Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கம்பீர், தவான் வெளியே...சர்ஃபராஸ் உள்ளே.. அணிகளின் பிளான் என்ன? ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்?

Featured Replies

கம்பீர், தவான் வெளியே...சர்ஃபராஸ் உள்ளே.. அணிகளின் பிளான் என்ன? ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பகுதி -1 #IPLAuction

 
 
Chennai: 

ஐ.பி.எல் தொடரின் 11-வது சீசன் இப்போதே தொடங்கிவிட்டது. ஸ்டார் broadcaster ஆகிவிட, retention கூட ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி, இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் கம்பேக் கொடுத்துள்ளதால், இப்போதே விசில்கள் பறக்கத்தொடங்கிவிட்டன. 4-ம் தேதி வெளியிடப்பட்ட தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில், சில ஆச்சர்யங்கள், சில அதிர்ச்சிகள்! #IPLAuction

#IPLAuction

 

2 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியால் தக்கவைக்கப்படவில்லை. ரஹானே, தவான் போன்றோரும் தக்கவைக்கப்படாதது கொஞ்சம் ஷாக்தான். இப்படி அதிர்ச்சியில் ரசிகர்கள் உரைந்திருக்க, சர்ஃபராஸ் கானை 'ரீடெய்ன்' செய்து ஆச்சர்யமூட்டியது ஆர்.சி.பி. இந்த retention-ல் அணிகளின் பிளான்தான் என்ன? RTM  எனப்படும் 'ரைட் டூ மேட்ச்' கார்டு எப்படிப் பயன்படப்போகிறது? இந்த ஆண்டு நடக்கும் ஏலம் எப்படி இருக்கும். எந்தெந்த வீரர்களுக்கு மவுசு ஜாஸ்தி? அனைத்தையும் அலசுவோம்...

மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் தலா 3 வீரர்களை தக்கவைத்துள்ளன. ஏலத்தின்போது இந்த அணிகள் இரண்டு முறை RTM வாய்ப்பைப் பயன்படுத்தலாம். சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் 2 வீரர்களையும், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் 1 வீரரையும் தக்கவைத்துள்ளன. இந்த நான்கு அணிகளும் அதிகபட்சம் 3 முறை RTM கார்டைப் பயன்படுத்தலாம். 1 வீரரை மட்டுமே தக்கவைத்த அணிகள், ஏலத்தின்போது அதிகபட்சம் 67.5 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். 2 வீரர்களைத் தக்கவைத்த அணிகள் 59 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். ராயல் சேலஞ்சர்ஸ் 49 கோடி ரூபாய் வரையிலும், 3 வீரர்களைத் தக்கவைத்த மற்ற அணிகள் 47 கோடி ரூபாய் வரையிலும் செலவு செய்ய முடியும். இந்தத் தொகைதான் Retention-ன் போது அணிகள் மிகவும் கவனமாகச் செயல்படக் காரணம்.

gambhir  #IPLAuction

3 வீரர்களைத் தக்கவைத்தால் ரூ.33 கோடி செலவாகும். அதனால்தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அக்சர் பட்டேலை மட்டும் தக்கவைத்துக்கொண்டது. அதனால் அவர்கள் ஏலத்தின்போது 67.5 கோடி ரூபாய் செலவு செய்யலாம். ஒருவேளை அவர்கள் 3 வீரர்களைத் தேர்வு செய்திருந்தால், மற்ற இருவர் மேக்ஸ்வெல், மில்லர் ஆகியோர்களாகத்தான் இருப்பர். அவர்களையும் தக்கவைத்திருந்தால், 20.5 கோடி ரூபாய் இன்னும் அதிகமாகச் செலவாகி இருக்கும். அதாவது ஒரு வீரருக்கு ரூ.10.25 கோடி ஆகியிருக்கும். அதுவே அவர்களை ஏலத்தின்போது குறைந்த விலைக்கு RTM கார்டு பயன்படுத்தி வாங்கிவிடலாம். வெளிநாட்டு வீரர்கள் என்பதால், இருவரும் சேர்ந்தே 10 கோடி வரைதான் போவார்கள். இதனால், பல கோடிகள் அவர்களுக்கு மிச்சமாகும். ஆனால், அக்சர் பட்டேலுக்கு 12.5 கோடி என்பதும் அதிகம்தான். அவரையும்  RTM கார்டு பயன்படுத்தியே வாங்கியிருக்கலாம். 

ரீடெய்ன் செய்ததில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கவே முடியாது. 3 டாப் இந்திய வீரர்களை அவர்கள் தக்கவைத்துள்ளனர். ரோஹித் ஷர்மா, ஹர்டிக் பாண்டியா, பும்ரா தாண்டி அவர்களுக்கு ஆப்ஷனே கிடையாது. சென்னை அணியில் மட்டும் ஜடேஜாவா, அஷ்வினா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், சென்னை அணியினரின் முடிவே சரியானது. ஒரு ஆஃப்  ஸ்பின்னருக்குப் பதிலாக, ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர் இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். அணியின் லீடிங் ஸ்பின்னராகவும் அவரே செயல்படக்கூடும். அதனால், சி.எஸ்.கே-வின் '378' முடிவு சரியானதே!

378  #IPLAuction

டெல்லி டேர்டெவில்ஸ் அணி மோரிஸ், ரிசப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை தக்கவைத்துள்ளது. இந்த மூவருக்காக அவர்கள் 33 கோடி செலவு செய்துள்ளனர். இது கொஞ்சம் 'அகலக்கால்' முடிவுதான். மோரிஸ் ஓகே. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் தாக்கம் செலுத்தக்கூடியவர். மேட்ச் வின்னர். நிச்சயம் ஏலத்தில் பெரிய தொகைக்குப் போயிருப்பார். ஷ்ரேயாஸ் ஐயருக்கும் நல்ல விலை கிடைத்திருக்கும். அவர்கள் இருவரோடு நிறுத்தியிருந்தால், டெல்லி அணியின் செலவு 21 கோடியோடு முடிந்திருக்கும். ஆனால், ரிசப் பன்ட்டுக்காக 12 கோடி அதிகம் செலவு செய்திருக்கிறார்கள். நிச்சயம் அவரை இந்தத் தொகைக்கு ஏலத்தில் எடுத்திருக்க மாட்டார்கள்.  அதனால், டெல்லி அணியின் இந்த முடிவு கேள்விக்கூறியதே.

இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. தக்கவைக்கப்படும் 'uncapped' (இந்திய அணிக்காக விளையாடாத வீரர்கள்) வீரர்களுக்கான தொகை 3 கோடிதான். ஒருவேளை 2 மாதங்களுக்கு முன்பு retention நடந்திருந்தால், ஷ்ரேயாஸ் ஐயருக்கான தொகை 3 கோடியாகத்தான் இருந்திருக்கும். ஏனெனில், அவர் நவம்பர் 1-ம் தேதிதான் முதன்முதலாக இந்திய அணிக்கு விளையாடினார். இந்த 2 மாதத்தில், 9 போட்டிகளில் விளையாடிவிட்டதால், அவருக்கான தொகை 7 கோடியாகிவிட்டது. இவராவது பரவாயில்லை 9 போட்டிகளில் ஆடியுள்ளார். ரிசப் பன்ட் ஆடியுள்ளதோ, ரெண்டே ரெண்டு சர்வதேசப் போட்டிகள். 

Risabh Pant

அதற்கு அவருக்காகச் செலவு செய்யப்பட்டிருக்கும் தொகை 15 கோடி. ஆக, 11 சர்வதேசப் போட்டிகளுக்கு டெல்லி செலவிட்டிருக்கும் தொகை 22 கோடி! மொத்தமாக 58 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள மோரிஸ், பன்ட், ஷ்ரேயாஸ் ஆகியோருக்கு டெல்லி 33 கோடி செலவு செய்துள்ளது. அதேசமயம், 1,005 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள '378' கூட்டணிக்கு (தோனி, ரெய்னா, ஜடேஜா) சி.எஸ்.கே செலவு செய்திருப்பதும் அதே 33 கோடி. இதுதான் டி-20... இதுதான் ஐ.பி.எல்!

மற்றபடி, கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்ட அணி சன்ரைசர்ஸ். வார்னர், தவான், புவனேஷ்வர் குமார், ரஷித் கான் என எக்கச்சக்க நட்சத்திரங்கள். போதாதக்கு ஹூடாவை தக்கவைக்கப்போகிறார்கள் என்றும்கூட வதந்திகள். அத்தனை ஆப்ஷன்கள் இருந்தபோதும்,  two retentions' என்று வி.வி.எஸ்.லட்சுமண் சொல்லியபோது புருவங்கள் உயர்ந்தன. அந்த இரண்டும் கூட சரியான தேர்வுகள். வார்னர் & புவி. இரண்டு பேரும் மேட்ச் வின்னர்கள். அவர்கள் இருவருக்கும் 21 கோடி என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. அந்த 21 கோடியில் கேப்டன், தலைசிறந்த ஓப்பனர், விக்கெட் டேக்கர், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பல பாக்ஸ்களை டிக் செய்துவிட்டது சன்ரைசர்ஸ் நிர்வாகம்.

dhawan  #IPLAuction

ஆனால், தவான்...? தவானை ரீடெய்ன் செய்திருந்தால், இன்னும் 12 கோடி அதிகம் செலவாகியிருக்கும். குறைந்த தொகைக்கு RTM கார்டு பயன்படுத்தி, திரும்ப வாங்க நினைத்திருக்கலாம். அல்லது, வார்னர் இருக்கையில் இன்னோர் இடதுகை ஓப்பனர் வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். எப்படி இருந்தாலும், இந்த முடிவு அவர்களைப் பெரிதாகப் பாதிக்காது. தவானை 12 கோடிக்கும் குறைவாக வாங்க அதிக வாய்ப்புள்ளது. 3 RTM கார்டுகள் கைவசம் இருப்பதால் தவான், ரசித் கான் போன்றோரை retention தொகையைவிடக் குறைவான தொகைக்கு வாங்கிடலாம். ஆக, மும்பை, சென்னை அணிகளுக்குப் பிறகு retention-ல் சிறப்பாகச் செயல்பட்டுள்ள அணி சன்ரைசர்ஸ்தான்.

அணிகள் தக்கவைத்த முடிவுகளில், அதிகம்பேரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். 7 ஆண்டுகளுக்குமுன் 14 கோடி கொடுத்து காஸ்ட்லி பிளேயராக வாங்கிய வீரரை...2 கோப்பைகள் பெற்றுக்கொடுத்த வீரரை...ரீடெய்ன் செய்யவில்லை. ஆனால், உண்மையில் இது சரியான முடிவுதான். ஏன்...? அடுத்த பாகத்தில்...!

ரஹானே அதிக தொகைக்கு ஏலம் போவார்... அஷ்வினை சென்னை வாங்குவது கடினம்...10 ஆண்டுகளுக்குப் பிறகு ஹர்பஜன் அணி மாறுவார்... கம்பீருக்கு 3 அணிகள் போட்டிபோடும்... சி.எஸ்.கே-வில் புதுமுகங்கள்....ஏன்..? எப்படி...? அடுத்தடுத்த பாகங்களில்!

https://www.vikatan.com/news/sports/112894-delhi-daredevils-paid-33-crores-for-players-who-played-just-58-international-matches.html

  • தொடங்கியவர்

இந்த ஆர்.சி.பி மட்டும் ஏன் திருந்துவதேயில்லை...! ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும் பாகம் -2

 

‘என்னப்பா கெய்லை ரீடெய்ன் பண்ணாம, சர்ஃபராஸப் பண்ணியிருக்காங்க...’ ராயல் சேலஞ்சர்ஸின் இந்த முடிவு விவாதத்துக்குள்ளானது. ரஹானே தக்கவைக்கப்படாததும் பலரை ஆச்சர்யப்படுத்தியது. ஆனால், கம்பீர் விஷயத்தில் கொல்கத்தா எடுத்த முடிவுதான் நெகடிவ் விமர்சனங்களுக்குள்ளானது. ஒருவகையில் பார்த்தால், இந்த 3 அணிகளுமே retention-ல் சரியாக செயல்படவில்லை. கெய்ல், கம்பீர் விஷயத்தில் முடிவுகள் சரிதான். ஆனால்...! அலசுவோம்... #IPLAuction

 

கம்பீர் - #IPL

2011-ம் ஆண்டு இதேபோல் வீரர்களைத் தக்கவைக்கும் சூழ்நிலை வந்தது. டிராவிட், காலிஸ், ஸ்டெய்ன் போன்ற வீரர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு இளம் விராட் கோலியை மட்டும் தக்கவைத்தது ஆர்.சி.பி. அந்த 3 ஆண்டுகள் இருந்த பெங்களூரு அணிக்கும், அடுத்த 7 ஆண்டுகள் ஆடிய பெங்களூரு அணிக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். ஜாஹிர் கான், டேல் ஸ்டெய்ன், பிரவீன் குமார், வினய் குமார், கும்ப்ளே போன்ற பௌலர்கள் விளையாடினர். பேட்டிங் சொதப்பல்களால் தோற்றது. நான்காவது சீசனிலிருந்து கெய்ல், கோலி, டிவில்லியர்ஸ், தில்சன் என பேட்ஸ்மேன்களை வாங்கிக் குவித்துவிட்டு பௌலிங்கில் கவனம் செலுத்தத் தவறிவிட்டனர். நல்ல பௌலர்கள் இருந்தாலும் ஓரிருவர் மட்டுமே இருப்பர். ஐந்தாவது பௌலராக ஹர்ஷல் படேல், அபு நெகிம் போன்றோர் இருந்தால் எப்படி கோப்பையை வெல்ல முடியும்?

10 சீசன்களில் ஒருமுறைகூட கோப்பையை வெல்லவில்லை. இந்த முறையேனும் சரியான திட்டமிடலுடன் களம் கண்டிருக்கவேண்டும். சாஹல், ஸ்டார்க் போன்ற பௌலர்கள் இருந்தும் அவர்களைவிட்டுவிட்டு சர்ஃபராஸ் கானை தக்கவைத்திருக்கிறார்கள். RTM கார்டு மூலம் அவர்களை ஏலத்தின்போது தக்கவைத்துக்கொள்ள முடியும்தான். ஆனால், 7 கோடிக்கும் குறைவாகப் போவார்களா? நிச்சயம் வாய்ப்பு குறைவு. 20 ஓவர் போட்டிகளில் லெக் ஸ்பின்னர்களின் அவசியத்தை அனைத்து அணிகளும் நன்கு உணர்ந்திருக்கின்றன. 

சஹால் - IPL

கடந்த சீசனில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 5-ம் இடத்திலிருந்த இம்ரான் தாஹிர் (12 போட்டிகளில் 18 விக்கெட்டுகள்), 6-ம் இடத்திலிருந்த ரஷித் கான் (14 போட்டிகளில் 17 விக்கெட்டுகள்) இருவருமே லெக் ஸ்பின்னர்கள்தான். அவர்களுக்கு அடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்பின்னர் - பவன் நெகி (12 போட்டிகளில் 16 விக்கெட்டுகள்). ஆல்ரவுண்டர். பெங்களூரு அணியின் வீரர்தான். ஆனால், குறைந்த விலைக்கு வாங்கிட முடியும். wrist ஸ்பின்னராக இருந்திருந்தால் கிராக்கி அதிகமாக இருந்திருக்கும். இந்நிலையில், சாஹலை அவ்வளவு எளிதில் RTM பயன்படுத்தி பெற்றிட முடியாது. ஆனால், எளிதாக சர்ஃபராஸ் கானை எளிதில் தக்கவைத்துக்கொண்டிருக்க முடியும். இது மிகவும் தவறான முடிவு. 

எஞ்சியிருக்கும் 2 RTM கார்டுகளில் எப்படியும் ஒன்றினை கே.எல்.ராகுலுக்குப் பயன்படுத்துவர். இரண்டாவது கார்டு கெய்லுக்குப் போனாலும் போகலாம். முழுவதும் பேட்ஸ்மேன்களாக தக்கவைத்துவிட்டு, கடந்த ஆண்டு தைமல் மில்ஸுக்கு செலவு செய்ததுபோல் ஒரு வெளிநாட்டு பௌலர்களுக்கு செலவு செய்துவிட்டு, மிச்சத் தொகையில் அனுபவம் இல்லாத பௌலர்களை வைத்துத் திண்டாடப் போகின்றனர். ஏலத்தில் மற்ற அணிகளைவிட இவர்கள் எச்சரிக்கையாக வீரர்களை வாங்கினால் மட்டுமே இனியேனும் கோப்பையைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.

ராஜஸ்தான் அணியும் ரஹானேவைத் தக்கவைக்காமல் தவறு செய்துள்ளது. ரூ.12.5 கோடிக்கு ஸ்டீவ் ஸ்மித் தக்கவைக்கப்பட்டுள்ளார். கூடவே, ரூ.8.5 கோடி செலவு செய்திருந்தால் ரஹானேவையும் தக்கவைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட தொகைக்கு நியாயம் சேர்த்ததுபோல் இருந்திருக்கும். என்னதான் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்திருந்தாலும், 12.5 கோடி என்பது ஸ்மித்துக்கு கொஞ்சம் அதிகம்தான். வெளிநாட்டு வீரர் என்பதால் குறைந்த தொகைக்குத்தான் ஏலம் போயிருப்பார்.  

ரஹானே ஐ.பி.எல்

ஆனால், இந்திய வீரர் என்பதால் ரஹானே அதிக தொகை பெறக்கூடியவரே. அதுமட்டுமல்லாமல் ஐ.பி.எல் தொடரில் அவரது செயல்பாடு மிகவும் நன்றாகவே இருந்திருக்கிறது. ஏலத்தில் அவர்  8.5 கோடிக்கும் குறைவாகப் போவாரா? அப்படிப் போனால் ராஜஸ்தான் அணி RTM கார்டைப் பயன்படுத்துமா? ஒருவேளை முதல் சீசனைப்போல், ஒரு அனுபவ கேப்டன்...அவரைச் சுற்றி இளம் இந்திய வீரர்கள் என்ற ஃபார்முலாவை பின்பற்றப் போகிறார்களோ என்னவோ! 

கம்பீர்... கொல்கத்தா அணி எடுத்த முடிவு சரியானதே. கம்பீரைத் தக்கவைத்திருந்தால் கூடுதலாக 12 கோடி செலவு செய்ய வேண்டியிருந்திருக்கும். அது கண்டிப்பாக அநாவசியமான செலவு. ஏலத்தில் மிகவும் குறைவான தொகைக்கு எடுத்துவிடலாம். அந்த வகையில் அவர்களின் இந்த முடிவில் தவறொன்றும் இல்லை. "என்ன இருந்தாலும், 2 கோப்பை வாங்கிக்கொடுத்த கேப்டன். அவருக்குக் கொஞ்சமாவது மரியாதை கொடுத்திருக்கணும்" என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர். இது கொல்கத்தா... கங்குலியே கழட்டிவிடப்பட்டார்! ஷாரூக் கானுக்கு கம்பீர் எம்மாத்திரம். 'தோனிதான் சூப்பர் கிங்ஸின் அடையாளம்' என அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ஓப்பனாக சொல்வார். ஷாரூக் அப்படிச் சொல்வாரா? 'நான்தான் என் அணியின் அடையாளம்' என்று சொல்லக்கூடியவர். கம்பீருக்கு 'சிம்பதி' எதிர்பார்ப்பதெல்லாம் அங்கு வேலைக்காகாது.

அதேசமயம், சுனில் நரைனைத் தக்கவைத்ததில் அந்த அணி தவறு செய்துள்ளது. அவரைத் தக்கவைக்க அந்த அணி செலவு செய்தது 12.5 கோடி ரூபாய். கடந்த சீசனில் 16 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். குல்தீப் யாதவ் அவரைவிட அதிக விக்கெட்டுகள் (12 போட்டிகளில் 12 விக்கெட்டுகள்) வீழ்த்தினார். நரைனின் பேட்டிங்கை காரணமாகச் சொல்லலாம். கன்சிஸ்டென்ஸி...? அதற்கு கிறிஸ் லின் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருந்திருப்பார். ஃபிட்டாக இருந்தால், கிறிஸ் கெய்ல் அளவுக்கு கிறிஸ் லின் சோபிப்பார். தக்கவைத்த இருவரும் வெளிநாட்டு வீரர்கள் என்பதால், லின்னை வாங்க RTM கார்டையும் பயன்படுத்த முடியாது.

நரீன் ஐ.பி.எல்

மனீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் என 3 டாப் இந்திய வீரர்கள் இருந்தபோதிலும், 2 வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைத்தது கேள்வி எழுப்புவதாக உள்ளது. ஆண்ட்ரே ரஸ்ஸல் - தக்கவைப்பதற்கான மிகச்சிறந்த சாய்ஸ். நிச்சயம் அவட் தக்கவைக்கப்பட்டிருக்க வேண்டும். மற்ற ஒருவரோ, இருவரோ இந்தியர்கள் யாரையேனும் அவர்கள் தக்கவைத்திருக்கலாம். RTM கார்டு பயன்படுத்தி அவர்களைத் தக்கவைக்க முயற்சிக்கலாம். ஆனால், குல்தீப், மனீஷ் ஆகியோர் அதிக தொகைக்குப் போக வாய்ப்புண்டு. இந்திய அணிக்காக சீராக ஆடாவிட்டாலும், ஐ.பி.எல் தொடரில் மனீஷ் தொடர்ந்து பட்டையைக் கிளப்பிவருகிறார். அதேபோல், குல்தீப் தேசிய அளவிலும் தன்னை நிரூபித்திருக்கிறார். அவர்களை RTM மூலம் மீண்டும் அணிக்குத் திருப்பினால் பிரச்னை இல்லை. இல்லையேல், நைட் ரைடர்ஸ் அணியின் பிளான் விமர்சனத்துக்கு உள்ளாகும். 

ஆக, இந்த 3 அணிகளும் வேறு வகையான திட்டத்தோடு வீரர்களைத் தக்கவைத்துள்ளன. அவர்களின் பிளான் பாசிடிவ் முடிவைத் தருமா என்பது ஏலத்தில் அவர்களின் சாதுர்யத்தைப் பொறுத்தே அமையும். நைட் ரைடர்ஸின் முடிவு டேர்டெவில்ஸைப் பாதிக்கும். எப்படி...? அடுத்த பாகத்தில்...

https://www.vikatan.com/news/sports/113226-kkrs-decision-of-not-retaining-gambhir-is-correct.html

  • தொடங்கியவர்

நைட் ரைடர்ஸின் முடிவு டேர் டெவில்ஸைப் பாதிக்கும்... ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் 3 #IPLAuction

 
 

இன்ஜினீயரிங் கடைசி ஆண்டு elective பாடங்கள் இருக்கும். நான்கு அல்லது ஐந்து பாடங்களில் ஏதேனும் இரண்டைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், மற்ற பரீட்சைகளைவிட, இந்த எலக்டிவ் பாடத்தை எழுதும்போதுதான் மனசு ஓவராக ஃபீலாகும். நமக்கு பாதியில் எல்லாம் மறந்துவிடும். வேறு பாடம் எடுத்த நண்பன் நன்றாக எழுதிக்கொண்டிருப்பான். 'பேசாம அந்தப் பாடத்த எடுத்திருக்கலாமோ' என்று தோன்றும். "நான்தான் அப்பவே இந்த சப்ஜெக்ட எடுக்க சொன்னேன்ல" என்று நண்பன் கேலி செய்வானே? என்ற எண்ணம்தான் வெளியே வரும்வரை போட்டு வாட்டும். ஃபெயிலாகப் போகிறோம் என்பதைவிட, 'தவறான முடிவெடுத்துவிட்டோம். அது கேள்விக்குள்ளாகுமே' என்ற பயம் அதிகமாக இருக்கும். சரி, இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத சப்ஜெக்ட் பத்திப் பேசுறோம்..? சம்பந்தம் இருக்கிறது! #IPLAuction

IPL

 

ஐ.பி.எல் ஏலம் இந்த elective பரீட்சைப் போலத்தான். ஒவ்வொரு முடிவுகளும் கேள்விக்குள்ளாகும். ஒவ்வொன்றும் பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு எடுக்கவேண்டும். ஒவ்வொரு பிளானுக்கும் குறைந்தது 10 பேக்-அப்கள் வைத்திருக்கவேண்டும். உதாரணமாக, 10 கோடி கொடுத்து சாஹலை ஆர்.சி.பி வாங்கினால், "இதற்கு 7 கோடி கொடுத்து ரீடெய்ன் பண்ணியிருக்கலாம்" என்று கேள்வி வரும். கேள்வியைவிட, அது முட்டாள்தனம் என்பது அவர்களுக்கும் உறுத்தலாக இருக்கும். ஆக, இந்த ஏலம் என்பது மிகப்பெரிய சைக்கலாஜிக்கல் தலைவலி என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட ஏலம், நடப்பதற்கு முன்பே டெல்லி அணிக்கு சிக்கல் தொடங்கியிருக்கிறது!

அணிகள் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் வெளியாவதற்கு முன்பே, 'கௌதம் கம்பீர் தக்கவைக்கப்படமாட்டார்' என்று பரவலான பேச்சு அடிபட்டது. ஒரு நிருபர் கம்பீரிடமே இதைக் கேட்டுவிட, "எந்த அணிக்கும் விளையாடத் தயார்" என்று ஸ்டேட்மென்ட் கொடுத்தார் கம்பீர். தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளிவந்தது...சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தக்கவைக்கப்பட்டனர். கம்பீர் கழட்டிவிடப்பட்டார். ஒன்றும் பிரச்னை இல்லை, RTM கார்டு மூலம் மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால், கம்பீரின் அந்தப் பேட்டியும், கொல்கத்தா அணியின் இந்த முடிவும், டெல்லி அணியைக் கேள்விக்குள்ளாக்கும்.

Gambhir IPL

டேர்டெவில்ஸ் - 10 ஆண்டுகளில் ஒருமுறைகூட பைனலுக்குச் செல்லாத ஒரே அணி. ஐ.பி.எல் தொடக்க காலங்களில் கொஞ்சம் நன்றாகத்தான் ஆடிவந்தது. நான்காவது சீசனிலிருந்து தொடர்ந்து சரிவுதான். அந்த அணி அரையிறுதியை எட்டிய மூன்று முறையும் அணியின் கேப்டனாக இருந்தவர் சேவாக். ஐ.பி.எல் தொடக்கத்தில், மார்க்கீ வீரராகவும், அணியின் அடையாளமாகவும் இருந்தவர். முதல் மூன்று சீசன்களில் கம்பீரும் அங்குதான் இருந்தார். 2010-ம் ஆண்டு கேப்டனாகவும் செயல்பட்டார். சேவாக், கம்பீர், தினேஷ் கார்த்திக், அமித் மிஷ்ரா போன்ற இந்திய வீரர்கள் நிறைந்திருக்க, முதல் 3 சீசன்கள் நன்றாக செயல்பட்டது.

2011 ஏலம் - கம்பீர் தக்கவைக்கப்படவில்லை. ஏலத்திலும் எடுக்கவில்லை. கொல்கத்தா செல்கிறார். கேப்டனாகிறார். 2014... அடுத்த ஏலம்...சேவாக்கும் கழட்டிவிடப்படுகிறார்.  பஞ்சாப் அணிக்கு ஆடுகிறார் விரு. முதல்முறையாக ஐ.பி.எல் பைனலில். அந்தத் தொடரில் 455 ரன்கள் அடிக்கிறார். டெல்லி அணியின் டாப் ஸ்கோரர் டுமினி அவரைவிட 45 ரன்கள் குறைவாக 410 ரன்கள் மட்டுமே அடிக்கிறார். அந்தத் தொடரை வென்று, தன் இரண்டாவது ஐ.பி.எல் கோப்பையை வெல்கிறார் கம்பீர். டெல்லி கடைசி இடத்தில்! பிரச்னை அவர்கள் இரு பேட்ஸ்மேன்களை இழந்தது அல்ல. தங்களின் ஒவ்வொரு முடிவாலும், ஒரு நல்ல கேப்டனை இழந்துள்ளனர். 

Sehwag - IPL

சேவாக் டெல்லியில் ஆடியபோதே கேப்டனாக இருக்க மிகவும் யோசித்தார். அதனால்தான் 2010-ல் கம்பீர் கேப்டனானார். 6-வது, 7-வது சீசன்களில் முறையே மஹிலா ஜெயவர்தனே மற்றும் கெவின் பீட்டர்சன் அந்த அணியை வழிநடத்தினர். அந்த இரண்டு ஆண்டுகளுமே டெல்லி கடைசி இடம்தான் பிடித்தது. அந்த இரண்டு சீசன்களில், மொத்தம் 30 போட்டிகளில் அந்த அணி வென்றது வெறும் 5 போட்டிகள்தான். அடுத்த சீசன் - டுமினி கேப்டன்... ஏழாவது இடம். வெளிநாட்டுக் கேப்டன்கள் செட்டாகாது என்றுணர்ந்து, கேப்டன்சி அனுபவம் இல்லாத ஜாஹிர் கானை கேப்டனாக்கினர். அரையிறுதி வாய்ப்பு அகப்படவே இல்லை. டிவில்லியர்ஸ், ஜெயவர்தனே, வார்னர், மெக்ராத், வெட்டோரி போன்றோரோடு சேவாக், கம்பீர் ஆடிய காலத்திலேயே அகப்படாத கோப்பை, அதன்பிறகு உருவாக்கப்பட்ட சுமாரான டீமுக்குக் கிடைத்திடுமா?

இப்போது விஷயத்துக்கு வருவோம். இப்போதுள்ள அணிகளில் 3 அணிகள்தான் கோப்பையை வெல்லவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் - 3 முறை பைனலுக்குள் நுழைந்துள்ளது. கிங்ஸ் லெவனும் ஒரு பைனலைப் பார்த்துவிட்டது. டெல்லி...? அரையிறுதிக்குள் நுழைந்தே 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஏலம், அவர்களின் மாற்றத்துக்கான புதிய தொடக்கம். பயிற்சியாளராக, உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான பான்ட்டிங்! ஒரு கேப்டனின் அவசியத்தை அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார். 

ஜேம்ஸ் ஹோப்ஸ், ஜெயவர்தனே, கெவின் பீட்டர்சன், ஜே.பி.டுமினி போன்றோரெல்லாம் கேப்டனாக இருந்து அணியை கடைசி இரண்டு இடங்களுக்கே வழிநடத்தியுள்ளனர். அதனால் இந்த முறையேனும் ஒரு நல்ல கேப்டனை வாங்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. 'நல்ல கேப்டன் என்ன நல்ல கேப்டன்... அதான் கம்பீர் இருக்கார்ல...' - இதுதான் இப்போது டெல்லி அணி சந்திக்கும் பிரச்னை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு, கேப்டன் கம்பீரை விட்டுவிட்டது. இதற்குமுன்பே வந்து `ஹைப்' ஏற்றியது கம்பீரின் அந்தப் பேட்டி...

POnting

"கொல்கத்தா அணி ரீடெய்ன் செய்யவில்லை என்றால் டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடுவீர்களா" என்று கேட்க, "Retention பற்றிய எந்தச் செய்தியும் இதுவரை எனக்குத் தெரியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனக்கு மிகவும் நெருக்கமான அணி. டெல்லி, எனது சொந்த ஊர் என்பதால், டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என்றார் கம்பீர். அவர்களின்  முன்னாள் வீரர், முன்னாள் கேப்டன் அவர்களுக்காக விளையாட ரெடி. இதனால், கம்பீர்தான் டெல்லி அணியின் புதிய தொடக்கத்துக்கு, சரியான கேப்டன் என்ற பிம்பம் உருவாகிவிட்டது.

கொல்கத்தா எப்படிப்பட்ட முடிவும் எடுக்கலாம். இப்படியான சூழ்நிலையில் டெல்லி அணி கம்பீரை மீண்டும் டெல்லிக்கு அழைத்துவருமா என்பதுதான் கேள்வி. டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை சாதித்திருந்தால், இது சாதாரண கேள்வியாக கடந்திருக்கும். அவர்களின் மோசமான வரலாறு, இந்தக் கேள்வியை.. மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாற்றியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை அவர்கள் பூர்த்தி செய்யாவிடில் நிச்சயம் கேள்விகள் எழும். "நான்தான் வேற சப்ஜெக் எடுன்னு சொன்னேனே" என்று வெறுப்பேத்தும் நண்பனைப்போல். 'கொல்கத்தா RTM கார்டு பயன்படுத்தி ரீடெய்ன் செய்துவிட்டால்?' அப்போதும் சும்மா விடுவோமா? RTM பயன்படுத்துவதற்கு முன்பாக கூறப்படும் அதிகபட்ச தொகை டெல்லி கேட்டதாக இருக்கவேண்டும். இல்லாவிடில், அப்போதும் கேள்விகள் துரத்தும். ஆகமொத்தம், கம்பீர் கொல்கத்தாவுக்குப் போகிறாரோ இல்லையோ, அவரை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் டேர்டெவில்ஸ் அணிக்கு ஏற்படும்... ஏற்பட்டுள்ளது! #IPLAuction

Zaheer - IPL

போன சீசன் தங்கள் அணியில் ஆடிய ஆஞ்ஜெலோ மாத்யூஸை, RTM மூலம் வாங்கி கேப்டனாக்கலாம். ஆனால், அவர் தலைமை தாங்கிய இலங்கை அணி வாங்கிய அடி உலகுக்கே பரிட்சயம். எனவே, அப்படியான விஷப்பரீட்சையில் பான்ட்டிங் இறங்கமாட்டார் என்று நம்பலாம். 'ஐ ஹேட் அதர் ஐடியாஸ்!' என்று டெல்லி சொல்லலாம். ஆனால், ஐ.பி.எல் அனுபவம், கேப்டன்சி அனுபவம் சேர்ந்து பெற்ற கேப்டன்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? வில்லியம்சன், மெக்கல்லம், ரஹானே, தவான், வாட்சன், டுபிளஸ்ஸி, இயான் மோர்கன் போன்ற வீரர்கள் அனைவரும் RTM கார்டு மூலம் தங்கள் பழைய அணிகளால் திரும்ப வாங்கப்பட வாய்ப்புண்டு. எஞ்சியிருப்பவர்கள் ஜேசன் ஹோல்டர், ஷகிப் அல் ஹசன் போன்ற கேப்டன்களும், அஷ்வின், ஹர்பஜன் போன்ற இந்திய வீரர்களும்தான். ஜாஹீரிடம் பெற்ற அனுபவம் போதும்தானே. அதனால், கம்பீர் என்று சொல்லிக்கொண்டு......'டெல்லி அண்டர் பிரஷர்!'

டெல்லி அணிக்கு இன்னொரு ஆப்ஷன் இருக்கு. அவருக்காக 2 அணிகள் அடிச்சுக்கலாம். யாரு அவரு...? (அடுத்த பாகத்தில்...)

https://www.vikatan.com/news/sports/113411-kkrs-decision-may-hurt-delhi-daredevils.html

  • தொடங்கியவர்

ஆரோன் ஃபின்ச் - பெர்ஃபெக்ட் கேப்டன் மெட்டீரியல்... எந்த அணிக்கு? ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் - 4 #IPLAuction

 
 

ஐ.பி.எல் தொடருக்கு ஒரு விசித்திர வரலாறு இருக்கிறது. இதுவரை நடந்த 10 தொடர்களை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் தலைமை தாங்கிய அணிகளே வென்றுள்ளன. கம்பீர், தோனி 2 முறை, ரோஹித் 3 முறை கோப்பையை வென்றுள்ளனர். மற்றபடி 2008, 2009, 2016 ஆண்டுகளில் முறையே கோப்பையை வென்ற மூவரும் ஆஸ்திரேலியர்கள்: வார்னே, கில்கிறிஸ்ட் மற்றும் வார்னர். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் மூவரும் ரெகுலர் கேப்டன்கள் இல்லை. இந்த வரலாறு 2018 ஏலத்தில் ஒரு வீரருக்குச் சாதகமாகலாம். அவர் - ஆரோன் ஃபின்ச்! #IPLAuction

Finch

 

அதிரடி ஓப்பனரான ஃபின்ச்தான் உலகின் நம்பர்-2 டி-20 பேட்ஸ்மேன். சர்வதேச டி-20 போட்டிகளில் இவரது சராசரி 37.73! இது டேவிட் வார்னரின் (27.35) சராசரியைவிட அதிகம். இவரது ஸ்ட்ரைக் ரேட்டும் (148.36) வார்னரின் ஸ்ட்ரைக் ரேட்டைவிட (139.24) அதிகம். ஆனால், வார்னருக்கு இருக்கும் மவுசு ஐ.பி.எல் தொடரில் ஃபின்ச்சுக்கு இல்லை. 2010-ல் இருந்து ஐ.பி.எல் தொடரில் ஆடிவரும் ஃபின்ச், 8 சீசன்களிலும் சேர்த்து இதுவரை 65 போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். அதனால்தான், ஐ.பி.எல் தொடரில் அவர் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதற்கு அவரைக் குறைகூறி பிரயோஜனம் இல்லை. 2010-ம் ஆண்டு அவர் ராஜஸ்தான் அணியில் ஆடியபோது வார்னே, வாட்சன், ஷான் டெய்ட் போன்ற வீரர்களைத் தாண்டி அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மைக்கேல் லம்ப், நமன் ஓஜா என இரண்டு ஓப்பனர்களும் நல்ல ஃபார்மில் இருந்தனர். அதனால் அந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அடுத்த 2 ஆண்டுகள் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில். இம்முறை சேவாக், டேவிட் வார்னர் கூட்டணியால் ஓப்பனிங்கில் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இரண்டு சீசன்களிலும் சேர்த்து 8 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் ஃபின்ச்.

Finch

ஐ.பி.எல் தொடரில் தனக்கென ஒரு இடத்தை அவர் தக்கவைத்துக்கொண்டது 2013-ம் ஆண்டுதான். புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடிய ஃபின்ச், சில போட்டிகளில் அணியை வழிநடத்தவும் செய்தார். அந்த சீசனில் 14 போட்டிகளில் 456 ரன்கள் குவித்து அசத்தினார் ஃபின்ச். அடுத்த ஆண்டு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 309 ரன்கள் எடுத்தார். அந்த சீசனில் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பது உண்மைதான். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டவர், காயம் காரணமாக விலகினார். ஆனால், அதற்கடுத்த சீசன்களில் அவருக்கான ஓப்பனிங் வாய்ப்புகள் மீண்டும் குறைந்தது. 

அடுத்த 2 ஆண்டுகள், புதிதாக கலந்துகொண்ட குஜராத் லயன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கல்லம், ஜேசன் ராய், இஷான் கிஷான் என நிறைய ஓப்பனர்கள் நிறைந்திருந்ததால், அந்த அணிக்காக விளையாடிய 26 போட்டிகளில் அவரால் 8-ல் மட்டுமே தொடக்க வீரராகக் களமிறங்க முடிந்தது. ஆனாலும், இந்த 2 சீசன்களில் 7 அரைசதங்கள் உள்பட 692 ரன்கள் எடுத்தார் ஃபின்ச். ராயல் சேலஞ்சர்ஸ் அணி 'கிறிஸ் கெய்லோடு யாரைக் களமிறக்கலாம்' என்று யோசித்த போதெல்லாம், தரமான ஓப்பனரான ஃபின்ச், பெஞ்சில் அமர்ந்திருந்தார். மிடில் ஆர்டரிலும் நன்றாக விளையாடிய பாவத்தினால், ஓப்பனிங் ஸ்லாட் பறிபோனது. ஆக, ஆரோன் ஃபின்ச் எனும் உலகத்தர ஓப்பனரை இன்னும் ஐ.பி.எல் முழுமையாகப் பார்க்கவில்லை.

அதனால்தான் ஃபின்ச், 'டேஞ்சரஸ்' பேட்ஸ்மேனாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒருவேளை, ஓப்பனராகவே அவர் விளையாடியிருந்தால், கெய்ல், வார்னருக்கு நிகராகப் பேசப்பட்டிருப்பார். இந்த முறையாவது அவர் ரெகுலர் ஓப்பனராகக் களமிறங்கினால், நிச்சயம் டாப் ஸ்கோரர்களில் ஒருவராக இருப்பார். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், கேப்டனாகவும் அவரை அணிகள் தேர்வு செய்தால் டபுள் ஜாக்பாட் அடிக்க வாய்ப்புண்டு! எப்படி...?

Finch - IPL

PC - BCCI

10 ஐ.பி.எல் தொடர்களில் ஏழு தொடர்களை இந்தியக் கேப்டன்களே வென்றுள்ளன. மற்ற 3 தொடர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் வழிநடத்திய அணிகள்தான் வென்றுள்ளன. பிரண்டன் மெக்கல்லம் (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்), டேனியல் வெட்டோரி (ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூர்), மகிளா ஜெயவர்தனே (டெல்லி டேர்டெவில்ஸ்), குமார் சங்கக்காரா (கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ்) போன்றவர்களும் ஐ.பி.எல் அணிகளை வழிநடத்தியுள்ளனர். ஆனால், அவர்களால் தங்கள் அணியை சாம்பியனாக்க முடியவில்லை. 2 முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச டி 20 உலகக்கோப்பையை வென்று தந்த டேரன் சமியாலும், ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை.

அதேசமயம், ஐ.பி.எல் சாம்பியனான 3 கேப்டன்கள் - ஷேன் வார்னே, ஆடம் கில்கிறிஸ்ட், டேவிட் வார்னர்... இவர்கள் யாரும் ரெகுலர் கேப்டன்கள் இல்லை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரெகுலர் கேப்டன்களே ஐ.பி.எல் தொடரில் சாதித்ததில்லை. ரிக்கி பான்டிங் கொல்கத்தாவில் ஆடியபோது கங்குலிதான் அணியை வழிநடத்தினார். மும்பை அணிக்கு அவர் கேப்டனாக இருக்க, விரைவில் அணியிலேயே இடத்தை இழந்தார். மைக்கேல் கிளார்க் புனே அணியை வழிநடத்தும் முன்பே காயத்தால் விலகினார். ஸ்டீவ் ஸ்மித் (புனே சூப்பர்ஜெயின்ட்ஸ்), ஜார்ஜ் பெய்லி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) வழி நடத்திய அணிகள் ஃபைனல்வரை வந்து வீழ்ந்தன. அன்றைய ஆஸ்திரேலிய டி-20 கேப்டன் கேமரான் ஒயிட் சிலநாள்கள் வழிநடத்திய டெக்கான் சார்ஜர்ஸும் சோபிக்கவில்லை. ஆக, சர்வதேசக் கேப்டன்கள் எவரும் இங்கு சோபித்ததில்லை.

Finch - IPL

PC - BCCI

அந்த வகையில், வார்னருக்கு அடுத்த ஆளாக ஃபின்சுக்கு வாய்ப்புகள் அதிகம். புனே வாரியர்ஸ் அணியை சில போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். ஆஸ்திரேலிய டி-20 அணியையும் 9 போட்டிகளில் வழிநடத்திய அனுபவம்  இருக்கிறது. லீக் போட்டிகளில் விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிகளுக்கும் கேப்டனாக இருந்தார். 2012-ம் ஆண்டு ரெனகேட்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது, தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார் ஃபின்ச்! டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்குக் கேப்டன் இல்லாததால் ஃபின்ச்சைத் தேர்வு செய்வது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். 

சரியான கேப்டன் இல்லாததால்தான் இந்த இரு அணிகளும் சமீபகாலமாக திணறி வருகின்றன. பஞ்சாப் அணி அக்சர் படேலை மட்டும் தக்கவைத்துள்ளதால், ஏலத்தின்போது எப்படியும் முன்னணி வீரர்களைத் தேடும். அந்த அணியில் சாதாரணமாகவே ஆஸ்திரேலிய வீரர்கள் நிறைந்திருப்பர். ஷான் மார்ஷ், ப்ரெட் லீ, ஹோப்ஸ் எனத் தொடங்கி, பெய்லி, ஜான்சன், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் என பிளேயிங் லெவனில் ஆஸ்திரேலியர்கள் இல்லாமல் அந்த அணி களம் கண்டதே இல்லை. அப்படிப் பார்க்கையில் அவர்கள் ஃபின்ச்சுக்கு முயற்சி செய்யலாம். ஓப்பனர், கீப்பர் என இரண்டு பாக்ஸ்களையும் ரிசப் பன்ட் டிக் செய்வதால், டி காக்குக்குப் பதிலாக, மற்றொரு ஓப்பனராக ஃபின்ச்சை வாங்குவது டெல்லி அணிக்கும் சரியான சாய்ஸ்!

Finch

அதுமட்டுமல்லாமல், கடைசியாக விளையாடிய 5 டி-20 போட்டிகளில் 158 ரன்களும், கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் (இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிவரை) 2 சதம், 2 அரைசதம் உள்பட 425 ரன்களும் குவித்து நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். ஆக, இதுவரை பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத ஃபின்ச்-க்கு இந்த ஏலத்தில் முக்கியத்துவம் தந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்! அந்த மாற்றத்துக்காக டெல்லி, பஞ்சாப் அணிகள் இவருக்குப் போட்டி போடலாம்! 

 

டெல்லி அணியின் முடிவு, இந்திய தேசிய அணியின் எதிர்காலத்துக்கு மிகமுக்கியம். ஏன்...? அடுத்த பாகத்தில்!

https://www.vikatan.com/news/sports/113677-aaron-finch-is-the-perfect-choice-for-dd-and-kxip-for-change-of-fortunes.html

  • தொடங்கியவர்

டெல்லி எடுக்கும் முடிவும்... இரண்டு வீரர்களின் எதிர்காலமும்...! ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் - 5 #IPLAuction

 

 

 

 

வரும் 27,28 தேதிகளில் நடக்கும் ஐ.பி.எல் ஏலம்தான், அடுத்த சில ஆண்டுகளுக்கு ஒவ்வோர் ஐ.பி.எல் அணிகளின் செயல்பாட்டுக்கும் அஸ்திவாரம். அதனால், ஒவ்வோர் அணியும் யாரை வாங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏலத்தின்போது அணிகள் எடுக்கும் முடிவுகள், அந்தந்த அணிகளின் எதிர்காலத்தை மட்டுமே நிர்ணயிக்கும். ஆனால், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முடிவுகள், இந்திய தேசிய அணிக்கு மிகவும் முக்கியமானவை. அப்படியானால், டேர்டெவில்ஸ் அணியின் முடிவு இந்திய தேசிய அணியைப் பாதிக்குமா? ஆம், பாதிக்கும்! ஒரு ஐ.பி.எல் அணி எடுக்கும் முடிவு, தேசிய அணியை எப்படி பாதிக்கும்...? #IPLAuction

Delhi Daredevils #IPLAuction

2004-ம் ஆண்டு தோனி இந்திய அணிக்கு அறிமுகமானார். அதற்கு முன்புவரை சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைக்காமல், பல வருடங்களாகத் தடுமாறிக்கொண்டிருந்தது இந்திய அணி. நயன் மோங்கியா, விஜய் தாஹியா, அஜய் ராத்ரா என பேட்டிங்கில் கொஞ்சம்கூட பெர்ஃபார்ம் செய்யாத கீப்பர்களே வந்துகொண்டிருக்க, டிராவிட் விக்கெட் கீப்பராகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருநாள் போட்டிகளுக்கு அவர் கீப்பராக, டெஸ்ட் போட்டியில் அந்தப் பணியை ஏற்றார் பார்த்திவ் படேல். அடுத்து அவருக்குப் போட்டியாக தினேஷ் கார்த்திக். முன்பு சொன்னவர்களைவிட இவர்கள் ஓரளவு சுமாரான பேட்ஸ்மேன்கள் என்றாலும், உலகத்தரம் வாய்ந்த கீப்பர்களா என்றால்...இல்லை! 

தோனி இந்திய அணிக்குள் நுழைந்தபின், கீப்பர், பேட்ஸ்மேன் என இரண்டு ரோல்களையும் நன்றாகவே செய்தார். அவர் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் இல்லை என்றாலும், நம்பர் - 7ல் விளையாடுவதற்கான டீஸன்டான சாய்ஸாகவே இருந்தார். 2014-ல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றபோது, அவர் இடத்தை ரித்திமான் சஹா நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. கீப்பிங்கில் அசத்தினாலும், சஹாவால் பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. உள்ளூர் போட்டிகளில் நன்றாக செயல்பட்டிருந்தாலும், அவ்வப்போது மட்டுமே களமிறங்குவதால், பார்த்திவ் மற்றும் கார்த்திக் ஆகியோரால் இந்திய அணிக்காக சிறந்த பங்களிப்பை அளிக்க முடியவில்லை.

Dhoni

2019 உலகக்கோப்பைக்குப் பிறகு தோனி முழுவதுமாக சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறக்கூடும். அப்போது சஹாவுக்கு 35 வயதும், பார்த்திவ், கார்த்திக் ஆகியோருக்கு 34 வயதும் ஆகியிருக்கும். மூவரும் கிரிக்கெட் அரங்கில் தங்களின் கடைசி காலகட்டத்தில் இருப்பார்கள். இந்நிலையில், தோனி போன்ற ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனைத் தேடுவது இந்திய அணிக்கு அவசியம். மீண்டும் தாஹியா, ராத்ரா போன்ற வீரர்களை அறிமுகப்படுத்தி, ஓரிரு தொடருக்குப் பின் அடுத்த ஆளைத் தேடும் சூழ்நிலைக்கு தள்ளப்படக்கூடாது. டெஸ்ட் போட்டியில், ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான தேவை இப்பொழுதே ஏற்பட்டுவிட்டது. தென்னாப்பிரிக்கத் தொடரில் பார்திவ், சஹா இருவராலும் சோபிக்க முடியவில்லை. அதனால், தோனியின் வாரிசை இப்போதே கண்டறியவேண்டும்.

ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன் இந்த இருவரும் தோனியின் இடத்தை நிரப்ப தகுதியான நபர்களாகக் கருதப்பட்டனர். ஐ.பி.எல் தொடரின்மூலம் லைம்லைட்டுக்கு வந்த சஞ்சு சாம்சனுக்கு வயது 23. ரிசப் பன்ட் இப்போதுதான் 20-ஐத் தொட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரில் இவர்கள் இருவருமே ஓரளவு சோபித்துள்ளனர். 2017 ஐ.பி.எல் சீசனில் முறையே 386, 366 ரன்கள் எடுத்தனர். முதல்தரப் போட்டிகளிலும் நல்ல சராசரி வைத்துள்ளனர். ரிஷப் பன்ட், முதல் தரப் போட்டிகளில் 53.62 சராசரி வைத்துள்ளார். இந்த ரஞ்சி சீசனில் டெல்லி அணியின் கேப்டனாகவும் இருந்தார். இதற்கும், இந்தக் கட்டுரைக்கும், டேர்டெவில்ஸ் அணிக்கும் என்ன சம்பந்தம்? இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர்களாக கருதப்படும் அந்த இருவரும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடுவதுதான் பிரச்னை!

Parthiv, Saha, DK

ராஜஸ்தான் அணி சஸ்பெண்ட் செய்யப்பட, 2016 சீசனுக்கான ஏலத்தில் டேர்டெவில்ஸ் அணியால் வாங்கப்பட்டார் சாம்சன். 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையில் பட்டையைக் கிளப்ப, உள்ளூர் வீரர் பன்ட்டையும் வாங்கியது டெல்லி. ஏற்கெனவே குவின்டன் டி காக் அணியில் இருக்கும்போது இரண்டு கீப்பர்கள் வாங்கப்பட்டனர். அதோடு நின்றதா டெல்லி? இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸையும் வாங்கியது. அந்த சீசனில் 4 ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்களுடன் விளையாடியது டேர்டெவில்ஸ். 13 போட்டிகளில் டி காக் விக்கெட் கீப்பராகப் பணியாற்றினார். அவர் விளையாடாத ஒரேயொரு போட்டியில் மட்டும் சஞ்சு சாம்சன் கீப்பிங் செய்தார். 10 போட்டிகளில் விளையாடிய ரிஷப், ஒரு போட்டியில்கூட கீப்பிங் செய்யவில்லை. 

டெல்லி அணியில் நிலமை இப்படி இருக்க, அந்த சீசன் ஃபைனலுக்குச் சென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் நிலமையோ வேறு மாதிரி இருந்தது. ஆர்.சி.பி அணியில் ரெகுலர் கீப்பரே இல்லை. கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ் இருவரும்தான் அந்தப் பணியைச் செய்தனர். 17 போட்டியும் நமன் ஓஜாவைத்தான் ஆடவைத்தது சன்ரைசர்ஸ். அந்தத் தொடரில் அவரது சராசரி 13.60. ஆனாலும், அவரையே களமிறக்கக் காரணம், அவர்கள் அணியிலிருந்து மற்றொரு கீப்பர் ஆதித்யா தாரேதான். இப்படி தரமான கீப்பர்களே இல்லாமல் இரு அணிகள் ஃபைனல்வரை செல்ல, 4 கீப்பர்களை வைத்திருந்தது டேர்டெவில்ஸ்.

Samson, Dekock, Pant IPL

2017 ஐ.பி.எல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக, காயம் காரணமாக வெளியேறினார் டி காக். அவரது இடத்தை நிரப்பினார் ஆதித்யா தாரே. மீண்டும் 4 கீப்பர்களோடு களமிறங்கியது. 14 போட்டிகளிலும் ரிஷப் பன்ட்தான் கீப்பராக இருந்தார். சாம்சன் ஃபீல்டராகத்தான் அணியில் ஆடினார். அவர்கள் விளையாடிய 2-வது போட்டியில், முதல் நான்கு பேட்ஸ்மேன்களுமே கீப்பர்களாகத்தான் களமிறங்கினர். இந்த 2 சீசன்களில் 6 போட்டிகளில், பிளேயிங் லெவனில் 4 கீப்பர்களோடு களமிறங்கியுள்ளது டெல்லி அணி. 17 போட்டிகளில் குறைந்தபட்சம் 3 ஸ்பெஷலிஸ்ட் கீப்பர்களோடு களமிறங்கியுள்ளனர். 

இதனால் பிரச்னை வருமா...? நிச்சயம் வரும். இந்த இரண்டு சீசன்களில், 28 போட்டிகளில் ஆடிய சஞ்சு சாம்சன், கீப்பராக விளையாடியது வெறும் 1 போட்டியில் மட்டும்தான். இப்படியிருக்கையில், இந்திய அணிக்குள் அவரால் எப்படி நுழைய முடியும்? முச்சதம் அடித்த கருண் நாயரிலிருந்து, துணைக் கேப்டன் ரஹானே வரை பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். லிமிடட் ஓவர் ஃபார்மட்டிலும் இந்திய அணியின் பேட்டிங்குக்குப் பஞ்சமே இல்லாமல் வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். இப்படியிருக்கையில், ஒரு பேட்ஸ்மேனாக அவரால் இந்திய அணிக்குள் நுழைய முடியாது. 

Risabh Pant

இந்திய அணிக்குள் நுழைவதற்கு அறிவிக்கப்படாத வாயிலாக மாறியிருக்கும் ஐ.பி.எல் தொடரில், கீப்பராகத் தன்னை நிரூபித்தால் மட்டுமே அவரால் அணிக்குள் இடம்பிடிக்க முடியும். ரிஷப் பன்ட்டுக்கும் இதே நிலைமைதான். ரஞ்சி கோப்பைக்கு டெல்லி அணியின் கேப்டனாக இருந்தவர். கிரிக்கெட் சங்க அரசியலால், சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான கேப்டன் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் எதிர்காலம் என நினைத்த உன்முக்த் சந்த், வெளியே அமரவைக்கப்பட்டுள்ளார். கம்பீருக்கும் இடமில்லை. இப்படியான அரசியலால்தான் கடைசி காலத்தில் ஹரியானா அணிக்காக ரஞ்சி கோப்பையில் பங்கேற்றார் சேவாக். இப்படியான கிரிக்கெட் சங்கம், இந்த 19 வயது வீரரை எங்கே நிறுத்தும் என்று சொல்ல முடியாது!

கடந்த 2 சீசன்களிலும் கவனம் ஈர்த்த பன்ட்டுக்கு இது மிகவும் முக்கியமான சீசன். டேர்டெவில்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டிருப்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான், டெல்லி அணி ஏலத்தில் எடுக்கும் முடிவு முக்கியத்துவம் பெறும். RTM கார்டு மூலம் அவர்கள் இன்னும் இரண்டு வீரர்களைத் தக்கவைக்க முடியும் - ஒரு இந்திய வீரர், ஒரு வெளிநாட்டு வீரர். ஏற்கெனவே பன்ட் இருப்பதால், சாம்சன், டிகாக் இருவரையும் அவர்கள் தக்கவைக்காமல் இருப்பது அவசியம். டி காக், டெல்லி அணிக்கு வாங்கப்பட்டால், நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார். கீப்பராகவும் அவர்தான் செயல்படுவார். அதனால், பன்ட், சாம்சன் இருவருமே ஃபீல்டர்களாகத் தொடர வேண்டியிருக்கும். 

Sanju Samson IPL

 

அதேசமயம், சாம்சனையும் வாங்காமல் இருந்தால், அது அவருக்கும் நல்லது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டு வந்திருப்பதால், முடிந்தவரை அவர்களுடைய பழைய வீரர்களையே வாங்க முயற்சிப்பர். அந்த லிஸ்டில் ரஹானேவுக்கு அடுத்து சாம்சம்தான் முதல் சாய்ஸ். அங்கு அவராலும் கீப்பராக செயல்பட முடியும். டெல்லி அணி இப்படியான முடிவுகளை எடுத்தால், பன்ட், சாம்சன் மட்டுமில்லாது, அது இந்திய அணிக்கும் உதவியாக இருக்கும். இருவரும் இப்போதுதான் வளர்ந்து வருவதால், தங்களுடைய ரோலில் விளையாடுவதுதான் நல்லது. அப்படி விளையாடும்போதுதான் இந்திய அணிக்கான சரியான சாய்ஸையும் நம்மால் கண்டெடுக்க முடியும்!

https://www.vikatan.com/news/sports/113795-dd-decision-and-the-future-of-rishabh-pant-and-samson.html

  • தொடங்கியவர்

புது ஈடன் கார்டன்... புது ஏலம்... புது நைட்ரைடர்ஸ்...! ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் - 6 #IPLAuction

 

முந்தைய ஐ.பி.எல் ஏலங்களில் புத்திசாலித்தனமாகச் செயல்பட்ட அணி எதுவென்றால், கொல்கத்தா நைட்ரைடர்ஸைச் சொல்லலாம். தங்கள் சொந்த மைதானத்துக்கு ஏற்றதுபோல் வீரர்களை வாங்கிய ஒரே அணி கே.கே.ஆர்தான். சுழலுக்குச் சாதகமான ஈடன் கார்டன் ஆடுகளத்துக்குத் தகுந்ததுபோல் வீரர்களை வாங்கியது அந்த அணி. கடந்த சில ஆண்டுகளாக அந்தத் திட்டம் அவர்களுக்குக் கைகொடுத்தது. ஆனால், இந்தமுறை... அந்தத் திட்டம் அவர்களுக்குக் கைகொடுக்கப் போவதில்லை. ஸ்பின்னர்களை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு களமிறங்க முடியாது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இம்முறை வேறு ஃபார்முலாவுடன் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. #IPLAuction

KKR

ஐ.பி.எல் தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமில்லாது, திறமையான சில வெளிநாட்டு வீரர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், வெகுசிலர் தேசிய அணியில் தங்களுக்கென தனி இடம் பிடித்தனர். அந்த வெகுசிலரில் ஒருவர் சுனில் நரீன். 2012-ல் கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட நரீன், முதல் சீசனிலேயே தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார். அன்று முதல், அந்த அணியின் மிகமுக்கிய அங்கமாக விளங்குகிறார். அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம் - ஈடன் கார்டன் மைதானம். ஸ்பின்னர்களின் சொர்க்க பூமியாக விளங்கிய அந்த மைதானத்தில் விக்கெட் வேட்டை நடத்தி, பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கினார்.

நரீன் மட்டுமல்ல, பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் என அங்கு பந்துவீசிய ஸ்பின்னர்கள் அனைவருமே சிறப்பாகப் பந்துவீசினர். கே.சி. கரியப்பா, பிராட் ஹாக், ஜோஹன் போதா என ஸ்பின்னர்களால் அணியை நிரப்பியது கொல்கத்தா. போதாக்குறைக்கு யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன் என ஆல்ரவுண்டர்களிலும் நல்ல ஸ்பின்னிங் ஆப்ஷன் கொண்டிருந்தது. ஒரு போட்டியில் 18 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்தே முடித்தார் கம்பீர். அந்த அளவுக்கு ஸ்பின்னுக்கு ஒத்துழைத்தது ஈடன் கார்டன். அதனால்தான், ஒவ்வொரு ஏலத்தின் போதும் கொல்கத்தா அணியின் குறி ஸ்பின்னர்கள் மீது அதிகம் இருந்தது. 

Narine

அந்த ஒரு போட்டியில் மட்டுமல்ல, எல்லா போட்டிகளிலும், வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சமமாக ஸ்பின்னர்களைப் பயன்படுத்தினார் கம்பீர். 2017 சீசனில், ஸ்பின்னர்களுக்கு அதிக ஓவர்கள் கொடுத்த அணி (127 ஓவர்கள்) நைட்ரைடர்ஸ்தான். அந்த அணி பௌலர்கள் பந்துவீசியதில், ஸ்பின்னர்களின் பங்கு மட்டுமே 42.10 சதவிகிதம். கொல்கத்தாவைவிட ராயல் சேலஞ்சர்ஸ் மட்டுமே ஸ்பின்னர்களை அதிக அளவு (47.63 சதவிகித ஓவர்கள்) பயன்படுத்தியது. ஏனெனில், அந்த அணியின் பல போட்டிகள் விரைவிலேயே முடிந்துவிட்டன. இல்லையேல், இந்த சதவிகிதம் குறைந்திருக்கும். 

2014-ல் இருந்து பார்த்தால் கொல்கத்தா அணி கடந்த சீசனில்தான் ஸ்பின்னர்களைக் குறைவாகப் பயன்படுத்தியிருக்கிறது. அவர்கள் சாம்பியன் ஆன 2014-ம் ஆண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே 154.3 ஓவர்கள் வீசியிருந்தனர். அது அந்த அணி வீசிய மொத்த ஓவர்களில் 48.82 சதவிகிதம். அதில் நரீன் மட்டுமே 64 ஓவர்கள் வீசியிருந்தார். அவர் விளையாடிய 16 போட்டிகளிலும் 4 ஓவர்களை முழுமையாக வீசியிருந்தார். கொல்கத்தா முதன்முதலில் சாம்பியன் பட்டம் வென்ற 2012-ம் ஆண்டிலும் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அந்த ஆண்டும் 133.1 ஓவர்களை (40.31 சதவிகிதம்) ஸ்பின்னர்கள் வீசினர். 

இடைப்பட்ட 2015, 2016 ஆண்டுகளிலும் அதிக அளவில் ஸ்பின்னர்களைப் பயன்படுத்தினார் கம்பீர். அந்த ஆண்டுகளில் முறையே 49.87, 48.86 சதவிகித ஓவர்களை வீசியது நரீன் அண்ட் கோ. இந்த எண்களெல்லாம் 'ஹோம்' மற்றும் 'அவே' மேட்ச்கள் இரண்டும் சேர்த்ததுதான். ஈடன் மைதானத்தை மட்டும் கணக்கில் கொண்டால் ஸ்பின்னர்களின் பங்களிப்பு மலைக்கவைக்கும். உதாரணமாக 2015 ஐ.பி.எல் - ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடிய 6 போட்டிகளில் (ஓரு போட்டி மழையால் கைவிடப்பட்டது) 119 ஓவர்களைக் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் வீசினர். அதில், 70 ஓவர்களை (58.82 சதவிகிதம்) ஸ்பின்னர்கள்தான் வீசியிருந்தனர். அதில் பெரும்பாலான போட்டிகளில் 1 வேகப்பந்துவீச்சாளர், 1 வேகப்பந்து ஆல்ரவுண்டரை மட்டுமே வைத்து களம்கண்டார் கம்பீர். அந்த அளவுக்கு கொல்கத்தா பிட்சுக்கு சுழல் மீது காதல். ஆனால்...

Kuldeep Yadav IPL

எல்லாம் கடந்த சீசன் வரைதான். எல்லாம் மாறிவிட்டது. எல்லாவற்றையும் மாற்றிவிட்டார் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் சௌரவ் கங்குலி. '2019 உலகக்கோப்பை நடக்கும் இங்கிலாந்தில் உள்ளதுபோல் ஆடுகளம் மாற்றப்படும்' என்றார் அவர். அதுபோலவே ஆடுகளம் மாற்றப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் அது கண்கூடாகத் தெரிந்தது. ஸ்விங் மற்றும் Seam-க்கு ஒத்துழைத்த அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்யத் திணறினர் இந்திய வீரர்கள். அவர்கள் மட்டுமல்ல, இலங்கை வீரர்களும்தான். அந்தப் போட்டியில் வீழ்த்தப்பட்ட 35 விக்கெட்டுகளில் 32 விக்கெட்டுகள் வேகப்பந்துவீச்சாளர்கள் எடுத்தது. அந்த அளவுக்கு ஈடன் ஆடுகளத்தின் தன்மை மாறியிருந்தது. 

அது அந்தப் போட்டிக்காக மட்டும் அமைக்கப்பட்ட ஆடுகளம் அல்ல. உள்ளூர் வீரர்கள் முதல் சரர்வதேச வீரர்கள்வரை அனைவருமே அதுபோன்ற ஆடுகளத்தில் ஆடவேண்டும் என்ற நோக்கத்தில் நிரந்தரமாகவே அதன் தன்மை மாற்றப்பட்டது. அந்தப் போட்டிக்கு 2 வாரம் முன்பு நடந்த ஹிமாச்சல் பிரதேசம் - மேற்கு வங்கம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சிப் போட்டியில் 34 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. அதில், ஸ்பின்னர்களுக்குக் கிடைத்தது இரண்டே இரண்டு! மற்ற 32 விக்கெட்டுகளும் வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியது. அடுத்தடுத்து நடந்த போட்டிகளிலும் ஸ்பின்னர்களால் ஜொலிக்க முடியவில்லை. மேற்கு வங்கம், கோவா அணிகள் மோதிய லீக் போட்டி, விதர்பா, கர்நாடகா அணிகள் மோதிய அரையிறுதி என இந்த இரண்டு போட்டிகளில் 67 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அதில் ஸ்பின்னர்கள் வீழ்த்தியது வெறும் 5 விக்கெட்டுகள்தான்!

KKR spinners IPL

ஆக, ஈடன் கார்டனின் தன்மை முற்றிலும் மாறிவிட்டது. எதன் அடிப்படையில் நைட்ரைடர்ஸ் அணியை கட்டமைத்ததோ, அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். இனி ஒரே போட்டியில், 18 ஓவர்கள் ஸ்பின்னர்களுக்குக் கொடுக்க முடியாது. 40 சதவிகிதம் ஓவர்களை சுழற்பந்துக்கு தர முடியாது. நரீன், ஹாக், போதா, குல்தீப், சாவ்லா, கரியப்பா என ஸ்பின்னர்களாக வாங்கிக் குவிப்பது அர்த்தமற்றதாகிவிடும். கொல்கத்தா அணி, இத்தனை ஆண்டுகளாகப் பின்பற்றிய ஃபார்முலாவை இம்முறை மாற்றியே தீரவேண்டும்!

https://www.vikatan.com/news/sports/113917-kkr-have-to-identify-new-strategy-due-to-change-of-edens-behaviour.html

  • தொடங்கியவர்

இந்த ஆண்டு இவர்களின் விலை ஆச்சர்யப்படுத்தலாம்... ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் - 7 #IPLAuction

 
 

 

578 வீரர்கள்... அதில் 360 பேர் இந்தியர்கள்... இவர்கள் பெயர் திரையில் காட்டப்படும்... எட்டு அணிகளில் யார் இவரை எடுக்க விரும்புகிறார்கள் என்ற பரபரப்பு கிரிக்கெட் உலகம் முழுதும் தொற்றிக்கொள்ளும். பலத்த ஆலோசனைகள் நடக்கும். நட்சத்திர வீரர்களின் பெயர்கள் வரும்போது 8 அணிகளின் கைகளும் உயரும். ஒருசில உள்ளூர் வீரர்களின் பெயர் சொல்லப்படும்போது, அமைதி மட்டுமே நிலவும். ஏலம் தொடங்கியதும் எழும் சலசலப்புகள் ஓய்ந்து, அந்தச் சின்ன மரச்சுத்தி மேஜையில் தட்டப்படும். சில ஆண்டுகள் முன்பு வெறும் காலில் பௌலிங் செய்துகொண்டிருந்த ஒரு 20 வயது வீரனின் சம்பளம் கோடிகளில் நிர்ணயிக்கப்படும். ஆச்சர்யம் நிகழும். #IPLAuction

 

IPL 

சில நேரங்களில் அதிர்ச்சிகளும். இப்படியான ஆச்சர்யங்களை பலமுறை கண்டுள்ளது ஐ.பி.எல். நட்ராஜன், தைமல் மில்ஸ் போன்ற வீரர்களெல்லாம் ஐ.பி.எல் தொடரால் சொர்க்கம் கண்டவர்கள். "என் வாழ்நாளில் இவ்வளவு தொகையை நான் பார்த்ததே கிடையாது. இனி பார்ப்பேனா என்றும் தெரியவில்லை" என்று ஆர்.சி.பி அணியால் வாங்கப்பட்டதும் தெரிவித்தார் இங்கிலாந்து வீரர் தைமல் மில்ஸ். இதுமட்டுமல்ல, கிறிஸ் மோரிஸ், பவன் நெகி, முருகன் அஷ்வின் போன்ற வீரர்களும் எதிர்பார்த்த தொகையைவிட மிகவும் அதிகமான தொகைக்கு விலைபோனது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இம்முறையும் சில வீரர்களின் ஏலம் நம்மை ஆச்சர்யப்படுத்தப்போகிறது. அவற்றுள் சில வெளிநாட்டு வீரர்களைப் பற்றிப் பார்ப்போம்...

காலின் டி க்ரேந்தோம்

நியூசிலாந்து அணியின் சமீபத்திய சென்சேஷன். அதிரடி பேட்ஸ்மேன், மீடியம் pace பௌலர். சர் ரிச்சார்ட் ஹேட்லி, கிறிஸ் கெய்ர்ன்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், ஜேக்கப் ஓரம் வரிசையில் அடுத்த சூப்பர் ஆல்ரவுண்டர். டி-20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 168.21. டி-20 மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் இவரது டீலிங் அப்படித்தான். அதில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 98.98! கடந்த டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 71 பந்துகளில் சதமடித்து அசத்தியவர், கடந்த வாரம் பாகிஸ்தானுடனான ஒருநாள் போட்டியில் 40 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறவைத்தார். இவை வெறும் சாம்பிள்தான். கடந்த சில மாதங்களாக இவரது ஃபார்ம் வேறு லெவல். எந்த ஃபார்மட்டாக இருந்தாலும் வெளுத்து வாங்கும் க்ரேந்தோம், கடந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரை அந்த அணி தக்கவைத்துள்ளதால், மற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு RTM கார்டு பயன்படுத்த முடியாது. அதனால் ஏலத்தில் இவருக்கு நல்ல கிராக்கி இருக்கும். slog overs எனப்படும் கடைசி ஓவர்களில் பௌலர்களை என்கவுன்டர் செய்வது க்ரேந்தோமுக்கு ஹாபி. நான்கு ஓவர் முழுதாகப் போடுவதற்கான ஆள் இல்லையென்றாலும், ஆறாவது பௌலருக்கான நல்ல ஆப்ஷன்.

Grandhomme - IPL

மார்கஸ் ஸ்டோய்னிஸ்

கடந்த 3 ஆண்டுகளாக ஐ.பி.எல் தொடரில் விளையாடிவரும் ஸ்டோய்னிஸ், இதுவரை 12 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். பெரிய அளவில் சோபிக்காததால், அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணியிலும் நிலைமை அப்படித்தான் இருந்தது. ஆனால், 2017-ல் டாப் கியர் பிடித்துவிட்டார் ஸ்டோய்னிஸ். அதிரடியாகவும், அதேசமயம் நிலைத்து நின்றும் ஆடக்கூடிய ஸ்டோய்னிஸ், ஆஸ்திரேலிய மிடில் ஆர்டரில் மிகமுக்கிய அங்கம் வகிக்கிறார். இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள இவரது சராசரி 66.42. கிரேந்தோம் போல சூறாவளியாகச் சுழன்றடிக்க மாட்டார். ஆனால், மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து, நல்ல அடித்தளம் அமைக்கக்கூடியவர். 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் எடுக்கக்கூடியவர். இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாற, நம்பிக்கையுடன் நிலைத்து நின்று ஆடினார். அந்தத் தொடரில் இவரது சராசரி 76.50. பிக்பேஷ் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சிறந்த பெர்ஃபாமன்ஸ் மட்டுமின்றி, இந்தியாவில் விளையாடிய அனுபவமும் இருப்பதால், நிச்சயம் நல்ல தொகைக்கு ஏலம் போவார். மேக்ஸ்வெல், அம்லா, மில்லர் போன்ற வீரர்கள் இருக்கும்போது, இவரைத் தக்கவைக்க கிங்ஸ் லெவன் RTM கார்டு பயன்படுத்துமா என்பது சந்தேகம்தான்.

Stoinis - IPL

ஈவின் லூயிஸ்

2016 ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவில் நடந்த இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியிலிருந்து தொடங்கியது லூயிஸின் ஆட்டம். அதன் பிறகு குட்டி கெய்லாக மாறிவிட்டார் இந்த டிரினிடாட் வீரர். அதே இடதுகை பேட்டிங்... அதே அதிரடி... சந்தேகமே வேண்டாம்... இவர்தான் அடுத்த கிறிஸ் கெய்ல். யாரென்றே தெரியாத வீரர்களை வைத்துக்கொண்டு, போகுமிடங்களில் மட்டுமல்லாமல், உள்ளூரிலும் அடிவாங்கிக்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, நீண்ட நாள் கழித்துக் கிடைத்திருக்கும் ஓர் அரிய பேட்ஸ்மேன் லூயிஸ். மற்றவர்களைப் போல் ஒரு போட்டியில் அடித்துவிட்டு, நாலு போட்டிகளில் சொதப்பும் வகையறா இல்லை. இவர் களத்தில் இறங்கினால் குறைந்தபட்சம் 25 ரன்களாவது எடுத்துவிடுவார். நாலு போட்டிக்கு ஒருமுறை சதமோ, அரைசதமோ அடிப்பது உறுதி. சர்வதேச டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 154.96! 'இந்திய ஆடுகளங்களில் இவரால் ஜொலிக்க முடியுமா...? நிச்சயம் முடியும். ஏனெனில், வங்கதேச பிரீமியர் லீக்கில், கெய்லுக்கு அடுத்தபடியாக இவர்தான் டாப் ஸ்கோரர். அத்தொடரில் 36 சராசரியோடு 396 ரன்கள் எடுத்தார் லூயிஸ். 'அது வங்கதேசம்'...'அட எல்லாம் ஒண்ணுதானே... இங்கயும் பௌன்ஸ், ஸ்விங் ஆகாது, அங்கயும் ஆகாது... இங்கயும் ஸ்பின் பிட்ச், அங்கயும் ஸ்பின் பிட்ச்... எல்லாம் ஒரேமாதிரி தானே!' வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனர்களோடு சமீப காலங்களில் மிரட்டிய மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இப்போது இவரை வளைத்துப் போடக் காத்திருக்கலாம்.

Ewin Lewis - IPL

ஈஷ் சோதி

லெக் ஸ்பின்னர் என்ற ஒரு தகுதியே, இவர் கோடிகளில் ஏலம் போவதற்குப் போதுமான ஒன்று. நம்பர் 1 டி-20 பௌலர் என்ற அங்கீகாரம், ஏலத்தின்போது எப்படியும் கோடிகளைக் கொட்டவைக்கும். ஆரம்ப காலத்தில், அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்த இந்த இந்திய வம்சாவளி வீரருக்கு, இந்தியாவில் நடந்த டி-20 உலகக்கோப்பை நிரந்தர இடம் பெற்றுக்கொடுக்க, இப்போது பட்டையைக் கிளப்பி வருகிறார். இதுவரை 19 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள சோதி, விக்கெட் வீழ்த்தத் தவறியது ஒரேயொரு போட்டியில் மட்டுமே. எப்படியும் விக்கெட் எடுத்துவிடுவார். விக்கெட் வீழ்த்துவது மட்டுமல்ல, ரன் குவிப்பைக் கட்டுப்படுத்துவதும் இவரது முன்னேற்றத்துக்கான முக்கியக் காரணம். சர்வதேச டி-20 அரங்கில், இவரது எகானமி 6.85 தான். இந்திய மண்ணில் சிறப்பாகப் பந்துவீசியிருப்பதால், நிச்சயம் இவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும். 2016 டி-20 உலகக்கோப்பையில், 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் சோதி. கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்தியாவுடனான டி-20 தொடரிலும் 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இவரது இந்த செயல்பாடுகளே போதும் கோடிகளில் ஏலம் போக! சுனில் நரைனைத் தக்கவைத்துள்ளதால், இன்னொரு வெளிநாட்டு ஸ்பின்னரை கொல்கத்தா அணி வாங்க நினைக்காது. மற்ற 7 அணிகளுமே இவருக்காகப் போட்டி போடக்கூடும்.

Ish Sodhi - IPL

‘இந்த வரிசையில் ரஷித் கான், காலின் முன்ரோ ஜேசன் ராய்லாம் எங்க' என்ற கேள்வி எழலாம். ரஷித் கான் - கடந்த ஐ.பி.எல் தொடரில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்த ஆப்கானிஸ்தான் வீரர், கடந்த ஆண்டின் ஐ.சி.சி ஒருநாள் அனியில் இடம்பிடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார். கடந்த ஐ.பி.எல் தொடரிலேயே பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவில்தான் விளையாடினார் ஜேசன் ராய். அவரது அதிரடி ஆட்டம் எதிர்பார்த்ததுதான். ரஷித் கான், ஜேசன் ராய், முன்ரோ போன்றவர்கள் தொடர்ச்சியாக அசத்தி வருவதோடு, அதற்கான அங்கீகாரத்தையும் உடனே பெற்றுவிட்டனர். அவர்கள் இந்த ஏலத்தில் அதிக தொகைக்குப் போவது ஆச்சர்யம் கிடையாது. அதேவேளை, செஞ்சுரியனில் இந்தியாவைச் சாய்த்த தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பௌலர் லுங்கி என்கிடி, ஆஸ்திரேலிய பௌலர் ஜேசன் பெரெண்டார்ஃப், நியூசிலாந்தின் நீல் வேக்னர் போன்றோரும் எதிர்பார்த்த தொகையைவிட அதிக தொகைக்கு ஏலம்போகக்கூடும்.

 

கங்குலி, கெய்ல் வரிசையில்... இந்த ஆண்டு? - அடுத்த பாகத்தில்

https://www.vikatan.com/news/sports/114232-the-players-who-will-be-surprise-gainers-in-ipl-auction.html

  • தொடங்கியவர்

கங்குலி, கெய்ல், லாராவுக்கு நிகழ்ந்தது இவர்களுக்கும் நிகழும்! ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் - 8 #IPLAuction

 
 

IPL

 

 

2011-ம் ஆண்டு ஐ.பி.எல் ஏலம்... ரீடெயின் செய்யப்பட்ட 12 வீரர்களைத் தவிர மற்ற அனைவரும் ஏலத்துக்கு வந்ததால், எக்கச்சக்க எதிர்பார்ப்பு. `Unsold' என்ற வார்த்தை பிரபலமடைந்தது இந்த ஏலத்தில்தான். டேனியல் கிறிஸ்டியன், சௌரப் திவாரி போன்ற வீரர்கள் எல்லோரும் கோடிகளில் ஏலம்போக, கங்குலி, கெய்ல், லாரா போன்ற பெயர்கள் `Unsold' லிஸ்ட்டில் இணைந்தன. `வயதாகிவிட்டது' என்பது அன்று சொல்லப்பட்ட காரணம் என்றாலும், அடுத்தடுத்த ஏலங்களில் ஹஷிம் அம்லா, ராஸ் டெய்லர், மார்டின் குப்தில் போன்ற நட்சத்திரங்கள்கூட ஏலம்போகாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு நடக்கும் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நட்சத்திரங்கள், ஐ.பி.எல் அனுபவம் அதிகம் உள்ள நட்சத்திரங்கள் பலரும் ஏலத்தில் வாங்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் எனப் பார்ப்போம்...#IPLAuction 

வயது மட்டுமல்லாமல், ஃபார்ம், டி-20 செயல்பாடு, துணைக்கண்டச் செயல்பாடு, அடிப்படை விலை, ஐ.பி.எல் சமயத்தில் வீரர்கள் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கச் செல்வார்களா எனப் பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொண்டுதான் ஐ.பி.எல் அணிகள் ஏலத்தின்போது வீரர்களை வாங்குகின்றன. அதனால்தான் இரண்டு ஆண்டுக்கு முன்னர் வரை ஹஷிம் அம்லாவை ஏலத்தில் எடுக்க, ஐ.பி.எல் அணிகள் தயங்கின. புஜாரா, இஷாந்த் ஷர்மா போன்றோர் சமீபகாலமாகப் புறக்கணிக்கின்றனர். பெரிதும் அறியப்படாத கே.சி.கரியப்பா, முருகன் அஷ்வின் போன்ற வீரர்களுக்கு அணிகள் போட்டிபோடுவதும் இதனால்தான். இந்த 2018-ம் ஆண்டு ஏலத்துக்குத் தேர்வாகியிருக்கும் 218 வீரர்களில், அதிகபட்சம் 70-80 வீரர்கள்தான் அணிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர்களாகவே இருப்பார்கள். ஆனால், மிகப்பெரிய நட்சத்திரங்கள் மேற்கூரிய காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் விடப்படவே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன!

சர்வதேச அரங்கில் ஓய்வுபெற்றிருந்தாலும், இரண்டு மாதங்களுக்குள் கோடிகளில் கிடைக்கும் சம்பளத்துக்காகவும், ஐ.பி.எல் தொடர் தரும் ஜாலி அனுபவங்களுக்காகவுமே பல வீரர்கள் இன்னும் இந்த டி-20 ஃபார்மட்டில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வுபெறும்போது மைக் ஹஸ்ஸிக்கு வயது 40. 46 வயதிலும் இந்த ஆண்டுக்கான ஏலத்துக்கு பெயர் கொடுத்திருந்தார் ஸ்பின்னர் பிரவீன் தாம்பே. மெக்குல்லம், சச்சின், ஹெய்டன் போன்ற வீரர்கள் ஓய்வுக்குப் பிறகும் ஜொலித்தனர்; ஜொலிக்கின்றனர். இளைஞர்களுக்கான ஃபார்மட்டாகக் கருதப்பட்டபோதிலும், 35+ வீரர்கள் பலர் இங்கு ஜொலித்துள்ளனர். அதேசமயம் முரளிதரன், பான்டிங் போன்ற உச்ச நட்சத்திரங்கள் திணறியுள்ளனர். ஆக, 35+ பிரிவு ரொம்பவுமே எச்சரிக்கையோடு டீல் செய்யப்படவேண்டிய ஒன்று. அவர்கள் அஃப்ரிடி போல். க்ளிக்கானால்  ஹிட்... இல்லையெனில் பெரிய ஃப்ளாப்!

Sammy - IPL

இந்தப் பிரிவில் இந்த ஆண்டு ஏலத்திலும் பல வீரர்கள் இருக்கின்றனர். ஹர்பஜன் சிங், பிரெண்டன் மெக்குல்லம், மிட்சல் ஜான்சன், ஷேன் வாட்சன், கிறிஸ் கெய்ல்... என நீண்ட வரிசை. அதில் சில வீரர்களுக்கு இன்னும் மவுசு குறையாமல்தான் இருக்கிறது. உதாரணமாக, பிரெண்டன் மெக்குல்லம் இன்னமும் சி.எஸ்.கே-வின் ஃபேவரைட்டாகத்தான் இருக்கிறார். ஆனால், பிரச்னை என்னவோ ஜான்சன், டேரன் சமி போன்றோருக்குத்தான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு டி-20 உலகக்கோப்பையை வென்று தந்த டேரன் சமி, ஐ.பி.எல் தொடரில் சோபிக்கவேயில்லை. கேப்டனாக, பேட்ஸ்மேனாக, பௌலராக என எதிலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இப்போது சர்வதேசப் போட்டிகளிலும் ஆடுவதில்லை. வயதும் 34 ஆகிவிட்டதால், இந்த ஏலம் அவருக்கு கடினமான ஒன்றாகவே அமையும்.

போன ஐ.பி.எல் தொடரில் சோபிக்காவிட்டாலும், முறையே பிக்பேஷ், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர்களில் கலக்கிய வாட்சன், கெய்ல் ஏலம்போகக்கூடும். இவர்கள் விஷயத்தில் அணிகள் எடுக்கும் முடிவு கன்னிவெடி மாதிரிதான். அவர்களுக்கே ஆபத்தாகவும் அமையலாம். லுங்கி என்கிடி, ககிஸோ ரபாடா என அசத்தலான இளம் பௌலர்கள் நிறையபேர் நிறைந்திருக்கும் இந்த ஏலத்தில், ஜான்சன் ஏலம்போவது கடினம்தான். இந்த பிக்பேஷ் தொடரில் அதிகம் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், மிகவும் சிக்கனமாகப் பந்து வீசியுள்ளார். அதனால் `பேக் அப்' ஆப்ஷனாக அவரை அணிகள் எடுக்க நினைக்கும். ஆனால், அங்குதான் மிகப்பெரிய சிக்கலான `Base price' எனப்படும் அடிப்படை விலை உள்ளது.

Johnson

ஒரு வீரரின் அடிப்படை விலை, ஏலத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய காரணி. அடிப்படை விலை குறைவாக இருந்தால், `வாங்கித்தான் பார்ப்போமே!' என கோதாவில் இறங்குவார்கள். அதுவே அதிகமாக இருக்கும்போது, தேவையற்ற முதலீடாகத் தோன்றும். கங்குலி, அம்லா, இஷாந்த் ஷர்மா போன்ற வீரர்கள் விலைபோகாததற்கு அதுவே காரணம். அந்தக் காரணம் ஜான்சனுக்கும் பாதகம். அவரது அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக இருப்பதால், இவரை வாங்குவதற்கு அணிகள் எப்படியும் யோசனை செய்யும். அதேபோல் காலின் இங்ரம். நான்கு ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீரருக்கு எதற்காக 2 கோடி ரூபாய் அடிப்படை விலையை பி.சி.சி.ஐ நிர்ணயித்துள்ளது எனத் தெரியவில்லை. அவர் விலைபோவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. 

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லிக்கும் இதே கதிதான். இந்த ஐ.பி.எல் தொடரின்போது, சர்வதேசப் போட்டியில் ஆடும் ஒரே பெரிய அணி இங்கிலாந்துதான். அயர்லாந்து அணியுடனான தொடரில் அவர்கள் பங்கேற்க உள்ளதால், பெரும்பாலான இங்கிலாந்து வீரர்களுக்கு அதிக கிராக்கி இருக்காது. ஜோ ரூட், மோர்கன், ஸ்டோக்ஸ் போன்றோர் ஏலம்போவதை மட்டுமே நிச்சயமாகக் கூற முடியும். விக்கெட் கீப்பர்கள் ஜானி பேர்ஸ்டோ, சேம் பில்லிங்ஸ் ஆகியோரும் ஐ.பி.எல் அணிக்காக தேர்வுசெய்யப்படுவது கடினம்தான். 1.5 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலை, பௌலர் மார்க் வுட்டின் முதல் ஐ.பி.எல் வாய்ப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

Faulkner - IPL

1.5 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வீரர்களில் சிலருக்கு, அது மிகவும் அதிகமான தொகை. பெரிய அளவில் சாதிக்காத மைக்கேல் க்ளிங்கர், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோருக்கு வாய்ப்புகள் குறைவுதான். கிங்ஸ் லெவன் அணிக்காக ஆடியும் பெரிதும் சோபிக்காத கைல் அப்பாட்டுக்கும் அதே அடிப்படை விலை. இந்தத் தொடரில் அவர் தொடர்வதற்கான வாய்ப்பு குறைவே. இவரைப்போல் கடந்த சில சீஸன்களாக சொதப்பிவரும் ஃபால்க்னர், இந்தமுறை அதிர்ச்சிகரமான முடிவைச் சந்திக்கக்கூடும். தேசிய அணியிலும் தன் இடத்தை இழந்துவிட்டார். நடந்துவரும் பிக்பேஷ் தொடரிலும் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தவில்லை. இதனால் இந்த ஆண்டு ஏலம், அவருக்கு பாதமாக அமையக்கூடும். 

அதேபோல் டெஸ்ட் வீரர்கள் என்ற முத்திரை பதிக்கப்பட்ட வீரர்களும் unsold லிஸ்ட்டில் சேர அதிக வாய்ப்புள்ளது. லட்சுமண், புஜாரா போன்ற இந்திய வீரர்களின் செயல்பாடு, ஏலத்தின்போது சர்வதேச வீரர்கள் விஷயத்திலும் பிரதிபலித்தது. நாதன் லயான், டீன் எல்கர் போன்ற வீரர்களின் பெயர்கள் எப்படியும் கடந்துபோய்விடும். இவர்களை வாங்க, அணிகள் எப்படியும் ஆர்வம் காட்டாது. சொல்லப்போனால், லயானுக்கு அந்த அனுபவம் புதிதாகவும் இருக்காது. ஏற்கெனவே அவரது பெயர் பலமுறை ஏலங்களின்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் டாப் டெஸ்ட் பௌலர், இன்னும் ஒருமுறைகூட ஐ.பி.எல் அணிகளால் தேர்வுசெய்யப்பட்டதில்லை. அது இந்தமுறையும் தொடரும்!

Nathan Lyon

 

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து பல வீரர்கள் ஏலத்துக்கு பெயர் கொடுத்திருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவர் மட்டுமே ஏலம்போக வாய்ப்பிருக்கிறது. பிக்பேஷ், தென்னாப்பிரிக்க டி-20 லீக் போன்றவற்றில் விளையாடும் உள்ளூர் வீரர்கள் பலரும் unsold லிஸ்ட்டில் இணைவது உறுதி. பெரும் இந்திய வீரர்கள் சிலரின் பெயர்களும் அந்த வரிசையில் இணையலாம்.

https://www.vikatan.com/news/sports/114388-players-like-johnson-darren-sammy-and-faulkner-may-go-unsold-in-ipl-auction.html

  • தொடங்கியவர்

பிராவோ, விஜய், வாஷிங்டன்...சி.எஸ்.கே யாரை வாங்கலாம்? ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் - 9 #IPLAuction

 

"அஷ்வின் சென்னைக்குத்தான்" என சென்னை ரசிகர்களை குஷிப்படுத்திச் சென்றிருக்கிறார் சி.எஸ்.கே கேப்டன் தோனி. தக்கவைக்கப்பட்ட வீரர்களை ஐ.பி.எல் அணிகள் அறிவித்ததும், '378' எனக் கொண்டாடத் தொடங்கினாலும், உள்ளூர் வீரர் அஷ்வினைத் தக்கவைக்கவில்லை என்ற ஏக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை வாட்டியது. சென்னையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிருபர்கள், ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்ப, 'அஷ்வின் சென்னைக்கு ஆடுவார்’ என உத்திரவாதம் அளித்தார் தோனி. 'அப்போ பிராவோ...? மெக்கல்லம்...?' சென்னை ரசிகர்களின் கேள்விகள் குறைந்ததாகத் தெரியவில்லை. நாளை ஏலம் நடக்கப் போகிறது. சென்னை அணி யாரை வாங்கும்..? யாரை வாங்கலாம்...? ஒரு ஃபேன்டஸி அலசல்! #IPLAuction

 

IPL

சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு ஏலத்தின் போதும் புது கேப்டன், புது பயிற்சியாளர், புது வெளிநாட்டு வீரர்கள், புது டீம் என்றெல்லாம் மற்ற ஐ.பி.எல் அணிகள் விளையாட, 8 சீசன்களுக்கும் ஒரே கேப்டன், ஒரே துணைக் கேப்டன், 7 ஆண்டுகளாக ஒரே பயிற்சியாளர் எனக் களமிறங்கியது சென்னை. பிளேயிங் லெவனில் விளையாடிய வீரர்களும்கூட பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாடினார்கள். 21 வீரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடியுள்ளனர். வேறு எந்த அணியிலும் இப்படியான சாதனை இல்லை. 

இந்த விஷயம்தான் சூப்பர் கிங்ஸ் மற்ற அணிகளைவிட ஒருபடி மேலே இருக்கக் காரணம். கால்பந்து கிளப்கள் போல், 'core' வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டியது. அதனால் ஒவ்வோர் ஆண்டும், ரசிகர்களுக்கு எதுவும் புதிதாகத் தெரியாமல், அணியின் ஸ்டார் பிளேயர்களைத் தாண்டி, அவர்களின் team structure-ம் பிடித்துப்போனது. அதைச் சென்னை அணி ஒவ்வோர் ஏலத்திலும் தொடர்ந்ததுதான் அவர்களின் ஸ்பெஷல். உதாரணமாக, 2011 ஏலம்... கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், அல்பீ மோர்கல் நால்வரையும் தக்கவைத்துக்கொண்ட சி.எஸ்.கே, முன்பு ஆடிய 7 வீரர்களை மீண்டும் அந்த ஏலத்தில் வாங்கியது. அந்த ஆண்டு 2 புதிய அணிகள்... ஒவ்வோர் அணியும் 'change over' மோடை ஆன் செய்திருந்தன. எல்லாமே புதிதாக இருக்க, சென்னை மட்டும் அதே சென்னை அணியாகக் களம் கண்டது. அதே சாம்பியனாகக் களம் கண்டது. மீண்டும் சாம்பியன் ஆனது!

Ashwin - IPL

இதுதான் சூப்பர் கிங்ஸ் அணியை மற்ற மாநிலத்தவர்க்கும் பிடித்துப்போகக் காரணம். அந்தக் காரணம்தான் இன்றுஅனைவரையும் கேள்வி எழுப்பச் செய்திருக்கிறது. அஷ்வினுக்கு இன்று லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டில் இடமில்லை என்ற நிலை ஆகிவிட்டது. ரெய்னா, ஜடேஜாவுக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான். டுவைன் ஸ்மித், மெக்கல்லம், நெஹ்ரா சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். நெஹ்ரா ஐ.பி.எல் தொடருக்கும் குட்பை சொல்லிவிட்டார். மைக் ஹஸ்ஸி பேட்டிங் கோச் ஆகிவிட்டார். டுவைன் பிராவோ, கைல் அப்பாட், சாமுவேல் பத்ரி, மோஹித் ஷர்மா, ராகுல் ஷர்மா என எவரும் இன்று சர்வதேசக் கிரிக்கெட்டில் ஆடுவதில்லை. 2015-ம் ஆண்டு சி.எஸ்.கே அணியில் இடம்பெற்ற வீரர்களில், சர்வதேச அளவில் லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் விளையாடுவது தோனி, மேட் ஹென்றி இருவர் மட்டுமே. முன்பைப் போல் சென்னை அணி வீரர்களைத் தக்கவைக்குமா? இல்லை, இரண்டாவது இன்னிங்ஸைப் புதிதாகத் தொடங்குமா...?

இம்முறை தோனி, ரெய்னா, ஜடேஜா என நல்ல அடித்தளம் அமைத்துவிட்டனர். இதைக்கொண்டு அனைத்து ஏரியாக்களிலும் நல்ல அணியை உருவாக்க வேண்டும். பௌலிங்குக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. பொலிங்கர, பிராவோ, அல்பீ மோர்கல் போன்ற அனுபவ வீரர்கள் இருந்ததால் சி.எஸ்.கே தொடர்ந்து இருமுறை சாம்பியன் ஆனது. அதன்பின் ஃபைனலுக்குள் நுழைந்தாலும், சாம்பியன் ஆகாததுக்கு, அப்படிப்பட்ட பௌலர்கள் இல்லாததே காரணம். பிராவோவால் தனி ஆளாக எவ்வளவு போராட முடியும்? ஸ்மித், ஹஸ்ஸி, டு ப்ளெஸ்ஸிஸ், பிராவோ என வெளிநாட்டு பௌலரே இல்லாமல் களமிறங்கிய சென்னை அணி இம்முறை அந்தப் பிளானை கைவிடுவது நல்லது.

அதற்கு யாரைப் பலியிடுவது... டுவைன் ஸ்மித்?! அப்படியெனில் மெக்கல்லம்முடன் ஓப்பனிங் விளையாட? முரளி விஜய். தென்னாப்பிரிக்க டெஸ்டில் விஜய் சொதப்பினார்தான். கடந்த ஐ.பி.எல் தொடர்களில் ஆடவில்லைதான். ஆனால்..இது சென்னை... இது சேப்பாக்கம்...விஜய்க்கு சரியான அடித்தளமாக அமையும். வெளிநாட்டுப் பந்துவீச்சாளரோடு களமிறங்குவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும் முடிவாக இது அமையும். மிடில் ஆர்டரில் விளையாட விஜய் ஷங்கரை வாங்குவது சிறப்பாக இருக்கும். இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகம் ஆயிருக்க வேண்டியவர். ஆல்ரவுண்டர் என்பது அணிக்குக் கூடுதல் பலம். நல்ல ஃபீல்டரும் கூட!

CSK - IPL

அஷ்வின் விஷயத்துக்கு வருவோம். ஐ.பி.எல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அனுபவசாலி. ஆனால்...வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர் இருக்கையில், யோசித்து முடிவெடுப்பது நல்லது. கடந்த சீசன், அஷ்வினின் இடத்தில் புனேவுக்காக விளையாடியவர், தன் திறமையை நிரூபித்தார். TNPL-ல் கலக்கியவர், இந்திய அணியிலும் இடம் பிடித்துவிட்டார். அதிரடி ஓப்பனர் என்பதால், டீமுக்கு அதிக ஆப்ஷன்கள் கிடைக்கும். நீண்ட நாள்களுக்கான ஆப்ஷனாகவும் இருக்கும். அஷ்வினுக்கு RTM கார்டு பயன்படுத்த முடியாது என்பதால், மற்ற அணிகள் முழுவீச்சோடு ஏலத்தில் ஈடுபடும். எனவே அவருக்கு அதிகத் தொகை போகவும் வாய்ப்பு உண்டு. வாஷிங்டனும் குறைந்த தொகைக்குப் போகப்போவது இல்லை. ஆனால், 20 வயது வீரருக்குப் பெரிய தொகை செலுத்துவது தவறில்லையே! அஷ்வினை வாங்குவோம் என தோனி சொன்னாலும், 'முடிந்தவரை அஷ்வினை வாங்க முயற்சிப்போம்’ என்றுதான் அந்தப் பேட்டியை முடித்தார். அந்த 'முடிந்தவரை’ என்ற வார்த்தையில்தான் ட்விஸ்ட்டே!

பிராவோ, டுப்ளெஸ்ஸிஸ், மெக்கல்லம் மூவரில் இருவரை எப்படியும் RTM கார்டு மூலம் தக்கவைத்துக்கொள்வார்கள். அதுதான் நல்லதும் கூட. தக்கவைக்கக்கூடிய uncapped வீரர்கள் பெரிய அளவில் இல்லை. எனவே இரண்டு RTM கார்டுகளையும் வெளிநாட்டு வீரர்களுக்கே பயன்படுத்திவிடலாம். எவ்வளவு தொகை கொடுத்தாவது ஒரு நல்ல இந்திய வேகப்பந்துவீச்சாளரை வாங்குவது அவசியம். உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது ஷமி போன்றவர்களில் ஒருவரை வாங்குவது அணியை மேலும் பலப்படுத்தும். இன்னொரு வேகப்பந்துவீச்சாளராக ஒரு தரமான uncapped பௌலரை வாங்கலாம்.

பசில் தம்பி, ரஞ்சிக் கோப்பையில் மிரட்டிய ராஜ்னீஷ் குர்பானி போன்ற வீரர்கள் சென்னை அணிக்கு ஒப்பந்தமானால் நன்றாக இருக்கும். இல்லையேல், கடந்த ஆண்டு புனே அணியில் ஆடிய தீபக் சஹாரையே அழைத்து வரலாம். சையது முஸ்தாக் அலி தொடரில், இப்போதைக்கு இவர்தான் டாப் 'விக்கெட் டேக்கர்'. சமீப காலங்களில், பிராவோ அவ்வப்போது காயமடைந்துவருகிறார். அதனால், அவருக்கு ஒரு நல்ல 'பேக்-அப்' ஆப்ஷன் வைத்துக்கொள்வது அவசியம்.

சென்னை அணியின் பிளேயிங் லெவன் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற விகடனின் கணிப்பு:

 

முரளி விஜய், ப்ரெண்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, மஹேந்திர சிங் தோனி, டுவைன் பிராவோ, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, தீபக் சஹார், ஜோஷ் ஹேஸில்வுட்.

https://www.vikatan.com/news/sports/114570-players-who-can-be-picked-by-csk-during-the-ipl-auction.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.