Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்க வைத்த முதலமைச்சர்

Featured Replies

தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்க வைத்த முதலமைச்சர்

 

Chamara Sampath Dassanayakeதனது உத்தரவைப் புறக்கணித்த தமிழ்மொழி மூல பெண்கள் பாடசாலை அதிபர் ஒருவரை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று, மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்ட ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக கல்வி அமைச்சின் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்பு (கபே) கோரிக்கை விடுத்துள்ளது.

“பதுளையில் உள்ள தமிழ் மொழி மூல பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபரை தமது அதிகாரபூர்வ இல்லத்துக்கு அழைத்த ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழங்காலில் நின்று வணங்கி மன்னிப்புக் கோர வைத்துள்ளார்.

தாம் அனுப்பிய மாணவி ஒருவருக்கு பாடசாலையில் இடமளிக்காதமைக்காகவே, பாடசாலை அதிபருக்கு ஊவா முதலமைச்சர் இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.

முதலமைச்சரின் பரிந்துரைக் கடிதத்துடன் பாடசாலைக்குச் சென்று மாணவியின் பெற்றோர், அனுமதி கோரிய போதிலும், கல்வி அமைச்சின் உத்தரவுகளுக்கு அமையவே தான் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும் என்று அதிபர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமுற்ற முதலமைச்சர், அதிபரை அழைத்து முழந்தாளிட வைத்து மன்னிப்புக் கோர வைத்துள்ளார் என்று கபே நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சியில் இதேபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.  இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்திலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/01/11/news/28399

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடமே போகாத பரதேசிகள் அரசியலுக்கு வந்தால் இதுதான் நிலை...

  • தொடங்கியவர்
‘மண்டியிட சொல்லவில்லை’
 

எம்.செல்வராஜா

“பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கேட்குமாறு நான் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் எவ்வித உண்மையும் இல்லை” என்று, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.   

ஊவா மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,   

“தேர்தல் காலம் என்பதால், எனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்தே, மாகாண அபிவிருத்தி குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றேன்.

அதேபோன்று, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து, வித்தியாலய அதிபர், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரையும் பிரச்சினைக்குரிய பெற்றோரையும் அழைத்து, கலந்துரையாடல்களை மேற்கொண்டேன்.   

“இந்தக் கலந்துரையாடல் சுமூகமான முறையிலேயே நடத்தப்பட்டது. எந்தவோர் உத்தரவும் வித்தியாலய அதிபருக்கு விடுக்கப்படவில்லை. வித்தியாலய நடைமுறைகளைப் பின்பற்றும்படியும் அதிபரிடம் கேட்டுக்கொண்டேன். அதிபரும் அதற்கு இணக்கம் காட்டினார். அதையடுத்து, அதிபர் புத்தாண்டு வாழ்த்துகளையும் கூறிவிட்டுச் சென்றார்.   

“இதனை ஜே.வி.பியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன உள்ளிட்ட சிலர், அரசியல் இலாபம் தேடிக்கொள்ளும் வகையில், முழங்காலிட்டு மன்னிப்புக் கோருமாறு முதலமைச்சர், அதிபரை கூறியதாக செய்திகளைப் பரப்பி விட்டுள்ளனர். இது விடயத்தில் உண்மை ஏதும் இல்லை.   

“ஆனால், பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றக் கோரி, ஊவா மாகாண சபையின் தமிழ் உறுப்பினர்கள் அனைவருமே எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். அதிபரை இடமாற்றுவதற்கு, நான் தீர்மானிக்கவில்லை. அதிபர் தரமுள்ளவர்களின் பற்றாக்குறையால், புதிய அதிபரொருவரை இவ்வித்தியாலயத்துக்கு நியமிப்பதில் இடையூறுகள் உள்ளன.   

“வித்தியாலய அதிபரை முழங்காலிட்டு, நான் மன்னிப்பு கோரியதாக எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக, ஊவா மாகாண சபையின் ஜே.வி.பி உறுப்பினர் சமந்த வித்யாரட்னவுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளேன்” என்றார்.   

இவ்விடயம் தொடர்பில், பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியுடன் தொடர்புகொண்டு வினவிய போது,   

“முதலமைச்சர், என்னிடம் மன்னிப்புக் கோருமாறு கோரவில்லை. முழங்காலிடுமாறு கூறவும் இல்லை. முதலமைச்சருடன் சுமூக பேச்சுவார்த்தையொன்றையே குறிப்பிட்ட தினத்தில் மேற்கொண்டோம். எமது வித்தியாலய அபிவிருத்திக்கு, முதலமைச்சர் ஆகக் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார். முதலமைச்சருக்கும் எனக்கும் எத்தகைய பிரச்சினையும் இல்லை. நல்லுறவுகளே தொடர்கின்றன” என்று கூறினார். 

http://www.tamilmirror.lk/மலையகம்/மண்டியிட-சொல்லவில்லை/76-210207

  • தொடங்கியவர்
அதிபர் மண்டியிட ஊவா அதிர்ந்தது
 

எம்.செல்வராஜா

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் முழங்காலிட்டு, ஊவா மாகாண முதலமைச்சரிடம் மன்னிப்புக் கோரியமை தொடர்பான விவகாரத்தால், ஊவா மாகாண சபையின் நேற்றைய அமர்வில் பெரும்  அமளி துமளி ஏற்பட்டது.  

ஊவா மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான கன்னியமர்வு, சபைத்தலைவர் ஏ.எம். புத்ததாச தலைமையில் சபை மண்டபத்தில், நேற்று (11) நடைபெற்றது.   

சபை அமர்வு ஆரம்பமான போது, சபையின் உறுப்பினர் எம்.சச்சிதானந்தன் மேற்படி விவகாரம் தொடர்பாக, முதலமைச்சரிடம் வினவினார். அதையடுத்து, ஊவா மாகாண சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் சமந்த வித்தியாரட்னவும் சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தனுடன், அதிபர் மன்னிப்புக் கோரிய விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பினர்.  

இதற்கு முதலமைச்சர் நடந்த சம்பவம் குறித்து தெளிவுப்படுத்தினார். முதலமைச்சரின் அக்கருத்தை ஏற்றுக்கொள்ளாமல், எதிர்க்கேள்விகள் கேட்கப்பட்ட போது, இரு தரப்பினருக்குமிடையே காரசாரமான விவாதங்களும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன. இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.   

சபையை அமைதிக்கு கொண்டு வர, சபைத்தலைவரால் எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.   
இதையடுத்து, சபையமர்வு, திகதி குறிப்பிடப்படாமையிலேயே ஒத்திவைக்கப்பட்டது.   

http://www.tamilmirror.lk/மலையகம்/அதிபர்-மண்டியிட-ஊவா-அதிர்ந்தது/76-210206

On 1/11/2018 at 12:00 PM, நவீனன் said:

முதலமைச்சரின் பரிந்துரைக் கடிதத்துடன் பாடசாலைக்குச் சென்று மாணவியின் பெற்றோர், அனுமதி கோரிய போதிலும், கல்வி அமைச்சின் உத்தரவுகளுக்கு அமையவே தான் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும் என்று அதிபர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஒரு சமூக விரோதி, திருடன் என்பது அவர் கொடுத்த பரிந்துரைக் கடிதத்தின் மூலம் உறுதியாகியுள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.