Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 கிரிக்கெட்- இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?

Featured Replies

நாளை டி20 கிரிக்கெட்- இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?

 

 

6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், நாளை ஜோகன்னஸ்பர்க்கில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. #SAvIND

 
நாளை டி20 கிரிக்கெட்- இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?
 
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா 5-1 என கைப்பற்றியது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஒருநாள் தொடரைப் போல் டி20 கிரிக்கெட் தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது.

ஒருநாள் தொடரில் விளையாடிய ரகானே, கேதர் ஜாதவ், ஷ்ரேயாஸ் அய்யர் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.  அவர்களுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, உனத் கட் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா ஆகியேர் களம் இறங்குவார்கள். 3-வது வீரராக விராட் கோலி களம் இறங்குவார். டோனி விக்கெட் கீப்பர், ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா களம் இறங்குவார். பும்ரா, புவனேஸ்வர குமார், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய பந்து வீச்சாளர்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தியா நான்கு முதன்மை பந்து வீச்சாளர்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவை முதன்மை பந்து வீச்சாளராக தேர்வு செய்தால் ரகானே மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் இடத்தில் தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே மற்றும் ரெய்னா ஆகியோரின் இருவர் சேர்க்கப்படலாம்.

அதேவேளையில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் இந்தியா களம் இறங்க விரும்பினால், மேற்கண்ட மூன்று பேரில் ஒருவர்தான் இடம்பெற முடியும். இதனால் அந்த இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நம்பிக்கையுடன் இந்தியா டி20 தொடரை எதிர்கொள்ளும்.

அதேவேளையில் ஒருநாள் தொடரை மோசமான வகையில் இழந்த தென்ஆப்பிரிக்கா, டி20 தொடர் மூலம் சரிகட்ட நினைக்கும். அந்த அணி டுமினி தலைமையில் களம் இறங்குகிறது.

தென்ஆப்பிரக்கா அணியில் டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர், ஹெய்ன்ரிச் கிளாசன், பெஹார்டியன், கிறிஸ் மோரிஸ் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது. பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் இருக்கும் அதேவேளையில் பிரபலமான பந்து வீச்சாளர்கள் இல்லை. இது தென்ஆப்பிரிக்காவிற்கு சற்று பாதகமாக இருக்கும். எப்படி இருந்தாலும் டி20 கிரிக்கெட் தொடர் பரபரப்பானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2-வது டி20 21-ந்தேதி செஞ்சூரியனிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 24-ந்தேதி கேப் டவுனில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/17194014/1146396/SAvIND-t20-cricket-India-like-odi-form-continued.vpf

  • தொடங்கியவர்

``புதிய வேகக் கூட்டணியோடு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா!’’ - முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்

 

இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுமினி ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

 

Kohli_toss_18339.jpg

 

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தாலும், ஒருநாள் தொடரை 5 -1 என்ற கணக்கில் வென்று சரித்திரம் படைத்தது. இந்தநிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது

 

ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஜே.பி.டுமினி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே மற்றும் உனத் கட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், சுழற்பந்துவீச்சாளர்களில் சாஹலுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில், காயம் காரணமாக டிவிலியர்ஸ் இந்த போட்டியில் விளையாடவில்லை. டுமினி தலைமையிலான அந்த அணியில் பஹார்டியன், டேன் பீட்டர்சன், ஜூனியர் டாலா மற்றும் டப்ரைஸ் ஷாம்ஸி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மோர்னே மோர்கல், எங்கிடி உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.  
 

https://www.vikatan.com/news/sports/116797-south-africa-wins-the-toss-and-elects-to-bowl-first-in-the-1st-t20i-against-india.html

 

6.png&h=42&w=42

45/1 * (3.3/20 ov)
 
  • தொடங்கியவர்

இந்திய அணி ரன் குவிப்பு: தென் ஆப்ரிக்காவுக்கு 204 ரன் இலக்கு

 
 
 
இந்திய அணி,  ரன், குவிப்பு, தென் ஆப்ரிக்காவுக்கு, 204 ரன், இலக்கு
 
 

 

 

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டியில் ஷிகர் தவான் அரை சதம் விளாச, இந்திய அணி 20 ஓவரில் 203 ரன் குவித்தது.

 

 

 

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுமினி 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் 'சுழல்' வீரர் குல்தீப் நீக்கப்பட்டு உனத்கட் இடம் பிடித்தார். ஒரு ஆண்டுக்குப்பின் மீண்டும் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தென் ஆப்ரிக்க அணியில் காயம் காரணமாக டிவிலியர்ஸ் இடம்பெறவில்லை. கிளாசன், டாலா அறிமுகமாகினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1962102

 

3.png&h=42&w=42

47/2 * (6.1/20 ov, target 204)
 
  • தொடங்கியவர்

முதல் 'டுவென்டி-20' போட்டி: இந்தியா அபார வெற்றி

 
 
முதல் 'டுவென்டி-20' போட்டி, இந்தியா, அபார, வெற்றி
Colors:
  •  
  •  
  •  
  •  
 
 

 

 

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 'டுவென்டி-20' போட்டியில் ஷிகர் தவான் அரை சதம் விளாச, இந்திய அணி 20 ஓவரில் 203 ரன் குவித்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுமினி 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் 'சுழல்' வீரர் குல்தீப் நீக்கப்பட்டு உனத்கட் இடம் பிடித்தார். ஒரு ஆண்டுக்குப்பின் மீண்டும் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தென் ஆப்ரிக்க அணியில் காயம் காரணமாக டிவிலியர்ஸ் இடம்பெறவில்லை. கிளாசன், டாலா அறிமுகமாகினர். 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் மட்டுமே எடுத்து 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1962114

  • தொடங்கியவர்

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

 

 
bhuvaneshwar%20kumar

5 விக். நாயகன் புவனேஷ்வர் குமார்.   -  படம். | ஏ.எஃப்.பி.

வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

டுமினி தலைமையிலான இந்த இளம் தென் ஆப்பிரிக்க அணியில் முக்கிய, பிரபல வீரர்கள் இடம்பெறவில்லை.

ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவை நசுக்கிய நம்பிக்கையை டி20-க்குக் கடத்திய இந்திய அணி முதலில் பேட் செய்ய, பேட்டர்சன் வீசிய முதல் ஓவர் ஷார்ட் பிட்ச் பந்து வீச்சாக அமைய ரோஹித் சர்மா 2 சிக்சர்கள் 1 பவுண்டரி விளாச முதல் ஓவரிலேயே 18 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கண்டது. 9 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா 21 ரன்கள் எடுத்து ஜூனியர் டாலாவின் எழும்பிய பந்தை கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டு கட் ஆட முய்ன்றார் எட்ஜ் ஆனது, தானாகவே போயிருக்க வேண்டும், நடுவர் நாட் அவுட் என்று கூற நப்பாசையில் நின்றார், ஆனால் தென் ஆப்பிரிக்கா ரிவியூ செய்ய பெரிய எட்ஜ் என்பது தெரியவந்தது, இந்தியா 23/1.

ஷிகர் தவணுக்கு தொடக்கத்தில் ஒரு பந்து கிளவ்வில் பட்டு லெக் திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது, அவர் மட்டும்தான் அப்பீல் செய்தார், ஆனால் அந்த அப்பீலும் கூட லெக் திசை வைடு என்று நடுவர் சிக்னல் செய்யாமல் இருக்க எழுப்பிய முறையீடு போல் தோன்றியதால் ரிவியூ செய்யாமல் விட்டனர் ரிவியூ செய்திருந்தால் தவன் அவுட் ஆகியிருப்பார்.

3-ம் நிலையில் சுரேஷ் ரெய்னா களமிறக்கப்பட்டார், அவரை சுதந்திரமாக ஆடக் கூறியிருப்பார்கள் போலிருக்கிறது, ஒதுங்கிக் கொண்டு போகிற வருகிற பந்துகளை எல்லாம் இலக்கில்லாமல் சுழற்றினார். 7 பந்துகளில் 15 ரன்கள், இதில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் உண்டு, கடைசியில் ஜூனியர் டாலா பந்தை ஒரு சுற்று சுற்றி கொடியேற்ற டாலாவே கேட்ச் பிடித்தார். 49/2 .

மறுமுனையில் ஷிகர் தவண் அனாயசமாக ஆடினார், அருமையாக ஆடினார். கீப்பர் தலைக்கு மேல் எட்ஜ் ஷாட்களுடன் அபாரமான பிளிக்குகள், கட்கள் புல்கள் என்று வெளுத்துக் கட்டினார். தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் சாமர்த்தியமான மாற்றங்கள் இல்லை, ஷார்ட் பிட்ச் பந்துகள் அதிகம் இருந்தன, இதனால் 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 78 ரன்கள் எடுத்து விட்டது.

விராட் கோலி இறங்கி, ஷம்ஸி பந்தை நேராக மிட் ஆன் பீல்டர் பெஹார்டீன் கையில் அடித்தார், அவர் கையில் வந்த கேட்சை அதிர்ச்சிகரமாக கோட்டை விட்டார், கோலி சிரித்துக் கொண்டேயிருந்தார், எப்போதும் போல் கேட்சை விட்ட அடுத்த பந்து பவுண்டரிக்குப் பறந்தது, பிறகு ஒருபிரமாதமான நேர் சிக்ஸ் ஒன்றை அடித்தார் விராட் கோலி. 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த அவர் ஷம்சியின் சுழலில் எல்.பி.ஆனார். ரிவியூ பயனளிக்கவில்லை. 108/3. ஷிகர் தவண் 27 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அரைசதம் எடுத்தார். ஷிகர் தவண் 14வது ஓவரில் 2 லெக் திசை பவுண்டரியை அடிக்க இந்திய அணி 15வது ஓவரின் தொடக்கத்தில் 150 ரன்களுக்குச் சென்றது. ஷிகர் தவண் 39 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்து பெலுக்வயோவின் வேகம் குறைக்கப்பட்ட பந்தை பெடல் ஸ்வீப் முறையில் ஆடும்போது விக்கெட் கீப்பர் கிளாசனிடம் லெக் திசையில் கேட்ச் ஆனார்.

தவண் போன பிறகே இந்திய அணி அடிக்க முடியாமல் திணறியது, கடைசி 5 ஓவர்களில் 46 ரன்கள்தான் வந்தது. மணீஷ் பாண்டே 27 பந்துகள் ஆடி ஒரேயொரு சிக்ஸ் மட்டுமே அடித்து 29 ரன்களை எடுத்தார், வாய்ப்புகள் அளிக்கப்படாததால் திணறினார். தோனி 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வைடு யார்க்கரை எதிர்பார்த்து நகர்ந்து ஆட முற்பட்டார், ஆனால் இம்முறை பந்து லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆகி பவுல்டு ஆனது. ஹர்திக் பாண்டியா 7 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 203 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் இடது கை ஸ்பின்னர் ஸ்மட்ஸ் 2 ஓவர்களில் 14 ரன்கள் என்று சிக்கன வீச்சாளராகத் திகழ்ந்தார். ஜூனியர் டாலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், பெலுக்வயோவுக்கு 2 ஓவர்கள்தான் தரப்பட்டன அதில் அவர் 16 ரன்கள் கொடுத்து ஷிகர் தவனை வெளியேற்றினார்.

புவனேஷ்வர் குமாரிடம் மடிந்த தென் ஆப்பிரிக்கா!

கடந்த 4 டி20 போட்டிகள் இதே மைதானத்தில் இலக்கை விரட்டிய அணிக்குச் சாதகமாக இருந்த அடிப்படையில் தென் ஆப்பிரிக்க அணி தொடங்கியது இலக்கை விரட்டுவதற்கான லின் நோக்கமாகவே தெரிந்தது. ரீஸா ஹென்ரிக்ஸ் (70), ஸ்மட்ஸ் (12) அதிரடியில் முதல் 15 பந்துகளில் 28 ரன்கள் வந்தது. ஆனால் புவனேஷ்வர் குமார் பந்தை நன்றாக ஸ்விங் செய்ததோடு, தினுசு தினுசான ஸ்லோ பந்துகளை வீசினார் விரல் மூலம் பந்தை டெலிவரி செய்து கடும் சோதனைகளை அளித்து ஸ்மட்ஸ், டுமினி ஆகியோரை வீழ்த்த இந்திய அணி ஆதிக்க வழிக்குத் திரும்பியது. புவனேஷ்வர் குமார் தன் வேகத்தில் செய்த மாற்றங்களை தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. அபாய வீரர் டேவிட் மில்லர் ஒரு சிக்சருடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இன்னொரு ஸ்லோ பந்தில் கேட்ச் ஆகி வெளியேற 6.2 ஓவர்களில் 48/3 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா.

ஆனால் அதன் பிறகு பர்ஹான் பெஹார்டீன், ஹென்றிக்ஸ் உண்மையான சவால்களை அளித்தனர் இவர்கள் இருவரும் சுமார் 9 ஓவர்களில் 81 ரன்கள் விளாசினர். கோலிக்கு கேட்சை விட்ட பெஹார்டீன் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 39 எடுத்து சாஹலின் மெதுவான பந்தில் லாங் ஆனில் கேட்ச் ஆனார். ஆனால் ஹென்றிக்ஸ், கிளாசன் அடுத்த 2 ஓவர்களில் 25 ரன்கள் விளாசினர். இதனால் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 50 ரன்கள் தேவையான போது 6 விக்கெட்டுகள் கையில் இருந்தன.

ஆனால் புவனேஷ்வர் குமார் புகுந்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார், 18 வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் புவனேஷ்வர் 2 விக்கெட்டுகளை வீழ்த்த பேட்டர்சன் பாண்டியா, தோனி கூட்டணியில் ரன் அவுட் ஆக 20வது ஓவர் முடிவில் 175 ரன்களுடன் முடிந்தது தென் ஆப்பிரிக்கா. ஹென்ரிக்ஸ் அதிகபட்சமாக 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

புவனேஷ்வர் குமார் 4 ஒவர்கள் 24 ரன்களுக்கு 5 விக்கெட் என்று டி20 சிறந்த பந்து வீச்சை நிகழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார், டி20 தொடரிலும் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றது.

http://tamil.thehindu.com/sports/article22793978.ece

  • தொடங்கியவர்

அந்த யுக்திக்காக ஒரு வருடம் கடுமையாகப் பயிற்சி செய்தேன்: புவனேஸ்வர் குமார்

 

 
Bhuvneshwar_Kumar

 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். மேலும் இதில் புதுவகை பந்துவீச்சு முறையை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வகைப் போட்டிகளிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புவனேஸ்வர் குமார் பேசியதாவது:

இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் பந்துவீசுவதையே நான் மிகவும் விரும்புகிறேன். வெற்றிபெற்றால் அனைத்து வலிகளும் தன்னால் மறைந்துவிடும். ஒவ்வொரு முறை இந்திய அணியின் வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போதும், பௌன்சர் பந்துகளை எதிர்கொள்வது தொடர்பான விமரிசனங்கள் எழும். ஆனால் அதனை இந்த தொடரில் மிகச்சிறப்பாகவே எதிர்கொண்டோம். 

தற்போதைய காலகட்டத்தில் விக்கெட் வீழ்த்த புதுப்புது யுக்திகளைக் பயன்படுத்த வேண்டியுள்ளது. நானும் இந்த புதிய வகைப் பந்துவீச்சை (knuckle ball) கடந்த ஒரு வருடமாக கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறேன். அது தற்போது பலனளித்துள்ளது என்றார்.

முன்னதாக, இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களின் ஒருவரான ஜாகீர் கான், இந்த வகை பந்துவீச்சு முறையை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/feb/19/been-working-on-the-knuckleball-for-one-year-kumar-2866476.html

  • தொடங்கியவர்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் விராட் கோலி குழுவினர் தீவிரம்

 

 
21CHPMUCENTURION

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று 2-வது டி 20 ஆட்டத்தில் மோதுகின்றன. தொடரை வெல்லும் முனைப்பில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க போராடி வெற்றி பெற் வேண்டிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தை சந்திக்கிறது.

‘மென் இன் ப்ளு’என அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் மற்றொரு தொடரை வெல்லும். கடும் போட்டிகள் நிறைந்த டெஸ்ட் தொடரை இந்திய 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில் அதன் பின்னர் மீண்டெழுந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 5-1 என வென்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. எனினும் தன்னிறைவு கொள்ளாத இந்திய அணி வெற்றியின் உத்வேகத்தை டி 20 தொடருக்கும் கொண்டு வந்துள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தின் போது விராட் கோலிக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. எனினும் இது பயப்படும் வகையில் பெரிய அளவிலான காயம் இல்லை, இன்றைய ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக விராட் கோலி, முழு உடல் தகுதியை பெற்றுவிடுவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. டர்பனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின் போது கோலிக்கு காயம் ஏற்பட்டது. பீல்டிங்கின் போது முழங்காலில் லேசான காயம் அடைந்த போதிலும் அந்த ஆட்டத்தில் அவர், சதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். எனினும் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அதிக அளவிலான பணிச்சுமையையே காட்டுகிறது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் பட்சத்தில் கேப்டவுனில் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் கோலிக்கு ஓய்வு கொடுப்பது குறித்து அணி நிர்வாகம் சிந்திக்கக்கூடும். ஏனெனில் அடுத்த 3 மாதங்களுக்கு விராட் கோலி தொடர்ச்சியான போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. ஒருவேளை விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். இதுதவிர இந்திய அணியில் மேலும் ஒரு மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. சமீபகாலமாக டி 20 ஆட்டங்களில் இந்திய அணி இடது கை வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கி வருகிறது.

அந்த வகையில் ஜோகன்னஸ்பர்க் ஆட்டத்தில் ஜெயதேவ் உனத்கட் சேர்க்கப்பட்டிருந்தார். பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் அவர், 4 ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் என கருதப்படுகிறது. ஏனெனில் போட்டி நடைபெறும் செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானம், இந்தத் தொடர் முழுவதுமே மெதுவாகவே செயல்பட்டு வந்துள்ளது. இதனால் இந்திய அணி இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆட்டத்தை சந்திக்கும் பட்சத்தில் விளையடும் லெவனில் குல்தீப் யாதவ் இடம் பெறுவார்.

பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக சுரேஷ் ரெய்னா 3-வது வீரராக களமிறக்கப்பட்டார். ஆடுகளத்தின் தன்மையை முன்பே கணித்த இந்திய அணி நிர்வாகம் எப்படியும் 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும் என்ற நம்பிக்கையிலும், பவர்பிளேவில் தாக்குதல் ஆட்டம் தொடுப்பதற்காகவுமே ரெய்னா முன்னதாக களமிறக்கப்பட்டார். மிடில் ஆர்டரில் விராட் கோலி களமிறங்க திட்டமிட்டிருந்ததால் ரெய்னா களமிறங்கியதுமே சுதந்திரமான வகையில் அதிரடியாக விளையாடினார். இந்த திட்டம் வரும் ஆட்டங்களிலும் தொடரக்கூடும். டி 20 ஆட்டங்களில் மிடில் ஆர்டரின் பின்பகுதியை பலப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் தோனி சமீபகாலமாக இக்கட்டான சூழ்நிலைகளில் தயக்கம் காட்டும் அளவிலான பேட்டிங்கை கடைபிடிப்பதும் கவனிக்கத்தக்கது.

அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் ஒரு முறை வாழ்வா, சாவோ என்ற போராட்டத்தை சந்திக்க உள்ளது. கடந்த வாரம் செவ்வாய்கிழமை போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் விளையாடியது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் அந்த அணி ஒருநாள் போட்டித் தொடரை இழந்தது. அடுத்த 8 நாட்களில் தற்போது மீண்டும் ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை சந்தித்தால் டி 20 தொடரையும் பறிகொடுக்க நேரிடும். எனினும் இளம் வீரர்களை உள்ளடக்கிய தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்காக போராடும் என்றே கருதப்படுகிறது.

முதல் டி 20 ஆட்டத்தில் ஹென்ட்ரிக்ஸ், பெகார்தின் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் அவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். இதற்கிடையே டி வில்லியர்ஸ் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார். எனினும் அவருக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. டேவிட் மில்லர், மோரிஸ் ஆகியோர் தற்போது நடைபெற்று வரும் குறுகிய வடிவிலான தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக இதுவரையிலும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முதல் டி 20 ஆட்டத்தில் கேப்டன் ஜேபி டுமினி, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்து வீச்சை திட்டத்தை கையாண்டார். ஆனால் அது அவர்களுக்கு எதிர்வினையாகவே அமைந்தது. பவர்பிளேவில் வீசப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்துகளை இந்திய வீரர்கள் வெளுத்து வாங்கினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் திட்டத்தை மாற்றியமைக்கக்கூடும். அந்த அணியில் எந்தவித மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை.

 

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்குர்.

தென் ஆப்பிரிக்கா: ஜேபி டுமினி (கேப்டன்), பர்ஹான் பெகார்தின், ஜூனியர் டலா, ஏபி டி வில்லியர்ஸ், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், கிறிஸ்டியன் ஜான்கர், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், டேன் பாட்டர்சன், பாங்கிசோ, பெலுக்வயோ, ஷம்சி, ஜான் ஸ்மட்ஸ்.

http://tamil.thehindu.com/sports/article22812576.ece?homepage=true

  • தொடங்கியவர்

'டுவென்டி-20' கிரிக்கெட்: இந்திய அணி ஏமாற்றம்

 
 
'டுவென்டி-20' கிரிக்கெட்: இந்திய அணி ஏமாற்றம்
 
 

 

 

செஞ்சூரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றது. இரண்டாவது போட்டி செஞ்சூரியனில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுமினி 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில் தசைபிடிப்பால் அவதிப்படும் பும்ரா நீக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் வாய்ப்பு பெற்றார்.
 

 

மணிஷ் பாண்டே அரை சதம்

 

இந்திய அணிக்கு ரோகித் டக்-அவுட்டானார். டாலா 'வேகத்தில்' கேப்டன் கோஹ்லி (1) சிக்கினார். டுமினி 'சுழலில்' ஷிகர் தவான் (24) அவுட்டானார். ரெய்னா 31 ரன்கள் எடுத்தார். பின், இணைந்த மணிஷ் பாண்டே, தோனி சிறப்பாக செயல்பட்டனர். இருவரும் அரை சதம் விளாசி, 'ஸ்கோரை' உயர்த்தினர். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே (79), தோனி (52) அவுட்டாகாமல் இருந்தனர்.
 

 

கிளாசன் விளாசல்

 

பின், களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்மட்ஸ் (2) ஒற்றை இலக்கில் திரும்பினார். ஷர்துல் பந்தில் ஹென்ரிக்ஸ் (26) ஆட்டமிழந்தார். அதிரடியாக ரன் சேர்த்த கிளாசன் (69) அரை சதம் விளாசினார். பாண்ட்யா பந்தில் மில்லர் (5) சிக்கினார். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் டுமினி அரை சதம் எட்டினார். உனத்கட் பந்துவீச்சில் இவர் தொடர்ந்து இரண்டு சிக்சர் அடித்து, வெற்றியை உறுதி செய்தார். தென் ஆப்ரிக்க அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டுமினி (64), பெகார்டியன் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன் மூலம், தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 24ல் கேப்டவுனில் நடக்கவுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1964383

  • தொடங்கியவர்

டுமினி, கிளஸன் ருத்ர தாண்டவம்... வாரி வழங்கிய சாஹல்!- இந்தியா தோல்வி

 
 

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.

 

Klassan

 

 

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 79 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக விளையாடிய தோனி 52 ரன்கள் எடுத்தார்.  

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. துவக்க வீரர்களாக ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ஜெ.ஜெ.ஸ்மட்ஸ் களமிறங்கினார்கள். ஸ்மட்ஸ் 2 ரன்களில் கேட்ச் ஆனார். ஹென்ட்ரிக்ஸ் 26 ரன்கள் எடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டுமினி, கிளஸன் அதிரடி காட்டினார்கள். குறிப்பாக கிளஸன் சிக்சர்களாகப் பறக்கவிட்டார்.  மிரட்டிய கிளஸன் 30 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். உனட்கட் பந்துவீச்சில் அவர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

டுமினி



அடுத்து களமிறங்கிய மில்லர் 5 ரன்களுக்கு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பெகார்டியன் களமிறங்கினார்.  மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டுமினி அரைசதத்தைக் கடந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16  ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை உனட்கட் வீசினார். முதல் பந்தில் பெகார்டியன் 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்து வைடு ஆனது. அதற்கு அடுத்த பந்தில் பெகார்டியன் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை டுமினி சந்தித்தார். புல்டாஸாக வந்த அந்தப் பந்தை டுமினி சிக்ஸருக்கு தூக்கினார். அடுத்த பந்திலும் அவர் ஒரு இமாலய சிக்ஸர் அடிக்க தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. 18.4 ஓவர்களில் அந்த அணி இலக்கை எட்டியது. வெற்றிக்கு வித்திட்ட டுமினி 40 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் எடுத்து களத்திலிருந்தார். ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சாஹல் இந்தப் போட்டியில் வாரி வழங்கும் வள்ளலாக மாறினார். அவர் வீசிய 4 ஓவர்களில் 64 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருது கிளஸனக்கு வழங்கப்பட்டது. 

https://www.vikatan.com/news/sports/117141-india-loss-t20-against-south-africa.html

  • தொடங்கியவர்

சாஹல் பந்துவீச்சைப் பிரித்து மேய்ந்த கிளாசென்! பெருமைப்பட முடியாத புள்ளிவிவரங்கள்

 

 
chahal91

 

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. இந்நிலையில், சென்சுரியனில் 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீசத் தீர்மானித்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும், தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியில் பும்ராவுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாகுருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு இது முதல் சர்வதேச டி20 போட்டியாகும்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடத் தொடங்கியது. 18.4 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 64 ரன்களுடன் டுமினியும், 16 ரன்களுடன் பெஹர்தீனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 69 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் கிளாசென் உனத்கட் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருடைய அதிரடி ஆட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தி தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

சாஹல் vs கிளாசென்! 

இந்திய அணிக்கு மிகவும் பலமாக விளங்கிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல், இந்த ஆட்டத்தில் மிக மோசமாகப் பந்துவீசினார். 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்து இந்திய அணியின் தோல்விக்கு முதல் காரணமாக விளங்கியுள்ளார். 

* நேற்றைய ஆட்டத்தில் சாஹலின் பந்துவீச்சுக்கு எதிராக 7 சிக்ஸர்களை அடித்தார்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள். இதில் கிளாசென் மட்டுமே 5 சிக்ஸர்களை அடித்தார். எந்தவொரு இந்திய பந்துவீச்சாளரும் இதற்கு முன்பு டி20 போட்டியில் 7 சிக்ஸர்களைக் கொடுத்ததில்லை. இதற்கு முன்பு 2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜடேஜா பந்துவீச்சில் ஆறு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. அதை சாஹல் முறியடித்துள்ளார்.

டி20 ஆட்டத்தில் அதிக சிக்ஸர்களைக் கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் 

7 சாஹல் vs தென் ஆப்பிரிக்கா, 2018
6 ஜடேஜா vs ஆஸ்திரேலியா, 2009
5 பின்னி vs மே.இ., 2016
5 ஜடேஜா vs மே.இ., 2017
5 சாஹல் vs இலங்கை, 2017

* இதற்கு முன்பு 2007-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஜொகிந்தர் சர்மா 57 ரன்கள் கொடுத்ததே ஓர் இந்திய பந்துவீச்சாளர் டி20 ஆட்டத்தில் அதிக ரன்கள் கொடுத்ததாக இருந்தது. சாஹல் அதை நேற்று முறியடித்துள்ளார். 

டி20 ஆட்டத்தில் சிறந்த பந்துவீச்சு - இந்தியா

சாஹல் - 6/25 vs இங்கிலாந்து, 2017

டி20 ஆட்டத்தில் மோசமான பந்துவீச்சு - இந்தியா

சாஹல் - 64 ரன்கள் vs தென் ஆப்பிரிக்கா, 2018

chahal_new.jpg

* கிளாசென்னுக்கு சாஹல் 12 பந்துகளை வீசியதில் அவர் 5 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களை விளாசியுள்ளார். ஒரு இந்திய பந்துவீச்சாளருக்கு எதிராக எந்தவொரு பேட்ஸ்மேனும் டி20 போட்டியில் இத்தனை ரன்களை எடுத்ததில்லை. கடந்த வருடம் குல்தீப் யாதவுக்கு எதிராக இலங்கையின் பெரேரா 14 பந்துகளில் 38 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது. அதையும் சாஹல் முறியடித்துள்ளார்.

கிளாசென் vs சாஹல் (எல்லா வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும்)

ரன்கள் - 110
பந்துகள் - 74
விக்கெட் - 1
ஸ்டிரைக் ரேட்- 148.65
பவுண்டரிகள் - 6
சிக்ஸர் - 8

* இந்தத் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களில் மட்டுமே தோற்றுள்ளது. இரண்டிலும் சாஹல் மிக மோசமாக பந்துவீசியுள்ளார். வாண்டரர்ஸ் ஒருநாள் ஆட்டத்தில் 5.3 ஓவர்களில் 68 ரன்களை வாரி வழங்கிய சாஹல் நேற்றைய டி20 ஆட்டத்தில் 4 ஓவர்களில் 64 ரன்களைக் கொடுத்து இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாகியுள்ளார். இந்த இரண்டு ஆட்டத்தில் மட்டும் 13 சிக்ஸர்கள் சாஹல் பந்துவீச்சில் அடிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி வெற்றி பெற்றபோது (6 ஆட்டங்கள்) சாஹலின் பந்துவீச்சு

விக்கெட்டுகள் - 16, எகானமி - 4.59, சிக்ஸர்கள் - 6

இந்திய அணி தோற்றபோது (2 ஆட்டங்கள்) சாஹலின் பந்துவீச்சு

விக்கெட் -1, எகானமி - 13.89, சிக்ஸர்கள் - 13

http://www.dinamani.com/sports/sports-news/2018/feb/22/chahal-v-klaasen-12-balls-five-sixes-41-runs-2868294.html

  • தொடங்கியவர்

சாஹல் பந்துவீச்சை மட்டும் குறிவைத்தது ஏன்? ‘சிக்ஸர்’ கிளாசென் விளக்கம்!

 

 
Klaasen11xx

 

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை விடவும் சாஹல் பந்துவீச்சில் சிக்ஸர்களாக அடித்தது ஏன் என்பதற்கு தென் ஆப்பிரிக்க வீரர் கிளாசென் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. இந்நிலையில், சென்சுரியனில் 2-ஆவது டி20 ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீசத் தீர்மானித்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ரன்களும், தோனி 28 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல்
இருந்தனர். இந்திய அணியில் பும்ராவுக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாகுருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு இது முதல் சர்வதேச டி20 போட்டியாகும்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடத் தொடங்கியது. 18.4 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 64 ரன்களுடன் டுமினியும், 16 ரன்களுடன் பெஹர்தீனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 69 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் கிளாசென் உனத்கட் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருடைய அதிரடி ஆட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தி தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இதனால் ஆட்ட நாயகன் விருதையும் அவர் பெற்றார்.

இந்திய அணிக்கு மிகவும் பலமாக விளங்கும் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், இந்த ஆட்டத்தில் மிக மோசமாகப் பந்துவீசினார். 4 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்து இந்திய அணியின் தோல்விக்கு முதல் காரணமாக விளங்கியுள்ளார்.

நேற்றைய ஆட்டத்தில் சாஹலின் பந்துவீச்சுக்கு எதிராக 7 சிக்ஸர்களை அடித்தார்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள். இதில் கிளாசென் மட்டுமே 5 சிக்ஸர்களை அடித்தார். எந்தவொரு இந்திய பந்துவீச்சாளரும் இதற்கு முன்பு டி20 போட்டியில் 7 சிக்ஸர்களைக் கொடுத்ததில்லை. இதற்கு முன்பு 2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜடேஜா பந்துவீச்சில் ஆறு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. அதை சாஹல் முறியடித்துள்ளார்.

கிளாசென்னுக்கு சாஹல் 12 பந்துகளை வீசியதில் அவர் 5 சிக்ஸர் ஒரு பவுண்டரியுடன் 41 ரன்களை விளாசியுள்ளார். ஒரு இந்திய பந்துவீச்சாளருக்கு எதிராக எந்தவொரு பேட்ஸ்மேனும் டி20 போட்டியில் இத்தனை ரன்களை எடுத்ததில்லை. கடந்த வருடம் குல்தீப் யாதவுக்கு எதிராக இலங்கையின் பெரேரா 14 பந்துகளில் 38 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது. அதையும் சாஹல் முறியடித்துள்ளார்.

கிளாசென் vs சாஹல் (எல்லா வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும்)

ரன்கள் - 110
பந்துகள் - 74
விக்கெட் - 1
ஸ்டிரைக் ரேட்- 148.65
பவுண்டரிகள் - 6
சிக்ஸர் - 8

Klaasen818181.jpg

chahal_new1.jpg

சாஹல் பந்துவீச்சை இந்தளவுக்குத் தாக்கியது ஏன் என்கிற கேள்விக்கு கிளாசென் பதில் அளித்ததாவது:

அவர் பந்துவீச்சை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வேன். என் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தபோது மிகவும் திறமையான லெக் ஸ்பின்னர்களுடன் விளையாட நேர்ந்தது. சில நேரம் லெக் ஸ்பின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொள்வது நமக்குச் சாதகமாக அமையும். அதுபோல இந்த ஆட்டத்தில் துல்லியமாக அமைந்தது. சாதகமான சூழலை முடிந்தவரை பயன்படுத்திக்கொண்டேன். 

சாஹல் பந்துவீச்சை நொறுக்கவேண்டும் என்றெல்லாம் முடிவெடுக்கவில்லை. ஆனால் அவர்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் மிகத்திறமையாகப் பந்துவீசினார்கள். எனவே லெக் ஸ்பின்னர் பந்துவீச்சில் அதிக ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. அதில் ரன் எடுக்க எனக்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைத்தன. எனவே முதல் இரண்டு பவுண்டரிகள் அடித்தவுடன் இந்த ஓவரில்தான் நான் அதிக ரன்களை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். 20 ரன்கள் எடுக்கவேண்டும் என்று செயல்பட்டேன் (சாஹலின் 2-வது ஓவரில் 23 ரன்களை எடுத்தது தென் ஆப்பிரிக்கா.) என்று கூறியுள்ளார்.

 

Klaasen21.jpg

 

http://www.dinamani.com/sports/sports-news/2018/feb/22/i-just-fancied-my-chances-more-against-the-leggie-says-klaasen-2868315--2.html

  • தொடங்கியவர்

3-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி இன்று பலப்பரீட்சை: கிரிக்கெட் தொடரை வெல்லப் போவது யார் ?

 

 
24VIRATJI

இந்திய, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் 3-வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணியே தொடரைக் கைப்பற்றும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 5-1 என்ற கணக்கில் இந்தியா அபாரமாக ஆடி வென்றது.

இதைத் தொடர்ந்து தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்த நிலையில் 3-வது ஆட்டம் கேப் டவுன் நகரில் இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணியே தொடரைக் கைப்பற்றும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனலாம்.

தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் தொடர் முதல் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இருப்பினும் கேப் டவுனிலுள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை டி20 போட்டிகளில் விளையாடியதில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவோ இங்கு 8 டி20 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி கண்டுள்ளது. 5-ல் தோல்வியைப் பெற்றுள்ளது.

இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கேப்டன் கோலி, சுரேஷ் ரெய்னா, எம்.எஸ். தோனி, மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஒருங்கிணைந்து விளையாடும் பட்சத்தில் இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு வெற்றி வசப்படும். அதைப் போலவே பவுலர்களும் இந்தத் தொடரில் சிறப்பாக பரிமளித்து வருகின்றனர். புவனேஸ்வர்குமார், பும்ரா, பாண்டியா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணிக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

ஆனால் கடந்த ஆட்டத்தில் சாஹல், அதிக அளவில் ரன்களை விட்டுக் கொடுத்தது கவலை அளிக்கிறது. அதைப் போலவே ஜெயதேவ் உனத்கட்டும் அதிக அளவில் ரன்களை வாரி வழங்கினார். எனவே அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியைப் போலவே தொடரை வெல்லும் நோக்கத்துடன் ஜே.பி. டுமினி தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கவுள்ளது. அணியின் நட்சத்திர வீரர்கள் பெகார்தின், ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், டுமினி ஆகியோர் அபாயகரமான வகையில் விளையாடி வருகின்றனர்.

மாரிஸ், பேட்டர்சன், ஜூனியர் டாலா ஆகியோரின் பந்துவீச்சு கைகொடுக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி எளிதில் வசப்படும். இரு அணி களுக்கும் சம வாய்ப்பு உள்ளதால் இந்த ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும் என்று தெரிகிறது. போட்டி இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்குத் தொடங்கவுள்ளது.

அணி விவரம்: இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்குர்.

தென் ஆப்பிரிக்கா: ஜே.பி. டுமினி (கேப்டன், பர்கான் பெஹார்தின், ஜூனியர் டாலா, ரீசா ஹென்ரிக்ஸ், கிறிஸ்டியன் ஜாங்கர், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், டேன் பேட்டர்சன், ஆரோன் பாங்கிசோ, அன்டில் பெலுக்வாயோ, தப்ரிஸ் ஷம்சி, ஸ்மட்ஸ். - பிடிஐ

 

 

http://tamil.thehindu.com/sports/article22842166.ece

  • தொடங்கியவர்

 

6.png&h=42&w=42

39/1 * (4.1/20 ov)
 
  • தொடங்கியவர்

 

6.png&h=42&w=42

172/7
 

 

3.png&h=42&w=42

10/0 * (2.3/20 ov, target 173)
 
  • தொடங்கியவர்
3வது 'டுவென்டி-20': இந்தியா 'திரில்' வெற்றி 
  • தொடங்கியவர்

டுவென்டி - 20: தொடரை கைப்பற்றியது இந்தியா

 
 
 
டுவென்டி - 20, தொடரை, கைப்பற்றியது, இந்தியா
Colors:
  •  
  •  
  •  
  •  
 

 

  •  
  •  
  •  
  •  

கேப்டவுன்: தென்னாப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுமினி 'பவுலிங்' தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 172 ரன்கள் விளாசியது.
தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்நிலையில் இந்திய அணி 7 ரன்னில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1966380

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.