Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்­ட­மைப்பு தீர்வு விட­யத்தில் அவ­தா­னத்­துடன் செயற்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம்

Featured Replies

கூட்­ட­மைப்பு தீர்வு விட­யத்தில் அவ­தா­னத்­துடன் செயற்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம்

 

தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் பூர்த்தி செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்­கான அர­சியல் அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்­பான கோரிக்­கைக்கு எவ்­வா­றான பதில் கிடைக்கும் என்­பதும் அது எவ்­வாறு அதி­கா­ரத்தில் இருப்­போ­ரினால் அணு­கப்­படும் என்­ப­துமே தற்­போ­தைய கட்­டத்தில் பேசப்­ப­டு­கின்ற ஒரு முக்­கிய விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது.

தென்­னி­லங்­கை­யா­னது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் மிகவும் முனைப்­புடன் செயற்­பட்­ட­போ­திலும் தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் இந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லையும் கூட அவர்­க­ளுக்­கான அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான ஒரு ஆயு­த­மாக பயன்­ப­டுத்­தவும் அத­னூ­டாக சர்­வ­தே­சத்­திற்கும் இலங்கை அர­சாங்­கத்­திற்கும் வலு­வான செய்­தி­களை விடுப்­ப­தற்­குமே பயன்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். காரணம் கடந்த எழு­பது வரு­டங்­க­ளாக தமிழ் பேசும் மக்கள் தமது அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றிக்­கொள்ளும் வகை­யி­லான ஓர் அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றனர். இந்த எழு­பது வரு­ட­கால வர­லாற்­றிலும் தமிழ் பேசும் மக்கள் ஜன­நா­ய­கத்தின் முக்­கிய அம்­ச­மான தேர்­தல்­களை ஒரு முக்­கிய கரு­வி­யா­கவே பயன்­ப­டுத்தி வந்­தி­ருக்­கின்­றனர். ஒவ்­வொரு தேர்­தலிலும் தமிழ் பேசும் மக்கள் தமது அர­சியல் அதி­கார பகிர்­வுக்­கான எதிர்­பார்ப்பை வெளிப்­ப­டுத்­தியே வந்­தி­ருக்­கின்­றனர்.

அந்த வகையில் இம்­முறை உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலும் தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றது என்­பதை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

அதா­வது தேர்­தலை தமிழ் மக்கள் எவ்­வாறு பயன்­ப­டுத்­தப்­போ­கின்­றனர் என்­பதை இன்று நாட்டின் தலை­வர்கள், சர்­வ­தேச தலை­வர்கள் அனை­வரும் பார்த்து வரு­கின்­றனர். தமிழ் மக்­களின் தொடர்ச்­சி­யான கொள்­கையில் உறு­தி­யாக உள்­ள­னரா இதில் மாற்றம் கண்­டுள்­ள­னரா அல்­லது கொள்­கையின் இறுக்கம் அதி­க­ரித்­துள்­ளதா என்­பதை சர்­வ­தேசம் பார்த்­துக்­கொண்­டுள்­ளது. இவற்றின் அடிப்­ப­டையில் தான் நாம் தேர்­த­லுக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து வரு­கின்றோம். இந்த தேர்தல் நாட்­டுக்கு ஒரு செய்­தியை தெரி­விக்க வேண்டும். தமிழ் மக்கள் பொறு­மை­யாக தமது போராட்­டத்­தினை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர் என்­பதை உணர்த்த வேண்டும் என்று சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அத்­துடன் எமது தேசிய பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்­வொன்று வரும் வரையில், எமது மக்­களின் ஜன­நா­யக உரி­மைகள் கிடைக்கும் வரையில் நாம் அர­சாங்­கத்தில் சேரப்­போ­வ­தில்லை. எமது மக்கள் எதற்­காக இந்த அர­சாங்­கத்தை ஆத­ரித்­த­னரோ அவை பூர­ணப்­ப­டுத்­தப்­படும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

மேலும் பாரா­ளு­மன்றம் அர­சியல் அமைப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு பொது­மக்கள், நிபு­ணர்­களின் கருத்­துக்­களை ஆராய்ந்து பல ஆலோ­ச­னை­களின் படி புதிய அர­சியல் அமைப்பு குறித்த இடைக்­கால அறிக்கை ஒன்று சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். அதே­போன்று முன்­னெப்­போதும் இல்­லாத வகையில் சர்­வ­தேச சமூகம் இப்­போது எமது விவ­கா­ரங்­களில் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றது என்றும் கூட்­ட­மைப்பின் தலைவர் எடுத்­து­ரைத்­தி­ருக்­கின்றார்.

ஒரு­மித்த நாட்­டுக்குள், பிரிக்­கப்­ப­டாத நாட்­டுக்குள் எமது ஜன­நா­யக உரி­மைகள் வழங்­கப்­ப­ட­வேண்டும், எமது இறை­யாண்­மையின் அடிப்படையில் எமது உரி­மைகள் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் எமது உள்­ளக உரி­மைகள் முழு­மை­யாக கிடைக்­க­ப் பெற வேண்டும் என்­ப­தையே நாம் கேட்டு வரு­கின்றோம். ஒற்­றை­யாட்­சியை நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அத்­துடன் வடக்கு, கிழக்கு இணைக்­கப்­பட வேண்டும் என்­பது எமது நிலைப்­பா­டாகும். இடைக்­கால அறிக்­கையில் வட­கி­ழக்கு இணைப்பு சம்­பந்­த­மாக பிர­தான மூன்று விட­யங்­கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன. இந்த கார­ணி­களை நாம் பேச்­சு­ வார்த்தை மூல­மாக தீர்க்க வேண்டும். தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தீர்­வையே நாம் பெற்­றுக்­கொள்ள வேண்டும். வெறு­மனே விமர்­ச­னங்­களை முன்­வைப்­பதில் அர்த்தம் இல்லை. ஆக்­க­பூர்­வ­மாக நாம் செயற்­பட வேண்டும் என்றும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் கூறி­யி­ருக்­கின்றார். அந்த வகையில் வழ­மை­போன்று தேர்­தலில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டிய தமிழ் பேசும் மக்­களின் ஆணை எந்­த­ள­வு­தூரம் முக்­கி­ய­மா­னது என்­பதை சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தமிழ் பேசும் மக்­க­ளுக்­காக ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் தற்­போ­தைய நல்­லாட்சி தேசிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவை வழங்கி வரு­கின்­றது. அதா­வது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நேர­டி­யாக பங்­கேற்­கா­வி­டினும் வெளி­யி­லி­ருந்து முழு­மை­யாக ஆத­ரவு வழங்கி வரு­கி­றது. கூட்­ட­மைப்பு வழங்கும் இந்த ஆத­ர­வானது நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு மிகப்­பெ­ரிய ஒரு பல­மா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

எனினும் தற்­போ­தைய கள நிலை­மை­களைப் பார்க்கும் போது கூட்­ட­மைப்பின் இந்த அர்ப்­ப­ணிப்பு எங்கே வீணா­கி­வி­டுமோ என்ற சந்­தேகம் ஏற்­ப­டு­கின்­றது. காரணம் தற்­போ­தைய அர­சாங்­கமும் வர­லாற்­றி­லி­ருந்த ஏனைய அர­சாங்­கங்­களைப் போன்று அர­சியல் தீர்வு விட­யத்தில் இழுத்­த­டிப்­புக்­­க­ளையே செய்து வரு­கின்­றது. குறிப்­பாக நல்­லாட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்­திற்கு வந்து மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்­ட­போ­திலும் இது­வ­ரை­யிலும் தீர்வு தொடர்பில் முழு­மை­யான திருப்தி அடையும் வகை­யி­லான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக புதிய அரசி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அதில் ஒரு பகு­தி­யாக தீர்­வுத்­திட்டம் குறித்து ஆரா­யப்­ப­டு­கின்­றது. அதிலும் பாரிய நெருக்­க­டி­களும் முரண்­பா­டு­களும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. அதா­வது வர­லாறு முழு­வதும் எதிரும் புதி­ரு­மாக செயற்­பட்ட ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் தற்­போது இணைந்து ஆட்சி அமைத்­துள்­ள­மை­யா­னது தீர்­வுத்­திட்­டத்தை காண்­ப­தற்­கான ஒரு சிறந்த மார்க்­கத்தை வெளிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. எனினும் அந்த சிறந்­த­வொரு சந்­தர்ப்­பத்தை இந்த இரண்டு கட்­சி­களும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. மாறாக தமது அர­சியல் அதி­கா­ரங்­களை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னரே தவிர தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னையைத் தீர்த்து வைப்­பதில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை.

என­வேதான் சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் இந்த அர்ப்­ப­ணிப்பு வீணா­கி­வி­டுமா என்ற சந்­தேகம் ஏற்­ப­டு­கின்­றது. கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனும் அடிக்­கடி விரைவில் தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்ற கருத்தை கடந்த காலங்­களில் வெளி­யிட்டு வந்தார். எனினும் தற்­போ­தைய நிலை­மைகள் அதற்­கான சாத­கத்­தன்­மையை ஏற்­ப­டுத்­து­வ­தாக தெரி­ய­வில்லை. எனவே இது­தொ­டர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் சற்று விழிப்­புடன் செயற்­ப­டு­வது அவ­சி­ய­மா­கின்­றது. வர­லாறு முழு­வதும் தீர்வு விட­யத்தில் தமிழ் பேசும் மக்கள் பத­வி­யி­லி­ருந்த அர­சாங்­கங்­க­ளினால் எவ்­வாறு ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர் என்­பதை புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது கூட்­ட­மைப்பின் மிக முக்­கிய பொறுப்­பாகும். அந்த அர­சியல் கள யதார்த்­தத்தை உணர்ந்து கொண்டே கூட்­ட­மைப்பு தனது நகர்­வு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். பத­வி­யி­லி­ருக்கும் அர­சாங்­கத்தின் மீது முழு­மை­யான நம்­பிக்கை வைப்­பது தீர்வு விட­யத்தில் சரி­யான பிர­தி­ப­லனைத் தருமா என்­பது குறித்து கூட்­ட­மைப்பின் தலைமை சிந்­திக்­க­வேண்டும்.

 அதே­போன்று அர­சாங்­கமும் தொடர்ந்து தமிழ் பேசும் மக்­களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. இன்று இந்த அரசாங்கம் அதிகாரத்தில் இருப்பதற்கு யார் காரணமாக செயற்பட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும். மேலும் கூட்டமைப்பு எவ்வளவு தூரம் ஆபத்துமிக்க அரசியல் தீர்மானத்தை எடுத்து தீர்வைப் பெறவேண்டும் என்பதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கின்றது என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ளவேண்டும். எனவே எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது போன்று இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் ஆணை மிக முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகின்றது. அதேபோன்று அரசாங்கமும் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தின் அவசியத்தைப் புரிந்து கொண்டு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டியது அவசியமாகும். எவ்வாறெனினும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்த தீர்வு விடயத்தில் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-01#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.