Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துணைத்தூதருக்கு வாளை வழங்கிய முதலமைச்சர்

Featured Replies

துணைத்தூதருக்கு வாளை வழங்கிய முதலமைச்சர்
 

- டி.விஜிதா

image_93ec3f15c5.jpgimage_f81e998825.jpg

யாழில் இருந்து விடைபெற்றுச் செல்லவுள்ள, இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜனுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைவு பரிசாக வாள் வழங்கி கௌரவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதத்துடன் தனது சேவைக்காலத்தை நிறைவு செய்து இந்தியாவுக்கு திரும்பவுள்ள, இந்திய துணைத்தூதர் கொன்சலட் ஜெனரல் ஆர்.நடராஜனுக்கான கௌரவிப்பு நிகழ்வு இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று இரவு (25) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் வாளைப்பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண மாவட்டச்; செயலர்கள், உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/துணைத்தூதருக்கு-வாளை-வழங்கிய-முதலமைச்சர்/71-212031

“இனியாவது ஒருவிறுவிறுப்பான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள்”

nadarajan.jpg?resize=599%2C345

 

பிரியாவிடைநிகழ்வும் இராப்போசனவிருந்தும் இந்தியத் துணைத் தூதுவர் உயர் திரு. A.நடராஜன்

ஃகிராண்ட் ஃகிறீன் பலஸ் மண்டபம்,
ஹொட்டல் ஃகிறீன்கிறாஸ்,யாழ்ப்பாணம்
25.02.2018 ஞாயிற்றுக்கிழமைமாலை 07.00 மணியளவில்
முதலமைச்சர் உரை
இன்றையநிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, விழாநாயகனாக வீற்றிருக்கும் இந்தியத் துணைத்தூதுவர் உயர்திரு. யு.நடராஜன் அவர்களே, திருமதி. சாந்தி நடராஜன் அவர்களே, இந்தநிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்திருக்கும் விசேட அதிதிகளே, கௌரவ அதிதிகளே, உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

கடந்த மூன்றுஆண்டுகளாக எம்மிடையே இந்தியத்துணைத் தூதுவராகப்பணியாற்றிபதவிஉயர்வுபெற்றுசெல்லுகின்றஉயர்திரு. நடராஜன் அவர்களைவாழ்த்திக் கௌரவிப்பதற்காக நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் துணைத்தூதுவர் அலுவலகம் நிறுவப்பட்டகாலத்தில் இருந்து துணைத்தூதுவர்களாக தமிழர்கள் அல்லதுதமிழ் பேசக்கூடிய அதிகாரிகள் இங்கு நியமிக்கப்பட்டமை மிகப் பெரியவரப்பிரசாதமாகும். திரு.நடராஜன் அவர்களுக்குமுன்னர் கடமையாற்றியதிரு.மகாலிங்கம் அவர்கள் மிகச் சாதுவானவர். பேச்சு,நடை,உடை, பாவனை ஆகிய அனைத்திலும் ஒருமென்மையானதன்மை உணரப்படும். ஆனால் திரு.நடராஜன் அவர்கள் மிகஎளிமையானவர். ஆனால்அதேநேரம் எறும்புபோன்றசுறுசுறுப்புக் குணமுடையவர். அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் வடபகுதி தமிழ் மக்களுக்கு ஆற்றியபணிகள் அளப்பரியன. அதேநேரம் அவர் தெரிந்து வைத்திருக்கும் எம் மக்கட் தொகைகணக்கில் அடங்காதவை.

மிகக் குறுகிய இந்த 03 ஆண்டுகாலஅவரின் இருப்பைகாலாதிகாலமாகநாம்நினைவுகூரக்கூடியவகையில் ஒருவிசாலமானகலாச்சாரமண்டபம் உருவாக்குவதற்கான திட்டங்களைத் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன் கட்டடவேலைகள் 2018ற்குள் முடிவடைந்துவிடும் எனத்தெரிவிக்கப்பட்டது. இவ்வாறானசிறப்பானஒருமண்டபத்தை எமக்கு பெற்றுத்தருவதற்கு மூலகாரணமாக இருந்ததிரு. நடராஜன் அவர்கள் அதனைவைபவரீதியாக திறந்துவைப்பதற்கு முன்பதாகஇடமாற்றம் பெற்றுடெல்கிதலைமைச் செயலகத்தைநோக்கிபயணிக்கவிருப்பதுசற்றுவருத்தத்தைத் தருகின்றது. எனினும் இம் மண்டபம் திறப்புவிழாநடைபெறும் காலத்தில் திரு.நடராஜன் அவர்களும் விசேடஅதிதியாக கலந்துகொண்டுஅந்தநிகழ்வை சிறப்பிப்பார் என்று எண்ணுகின்றேன்.

மேலும் இந்துமக்களின் அனைத்துகலாச்சாரநிகழ்வுகள்,மற்றும்பிரசித்திபெற்றநல்லூர்,கீரிமலைபோன்றஆலயத் திருவிழாக்கள்மற்றும்சிறப்புநிகழ்வுகள் அனைத்திலும் திரு.நடராஜன் அவர்கள் பங்கேற்பார். அப்போதுதமதுபங்கிற்குபல்வேறுகலை, இலக்கிய, இசைவிற்பன்னர்களை இந்தியாவில் இருந்துதருவித்துஎமதுமக்கள்,கலைரசிகர்கள், இலக்கியப் பிரியர்கள் அனைவரும் கண்டுகேட்டு இரசிப்பதற்குவழிசெய்துந்தந்துள்ளார். மேலும் நாம் தொலைக்காட்சிஒளிபரப்புவாயிலாகப்பார்த்துஇரசித்தகலைஞர்களையும் பட்டிமன்றப் பேச்சாளர்களையும்நேரில் பார்த்துஅவர்களின் திறமைகளைக்கண்டுகேட்டு இரசிக்கஏற்பாடுசெய்தபெருமைதிரு.நடராஜனுக்கேஉரியது.

திரு. நடராஜன் அவர்கள் யாழ்ப்பாணத்துத்துணைத்தூதுவராகபதவியேற்றஒருசிலநாட்களுக்குள்ளேயேஇங்கிருந்தமாணவர்களுக்கும் அரசஉத்தியோகத்தர்களுக்கும் பல்வேறுபுலமைப் பரிசில் திட்டங்களைத் தயாரித்தார். அவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டமாணவர்களையும் உத்தியோகத்தர்களையும் முழுக்கமுழுக்கஇந்தியஅரசின் நிதிஉதவியுடன் இந்தியாவுக்குஅனுப்பிஅவர்களுடையகற்கைநெறிகளைமுழுமையாகபூர்த்திசெய்துகொண்டுமீண்டும் இலங்கைக்குத் திரும்புகின்றகாலவரைக்குஅவர்களுக்கானஒருவிசேடபடியையும் பெற்றுக் கொடுத்தார். இவற்றைஎம்மவர் நன்றியுடன் நினைவு கூருகின்றார்கள்.
இந்தியவெளிவிவகாரஅமைச்சினால் வெளியிடப்பட்டதிரு.நடராஜன் அவர்களின் சேவைகள் பற்றியகுறிப்பைஅவதானித்தபோது32 வருடங்களுக்குமேலாக இவர் வெளிவிவகாரஅமைச்சில் பல்வேறுபதவிகளைவகித்துசீனா, இந்தோனேசியா,பிரான்ஸ்,ஸ்பெயின்,யேமன்,பூட்டான் மற்றும் இலங்கைஆகியநாடுகளில் சிறப்பாகசேவையாற்றியதுதெரியவந்தது. வெளிநாடுகளுடனானஇராஜதந்திரபேச்சுவார்த்தைகளில் திரு.நடராஜன் அவர்களும் முக்கியபங்குவகித்தமைஇத் தருணத்தில் குறிப்பிடற்பாலது. இத்தனைகடமைகளுக்குமத்தியிலும் திரு.நடராஜன் அவர்கள் கோல்ப் (Golf )விளையாட்டிலும்அதிகநாட்டமுடையவர் என்றும் இந்தியாமற்றும் இலங்கையிலுள்ளபல்வேறுகோல்ப் கழகங்களில் கௌரவஉறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது.  1959 யூன் 17ல் அவதரித்ததிரு. நடராஜன் அவர்கள் சாந்திஅவர்களைமணம் முடித்துஅவர்கள் இருவரிற்கும் பிரியா, பிரபாஎன்ற இரு நற்புத்திரிகள் இருப்பதாகவும் அவர்கள் நல்லநிலைமையில் இருப்பதாகவும்அ றியப்பட்டது.

இந்தியர்களின் மூளை சவர அலகைவிடக் கூர்மையானது என்ற கூற்றுக்கு அமைவாகதிரு.நடராஜன் அவர்களும் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவர். தமதுகாரியங்களை வடபகுதிமண்ணில் ஆற்றுகின்ற போதுமிகக் கவனமாக அரசியல்த் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கிடையே குழப்பங்கள் ஏற்படாத வகையில் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் யாரை அழைக்கலாம்யாரை அழைக்கக்கூடாது என்ற சூட்சுமங்களையெல்லாம் நன்றாகப் புரிந்துவைத்துக் கொண்டு தமதுநடவடிக்கைகளை ஆற்றிச் சென்றார். சிலதடவைகளில் ஒருவிடயம் பற்றிஏற்கனவேநன்கறிந்துகொண்டுஎம்மிடம் தெரியாததைப் போல் கேள்விகேட்பார். இந்தவிதத்தில் அனைவரது கருத்துக்களையும் கிரகித்துவைத்துதனது தொழிலை செம்மையாக ஆற்றிவந்துள்ளார். ஒருமுறைஅவர் என்னிடம் ‘என்னநீங்கள் எங்கள் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வருவதில்லையே. எங்களுடன் ஏதாவதுமனஸ்தாபமா?’என்றுகேட்டார். அப்போதுதான் தெரிந்துகொண்டேன் எனதுவேலைப்பளுக்களின் காரணமாகஅவர் அழைத்தசிலநிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளவில்லைஎன்று. அன்றிலிருந்துநான் வேறெங்கேனும் இருந்தாலன்றிதவறாமல் அவர் அழைக்கும் நிகழ்ச்சிகளுக்குவந்துசெல்கின்றேன்.

இத்தனைசிறப்புக்களும் பொருந்தியதிரு.நடராஜன் அவர்கள் ஒருதமிழர் என்றவகையில் தானாடாவிட்டாலும் தன் தசைஆடும் என்றமுதுமொழிக்குஅமைவாக தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்குதன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டமை நன்றியுணர்வுடன் நினைவு கூரற்பாலது.

எம்மை விட்டு பிரிந்து செல்ல இருக்கும் திரு.நடராஜன் அவர்கள் இந்தியாவில் நியூடெல்கியில் பணிபுரிந்தாலும் எமதுபிரச்சனைகள் தொடர்பாக கூடியகவனங்கள் எடுத்து ஒருசமரசத் தீர்வு ஏற்படுவதற்கு வழிசமைக்கவேண்டும் என்றுகேட்டுக் கொள்கின்றேன். இந்தியஅரசாங்கத்திற்குநான் கூற வேண்டியதை வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் வெகுமதியூடாகக் கூறிவைக்கின்றேன். அண்மைக் காலமாக இலங்கை சம்பந்தமான இந்திய வெளியுறவுக்கொள்கை வெறும் பொருளாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதிலேயே கவனம் செலுத்தியது. இனியாவது ஒருவலிமையான அரசியல் ரீதியான நெருக்குதலை எம் மத்திய அரசாங்கத்திற்குக் கொடுத்து இந் நாட்டில் இணைப்பாட்சியை உண்டுபண்ண வழி அமைக்கவேண்டும். பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் கூட இந்தியாவின் அறிவுரைக்கு ஏற்பதயாரிக்கப்படவில்லை. 1992ம் ஆண்டில் அதில் தரப்பட்டசொற்ப அதிகாரங்களும் மத்திய அரசினால் தட்டிப்பறித்து எடுத்துக் கொள்ளப்பட்டது. இனியாவது ஒருவிறுவிறுப்பான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடியுங்கள் என்று கோரிக்கொள்கின்றேன். நீங்களும் உங்கள் குடும்பத்தவரும் சகல சம்பத்துக்களைப்  பெறவேண்டும், நீடூழிவாழ வேண்டும் என்று பிரார்த்தித்து நீங்கள் யாவரும்  சிறப்புறவாழ உளமார வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/2018/68455/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.