Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? : களத்தில் கலக்கும் ட்ராவிட், சுனில் ஜோஷியின் வாரிசுகள்!!!

Featured Replies

தந்தை வழியில் மகன்: ராகுல் திராவிட் வாரிசு சமித் அடித்த வெற்றிச் சதம்

 

 
Capture

ராகுல் திராவிட் மகன் சமித்.

சச்சின் மகன் அர்ஜுன் தற்போது ராகுல் திராவிட் மகன் சமித் ஆகியோர் தந்தையர் கிரிக்கெட் வழியில் அடியெடுத்து வைத்துள்ளனர். அதே போல் சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஜோஷியும் தன் தந்தை வழியில் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்துள்ளார்.

கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க பிடிஆர் கோப்பை யு-14 கிரிக்கெட் போட்டி ஒன்றில் திராவிட் மகன் சமித் 150 ரன்களை எடுத்து தன் அணியான மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு 412 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுத்தந்தார். விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தார்

ராகுல் திராவிட் தற்பொது நியூஸிலாந்தில் யு-19 உலகக்கோப்பை இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார். திராவிட் மகன் சமித் மட்டுமல்ல இதே போட்டியில் முன்னாள் இடது கை இந்திய வீச்சாளர் சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷியும் 154 ரன்கள் எடுத்தார், இவரும் சமித்தும் இணைந்து பெரிய கூட்டணி அமைக்க மல்லையா அதிதி பள்ளி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 500 ரன்கள் குவித்தது.

சமித், ஆர்யன் ஜோஷி சாத்துமுறைக்குப் பிறகு விவேகானந்தா ஸ்கூல் அணியை வெறும் 88 ரன்களுக்குச் சுருட்டினர்.

2015-ம் ஆண்டு யு-12 கோபாலன் கிரிக்கெட் தொடரில் சமித் சிறந்த பேட்ஸ்மெனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article22413003.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? : களத்தில் கலக்கும் ட்ராவிட், சுனில் ஜோஷியின் வாரிசுகள்!!!

 

 

இந்தியா - கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க பி.டி.ஆர் கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் ட்ராவிட்டின் மகன் சமித் விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக  150 ரன்களை எடுத்து தன் அணியான மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு 412 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

samit-dravid-1024x576.jpg

ராகுல் ட்ராவிட்  நியூஸிலாந்தில்  இந்திய அணிக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

ட்ராவிட் மகன் சமித் மட்டுமல்ல இதே போட்டியில் முன்னாள் இடது கை இந்திய வீச்சாளர் சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷியும் 154 ரன்கள் எடுத்துள்ளார்.

Av-GVD_CIAAVDKw.jpg

சமித்தும்,ஜோஷியும்  இணைந்து பெரிய கூட்டணி அமைக்க, மல்லையா அதிதி பள்ளி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 500 ஓட்டங்களை குவித்துள்ளது.

online_New_Slide__3_.jpg

சமித் மற்றும்  ஆர்யன் ஜோஷியின் துடுப்பாட்டத்திற்கு பிறகு விவேகானந்தா பள்ளி அணியை, மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளி  அணியினர் வெறும் 88 ஓட்டங்களுக்கு சுருட்டினர்.

2015 ஆம் ஆண்டு  கோபாலன் கிரிக்கெட் தொடரில் சமித் சிறந்த பேட்ஸ்மெனாகத் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/29264

  • தொடங்கியவர்

47 ரன்கள்...4 விக்கெட்! ஆஸ்திரேலியாவில் அசத்திய சச்சின் மகன் 

 
 

இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் (வயது 18). இவரும் கிரிக்கெட் வீரராக களத்தில் ஜொலித்து வருகிறார். தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் அர்ஜுன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 தொடரில் பங்கேற்று வருகிறார்.

ARJUN

 
 


சிட்னி கிரிக்கெட் மைதானம் சார்பில் கிளப் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய கிரிக்கெட்டர்ஸ் கிளப் அணி சார்பில் அர்ஜுன் பங்கேற்று விளையாடுகிறார். இந்திய கிரிக்கெட்டர்ஸ் கிளப் அணியும், ஹாங்காங் கிரிக்கெட் கிளப் அணியும் மோதிய போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில், பேட்டிங், பந்து வீச்சில் அர்ஜுன் டெண்டுல்கர் கலக்கி எடுத்தார். தொடக்க வீரராக களமிறங்கி 27 பந்துகளில் 48 ரன்கள் விளாசியதோடு, நான்கு விக்கெட்டுகளையும் அவர் அள்ளினார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேசக் கிரிக்கெட்டில் சாதனைகள் பல நிகழ்த்திய நிலையில், அவருடைய மகனும் சிறந்த வீரராக உருவெடுத்து வருவதையே இந்த ஆட்டம் காட்டுகிறது. 

இடக்கை வேகப்பந்து வீச்சு மற்றும் இடது கை பேட்ஸ்மேனான அர்ஜுன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை தனது ரோல் மாடல்களாகச் சொல்கிறார். 

https://www.vikatan.com/news/sports/113390-sachin-tendulkars-son-arjun-tendulkar-sparakles-in-australia.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.