Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை சூப்பர் கிங்ஸ் செய்திகள்

Featured Replies

ஐபிஎல் டி 20 தொடர்: தோனி, ரெய்னா, ஜடேஜாவை தக்கவைத்தது சென்னை அணி; பெங்களூரு அணியில் நீடிக்கிறார் விராட் கோலி

 

 
05CHPMUDHONI

தோனி   -  THE HINDU

ஐபிஎல் டி 20 தொடரின் 11-வது சீசனுக்கான வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் மீண்டும் திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது. இவர்களில் அதிகபட்சமாக தோனியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஜடேஜா ரூ.7 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மீதம் உள்ள வீரர்களை வரும் 27-ம் தேதி நடைபெறும் ஏலத்தின் வாயிலாக ரூ.47 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது சென்னை அணி.

இம்முறை ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக ரூ.80 கோடியை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணி, கேப்டன் ரோஹித் சர்மாவை ரூ.15 கோடிக்கும், ஹர்திக் பாண்டியாவை ரூ.11 கோடிக்கும், ஜஸ்பிரித் பும்ராவை ரூ.7 கோடிக்கும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. டெல்லி டேர் டெவில்ஸ் அணி, ரிஷப் பந்தை ரூ.15 கோடிக்கும், கிறிஸ் மோரிஸை ரூ.11கோடிக்கும், ஸ்ரேயஷை ரூ.7 கோடிக்கும் தக்கவைத்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அக்சர் படேலை மட்டும் ரூ.12.5 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் சுனில் நரேனை ரூ.12.5 கோடிக்கும், ஆந்த்ரே ரஸலை ரூ.8.5 கோடிக்கும் தக்கவைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்தை ரூ.12.5 கோடிக்கு வளைத்து போட்டுள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், விராட் கோலியை ரூ.17 கோடிக்கும், டி வில்லியர்ஸை ரூ.11 கோடிக்கும், சர்ப்ராஸ் கானை ரூ.3 கோடிக்கும் தக்கவைத்துள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னரை ரூ.12.5 கோடிக்கும், புவனேஷ்வர் குமாரை ரூ.8.5 கோடிக்கும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article22373046.ece

 

 

 

'ஆமா வீட்டுக்குத் திரும்ப வந்துவிட்டோம்'- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தோனியின் பதில்

 

 
dhonipng

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தோனி

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியதற்கான ஒப்பந்தத்தில் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் கையெழுத்திட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக ட்ரெண்ட் ஆனது.

ஐபிஎல் டி 20 தொடரின் 11-வது சீசனுக்கான வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் மீண்டும் திரும்பி உள்ள மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. இவர்களில் அதிகபட்சமாக தோனியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஜடேஜா ரூ.7 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான ஒப்பந்தத்தில் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் கையெழுத்திட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

தோனி கையெழுத்திட்ட வீடியோ பதிவில், தோனியின் மகள் ஸிவா அருகில் இருக்க தோனியின் மனைவி ஷாக் ஷி தோனி, திரும்ப வீட்டுக்கு வந்துவிட்டோம் மகி.. கடந்த வருடம் ஐபிஎல் போட்டிகளை  நான் பார்க்கவில்லை என்கிறார். அதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொண்டே தோனி, ''ஆம் நாம் விட்டுக்கு வந்துவிட்டோம்... திரும்ப வந்துவிட்டோம். இனி போட்டிகளை பார்க்கலாம்''என்று பதிலளித்திருக்கிறார்.

ரெய்னா கையெழுத்திட்ட வீடியோ பதிவில், ''வணக்கம் சென்னை. 2 வருடத்திற்குப் பிறகு மீண்டும் சிஎஸ்கேக்கு வருகிறேன். அழகான, அறிவுள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மீண்டும் ஆட ஆர்வமாக இருக்கிறேன். கடந்த இரு வருடங்களாக இதனை இழந்திருந்தேன். உங்கள் எல்லோரையும் சேப்பாக்கத்தில் பார்க்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

ஜடேஜா தனது வீடியோவில், ''எல்லோருக்கும் ஹாய், நான் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். எங்களது விளையாட்டை ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.... விசில் போடு'' என்று கூறியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/article22375165.ece

Edited by நவீனன்

  • Replies 133
  • Views 16.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹஸ்ஸி நியமனம்

 

 
hussey

மைக் ஹஸ்ஸி.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மெனும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான மைக் ஹஸ்ஸி, சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் 2008 முதல் 2013 வரை பங்காற்றிய வீரர் மைக் ஹஸ்ஸி. மைக் ஹஸ்ஸி 64 போட்டிகளில் 2213 ரன்களுடன் (சராசரி 40.98) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்கள் எடுத்த 3-வது வீரராவார். 2013 ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி வென்றவர் மைக் ஹஸ்ஸி.

இது தொடர்பாக மைக் ஹஸ்ஸி கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகத் திரும்பியது எனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. சென்னை அணிக்காக ஒரு வீரராக எனக்கு நிறைய மலரும் நினைவுகள் உள்ளன. சென்னையில் அபாரமான நண்பர்களைச் சம்பாதித்துள்ளேன். அடுத்த தலைமுறை சிஎஸ்கே வீரர்களைத் தயார்படுத்துவதில் மகிழ்ச்சி.

ஐபிஎல்-ல் மீண்டும் சென்னை அணி வந்துள்ளது உற்சாகமாக உள்ளது. நிச்சயம் சென்னை ரசிகர்களும் தங்கள் அணி மீண்டும் வந்ததற்கு உற்சாகமாகவே இருப்பார்கள்.

இவ்வாறு கூறினார் மைக் ஹஸ்ஸி.

http://tamil.thehindu.com/sports/article22385351.ece?homepage=true

  • தொடங்கியவர்

குடும்பத்துடன் இணைவதைக் காட்டிலும் மிகப் பெரிய மகிழ்ச்சி ஏதும் இல்லை: சிஎஸ்கே திரும்பிய ரெய்னா நெகிழ்ச்சி

 

 
rainajpgjpg

கோப்புப் படம்

குடும்பத்துடன் இணைவதைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சி ஏதும் இருக்காது என்று சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கு மீண்டும் திரும்பிய சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

ஐபிஎல் டி 20 தொடரின் 11-வது சீசனுக்கான வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் மீண்டும் திரும்பி உள்ள மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. இவர்களில் அதிகபட்சமாக தோனியின் சம்பளம் ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெய்னா ரூ.11 கோடிக்கும், ஜடேஜா ரூ.7 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியது குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், "பழைய நினைவுகளுக்குத் திரும்புகிறேன்..... குடும்பத்துடன் இணைவதைக் காட்டிலும் பெரிய மகிழ்ச்சி இருக்காது. எங்களை இணைப்பதற்கான சக்தி தடையற்றது” என்று பதிவிட்டுள்ளார்.

ரெய்னாவின் இப்பதிவுக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டு தடைக் காலத்தில் சுரேஷ் ரெய்னா குஜராத் சூப்பர் லயன் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article22373499.ece

  • தொடங்கியவர்

கம்பீர், தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைகின்றனரா?- ட்வீட்டால் எழுந்த எதிர்பார்ப்பு

dhoni%20gambhir

கம்பீர், தோனி.   -  கோப்புப் படம்.| பிடிஐ

இருமுறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாம்பியன் பட்டத்துக்கு இட்டுச் சென்ற கவுதம் கம்பீரை அந்த அணி தக்க வைக்காததையடுத்து ஐபிஎல் வட்டத்தில் அதிர்ச்சி அலை கிளம்பியது.

இதனையடுத்து இந்த மாத இறுதியில் நடைபெறும் மிகப்பெரிய ஐபிஎல் ஏலத்தில் கவுதம் கம்பீரை ஒப்பந்தம் செய்ய போட்டாப்போட்டி இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ரைட் டு மேட்ச் கார்டைப் பயன்படுத்தி கொல்கத்தாவே கவுதம் கம்பீரை தக்க வைக்க முடியும் என்ற ஹேஷ்யங்களும் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ட்விட்டரில் விகாஷ்கோத்தாரி என்ற பயனாளர் (@Anti_ESTD), “வரும் ஐபிஎல் ஏலத்தில் கவுதம் கம்பீரை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுக்கும் என்று வலுவாக உணர்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். சுவாரசியம் என்னவெனில் இந்த ட்வீட்டுக்கு சென்னை சூப்பர் கிங்சின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஹேண்டில் வினையாற்றியதே.

இதனையடுத்து கவுதம் கம்பீர், சென்னை சூப்பர் கிங்ஸில் தோனியுடன் இணையலாம் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/article22397071.ece

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத்தலைவர் தெரிவு

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத்தலைவர் தெரிவு


ஐ.பி.எல் போட்டிகளின் முக்கியமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துணைத்தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் சித்திரை மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளுக்கு அணிகள் ஆயத்த வேலைகளை தொடங்கியுள்ளன. மேலும் ஐ.பி.எல் வாரியமும் எதிர்வரும் ஜனவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் வீரர்கள் தெரிவுக்கான ஏலம் இடம்பெறவுள்ளதாக அறிவித்துள்ளது.அதுமட்டுமன்றி கடந்த ஜனவரி 4 ஆம் திகதி ஜ.பி.எல் போட்டிகளில் அணிகள் சார்பில் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியல் வெறியிடப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத்தலைவர் தெரிவு

கடந்த 2 ஆண்டுகள் தடைக்கு பின் ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்கும் சென்னை அணியில் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் டோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா இடம்பிடித்துள்ளனா. மேலும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத்தலைவராக சுரேஸ் ரெய்னா தெரிவி செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைவராக டோனியே செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத்தலைவர் தெரிவு

https://news.ibctamil.com/ta/cricket/chennai-super-kings-vice-caption

  • தொடங்கியவர்

சென்னை என் இரண்டாவது வீடு!' - சி.எஸ்.கே கம்-பேக் ஜோரில் தோனி

 
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக் காலம் முடிவடைந்து இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து மீண்டும் களத்தில் இறங்கவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட தோனிதான், இந்தாண்டும் அந்தப் பொறுப்பை வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கம்-பேக் குறித்தும், அணியில் விளையாட உள்ள வீரர்கள் பற்றியும் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விரிவாகப் பேசியுள்ளார் தோனி.

தோனி

 

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தோனி, `இரண்டு ஆண்டுகளாக சென்னை அணி, ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும், நமது ஆதரவாளர்கள் அதிகரிக்கவே செய்திருக்கின்றனர். அதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமும்கூட. தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, எங்கு சென்றாலும் சென்னை அணிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. 18- 20 வீரர்களை இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளுக்கு அணியில் எடுக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமையாக இருக்கிறது. சென்னை எனக்கு இரண்டாவது வீடு. எப்போதுமே சென்னை எனக்கு தனிச் சிறப்புடையதுதான். என்னுடைய டெஸ்ட் போட்டியில் அதிக ஸ்கோர் இங்குதான் பதிவு செய்தேன். அனைத்து வீரர்களும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தும் சூழல் சி.எஸ்.கே-வில் எப்போதுமே இருக்கும். இதுவே சென்னை அணியின் சிறப்பு. ஏற்றம் இறக்கம் இருந்துகொண்டேதான் இருக்கும். இருப்பினும் கடினமான தருணங்களை சிறப்பாக எதிர்கொண்டுள்ளோம். சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு இந்தாண்டு ஐ.பி.எல் போட்டியை சிறந்ததாக மாற்றியுள்ளது' என்றார் உற்சாகத்துடன். 

https://www.vikatan.com/news/sports/113962-dhoni-briefs-about-csks-comeback.html

  • தொடங்கியவர்

அஷ்வின் எங்களுக்குத்தான்! சென்னை ரசிகர்களை மகிழ்வித்த தோனி

 
 

ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேசியுள்ளார். 

Dhoni_15394.jpg

 


இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர், இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கிறது. தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை அந்த அணி தக்கவைத்துக்கொண்டது. இதன்மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின், ஏலம் விடப்படும் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 

இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தோனி கலந்துகொண்டார். ஐ.பி.எல் ஏலம் குறித்தும் அஷ்வின் குறித்தும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த தோனி, ‘நான் ஏற்கெனவே கூறியதுபோல எந்த மூன்று பேரைத் தக்க வைப்பது என்பது குறித்து எடுக்கப்பட்டது கடினமான முடிவே. அஷ்வினைப் பொறுத்தவரை, இதேபோன்ற முடிவுகளை நாங்கள் ஏற்கெனவே எடுத்துள்ளோம். ஏலத்தில் அஷ்வினை எடுக்க சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முழுமுயற்சி எடுக்கும். உள்ளூர் வீரர்கள் நிறைய பேர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். மூன்று வீரர்களை ஏற்கெனவே தக்கவைத்துக் கொண்டதால், அஷ்வினை நிச்சயம் ஏலம் மூலம் எடுப்போம். வீரர்கள் ஏலம் விடப்படும்போது, அஷ்வினை ஏலத்தில் எடுக்கும் வாய்ப்பு சென்னை அணிக்குத்தான் முதலில் வரும். எனவே, இந்த விவகாரத்தில் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவரை ஏலத்தில் எடுக்க நிச்சயம் நாங்கள் முயற்சி செய்வோம்’ என்றார். 2018-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் 27, 28-ம் தேதிகளில் நடைபெறுகின்றன.  

https://www.vikatan.com/news/sports/113998-dhonis-plan-for-ipl-auction.html

  • தொடங்கியவர்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லக்‌ஷ்மிபதி பாலாஜி நியமனம்

 


சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக லக்‌ஷ்மிபதி பாலாஜி நியமனம்
 

2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக  லக்‌ஷ்மிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

IPL கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் இம்முறை போட்டியில் களமிறங்கவுள்ளன.

முதல் 8 தொடர்களிலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகவிருந்த தோனியையும் ரெய்னா, ஜடேஜா ஆகியோரையும் இம்முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துக்கொண்டுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீபன் பிளமிங் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக  லக்‌ஷ்மிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்

http://newsfirst.lk/tamil/2018/01/சென்னை-சுப்பர்-கிங்ஸ்-அண/

  • தொடங்கியவர்

பழைய குழுவுடன் புதிதாகக் களம் காணப்போகும் சி.எஸ்.கே!

 
 

இரண்டு வருட தடைக்குப் பிறகு, இந்த வருடம் மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்கப்போகிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி. இதையொட்டி, அணியில் முன்னர் இருந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதில் சென்னை அணி மும்முரம் காட்டிவருகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ்

 

இதுகுறித்துப் பேசியுள்ள சி.எஸ்.கே-யின் சி.இ.ஓ விஷ்வநாத், `எங்களிடம் முன்னர் இருந்த வீரர்களையும், நிர்வாகக் குழுவையும் நாங்கள் திரும்பிப் பெற வேண்டுமென்று முனைப்புக்காட்டிவருகிறோம். நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சி.எஸ்.கே அணிக்காக விளையாடிய வீரருமான ஃபெலமிங், மீண்டும் அணியின் பயிற்சியாளராகச் செயல்படுவார். மைக் ஹஸ்ஸி பேட்டிங் கோச்சாகவும், பாலாஜி பௌலிங் கோச்சாகவும் செயல்படுவர்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.கே கம்-பேக் குறித்து முன்னர் பேசிய தோனி, `ஐ.பி.எல் போட்டிக்கு கம்-பேக் கொடுப்பதன்மூலம் மறுபடியும் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஏலத்தில்தான் எந்தெந்த வீரர்கள் அணிக்கு வருவார்கள் என்று தெரியும். ஆனால், எங்களுக்காக முன்னர் விளையாடிய வீரர்களை மீண்டும் எடுக்க நாங்கள் முயல்வோம்' என்றார் நம்பிக்கையுடன். 

https://www.vikatan.com/news/sports/114173-csk-to-retain-the-core-team.html

  • தொடங்கியவர்

மெர்சல் பாடல் வரிகளோடு சி.எஸ்.கே-வுக்கு என்ட்ரி கொடுக்கும் ஹர்பஜன்

 
 

10 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்-லின் மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்கியுள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை எடுத்துள்ளது. இது குறித்து அவர் தமிழில் ட்வீட் செய்துள்ளார். 

harbhajan singh

 

ஹர்பஜன் சிங் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் `வணக்கம் தமிழ்நாடு உங்க கூட இனி கிரிக்கெட் ஆடப்போறது ரொம்ப சந்தோஷம். உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு' என்று `மெர்சல்’ படத்தின் பாடல் வரியைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

https://www.vikatan.com/news/sports/114677-harbhajan-tweets-about-csk-entry.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். 2018: சென்னை சூப்பர் கிங்சில் டோனியுடன் விளையாட இருக்கும் வீரர்கள் விவரம்

 
அ-அ+

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இதுவரை ஒன்பது வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். #IplAuction #ChennaiSuperKings

ஐ.பி.எல். 2018: சென்னை சூப்பர் கிங்சில் டோனியுடன் விளையாட இருக்கும் வீரர்கள் விவரம்
 
 
பெங்களூரு:
 
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
 
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை சரியாக பத்து மணிக்கு தொடங்கியது. 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இது தவிர இன்று நடைபெற்றுவரும் ஏலத்தில் இதுவரை ஐந்து வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். ரவிசந்திரன் அஷ்வினை சென்னை அணி ஏலத்தில் விட்டுக்கொடுத்தாலும், ஆர்.டி.எம். முறையை பயன்படுத்து டு பிளிசிஸ், வெய்ன் பிராவோவை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
201801271536150940_1_csk1._L_styvpf.jpg
 
இது தவிர முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியா அணியின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், இந்திய ஆல்-ரவுண்டர் கெதார் ஜாதவ், அம்பதி ராயுடு, இம்ரான் தாஹிர் ஆகியோரும் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர். சென்னை அணியில் ரெய்னா, ஜடேஜா, பிராவோ, வாட்சன், கெதார் ஜாதவ் ஆகியோருடன் சேர்த்து இதுவரை ஐந்து ஆல்-ரவுண்டர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். 
 
சென்னை அணி வீரர்கள் விவரம்:
 
மகேந்திர சிங் டோனி - ரூ. 15 கோடி
சுரேஷ் ரெய்னா - ரூ. 11 கோடி
ரவிந்திர ஜடேஜா - ரு. 7 கோடி
டு பிளிசிஸ் - ரூ. 1.60 கோடி
ஹர்பஜன் சிங் - ரூ. 2 கோடி
வெய்ன் பிராவோ - ரூ. 6.40 கோடி
ஷேன் வாட்சன் - ரு. 4 கோடி
கெதார் ஜாதவ் - ரூ. 7.80 கோடி
அம்பதி ராயுடு - ரூ. 2.20 கோடி
இம்ரான் தாஹிர் - ரூ. 1 கோடி
 
#IplAuction #ChennaiSuperKings #PrideOf18 #WhistlePodu

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/27153615/1142534/IPL-2018-Chennai-Super-Kings-Team-list.vpf

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: சிஎஸ்கே; ஆப்பம்பட்டி அணி செலக்‌ஷன்?

 

 
DUitPJUV4AAhy4Jjpg

ஐபில் 2018-ம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் அணி ஹர்பஜன் சிங், டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், அம்பாட்டி ராயுடு, கரண் சர்மா, இம்ரான் தாஹிர், டூ ப்ளெஸ்ஸி இதுவரை ஏலம் எடுத்துள்ளது. சென்னை அணியின் ஏலம் குறித்து  இது பற்றி நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றன. அவற்றை பற்றி இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...

Lone Wolf 

         

‏CSK Haters: என்னங்கடா ஃபார்ம்ல இல்லாதவனா எடுத்து இருக்கீங்க?

அடேய், நாங்க Nehra வயே எடுத்து ஃபார்ம்க்கு கொண்டு வந்தவங்கடா

நீங்க ஃபார்ம்ல இருக்க ப்ளேயர்ஸ நம்புறீங்க...

நாங்க MS ஓட கேப்டன்சிய  நம்புறோம்

DUhoMIkUQAABI54jpg
 
DUh6Aa0UQAES54Cjpg

DON ஸ்டைல் பாண்டி

‏யாரை எடுக்கறோம்ங்கிறது முக்கியம் இல்லடா.. புல்லட் எப்டி எறங்குதுங்கிறதுதான் முக்கியம்..

விநோதன்

‏#CSK எப்பவும் கோப்பைய வாங்கறாங்களோ இல்லியோ 'fair play award' கண்டிப்பா வாங்கிருவாங்க..

ஆனா, இனிமே அதுக்கும் வாய்ப்பே இல்ல..

ஹர்பஜன், தாஹிர், வாட்சன்,.. எல்லாரும் வீம்புக்குனே கத்தறவனுங்க.. 

klpng
 

Little Sachin

‏இப்ப இப்டிதான் வயசானவனுகனு கலாய்ப்பானுக.. தோத்துப்போன அப்பறம் எக்ஸ்பீரியன்ஸ்டு பிளேயர்சா இறக்கி ஜெயிச்சிங்க இளைஞர்கள வளர்த்து விடலனு நொட்டம் சொல்ல வருவானுக

ரைட்டர் இம்ச

‏சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயர் செலக்சன பாத்தா

சத்யராஜ், வடிவேலு ஆப்பம்பட்டி அணி செலக்சன் நினைவுக்கு வரது எனக்கு மட்டும்தானா

lkopng
 

யுகராஜேஸ்

‏அடுத்த வருஷம் டீம் மேனேஜர், கோச், அட்வைஸர் ஆகிற நிலையில் இருக்கிற ஆளுங்களையா பார்த்து பார்த்து எடுக்கிறானுங்களே இந்த சிஎஸ்கே ஏதாவது நீண்டகால திட்டம் இருக்குமோ

kilpng

ஆல்தோட்டபூபதி

அடுத்து சிஎஸ்கே கவாஸ்கரையும் கபில்தேவையும் ஏலம் எடுப்பானுங்கன்னு நினைக்கிறேன்

Prabhu Palanivel

‏பல சின்ன பசங்கள எடுத்து யாரை வெளிய ஒக்காரவைக்கரதுனு யோசிக்கறதவிட

பல பெரிய மனுசங்கள எடுத்து யாரை விளையாடவைக்கறதுனு யோசிக்கறது ஈசி.....

இதசொன்னா நம்மல!!!!!!

Vagabond

‏ஆஷிஷ் நெஹ்ராவ csk எடுத்தப்ப அப்ப என்ன சொன்னானுகளோ அதையேதான் இப்ப சொல்றானுகn

தண்ணி குழாய்க்குள்ள இறங்குனதுக்கப்புறம் CSK பவர் தெரியும்டா

loPNG

BS Thala My Heart...

‏இப்போ சண்டை போட்டு மண்டைய ஒடச்சிக்கிறவன எல்லாம் பார்த்தா சிரிப்புதான் வருது

ஆட்டம் ஆரம்பிக்கட்டும் அதிரடிய காட்டுவோம்

#CSK டா ...   கெத்தா சொல்லிட்டு போவோம்

mydeen

ஆர்சிபி பவுலிங்க்கு ஆள் எடுக்கணும், மும்பை பேட்டிங்க்கு. சென்னை எல்லாத்துக்குமே எடுக்கவேண்டி இருக்கு

காக்கா முட்டை

‏ #Dhoni க்கு backup கீப்பர் எடுக்க நினைத்தது தப்பில்லை..ஆனா அதுக்கு திருப்பி ஒரு 30+ ஆளு எடுக்கும் லாஜிக் தான் சுத்தமா விளங்குல   

ℳsᴅ பிளேடு‏

தாகிர்னா விக்கெட் எடுத்துட்டு க்ரவுண்ட்க்குள்ள ட்ரெயின் ஓட்டுவானே அவன்தான அதுக்காகவே எடுக்கலாம்.

ஏன்டா தோனி இருக்குற தைரியத்துல யார வேணாலும் எடுப்பிங்களாடா

AG‏

“கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்,

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்”

DUh7-s5VMAUz2L8jpg
 

ℳя.தமிழ்

‏எத்தன பேரு இருக்காங்கன்றது முக்கியம் இல்ல யார் இருக்கான்றது தான் முக்கியம் - பிளேடு

DUitPJUV4AAhy4Jjpg
yupng
 

IPL Poet

‏எந்த ப்ளேயர எடுத்து வச்சாலும் அத பலமான டீமா தோனியால மாத்த முடியும்ன்ற நம்பிக்கை தான்டா..

http://tamil.thehindu.com/

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சமாக இருக்கும் 6.5 கோடியை வைத்து என்னடா செய்யப் போறீங்கள்? 

  • தொடங்கியவர்

இடது கை வேகப்பந்து வீச்சாளருக்காக ரூ. 10.5 கோடி வரை மல்லுக்கட்டிய சிஎஸ்கே

 
அ-அ+

இடது கை வேகப்பந்து வீச்சாளரை ஏலம் எடுக்க 10.5 கோடி ரூபாய் வரை மல்லு கட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தட்டிச் சென்றது. #iplauction #iplauction2018

 
 
 
 
இடது கை வேகப்பந்து வீச்சாளருக்காக ரூ. 10.5 கோடி வரை மல்லுக்கட்டிய சிஎஸ்கே
 
ஐபிஎல் வீரர்கள் ஏலம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று வேகப்பந்து வீச்சாளர்களை ஏலம் எடுப்பதில் பஞ்சாப், சென்னை அணிகள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தியாவைச் சேர்ந்த உனத்கட் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஏலத்திற்கு வந்தார். அவரது அடிப்படை விலை 1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.

இவரை ஏலம் எடுப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் 8 கோடி, 9 கோடி ரூபாயைத் தாண்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் 10 கோடியையும் தாண்டினார். சென்னை அணி 10.5 கோடி ரூபாய் வரை போட்டியிட்டது.

201801281136552454_1_kxip-s._L_styvpf.jpg

அதையும் தாண்டி பஞ்சாப் 11 கோடி ரூபாய்க்கு கேட்டது. அதற்கு மேல் போட்டி போட சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்பவில்லை. இதனால் பங்சாப் அணி 11 கோடி ரூபாய்க்கு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் 11.5 கோடி ரூபாய்க்கு விருப்பம் தெரிவித்தது. இதனால் பஞ்சாப் அணி அதிர்ச்சி அடைந்ததோடு, அதற்கு மேல் கேட்க விரும்பவில்லை.

201801281136552454_2_rr-s._L_styvpf.jpg

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11.5 கோடி ரூபாய் கொடுத்து உனத்கட்டை ஏலம் எடுத்தது. இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் இவராவார். #MI #CSK #DD #KKR #RR #RCB #KXIP #SRH #chennaisuperkings

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/28113655/1142615/ipl-auction-2018-chennai-super-kings-try-to-bought.vpf

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள 25 வீரர்களின் முழு விவரம்

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 11 ஆல்ரவுண்டர்கள், 8 பந்து வீச்சாளர்கள், 4 விக்கெட் கீப்பர்கள் உள்பட 25 பேர் இடம்பிடித்துள்ளனர். #iplauction #CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள 25 வீரர்களின் முழு விவரம்
 

ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் நேற்றும், இன்றும் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தக்க வைத்திருந்தது.

குறைந்தது 18 பேர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதால் 15 பேரை தேர்வு செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் கலந்து கொண்டது.

201801281609596775_1_dhoni001-s._L_styvpf.jpg

அதிகபட்சமாக கேதர் ஜாதவை 7 கோடியோ 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை தவிர்த்து 22 பேரை ஏலம் எடுத்தது. இதில் 11 ஆல்ரவுண்டர்கள், 8 பந்து வீச்சாளர்கள், 4 விக்கெட் கீப்பர்கள், 2 பேட்ஸ்மேன்கள் அடங்குவார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

விக்கெட் கீப்பர்கள்:-

Bild könnte enthalten: 1 Person, Text

1. மகேந்திர சிங் டோனி:  - ரூ. 15 கோடி

Bild könnte enthalten: 1 Person, Text
2. அம்பதி ராயுடு - ரூ. 2.2 கோடி

Bild könnte enthalten: 1 Person, Text
3. சாம் பில்லிங்ஸ் - ரூ. 1 கோடி

Bild könnte enthalten: 1 Person, Text
4. என். ஜெகதீசன் - ரூ. 20 லட்சம்

பேட்ஸ்மேன்கள்:-

Bild könnte enthalten: 1 Person

5. முரளி விஜய் - ரூ. 2 கோடி

Bild könnte enthalten: 1 Person


6. டு பிளிசிஸ் - ரூ. 1.6 கோடி

ஆல்ரவுண்டர்கள்:-

Bildergebnis für suresh raina chennai super kings photos
7. சுரேஷ் ரெய்னா - ரூ. 11 கோடி

Bildergebnis für jadega chennai super kings
8. ஜடேஜா - ரூ. 7 கோடி

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text
9. கேதார் ஜாதவ் - ரூ. 7.80 கோடி

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text
10. வெய்ன் பிராவோ - ரூ. 6.40 கோடி

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text
11. ஷேன் வாட்சன் - ரூ. 4 கோடி

Bild könnte enthalten: 1 Person, Text
12. கனிஷ்க் சேத் - ரூ. 20 லட்சம்

Bild könnte enthalten: 1 Person, Text
13. த்ருவ் ஷோரே - ரூ. 20 லட்சம்

Bildergebnis für chaitanya bishnoi
14. சைத்தான்யா பிஷ்னாய் - ரூ. 20 லட்சம்

Bild könnte enthalten: 1 Person, Text
15. தீபக் சாஹர் - ரூ. 80 லட்சம்

Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text
16. மிட்செல் சான்ட்னெர் - ரூ. 50 லட்சம்

Bildergebnis für kshitiz sharma
17. சிட்டிஸ் ஷர்மா - ரூ. 20 லட்சம்

பந்து வீச்சாளர்கள்:-
Bild könnte enthalten: 1 Person, lächelnd, Text
18. கரண் சர்மா - ரூ. 5 கோடி

Bild könnte enthalten: 1 Person, Text
19. ஷர்துல் நரேந்திர தாகூர் - ரூ. 2.6 கோடி

Bild könnte enthalten: 1 Person, Text
20. ஹர்பஜன் சிங் - ரூ. 2 கோடி

Bild könnte enthalten: 1 Person, Text
21. மார்க் வுட் - ரூ. 1.5 கோடி

Bild könnte enthalten: 1 Person, Bart und Text
22. இம்ரான் தாஹிர் - ரூ. 1 கோடி

Bild könnte enthalten: 1 Person
23. லுங்கி நிகிடி - ரூ. 50 லட்சம்

Bild könnte enthalten: 1 Person
24. கேஎம் ஆசிஃப் - ரூ. 40 லட்சம்

Bild könnte enthalten: 1 Person, Text
25. மோனு சிங் ரூ. 20 லட்சம்

 

Bild könnte enthalten: 1 Person, Text

Bild könnte enthalten: 1 Person, Text

Bild könnte enthalten: 1 Person, Text

3 hours ago, MEERA said:

மிச்சமாக இருக்கும் 6.5 கோடியை வைத்து என்னடா செய்யப் போறீங்கள்? 

இப்ப மீரா ஒரு விசில் போடுவாராம் சென்னைக்கு..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

டு பிளசி, வாட்சன் & பிராவோ ஆகிய மூவரும் கட்டாயம் விளையாட வேண்டிய சூழல், 

நான்காவது வெளிநாட்டு வீரராக யார் வரப்போவது வேகப்பந்து வீச்சாளரா அல்லது சுழற்பந்து வீச்சாளரா?

சாம் பிலிங்கஸ் வந்தால் டு பிளசி அவுட். நிகிடி வந்தால் தாகிர் அவுட்.

இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஒருவரை வாங்கியிருந்திருக்கலாம்.

DD,KXI,SRH,MI,RRஆகியன பலமான அணிகளாகவும் CSK,KKR,RCB ஆகியன சற்று பலவீனமான அணிகளாகவும் தென்படுகிறது.

சிங்கத்தின் குகையில் எப்படி சிங்கம் பலமானதாக இருக்குமோ அதேபோல் சென்னையின் மைதானத்தில் ஓர் பலமான அணியாக CSK இருக்கும் என நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
6 minutes ago, MEERA said:

டு பிளசி, வாட்சன் & பிராவோ ஆகிய மூவரும் கட்டாயம் விளையாட வேண்டிய சூழல், 

நான்காவது வெளிநாட்டு வீரராக யார் வரப்போவது வேகப்பந்து வீச்சாளரா அல்லது சுழற்பந்து வீச்சாளரா?

சாம் பிலிங்கஸ் வந்தால் டு பிளசி அவுட். நிகிடி வந்தால் தாகிர் அவுட்.

இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஒருவரை வாங்கியிருந்திருக்கலாம்.

DD,KXI,SRH,MI,RRஆகியன பலமான அணிகளாகவும் CSK,KKR,RCB ஆகியன சற்று பலவீனமான அணிகளாகவும் தென்படுகிறது.

சிங்கத்தின் குகையில் எப்படி சிங்கம் பலமானதாக இருக்குமோ அதேபோல் சென்னையின் மைதானத்தில் ஓர் பலமான அணியாக CSK இருக்கும் என நம்புகிறேன்.

இடது கை வேகப்பந்து வீச்சாளருக்காக ரூ. 10.5 கோடி வரை மல்லுக்கட்டிய சிஎஸ்கே

 

இடது கை வேகப்பந்து வீச்சாளரை ஏலம் எடுக்க 10.5 கோடி ரூபாய் வரை மல்லு கட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தட்டிச் சென்றது. #iplauction #iplauction2018

 
ஐபிஎல் வீரர்கள் ஏலம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று வேகப்பந்து வீச்சாளர்களை ஏலம் எடுப்பதில் பஞ்சாப், சென்னை அணிகள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தியாவைச் சேர்ந்த உனத்கட் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஏலத்திற்கு வந்தார். அவரது அடிப்படை விலை 1.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.

இவரை ஏலம் எடுப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் 8 கோடி, 9 கோடி ரூபாயைத் தாண்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் 10 கோடியையும் தாண்டினார். சென்னை அணி 10.5 கோடி ரூபாய் வரை போட்டியிட்டது.



அதையும் தாண்டி பஞ்சாப் 11 கோடி ரூபாய்க்கு கேட்டது. அதற்கு மேல் போட்டி போட சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்பவில்லை. இதனால் பங்சாப் அணி 11 கோடி ரூபாய்க்கு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் 11.5 கோடி ரூபாய்க்கு விருப்பம் தெரிவித்தது. இதனால் பஞ்சாப் அணி அதிர்ச்சி அடைந்ததோடு, அதற்கு மேல் கேட்க விரும்பவில்லை.

இப்ப மீரா ஒரு விசில் போடுவாராம் சென்னைக்கு..tw_blush:

நான் கேட்டது சென்னைக்கு ஒரு விசில் போடு பாட்டு...tw_blush:

முன்பு திண்ணையில் போடும் பாட்டு.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

2008-ல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக என். சீனிவாசன் முதலில் தேர்வு செய்த வீரர் தோனி அல்ல!

 

 
dhoni90111

 

இது ஆச்சர்யமான தகவல். 2008-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக என். சீனிவாசன் தேர்வு செய்த வீரர், தோனி அல்ல. இத்தகவலைக் கூறியிருப்பவர், முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர். இவர், 2008-ல் சென்னை அணியின் தேர்வுக்குழுவின் தலைவராகவும் அதன் செயல்திட்டங்களுக்கு இயக்குநராகவும் இருந்தார். 

2008-ல் ஏலத்தில் தோனியைத் தேர்வு செய்வதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நடைபெற்ற உரையாடல்கள் குறித்து ஓர் இணையத்தளத்துக்கு வி.பி. சந்திரசேகர் பேட்டியளித்திருப்பதாவது:

2008 ஏலத்துக்கு முன்பு என். சீனிவாசன் (அப்போதைய சிஎஸ்கே அணியின் இணை உரிமையாளர்) என்னிடம் கேட்டார். யாரைத் தேர்வு செய்யப்போகிறாய்?

தோனி என்று பதிலளித்தேன்.

சேவாக்கை ஏன் தேர்வு செய்யக்கூடாது என்றார். 

ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஓர் ஊக்கத்தை சேவாக்கால் தரமுடியாது. ஆனால் தோனி கேப்டனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் இருப்பவர். அவரால் மேட்ச்சைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். அவரை நான் தேர்வு செய்யலாமா என்று கேட்டேன்.

இருந்தாலும் நான் சேவாக்கையே தேர்வு செய்வேன் என்றார் சீனிவாசன். ஆனால் அடுத்த நாள் என்னிடம் வந்து, ஓகே. தோனியைத் தேர்வு செய்துகொள் என்றார்.

ஒட்டுமொத்த அணிக்கும் 5 மில்லியன் டாலர் பட்ஜெட் தான் இருந்தது. தோனிக்காக ரூ. 1.1 மில்லியன் டாலர் செய்யலாம் என இருந்தோம். ஆனால் வேறு சில அணிகளும் 1.3 மில்லியன் டாலருக்கு தோனியைத் தேர்வு செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. உடனே எங்கள் திட்டத்தை மாற்றியமைத்தோம். எனவே தோனிக்காக 1.4 மில்லியன் டாலர் செய்யலாம் என முடிவெடுத்தோம். ஆனால் ஏலம் நெருங்க நெருங்க தோனி 1.8 மில்லியன் டாலருக்கும் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின.

dhoni_captain1.jpg

உடனே நான் சீனிவாசனிடம் சொன்னேன், 1.5 மில்லியன் டாலரைத் தாண்டி தோனிக்காகச் செலவு செய்யமுடியாது. அப்படிச் செலவு செய்தால் நல்ல வீரர்கள் கொண்ட அணியை உருவாக்கமுடியாது. அணியில் தோனி மட்டும்தான் இருப்பார். வேறு யாரும் கிடைக்கமாட்டார்கள் என்றேன். இதனால் சீனிவாசன் ஏமாற்றமடைந்தார் என்று வி.பி. சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.

2008-ல் நடைபெற்ற ஏலத்தில் 1.5 மில்லியன் டாலருக்கு தோனியைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

காலங்கள் உருண்டோட, இந்தமுறை தோனியை மீண்டும் தக்கவைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இப்போது, தோனிக்கு வழங்கப்படவுள்ள தொகை - ரூ. 15 கோடி.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/30/ms-dhoni-wasnt-n-srinivasans-first-choice-for-chennai-super-kings-in-2008-2853992.html

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் சிறந்த அணி – டுவைன் பிராவோ

Dwayne-Bravo-1.jpg?resize=800%2C420
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியது மிகுந்த மகிழ்ச்சியாகவும், கௌரவமாகவும் உள்ளது என டுவைன் பிராவோ  (Dwayne Bravo  )தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் அணியில் மீண்டும் பிராவோ இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து சென்ன்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதளத்துக்கு அளித்த பேட்டியிலேயே டுவைன் பிராவோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சென்னை அணிக்கு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சியாகவும், ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்த அவர் தான் விளையாடிய அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் சிறந்த அணி எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரையும் எங்கள் குடும்பத்தில் இணைந்துள்ள புதிய உறுப்பினர்களையும் காணவும் ஆவலாக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாத ஐபிஎல் என்பது எப்படி இருக்கும் என்பதன் தாக்கத்தை கடந்த 2 வருடங்களில் உணர்ந்து இருப்பீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Dwayne-Bravo-2.jpg?resize=260%2C194Dwayne-Bravo.png?resize=240%2C284

http://globaltamilnews.net/2018/64314/

 

 

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புதிய சி.எஸ்.கே பிடிச்சிருக்கா... பிடிக்கலையா...? சர்வே முடிவுகள் #VikatanSurveyResults #csk

 

CSK கம்பேக்... தோனி கேப்டன்... ரெய்னா, ஜடேஜா ரீடெய்ன் என விசில் பறந்துகொண்டிருந்த சென்னை இந்த வாரம் கொஞ்சம் 'டல்'லாகி விட்டது. ஏலத்தில் வழக்கம்போல் பலமான சென்னை அணி உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த சென்னை ரசிகர்கள், 30+ வீரர்களை அதிகமாக வாங்கியதில் நொந்துவிட்டனர். அவர்களிடம், 'சென்னை அணியின் புதிய டீம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா?' என்ற தலைப்பில் நடந்த சர்வேயின் முடிவுகள் இதோ...

புதிய சி.எஸ்.கே திருப்தியில்லை

 

csk

 

ஏலம் நடந்த சனி, ஞாயிறு இரு நாள்களும், சென்னை வீரர்களின் வயதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் புலம்பித் தள்ளினார்கள் சென்னை ரசிகர்கள். 35 வயது வாட்சன், 37 வயது ஹர்பஜன், 38 வயது தாஹிர் என அணியில் சீனியர்கள் நிறைந்திருந்ததே காரணம். இந்த சர்வேயிலும் அதுவே வெளிப்பட்டுள்ளது. 70.8 சதவிகிதம் ரசிகர்களுக்கு ஏலத்தில் சி.எஸ்.கே-வின் செயல்பாடு பிடிக்கவில்லை. 

வேகப்பந்துவீச்சு பெரிய பிரச்னை

சி.எஸ்.கே

 

'சென்னை அணியின் பிரச்னை என்ன?' என்ற கேள்விக்கு வேகப்பந்துவீச்சு என 64.8 சதவிகிதம் பேர் கூறியிருக்கிறார்கள். எங்கிடி, மார்க் வுட், பிராவோ, வாட்சன் தவிர்த்து அனுபவமுள்ள பௌலர்கள் யாரும் இல்லாததே இதன் காரணம். உள்ளூர் வீரர்கள் அனுபவமற்றவர்களாக இருப்பது 35.2 சதவிகித ரசிகர்களுக்குப் பிரச்னையாகத் தோன்றுகிறது.

சென்னை அஷ்வினை மிஸ் செய்யும்

சி.எஸ்.கே சர்வே

 

முந்தைய சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய வீரர்களில் அஷ்வின் சென்னை அணியால் ரொம்பவும் மிஸ் செய்யப்படுவார் என்று 54.2 சதவிகிதம் ரசிகர்கள் கூறியுள்ளனர். 41.2 சதவிகிதம் பேர் மெக்கல்லம் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். டுவைன் ஸ்மித் 4.7 சதவிகித ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். ஓப்பனங்கில் விளையாட ஷேன் வாட்சன் இருப்பதால், ஸ்மித் அநேகம் பேருக்குப் பெரிய இழப்பாகத் தோன்றவில்லை. 

தமிழக வீரர்கள் இல்லாதது ஏமாற்றம்தான்

சி.எஸ்.கே சர்வே

 

ஏலத்துக்கு முன்பாகவே சென்னை ரசிகர்கள் 'இவர்களையெல்லாம் சென்னை அணி வாங்கும்' என நினைத்திருந்தார்கள். ஆனால், ஏலத்தில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிலும், அஷ்வினை வாங்காதது 38.7 சதவிகிதம் பேருக்கு ஏமாற்றமாக இருந்துள்ளது. 33.7 சதவிகிதம் பேர் வாஷிங்டன் சுந்தர் என்று கூறியிருக்கிறார்கள். தமிழக வீரர் என்பதால் இவரை சி.எஸ்.கே வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 27.6 சதவிகித ரசிகர்களின் சாய்ஸ் மெக்கல்லம்.

இவருக்கு எதுக்கு 5 கோடி

சி.எஸ்.கே சர்வே

ஜடேஜா தக்கவைக்கப்பட்டிருந்தார். ஏலத்தில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் வாங்கப்பட்டனர். ரெய்னா - நல்ல பார்ட் டைம் பௌலர். இத்தனை ஸ்பின் ஆப்ஷன்கள் வைத்துக்கொண்டு கர்ன் ஷர்மாவுக்கு 5 கோடி கொடுத்தது சி.எஸ்.கே. இதை 55 சதவிகித சென்னை ரசிகர்கள் விரும்பவில்லை. அவருக்கு அடுத்த படியாக, 30.5 சதவிகிதம் பேர் கேதர் ஜாதவுக்கு 7.80 கோடி ரூபாய் கொடுத்தது தேவையற்றது என நினைக்கிறார்கள்.

ஸ்டோக்ஸை விட்டுக் கொடுத்திருக்கூடாது...!

சி.எஸ்.கே சர்வே

ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், உனத்கட், ஆண்ட்ரூ டை, அஷ்வின் என பலருக்கும் சென்னை அணி ஏலம் கேட்டது. ஆனால், தொகை அதிகமாகப் போனதால், பின்வாங்கியது. அவர்களுள் யாரை சென்னை விட்டுக்கொடுத்திருக்கக்கூடாது என்று கேட்டதற்கு 51.8 பேர் தெர்ந்தெடுத்த பெயர் ஸ்டோக்ஸ். ஃபாஸ்ட் பௌலர்கள் அதிகம் இல்லாததால், உனத்கட் அணிக்கு பலம் சேர்த்திருப்பார். அதனால் 30.1 சதவிகித ரசிகர்கள் அவரைத் தேர்வு செய்துள்ளனர். 

பிராவோ ஸ்மார்ட்!

சி.எஸ்.கே

சென்னை அணியின் மிக முக்கிய ஆயுதம் பிராவோ. தனி ஆளாக ஆட்டத்தை மாற்றக்கூடிய மேட்ச் வின்னர். சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களெல்லாம் 7,8 கோடி வரை போன நிலையில், 6.4 கோடிக்கு பிராவோ சென்னை அணியால் வாங்கப்பட்டார். சென்னை அணியின் ஸ்மார்ட் மூவ் இதுதான் என்று 53.2 சதவிகிதம் பேர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திய அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது பெற்ற லுங்கிசானி எங்கிடி 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டது நல்ல மூவ் என்று 39.7 சதவிகிதம் பேர் கருதுகிறார்கள்.

சன்ரைஸர்ஸ்தான் பலமான டீம்

csk

சென்னையை விட பலமான அணி எது என்ற கேள்விக்கு, சன்ரைஸர்ஸ் அணிதான் என 37.5 சதவிகிதம் பேர் கூறியிருக்கிறார்கள். அந்த அணி வழக்கம்போல் பௌலிங், பேட்டிங் இரண்டிலும் முழு பலத்துடன் இருக்கிறது. 35 சதவிகித ஓட்டுகளுடன் பெங்களூரு அடுத்த இடத்தில் உள்ளது. வழக்கத்துக்கு மாறாக, அந்த அணியின் பௌலிங் இந்த முறை பலமாக இருக்கிறது. 27.5 சதவிதம் பேரின் சாய்ஸ் - டேர்டெவில்ஸ்!

https://www.vikatan.com/news/sports/115158-most-of-the-fans-are-not-happy-with-the-new-csk-side.html

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் - விசில் போடு பாடலின் புதிய விடியோவில் இடம்பெறவேண்டுமா?

 

 
whistle_podu1

 

ஐபிஎல்-லில் மீண்டும் இடம்பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசில் போடு பாடலின் புதிய விடியோ குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் புகழ்பெற்ற விசில் போடு பாடலுக்குப் புதிய விடியோ அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் ரசிகர்களையும் ஈடுபடுத்தவுள்ளதால் அதுகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

விசில் போடு பாடலில் புதிய விடியோவில் ரசிகர்களும் இடம்பெற வேண்டுமென்றால் அவர்கள் விசில் அடிப்பது, நடனம் ஆடுவது போன்ற தங்களுடைய விடியோக்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பவேண்டும். இதில் அமர்க்களமான, ரசனையான விடியோக்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய விடியோவில் இடம்பெறும். விசில் அடிக்கத் தெரியாவிடால் உங்கள் நடனத்தின் விடியோவையாவது அனுப்புங்கள் என்று செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

விடியோவை  whistlepodu@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும். மேலும் தகவல்களுக்கு இந்தக் காணொளியைக் காணவும்.

 

http://www.dinamani.com/sports/sports-news/2018/feb/02/heres-your-chance-to-be-a-part-of-the-whistlepodu-2018-anthem-2856056.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.