Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனின் இந்துத்வா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனின் இந்துத்வா?

on February 17, 2018

 

2a9b28845969757dadd9681d72058cf.jpg

 

பட மூலம், SrilankaBrief

எமது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாரந்தோறும் அரசியல் நிலைவரங்கள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள் என்ற வடிவில் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி முரசொலி பத்திரிகையில் ‘உடன்பிறப்புகளுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கடிதங்களை நினைவுபடுத்துவதாக எமது முதலமைச்சரின் இந்தக் கேள்வி பதில்கள் அமைந்திருக்கின்றன.

தனது ‘உடன்பிறப்புகளுக்கு’ விக்னேஸ்வரன் கூறுகின்ற அரசியல் ஆலோசனைகள் அல்லது செய்கின்ற போதனைகள் என்று இதை வர்ணிக்கலாம். அதை எமது தமிழ்ப் பத்திரிகைகள் ஒரு சொல் தவறாது செம்மையாகப் பிரசுரித்துவருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களுக்குப் பிறகு தோன்றியிருக்கும் அரசியல் நிலைவரங்கள் குறித்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதலமைச்சர் தனது ‘உடன்பிறப்புகளுக்கு’ விளக்கமளித்திருந்தார். அதில் அவர் “எமது உரிமைகளையும் உரித்துக்களையும் பெற்றுக்கொள்வதில் சமரசத்துக்கு இடமின்றி தீர்க்கதரிசனத்துடன் செயற்பட்டிருந்தால் தெற்கில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும், சிங்கள மக்களின் காவலனாக மஹிந்த ராஜபக்‌ஷ இன்னமும் அடையாளப்படுத்தப்படுவதை இனவாதத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பல காரணிகள் ஒன்றாகச் சேர்ந்தே ராஜபக்‌ஷவை முன்னிலைப்படுத்தியுள்ளன என்று கூறியிருக்கும் விக்னேஸ்வரன், மேற்கு நாடுகள் ராஜபக்‌ஷவை எதிர்ப்பது சீனா எமது நாட்டில் காலூன்றக்கூடாது என்பதாலேயே. நாளைக்கு மேற்குலகுடன் சேர அவர் முன்வந்தால் மைத்திரியும் ரணிலும் தூக்கியெறியப்படுவார்கள். ஆகவே, இனவாதத்தைத் தூண்டுபவையாக ராஜபக்‌ஷவின் செயல்களைப் பார்க்கவில்லை. அவர் இனவாதக் கருத்துக்களை வெளியிடுகிறார் என்பதற்காக அவரை எதிர்க்கவேண்டியதில்லை என்று ஒரு விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.

இதைவிட வேறு ஒன்றையும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். அதுவே மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். அதாவது, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பேய் பிசாசாகக் காட்டவேண்டிய தேவை மேற்கு நாட்டவர்களுக்கும் தற்போதைய இலங்கை அரசாங்கத்துக்கும் மேற்குலக மதங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பவர்களுக்கும் இருக்கலாம். அது அவர்களின் சுயநலன்களுக்கானது என்பதை நாம் மறத்தலாகாது என்றும் விக்னேஸ்வரன் கூறுகிறார்.

ராஜபக்‌ஷ இன்று தென்னிலங்கையில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவதற்கு பல காரணிகள் இருக்கின்றன என்ற முதலமைச்சரின் கருத்து சரியானதாக இருந்தாலும் கூட சிங்கள பௌத்த தேசியவாத அரசியல் சக்திகளின் பாதுகாவலனாக அவர் தன்னைக் காட்டிக்கொள்வதாலும் சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத பேரினவாத அரசியல் நிலைப்பாடுடையவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவதாலுமே அவர் தென்னிலங்கையில் மிகுந்த செல்வாக்குடைய அரசியல் தலைவராக இருக்கமுடிகிறது. இனப்பிரச்சினைக்குத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்து தனது தற்போதைய போக்கில் ஒரு தளர்வைக் காட்டுவாரேயானால் ராஜபக்‌ஷவினால் செல்வாக்கை நிலைநிறுத்த முடியாமல் போகும் என்பது நிச்சயம். அடிப்படையில் அவரின் செல்வாக்கு இனவாதத் தளத்தைக் கொண்டதே.

இதைப் புரிந்துகொள்ள முடியாதவரல்ல முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஆனால், ஏனோ அவர் சிங்கள மக்களின் காவலனாக அடையாளப்படுத்தப்படும் ராஜபக்‌ஷவின் செயல்களை இனவாதத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கவில்லை என்று கூறி தன்னை ஒரு பொருந்தாத் தன்மைக்குள்ளாக்குகிறார். ராஜபக்‌ஷவுக்கு தமிழர்கள் மத்தியில் இருந்து எவரும் எதிர்பாராத நேசசக்தி ஒன்று கிடைத்திருக்கிறதோ?

ராஜபக்‌ஷவைப் பேய் பிசாசாகக் காட்டவேண்டியதேவை மேற்குலக மதங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பவர்களுக்கும் இருக்கலாம் என்று கூறியிருப்பதன் மூலம் விக்னேஸ்வரன் தமிழர்களுக்கு உணர்த்த முற்படுகின்ற செய்தி என்ன? மேற்குலக மதங்கள் என்று அவர் கூறுவது கிறிஸ்துவத்தைத் தவிர வேறொன்றுமாக இருக்கமுடியாது. ராஜபக்‌ஷவை தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாசைகளுக்கு எதிரானவர் (முதலமைச்சரின் பாசையில் பேய் பிசாசு) என்று காட்டுபவர்கள் கிறிஸ்தவர்களே என்று தமிழ்ச் சமூகத்துக்கு அவர் கூறுகிறாரா? யாரை மனதிற்கொண்டு அப்படி அவர் கூறுகிறார்?

இலங்கையில் தமிழ்த் தேசியவாத அரசியலில் இருந்திருக்கக்கூடிய ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்று மதச்சார்பின்மை என்பது எனது அபிப்பிராயம். இந்துவான ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை நிராகரித்து கிறிஸ்தவரான தந்தை செல்வாவை இறுதிவரை அரவணைத்தவர்கள் தமிழ் மக்கள். விக்னேஸ்வரனின் கருத்தில் தமிழ் தேசியவாத அரசியலில் ‘ஒரு இந்துத்வாவைத்’ திணிக்கும் நோக்கம் உட்கிடையாக இருக்கிறதோ?

வீ. தனபாலசிங்கம்

 

http://maatram.org/?p=6666

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக மதங்கள் என்று பன்மைபட குறிப்பிட்டதை நீங்கள் துர்நோக்கத்துடன்  ஒருமைப்படுத்தி  தனியாக கிறித்தவ மதம் என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறீர்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vanangaamudi said:

மேற்குலக மதங்கள் என்று பன்மைபட குறிப்பிட்டதை நீங்கள் துர்நோக்கத்துடன்  ஒருமைப்படுத்தி  தனியாக கிறித்தவ மதம் என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறீர்கள். 

மேற்குலகில் கிறிஸ்தவ மதத்தைத் தவிர வேறு என்ன உள்ளன? பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் எல்லாமே கிறிஸ்தவ மதங்கள்தானே.

 

அது சரி. மகிந்தவின் வெற்றியை இனவாதத்தின் பிரதிபலிப்பாகப் பார்க்கவில்லை என்று முதல்வர் கூறியதற்கு உங்கள் வியாக்கியானம் என்ன?

 

 

ஒரு பெட்டிக்கடையைக் கூட நடத்தும் நிருவாக ஆளுமையற்ற விக்கினேஸ்வரன் போன்ற கள்ளச் சாமி பிரேமானந்தாவின் பக்தனிடம் தமிழர்களது நிருவாகக் கட்டமைப்புத் தாரை வார்க்கப்பட்டதற்கு த,தே. கூட்டமைப்பு என்ன பதில் சொல்லப் போகின்றது எனத் தெரியவில்லை. ஒரு வேளை தெற்குக் குழம்பாமல் இருக்க வேலைகள் செய்வது போல இது இந்தியா குழம்பாமல் இருக்கச் செய்யப்பட்ட வேலையாக இருக்கும் என்பதை விடயமறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.

premanantha.jpgPremananthabirthday-224x300.jpgபிரேமானந்தா என்ற கள்ளச் சாமியின் ஆசிரமத்தில் இருந்த 13 இற்கு மேற்பட்ட சிறுமிகள் பால் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்ட விடயத்திலும் அதனைப் பார்வையுற்ற ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பிரேமானந்தாவின் வழக்கில் சிறைப்பட்டு இருக்கும் மூவரின் விடுதலையை வேண்டி இந்தியப் பிரதமர் மோடிக்கு விக்கினேஸ்வரன் எழுதிய கடிதமே வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் அவர் வெளியில் எழுதிய முதற்கடிதமாகும். பின்னர் 2015-02-26 அன்று சிறுமிகளை பால் பலாத்காரத்திற்கு உட்படுத்திய கொலைக் குற்றவாளி பிரேமானந்தா என்ற கள்ளச்சாமிக்கு புளியங்குளத்தில் சிலை வைத்து பூபாள கிருஸ்ணன் ஆலயத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போது, பிரேமானந்தாவின் அருளால் இப்படி ஒரு பதவி வாய்ப்புக் கிடைத்துச் பிரேமானந்தாவுக்கு சிலை வைக்க வாய்ப்புக் கிடைத்ததை எண்ணிப் புளகாங்கிதமடைந்தார். இது போன்ற கேவலமான விடயங்களை எப்படிக் கடந்து செல்கின்றோம் என்பது கேவலத்திலும் கேவலமானதே. இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் சட்டச் சிக்கல் இருக்கின்றது என்று சொல்லி வந்த விக்கினேஸ்வரன் இந்தியாவிற்குப் போய் PUCL ஒழுங்கமைத்த கூட்டத்தில் உரையாற்றி விட்டு வந்த பின்னர் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றித் திடீரென வன்வலு வேடமிட்டதன் மூலம் கூட்டமைப்பின் இணங்கிப்போகும் மென்போக்கில் விரக்தியுற்றவர்கள் உண்மையான புரட்சிகர சக்திகளாக உருவாகும் சூழல் தவிர்க்கப்பட்டு தமிழர்கள் மீண்டும் மடையராக்கப்பட்டனர். இது இந்திய உளவுத்துறையின் திட்டம் என்பதை அறியாமல் இருப்பதை என்னவென்று கூறலாம்?

http://www.kaakam.com/?p=744

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.