Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கு­வதில் எமக்கும் விருப்­பமே

Featured Replies

மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கு­வதில் எமக்கும் விருப்­பமே

01-61dd72cad6919fced838be591e2b3eb631a17259.jpg

 

மஹிந்த தரப்பு எம்­முடன் இணை­ய­வேண்டும் என்­கிறார் அமைச்சர் அம­ர­வீர
(ஆர்.யசி)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்கும் விருப்பம் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல எமக்கும் உள்­ளது. எப்­ப­டி­யேனும் மஹிந்த தரப்பை எம்­முடன் இணைத்­துக்­கொண்டு பய­ணிக்க முடி­யு­மாயின் அதனை செய்­ய­வேண்டும் என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள வேண்­டிய பல கார­ணி­களில் அர­சாங்கம் தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­பட்­டமை எமது தோல்­வி­க­ளுக்கு பிர­தான காரணம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

வீரக்­கெட்­டிய பிர­தே­சத்தில் நேற்று மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டபோதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த காலங்­களில் எமக்கு பல வெற்­றிகள் கிடைக்­காமல் போய்­விட்­டன. முழு நாட்டின் ஆத­ரவும் ஒரு பக்­க­மாக சேர்ந்­துள்­ளது. மக்­களின் ஆத­ரவு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பக்கம் மட்­டுமே சென்­றுள்­ளது. கடந்த தேர்­தலில் வெற்றிக் காற்று அவர்கள் பக்கம் வீசி­யதை அனை­வரும் அறிவோம். இதற்கு அர­சாங்­க­மாக நாம் பொறுப்­புக்­கூற வேண்டும். அர­சாங்­கத்தின் பக்­கமும் பல்­வேறு தவ­றுகள் இடம்­பெற்­றன. இந்த தோல்வி ஒரே நேரத்தில் இடம்­பெற்ற ஒன்­றல்ல. கடந்த காலங்­களில் அர­சாங்­கத்தின் அச­மந்த செயற்­பா­டு­களே இதற்குக் கார­ண­மாகும். கடந்த காலத்தில் சில பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­மு­டிந்தும் அவற்றை கருத்தில் கொள்­ளாது தீர்­வு­களை பற்றி சிந்­திக்­காது செயற்­பட்­டமை எமது தோல்­விக்கு பிர­தான கார­ண­மாகும்.

  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை அவ­ம­திக்கும் வகையில் சில மோச­மாக கருத்­துக்­களை முன்­வைத்­தமை, அவ­ரது பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­படும், அவர் தண்­டிக்­கப்­ப­டுவார் என்ற விமர்­ச­னங்கள் என அனைத்­துமே எமக்கு பாத­க­மாக அமைந்­து­விட்­டன. இந்த தாக்­கங்கள் அனைத்­துமே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யையே பாதித்­தன. கடந்த தேர்­தலில் மக்கள் மஹிந்த ராஜபக் ஷவின் அணிக்கு ஏன் வாக்­க­ளித்­தனர் என கேட்கும்போது தேர்தல் முடிந்து அடுத்த நாளே அவர் பிர­தமர் ஆவார் என்ற நம்­பிக்­கை­யி­லேயே நாம் வாக்­க­ளித்தோம் என மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

மஹிந்த ராஜபக் ஷவை பிர­தமர் பொறுப்­புக்குக் கொண்­டு­வர நாமும் விரும்­பு­கின்றோம். மக்­களின் விருப்பம் மட்­டு­மல்ல எமது தரப்பும் அத­னையே விரும்­பு­கின்­றது. அவரை எம்­முடன் இணைத்­துக்­கொண்டு செயற்­ப­டு­வதில் எம்­மத்­தியில் எதிர்ப்பில்லை. எனினும் அவரை பிர­த­ம­ராக்க முடி­ய­வில்லை என நினைத்­த­வுடன் வாக்­க­ளித்த மக்­களும் அதி­ருப்­தியில் உள்­ளனர். எனினும் எம்மால் எத­னையும் மக்­க­ளுக்கு கூற முடி­யாது. அமை­தி­யா­கவே நாம் இருக்­க­வேண்­டி­யுள்­ளது.

 ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக நாம் எமது வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து செல்­கின்றோம். மக்­க­ளுக்கு சேவை­யாற்­றவே நாம் முன்­வந்­துள்ளோம். எனவே எமது வேலைத்­திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுக்க வேண்டும். அதேபோல் எமது வேலைத்­திட்­டங்­களை மஹிந்த தரப்பும் அவ­தா­னித்து வரு­கின்­றது. எவ்­வாறிருப்­பினும் எதிர்­கா­லத்தில் அவர்களும் எம்முடன் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சரியான திசையில் நாட்டை கொண்டுசெல்ல சரியான ஆட்சியினை உரு

வாக்க வேண்டும்.

இதில் மக்கள் யாரை ஆதரிக்கின்றனர் என்பதற்கமையவே தீர்மானங்கள் முன் னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-06#page-2

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பிரதமரானால், ஓரிரு வாரங்களில் ஜனாதிபதி ஆவார். பின்னர் நாட்டில் ஜனாதிபதி தேர்தலே நடவாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.