Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை மாணவர்கள் படுகொலை இன்றுடன் 12 வருடங்கள் !

Featured Replies

  • திருகோணமலை மாணவர்கள் படுகொலை இன்றுடன் 12 வருடங்கள் !
vfdg-722x430.jpg

திருகோணமலை மாணவர்கள் படுகொலை இன்றுடன் 12 வருடங்கள் !

 

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் கடந்துள்ளன.

நிலையிலும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலாவது நீதி
நிலைநாட்டப்பட வேண்டுமென்பது தமிழ் மக்களின் ஆவல்

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாணவர்கள் ஐவர் கடற்கரையில் நின்றிருந்தவேளை அங்கு வருகைதந்த சிறீலங்கா இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் மிலேச்சத்தனமாகச் சுட்டுப்படுகொலை செய்தனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டத்தால் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாட்டில் புகலிடம் கோரியுள்ளனர்.

 

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:

மனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)

யோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)

லோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)

தங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)

சண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)

ஆகிய ஐந்து மாணவர்களும் கடற்கரையில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.T

இதனை சிறீலங்கா அரசாங்கமும், இராணுவத்தினரும், காவல்துறையினரும் மறுத்து வந்ததுடன்,பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எனவும், இவர்கள் இராணுவத்தினரைத் தாக்கமுற்றபட்ட சமயம் கைக்குண்டு வெடித்தே இவர்கள் அனைவரும் பலியாகினர் எனத் தெரிவித்தனர்.

இருப்பினும், மாணவர்கள் அனைவரும் கிட்ட நின்று துப்பாக்கியால் சுடப்பட்டமை வைத்தியப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிக் காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் உட்பட 12 சிறப்பு அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2013 ஆண்டு ஜுலை 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

எனினும், 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட அனைவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எவ்வாறெனினும் அப்பாவி மாணவர்கள் மீதான இப்படுகொலைகள் இடம்பெற்று 11 வருடங்கள் கடந்துள்ளபோதும் இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதும் இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின்
போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது

http://newuthayan.com/story/59761.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு இழப்பு அடுத்த இரு இனம்களிலும் நடந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்று நினைத்து பார்க்கிறன்.

எங்களால் அந்த மாணவர்களுக்கு அனுதாபம் மட்டுமே தெரிவிக்க முடியும் . அதே இடத்து சம்பந்தனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததே மறந்து போயிருக்கும் .

  • தொடங்கியவர்

திருமலையில் விசேட அதிரடிப்படையால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தப்பட்டது….

Trinco-Studint1.png?resize=723%2C544

கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி  மாலை, திருமலை நிலாவெளி கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நண்பர்களான, 21 வயது நிரம்பிய மனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமசந்திரா, லோஹிதராஜா ரோகன், தங்கத்துரை சிவானந்தா, சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்றிய இந்த  மாணவர்கள் பரீட்சை முடிவுகளுக்காக காத்திருந்தனர்.

அக்காலப்பகுதியில், விசேட அதிரடிப்படையின்கட்டுப்பாட்டில் இருந்த திருமலையில் இடம்பெற்ற இந்தக் கொலைகள், இனம்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்டது எனவும், புலிகயால் மேற்கொள்ளப்பட்டது எனவும் அரச ஊடகங்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில், விசேட அதிரடிப்படையினரே இவர்களை சுட்டுக்கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.  இதன்பின், அதிரடிப்படையினரை தாக்க முயன்ற வேளையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என மஹிந்த அரசாங்கம், வியாக்கியானம் அளித்திருந்தது.

இவ்வாறு மிலேச்சத்தனமாக, மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிராக பல மனித நேய அமைப்புக்களும் சர்வதேச அமைப்புக்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இச்சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் கடந்த 2013ஆம் ஆண்டு விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 12 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிராக வலுவான சாட்சிகள் இல்லையென வழமைபோன்று விடுவிக்கப்பட்டனர்.

பிள்ளைகளை பறிகொடுத்து நீதியும் கிடைக்காத நிலையில், அந்த ஐந்து மாணவர்களினது பெற்றோரும் நாட்டை விட்டே வெளியேறியுள்ளனர். எனினும் கொல்லப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தையான வைத்தியர் மனோகரன், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் துணையுடன், நீதிக்காக தொடர்ந்து போராடி வரும்    நிலையில், திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் தற்போதும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை அவர்கள் கொல்லப்பட்ட பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

Trinco-Studint.png?resize=717%2C544

http://globaltamilnews.net/2018/59064/

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2018 at 12:08 PM, பெருமாள் said:

இப்படி ஒரு இழப்பு அடுத்த இரு இனம்களிலும் நடந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்று நினைத்து பார்க்கிறன்.

எங்களால் அந்த மாணவர்களுக்கு அனுதாபம் மட்டுமே தெரிவிக்க முடியும் . அதே இடத்து சம்பந்தனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததே மறந்து போயிருக்கும் .

மூதூர் கூனித்தீவில் நடந்த சம்பவத்திற்கே ஒண்ணும் கதைக்கல இதற்க்கா ஆழந்த அனுதாபங்கள் 

இப்ப எலக்சன் நேரம் வேற ஆளையாள் குற்றம் சாட்டி கொண்டிருக்கிறார்கள் இன்று சுரேஸ் பிரேம சந்திரன் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு செமயா சுமந்திரன்  ஐயாவுக்கு சொற்களால் சாடிக்கொண்டிருந்தார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.