Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வு கிட்டும்வரை அரசுடன் இணையமாட்டோம்- சுமந்திரன்

Featured Replies

தீர்வு கிட்டும்வரை அரசுடன் இணையமாட்டோம்- சுமந்திரன்

 

 

தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்வரை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் பெரும் குழப்பநிலை நிலவிவருகின்ற நிலையில், கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமா என்ற ஊடகங்களின் விமர்சனம் குறித்து ஆதவனுக்கு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இருப்பினும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்போக்கான முறையில் நடவடிக்கை எடுக்கும் அரச தரப்பிற்கு, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு தாம் ஆதரவு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் பிரதான கட்சிகளை பின்தள்ளி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியை பதிவுசெய்யது.

இதனை தொடர்ந்து தேசிய அரசாங்கத்தில் பெரும் குழப்பநிலை தோற்றம் பெற்றுள்ள நிலையில், ஐ.தே.க. தனியாக ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஐ.தே.க. தனித்து ஆட்சியமைக்க இன்னும் எட்டு உறுப்பினர்கள் தேவையான நிலையில், கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஐ.தே.க தரப்பு தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/?p=621114-தீர்வு-கிட்டும்வரை-அரசுடன்-இணையமாட்டோம்--சுமந்திரன்

  • தொடங்கியவர்

கூட்­டாட்சி அமைப்­பது குறித்து ஐ.தே.க.வுடன் பேச­வில்லை

3-094b046bdd1fb27c2504b19e3b4ca3bfbea4376b.jpg

 

முற்­போக்கு சிந்­தனை கொண்ட அர­சாங்­கத்தை எதிர்க்­கட்­சியில் இருந்து ஆத­ரிப்போம்  என்­கி­றது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு

(ஆர்.யசி)

கூட்­டாட்சி அமைப்­பது குறித்து ஐக்­கிய தேசியக் கட்சி எம்­முடன் எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­த­ரத்­தீர்வு பெற்­றுக்­கொள்ளும் வரையில் எந்­த­வொரு அர­சாங்­கத்­தையும் ஆத­ரிக்­கப்­போ­வ­து­மில்லை என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.  

ஆனால் முற்­போக்கு சிந்­த­னை­யுடன் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களில் அக்­கறை செலுத்தும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்க்­கட்­சியில் இருந்­து­கொண்டே ஆத­ரவை வழங்­கவும் தயார் எனவும் அக்­கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எ. சுமந்­திரன் குறிப்­பிட்டார்.

 ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனித்து ஆட்­சி­ய­மைக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்க இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக வெ ளிவரும் தக­வல்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எ. சுமந்­திரன் மேலும் குறிப்­பி­டு­கையில் தேசிய அர­சாங்­கத்தின் எந்­த­வொரு கட்­சியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. அவ்­வாறு அர­சாங்­கத்­திற்கு எமது ஒத்­து­ழைப்பு அவ­சியம் என கருதும் நிலை­யிலும் நாம் எமது நிலைப்­பாட்டில் இருந்­து­கொண்டே தீர்­மா­னங்­களை எடுப்போம். 

குறிப்­பாக தேசிய இனப்­பி­ரச்­சினை விட­யத்தில் மிகத்­தெ­ளி­வான தீர்வு ஒன்று எமக்கு அவ­சி­ய­மா­கின்­றது. அதே­போன்று தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை வெற்­றி­கொள்ளும் செயத்­திட்­டங்கள் அவ­சி­ய­மா­கின்­றன. ஆகவே எமக்­கான தீர்­வுகள் முழு­மை­யாக கிடைக்கும் வரையில் எந்­த­வொரு அர­சாங்­கத்­திலும் அங்கம் வகிக்கும் எண்ணம் எமக்கு இல்லை. எமது இந்த நிலைப்­பாட்டில் நாம் உறு­தி­யாக உள்ளோம்.  

அதே­போன்று இப்­போது அமைந்­துள்ள தேசிய அர­சாங்கம் போன்று முற்­போக்கு சிந்­த­னை­யுடன் தீர்­வுகள் குறித்து சிந்­திக்கும் அர­சாங்கம் உரு­வாகும் பட்­சத்­திலும் தமிழ் மக்­களின் நிலைப்­பா­டுகள் குறித்து அக்­கறை செலுத்தும் நிலை­மைகள் காணப்­படும் சூழ­லிலும் அவ்­வா­றான ஒரு அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்த எதிர்க்­கட்­சியில் இருந்­து­கொண்டு நாம் ஆத­ர­வினை வழங்­கவும் தயா­ராக உள்ளோம்.

 தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களில் மட்­டு­மல்­லாது நாட்டின் பிர­தான விட­யங்­க­ளி­லும்­கூட முற்­போக்கு சிந்­தனை கொண்ட அர­சாங்­கத்தை பல­ப­டுத்த எமது பங்­க­ளிப்­பினை நாம் வழங்­குவோம். ஐக்­கிய தேசியக் கட்­சி­யாக இருந்­தாலும் அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக இருந்­தாலும் அவர்­களின் தெளி­வான சிந்­த­னை­களின் அடிப்­ப­டையில் எமது நிலைப்­பாடு அமையும். மேலும் நல்ல விட­யங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தைப்­போல எமது இலக்­கினை அடைய, மக்­களின் உரி­மை­களை வெற்­றி­கொள்ள எதிர்­கட்­சியில் இருந்து எமது அழுத்­தங்­க­ளையும் வழங்­குவோம் என்றார்.

இது குறித்து இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா கூறு­கையில், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பிர­தான கட்­சிகள் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தாக ஊட­கங்­களில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பிர­தான கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியோ அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சியோ எம்­முடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­க­வில்லை. எம்மை நாடி இது­வ­ரையில் எந்­த­வொரு கலந்­து­ரை­யா­ட­லையும் முன்­னெ­டுக்க வில்லை. ஊட­கங்­களில் மூல­மா­கவே இவ்­வா­றான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. எவ்­வாறு இருப்­பினும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் நியா­ய­மான கோரிக்­கைகள், நிலைப்­பாட்­டினை கருத்தில் கொண்டு செயற்­படும் கட்­சி­யாகும்.  

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனி அர­சாங்க பய­ணத்தில் கைகோர்ப்­பதா அல்­லது ஏனைய தரப்­பினை ஆத­ரிப்­பதா என்­பது குறித்­து­எ­மது மத்­திய குழு கூடி ஆரோக்­கி­ய­மான தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்கும்.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு , தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னைகள் மற்றும் எமது நியா­ய­மான கோரிக்­கை­களின் அடிப்­ப­டையில் ஒரு பேச்­சு­வார்த்தை முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் நாம் எமது முடி­வு­களை முன்­வைக்க முடியும். அது தவிர்ந்து தனிப்­பட்ட நோக்­கங்­களை கொண்­ட­தாக அமையும் எத­னையும் நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை.

எமது தலைவர் இரா. சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவையும் பெற்று இனப்பிரச்சனை விடயங்களில் சுமூகமான தீர்மானங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என முயற்சித்து வருகின்றார். அனைத்து பெரும்பான்மை கட்சிகளினதும் பூரண ஆதரவுடன் ஜனநாயக ரீதியில் நாம் எமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கத்தில் செயற்படும் நிலையில் எமக்கும் எமது மக்களுக்கும் ஏற்கக்கூடிய நிலைமைகளில் நாம் ஆரோக்கியமான தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-14#page-1

  • கருத்துக்கள உறவுகள்

பின்பக்கத்தில் சூட்டு கம்பி குறி இழுத்தும் இந்தாள் சொல்வழி கேட்க்காது போல் உள்ளது .

  • தொடங்கியவர்

 

ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மையை வழங்கப்போவதில்லை - தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.