Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசின் காரணங்களை நம்ப வேண்டாம் ; 26 நாடுகளின் பிரதிநிதிகளிடம் த. தே. கூ. வலியுறுத்தல்

Featured Replies

இலங்கை அரசின் காரணங்களை நம்ப வேண்டாம் ; 26 நாடுகளின் பிரதிநிதிகளிடம் த. தே. கூ. வலியுறுத்தல்

 

 

உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களின் பெறு­பே­றுகள்  தேசிய அர­சாங்­கத்­திற்குள்  ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை காரண மாகக் கொண்டு, இலங்கை அர­சாங்­கத்­தினால் ஜெனி­வா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள வாக்­கு­று­தி­க­ளி­லி­ருந்து பின்­வாங்க முடி­யாது அர­சாங்கம் அவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு முற்­பட்டு கார­ணங்­களை முன்­வைக்கும் பட்­சத்தில் அதனை ஜெனி­வாவின் உறுப்பு நாடுகள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டாது என வலி­யு­றுத்­தி­யுள்ள தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு இலங்­கையின் தேசிய அர­சியல் நில­வ­ரங்கள் எவ்­வா­றா­க­வி­ருப்­பினும் வாக்­கு­று­தி­க­ளி­லி­ருந்து நழு­விச்­செல்ல முடி­யாது என்­பதை உறுப்பு நாடுகள் அழுத்­தத்­து­ட­னான வலி­யு­றுத்­தல்­களை மேற்­கொள்ள வேண்டும் என்றும் ஜெனி­வாவில் கோரிக்­கை­ வி­டுத்­துள்­ளது. 

TNA.jpg

ஜெனி­வாவின் பிரித்­தா­னிய மிஷன் பணி­ம­னையில் நேற்று வெ ள்ளிக்­கி­ழமை காலை இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யிலும்  உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் மற்றும் மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்­பின்­போ­துமே கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன்  இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள்ளார்.

26 நாடு­களைச் சேர்ந்த 40 உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது சுமந்­திரன் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

2015 ஆம் ஆண்டில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது. எனினும்  சில­வி­ட­யங்­களைத் தவிர பல விட­யங்கள் இதுவரை நடை­மு­றைக்கு வர­வில்லை. குறிப்­பாக காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம் தொடர்­பான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­போதும் அது நடை­மு­றைக்கு வராத நிலை காணப்­ப­டு­கின்­றது.

அர­சாங்­கத்தின் நகர்­வுகள் வேக­மாக இல்லை என்­பது தெளிவாகத் தெரி­கின்­றது.

அர­சாங்­கத்தின் சார்பில் இங்கு வரு­கின்ற பிர­தி­நி­திகள் பல்­வேறு கதை­களை கூற­மு­டியும். உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களின் நம்­பிக்­கையை வெல்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருப்­ப­தாக கூற­வும்­மு­டியும். குறிப்­பாக அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­ப­ணிகள் நல்­லி­ணக்க நகர்­வுகள் குறித்து பிரஸ்­தா­பிக்க முடியும். எனினும் இவற்றில் எந்த முன்­னேற்­றமும் இல்லை. தற்­போது இலங்­கையில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் அர­சாங்­கத்­திற்கு பாரிய நெருக்­க­டி­க­ளை­கொ­டுத்­துள்­ளது. ஆகவே கடந்த காலங்­களில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் இது ­வ­ரையில் நிறை­வேற்­றப்­ப­டாமை தொடர்­பிலும் தற்­போ­தைய தேர்தல் முடி­வு­களால் அதனை தொட­ர 

மு­டி­யாத நிலை ஏற்­ப­டக்­கூடும் என்றும் பல்­வேறு கார­ணங்­களை உறுப்பு நாடு­க­ளுக்கு

வழங்­கக்­கூடும். இவற்றை உறுப்பு நாடுகள் மற்றும் ஜெனிவாப் பேரவை ஏற்­றுக்­கொள்­ 

ளக்­கூ­டாது என்­பதே எமது நிலைப்பாடாகும்.

எவ்வாறிருப்பினும் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவுக்கு வழங்கிய வாக்குறுதியை ஒருவருட காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பு நாடுக 

ளையும் அதன் பிரதிநிதிகளையும் கேட்டுக் கொள்கிறது என்ற வகையில் சுமந்திரன் எம்.பி. கோரிக்கைவிடுத்துள்ளார்.

http://www.virakesari.lk/article/30707

  • தொடங்கியவர்

வாக்குறுதிகளிலிருந்து அரசாங்கம் தப்பிக்க இடமளியாதீர் என ஜெனிவாவில் சுமந்திரன் கோரிக்கை

 

 

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக அரசாங்கம் கூறமுற்படலாம். ஆனால் சாக்குப்போக்குகளை நம்பிவிடாமல் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றும் படி அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை உறுப்பு நாடுகள் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனிவாவிலுள்ள பிரித்தானிய மிஸன் பணிமனையில் இன்றையதினம் காலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பங்கேற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். மனித உரிமைப் பேரவையின் 26 நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 40 பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் ஜெனிவா அமர்வுகளின் போது இலங்கை விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பாக வியூகம் வகுக்கும் வகையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இரண்டுமணி நேரம் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக ஆதவனுக்கு கருத்துவெளியிடுகையில், “2015ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் ஒரு சில விடயங்கள் தவிர ஒன்றும் நடைமுறைக்கு வரவில்லை.

காணமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும் அது நடைமுறைக்கு இன்னமும் வரவில்லை. அரசாங்கத்தின் வேகம் போதாது இருக்கின்ற ஒருவருட காலப்பகுதியில் அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கவேண்டும்.

செய்வதாக ஏற்றுககொண்டதில் வேகம் இல்லை தேர்தல் முடிவுகளை வைத்து இவற்றை செய்ய எதிர்ப்பு உறுப்பு நாடுகள் முழுவதும் நிறைவேற்றப்படவேண்டும். அரசியல்மைப்பு உருவாக்க சொல்லக்கூடும் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் முன்னேற்றம் இல்லை மிகத்துரிதமாக சேர்ந்து வலியுறுத்தவேண்டும்.

அரசாங்கம் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் செய்வதாக கூறிய விடயங்கள் பலவற்றில் காத்திரமான முன்னேற்றம் கிடையாது. அரசியல் யாப்புஉருவாக்க பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இங்கு வந்து அரச தரப்பினர் கூறக்கூடும். ஆனால் அது முழுமை பெறவில்லை. நல்லிணக்கம் விடயத்தில் சில நகர்வுகள் எடுக்கப்பட்டாலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை.

இந்தவிடயங்களில் அரசாங்கம் தானே முன்வந்து ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைக் காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது எனக் கூறக்கூடும்.

ஆனாலும் முழுமையாக ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்ற உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். இதன்போது நாடுகளின் பிரதிநிதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதனைத் தவிர ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலக பிரதிநிதிகளுடன் வெவ்வேறாக இரு சந்திப்புக்களை நடத்தி நிலமையை விளக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/?p=622798-வாக்குறுதிகளிலிருந்து-அரசாங்கம்-தப்பிக்க-இடமளியாதீர்-என-ஜெனிவாவில்-சுமந்திரன்-கோரிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க அவங்களோட மிண்டாதையுங்கோ சுமந்திரன் ,பிறகு உங்களுக்கு தந்த அதிரடிப்படை பாதுகாப்பை நீக்கிட்டு ஊர்காவல்படையை போட்டுப்போடுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, valavan said:

கனக்க அவங்களோட மிண்டாதையுங்கோ சுமந்திரன் ,பிறகு உங்களுக்கு தந்த அதிரடிப்படை பாதுகாப்பை நீக்கிட்டு ஊர்காவல்படையை போட்டுப்போடுவாங்கள்.

இதெல்லாம் அடுத்துவரும் மாகாணசபை தேர்தல் வருமட்டும் இப்படி டகால்டி எல்லாம் பாய்ந்து பாய்ந்து காட்டுவினம்  தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையான யுத்த குற்ற விசாரணை பற்றி கேளுங்கோ ஒருத்தர் ம்ம் என்றுவார் மற்றவர் முடிந்து விட்டது என்பார் ஏன் இதே சுமட்டிரனே இன்னும் முடியவில்லை என்றாலும் ஆச்சரியபடுவதுக்கில்ல்லை .  கடந்த வருடங்களில் பல முக்கிய விடயங்களில் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டு இனி நிரந்தர தோல்வி பயம் வந்தவுடன் சிங்கள இனவெறி அரசு அனுமதியுடனே லிமிட் தாண்டி குரைப்பினம் பாருங்கோ .வரும் மாவீரர் தினம் ஊரில் பாரியளவில் என்றுமில்லாதவாறு நடந்தாலும் அச்சரியபடுவதுக்கில்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.