Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் பள்ளிவாசல் முன் ரயர் எரிப்பு : பதற்றத்தில் மக்கள்

Featured Replies

  •  
  • வவுனியாவில் பள்ளிவாசல் முன் ரயர் எரிப்பு : பதற்றத்தில் மக்கள்
6566.jpg

வவுனியாவில் பள்ளிவாசல் முன் ரயர் எரிப்பு : பதற்றத்தில் மக்கள்

 

வவுனியா பூந்தோட்டம் மதீனா நகர் பள்ளிவாசல் முன்பாக இனந்தெரியாத சந்தேக நபர்களால் ரயர் எரியூட்டப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.

கண்டியில் தற்போது சிங்கள, முஸ்ஸிம் மக்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தச் சம்பவம் முஸ்ஸிம் மக்களிடையே பெரிய பதற்ற நிலை காணப்படுகின்றது.

இதனால் இந்தக் கிராமமக்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே விரிசலை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என பொலிஸார் சந்தேகின்ற நிலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

unnamed-1-2.jpg

http://newuthayan.com/story/74161.html

  • தொடங்கியவர்

வவுனியாவில் டயர் எரிக்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து இன்று அவசர சந்திப்பு

 

 

வவுனியாவில் சர்வமத தலைவர்கள் மற்றும் முப்படையினர் பொலிஸாரை அழைத்து அரசாங்க அதிபர் அவசர சந்திப்பொன்றினை இன்று மேற்கொண்டார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில்  இன்று 2 மணியளவில்  அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன தலைமையில் ஆரம்பமான இச் சந்திப்பில் சர்வ மத தலைவர்கள் கலந்துகொண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.

online_New_Slide__3_.jpg

வவுனியாவில் நேற்றைய தினம் மதினாநகர் பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாதோரால் டயர் எரிக்கப்பட்ட சம்பவத்தினை அடுத்து அவசரமான இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் வவுனியா மாவட்டத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அனைவரும் ஒத்துழைக்க வெண்டும் என சர்வ மத தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதன்போது பொலிஸ் அதிகாரிகள், இராணுவ, விமானப்படை, கடற்படை உயர் அதிகாரிகள், வவுனியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

http://www.virakesari.lk/article/31368

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தாயக நேரம் அதிகாலை 12.05 வட தமிழீழம், பூந்தோட்டம் மதீனா நகர் பள்ளிவாசல் முன்பாக இனந்தெரியாத சந்தேக நபர்களினால் டயர் ஒன்று எரியூட்டப் பட்டுள்ளது. இதனால் இக் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் காணப்படுவதுடன் இச் சம்பவம் பெரும்பான்மை இனவாதிகளால் செய்யப்பட்டதா? அல்லது தமிழ் முஸ்லீம் உறவுகளுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த செய்யப்பட்டதா? என்பது தொடர்பில் குழப்பமாக காணப்படுகின்றது. பொலிசாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

http://eeladhesam.com/?p=16254

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.