Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சில சமையல் அறை டிப்ஸ்சுகள்


Recommended Posts

சில சமையல் அறை டிப்ஸ்சுகள்

முட்டை அடிக்கடி கெட்டுப் போவது, பால் காச்சும் போது அடிப்பிடிப்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இவ்வளவு நாளும் சமாளித்தது போதும், அவற்றிலிருந்து விடுதலை பெற சில சமையலறை குறிப்புகள் உங்களுக்காகவே....

1. பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி அதை பிறிட்ஜில் வைக்கவும். அவ்வாறு செய்வதால் நீண்ட நாட்களுக்கு அந்த மிளகாயை பிரஸ்சாக பயன்படுத்தலாம்.

2. காளான்கள் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.

3. தோல் பொருள்களில் மைப்பேனா குறிகளிலினை அழிப்பதற்கு பாலும் சிறிதளவு ஸ்பிரிட்டும் கலந்து சுத்தம் செய்யவும்.

4. எண்ணை கறையை அழிப்பதற்கு, எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

5. மண் கறைகளை துணிகளில் இருந்து நீக்குவதற்கு, உருளைக்கிழங்குகளை வேக வைத்த தண்ணீரில் அந்த துணியை ஊற வைத்து சுத்தம் செய்யவும்.

தொடரும்....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் உங்களோட கண்டுபிடிப்பா?? :rolleyes: நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாருங்க நான் குட்டி பையன் எப்போ எனக்கு தாடி வளரும் அப்போ சேவெடுக்கலாம் என்டு வெயிட் பண்ணிட்டிருக்கேணக்கும் :lol:

ஏன் இப்ப கதைக்காம ம் ம் என்று சொல்லுறீங்கள் கதையுங்கோவேன் பிறகு நான் இந்த பக்கத்துக்கு வரமாட்டேன்

:angry: :angry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ம் ம்

என்ன இப்ப அடிக்கடி ம் கொட்டுறீர்.எங்கையோ நல்லாய்ச் சாத்து வாங்கீட்டீரோ?ஓய் சைவம் உம்மைத்தான்........... :icon_mrgreen:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சமையல் குறிப்புகள்

பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

--------------------------------------------------------------------------------

சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

--------------------------------------------------------------------------------

உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

--------------------------------------------------------------------------------

ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

--------------------------------------------------------------------------------

தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

--------------------------------------------------------------------------------

இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

--------------------------------------------------------------------------------

மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

--------------------------------------------------------------------------------

பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

--------------------------------------------------------------------------------

வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

--------------------------------------------------------------------------------

தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

--------------------------------------------------------------------------------

எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

--------------------------------------------------------------------------------

உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

--------------------------------------------------------------------------------

தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

--------------------------------------------------------------------------------

துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை ஏன் மருத்துவம் பகுதில போட்டு இருக்கு.. சமையல் பகுதில போட்டு இருக்கலாமே... :):o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை ஏன் மருத்துவம் பகுதில போட்டு இருக்கு.. சமையல் பகுதில போட்டு இருக்கலாமே... :):o

உங்கள போலக்களுக்கு தட்டு தவறி வரும் போது பக்குறதுக்குத்தான் :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள போலக்களுக்கு தட்டு தவறி வரும் போது பக்குறதுக்குத்தான்

புரியலை.. வானவில்..நீங்க என்ன சொல்ல வாறீங்க என்று?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை ஏன் மருத்துவம் பகுதில போட்டு இருக்கு.. சமையல் பகுதில போட்டு இருக்கலாமே... :):o

சமையல் பகுதியில கவனம் செலுத்தாட்டி மருத்துவரிடம் தான் தஞ்சம் எண்டுதான் மருத்துவம் பகுதியில போட்டிருக்குபோல

Link to post
Share on other sites

சில சமையலறை டிப்ஸ்கள்...சைவன் என்னிடம் தந்தார் இதனை எழுதச்சொல்லி ஆகவே எனக்கு அனுமதி தரவும்

6.பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த நீரைத்தெளிக்கவும்.

7. பால் காச்சுவதற்கு முன் அப்பாத்திரத்தினை நன்கு தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தபின்பு காச்சினால் பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.

8. முட்டையை வேகவைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேகவைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ள இருப்பவை சிதறி வராது அப்படியே முட்டை வடிவில் இருக்கும்.

9.ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக பாவனைக்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்ட்டையை குளிர்ந்த உப்புத்தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தைரியமாக குப்பைவாளியினுள் போடலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை நீங்கள் சமையளில் பாவிக்கலாம்.

10. வெங்காயம் நறுக்கும் போது கண்களில் இருந்து தண்ணீர் வராமல் இருப்பதற்கு, நறுக்க வேண்டிய வெங்காயங்களை முன்பே சில நிமிடங்கள் ஈரம் உள்ளே இருப்பவை சாடையாக கட்டியாக வரும்வரை வைத்து அதன் பின்னர் வெட்டினால் உங்கள் கண்கள் குளமாகாது.( நல்ல அறிவுரையுங்க)

11. உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் ஒரே கூடையில் வைத்தால் அவை இரண்டும் சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருக்க அந்த உருளைகிழங்குகளினை ஒரு பையினுள் போட்டு அந்த பையினுள் ஒரு அப்பிள் பழத்தினை வைக்க ஒரு பிரச்சனையும் இல்லை.

12. வெங்காய நாற்றம் உங்கள் வாயிலிருந்து போவதற்கு வேறென்ன, டூத்பேஸ்ட் தான் சிறந்த வழி.

13. பால் புளிக்காமல் இருப்பதற்கு ஏலக்காய் பால் காச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்துக்கு பால் புளிக்காமல் கமகம மணத்துடன் இருக்கும்.

14. முட்டைகளை 30- 40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு அதன் மேல் ஒரு பிரஸ்ஸால் சமையள் எண்ணை தடவி விடவும்.

இன்னும் நிறைய இருக்கு தொடரும்.......

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • CSK vs RR: தோனி இளம் வீரர்கள் குறித்து கூறியது சரியா? - ஜாதவ் மீது தொடரும் விமர்சனம் சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், BCCI / IPL   சில விளையாட்டு போட்டிகள் நம்பிக்கை அளிக்கும், சில போட்டிகள் ஏமாற்றமளிக்கும், கேள்விகளை எழுப்பும். வேறு சில போட்டிகள் வியப்பளிக்கும். இவை அனைத்தையும் ஒருசேர அளிக்கும் வல்லமை மிக சில போட்டிகளுக்குத்தான் உள்ளது. அபுதாபியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக திங்கட்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஐபிஎல் லீக் போட்டியில் அப்படித்தான் நடந்தது. சென்னை அணி இந்த தொடரில் மற்றொரு மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இம்முறை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தரப்பில் அழுத்தமான கேள்விகள் மற்றும் ஏமாற்றங்கள் வெளிப்பட்டன. இதுவரை 3 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி, 8 முறை இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளது. தான் விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.  வெல்ல முடியாத அணி என்று முன்பு புகழப்பட்ட சிஎஸ்கே, தொடர்ந்து அளித்து வரும் மோசமான பங்களிப்பு எதிரணி ரசிகர்களுக்கும் வியப்பையே அளித்துள்ளது. களையிழந்த 200-வது போட்டி ஐபிஎல் வரலாற்றில் 200-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற பெருமையுடன் களமிறங்கிய தோனிக்கு மறக்கமுடியாத போட்டியாக அது அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். உண்மை தான், அவரால் மறக்கவே முடியாத போட்டியாக அமைந்தது. டாஸ் வென்ற தோனி மீண்டும் பேட்டிங் தேர்வு செய்ய, கடந்தமுறையை போலவே இம்முறையும் பவர் பிளே ஓவர்கள் சரியாக அமையவில்லை.  டூ பிளஸிஸ் மற்றும் வாட்சன் ஆகிய இருவரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்துவிட, மற்றொரு தொடக்க வீரரான சாம் கரனால் தனது வழக்கமான அதிரடி பேட்டிங் பாணியை தொடரமுடியவில்லை. ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். பட மூலாதாரம், BCCI / IPL   இரு முனையிலும் ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் ராகுல் டிவாட்டியா ஆகிய இருவரும் நன்றாக பந்துவீசினர். இந்த தருணத்தில் சாம் கரன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகிய இருவரும் ஆட்டமிழக்க சென்னை அணி மேலும் தடுமாறியது. தோனி 28 ரன்கள் எடுத்தார். ஜடேஜா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். மீண்டும் ட்ரோல் செய்யப்படும் ஜாதவ்  இறுதி ஓவர்களில் பேட்டிங் செய்த கேதர் ஜாதவால் ஒரு பவுண்டரி கூட அடிக்கமுடியவில்லை. 7 பந்துகளில் 4 ரன்கள்தான் எடுத்தார். அவர் கொடுத்த கேட்ச்சை ஜோஃப்ரா ஆர்ச்சர் பிடித்திருந்தால் 1 ரன்னில் ஆட்டமிழந்திருப்பார்.  காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 மீண்டும் சமூகவலைத்தளங்களில் ஜாதவ் ட்ரோல் செய்யப்படுகிறார். ஆனால் தோல்விக்கான காரணம் அவர் மட்டுமா? ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தபோதிலும், சென்னை அணியின் பேட்டிங் மிகவும் மோசமாகவும், எந்த எத்தனிப்பும் இல்லாமல் இருந்ததே 125 என்ற குறைவான ரன்களை பெற்றதற்கு முக்கிய காரணம். சுழல் பந்துவீச்சை சமாளிக்க ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற வித்தியாசமான ஷாட்கள் எதையும் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் முயலவில்லை. 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்ததால் சென்னை ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கை இருந்தது.  ஆனால் குறைந்த இலக்கு என்பதாலும், ஜோஸ் பட்லரின் சிறப்பான பேட்டிங்காலும், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் எளிதாக வென்றது. 48 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த பட்லர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.  எடுபடாத சிஎஸ்கே பந்துவீச்சு  சாவ்லா, ஜடேஜா போன்ற சென்னையின் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு அவர்கள் பந்துவீசிய சமயத்தில் ஆடுகளம் பெரிய அளவில் சாதகமாக இல்லாததால் அவர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. பட மூலாதாரம், BCCI / IPL   போட்டி முடிந்தவுடன் பேசிய தோனி, தாங்கள் பந்துவீசும்போது சுழல் பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இல்லை என்று குறிப்பிட்டார். இளம் வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கபடுவதில்லை என்று கூறப்படுவதற்கு 'ஒருவேளை இம்முறை சில இளம்வீரர்களிடம் தேவைப்படும் தீப்பொறி இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இனி வரும் போட்டிகளில் எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாட வாய்ப்பளிக்கப்படும்' என்று கூறினார். தோனி கூறியது சரியா? இது குறித்து சமூகவலைதளத்தில் அதிக அளவில் கேள்விகள் எழுப்பப்பட்டன. சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஜாதவ் தொடர்ந்து விளையாடி வருவது குறித்தும், ஒரு போட்டிக்கு பிறகு வாய்ப்பளிக்கப்படாத தமிழக வீரர் ஜெகதீசன் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். தோனி கூறியது மற்றும் அவரின் முடிவுகள் குறித்த விமர்சனங்கள் குறித்து கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் ரகுராமன் பிபிசி தமிழிடம் பேசினார். ''தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது பற்றி கூறியது ஒரு வரிதான். அது சிலரால் மிகைப்படுத்தப்படுகிறது என்று எண்ணுகிறேன். பட மூலாதாரம், BCCI / IPL   ஆனால் குறைந்த பந்துகளில் 33 ரன்கள் எடுத்த ஜெகதீசன் ஒரு போட்டிக்கு பிறகு ஏன் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறித்தும், ஜாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்தும் தோனி தான் விளக்கவேண்டும். நிச்சயம் அதற்கு வலுவான காரணம் இருக்கலாம். ஆனால் தற்போது தொடர்ந்து தோல்விகள் ஏற்படுவதால் அவரது முடிவுகள் மற்றும் தலைமை விமர்சனத்துக்குள்ளாகிறது. இதே அணி வெற்றி பெற்றால், இவை குறித்து பெரிதாக கேள்விகள் எழாது. இனி சிஎஸ்கே அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும். ஆனால் அது மிகவும் சிரமம்'' என்று ரகுராமன் குறிப்பிட்டார். 2020 ஐபிஎல் தொடரில், இதுவரை தான் விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே சென்னை அணி வென்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சமூக வலைத்தளங்களில் பிளே ஆஃப் சுற்றில் நுழைவது குறித்த கணக்கையும், விவாதத்தையும் சிஎஸ்கே ரசிகர்கள் தொடங்கியுள்ள நிலையில், எஞ்சியுள்ள நான்கு போட்டிகளில் வெல்வது மட்டுமல்ல, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலையில் அந்த அணி உள்ளது.     https://www.bbc.com/tamil/sport-54610459
  • முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங் கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் நேற்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் திகதி வரை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை விளக்கமறியலில் வைக்கு மாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு நேற்றிரவு ரிசாத் பதியுதீன் அனுப்பப்பட்டுள்ளார்.சுகாதார அறிவுறுத்தல்களின் அடிப்படையில் சிறைச்சாலை கைதிகளைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகச் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை சிறைச்சாலைகள் அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார்.(15)     http://www.samakalam.com/செய்திகள்/முன்னாள்-அமைச்சர்-ரிசாத்/
  • புங்குடுதீவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் புங்குடுதீவில் கடந்த 5 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க. மகேசன் தெரிவித்தார். கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது. அதனடிப்படையில் புங்குடுதீவு பகுதியானது இன்று காலையிலிருந்து தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறைகளினை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் கேட்டுள்ளார். அப்பகுதிக்கு சென்று வரும் பொது மக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், புங்குடுதீவு தொடர்ந்து சுகாதாரப் பிரிவினரால் கண்காணிக்கப்படும் எனவும் கூறினார்.     https://www.virakesari.lk/article/92515
  • தாய்லாந்து ஆர்ப்பாட்டம்; டெலிகிராம் செயலியை தடை செய்ய நடவடிக்கை தாய்லாந்தில்  அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட டெலிகிராம் செய்தியிடல் செயலியை தடுக்க இணைய வழங்குநர்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த திட்டங்களை கோடிட்டுக் காட்டிய ஒரு ஆவணம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரணிகளை தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டங்களுக்கு கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட அவசரகால ஆணையை மீறியதற்காக நான்கு செய்தி நிறுவனங்களை மூடுவதாகவும் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். தாய்லாந்தில் அந்நாட்டு மன்னராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் ஜனநாயக ஆதரவாளர்கள் பல மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவர் தலைமையிலான இயக்கத்தின் உறுப்பினர்கள் போராட்டங்களைத் தடைசெய்யும் உத்தரவை மீறி ஒன்றுகூடி, 2014 ஆம் ஆண்டு சதிப் புரட்சியொன்றின் மூலம் அதிகராத்தை கைப்பற்றிய  முன்னால் இராணுவத் தலவைரான பிரதமர் பிரயுத் சன் ஒச்சாவைப் (Prayuth Chan-o-cha) பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றார்கள். வியாழக்கிழமை அவசரகால ஆணையை பிறப்பித்ததிலிருந்து பேரணிகளைக் கட்டுப்படுத்த  அதிகாரிகளுக்கு முடியாமல் போயுள்ளது. போராட்டக்காரர்கள் பேங்கொக் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தினமும், பெரும்பாலும் அமைதியாக, கூடிவருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குறைந்தது 80 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். முடியாட்சியை விமர்சிப்பதைத் தடைசெய்யும் தாய்லாந்தின் கடுமையான லெஸ் மாஜெஸ்டே சட்டங்களை மீறியதாகக் கண்டறியப்பட்டால், நீண்ட காலமாக தடுத்து வைக்கப்படுவார்கள். சட்டத்தை மீறிய எவரையும் 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். டெலிகிராமைத் தடுக்கும் அரசாங்கத்தின் திட்டமான "மிகவும் ரகசியமானது" என்று குறிக்கப்பட்ட ஒரு ஆவணம் கசிந்து சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட பிறகு உள்ளூர் ஊடகங்களால் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. டெலிகிராம் ஒரு பிரபலமான பாதுகாப்பான செய்தியிடல் பயன்பாடாகும், இது ஆர்வலர்களால் குறுகிய அறிவிப்பில் எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆவணம் - தாய்லாந்தில் இணையத்தை தணிக்கை செய்யும் அதிகாரம் கொண்ட தாய்லாந்தின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டது - தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. "டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சமூக அமைச்சகம் உங்கள் ஒத்துழைப்பை இணைய சேவை வழங்குநர்களுக்கும் அனைத்து மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கும் டெலிகிராம் பயன்பாட்டை நிறுத்துவதற்கு தெரிவிக்க முயல்கிறது" என்று அது தெரிவித்துள்ளது. தனித்தனியாக, டெலிகிராமில் இலவச இளைஞர் குழுவை கட்டுப்படுத்த டிஜிட்டல் அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியதாக பொலிஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். சமீபத்திய மாதங்களில் போராட்டங்களை ஏற்பாடு செய்வதில் இந்த குழு முக்கிய பங்கு வகிக்கிறது. ஜனநாயக இயக்கத்தைக் குறைப்பதில் இந்த உத்தரவு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒரு தனி உத்தரவில், தாய்லாந்து காவல்துறையினர் ஆர்ப்பாட்டங்களை நேரலையாக செய்திகளை வழங்கியமை தொடர்பாக நான்கு பிரபலமான செய்தி நிறுவனங்கள் மீது  விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.      https://www.virakesari.lk/article/92514
  • துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதூஷ் உயிரிழப்பு By Sayan   மாளிகாவத்தை – எப்பல்வத்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளார்.மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மாகந்துர மதூஷை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.இதனை அடுத்து அவர்களுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் மீது தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.இந்தச் சம்பவத்தில் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   http://www.battinews.com/2020/10/drug-kingpin-makandure-madush-shot-dead-in-maligawatta.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.