Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.ஐ.டி.யில் ஆஜ­ரா­வதை தவிர்த்த அர்ஜுன மகேந்திரன்

Featured Replies

சி.ஐ.டி.யில் ஆஜ­ரா­வதை தவிர்த்த அர்ஜுன மகேந்திரன்

p20-76fc1dbf24c0ec070e550c503f4728f55f18237c.jpg

 

நேற்றுவரை நாடு திரும்­ப­வில்லை 

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை மத்­திய வங்­கியின் பிணைமுறி  விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை,  

அர­சுக்கு நஷ்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர் பில் சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்ட, முன் னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ர­னுக்கு நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரிவில்  ஆஜ­ராக நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்த நிலை­யிலும், அவர் ஆஜ­ரா­க­வில்லை. சிங்கப்பூரில் அர்ஜுன மகேந்­திரன் இருப்­ப­தாக நம்­பப்­படும் நிலையில் அவர் நேற்றுவரை இலங்­கைக்கு திரும்­ப­வில்லை  என்­ப­துடன் விசா­ர­ணை­க­ளுக்கும் சமூ­க­ம­ளிக்­க­வில்லை என விசா­ர­ணை­யா­ளர்கள் தரப்பு தக­வல்கள் உறுதி செய்­தன. 

இவ்­வா­றா­னதோர் பிணை முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சுக்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்­பில்­பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட, மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்­தி­ரனின் மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ், குறித்த நிறு­வ­னத்தின் பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ராக இருந்த கசுன் பலி­சேன ஆகியோர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் உள்ள நிலையில் முக்­கிய சந்­தேக நப­ரான அர்ஜுன் மகேந்­திரன் தொடர்பில் அடுத்த கட்டம் குறித்து சட்ட மா அதி­ப­ருடன் கல்ந்­தா­லோ­சித்து நட­வ­டிக்கை எடுக்க விசா­ர­ணை­யா­ளர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர். 

குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­க­ரவின் வழி நடத்­தலில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் பி.அம்­பா­வல தலை­மையில் பெண் பொலிஸ் பரி­சோ­தகர் தர்­ம­லதா சஞ்­ஜீ­வனீ, பொலிஸ் சார்ஜன் ஜய­வீர உள்­ளிட்ட சிறப்புக் குழு­வினர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந்த விவ­கா­ரத்தில் முதல் சந்­தேக நப­ராக மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில், அவ­ருக்கு குற்றப் புல­னாய்வுப் பிரிவு சிங்கப் பூர் பொலிஸார் ஊடாக , கோட்டை நீதி­மன்றின் நேற்று 15 ஆம் திக­திக்குள் சி.ஐ.டி.யில் ஆஜ­ராக வேண்டும் எனும் அறி­வித்­தலை 20, கஸ்­காடன் வீதி, 18/1, டெம்சன், சிங்­கப்பூர், 2497726 எனும் முக­வ­ரிக்கு அனுப்பி வைத்­தி­ருந்­தனர். எனினும் அவர் அதன் பிர­காரம் நேற்று வரை ஆஜ­ரா­க­வில்லை. . 

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோ­கத்தின் போது, ஒரு போதும் வெளிப்­ப­டுத்த முடி­யாத நிதி விவ­காரம் தொடர்­பி­லான உணர்­வு­பூர்­வ­மானை ரக­சிய தக­வல்கள் மத்­திய வங்­கியின் சிற் சில தரப்­பி­னரால் வெளியே வழங்­கப்­பட்­டுள்­ளதா என விசா­ரணை செய்­யு­மாறு கடந்த 2016 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர்­விடம் மத்­திய வங்­கியின் ஆளுநர் இந்­ரஜித் குமா­ர­சு­வாமி முறைப்­பாடு செய்­தி­ருந்தார். இந்த முறைப்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர் பிணை முறி விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். 

இது தொடர்பில் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்ட விசா­ர­ணைகள் தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜன­வரி 10 ஆம் திகதி குற்றப் புல­னாய்வுப் பிரிவு சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைக் கோரி­யி­ருந்­தது. இந் நிலையில் பிணை முறி விநி­யோ­கத்தின் போது பல்­வேறு மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் சட்ட மா அதிபர் அவ­தா­னித்­துள்ள நிலையில் அது தொடர்பில் அவ­தானம் செலுத்தி உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு சட்ட மா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். 

அதன்­ப­டியே கடந்த 2 ஆம் திகதி பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் யசந்த கோதா­கொ­ட­வுடன் கோட்டை நீதி­மன்­றுக்கு சென்ற குற்றப் புல­னா­யவுப் பிரிவு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் நடை முறை சட்டக் கோவையின் 109 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக முதல் அறிக்­கையை நீதி­வா­னுக்கு சமர்ப்­பித்து, பிணை முறி விவ­கா­ரத்தின் சந்­தேக நபர்­க­ளாக முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்­திரன், அவ­ரது மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ் மற்றும் பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை பெயரிட்டு, மகேந்திரனுக்கு அறிவத்தலையும் அனுப்பியது.

 

எவ்வாறாயினும் அர்ஜுன் மகேந்ரன் தொடர்ச்சியாக இலங்கைக்கு வராது விசாரணைகளை புறக்கணித்தால் அவர் தொடர்பில் எவ்வாறான அனுகுமுறையை முன்னெடுப்பது என்பது தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அறிய முடிகின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.