Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10-ம் திகதி உள்ளூராட்சி தேர்தல் முதலமைச்சர் அதிரடிப் பதில்

Featured Replies

‘0’இல் இருந்து ‘100’ நோக்கிச் செல்லும் எதுவுமே நியாயமான கோரிக்கைகளே

viki.jpg?resize=278%2C181

வாரத்துக்கொரு கேள்வி 05.02.2018

 

தேர்தல் காலத்தில் அரசியல் சார்பற்ற ஒரு கேள்வி இவ்வாரக் கேள்வியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பதிலில் அரசியல் புகுந்துள்ளதை அவதானிக்கலாம். கேள்வி பின்வருமாறு –

கேள்வி – நீங்கள் ஜனாதிபதியுடனும் வேறு சில மத்திய அமைச்சர்களுடனும் சிங்களத்தில் மிக அன்னியோன்யமாக சிரித்துப் பேசுவதைக் கண்டிருக்கின்றோம். ஆனால் உங்கள் அரசியல்க் கருத்துக்கள் மிகத் தீவிரமாக இருக்கின்றனவே? இது ஒரு நாடகமா?
பதில் – நான்கு விடயங்களை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். சிங்களத்தில் பேசுவது, சிரித்துப் பேசுவது, என் அரசியல் சிந்தனைகள் தீவிரம் பெற்றுள்ளமை மற்றும் இவை முரண்படுந் தன்மையுடையதால் (நீங்கள் மக்களிடம் எதையோ பெற) நாடகம் ஆடுகின்றீர்களா என்பனவாவன அவை. அவற்றைத் தனித்தனியே பரிசீலிப்போம்.
1. சிங்களத்தில் பேசுவது
ஜனாதிபதியுடனும் சில மத்திய அமைச்சர்களுடனும் சிங்களத்தில் பேசுகின்றேன் என்றால் என் கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில் அவர்களுடன் பேசுவது அவசியம் என்பதால். ஆனால் பிரதம மந்திரியுடன் நான் சிங்களத்தில் பேசுவதில்லை. ஆங்கிலத்திலேயே பேசுவேன். அதே போல் எமது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனோ எனது மாணவர் சுமந்திரனுடனோ அல்லது எமது அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடனோ எதிர்க் கட்சித் தலைவர் தவராசாவுடனோ பெருமளவில் ஆங்கிலத்தில்த்தான் சம்பாஷிப்பேன். தமிழிலும் பேசுவேன். அவரவர்கள் எந்த மொழியில் இலேசாகக் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுவார்கள் என்பதை ஊகித்தறிந்து அந்த மொழியில் பேசுவேன். ஒரு சிங்களவருடன் சிங்களத்தில் பேசுவது பிழையென்று எனக்குப் படவில்லை. ஆங்கிலத்தில் படித்தவர்கள் தமக்குள் ஆங்கிலத்தில் பேசுவதும் பிழையென்றுபடவில்லை. ஆனால் தமிழில் தமிழன்பர்களுடன் பேசுவதை நான் விரும்புகின்றேன், வரவேற்கின்றேன். மனதின் வாகனம் மொழி. எவரெவருடன் எந்த மொழியில் பேசினால் அங்கு அன்னியோன்யம் மேலோங்குமோ அந்த மொழியை நாடுவது குற்றமாக நான் கருதவில்லை.

2. சிரித்துப் பேசுதல்
ஒரு சிங்களத் தலைவருடன் எவ்வாறு நீங்கள் சிரித்துப் பேச முடியும் என்று கேட்பது போல் இருக்கின்றது. இங்கு நான் என்னைப் பற்றிக் கூறுவது அவசியமாகின்றது. உங்களுள் பலர் வெறுப்பின் அடிப்படையிலேயே வாழ்க்கையை, வேற்று இன மக்களைப் பார்த்தவர்கள், பார்ப்பவர்கள். நான் சமய சார்பான வாழ்க்கையில் வளர்ந்தவன். முதலில் 1957ம் ஆண்டளவில் சமய ஒப்பீடு என்ற பாடத்தில் றோயல் கல்லூரியில் பலருடன் போட்டி போட்டு பரிசு பெற்றவன். அப்பொழுதிருந்தே எனது வாழ்க்கையைச் சமயங்கள் வழிநடத்தி வந்துள்ளன. பல்சமய ஞானிகளைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. சமயங்கள் அனைத்தும் அன்பையும், கருணையையும், புரிந்துணர்வையும், கொடையையும், சகோதரத்துவத்தையுமே வலியுறுத்துகின்றன. இதனால் நான் எவருடனும் பழகும் போது அன்புடனும் பண்புடனுந்தான் பழகுகின்றேன். நீங்கள் வன்மமுடனும் வேற்றுமையுடனும் வெறுப்புடனும் நடந்துகொள்வது போல் என்னால் நடக்க முடியாதிருக்கின்றது. மற்றவர்கள் கூறும் கருத்துக்கள், அவர்களின் செய்கைகள், கொள்கைகள் எனக்குப் பொருந்தாதனவாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்களை எனது எதிரிகளாக நான் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவர்களின் கொள்கைகளுக்கு நான் எதிர். அவர்களின் சிந்தனைகளுக்கு நான் எதிர். ஆனாலும் அவர்கள் என் சகோதர சகோதரிகளே. கருத்து முரண்படலாம். அதற்காகக் கர்த்தாவை வெறுக்க வேண்டியதில்லை. ஒரு குழந்தையைப் பாருங்கள். சில நேரங்களில் அவர்கள் அடம்பிடிப்பார்கள். ஆனால் நாங்கள் அவர்களைத் தேற்றி கூடுமான வரை புரிய வைத்து அவர்களை சமாதானப்படுத்துகின்றோம். எனினும் சிலர் குழந்தைகளை வைவார்கள், அடிப்பார்கள். ஆனால் குழந்தைகள் மேலுள்ள அன்பு அதனால் குறைவதில்லை. சமய ஞானிகள்; என் சிந்தனையை மாற்றிவிட்டுள்ளனர். ‘கர்த்தாவை நேசி. கருத்தில் முரண்பட்டுக்கொள்’ என்கின்றது சமயங்கள். ஆகவே ஜனாதிபதியுடன் சிரித்துப் பேசும் போது எம் இருவரினதும் மனிதம் அங்கு வெளிப்படுகிறது. நாங்கள் அன்புடன் அளவளாவுவதினால் சில சமயங்களில் அவர்கள் தங்களுக்கு அரசியல் ரீதியாக இருக்கும் பிரச்சினைகளைக்கூட எங்களுடன் மனம் திறந்து பகிர்ந்து கொள்கின்றார்கள். ‘நாங்கள் – அவர்கள்’ என்ற இருமையில் சிறைபட்டு வாழ்பவர்களுக்கு இது புரியாமல் இருக்கலாம். ஆகவே உங்கள் கேள்விக்குப் பதில் கருத்து வித்தியாசங்கள் இருப்பவர்கள் கூட சிரித்துப் பேசி முடிவுகளுக்கு வரலாம் என்பதே. எங்கள் கொள்கைகளில் பற்றுறுதி இருந்தால் இது சாத்தியமாகும். எமது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து உடையவர் எமக்கு எதிரி என்றோ துரோகி என்றோ கருதும் காலம் தற்போது மலையேறிவிட்டது. சுயநல காரணங்களுக்காக அந்தக் கருத்து மேலோங்கியிருந்தது. அதனை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.

3. சிங்களவருடன் சுமுகமாகப் பேசுபவர் எவ்வாறு தீவிரமான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்?

சிங்கள மக்களுடன் சுமுகமாகப் பேசும் ஒருவர் அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூற முடியாதா?  என் சிந்தனைகள் தீவிரமானவை என்று யார் சொன்னது? எம்முடைய சில அரசியல்வாதிகள் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடமிருந்து தனிப்பட்ட நன்மைகளைப் பெறத் தாம் கூறுபவையே நியாயமான கருத்துக்கள் என்று பெரும்பான்மையினரின் கருத்துக்களுக்கு ஒத்த விதத்தில் சில கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். தாம் கூறுவது நியாயமானதென்று அவர்கள் நினைப்பதால் அவற்றிற்கு அப்பால் பேசுபவர்கள் யாவருந் தீவிரப் போக்குடையவர்கள் என்று கூறி வருகின்றார்கள். அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். தாம் மக்களிடம் இருந்து பெற்ற ஆணை என்ன என்பதை மறந்தே பெரும்பான்மையினருக்கு இசைவான கருத்துக்களை நியாயமான கருத்துக்கள் என்று கூறி வருகின்றார்கள். ஆனால் அதில் விசித்திரம் என்னவென்றால் மக்களிடம் மீண்டும் ஒருமுறை வாக்குக் கேட்கச் செல்கையில் தாம் முன்னர் குறிப்பிட்ட அதே ‘தீவிரமான’ கருத்துக்களையே மேலும் வலியுறுத்துகின்றார்கள். தமது புதிய சிந்தனைகளை மக்கள் முன் தேர்தல் காலங்களில் வெளிக்கொண்டு வருகின்றார்கள் இல்லை. இது ஏமாற்று வித்தை அல்லவா?

என்னைப் பொறுத்த வரையில் நான் 133000 த்துக்கு மேலான மக்கள் தந்த ஆணையை மதிப்பவன். அவர்களின் எதிர்பார்ப்புக்கு முரண்படாத வகையிலேயே எனது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றேன். எம்முள் சிலர் நடைமுறையில் பின்பற்றும் பாதைக்கு புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருப்பவை முரண்பாடுடையதாகவிருப்பதே அவர்களின் தற்போதைய பாதை நியாயமான தீர்வை நோக்கி நகரும் பாதை அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதை அவர்களும் உணர்ந்துள்ளார்கள். ஆகவே தமிழர்களுக்கான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தே நான் என் பாதையில் செல்கின்றேன். நான் தீவிரவாதி அல்ல. தமது பிறழ்வான பாதையை நியாயமான பாதை என்று கூறுவோரே என்னைத் தீவிரப் போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு பெரும்பான்மையினத்தவரிடம் கூறுபவர்களும் அவர்களே. அதைக் கேட்டு பெரும்பான்மையினரும் அவ்வாறே குறிப்பிடுகின்றார்கள்.

இதை இலக்கங்கள் மூலம் விளங்கப்படுத்துகின்றேன். எமது தற்போதைய நிலைமையை பூஜ்யம் ‘0’ என்று வைத்துக் கொள்வோம். பூரண சமஷ்டி, சுயாட்சி, வட கிழக்கு இணைப்பே நாம் செல்லும் வழியின் கடைசிக் குறிக்கோளாக வைத்து அதனை ‘100’ என்று இலக்கமிடுவோம். ‘0’இல் இருந்து ‘100’ நோக்கிச் செல்லும் எதுவுமே நியாயமான கோரிக்கைகளே. அந்தக் கோரிக்கைகளை வெறும் வாய்ச் சொற்களாக முன்வைத்து அவை கிடைக்க மாட்டா என்ற எண்ணத்திலும் பெரும்பான்மை அரசியல் வாதிகளின் மனதில் இடம்பெறுவதற்காகவும் வேறு சில சில்லறைக் கோரிக்கைகளுக்கு சம்மதந் தெரிவிப்பது பிறழ்வான செயலாகும். அவற்றை நியாயமானதென்றோ நேர்மையானதென்றோ கூற முடியாது. நேர் வழியைத் தீவிரப் போக்கு என்றும் கூறமுடியாது. என் வழி தீவிரப் போக்குடையதல்ல என்று கூறுவதற்கு அத்தாட்சி அண்மைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் என் கருத்துக்களுக்குச் சார்பாகக் குறிப்பிட்ட விடயங்கள் ஆவன. ‘ஹெமின் ஹெமின்’ என்று சிங்களத்திலும் ‘Step by Step’ என்று ஆங்கிலத்திலும் கூறுவோர் உள்ளார்கள். அதாவது மெல்ல மெல்ல எமது உரித்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதே அவர்கள் கருத்து. நேர் வழியிலும் மெதுவாகச் செல்லலாம். ஆனால் பிறழ்வழியில் எவ்வளவு வேகமாகச் சென்றாலும் அந்த 100 இலக்கம் கொண்ட இடத்தை அடைய முடியாது. பிறழ் வழியில் சென்றால் எமது பிரச்சனைகளுந் தீரா.

அரசாங்கம் அவ்வாறான வழியில் செல்லப் பார்க்கலாம். அது அவர்களின் தேவைப்பாடு அல்லது சிந்தனை. ஆனால் எம்மவர் அதற்கு ஒப்புதல் அல்லது இசைவு கொடுத்து எமது நேர்வழிப் பயணத்தைத் தடை செய்வது துரோகமாகும். அரசாங்கம் தான் நினைத்தவாறு நடந்து கொள்வதாகவே இருக்க வேண்டுமேயொழிய நாம் சம்மதித்து எடுக்கப்பட்ட தீர்மானமாக இந்தப் பிறழ் வழி இருக்கக்கூடாது.

இடைக்கால அறிக்கைக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் நாட்டின் ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது முன்மொழிவுகளை முன்மொழிந்திருந்த நிலையில் ஆக்க பூர்வமான எந்த முன்மொழிவும் எமது கூட்டமைப்பால் ஆணித்தரமாக முன்வைக்கப்படவில்லை. வட மாகாணசபை, தமிழ் மக்கள் பேரவை ஆகியன முன்வைத்தன. ஆனால் வடமாகாணசபை முன்மொழிந்திருந்த தீர்வுத்திட்ட முன்மொழிவைக் கூட வலியுறுத்த எமது தலைவர்களுக்குத் திராணி இருக்கவில்லை போன்றே தோன்றுகின்றது அல்லது சுய நல காரணங்களுக்காக பெரும்பான்மை அரசியல் வாதிகளுடன் முரண்பட அவர்கள் விரும்பவில்லை என்றுங் கூறலாம். அவ்வாறு நடந்து கொண்டமை எமது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகும்.

யுத்தத்தின் பின்னர் எமது மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு விடய அணுகுமுறையில் நாம் பாரிய தவறிழைத்தோமோ என்று எண்ண வேண்டியுள்ளது. இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பது குறித்து எமது மக்கள் தேர்தல்களின் போது ஏற்றுக் கொண்ட அந்த அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஒரு பேச்சு வார்த்தையை ஏற்படுத்தாமல் அரசாங்கத்துடன் இணைந்து அரசியலமைப்பு மாற்றத்திற்குள் இனப் பிரச்சனைக்கான தீர்வையும் கொண்டு சென்றதன் மூலம் தமிழ் மக்களின் பேரம் பேசுஞ் சக்தி முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது என்றே கூறலாம். இதை முன்னர் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன செய்தார். தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு எனக் கொண்டுவந்த 13வது திருத்தச் சட்டத்தை நாடு பூராகவும் ஏற்புடையதாக்கிவிட்டார். இதனால் நாம் எதனையும் கூற வந்தால் மற்றவர் எவரும் அதைக் கேட்கவில்லையே என்று கூறி எமது தனித்துவத்தை அழித்துவிட்டார்.

அதே போல சர்வதேச சமூகங்களின் கைகளில் இருந்து எமது அரசியல்த் தீர்வும் போர்க்குற்ற விசாரணையும் விடுபட்டு இன்று இலங்கைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம். வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவம் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும் என்று சர்வதேச ரீதியாக கூறப்பட்டு வந்த கோரிக்கைகள் இன்று தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையாக எம்மவர்களினாலேயே மாற்றப்பட்டுள்ளது. இதன் எதிரொலி தான் வட கிழக்கில் நடைபெறும் தற்போதைய தொடர் சிங்களக் குடியேற்றங்கள்.

இன்று (04.02.2018) உதயன் பத்திரிகையில் ஒரு செய்தி வாசித்தேன். ‘வட கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையா? வடக்கு கிழக்கை இணைப்பதும் சிரமம் – ரணில்’ என்றிருந்தது. அவர் கூறியது ‘கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை. வடக்கில் பெரும்பான்மையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே வட கிழக்கைப் பலவந்தமாக இணைக்க முடியாது’ என்பதே. ஒற்றையாட்சிக்குப் பாதகமில்லாத முறையில் தீர்வு இருக்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். எம்மவர் வேறு கதைகள் கூறுகின்றார்கள். ‘ஏகிய இராஜ்ய’ என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அவர் பேசுகின்றார். அதற்கு வலிந்து பிற கருத்துக்களை எம்மவர் கொடுக்கின்றார்கள். ‘எக்சத்’ என்பதே எமது தேர்வு என்று கூற எம்மவர் பயப்படுகின்றார்கள். தமிழர்கள் கிழக்கில் பெரும்பான்மையாக இல்லை என்பது பிரதமரின் கருத்து. தமிழ்ப் பேசும் மக்களே கிழக்கில் இப்பொழுதும் பெரும்பான்மையினர் என்பதே உண்மை. வடக்கில் தமிழர்கள் தான் பெரும்பான்மையோ என்பது தமக்குத் தெரியாதென்கின்றார். அவரின் கூற்றுப்படி சிங்கள இராணுவத்தினரும் முஸ்லீம்களுஞ் சேர்ந்து கிட்டத்தட்ட தமிழ் மக்களின் தொகையை எட்டிவிட்டார்கள் போல் கருத்துப்படுகிறது அல்லது விரைவில் தமிழர்களுக்கு மிஞ்சிய தொகையை பிறர் சேர்ந்து அடைவார்கள் என்றும் கருத்துப்படலாம்.

எமது இன முரண்பாட்டுத் தீர்வு கரவான எண்ணங்களுடனான மோசடிச் சிந்தனையுள்ளவர்கள் கையில் அகப்பட்டிருப்பதால்த்தான் எமக்கு விடிவு காலமே வராத ஒரு நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கின்றோம். நாம் கூறும் பாதை நியாயமானதும்இ நாட்டுக்கு நன்மையைச் செய்வதும்இ முற்று முழுதாக எமது இனப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரக் கூடியதுமானதொன்று. இதைத் தீவிரக் கொள்கை என்றால் வட கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் அல்லது அவர்களுள் பெரும்பான்மையினர் தீவிர வாதிகள் என்று ஆகிவிடுகின்றனர். ஏன் என்றால் அவர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு வாக்களித்தவர்கள். நான் நேர் வழியில் செல்வதை நாடகமாடுவதென்றால் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கெதிராகச் செல்பவர்கள் நாடகமே ஆடவில்லை என்று பொருளா? வட கிழக்கில் 1000 பௌத்த கோயில்களைக் கட்டுவது சம்பந்தமான பிரதமரின் கட்சிக் கருத்தைப் பற்றி எமது தலைவர்கள் எதுவுமே கூறவில்லை என்பதை கவனத்திற்கு எடுங்கள்.

கடைசியாக ‘நாடகம்’ பற்றி ஒரு கருத்து. நீங்கள் உங்கள் அறிவுக்கு ஏற்ப, சூழ் நிலைக்கு ஏற்ப சில கருத்துக்களை உங்கள் மனதினுள் வைத்திருக்கின்றீர்கள். சிங்களத்தில் பேசுவது தவறு, அதுவும் சிரித்துப் பேசுவது அதனிலுந் தவறு, மத்திய அரசாங்கத்திற்கு எதிரிடையான சிந்தனைகளைக் கொண்டிருந்தால் அது தீவிரவாதம் என்று பல கருத்துக்களை நீங்கள் உங்களுக்குள் உள்ளடக்கி வைத்துள்ளீர்கள். ஆனால் அவற்றிற்கு அப்பால் உண்மை இருக்கக் கூடும் என்பதை அறியாமல் இருக்கும் உங்கள் மீது பரிதாபமே எனக்குப் பிறக்கின்றது.

நீங்கள் கூறுவதில் இன்னொரு கருத்தும் உள்ளடங்கி இருப்பதை நான் காண்கின்றேன். அதாவது நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன். என்னால் எவ்வாறு வட கிழக்கு மக்களின் பிரச்சனைக்குத் தீர்வைக் காணமுடியும் அல்லது கொள்கைகளை முன்வைக்க முடியும் என்பதே அது. உள்நாட்டு வழக்குரைஞர்களின் போதாமை காரணமாக வெளிநாட்டு வழக்குரைஞர்களை சில வழக்குகளில் தெரிபட இலங்கைக்கு எம்மவர் அழைத்து வந்தமை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கு நிலபுலங்களை, உறவினர்களை வைத்திருக்கும் என்னை வேற்று மனிதன் என்று நீங்கள் கருதினால் வெளிநாட்டு வழக்குரைஞராக என்னை ஏற்றுக் கொள்ளலாமே? உள்ளுர் வழக்குரைஞர்கள் வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களை அதல பாதாளத்தினுள் தள்ளப் பார்க்கின்றார்கள் என்ற காரணத்தினாலோ என்னவோ வெளிநாட்டு வழக்குரைஞர் ஒருவர் கொண்டுவரப்பட்டுள்ளதாக எடுத்துக் கொள்ளுங்களேன்! கட்சிக்காரரின் வாதத்தை உண்மையாகவும் நேர்மையாகவும் மன்றில் முன்வைப்பதே வழக்குரைஞரின் கடமை. அதைத்தான் நான் செய்து வருகின்றேன். கட்சிக் காரருக்கு வஞ்சகமின்றி அதை நான் செய்து வருகின்றேன். நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. காரணம் நான் எதனையும் எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. தற்போதைய எனது ஒரேயொரு எதிர்பார்ப்பு எம் மக்களின் விமோசனம். எமது வருங்கால சந்ததியினர் தன்மானத்துடனும், மகிழ்வுடனும், செழிப்புடனும், தமது பாரம்பரிய இடங்களில் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதே எனது பேரவா!

நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/2018/65583/

  • கருத்துக்கள உறவுகள்
10-ம் திகதி உள்ளூராட்சி தேர்தல் முதலமைச்சர் அதிரடிப் பதில்
2018-02-07 18:36:05
16004.jpg
தமிழ் மக்களுக்கான தீர்வு களை முன்வைப்பதற்கு கூட்டமைப்பின் தலைவர்களுக்கு திராணி இல்லை என முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் சுயநல காரணங்களுக்காக பெரும்பான்மை அரசியல்வாதிகளுடன் முரண்படாமல் இருப்பது தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் செயல் எனவும் தெரி வித்துள்ளார்.
 
முதலமைச்சர் விக்னேஸ்வரன் வாராந்த கேள்வி-பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்ட சில விட யம் வருமாறு, 
 
கேள்வி:சிங்களவருடன் சுமுகமாகப் பேசுபவர் எவ்வாறு தீவிரமான கருத்துக்க ளைக் கொண்டிருக்கலாம்?
சிங்கள மக்களுடன் சுமுகமாகப்பேசும் ஒருவர் அவர்களுக்கு உண்மையை எடுத் துக் கூற முடியாதா?
சிங்களவருடன் சுமுகமாகப் பேசுபவர் எவ்வாறு தீவிரமான கருத்துக்களைக் கொண் டிருக்கலாம்?
சிங்கள மக்களுடன் சுமுகமாகப் பேசும் ஒருவர் அவர்களுக்கு உண்மையை எடுத் துக் கூற முடியாதா?
இடைக்கால அறிக்கைக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் நாட்டின் ஒவ்வொரு கட்சி களும் தத்தமது முன்மொழிவுகளை முன் மொழிந்திருந்த நிலையில் ஆக்க பூர்வமான எந்த முன்மொழிவும் எமது கூட்டமைப்பால் ஆணித்தரமாக முன்வைக்கப்படவில்லை.
வட மாகாணசபை, தமிழ் மக்கள் பேரவை ஆகியன முன்வைத்தன. ஆனால் வடமாகாண சபை முன்மொழிந்திருந்த தீர்வுத்திட்ட முன் மொழிவைக் கூட வலியுறுத்த எமது தலை வர்களுக்குத் திராணி இருக்கவில்லை போன்றே தோன்றுகின்றது அல்லது சுய நல காரண ங்களுக்காக பெரும்பான்மை அரசியல்வாதி களுடன் முரண்பட அவர்கள் விரும்ப வில்லை என்றும் கூறலாம். அவ்வாறு நட ந்து கொண்டமை எமது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகும்.
 
போரின் பின்னர் எமது மக்களின் பிரச்சி னைகளுக்கான தீர்வு விடய அணுகுமுறை யில் நாம் பெரும் தவறிழைத்தோமோ என்று எண்ண வேண்டியுள்ளது. இனப்பிரச்சினை க்கான தீர்வு என்ன என்பது குறித்து எமது மக்கள் தேர்தல்களின் போது ஏற்றுக் கொண்ட அந்த அடிப்படைக் கோரிக்கைகளை முன் வைத்து எமது மக்களின் வேணவாக்களை வெளிப்படுத்தும் ஒரு பேச்சுக்களை ஏற்படுத் தாமல் அரசுடன் இணைந்து அரசியலமை ப்பு மாற்றத்திற்குள் இனப் பிரச்சினைக்கான தீர்வையும் கொண்டு சென்றதன் மூலம் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி முற்றி லும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
 
வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவம் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும் என்று சர்வதேச ரீதியாக கூறப்பட்டு வந்த கோரிக்கைகள் இன்று தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையாக எம்மவர்களினா லேயே மாற்றப்பட்டுள்ளது. இதன் எதிரொலி தான் வட கிழக்கில் நடைபெறும் தற்போதைய தொடர் சிங்களக் குடியேற்றங்கள்.
கடந்த 4ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் ஒரு செய்தி வாசித்தேன். ‘வட கிழக்கில் தமி ழர்கள் பெரும்பான்மையா? வடக்கு கிழக்கை இணைப்பதும் சிரமம்-ரணில்’ என்றிருந்தது. அவர் கூறியது ‘கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை. வடக்கில் பெரும் பான்மையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே வட கிழக்கைப் பலவந்தமாக இணைக்க முடியாது’ என்பதே.
 
ஒற்றையாட்சிக்குப் பாதகமில்லாத முறை யில் தீர்வு இருக்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். எம்மவர் வேறு கதைகள் கூறுகின்றார்கள். ‘ஏகிய இராஜ்ய’ என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அவர் பேசுகின்றார். அதற்கு வலிந்து பிற கரு த்துக்களை எம்மவர் கொடுக்கின்றார்கள். ‘எக்சத்’ என்பதே எமது தேர்வு என்று கூற எம் மவர் பயப்படுகின்றார்கள். தமிழர்கள் கிழ க்கில் பெரும்பான்மையாக இல்லை என்பது பிரதமரின் கருத்து. ஆனால் தமிழ்ப் பேசும் மக் களே கிழக்கில் இப்பொழுதும் பெரும்பான் மையினர் என்பதே உண்மை.
 
வடக்கில் தமிழர்கள்தான் பெரும்பான் மையோ என்பது தமக்குத் தெரியாதென்கி ன்றார். அவரின் கூற்றுப்படி சிங்கள இரா ணுவத்தினரும் முஸ்லிம்களும் சேர்ந்து கிட்டத்தட்ட தமிழ் மக்களின் தொகையை எட்டிவிட்டார்கள் போல் கருத்துப்படுகிறது அல்லது விரைவில் தமிழர்களுக்கு மிஞ்சிய தொகையை பிறர் சேர்ந்து அடைவார்கள் என்றும் கருத்துப்படலாம்.
 
வட கிழக்கில் 1000 பௌத்த கோயில்க ளைக் கட்டுவது சம்பந்தமான பிரதமரின் கட் சிக் கருத்தைப் பற்றி எமது தலைவர்கள் எது வுமே கூறவில்லை என்பதை கவனத்திற்கு எடுங்கள் என தெரிவித்தார்.              
  • தொடங்கியவர்
  • நான் நடிக்கவில்லை – முதலமைச்சர் விக்கி
vigneswaran-ilankai-oneofcm.jpg

நான் நடிக்கவில்லை – முதலமைச்சர் விக்கி

தமிழ் மக்­க­ளது நிலைப்­பா­டு­களை எடுத்­தி­யம்­பிக்­கொண்டு, சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளு­டன் சிரித்­துப் பேசி நான் நடிக்­க­வில்லை என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

வடக்கு முத­ல­மைச்­ச­ரால் வழ­மை­யாக வெளி­யி­டப்­ப­டும், கேள்வி, பதில் அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.
‘நீங்­கள் அரச தலை­வ­ரு­ட­னும் வேறு சில கொழும்பு அர­சின் அமைச்­சர்­க­ளு­ட­னும் சிங்­க­ளத்­தில் மிக அன்­னி­யோன்­ய­மாக சிரித்­துப் பேசு­வ­தைக் கண்­டி­ருக்­கின்­றோம். ஆனால் உங்­கள் அர­சி­யல் கருத்­துக்­கள் மிகத் தீவி­ர­மாக இருக்­கின்­ற­னவே? இது ஒரு நாட­கமா?’ என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு வழங்­கி­யுள்ள பதி­லில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஏமாற்று வித்தை

என் சிந்­த­னை­கள் தீவி­ர­மா­னவை என்று யார் சொன்­னது? எம்­மு­டைய சில அர­சி­யல்­வா­தி­கள் பெரும்­பான்மை அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்து தனிப்­பட்ட நன்­மை­க­ளைப் பெறத் தாம் கூறு­ப­வையே நியா­ய­மான கருத்­துக்­கள் என்று பெரும்­பான்­மை­யி­ன­ரின் கருத்­துக்­க­ளுக்கு ஒத்த விதத்­தில் சில கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றார்­கள்.

 

தாம் கூறு­வது நியா­ய­மா­ன­தென்று அவர்­கள் நினைப்­ப­தால், அவற்றுக்கு அப்­பால் பேசு­ப­வர்­கள் யாவ­ரும் தீவி­ரப் போக்­கு­டை­ய­வர்­கள் என்று கூறி வரு­கின்­றார்­கள். தாம் மக்­க­ளி­டம் இருந்து பெற்ற ஆணை என்ன என்­பதை மறந்தே, பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு இசை­வான கருத்­துக்­களை நியா­ய­மான கருத்­துக்­கள் என்று கூறி வரு­கின்­றார்­கள். ஆனால் அதில் விசித்­தி­ரம் என்­ன­வென்­றால், மக்­க­ளி­டம் மீண்­டும் ஒரு­முறை வாக்­குக் கேட்­கச் செல்­கை­யில் தாம் முன்­னர் குறிப்­பிட்ட அதே ‘தீவி­ர­மான’ கருத்­துக்­க­ளையே வலி­யு­றுத்­து­கின்­றார்­கள். தமது புதிய சிந்­த­னை­களை மக்­கள் முன் தேர்­தல் காலங்­க­ளில் வெளிக்­கொண்டு வரு­கின்­றார்­கள் இல்லை. இது ஏமாற்று வித்தை அல்­லவா?

தேர்­தல் அறிக்கை
நடை­மு­றைப்­பா­தைக்கு முரண்

எம்­முள் சிலர் நடை­மு­றை­யில் பின்­பற்­றும் பாதைக்கு புதிய தேர்­தல் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருப்­பவை முரண்­பா­டு­டை­ய­தா­க­வி­ருப் பதே அவர்­க­ளின் தற்­போ­தைய பாதை நியா­ய­மான தீர்வை நோக்கி நக­ரும் பாதை அல்ல என்­பதை எடுத்­துக் காட்­டு­கின்­றது. இதை அவர்­க­ளும் உணர்ந்­துள்­ளார்­கள். தமி­ழர்­க­ளுக்­கான நியா­ய­மான கோரிக்­கை­களை முன்­வைத்தே நான் என் பாதை­யில் செல்­கின்­றேன். நான் தீவி­ர­வாதி அல்ல. தமது பிறழ்­வான பாதையை நியா­ய­மான பாதை என்று கூறு­வோரே என்­னைத் தீவி­ரப் போக்­கு­டை­ய­வர் என்று கூறு­கின்­றார்­கள்.

தவ­றான பாதை

எமது தற்­போ­தைய நில­மையை சுழி­யம் (0) என்று வைத்­துக் கொள்­வோம். முழு­மை­யான கூட்­டாட்சி, சுயாட்சி, வட கிழக்கு இணைப்பே நாம் செல்­லும் வழி­யின் கடை­சிக் குறிக்­கோ­ளாக வைத்து அதனை ‘100’ என்று இலக்­க­மி­டு­வோம்.

சுழி­யத்­தி­லி­ருந்து நூறு நோக்­கிச் செல்­லும் எது­வுமே நியா­ய­மான கோரிக்­கை­களே. அந்­தக் கோரிக்­கை­களை வெறும் வாய்ச் சொற்­க­ளாக முன்­வைத்து அவை கிடைக்க மாட்டா என்ற எண்­ணத்­தி­லும் பெரும்­பான்மை அர­சி­யல் வாதி­க­ளின் மன­தில் இடம்­பெ­று­வ­தற்­கா­க­வும் வேறு சில சில்­ல­றைக் கோரிக்­கை­க­ளுக்கு சம்­ம­தந் தெரி­விப்­பது பிறழ்­வான செய­லா­கும். அவற்றை நியா­ய­மா­ன­தென்றோ நேர்­மை­யா­ன­தென்­றோ­கூற முடி­யாது. நேர் வழி­யைத் தீவி­ரப் போக்கு என்­றும் கூற­மு­டி­யாது.

என் வழி தீவி­ரப் போக்­கு­டை­ய­தல்ல என்று கூறு­வ­தற்கு அத்­தாட்சி அண்­மைய தேர்­தல் அறிக்­கை­யில் என் கருத்­துக்­க­ளுக்­குச் சார்­பா­கக் குறிப்­பிட்ட விட­யங்­கள் ஆவன. மெல்ல மெல்ல எமது உரித்­துக்­க­ளைப் பெற்­றுக் கொள்­ள­லாம் என்­பதே அவர்­கள் கருத்து. நேர் வழி­யி­லும் மெது­வா­கச் செல்­ல­லாம்.

ஆனால் பிறழ்­வ­ழி­யில் எவ்­வ­ளவு வேக­மா­கச் சென்­றா­லும் அந்த 100 இலக்­கம் கொண்ட இடத்தை அடைய முடி­யாது. பிறழ் வழி­யில் சென்­றால் எமது பிரச்­சி­னை­க­ளும் தீரா.
அரசு அவ்­வா­றான வழி­யில் செல்­லப் பார்க்­க­லாம். அது அவர்­க­ளின் தேவைப்­பாடு அல்­லது சிந்­தனை. ஆனால் எம்­ம­வர் அதற்கு ஒப்­பு­தல் அல்­லது இசைவு கொடுத்து எமது நேர்­வ­ழிப் பய­ணத்­தைத் தடை செய்­வது துரோ­க­மா­கும்.

கூட்­ட­மைப்­புக்கு திராணி இல்லை

இடைக்­கால அறிக்­கைக்­கான தயா­ரிப்பு நட­வ­டிக்­கை­க­ளில் நாட்­டின் ஒவ்­வொரு கட்­சி­க­ளும் தத்­த­மது முன்­மொ­ழி­வு­களை முன்­மொ­ழிந் தி­ருந்த நிலை­யில் ஆக்­க­பூர்­வ­மான எந்த முன்­மொ­ழி­வும் எமது கூட்­ட­மைப்­பால் ஆணித்­த­ர­மாக முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. வட மாகா­ண­சபை, தமிழ் மக்­கள் பேரவை ஆகி­யன முன்­வைத்­தன.

ஆனால் வட­மா­கா­ண­சபை முன்­மொ­ழிந்­தி­ருந்த தீர்­வுத்­திட்ட முன்­மொ­ழி­வைக் கூட வலி­யு­றுத்த எமது தலை­வர்­க­ளுக்­குத் திராணி இருக்­க­வில்லை போன்றே தோன்­று­கின்­றது அல்­லது சுய நல கார­ணங்­க­ளுக்­காக பெரும்­பான்மை அர­சி­யல் வாதி­க­ளு­டன் முரண்­பட அவர்­கள் விரும்­ப­வில்லை என்­றும்­கூ­ற­லாம். அவ்­வாறு நடந்து கொண்­டமை எமது மக்­களை ஏமாற்­றும் ஒரு செய­லா­கும்.

பேச்சு நடத்­தி­யி­ருக்­க­லாம்

இனப்­பி­ரச்­ச­னைக்­கான தீர்வு என்ன என்­பது குறித்து எமது மக்­கள் தேர்­தல்­க­ளின் போது ஏற்­றுக் கொண்ட அந்த அடிப்­ப­டைக் கோரிக்­கை­களை முன்­வைத்து எமது மக்­க­ளின் வேண­வாக்­களை வெளிப்­ப­டுத்­தும் ஒரு பேச்சு ஏற்­ப­டுத்­தா­மல் அர­சு­டன் இணைந்து அர­ச­மைப்பு மாற்­றத்துக்குள் இனப் பிரச்­ச­னைக்­கான தீர்­வை­யும் கொண்டு சென்­ற­தன் மூலம் தமிழ் மக்­க­ளின் பேரம் பேசும் சக்தி முற்­றி­லும் இல்­லா­மல் செய்­யப்­பட்­டுள்­ளது என்றே கூற­லாம். இதை முன்­னர் ஜே.ஆர்.ஜய­வர்த்­தன செய்­தார்.

தமி­ழர் பிரச்­ச­ினைக் குத் தீர்வு எனக் கொண்­டு­வந்த 13ஆவது திருத்­தச் சட்­டத்தை நாடு முழு­வ­தும் ஏற்­பு­டை­ய­தாக்­கி­விட்­டார். இத­னால் நாம் எத­னை­யும் கூற வந்­தால் மற்­ற­வர் எவ­ரும் அதைக் கேட்­க­வில்­லையே என்று கூறி எமது தனித்­து­வத்தை அழித்­து­விட்­டார்.

அதே போல பன்­னாட்­டுச் சமூ­கங்­க­ளின் கைக­ளில் இருந்து எமது அர­சி­யல் தீர்­வும் போர்க்­குற்ற விசா­ர­ணை­யும் விடு­பட்டு இன்று இலங்­கைக்­குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையை அவ­தா­னிக்­க­லாம். வடக்­குக் கிழக்­கில் இருந்து இரா­ணு­வம் முற்­றி­லு­மாக வெளி­யேற்­றப்­பட வேண்­டும் என்று பன்­னாட்­டுத் ரீதி­யாக கூறப்­பட்டு வந்த கோரிக்­கை­கள் இன்று தனி­யார் காணி­க­ளில் இருந்து இரா­ணு­வம் வெளி­யேற வேண்­டும் என்ற கோரிக்­கை­யாக எம்­ம­வர்­க­ளி­னா­லேயே மாற்­றப்­பட்­டுள்­ளது. இதன் எதி­ரொலி தான் வட கிழக்­கில் நடை­பெ­றும் தற்­போ­தைய தொடர் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள்.

ஒற்­றை­யாட்சி

கடந்த 4ஆம் திகதி உத­யன் பத்­தி­ரி­கை­யில் ஒரு செய்தி வாசித்­தேன். ‘வட – கிழக்­கில் தமி­ழர்­கள் பெரும்­பான்­மையா? வடக்கு கிழக்கை இணைப்­ப­தும் சிர­மம் – ரணில்’ என்­றி­ருந்­தது. அவர் கூறி­யது ‘கிழக்­கில் தமிழ் மக்­கள் பெரும்­பான்­மை­யாக இல்லை. வடக்­கில் பெரும்­பான்­மையா என்று எனக்­குத் தெரி­ய­வில்லை. ஆகவே வட கிழக்­கைப் பல­வந்­த­மாக இணைக்க முடி­யாது’ என்­பதே. ஒற்­றை­யாட்­சிக்­குப் பாத­க­மில்­லாத முறை­யில் தீர்வு இருக்க வேண்­டும் என்று அவர் திட்­ட­வட்­ட­ மா­கக் கூறி­யுள்­ளார். எம்­ம­வர் வேறு கதை­கள் கூறு­கின்­றார்­கள்.

‘ஏகிய இராஜ்ய’ என்­ப­தன் அர்த்­தத்­தைப் புரிந்து கொண்டு அவர் பேசு­கின்­றார். அதற்கு வலிந்து பிற கருத்­துக்­களை எம்­ம­வர் கொடுக்­கின்­றார்­கள். ‘எக்­சத்’ என்­பதே எமது தேர்வு என்று கூற எம்­ம­வர் பயப்­ப­டு­கின்­றார்­கள். தமி­ழர்­கள் கிழக்­கில் பெரும்­பான்­மை­யாக இல்லை என்­பது ரணி­லின்; கருத்து. தமிழ்ப் பேசும் மக்­களே கிழக்­கில் இப்­பொ­ழு­தும் பெரும்­பான்­மை­யி­னர் என்­பதே உண்மை. வடக்­கில் தமி­ழர்­கள் தான் பெரும்­பான்­மையோ என்­பது தமக்­குத் தெரி­யா­தென்­கின்­றார்.

அவ­ரின் கூற்­றுப்­படி சிங்­கள இரா­ணு­வத்­தி­ன­ரும் முஸ்­லீம்­க­ளும் சேர்ந்து கிட்­டத்­தட்ட தமிழ் மக்­க­ளின் தொகையை எட்­டி­விட்­டார்­கள் போல் கருத்­துப்­ப­டு­கி­றது. அல்­லது விரை­வில் தமி­ழர்­க­ளுக்கு மிஞ்­சிய தொகையை பிறர் சேர்ந்து அடை­வார்­கள் என்­றும் கருத்­துப்­ப­ட­லாம்.

விடிவு வராத நிலை

எமது இன முரண்­பாட்­டுத் தீர்வு, கர­வான எண்­ணங்­க­ளு­ட­னான மோச­டிச் சிந்­த­னை­ யுள்­ள­வர்­கள் கையில் அகப்­பட்­டி­ருப்­ப­தால் தான் எமக்கு விடிவு காலமே வராத ஒரு நிலையை நோக்கி நாம் சென்று கொண்­டி­ருக்­கின்­றோம்.

நாம் கூறும் பாதை நியா­ய­மா­ன­ தும், நாட்­டுக்கு நன்­மை­யைச் செய்­வ­தும், முற்று முழு­தாக எமது இனப்­பி­ரச்­சி­னையை முடி­வுக்கு கொண்­டு­வ­ரக் கூடி­ய­து­மா­ன ­தொன்று. இதைத் தீவி­ரக் கொள்கை என்­றால் வட கிழக்கு மாகாண மக்­கள் அனை­வ­ரும் அல்­லது அவர்­க­ளுள் பெரும்­பான்­மை­யி­னர் தீவி­ர­வா­தி­கள் என்று ஆகி­வி­டு­கின்­ற­னர்.

ஏன் என்­றால் அவர்­களே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தேர்­தல் அறிக்­கைக்கு வாக்­க­ளித்­த­வர்­கள். நான் நேர் வழி­யில் செல்­வதை நாட­க­மா­டு­வ­தென்­றால் மக்­க­ளின் எதிர்­பார்ப்­பு­க­ளுக்­கெ­தி­ரா­கச் செல்­ப­வர்­கள் நாட­கமே ஆட­வில்லை என்று பொருளா? வட – கிழக்­கில் ஆயி­ரம் பௌத்த விகாரைகளைக் கட்­டு­வது சம்­பந்­த­மான ரணி­லின் கட்­சிக் கருத்­தைப் பற்றி எமது தலை­வர்­கள் எது­வுமே கூற­வில்லை என்­பதை கவ­னத்துக்கு எடுங்­கள்.

என்­கட்சி வாதத்தை முன்­வைக்­கின்­றேன்

நான் கொழும்­பில் பிறந்து வளர்ந்­த­வன். என்­னால் எவ்­வாறு வட கிழக்கு மக்­க­ளின் பிரச்­ச­னைக்­குத் தீர்­வைக் காண­மு­டி­யும் அல்­லது கொள்­கை­களை முன்­வைக்க முடி­யும் என்­பதே அது. உள்­நாட்டு சட்­டத்­த­ர­ணி­க­ளின் போதாமை கார­ண­மாக வெளி­நாட்டு சட்­டத்­த­ர­ணி­களை சில வழக்­கு­க­ளில் தெரி­பட இலங்­கைக்கு எம்­ம­வர் அழைத்து வந்­தமை பற்­றிக் கேள்­விப்­பட்­டி­ருப்­பீர்­கள்.

இங்கு நில­பு­லங் களை, உற­வி­னர்­களை வைத்­தி­ருக்­கும் என்னை வேற்று மனி­தன் என்று நீங்­கள் கரு­தி­னால் வெளி­நாட்டு சட்­டத்­த­ர­ணி­யாக என்னை ஏற்­றுக் கொள்­ள­லாமே? உள்­ளூர் சட்­டத்­த­ர­ணி­கள் வடக்­குக் கிழக்­குத் தமிழ் பேசும் மக்­களை அதல பாதா­ளத்­தி­னுள் தள்­ளப் பார்க்­கின்­றார்­கள் என்ற கார­ணத்­தி­னாலோ என்­னவோ வெளி­நாட்டு சட்­டத்­த­ரணி ஒரு­வர் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தாக எடுத்­துக் கொள்­ளுங்­க­ளேன்!

கட்­சிக்­கா­ர­ரின் வாதத்தை உண்­மை­யா­க­வும் நேர்­மை­யா­க­வும் மன்­றில் முன்­வைப்­பதே சட்­டத்­த­ர­ணி­யின் கடமை. அதைத்­தான் நான் செய்து வரு­கின்­றேன். கட்­சிக்­கா­ர­ருக்கு வஞ்­ச­க­மின்றி அதை நான் செய்து வரு­கின்­றேன். நடிக்க வேண்­டிய அவ­சி­யம் எனக்­கில்லை. கார­ணம் நான் எத­னை­யும் எதிர்­பார்த்து அர­சி­ய­லுக்கு வர­வில்லை. தற்­போ­தைய எனது ஒரே­யொரு எதிர்­பார்ப்பு எம் மக்­க­ளின் விமோ­ச­னம் -– என்­றுள்­ளது.

http://newuthayan.com/story/67368.html

  • தொடங்கியவர்

முதலமைச்சர் மீது மாவை திடீர் பாச்சல்!

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து தலைமையை மாற்ற வேண்டும் என்பவர்களுக்கு பலம் சேர்ப்பதாக வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில், “மாற்றுத் தலைமை எது? அவர்கள் கொள்கை மற்றும் இலக்கை அடைந்திட வழிமுறையென்ன என்பதை முதலமைச்சர் அறிவிக்கத் தவறி வருகிறார். இந்நிலைப்பாட்டினால் தமிழ் மக்களை ஓர் அனாதரவான நிலைக்குத் தள்ளுகின்றார்.

உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில் எதிர்வரும் பத்தாம் திகதி வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பரப்புரைகள் நிறைவடையும் தருணத்தில் வடக்கு முதலமைச்சர் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பலவீனமான தலைமைகளினால் தமிழர் உரிமைகளுக்கு ஆபத்து” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தேர்தல்கள் வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிகத் தெளிவாக தங்கள் ஒற்றுமையையும் பலத்தையும் நிரூபித்து வந்துள்ளனர். 2015 பொதுத் தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டிருந்த தேர்தல் அறிக்கைக்கு தமிழ் மக்கள் மிகப் பெருமளவில் ஒற்றுமையாக வாக்களித்து தங்களை தாங்களே ஆளுவதற்கான அரசியல் தீர்வுக்கும் போரினால் அழிந்துபோன எம் தமிழ் தேசத்தையும் சிதைந்து போன தமிழ் மக்களையும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் அதற்குப் பொருத்தமான பிரதிநிதிகளையும் தலைமையையும் தெரிவு செய்துள்ளனர்.

 அத்தேர்தலில் முன்வைத்த கொள்கை, கோட்பாடு அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் பிரதேசமும் மக்களும் விடுதலையும், விடிவும் பெற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு ஆணை தந்திருக்கிறார்கள். 2015 பொதுத் தேர்தலின் போதும் இதே வடக்கு முதலமைச்சர் “வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் மக்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும்” என அறிக்கையிட்டார். அதன் அர்த்தம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சின்னமான “வீடு” அதற்குள்ளிருந்து மக்களை வெளியேறி வேறு கட்சிச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சொல்கிறார். இது உண்ட வீட்டிற்கு இரண்டகம்” செய்கிறார் என்றே மக்கள் அவ நம்பிக்கையை வெளியிட்டனர். மக்கள் தெளிவாக பலமாகப் அத் தேர்தலில் வாக்களித்தனர்.

இப்பொழுதும் அதே போன்று ஒற்றுமையாக, பலமாக இருக்கும் மக்களையும், தலைமையையும் பிளவுபடுத்தி, குழப்பி, பலவீனப்படுத்தி தமிழ்த் தலைமையை பலவீனப்படுத்துவது அல்லது தோற்கடிப்பது என்ற நோக்கிலேயே வடக்கு முதலமைச்சர் திட்டமிட்டுச் செயல்படுகிறார் என்றே மக்கள் எண்ணுகின்றனர்.

நேற்று வரை அமைதியாக இருப்பதைப் போல பாசாங்கு பண்ணி விட்டு, அறிக்கையின் ஆரம்பத்தில் அரசியல் கருத்துக்களை தேர்தல் காலத்தில் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு, முற்று முழுதாக கபடத்தனமாக, எதிர்வரும் தேர்தலையே இலக்கு வைத்து விடுத்த அறிக்கையை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும்.

வடக்கு முதலமைச்சர் இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்கிறார். அதே வேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து தலைமையை மாற்ற வேண்டும் என்போருக்கும் பலம் சேர்க்கின்றார். முதலமைச்சர் மாற்றுத் தலைமை எது, அவர்கள் கொள்கை, இலக்கு வழிமுறை என்ன?அவ்விலக்கை அடைந்திட வழிமுறையென்ன என்பதை அறிவிக்கத் தவறி வருகிறார். இந் நிலைப்பாட்டினால் தமிழ் மக்களை ஓர் அனாதரவான அவலநிலைக்குத் தள்ளுகின்றார்.

தெற்கில் முதலமைச்சர்கள், “புதிய அரசியலமைப்பு வரவேண்டும், (அ) சட்டம் ஒழுங்கு (ஆ) காணி அதிகாரம் (இ) நிதி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு முழுமையாகப் பகிரப்பட வேண்டும், பகிரப்பட்ட அதிகாரங்களை மத்தி மீளப் பெறமுடியாத பாதுகாப்பு அரசியலமைப்பில் இடம்பெறவேண்டுமென பாராளுமன்ற வழிகாட்டும் குழு (steering committee) முன் வாதாடி ஏற்க வைத்துள்ளனர். ஆளுனரே வேண்டாம் என்றார்கள்.

தமிழ் மக்கள் பேரவையில் முதலமைச்சரின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தில் அரசின் தன்மை (Nature of State) ஒன்றித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு என்றால் இடைக்கால அறிக்கையில் “ஒருமித்த நாட்டுக்குள்” என்று வருவது மேலானது.

இடைக்கால அறிக்கை என்பது இதுவரை பாராளுமன்றத்தில் பல கட்சிகளின் தலைவர்களால் இடம்பெறும் வழிகாட்டல் குழுவில் ஏற்கப்பட்டதும், இணக்கம் காணப்பட்டதும் இணக்கம் காணப்பட வேண்டியதுமானதே. அது ஓர் இறுதித் தீர்வுத் திட்டமல்ல என்றும், ஒற்றையாட்சியமைப்பில் “unitary state” என்றால் அது இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது அதனை ஒருபொழுதும் ஏற்கமாட்டோம் என்று த.தே.கூட்டமைப்புத் தலைமை தெளிவாகவும் உறுதிபடவும் அறிவித்திருப்பதை ஏன் முதலமைச்சர் மறுதலித்து நிற்க வேண்டும்?

“தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை உருவாக்குவது என்பது 2002 ஒஸ்லோ உடன்பாட்டின் படி சமஷ்டிக் கட்டமைப்பு (Federal Structure) ஒன்றினுள்ளே தான் நாம் அரசியல் தீர்வை உருவாக்குவோம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றோம். அதை நிறைவேற்றுவதற்கு மீண்டும் த.தே.கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

http://www.ujirppu.com/?p=25508

9 hours ago, பெருமாள் said:

சுயநல காரணங்களுக்காக பெரும்பான்மை அரசியல்வாதிகளுடன் முரண்படாமல் இருப்பது தமிழர்களுக்கு துரோகம்

சம்மந்தன், சுமந்திரன், மாவை, சித்தார்த்தன், சரவணபவன் போன்றவர்கள் இதில் அடக்கம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.