தா உனக்கு எப்படி இருக்கும்?’’

கிரிக்குக் கோபமும், சிரிப்பும் வந்தது. என்ன ஆயிற்று இவளுக்கு?

அவள் யாரையோ கூப்பிடும் உத்தேசத்துடன் வலப்புறம் செல்ல, கிரி இடப்புறம் செல்வது போல் பாசாங்கு செய்து மறைந்துவிட்டு, அவள் திரும்பு முன் சட்டென்று அறைக்குள் புகுந்து, குளியலறைக்குள் ஒளிந்து கொண்டான்.

அவள் ‘போய்ட்டானா?’ என்கிற மாதிரி இரு திசைகளிலும் பார்ப்பது ஓட்டை வழியே தெரிந்தது. கதவைத் தாழிட்டாள்.

கொஞ்சநேரம் மௌனம்.

என்ன செய்கிறாள்? ஓட்டை வழியே பார்த்தான் கிரி.

கன்யா, வளையம் ஒன்றில் சேலையைச் சுருட்டி மாட்டி தற்கொலை செய்யத் தயாராகிக் கொண்டு இருந்தாள்.

 

காதல் எக்ஸ்பிரஸ்

மின்னல் வேகத் தொடர் (16) white_spacer.jpg

கி K, பதற்றத்துடன் கதவைத் திறந்து வெளியே வந்து, அவளைத் தாங்கி ‘கன்யா...’ என்று, அவளது திமிறலையும் மீறி விடுவித்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு... ‘‘ஏன் என்னைக் காப்பாத்தினே? நான் வாழத் தகுதி இல்லாதவ!’’ என்று விசும்பினாள்.

p54.jpg

‘‘கன்யா, என்னால நம்பவே முடியல. என்ன ஆச்சு உனக்கு? படிச்ச பொண்ணுதான நீ?’’

‘‘உன்னை ‘போ’ன்னு சொன்னப்பவே நீ போயிருந்தா, இந்நேரம் நிம்மதியா செத்திருப்பேன்.

 

சே!’’

அதே நேரம், அறைப் பையன் உள்ளே வந்தான். ‘‘வெளியூர்லேர்ந்து வந்திருக்கிற யாரோ மூணு பேர் உங்களைப் பத்தி ரிசப்ஷன்ல விசாரிச்சுட்டு இருக்காங்க. இப்ப வந்துருவாங்க. சரி, என்ன வேணும்? காபியா, டீயா? அவங்களுக்கும் சேர்த்துக் கொண்டு வரவா?’’ என்றான்.

‘‘ஐயோ! மீனாவோட அப்பா ஆட்கள்! நான் இங்கே இருக்கிறதைக் கண்டுபிடிச்சுட்டாங்க. உடனே ஓடணும்...’’ என்று பதறினாள் கன்யா.

அடுத்த விநாடி... கிடைத்ததை அள்ளிப்போட்டுக்கொண்டு வெளியே ஓடத் துவங்கினார்கள் கிரியும் கன்யாவும்.

 
white_spacer.jpg
ஜிக்புக்... ஜிக்புக்...

https://www.vikatan.com

தொடரும்....

  • கருத்துக்கள உறவுகள்

சாகத் துணிந்தவள் தப்பி ஓடிட முந்துகிறாள் ....சூப்பர்....!  tw_blush:

  • தொடங்கியவர்

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

மின்னல் வேகத் தொடர் (17)
காதல் எக்ஸ்பிரஸ் white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
white_spacer.jpg

p102.jpg கா லி அறையைப் பார்த்தார்கள். ‘‘அவன் மட்டும் கிடைக்கட்டும்... யார்கிட்ட விளையாடறான்! ரொம்ப தூரம் போயிருக்க முடியாது, துரத்துங்க..!’’ என்றான் தலைவன் போலிருந்தவன்.

கிரியும் கன்யாவும் கன்னியாகுமரியை நெருங்கும் ஒரு டாக்ஸியில் இருந்தார்கள்.

‘‘இப்பகூட, மீனா எங்கே இருக்கானு நீ சொல்லிட்டா, என்னை விட்டுடுவாங்க கன்யா..!’’

‘‘இன்னும் ரெண்டு நாள்ல அவளே திரும்பிடுவா!’’

‘‘சரி, சொல்லு... ஏன் இப்படிச் செஞ்சே? எதுக்காகத் தற்கொலை?’’

‘‘சொல்ல மாட்டேன்..!’’

‘‘ஆனா, நீ எழுதின லெட்டர் சொல்லும்..!’’ - கிரி அவளது பேக்கி லிருந்து கடிதம் ஒன்றை

 

எடுத்தான். ‘‘நேத்து இதத்தான் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதினியாக்கும்? படிக்கிறேன். என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. இந்த பூமி அழகானது. அழகற்ற எனக்கு வாழ விருப்பம் இல்லை. மரணம் என்னைப் புதுப்பிக்கும்...’’

அவள் பாய்ந்து பிடுங்கிக் கிழித்தாள்.

‘‘என்னால நம்பவே முடியல. சிரிச்சுப் பேசி, கேலி செஞ்சு, ஊர் சுத்தி, அரட்டை அடிச்சு... அந்த கன்யாவா நீ?’’

‘‘தலை வலிக்குது...’’ என்றவள், திடீரென வாந்தி எடுத்தாள்.

‘‘காலைல ஒண்ணுமே சாப்பிடல. ஓட வேற செஞ்சோம். டயர்டா இருப்பே..!’’ என்றான் கிரி. ஆதரவாக அவளது தலையைத் தடவிக் கொடுத்தான்.

‘‘இது அந்த வாந்தி இல்ல, கிரி! நான் இப்ப கர்ப்பமா இருக்கேன்!’’ என்றாள் கன்யா.

 
white_spacer.jpg
ஜிக்புக்... ஜிக்புக்...

 

 

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

மின்னல் வேகத் தொடர் - 18
காதல் எக்ஸ்பிரஸ் white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
white_spacer.jpg

‘‘இ ந்த ரெண்டு நாள் பழக்கத்துல, எதையும் பகிர்ந்துக்கற அளவுக்கு நான் நண்பன் இல்லைனு உனக்குத் தோணிச்சுன்னா, நீ எதையும் சொல்ல வேண்டாம்...’’ - சொல்லிவிட்டு, லாட்ஜின் ஜன்னல் வழியே கடல் அலைகளின் பயணத்தைப் பார்த்தான் கிரி.

p246.jpg

கன்யா, காபி டம்ளரைக் கீழே வைத்தாள்.

p246a.jpg ‘‘யாரையோ காதலிச்சிருக்கே! தோல்வியில முடிஞ்சிருக்கு. சரிதானா?’’ ‘‘என்னோட வேலையைத் தவிர, எதையுமே காதலிக்கலே கிரி!’’

‘‘..........’’

‘‘நானும் சாஃப்ட்வேர் கோஷ்டியைச் சேர்ந்தவள்தான். கேம்பஸ் இன்டர்வியூவிலேயேவேலை கிடைச்சுது. பிறகு, என் உலகமே மாறிப்போச்சு! ஏ.ஸி. இரவா பகலானு கண்டுபிடிக்க முடியாத அளவு வெளிச்சம், மிதக்கிற மல்லிகை மணம்,

அழகான கம்ப்யூட்டர்... இந்த நவீன தொழிற்சாலை எனக்கு எல்லாமே கொடுத்தது. நிறைய

 

பணம், நிறைய தன்னம்பிக்கை, நிறைய அலட்சியம்... எல்லாமே!’’

‘‘நிறைய டென்ஷன்?’’

‘‘அதுவும்தான்! கம்ப்யூட்டருக்கு நான்தான் டிபன், லன்ச், இரவுச் சாப்பாடுன்னு மாறிப்போச்சு நிலைமை. எப்பவும் டென்ஷன்..!’’

‘‘...........’’

‘‘அங்கே என் ப்ராஜெக்ட் லீடரா இருந்தவன் அபி. அபிலாஷ்! பயங்கர கில்லாடி... திறமைசாலி!’’

‘‘கம்ப்யூட்டர் தெரியாத அல்ப ஜந்துக்களை எல்லாம் நாம கண்டுக்கறது இல்லை. ஏன்னா, நாம் பூமியைவிட்டுக் கொஞ்சம் மேல இருக்கோம்!’’ என்றான் அபி.

 
white_spacer.jpg
ஜிக்புக்... ஜிக்புக்...

https://www.vikatan.com

தொடரும்....

  • தொடங்கியவர்

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

மின்னல் வேகத் தொடர் (19) white_spacer.jpg
title_horline.jpg
 
காதல் எக்ஸ்பிரஸ்
white_spacer.jpg
ஷங்கர் பாபு

‘‘அவனோட பேசினா நேரம் போறதே தெரி யாது..!’’ என்றாள் கன்யா. கிரி இப்போது அவள் எதிரே உட்கார்ந்திருந்தான்.

p64.jpg

‘‘‘டென்ஷனா இருந்தா, ரிலாக்ஸ் பண்ணிக்கணும். இன்னும் சொல்லப்போனா, ரிலாக்ஸ் பண்ணிக்கிறதுக்கு தான் வேலையே பார்க்கறோம்! புரியுதா? எத்தனை வழிகள்...’ என்பான். அவனோட பேச்சுல மயங்கி, டிஸ்கொதே போயிருக்கேன். நாலஞ்சு தடவை டிரிங்ஸ் பண்ணியிருக்கேன். அப்ப எல்லாமே எனக்குத் தேவைப் பட்டுது. ஏன்னா, பர்ஸ்ல இருந்த பணம்! உலகமே என்னோடதுங்கற திமிர்...’’

‘‘புரியுது...’’ என்றான் கிரி.

‘‘இதுல எதுவுமே ரிலாக்ஸ் ஆகலைன்னா, ஒரு வழி இருக்கு. ஆணும், பெண்ணும் சேர்ந்தா இதைவிட உருப்படியா எதுவும் செய்ய முடியும்னு தோணலை! செக்ஸ்..! ரிலாக்சேஷனோட உச்சகட்டம்!’’ என்றான் அபி. ‘‘கன்யா, ஐ நீட் யூ..’’

‘‘தப்போட ஸ்பெஷாலிட்டியே கடைசியில அது தன் னோட வசீகர முகமூடியைக் கழட்டி, சுயரூபத்தைக் காட்டும் போதுதான் தெரியும். இப்போ நானே எனக்கு அசிங்கமா தெரியறேன். அன்னிக்குக் கண்ணாடியில என்னைப் பார்த்தப்போ, நானே என்னை வாந்தியால் செய்த உருவம் போல அருவருப்பாய் உணர்ந்தேன்’’ என்றாள் கன்யா, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு.

‘‘.............’’

‘‘இந்த விஷயம் என்னோட அப்பாவுக்குத் தெரிஞ்சுது. அவர் சொன்னார்... ‘எத்தனையோ வழிகள் இருக்கே! அடுத்த தடவை ஜாக்கிரதையா இரு!’’’

-ஜிக்புக்... ஜிக்புக்...

 

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg
காதல் எக்ஸ்பிரஸ் white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
மின்னல் வேகத் தொடர் (20)
white_spacer.jpg

மா லை... கடலை ரசித்தவாறு வெகு தூரம் வந்துவிட்டார்கள். தொலைவில் விவேகானந்தர் பாறையும், வள்ளுவர் சிலை யும்!

‘‘என் உடம்பு எனக்கு பாரமா இருக்கு கிரி’’ என்றாள் கன்யா பரிதாபமாக. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ‘‘நான் சாகணும்...’’ என்றாள்.

p56.jpg

அந்த நொடியில், அவளது புற அழகையும் தாண்டி அவளை நேசிக்கத் துவங்கினான் கிரி. அந்த நேசம் இறுதிவரை தன் னிடம் இருக்கும் என்பதையும் உணர்ந் தான்.

‘‘செத்துப் போ! ஆனா, உன்னோட வயித்துல வளர்ற குழந்தை என்ன பாவம் பண் ணிச்சு? அதைச் சொல்லிட்டுச் செத்துப் போ!’’

கன்யா அமைதியாக இருந்தாள்.

‘‘பழசையெல்லாம் மறந்துடு கன்யா! உன் கம்ப்யூட்டர்ல தேவையில்லாத ஃபைலை அழிக்கிற

 

மாதிரி...’’ என்று கிரி முடிப்பதற்குள், ஒரு ஆட்டோவில் வந்து இறங்கிய ரவுடிகள் கிரியைச் சூழ்ந்துகொண்டு காட்டுத்தனமாக அடிக்கத் துவங்கினார்கள்.

‘‘உனக்கு சம்பந்தம் இல்லாத வேலைல ஏன்டா தலையிடற? நீ யார்கூட மோதற தெரி யுமா..?’’

கிரி போராட, கன்யா தன் செல்போனை உயிர்ப்பித்து, ‘‘மீனா, உங்கப்பா ஆட்களைப் பேசாம இருக்கச் சொல்லு...’’ என்றாள்.

‘‘என்ன உளர்றே? மனசு கேக்காம, அடுத்த ஸ்டேஷன்லயே இறங்கி அப்பாகிட்ட வந்துட்டேன். அவரும் எங்களை மன்னிச்சு ஏத்துக்கிட்டார். இதைச் சொல்லலாம்னா, உன் போன் ஆஃப் ஆகியிருந்தது...’’

‘‘அப்ப இவங்க?’’

பதிலாய், ஒரு காரிலிருந்து இறங்கினான் அபி.

‘‘ஹாய்!’’

 
white_spacer.jpg
ஜிக்புக்... ஜிக்புக்...

https://www.vikatan.com

தொடரும்....

  • தொடங்கியவர்

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg

காதல் எக்ஸ்பிரஸ் white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
மின்னல் வேகத் தொடர் 21
white_spacer.jpg

நீ ஒரு புதுக் காதலனோடு ஆட்டோவுல போறதைப் பார்த்தேன். ஷாக் ஆயிட்டேன்! விடக் கூடாதே! ஒரே துரத்தல்தான், போ..! ஆனா, இதுகூட ரிலாக்ஸாதான் இருக்கு கனி!’’ என்றான் அபி.

‘‘பொறுக்கி ராஸ்கல்! உன்னைப் பிடிக்காமதானடா வேலையையே ரிஸைன் பண்ணினேன்!’’ - அலறினாள் கன்யா.

p56.jpg

‘‘அதுக்காக... புழு, பூச்சிகள்கூட எல்லாம் நீ பழகுறதை என்னால தாங்கிக்க முடியுமா, சொல்லு? நான் கொஞ்சம் பொஸஸிவ் டைப்மா! என் கம்ப்யூட்டரை நான் மட்டும்தான் ஹேண்டில்

 

பண்ணுவேன்! ஹே, யார்றா நீ? என் ஆளைக் கூட்டிட்டு ஓடறே?’’ என கிரியை அறைந்தான். ‘‘கன்யா, அபார்ஷன் பண்ணிட்டியா? பண்ணிரலாம். எதிர்காலத்துல ஜாக்கிரதையா இருப்போம்... என்ன! வேற ஒருத்தி கிடைக்கிறவரைக்கும் நீதான் என்னோட இருந்தாகணும்!’’

‘‘அபி, பிரச்னை பண்ணாம போயிடு!’’ என்றான் கிரி.

‘‘என் பணம் எந்தப் பிரச்னையையும் சமாளிக்கும்!’’ என்றான் அபி. ‘‘உலகத்திலேயே நான் ரொம்ப நேசிக்கறது, என்னைத்தான்! ஸோ, நான் கஷ்டப்படறதை என்னால தாங்கிக்கவே முடியாது! எனக்குக் கிடைக்காதது வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது! ஹேய், எங்கே ஓடறே?’’ என்றபடி கன்யாவைத் துரத்தினான் அபி.

கன்யா செய்வதறியாது ஒரு பாறை மீது ஏறி, கடலைப் பார்த்து, திகைத்து அலறினாள். அபி அவளைப் பின்தொடர, ‘‘கன்யா, இது க்ளைமேக்ஸ்! ஏதாவது அற்புதம் அல்லது அல்ப விஷயம் நம்மைக் காப்பாத்தியே தீரணும்!’’ என்று சத்தம் போட்டான் கிரி.

அவசரத்தில் அவளது கால் நழுவி, நீரை நோக்கி...

 

 

 

காதல் எக்ஸ்பிரஸ்

 

white_spacer.jpg
காதல் எக்ஸ்பிரஸ்
மின்னல் வேகத் தொடர் (22) white_spacer.jpg
title_horline.jpg
 
ஷங்கர் பாபு
white_spacer.jpg

ன்யா விழுமுன், கிரி அவளைப் பிடித்துக்கொண்டான். இயல்புநிலை தடுமாறி அபிஷேக் நீரில் விழ, ராட்சச அலை அவனைப் பாறையோடு அறைந்து, உள்ளே இழுத்துக்கொண்டு சென்றது. ‘‘மரணம்! மே பி எ பெஸ்ட் ரிலாக்சேஷன்..!’’ - அபியின் வார்த்தைகள் அலையில் நனைந்தன.

மூன்று மாதங்களுக்குப் பிறகு... ‘‘ஓ.கே! ஐ லவ் யூடா..!’’ என்று கிரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாள் கன்யா.

p101.jpg

‘‘ஃப்ளாட், பிஸினஸ் சென்டர்னு நிறையத் திட்டம் இருக்கு...’’ என்று அவள் அப்பாவும், ‘‘கர்ப்பிணியைக் கல்யாணம் பண்ணிக்கிறதாவது... சேச்சே!’’ என்று அவன் அப்பாவும் இந்தக் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘‘இது துரிதக் காதல். வாழ்க்கைக்கு நல்லதில்ல...’’

‘‘அப்பா, நீங்க உங்க இருபத்து மூணு வயசுக்குப் போயி... புரிஞ்சுக்கிட்டு... சம்மதிச்சு... ஊஹூம்! இது நடக்கற காரியம் இல்லை. ஒண்ணு சொல்றேன், நான் அவளை விரும்பும்போது,

 

அவளோட பிரச்னையையும் ஏத்துக்கிட்டுதான் ஆகணும்!’’ என்றான் கிரி. நெல்லையில் அட்வைஸ் செய்த பெரியவரை அடிக்கடி நினைத்துக் கொள்கிறான். ஆட்டோவில் பேரம் பேசி ஏறுகிறான்.

கோயில்... சடங்குகள்... ‘‘சீக்கிரம்! ஆட்களோடு இவ அப்பா எப்ப வேணாலும் வரலாம்..!’’ என்றான் கிரி. ‘‘ஆமா கன்யா, உன் ஃப்ரெண்ட் பூஜா எங்கே?’’

‘‘சாட்சிக் கையெழுத்துக்காக யாரையோ கூப்பிடப் போயிருக்கா..!’’

பூஜா, அந்தக் கூட்டத்தில் தேடி, தற்செயலாக அந்த இளைஞனைப் பார்த்து, ‘‘எக்ஸ்க்யூஸ் மீ!’’ என்றாள்.

 
white_spacer.jpg
(எக்ஸ்பிரஸ் நின்றது!)

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்பிரஸ் காதல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிஞ்சு போட்டுது.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.