Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்­மையைக் கண்­ட­றி­வது அவ­சியம்

Featured Replies

உண்­மையைக் கண்­ட­றி­வது அவ­சியம்

 

யுத்­தத்தின் போதும் அதற்குப் பின்­ன­ரான காலத்­திலும் காணாமல் போன மற்றும் கடத்­தப்­பட்ட மக்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது இது­வரை கண்­ட­றி­யப்­ப­டாத நிலையில் காணாமல் மற்றும் கடத்­தப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் தொடர்ந்து சொல்­லொ­ணாத்­ துன்­பங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர்.

இந்த மக்கள் தமது உற­வி­னர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டித்து தரு­மாறு கோரி தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை நடத்தி வரு­கின்ற போதிலும் அர­சாங்­க­மா­னது இந்த விட­யத்தில் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு பாரிய தயக்­கத்தை வெளிக்­காட்டி வரு­கின்­றது. இந்த விட­யத்தில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு அர­சாங்கம் தொடர்ந்தும் தயக்கம் காட்டி வரு­வ­தையும் பின்­வாங்­கு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையும் மற்றும் பல்­வேறு சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் இந்த காணாமல் போனோர் விவ­கா­ரத்தில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கின்ற போதிலும் அர­சாங்கம் அந்த விட­யத்தில் உரிய நட­வ­டிக்­கை­களை விரை­வாக எடுக்­கா­ம­லேயே இருக்­கின்­றது.

சர்­வ­தேச சமூ­கத்தின் இந்தக் கோரிக்­கைக்கு செவி­சாய்ப்­பது போன்று நல்­லாட்சி அர­சாங்கம் காட்­டிக்­கொண்­டாலும் அந்த செயற்­பாட்டை முன்­னெ­டுப்­பதில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­ம­லேயே உள்­ளது. காணாமல் போனோரின் உற­வுகள் தொடர்ந்து போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். கிளி­நொச்­சியில் ஒரு ­வ­ரு­ட­கா­ல­மாக தொடர்ச்­சி­யாக வீதியில் அமர்ந்­த­வாறு காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களில் ஒரு பகு­தி­யினர் போராட்டம் நடத்தி வரு­கின்­றனர். தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு கோரியே இந்தப் போராட்டம் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. இந்த நிலையில் சர்­வ­தேச சமூகம் தொடர்ச்­சி­யாக தனது வலி­யு­றுத்­தலை முன்­னெ­டுத்தே வரு­கின்­றது.

காணாமல் போனோர் விவ­காரம் குறித்து கருத்து வெளி­யிட்­டுள்ள ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை அர­சாங்கம் காணாமல் போனோர் குறித்த அலு­வ­லகம் தொடர்­பான அர்ப்­ப­ணிப்பை மதிக்­க­வேண்­டு­மென தெரி­வித்­தி­ருக்­கின்­றது. அத்­துடன் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யாமல் பாதிக்­கப்­பட்ட மக்கள் பாரிய துன்­பங்­களை எதிர்­கொண்­டுள்­ள­தா­கவும் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­ட­றி­யாமல் தேசிய நல்­லி­ணக்­கத்தை அடைய முடி­யாது என்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அதே­போன்று சர்­வ­தேச மனித உரிமை கண்­கா­ணிப்­பகம், சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை என்­ப­னவும் கடந்த காலம் முழு­வ­து­மாக இந்த காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் உரிய பொறி­முறையை முன்­னெ­டுத்து தீர்­வு­கா­ணு­மாறு வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்­றன. அது­மட்­டு­மன்றி இம்­முறை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை விவ­காரம் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் ஒருநாள் விவா­தமும் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது இலங்கை அர­சாங்கம் இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் எவ்­வா­றான முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்பது குறித்து ஆரா­ய­வுள்­ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் இந்த காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்­வு­கா­ணு­மாறு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­னாலும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னாலும் வலி­யு­றுத்­தப்­பட்­டது. ஆனால் அப்­போ­தைய அர­சாங்கம் இந்த விட­யத்தில் கூடிய அக்­க­றையை வெளிக்­காட்­ட­வில்லை. இந்­நி­லையில் கற்­ற­றிந்­த­பா­டங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரையின் பிர­காரம் ஓய்வு பெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தலை­மையில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்டு காணாமல் போனோர் குறித்து ஆரா­யப்­பட்­டது. இதன்­போது அந்த ஆணைக்­கு­ழு­விற்கு சுமார் 20ஆயிரம் எழுத்­து­மூல முறைப்­பா­டுகள் காண­ாமல்­போனோர் தொடர்பில் கிடைத்­தி­ருந்­தன.

இந்­நி­லையில் 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்­திற்கு வந்­ததும் பர­ண­கம ஆணைக்­குழுவின் செயற்­பா­டுகள் ஸ்தம்­பி­த­ம­டைந்­தன. இத­னை­ய­டுத்து ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேரவை தொடர்ச்­சி­யாக இந்த விவ­கா­ரத்­திற்கு தீர்வைக் காணு­மாறு வலி­யு­றுத்தி வந்­தது. 2012 ஆம் ஆண்டு முதல் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்டு வந்த இலங்கை தொடர்­பான அனைத்துப் பிரே­ர­ணை­க­ளிலும் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­திற்கு முக்­கிய இடம் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் 2015 ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தியில் காணா­மல்­போனோர் குறித்து ஆராயும் ஐ.நா. செயற்­குழு உறுப்­பி­னர்கள் இலங்­கைக்கு விஜயம் செய்து காணா­மல்­போனோர் குறித்த நிலை­மை­களை ஆராய்ந்­தனர். அவர்கள் தமது இலங்கை விஜ­யத்தின் முடிவில் ஐ.நா. மனித உரிமை பேர­வைக்கு அறிக்­கை­யொன்றை சமர்ப்­பித்­தனர். அந்த அறிக்­கையில் இலங்­கையில் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்­வு­காண நிரந்­தர அலு­வ­லகம் ஒன்று அமைக்­கப்­ப­ட­வேண்­டு­மென பரிந்­துரை செய்­யப்­பட்­டது.

அந்த பரிந்­து­ரையின் பிர­காரம் 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் இந்த காணா­மல்­போனோர் அலு­வ­லக விடயம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அதன் பின்னர் நீண்ட தாம­தத்­தை­ய­டுத்து இலங்­கையில் இந்த அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தற்­கான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்­க­மைய தற்­போது அந்த அலு­வ­லகம் நிறு­வப்­பட்­டுள்­ள­துடன் அதற்­கான தொழிற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

அலு­வ­லகம் நிறு­வப்­பட்­டு­விட்ட நிலை­யிலும் இது­வரை அதன் தொழிற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. இந்த பின்­ன­ணியில் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் தொடர்ந்து தமக்கு நீதியைப் பெற்­றுத்­த­ரக்­கோரி போராட்டம் நடத்தி வரு­கின்­றனர். காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களைப் பொறுத்­த­வ­ரையில் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் வாழ்க்­கையை கொண்­டு­ந­டத்­து­கின்­றனர். சமூகப் பாது­காப்புப் பிரச்­சினை, பொரு­ளா­தாரப் பிரச்­சினை என அந்த மக்கள் பாரிய கஷ்­டங்­களை எதிர்­கொள்­கின்­றனர்.

இவ்­வாறு காணா­மல்­போனோர் அலு­வ­லகம் போன்ற ஒரு பொறி­முறை ஊடாக விரைந்து காணா­மல்­போ­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டால் அதன் அடுத்த கட்­ட­மாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்கும் செயற்­பாட்டை ஆரம்­பிக்­கலாம். இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு நான்கு கார­ணி­களின் அடிப்­ப­டையில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தாக அறி­வித்­தி­ருக்­கின்­றது. அதில் முத­லா­வது கார­ணி­யாக உண்­மையைக் கண்­ட­றிதல் காணப்­ப­டு­கின்­றது. அந்தக் கார­ணியின் கீழேயே இந்தக் காணாமல் போனோ­ருக்கு என்ன நடந்­தது என்ற விடயம் ஆரா­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. அடுத்­த­தாக பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையின் மூன்­றா­வது கார­ணி­யாக நட்­ட­ஈடு வழங்கும் செயற்­பாடு காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் இந்த எந்­த­ வொரு செயற்­பாடும் இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. உண்­மையைக் கண்­ட­றிதல் என்ற கார­ணிக்கு தீர்வு கண்டால் மட்­டுமே நட்­ட­ஈடு வழங்­குதல் என்ற காரணி குறித்து ஆராய முடியும்.

ஆனால் அர­சாங்கம் தொடர்ந்து அந்த விட­யத்தில் அச­மந்தப் போக்­கி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றது. தென்­னி­லங்­கையில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு நெருக்­கடி ஏற்­படும் என்ற அச்­சத்­தினால் அர­சாங்கம் இந்த விட­யத்தில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை எடுப்­ப­தற்கு தயங்­கு­கின்­றது. ஆனால் அர­சாங்­கத்­திற்கு நெருக்­கடி ஏற்­படும் என்­ப­தற்­காக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­காமல் இருக்க முடி­யாது என்­பதை அர­சாங்கம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். இந்தப் பிரச்­சி­னையை இவ்­வாறு இழுத்­த­டித்­துக்­கொண்டே போய்­வி­டலாம் என்று எண்­ணக்­கூ­டாது. கடந்த அர­சாங்கம் இந்தப் பிரச்­சி­னையை உரிய முறையில் ஆரா­யாமல் இழுத்­த­டித்து சென்­ற­மையே அதன் வீழ்ச்­சிக்கு வித்திட்டது என்பதை தற்போதைய அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.

கடந்த அரசாங்கம் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெ­டுத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரச்சினை­­களை ஆராய்ந்து அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க தன்னை அர்ப்பணிக்கவில்லை. அதுவே வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த அரசாங்கத்தை நிராகரிக்க காரணமாக அமைந்தது. எனவே அதே தவறை தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் செய்யக்கூடாது.

விரைந்து இந்த காணாமல்போனோரின் பிரச்சினையை தீர்த்து அந்த மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்து உண்மையை வெளிக்கொணரவேண்டியது அரசாங்கத்தின் மிகப்பெரிய பொறுப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. மக்கள் நீதிக்காக தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களை தொடர்ந்தும் காத்திருக்க வைக்க வேண்டாம் என்பதை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-23#page-4

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலத்தின் பின்பும் (போர் முடிந்து) அரசு(கள்) ஏதாவது செய்யும் என்பது கிட்டத்தட்ட நடைபெறக்கூடிய ஒன்றல்ல. மேற்கு நாடுகளை அந்தந்த நாட்டு தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்தால் ஏதாவது நடக்க வாய்ப்புண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.