Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.அமெரிக்கா-துருக்கி முறுகல் நிலைமை

Featured Replies

ஐ.அமெரிக்கா-துருக்கி முறுகல் நிலைமை
 

image_9e468461a7.jpg- ஜனகன் முத்துக்குமார்

ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு குழு தோற்கடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் மீள்வளர்ச்சியைத் தவிர்க்கும் காரணமாக, ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பிலில் இருந்து, மத்திய தரைக்கடல் வரை, பாதுகாப்பு வளையமொன்றை உருவாக்கப்போவதாக, ஐக்கிய அமெரிக்கா அறிவித்திருந்தது.  குறித்த விடயம் தொடர்பில், ஐ.அமெரிக்காவின் தலைமையில் 30,000 இராணுவத்தினர், எல்லைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள் எனவும், இக்கருமத்தில் சிரியாவை சேர்ந்த குர்திஷ் போராளிகளும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும், ஐ.அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்நடவடிக்கையானது, சிரியாவில் உள்ள குர்திஷ் ஆதிக்க சக்திகளுக்கு, ஐ.அமெரிக்க ஆதரவு வழங்குவதாகவே கருதப்பட வேண்டும் என, தனது அதிருப்தியை துருக்கி வெளிப்படுத்தியிருந்தது.

வட சிரியாவில் உள்ள குர்திஷ் பிரிவினைவாத சக்திகளை ஐ.அமெரிக்கா ஆதரிக்கும் இச்செயலானது, ஐ.அமெரிக்கா, அதன் சொந்த புவிசார் அரசியல் இலக்குகளை குறித்த பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் நிலைநாட்ட வழிவகுக்கும் என்பது, பின்வரும் காரணங்களால் அறியப்படலாம்.

முதலாவதாக பிராந்திய சமநிலையின்மையை ஏற்படுத்துவதற்கு, ஏற்கெனவே அதிக முறிவுகளையும் அரசியல் சிதைவுகளையும் சந்தித்த நாடுகளைப் பலவீனம் செய்தல் அவசியமாகும். இதுவே ஐ.அமெரிக்காவை குறித்த பிராந்தியத்தில் நிலையாக வைத்திருக்க உதவும் என்பதுடன், சிரியாவின் உள்நாட்டு நெருக்கடிகள் நீடிக்கவும் வழிவகுக்கும். ஒரு நிலையான சிரியா, எப்போதுமே ஐ.அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்கில் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை, இரு நாடுகளும் அறியத்தவறவில்லை. அத்தோடு, சிரியாவின் நிலையான தன்மையானது, ஏற்கெனவே பிராந்தியத்தில் ஒரு வல்லரசாக ஈரான் வளர்ச்சியடைந்தமையைத் தொடர்ந்து, பிராந்திய சமநிலையில் சவூதி அரேபியாவும் அதனோடிணைந்த ஐ.அமெரிக்காவின் நட்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முரணாக அமையும் என்ற காரணத்தாலும், சிரியாவின் நிலையற்ற தன்மை என்பது, ஐ.அமெரிக்காவின் நீண்டகால பிராந்திய இராஜதந்திர மற்றும் அரசியல் காய் நகர்த்தல்களுக்கு அவசியமானவொன்றாக அமைகின்றது.

இரண்டாவதாக, துருக்கியானது தொடர்ச்சியாக வட அத்திலாந்திக் பாதுகாப்பு அமைப்பு (NATO) உறுப்பினராக இருந்தாலும், ஐ.அமெரிக்கா குறித்த பிராந்தியத்தில் தனது நீண்டகால நிலையைத் தக்கவைப்பதற்கு, துருக்கியின் இராணுவத் தளங்களில் மூலதனம் செய்வதில் விருப்பம் கொண்டிருக்கவில்லை. இதற்கு முதலாவதாக, துருக்கி ஒரு நிலையான ஜனநாயக நாடாக இல்லாமை, இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான போரில் துருக்கி வினைத்திறனுடன் பங்குபற்றும் போதிலும், துருக்கியின் அரசாங்கம் இஸ்லாமிய அரசாங்கமாகவே இருந்து வருகின்றமை, நீண்ட கால நோக்கில் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்துவதற்கு குர்திஷ் அரசாங்கத்தின்/ குர்திஷ் இனமக்களின் உதவி தேவைப்படுகின்றமை, குர்திஷ் இனக்குழுக்களுடன் துருக்கி அரசாங்கம் கொண்டுள்ள மோதல் நிலைமை என்பன காரணமாக, துருக்கியின் உள்நாட்டுப் பாதுகாப்புக் கட்டமைப்பில் தங்கியிருப்பதைக் காட்டிலும், தனக்கான இராணுவ கட்டமைப்பொன்றை அப்பிராந்தியத்தில் ஏற்படுத்துவதற்கு, ஐ.அமெரிக்கா முனைகின்றது. அதன் ஒரு பகுதியாகவே, துருக்கியில் உள்ள இன்செர்லிக் விமானத் தளத்தில் இருந்து, தனது பாதுகாப்புத் தளங்களைக் குறைப்பதற்காகவும், சிரியாவில் அதன் இராணுவ நிலைப்பாட்டை அதிகரிக்கவும், ஐ.அமெரிக்கா குறித்த பாதுகாப்பு ஒத்துழைப்பில் குர்திஷ் போராளிகளின் ஒத்துழைப்பைப் பெறுகின்றது.

மூன்றாவதாக குர்திஷ் அடையாளத்தை மறைமுகமாகவேனும் அங்கிகரித்தல், சிரியாவிலும் துருக்கியிலும் மட்டுமல்லாது, ஈராக்கினதும் ஈரானினதும் உள்நாட்டு அரசியல் நிலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என, ஐ.அமெரிக்கா கருதுகின்றது. இது, அப்பிராந்தியத்தில் ஏற்கெனவே ஈராக்கின் கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்ட குர்திஷ் அரசாங்கத்தை வலுப்பெறச் செய்வதுடன், ஐ.அமெரிக்காவின் நீண்டகால இருப்புக்கு உதவும் என்பதில், ஐ.அமெரிக்கா நம்பிக்கையாய் உள்ளது.

நான்காவதாக, ஐ.அமெரிக்காவின் மத்திய கிழக்குத் தொடர்பான வெளிவிவகாரக் கொள்கைகளின் வெற்றி, இஸ்‌ரேலியப் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது. அப்பாதுகாப்பு வளையத்தை உருவாக்குதல், இஸ்‌ரேலின் இரண்டாவது தலைநகரான டெல் அவிவ்-க்கு நேரடியான பாதுகாப்பை வழங்கும் என்பதுடன், இது பிராந்தியத்தில் இஸ்ரேலின் இராணுவ மற்றும் அரசியல் வளர்ச்சி மற்றும் கட்டமைப்புக்கு வழிவகுக்கும் என, ஐ.அமெரிக்கா நம்புகின்றது. இந்நிலை, பிராந்தியத்திலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஐ.அமெரிக்காவுக்கு ஒருவேளை ஏற்பட்டாலும், அதன் வெளியேற்றத்துக்கான தாக்கத்தை குறைக்கும், அல்லது ஐ.அமெரிக்காவின் மூலோபாயத் திறனை தக்கவைக்கும் எனவும் ஐ.அமெரிக்கா கருதுகின்றது.

ஐந்தாவதாக, பரந்தளவில் ஐ.அமெரிக்கா, தொடர்ச்சியாக மத்தியகிழக்கு எண்ணெய் மற்றும் கனியவளங்களை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளல், ஐ.அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தலுக்கு உதவும் எனவும், ஐ.அமெரிக்காவின் பொருளாதார மற்றும் தொழில் வாய்ப்பில் இது கணிசமான அளவில் செல்வாக்கு செலுத்தும் எனவும் கருதுகின்றது.

இந்நிலைமைகளின் மத்தியிலேயே, துருக்கியின் பல பகுதிகளில், ஐ.அமெரிக்க பாதுகாப்புத் திட்டத்தின் சில பகுதிகளைத் தடுக்க, துருக்கி அதன் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியமை பார்க்கப்படவேண்டியதாகும். இது, ஏற்கெனவே சிக்கலான தன்மையுடைய  பிராந்தியப் பாதுகாப்புக்கு, மேலுமோர் அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட வேண்டியதாகும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஐ-அமெரிக்கா-துருக்கி-முறுகல்-நிலைமை/91-211998

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.