Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காய்கறி போல விற்கப்படும் போதை பொருட்கள், கட்டுப்படுத்த வழி தெரியாமல் நிற்கும் காவல் துறையினர்

Featured Replies

காய்கறி போல விற்கப்படும் போதை பொருட்கள், கட்டுப்படுத்த வழி தெரியாமல் நிற்கும் காவல் துறையினர்

 

இங்கு கொக்கையன் உட்பட அனைத்து போதை பொருட்களும் சுலபமாக வாங்கமுடியும். ஏன் கொலை செய்வதற்கு கூட இங்கு ஆட்கள் கிடைக்கிறார்கள்.

டார்க் வெப்

"இணையத்தின் இருண்ட பக்கத்தைப் பற்றி நான் 2010 ஆம் ஆண்டுதான் அறிந்தேன். இது குறித்து ஒரு திரைப்படத்தை பார்த்தேன். வாழ்க்கை எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் செல்கிறது. ஏதாவது புதுமையாக, சிலிர்ப்பான விஷயத்தை செய்ய வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டு என் பிறந்தநாளின் போது முடிவு செய்தேன். ஒரு சுவாரஸ்யத்திற்காக, இணையம் மூலமாக, எல்.எஸ்.டி, கொக்கைன், ஹெராயின் ஆகியவற்றை வாங்கினேன். வாங்கினேன் என்றால், மிகவும் சிரமப்பட்டு எல்லாம் இல்லை. அவர்கள் வீட்டு வாசலுக்கே வந்து கொடுத்து சென்றார்கள்"

இவ்வாறு தராங் தன் உரையாடலை தொடங்கி, இணையத்தில் எப்படி போதை பொருட்கள் எல்லாம் சுலபமாக கிடைக்கிறது என்பது குறித்து விவரிக்க தொடங்கினார்.

சுலபமாக என்றால் மிக சுலபமாக, வீட்டிற்கே வந்து காய்கறிகளை விநியோகிக்கும் இணையதளங்கள் உள்ளதுதானே... அது போல, போதை பொருட்களையும் வீட்டு வாசலுக்கே வந்து தருகிறார்கள்.

மேலும், "நான் இணையம் மூலமாக ஆர்டர் செய்தேன் தானே...? அந்த இணைய முகவர் என்னிடம் கேட்டார்... உங்களுக்கு எப்படி விநியோகிக்க வேண்டும்? உணவு டப்பா மூலமாகவா அல்லது விளையாட்டு பொருட்கள் உள் வைத்து தரவா என்று வினவினார். நான் விளையாட்டு பொருட்கள் உள் வைத்து தாருங்கள் என்றேன்". என்று விவரிக்கிறார் தராங்.

டார்க் வெப்

"அவர்கள் தொலைபேசியை பயன்படுத்தவே இல்லை. அவர்கள் என்னை மின்னஞ்சல் மூலமாக மட்டும் தொடர்பு கொண்டு, உங்களுக்கு சரியாக எத்தனை மணிக்கு விநியோகிக்க வேண்டும் என்று கேட்டார்கள். நான் நேரத்தை குறிப்பிட்டேன். அந்த நேரத்திற்கு சரியாக வந்து கதவை தட்டி அந்த போதை பொருளை விநியோகித்தார்கள். இதற்கு ரசீதும் கொடுத்தார்கள்."என்கிறார் தராங்.

டார்க் வெப் என்றால் என்ன?

நாம் இணையத்தின் ஒரு பகுதியை மட்டும்தான் பயன்படுத்துகிறோம். இதனை மேற்பரப்பு இணையம் என்கிறோம். அதற்கு கீழ், ஆழமான இணைய பரப்பு ஒன்று இருக்கிறது. அதன் ஒரு பகுதி இருள் நிறைந்தது. அனைத்து சட்டவிரோத காரியங்களும் அங்குதான் நிகழ்கிறது.

இந்த இணைய பரப்பை நாம் வழக்கமான தேடல் தளத்தில் கண்டுபிடிக்க முடியாது.

டார்க் வெப் என்று அழைக்கப்படும் இதில், ஆயிரகணக்கான இணையதள பக்கங்கள் உள்ளன. இங்குதான் மொத்த கள்ளசந்தையும் இயங்குகின்றன.

இதில் எத்தனை விற்பனையாளர்கள் இயங்குகிறார்கள்...எத்தனை முகவர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம்.

டார்க் வெப்

சுதிர் ஹிராய்மத், காவல்துறை இணை ஆணையர் (பூனே சைபர் செல்) "அதில் எவ்வளவு வணிகம் நடைப்பெறுகிறது என்று கண்டுப்பிடிப்பது மிகவும் கடினம். ஆனால், ஒரு முறை டார்க் வெப் கள்ளசந்தையில் தோராயமாக எவ்வளவு வணிகம் நடைபெறுகிறது என்ற தகவலை எஃப்.பி.ஐ வெளியிட்டது. அதில் நடைபெறும் மொத்த வணிகம் 1200 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்" என்கிறார்.

'பட்டு சாலை' இணையதளம்தான் கள்ளசந்தைக்கு பிரசித்திப்பெற்றது. இது 2013 ஆம் ஆண்டு எஃப்.பி.ஐ- ஆல் மூடப்பட்டது.

டார்க் வெப் எப்போது தொடங்கப்பட்டது?

கள்ளசந்தைக்காகவெல்லாம் `டார்க் வெப்` தொடங்கப்படவில்லை. இது தொடங்கப்பட்டது 1990 ஆம் ஆண்டு. தொடங்கியவர்கள் அமெரிக்க ராணுவத்தினர். ரகசிய தகவல்களை பாதுகாப்பாக அவர்களுக்குள் பரிமாறிக் கொள்ளதான் இதனை தொடங்கினார்கள்.

ஆனால், இப்போது அது வேறுகாரணங்களுக்காகதான் பயன்படுத்தப்படுகிறது.

இந்த டார்க் வெப் மூலமாக, நாம் இப்போது சயனைட் மற்றும் ஆபத்தான போதை பொருட்களை வீட்டிலிருந்தப்படியே பெறலாம்.

காவல்துறை இணை ஆணையர், சுதிர் ஹிராய்மத், "இந்த டார்க் வெப் மூலமாக ஆயுதங்கள் பெற முடிகிறது. ஏன் பணத்திற்காக கொலை செய்யும் கொலைகாரர்களை கூட தொடர்பு கொள்ள முடிகிறது" என்கிறார்.

டார்க் வெப்படத்தின் காப்புரிமைCHRISTOPHER FURLONG/GETTY IMAGES

இந்தியாவில் இது பெரும்பாலும் போதை பொருள், குழந்தைகள் தொடர்புடைய பாலியல் விஷயங்களுக்காகதான் இந்த டார்க் வெப் பயன்படுகிறது என்கிறார்.

சட்டங்கள் நாட்டிற்கு நாடு வேறுப்படுகிறது. அதனால், அறமற்ற இந்த தொழிலின் போக்கும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.

ஏமாற்றுகாரர்களும் இந்த `டார்க் வெப்` -ஐ பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், அவர்கள் இதன் மூலமாக போலி பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம்... இன்னப்பிற அடையாள அட்டைகளையும் பெற முடிகிறது.

இது அனைத்தையும் கடந்து, நாம் டார்க் வெப் மூலம் `ஹேக்கர்ஸ்`- உடன் கூட தொடர்பு கொள்ள முடிகிறது.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு இந்த டார்க் வெப் மூலம் நிதி திரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் அப்படியான சம்பவங்கள் ஏதும் இல்லை என்கிறது காவல்துறை.

கண்காணிப்பது கடினம்

வெங்காயத்தில் எப்படி பல அடுக்குகள் இருக்குமோ... அது போல பல அடுக்குகள் கொண்ட உலாவிகள் (பிரவுசர்ஸ்) உள்ளது என்கிறார் சுதிர் ஹிராய்மத்.

இது குறித்து விவரிக்கும் அவர், "சாதாரண உலாவிகள் மற்றும் தேடு தளங்களை கண்காணிக்க முடியும். கூகுள் நம்மை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், டார்க் வெப்பை கண்காணிப்பது கடினம். சில மென்பொருட்களை பயன்படுத்தி, கணிணி ஐ.பி முகவரியை மறைத்துவிடுகிறார்கள். அதனால் யார் இதனை பயன்படுத்துகிறார்கள் என்று கண்டுப்பிடிப்பது கடினம்." என்கிறார்.

இதனால், இதில் நடைப்பெறும் சட்டவிரோத சம்பவங்களை கண்காணிப்பது, அதில் ஈடுப்படுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது.

பிட்காயினில் கட்டணம்

`டார்க் வெப்`உம் டிஜிட்டல் சந்தை போலதான். ஆனால், இரண்டுக்கும் உள்ள ஒரே விஷயம் டார்க் வெப் சட்டவிரோதமானது. அதில் விற்பதும், வாங்குவதும் குற்றச்செயல்.

பிட்காயின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமேசான், ஃப்ளிப்கார்ட் போல, வாடிக்கையார்களை ஈர்க்க டார்க் வெப் இணைய விற்பனை சந்தையிலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இதுமட்டுமல்லாமல், பிற வாடிக்கையாளர்களுடன் நாம் உரையாடும் வாய்ப்பையும் இது ஏற்படுத்தி தருகிறது.

இதில் கட்டணத்தை பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி மூலமாக செலுத்தலாம்.

கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை கண்காணிப்பது கடினம். அதனால், முறைகேடான விஷயங்களுக்கு அதில் பரிவர்த்தனை நடைபெறுகிறது.

ஏன் இளைஞர்கள் டார்க் வெப்பால் ஈர்க்கப்படுகிறார்கள்?

இளைஞர்கள் டார்க் வெப்பால் ஈர்க்கப்பட முக்கிய காரணம் அது தரும் சுவாரஸ்யமும் சாகச உணர்வும்தான்.

மற்றும் இதன் மூலமாக சுலபமாகவும், பாதுகாப்பாகவும் போதை பொருட்கள் வாங்க முடிகிறதுதானே... அதுவும் ஒரு காரணம். அரசாங்கத்திடம் எந்த முறையான தகவல்கள் இல்லாமல் போனாலும், இந்தியாவில் ஏறத்தாழ 7 கோடி பேர் போதை மருந்து பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது. சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகம், எய்ம்ஸுடன் இணைந்து போதை மருந்து பயன்படுத்துவோர் குறித்து ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்போவதாக 2016 ஆம் ஆண்டு கூறியது. இதன் தரவுகள் இவ்வாண்டு கிடைக்கும்.

இந்திய காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது?

பட்டு சாலை இணையதளம்தான் இந்த முறைகேடான வணிகத்தில் முக்கிய பங்காற்றியது. 2013 ஆம் ஆண்டு அது மூடப்பட்டப் பின், மீண்டும் அது செயல்படுவதற்கான முயற்சிகளை எடுத்தது.

மீண்டும் அதனை மூட, 2014 ஆம் ஆண்டு ஈரோபோல் எஃப்.பி.ஐ-க்கு உதவியது.

டார்க் வெப்

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஹன்ஸா மற்றும் எல்ஃபேப் எனும் இரண்டு டார்க் வெப் இணையதளங்களை மூடியதாக டச்சு தேசிய காவல்துறையும், எஃப்.பி. ஐ -உம் கூறியது.

டார்க் வெப்பை கையாள நம்மிடம் தனித்துவமான சட்டங்கள் எதுவும் இல்லை. நம்மிடம் தொக்கி நிற்கும் ஒரு கேள்வி என்னவென்றால், இதனை தடுக்க நமது காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள் என்னவென்பதுதான்.

சர்வதேச கொள்கை வல்லுநரான சப்தி சதுர்வேதி,"நமது சட்டத்தில் தனித்துவமான தனிப்பிரிவுகள் எதுவும் இல்லாததால், இதில் ஈடுபடும் சட்டவிரோதிகளை கண்டறிவது கடினம். அதுமட்டுமல்ல, இவர்களை கையாள போலீஸ் பிரிவுகளும் நம்மிடம் இல்லை" என்கிறார்.

பின் எப்படி நம் காவல்துறையினர் டார்க் வெப்பை கையாள்கிறார்கள்?

காவல்துறை இணை ஆணையர், சுதிர் ஹிராய்மத், "கட்டமைப்பில், தொழில்நுட்பத்தில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான். ஆனால், நாங்கள் பிற அமைப்புகளின் உதவியுடன் இதனை கையாள்கிறோம்" என்கிறார்.

வேறு எதற்கு பயன்படுகிறது?

வேறு சில காரணங்களுக்கும் டார்க் வெப் பயன்படுகிறது.

ஜூலியன் அசான்ஜேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜூலியன் அசான்ஜே

எட்வர்ட் ஸ்னோடவுன் டார்க் வெப்பில்தான், அமெரிக்கா எப்படி சாமனிய மக்களின் அந்தரங்க விஷயங்களை திருடுகிறது என்பதை பகிர்ந்து இருந்தார்.

ஜூலியன் அசான்ஜே பிபிசி -க்கு அளித்த ஒரு நேர்காணலில் தனக்கு எப்படி டார்க் வெப் பயன்பட்டது என்பது குறித்து விவரித்து இருந்தார்.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சில ஆஃப்ரிக்க தேசங்களை சேர்ந்தவர்களும் டார்க் வெப் மூலமாக தங்கள் தேசத்தில் நடக்கும் விஷயங்களை பகிர்கிறார்கள்.

(இந்த கட்டுரை, டெல்லியை சேர்ந்த ஓர் இளைஞர் பிபிசியிடம் கூறியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது. அவர் டார்க் வெப் மூலமாக எப்படி போதை மருந்துகளை வாங்கினார் என்று விவரித்து இருந்தார். அவரின் பெயரை இங்கு மாற்றி வெளியிட்டு இருக்கிறோம். டார்க் வெப்பை மக்கள் மத்தியில் பிரபலமாக்க வேண்டும் என்பது நம் நோக்கம் அல்ல. டார்க் வெப் குறித்த ஒரு புரிதலை உண்டாக்க வேண்டும், அது எவ்வளவு ஆபத்தானது என்பதை விவரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.)

http://www.bbc.com/tamil/india-43248049

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.