Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் இருந்து தனுஷ்கோடி சென்ற குடும்பத்துக்கு சிக்கல்

Featured Replies

மன்னாரில் இருந்து தனுஷ்கோடி சென்ற குடும்பத்துக்கு சிக்கல்

 

 

பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்ற குடும்பத்தார்களிடம் பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. 

1_Refugees.JPG

தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில், இன்று (8) அதிகாலை பலத்த பாதுகாப்பையும் மீறி  இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து ‘ஃபைபர்கிளாஸ்’ படகில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரிடம் உளவுத்துறை, கியூ பிரிவு, சுங்கத்துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த நிரோஷன் (28), ஒன்பது மாத கர்ப்பிணியான அவரது மனைவி மேரிஸ்டெல்லா (23), அவர்களது குழந்தை ஜெஸ்மின் (5) மற்றும் சகோதரர் ரீகன் ஆகியோரே இவ்வாறு தனுஷ்கோடி சென்றவர்களாவர்.

யுத்த காலப் பகுதியில், 1990ஆம் ஆண்டு மண்டபம் முகாமில் அகதிகளாகத் தங்கியிருந்த இவர்கள், 2012ல் பாஸ்போர்ட் மூலம் இலங்கை திரும்பியுள்ளனர்.  

இங்கு வர்ணப்பூச்சு வேலைகளில் ஈடுபட்டு வந்த நிரோஷன், குடும்பச் செலவுக்குப் போதிய பணம் இன்றித் தவித்து வந்ததாகவும் மனைவி குழந்தை பிரசவிக்க இருக்கும் நிலையில், மீண்டும் அகதி முகாமுக்கே சென்றுவிடத் தீர்மானித்து அறுபதாயிரம் ரூபா பணம் செலுத்தி தனுஷ்கோடிக்கு படகில் சென்று சேர்ந்ததாகவும் நிரோஷன் தெரிவித்துள்ளார்.

கடவுச் சீட்டுகளின்றி சட்ட விரோதமாக நாட்டினுள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் நான்கு பேரும் இராமேஸ்வரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

http://www.virakesari.lk/article/30381

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் இலங்கையில் தமிழர் நிர்வாகம் இருந்தபோது தமிழ்நாட்டிலிருந்தும் மக்கள் பஞ்சம்பிழைக்க இலங்கை வந்தனர். தற்போது இலங்கையர் பஞ்சம்பிழைக்க தமிழ்நாடு செல்வதானது, தமிழ்நாட்டில் தமிழர் நிர்வாகம் தலையெடுத்து வருவதுபோல் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

முன்பெல்லாம் இலங்கையில் தமிழர் நிர்வாகம் இருந்தபோது தமிழ்நாட்டிலிருந்தும் மக்கள் பஞ்சம்பிழைக்க இலங்கை வந்தனர். தற்போது இலங்கையர் பஞ்சம்பிழைக்க தமிழ்நாடு செல்வதானது, தமிழ்நாட்டில் தமிழர் நிர்வாகம் தலையெடுத்து வருவதுபோல் தெரிகிறது. 

இந்தியாவின் தனிநபர் வருமானம் $6,000.... இலங்கையின் தனிநபர் வருமானம் $12,000.... 

இவர் போனதுக்கு பல காரணங்கள் இருக்கலாம். வசதி இல்லாதவர் 60,000 ரூபாயை எங்கிருந்து வாங்கினார்?

இதுக்கு முதலும் ஒரு குடும்பம் போய்.... பிறகு பார்த்தால்... பல மோசடி தொடர்பில்... சாவகச்சேரி நீதிமன்ற கோரிக்கையில் அவர்கள் திருப்பி அனுப்பப் பட்டார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.