Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வரலாறு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்

Featured Replies

தமிழர் வரலாறு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்

 

போலி வர­லாற்றில் மிதக்கும் தமிழர் அர­சியல் என்ற தலைப்பில் எச்.எல்.டி.மஹிந்­த­பால என்­ப­வரால் எழு­தப்­பட்ட கட்­டு­ரையின் தமி­ழாக்கம் வீர­கே­ச­ரியில் வெளி­வந்­துள்­ளது. அக்­கட்­டுரை நமது சிந்­த­னையைத் தூண்­டு­வ­தா­யுள்­ளது. அத்­துடன் கல்­வித்­து­றையில், வர­லாற்று ஆய்­வுத்­து­றையில் இது­வரை நாம் விட்ட அல்­லது கண்­டு­கொள்­ளாத பல­வற்றைச் சுட்­டிக்­காட்­டு­வ­தா­யு­முள்­ளது. முத­லிலே பல்­க­லைக்­க­ழ­கங்கள் கற்­பிப்­ப­துடன் ஆய்­வுகள் செய்து உண்­மையை வெளிக்­கொண்­டு­வந்து அடுத்த தலை­மு­றைக்கு ஆறி­வூட்­ட­வேண்டும் என்ற கருத்­து­டைய கூற்­றைக்­க­வ­னிப்போம். ஆனால் பெரும்­பா­லான பல்­க­லைக்­க­ழக சமூ­கத்­தினர் அர­சியல் கருத்­து­க­ளைக்­கூ­று­வ­துடன் வர­லாற்று உண்­மை­களை ஆராய்­வ­தில்லை. அது­மட்­டு­மல்ல பக்­கச்­சார்­பான கருத்­து­களை வெளிப்­ப­டுத்தி நாட்டில் பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கின்­றனர். இந்­நாட்டின் சீர­ழி­வுக்கு அதுவே கார­ண­மு­மா­கின்­றது.

தமி­ழர்­க­ளுக்­கெ­தி­ரான கருத்தை, எதிர் ப்பை முன்­னி­லைப்­ப­டுத்­து­வது சிங்­கள வர­லா­றாகக் கொள்­ளப்­ப­டு­வது போன்று சிங்­க­ள­வ­ருக்­கெ­தி­ரான கூற்­றுகள் தமிழர் வர­லா­றா­கவும் கொள்­ளப்­ப­டு­கின்­றது. இது ஆரோக்­கி­ய­மான ஒன்­றல்ல. திரு­வாளர் மஹிந்­த­பால அவர்கள் தனது கட்­டு­ரையில் குறிப்­பிட்­டுள்ள பின்­வரும் பந்தி கவ­னத்­திற்­கு­ரி­ய­தா­கின்­றது. அப்­பந்­தியில் யாழ்ப்­பா­ணத்தின் வர­லாற்றை விரி­வா­னதும், அதி­கா­ர­பூர்­வ­மா­ன­து­மான எவரும் ஒரு­போதும் முன்­வைத்­த­தில்லை. ஆனால் அதே­வேளை அவர்களால் கண்­டு­பி­டிக்­கக்­ கூ­டிய அழுக்­கு­க­ளுக்­கான சிங்­கள பௌத்­தர்­களின் வர­லாற்றைத் துரு­வு­வதில் மன­ச்சாட்­சியின் உறுத்­த­லுக்கு உள்­ளா­வ­தில்லை. புராண, வரலாற்று காலக்­கு­றிப்­பு­களில் இலங்­கையில் இந்து சம­யத்தின் இருப்பு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றுள்ள நிலையில்,1505 இல் போர்த்­துக்­கேயர் இலங்­கைக்குள் புகுந்­த­போது இத்­தீவில் மூன்று பிர­தான இராச்­சி­யங்கள், தனி அர­சுகள் இருந்­தன என்­பது வர­லாற்­றுக்­கூற்று. வடக்கே யாழ்ப்­பாண அரசு என்ற தமி­ழ­ரசு, மத்­திய மலை­நாட்டில் கண்டி அரசு, மேற்­குப்­ப­கு­தியில் கோட்டை அரசு என்­பன அவை. நாம் பண்­டைய வர­லாற்றை நோக்­கும்முன் போர்த்­துக்­கேயர் மற்றும் ஆங்­கி­லேயர் ஆட்­சிக்கு இடைப்­பட்ட நிலை­மை­களை அறிந்­து­கொள்வோம்.

சிங்­கள அரசு என்று கொள்­ளப்­படும் கோட்டை அரசு அதன் அர­ச­னான தர்­ம­பா­லனால்1580 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி போர்த்­துக்­கேய அர­சுக்கு எழுத்­து­மூலம் கைய­ளிக்­கப்­பட்­டது. அடி­மை­யாக்­கப்­பட்­டது. போர்த்­துக்­கே­ய­ருக்கு அடுத்து ஒல்­லாந்தர் இலங்­கைக்குள் புகுந்­தனர். அதன்பின் 1782 இல் ஆங்­கி­லேயர் புகுந்­தனர். அதற்­கி­டைப்­பட்ட காலத்தில் 1630 அளவில் போர்த்­துக்­கேயர் பலத்த போராட்­டத்தின் பின்னர் யாழ்ப்­பாணத் தமி­ழ­ரசை கைப்­பற்­றினர்.

1792 இல் நாட்­டுக்குள் புகுந்த ஆங்­கி­லேயர் 1815 இல் கண்­டிய சிங்­களப் பிர­தா­னி­களின் உத­வி­யுடன் கண்டி அரசைக் கைப்­பற்­றினர். அதா­வது கண்டி அர­சு­காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டது. இலங்­கையின் மூன்று பிர­தான அர­சு­களும் அந்­நியர் வச­மா­கின. இவற்றில் சிங்­கள அரசு எனப்­பட்ட இரண்டும் அந்­நி­ய­ருக்­குக்­காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்டும், கைய­ளிக்­கப்­பட்டும் தமது சுதந்­தி­ரத்தை தாமே அந்­நி­ய­ருக்கு அடகு வைத்­தன. இது வர­லாற்­றுப்­ப­திவு. ஆனால், யாழ்ப்­பாணத் தமி­ழ­ரசு அந்­நி­ய­ருக்குப் பணி­யாது இறு­தி­வரை போரிட்­டது என்­பது வர­லாறு. அதேபோல் வன்­னி­யி­லி­ருந்த தமிழ்ச்­சிற்­ற­ரசும் அந்­நி­ய­ருக்கு அடங்­காது இறு­தி­வரை போரிட்டு ஆங்­கி­லே­யரின் ஆட்­சிக்­குட்­பட்­டது.

அண்­மைய ஐந்து நூற்­றாண்­டு­க­ளுக்குள் இடம்­பெற்ற இலங்­கைத்­தீவின் வர­லாற்­றைக்­கூட உரி­ய­படி சரி­யான முறையில் வெளிப்­ப­டுத்த எவரும் முன்­வ­ர­வில்லை. பாட­சாலை மாணவ, மாண­வி­ய­ருக்­கான கல்விப் பொதுத்­த­ரா­த­ரப்­பத்­திர சாதா­ரண தர வகுப்­பு­வரை வர­லாறு ஒரு கட்­டா­ய­பா­ட­மா­கவும் அதேபோல் குறித்த தரப்­பொ­துப்­ப­ரீட்­சைக்கும் உரிய கட்­டா­ய ­பா­டங்கள் ஆறில் ஒன்­றா­கவும் உள்­ளது. ஆனால், அண்­மைய அதா­வது ஐந்து நூற்­றாண்­டு­க­ளுக்­குட்­பட்ட வர­லாறு கூட முழு­மை­யா­கக் ­கற்­பிக்­கப்­ப­டு­வ­தில்லை. பாடத்­திட்­டங்­களும் பாட­நூல்­களும் கல்வி அமைச்சால் தயா­ரிக்­கப்­பட்­டாலும் அது குறை­பா­டு­டை­ய­தா­க­வே­யுள்­ளது. யாழ்ப்­பாண மற்றும் வன்­னித்­தமிழ் அர­சுகள் பற்றி விபரம் அற்ற வர­லாற்­றுப்­பா­டமே இன்று பாட­சா­லையில் கற்­பிக்­கப்­படும் வர­லா­றா­க­வுள்­ளது.

இது தொடர்­பாக அதா­வது பாடப்­புத்­த­கங்­களில் தமிழர் வர­லாறு மறைக்­கப்­ப­டு­வ­தாக புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தாகப் பல­முறை பத்­தி­ரி­கை­யூ­டாகச் சுட்­டி­காட்­டினேன். வீர­கே­ச­ரியும் அவற்றைப் பிர­சு­ரித்­தி­ருந்­தது. இக்­கு­றை­பாடு தொடர்­பாக யாழ்.மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பி­யதன் பல­னாகக் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சின் உயர் அதி­கா­ரிகள், தேசிய கல்வி நிறு­வன வர­லாற்­றுப்­பாட அதி­கா­ரிகள், கல்வி வெளி­யீட்டுத் திணைக்­கள அதி­கா­ரிகள், பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரியர் உட்­பட நாமும் கலந்­து­கொண்டோம்.

அக்­கூட்ட கலந்­து­ரை­யா­டல்­களில் தமிழர் தரப்பு இது­வரை வர­லாற்­றுப்­பா­டத்­தி­லுள்ள குறை­களைச் சுட்­டிக்­காட்ட முன்­வ­ர­வில்­லை­யென்று குறை­கூ­றப்­பட்­டது. தமிழர் வர­லாறு இடம்­பெ­றா­மைக்கு தமிழர் தரப்பே காரணம் என்று கூறப்­பட்­டது. தமிழ் வர­லாற்­றுத்­து­றை­சார்ந்தோர் அக்­கறை காட்­டு­வ­தில்­லை­யென்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. அதில் உண்­மை­யில்­லா­ம­லு­மில்லை. வர­லாற்­றுப்­பா­டத்தில் தமிழர் வர­லாறு இடம்­பெ­ற­வேண்டும் என்று அழுத்­திக்­கூறி அதனை இடம்­பெ­றச்­செய்ய வேண்டும் என்ற ஆர்­வமோ, துணிவோ அற்­ற­வர்­க­ளா நமது தமிழ் வர­லாற்­றுத்­து­றை­யினர் என்று வேத­னைப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

தமிழர் தரப்பு தமிழர் வர­லாற்றை எடுத்­துக்­கூ­றத்­த­யங்­கி­னாலும், திறந்த மன­துடன், நேர்­மை­யாகத் தமிழர் வர­லாற்றை வர­லாற்­றுப்­பா­ட­நூலில் இடம்­பெற சிங்­கள வர­லாற்­றா­சி­ரி­யர்­க­ளுக்கும் உரிமை உண்டு. அது கல்வி நாக­ரிகம். தமிழர் வர­லாற்றில் இரு­த­ரப்­பி­னரும் தவ­று­விட்­டுள்­ளனர்.

இலங்கை வர­லாற்றில் ஐரோப்­பியர் ஆட்­சிக்­கால நிகழ்­வு­களை உரி­ய­படி வெளிப்­ப­டுத்த பாடநூல் தயா­ரிக்கும் சிங்­கள வர­லாற்று ஆசி­ரி­யர்கள் தயங்­கு­வ­தற்கு பின்­வாங்­கு­வ­தற்கு மூன்று கார­ணங்­களை முன்­வைக்க முடி­கின்­றது. இதை கல்­வி­ய­மைச்சில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போதும் எடுத்­து­ரைத்தேன்.

முத­லா­வது பண்­டைய இலங்­கையின் எல்லை அநு­ரா­த­பு­ரத்­திற்கு அப்பால் இருக்­க­வில்லை என்ற வர­லாற்று நம்­பிக்­கை­யா­ன­தா­யி­ருக்­கலாம். நாட்டுக்கு உரித்­தற்ற வெளி­நாட்டின் வர­லாற்றை நமது நாட்டின் வர­லாற்றில் எவ்­வாறு இணைப்­பது என்ற சரி­யான நோக்­காக இருக்­க­மு­டியும்.

இரண்­டா­வ­தாக இன­வாத சிந்­தனை; அதா­வது தமி­ழர்­களும் இந்­நாட்டை ஆட்சி செய்­துள்­ளார்கள். பண்­டைய இருப்­பைக்­கொண்­ட­வர்கள், ஒரு நிலப்­ப­ரப்பில் இருப்­பைக்­கொண்­ட­வர்கள். பழை­மை­யான வர­லாற்றை, பண்­பாட்­டைக்­கொண்­ட­வர்கள் என்ற உண்­மையை வெளி­யி­டக்­காட்டும் தயக்கம் உண்­மையை வெளிப்­ப­டுத்­த­வுள்ள வெறுப்பு.

மூன்­றா­வது தாழ்­வுச்­சிக்கல். சிங்­கள அரசு எனப்­படும் கோட்டை அரசு அதன் அர­சனால் சுய­வி­ருப்பின் பேரில் போர்த்­துக்­கே­ய­ரிடம் கைய­ளிக்­கப்­பட்டு தானே அந்­நி­ய­ருக்­குத்­தன்னை அடி­மைப்­ப­டுத்­திக்­கொண்­டது. கண்டி இராச்­சியம் அங்­கி­ருந்த சிங்­க­ளப்­பி­ர­தா­னி­களால் ஆங்­கி­லே­ய­ருக்குக் காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டது. ஒப்­பந்தம் மூலம் சர­ண­டைந்­தது. இருந்த ஆட்­சியைப் பறித்து ஆங்­கி­லே­யரின் கால­டியில் வைத்த வர­லாறு கொண்­டது.

ஆனால், யாழ்ப்­பாணத் தமிழ் அரசு அந்­நி­ய­ரான போர்த்­துக்­கே­யரை எதிர்த்து இறு­தி­வரை போர் செய்­தது. இறு­தியில் தோல்­வி­ய­டைந்­தாலும் பணி­ய­வில்லை. சர­ண­டை­ய­வில்லை. அதேபோல் வன்­னியின் தமிழ்ச்­சிற்­ற­ரசும் ஆங்­கி­லே­ய­ருக்கு அடி­மைப்­ப­டாமல் இறு­தி­வரை வீரப்போர் செய்­தது என்­பது வர­லாறு. இவ்­வாறு தமி­ழர்கள் அந்­நி­ய­ருக்கு எதி­ராக இறு­தி­வ­ரை­போ­ரிட்ட வர­லாறு கற்­பிக்­கப்­ப­டு­மானால் அது இரு இனங்­களின் நாட்­டுப்­பற்றின் ஏற்­றத்­தாழ்­வு­களை வர­லாற்றில் பதித்­து­விடும் என்ற தாழ்­வுச்­சிக்­க­லால்தான் தமிழர் வர­லாறு தவிர்க்­கப்­ப­டு­கின்­றதா என்று கேள்­வி­யெ­ழுப்­பினேன்.

விடப்­பட்ட தவ­றுகள் திருத்­தப்­படும். தமிழர் வர­லாறு வர­லாற்றுப் பேரா­சி­ரி­யர்கள், கல்­வி­மான்­களின் உத­வி­யுடன் இடம்­பெ­றச்­செய்­யப்­படும் என்று உறு­தி­ய­ளிக்­கப்­பட்டு மாதங்கள் பல கடந்­து­விட்­டன. எதுவும் நடக்­க­வில்லை. இக்­கூட்­டங்­க­ளுக்கு கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வே. இரா­தா­கி­ருஷ்ணன் தலைமை தாங்­கி­னா­ரென்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் பங்­கு­பற்­றிய யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக வர­லாற்­றுத்­துறை பேரா­சி­ரி­யர்கள், விரி­வு­ரை­யா­ளர்கள் ஆர்வம் செலுத்­த­வேண்டும். கவனம் செலுத்­த­வேண்டும்.

போர்த்­துக்­கே­யரின் வரு­கைக்கு முற்­பட்ட அதா­வது 1505 க்கு முற்­பட்­ட­கால இலங்­கைத்­தீவின் வர­லாற்றில் தமிழர் இருப்பு தொடர்­பான வர­லாற்­றுப்­ப­தி­வுகள் இடம்­பெ­ற­வில்லை. அதுவும் வர­லாற்­றுப்­பா­டக்­கு­றை­பா­டாகும். கி.மு. 543 ஆம் ஆண்டில் இலங்­கைத்­தீவில் விஜயன் ஒதுங்­கினான். அவ­னுடன் எழு­நூறு தோழர்­களும் வந்­தனர். அவர்­களில் ஒரு­வ­னா­க­வி­ருந்த உப­திஸ்ஸன் என்ற பிரா­மணன் இலங்­கையின் நாலா­பக்­கங்­க­ளி­லு­மி­ருந்த ஐந்து சிவா­ல­யங்­களைச் சென்று வழி­பட்­ட­தாக மகா­வம்சம் போன்ற நூல்­களில் கூறப்­பட்­டுள்­ளன. அதை சேர்.போல்.ஈ.பீரிஸ் என்ற வர­லாற்­றா­சி­ரி­யரும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

குறித்த ஐந்து சிவா­ல­யங்­களும் விஜயன் வரு­கைக்கும் முற்­பட்­டது. அதா­வது 2561 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது. விஜயன் வரு­கைக்கு 236 ஆண்­டு­க­ளுக்குப் பின்பே அதா­வது 2325 ஆண்­டு­க­ளுக்கு முன்பே தேவ­நம்­பி­ய­தீசன் காலத்தில் மஹிந்­த­தே­ர­ரினால் பௌத்­த­ச­மயம் முதன்­முதல் இலங்­கையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. பௌத்த சமயம் இலங்­கையில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் முன்பே இலங்­கையில் இந்து சமயம் சிறப்­புற்­றி­ருந்­தது என்­ப­தற்கு உப­திஸ்­ஸனின் யாத்­தி­ரையே சான்று பகர்­கின்­றது.

குறித்த உப­திஸ்ஸன் என்ற பிரா­மணன் வடக்கே யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருக்கும் நகு­லேஸ்­வரம், கிழக்கே திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள கோணேஸ்­வரம், மேற்கே மன்­னா­ரி­லுள்ள கேதீஸ்­வரம் மற்றும் சிலா­பத்­தி­லுள்ள முன்­னேஸ்­வரம் என்­ப­வற்­றுடன் இன்று விஷ்ணு கோயி­லாக மாற்­ற­ம­டைந்­துள்ள தெவி­நு­வ­ரவில் உள்ள தொண்­டீஸ்­வ­ரத்­தையும் சென்று வழி­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இது இலங்­கைத்­தீவில் இந்­துத்­த­மி­ழர்­களின் பண்­டைய அதா­வது விஜயன் இலங்­கைத்­தீவில் அடி­யெ­டுத்­து­வைத்த போதி­ருந்த நிலை­மையை தெளி­வாக வெளிப்­ப­டுத்­து­கின்­ற­தல்­லவா?

குறித்த ஐந்து சிவா­ல­யங்­க­ளையும் தமி­ழர்­களின் வர­லாற்றை உறு­திப்­ப­டுத்தும் சான்­று­க­ளாகக் கொள்­வதில் ஏன் தயங்க வேண்டும்? ஏழாம் நூற்­றாண்டில் திருக்­கோ­ணேஷ்­வரம் மீதும் திருக்­கே­தீஸ்­வ­ரம்­மீதும் பாடப்­பட்ட தேவா­ரத்­தி­ருப்­ப­தி­கங்கள் பதி­நான்கு நூற்­றாண்­டு­க­ளுக்கு முன் இலங்­கையின் இந்­துத்­த­மி­ழர்­களின் வர­லாற்று இருப்பை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

அனு­ரா­த­பு­ரத்தைத் தலை­ந­க­ராகக் கொண்டு கி.மு. 205 கி.மு.161 வரை ஆட்சி செய்த எல்­லாளன் தமிழன் என்று ஏற்­று­கொள்­ளும்­போது அவனின் வர­லாற்றை தமிழர் வர­லாற்­றி­லி­ருந்து ஒதுக்­க­மு­டி­யுமா? எல்­லா­ள­னுக்கு முற்­பட்ட பந்­து­கா­பயன், மூத்­த­சிவன், தேவ­நம்­பி­ய­தீசன், உத்­திகன், மகா­சிவன் போன்­ற­வர்கள் தமி­ழர்கள் இல்­லையா? அண்­மையில் பேரா­சி­ரியர் புஞ்­சி­பண்டா ஏக்­க­நா­யக்க என்­பவர் சிங்­கள மொழி உரு­வாகி ஆயி­ரத்து முந்­நூறு ஆண்­டு­களே ஆகின்­றன என்று கூறி­யி­ருந்தார். அவ்­வா­றாயின் சிங்­க­ள­மொழி உரு­வா­வ­தற்கு முற்­பட்ட காலத்தின் இலங்­கை­யரின் மொழி எது என்ற கேள்வி யெழு­கின்­றது. இதை விதண்­டா­வாதம் என்று எவரும் கூற­மு­டி­யாது. உண்­மையை ஆராய வேண்டும்.

ஏழு நூற்­றாண்­டு­க­ளுக்கு முன் தம்­ப­தெ­னிய இராச்­சி­யத்தை கி.பி.1236 முதல் கி.பி.1273 வரை ஆட்சி செய்த நான்காம் பராக்­கி­ர­ம­பா­குவின் அர­ச­ச­பையில் தேநு­வ­ரப்­பெ­ருமாள் என்ற தமிழ்ப்­பண்­டி­தரால் “சர­சோ­தி­மாலை” என்ற வெண்பா வடி­வி­லான தமிழ்நூல் அரசன் முன்­னி­லையில் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் இன்­றைய குரு­நாகல் மாவட்­டத்தில் தமிழ்­மொ­ழியும், தமி­ழர்­களும் பெற்­றி­ருந்த சிறப்பு வெளிப்­ப­டு­வ­துடன் அர­சனும், அர­ச­ச­பை­யி­லி­ருந்­தோரும் தமிழ்ப்­பு­லமை பெற்­ற­வர்­க­ளாக இருந்­துள்­ளனர் என்­பது வெளிப்­ப­டு­கின்­றது.

கொழும்பு மாவட்டத்தின் தென்பகுதி யில் இரத்மலானை என்ற இடத்தில் திருநந்தீஸ்வரம் என்ற சிவாலயம் உள்ளது. அதன் வரலாறு மேற்கிலங்கையில் தமிழரின் இந்துக்களின் பண்டைய இருப்பை, சிறப்பை பெருமையை, வளத்தைக் கட்டியம்கூறி நிற்கின்றது. கி.பி.1518 இல் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்ட இவ்வாலயம் பற்றி தனது சிங்கள மொழியிலான காவியமான “சலலிஹினி சந்தேசய” என்ற நூலில் தொட்டகமுவே ராகுல தேரர் என்ற பிக்கு இவ்வாலயத்தில் ஈஸ்வரனுக்குச் செய்யப்படும் பூசைகள் பற்றிக்குறிப்பிட்டுள்ளதுடன் மக்கள் விரும்பும் இனிய தமிழ் மொழியில் தோத்திரம் பாடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறித்த காவியநூல் கி.பி.1454 இல் ஆக்கப்பட்டது.

தோண்டத்தோண்டப் புதையல் கிடைப்பதுபோல் இலங்கையின் தமிழர் வரலாற்றை ஆழமாக ஆராயும் போது பல விடயங்கள் வெளிவரும். தமிழர்களின் பண்டைய வரலாறும் உறுதிப்படுத்தப்படும்.

ஆனால், அதற்கான முயற்சியில் வரலாற்றை கற்று பல்கலைக்கழகங்களில் துறைசார் அறிஞர்களாகவுள்ளோர் துணிந்து ஈடுபடாமலிருப்பது வேதனையானது. மஹிந்தபால கூறுவதுபோல் பெரிய வரலாற்று இடைவெளியொன்றை எதிர்நோக்கியுள்ள தமிழ் வரலாற்றியலாளர்கள் தங்களது அகம்பாவமான அரசியலையும், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையையும் செல்லுபடியானதாக்குவதற்கு தமிழ் வரலாறு ஒன்று இல்லையென்பது குறித்து மனம் நொந்து கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழருக்கென்று இந்தநாட்டில் தெளிவான இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உள்ளபோது தமிழர் தரப்பினர் மனம் நோவது ஏன்? சிந்திக்கவேண்டும். நம்மை, நமது வரலாற்று இருப்பை, வளத்தை, பெருமையை நாம் வரலாற்று ரீதியாக அறியத்தடையேன்? தயக்கமேன்?

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-01-20#page-7

 

 

போலி வர­லாற்றில் மிதக்கும் தமிழர் அர­சியல் என்ற தலைப்பில் எச்.எல்.டி.மஹிந்­த­பால என்­ப­வரால் எழு­தப்­பட்ட கட்­டு­ரையின் தமி­ழாக்கம் வீர­கே­ச­ரியில் வெளி­வந்­துள்­ளது.

போலி வர­லாற்றில் மிதக்கும் தமிழர் அர­சியல்  இந்த தலைப்பில்  போனவாரம் வந்த கட்டுரையை இங்கு என்னால் இணைக்க முடியவில்லை.

அந்த கட்டுரை எழுத்து உருவில் இல்லாதபடியால்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.