Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிலிருந்து புறப்படவுள்ள பிபா கிண்ணம்

Featured Replies

இலங்கையிலிருந்து புறப்படவுள்ள பிபா கிண்ணம்

 

 

பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்­ணத்தை உலகம் பூரா­கவும் கொண்டு செல்லும் பய­ணத் திட்டத்தின் முத­லா­வது நாடாக இலங்கை திகழ்­கின்­றது.

அந்தவகையில், பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணம் நாளை இலங்­கைக்கு எடுத்துவரப்படவுள்ளது.

21ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்த வருடம் ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. 

fifa.jpg

இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் நான்காவது முறையாக இடம்பெறும் இந்த வருட பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பிக்கின்றது.  

மொத்தம் 54 நாடு­க­ளுக்கு பய­ண­மா­க­வுள்ள பிபா கிண்­ண­மா­னது முதல் நாடாக இலங்­கைக்­குத்தான் எடுத்­து­வ­ரப்­ப­டு­கி­றது. இலங்கை வரும் பிபா கிண்­ண­மா­னது நாளை இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­ப­டவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் புதன்கிழமை காலை 8 மணி­முதல் 2 மணி­வரை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மா­நாட்டு மண்­ட­பத்தில் பொது­மக்கள் பார்­வைக்­காக வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதன்­பி­றகு குறித்த கிண்­ண­மா­னது மாலை­தீ­வுக்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டு­கின்­றது.

இதன்­படி, குறித்த வெற்றிக் கிண்­ணத்தை உல­கிற்கு அறி­முகம் செய்யும் சந்­தர்ப்பம் முதற்­த­ட­வை­யாக இலங்­கைக்கு கிடைத்­துள்­ளது. 

 

உலகில் உள்ள சுமார் 1.5 மில்லயன் மக்களுக்கு பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணத்தைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமாக இருக்கும் இந்த வாய்ப்பை முதல் முறையாக இலங்கை பெற்றிருக்கின்றது. அந்தவகையில், 1,500 இலங்கையருக்கு நேரடியாகப் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.

http://www.virakesari.lk/article/29787

  • தொடங்கியவர்

இலங்கையில் பீபா உலகக் கிண்ணம்

(நெவில் அன்­தனி)

சர்­வ­தேச கால்­பந்­தாட்ட அரங்கில் அதி உய­ரி­யதும் உன்­ன­தம்­வாய்ந்­த­து­மான வர­லாற்­று­ப்புகழ்மிக்க பீபா (FIFA) உலகக் கிண்ணம் இலங்­கைக்கு முதல் தட­வை­யாக இன்று கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றது.

இந்த அசல் உலகக் கிண்ணம் சுத்­த­மான தங்­கத்­தினால் வடி­வ­மைக்­கப்­பட்­ட­தாகும். உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டியில் சம்­பி­ய­ னாகும் அணிக்கு இந்த அசல் கிண்­ணத்­துக்குப் பதி­லாக தங்க முலாம் பூசப்­பட்ட மாதிரி (நகல்) கிண்­ணமே வழங்­கப்­படும்.

அசல் கிண்ணம் சுவிட்­சர்­லாந்தில் சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளனத் (பீபா) தலை­மை­ய­கத்தில் பாது­காப்­பான கண்­ணாடிப் பேழையில் வைக்­கப்­பட்­டி­ருக்கும்.

fifa-word-cup.jpg
நான்­கா­வது தட­வை­யாக உலக வலம் வரும் பீபா உலகக் கிண்ணம் இம்­முறை தனது உலகப் பய­ணத்தின் முத­லா­வது நாடாக இலங்­கையில் ஆரம்­பிக்­கின்­றமை இலங்கை தேசத்­திற்கு கிடைத்த பெரு­மையும் கௌர­வ­மு­மாகும்.

விசேட விமானம் மூலம் மிகுந்த பாது­காப்­புடன் இன்று இரவு பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டையும் பீபா உலகக் கிண்ணம், ஷங்ரி லா ஓட்­ட­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சே­ன­வினால் திரை­நீக்கம் செய்­து­வைக்­கப்­படும்.

இந்த வைப­வத்தில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர், சுற்­று­லாத்­துறை அமைச்சர் உட்­பட அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், வெளி­நாட்டு தூத­ரகப் பிர­தி­நி­திகள், தேசிய ஒலிம்பிக் குழு பிர­தி­நி­திகள் ஆகியோர் கலந்து சிறப்­பிப்பர்.

இதனைத் தொடர்ந்து பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் தலை­மையில் நாளை புதன்­கி­ழமை காலை 9.00 மணிக்கு விசேட வைபவம் இடம்­பெறும். இதன் போது ‘கால்­பந்­தாட்ட தொலை­நோக்கு 2030’ திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். அதனைத் தொடர்ந்து பீபா உலகக் கிண்ணம் பார்­வைக்கு வைக்­கப்­படும்.

உலக வலம்

ரஷ்­யாவில் இவ் வருடம் ஜூன் மாதம் 14ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட இறுதிச் சுற்றை முன்­னிட்டு பீபா உலகக் கிண்ணம் உல­கி­லுள்ள 51 நாடு­க­ளுக்­கான பய­ணத்தை இலங்­கையில் இன்று ஆரம்­பிக்­கின்­றது.
தெற்­கா­சி­யாவில் இலங்­கையை விட மாலை­தீ­வுகள், பாகிஸ்தான் ஆகிய நாடு­க­ளுக்கு மாத்­திரம் இக் கிண்ணம் கொண்டு செல்­லப்­படும்.

கொக்கா கோலாவின் பூரண அனு­ச­ர­ணை­யுடன் பீபா உலகக் கிண்ண உலக வலம் நடை­பெ­று­வ­துடன் அதன் முதலாம் கட்டம் கடந்த வருடம் செப்­டெம்பெர் 9ஆம் திகதி மொஸ்­கோவில் ஆரம்­ப­மா­னது.
ரஷ்­யாவில் 78 தினங்­க­ளாக 16 நக­ரங்­களில் வலம் வந்த உலகக் கிண்ணம் கடந்த நவம்பர் 25ஆம் திகதி அதன் முதல் கட்ட பய­ணத்தை நிறைவு செய்­தது.

தற்­போது உலக வலத்தை ஆரம்­பித்­துள்ள உலகக் கிண்ணம் ஜப்­பானின் ஒசாக்­காவில் உலக வலத்தை நிறைவு செய்யும். அங்கிருந்து இரண்டாம் கட்டமாக தொழிலாளர் தினமான மே முதலாம் திகதி ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்படும் உலகக் கிண்ணம் ரஷ்யாவின் மேலும் 16 நகரங்களில் வலம் வருவதுடன். அதன் பயணம் செய்ன்ற் பீட்டர்ஸ்பேர்கில் நிறைவுபெறும்.

…………………………………….

இலங்கையில் கால்பந்தாட்டம் சிறப்பாக இயங்குவதற்கு
உலகக் கிண்ண உலக வலம் ஒரு நகர்வாக அமையும்

  • கொகா கோலா வின் இந்தியா, தென் மேற்கு ஆசிய பிராந்தியத்துக்கான செயற்பாடுகள் உதவித் தலைவர் டிபாப்ரடா முக்கர்ஜி கூறுகிறார்

(நெவில் அன்தனி)

உலகக் கிண்ணத்தின் உலக வலமானது இலங்கையில் கால்பந்தாட்டம் சிறப்பாக இயங்குவதற்கான முதலாவது நகர்வாக அமையும் எனவும் பீபா உலகக் கிண்ண வருகையைப் பயன்படுத்தி இலங்கையில் கால்பந்தாட்டம் பிரபல்யம் அடைவதற்கான ஒளி விளக்கை ஏற்றுவதாகவும் கொகா கோலா நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென் மேற்கு ஆசிய பிராந்தியத்துக்கான செயற்பாடுகள் உதவித் தலைவர் டிபாப்ரடா முக்கர்ஜி தெரிவித்தார்.

 

Debarata-Mukherjee-1.png
கால்பந்தாட்டம் முதல் நிலை விளையாட்டாக இல்லாத இலங்கை போன்ற ஒரு நாட்டில் கால்ந்தாட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

‘‘கால்பந்தாட்டம் முதல்நிலை விளையாட்டாக இல்லாத ஒரு நாட்டில் முதலில் செய்யவேண்டியது என்னவென்றால், கால்பந்தாட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்.

உலகக் கிண்ணம் இங்கு கொண்டுவரப்படும்போது அதற்கு தேவையான பிரசாரம் சிறப்பாக அமையவேண்டும். அப்போது என்ன நிகழும் என்றால், கால்பந்தாட்டம் விளையாட விரும்பும் ஒரு சிறுவன் அல்லது சிறுமி கால்பந்தாட்டம் விளையாடுவது குறித்து கனவு காண ஆரம்பிப்பார். அதற்கான விருப்பத்தை, ஆர்வத்தைத் தூண்டிவிட்டால் அது ஒரு திட்டத்தை ஆரம்பிப்பதாக அமையும். எனவே கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் உலக வலமானது இலங்கையில் கால்பந்தாட்டம் சிறப்பாக இயங்குவதற்கான முதலாவது நகர்வாக அமையும்’’ என்றார் அவர்.

‘‘மக்கள் கால்பந்தாட்டம் விளையாடுவது மிகவும் அவசியம். இவ் விளையாட்டுத்தான் மிகவும் மலிவான விளையாட்டு. கால்பந்தாட்டம் விளையாடு வதற்கு ஒரு பந்து மட்டும் தான் தேவை. எனவே உலகக் கிண்ணத்தின் வருகை கால் பந்தாட்ட விளையாட் டின்பால் பேரார் வத்தை ஏற்படுத்தும் என நாம் கருது கின்றோம். பல்வேறு நாடுகளுடனும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேள னத்துடனும் பங்காளிகளாக இணைந்து எவ்வாறு செயற்படலாம் என்பது குறித்து நாங்கள் கவனம் செலுத்துகின்றோம்.

உலகக் கிண்ண வருகையை முன்னிலைப்படுத்தியே இங்கு கொண்டாட்டம் அமைய வேண்டும் என்ற கருத்தை ஊக்குவிப்போம். இந்தச் சந்தர்ப்பத்தை இலங்கையில் கால்பந்தாட்ட ஒளி விளக்கை நாங்கள் ஏற்றுவதாக சகலரும் உணர்ந்து கொள்ளவேண்டும்’’ எனவும் முக்கர்ஜி தெரிவித்தார்.

http://metronews.lk/?p=20399

  • தொடங்கியவர்

2018 உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு.!

 

 

எதிர்வரும் ஜூலை மாதம் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள  2018 - உலகக்கிண்ண கால்பந்து போட்டித்தொடரின் வெற்றிக்கிண்ணம் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன், அதனை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

7.jpg

உலகம் முழுவதும் ஆறு கண்டங்களைச் சேர்ந்த 54 நாடுகளுக்கு மக்களின் பார்வைக்காகக் கொண்டு செல்லப்படவுள்ள வெற்றிக்கிண்ணத்தின் முதலாவது பயணமாக அது இலங்கைக்கு கொண்வரப்பட்டுள்ளது. மேலும் உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆசிய நாடுகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான், மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு மாத்திரமே 2018 – கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் தெரிவிக்கின்றது. 

2018_FIFA_World_Cup_Trophy_handed_over_t

அதற்கமைய, நேற்றைய தினம் விசேட விமானத்தின் மூலமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணத்தை இலங்கை கால்பந்து ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக இன்றைய தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. 

இன்று முற்பகல் இடம்பெற்ற வெற்றிக்கிண்ணத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா மற்றும் இலங்கை கால்பந்து குழுவின் உறுப்பினர்களும் 1998 ஆம் ஆண்டின் உலகக்கிண்ண கால்பந்து வெற்றிக்கிண்ணத்தை வெற்றிகொண்ட பிரான்ஸ் கால்பந்து குழுவினரும் பங்குபற்றினர். 

http://www.virakesari.lk/article/29866

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.