Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் பேச்சுவார்த்தையில்..?

Featured Replies

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் பேச்சுவார்த்தையில்..?

discussion.png?resize=625%2C339

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பில் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களுக்கான கோரிக்கையை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கும் மாணவர் ஒன்றியங்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. எதிர்வரும் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தமது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

இதேவேளை, தத்தமது கட்சிகளுக்கு ஆதரவு கோரும் வகையில் பொது அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்களைச் சந்திக்கும் வேலைத்திட்டங்களும், கட்சிகள் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கிலுள்ள யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியோரை கட்சிகள் அனுகி தமக்கு ஆதரவளிக்குமாறு கோரி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. எனினும் அப்பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது யாழ்.பல்கலைக்கழக பீடம் ஒன்றின் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எந்தக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பகிரங்கமான அறிக்கையை வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இம்முறை தேர்தலில் அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய மாணவர்கள் ஒன்றியங்கள் உறுதியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீடங்களின் மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன மாணவர்களிடையே கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன. இக்கலந்துரையாடலின் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஒன்றாக சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அக்கலந்துரையாடலின் முடிவில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள மக்களைக் கோரும் அல்லது தெளிவுபடுத்தும் தேர்தல் சம்மந்தமான அறிவித்தல் ஒன்றினை வெளியிடவும் மாணவர் ஒன்றியங்கள் தயாராகி வருகின்றன.

http://globaltamilnews.net/2018/65591/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.