Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராம மக்கள் புகையிரதத்தை மறித்து போராட்டம்!

Featured Replies

ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராம மக்கள் புகையிரதத்தை மறித்து போராட்டம்!

ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராம மக்கள் புகையிரதத்தை மறித்து போராட்டம்!

ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி புகையிரத திணைக்களத்தால் மூடப்பட்டுள்ளமையை கண்டித்து அப்பகுதி மக்கள் புகையிரதத்தை மறித்து இன்று (20) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஓமந்தை பெரிய விளாத்திக்குளம் கிராம மக்கள் கடந்த 150 வருடகாலமாக இந்த  பாதையை பயன்படுத்தி வந்த நிலையில் புகையிரத திணைக்களம் இந்த வீதியை மூடி புகையிரத நடைபாதையை அமைத்துள்ளது.

ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராம மக்கள் புகையிரதத்தை மறித்து போராட்டம்!

இதனால் இந்த வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பாதையை பயன்படுத்தும் அரசுமுறிப்பு மற்றும் விளாத்திக்குளம் கிராம மக்கள் இரண்டு கிலோமீற்றா் சுற்றி பயணம் செய்யவேண்டியுள்ளதாக தெரிவித்தனா்.

அத்துடன் அந்த வீதியும் புனரமைக்கப்படாமல் உள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனா்.

எனவே தாம் 150 வருட காலமாக பயன்படுத்திய பாதை தமக்கு வேண்டும் என்றும், புகையிரத நடைபாதையை இடிக்காமல் அதன் அருகே தமக்கான பாதயை அமைத்து தருமாறும் குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராம மக்கள் புகையிரதத்தை மறித்து போராட்டம்!

ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராம மக்கள் புகையிரதத்தை மறித்து போராட்டம்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/protest-in-vavuniya-omanthai

  • தொடங்கியவர்

ஓமந்தையில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம்!!!

வவுனியா - ஓமந்தை, பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் வீதி ரயில் திணைக்களத்தால் மூடப்பட்டுள்ளமையை கண்டித்து கிராம மக்கள் ரயிலை மறித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

online_New_Slide__3_.jpg

இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கடுகதி ரயில் இரண்டு மணிநேரம் ஓமந்தை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர் மகேஸ்வரன்,

சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை ஓமந்தை ரயில் நிலையம் அமைக்கும்போது தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்து இரவோடு இரவாக மூடப்பட்டுள்ளது.

கடந்த 7 வருடங்களாக இவ்வீதியை திறந்து விடுமாறு பிரதமர் உட்பட புகையிரத திணைக்கள அதிகாரிகள் பலருக்கும் கோரிக்கை விடுத்தோம். 

எனினும் எவரும் செவிசாய்க்கவில்லை, எமக்காக சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் சென்று வரவேண்டிய வீதியொன்றை போக்குவரத்துக்கு பயன்படுத்துமாறு தெரிவிக்கின்றனர். அவ் வீதிகூட செப்பனிடப்படாத வீதி. இதனால் மாணவார்கள், கர்ப்பிணி தாய்மார் உட்பட பலரும் அசௌகரியங்களை கடந்த 7 வருடங்களாக எதிர்கொண்டு வருகின்றோம்.

எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையிலேயே நாம் இப்போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்." என தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் 100 இற்கும் மேற்பட்டவர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

IMG_9836.JPG

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமரசத்தில் ஈடுபட முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்தது.

IMG_9965.JPG

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக தெரிவித்து குறித்த விடயம் தொடர்பில் உரியவர்களுடன் கலந்துரையாடும் வகையில் திங்கட்கிழமை அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

IMG_9829.JPG

அதனை ஏற்றுக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளதுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படாவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/29685

On 1/20/2018 at 4:02 PM, நவீனன் said:

இதன்போது கருத்து தெரிவித்த போராட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளர் மகேஸ்வரன்,

சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த ஓமந்தை பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை ஓமந்தை ரயில் நிலையம் அமைக்கும்போது தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்து இரவோடு இரவாக மூடப்பட்டுள்ளது.

கடந்த 7 வருடங்களாக இவ்வீதியை திறந்து விடுமாறு பிரதமர் உட்பட புகையிரத திணைக்கள அதிகாரிகள் பலருக்கும் கோரிக்கை விடுத்தோம். 

எனினும் எவரும் செவிசாய்க்கவில்லை, எமக்காக சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் சென்று வரவேண்டிய வீதியொன்றை போக்குவரத்துக்கு பயன்படுத்துமாறு தெரிவிக்கின்றனர். அவ் வீதிகூட செப்பனிடப்படாத வீதி. இதனால் மாணவார்கள், கர்ப்பிணி தாய்மார் உட்பட பலரும் அசௌகரியங்களை கடந்த 7 வருடங்களாக எதிர்கொண்டு வருகின்றோம்.

எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையிலேயே நாம் இப்போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்." என தெரிவித்தார்.

வீரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை எதிர்த்து போராடுவார்கள்!
வீரர்கள் நீதிக்காக போராடுபவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்!

கோழைகள் யாராவது தங்களுக்காக போராட மாட்டார்களா என்று ஒப்பாரிவைப்பார்கள்!

தமிழினப் படுகொலைகாரர்களின் கைக்கூலிகள் அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் ஒன்று சேர்ந்து போராடுபவர்களையும், ஆதரவாக இருப்பவர்களையும் பார்த்து ஊளையிடுவார்கள்.

இவை காலம் காலமாக உலகில் நடப்பவைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.