Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டியில் தொடர்கிறது வன்முறை; 24 மணி நேர ஊரடங்கு அமுல்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Featured Replies

கண்டியில் தொடர்கிறது வன்முறை; 24 மணி நேர ஊரடங்கு அமுல்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

01-6c7fcc8fad8be1cf3b459499636c496369f58900.jpg

 

மேலதிகமாக கடற்படையினர் குவிப்பு

மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்குள் முடக்கம்
(கண்டியிலிருந்து எம்.எப்.எம்.பஸீர்)

கண்டியில் அவசரகால சட்டத்திற்கு அமைவாக 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டபோதிலும் கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நேற்றும் தொடர்ந்தன. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்திற்கு மத்தியில் தமது இருப்பிடங்களுக்குள் முடங்கியிருந்தனர்.

வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கண்டியில் முப்படையினரும் பொலிஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் நேற்றுமுன்தினம் இரவு மெனிக்ஹின்ன மற்றும் தென்னகும்பற பகுதிகளில் பள்ளிவாசல், அகதியா பாடசாலை, மற்றும் வீடுகள் தாக்கப்பட்டும் எரியூட்டப்பட்டும் சேதமாக்கப்பட்டுள்ளன. இது தவிர, எழுகொட, பெனிதெனிய பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே, நேற்று மதியம் அம்பத்தென்ன, கட்டுகஸ்தோட்டை, அக்குறனை, பெனிதெனிய, எழுகொட, வத்தேகம, மடவளை, குருந்துகொல்ல ஆகிய பகுதிகளிலும் இனவாதிகளினால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதன்போது, பல வீடுகளும் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட சம்பவம் ஒன்று காரணமாக நான்கு இளைஞர்களால் தாக்கப்பட்ட பெரும்பான்மையின சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துடன், அவரது இறுதிக்கிரியை கடந்த திங்களன்று இடம்பெற்றது. இதன்போது, குறித்த விவகாரம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிடப்பட்டு திருப்பிவிடப்பட்டமையையடுத்து இனவாதிகள் முஸ்லிம் மக்களை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர்.

இதனால், கடந்த திங்கட்கிழமை திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. அத்துடன் மரண சடங்குகளின் பின்னர் திகன நகரில் உள்ள முஸ்லிம் பள்ளிகள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் திட்டமிட்டு தாக்கப்பட்டன.

இதனையடுத்து அன்றைய தினம் இரவு கண்டியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை வரை ஊரடங்கு அமுலில் இருந்தது. இந்நிலையில், கண்டி பகுதியில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து தெல்தெனிய மற்றும் பொல்கொல்ல பொலிஸ் பிரிவுப் பகுதியில் ஊரடங்கு அமுலுக்கு வந்தது.

வன்முறைத் தாக்குதல்கள் மேலும் பல இடங்களுக்கு பரவியமையையடுத்து செவ்வாய் இரவு மீண்டும் ஊரடங்கு அமுலானது. நேற்று புதன்கிழமை காலை கட்டுகஸ்தோட்டை அக்குறணை பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றதையடுத்து மறு அறிவித்தல்வரை கண்டி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் அவசரகால கட்டளைச் சட்டத்தின் ஐந்தாவது அத்தியாயத்திற்கமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரகால நிலைமையை பிரகடனம் செய்துள்ளமையை கருத்திற்கொண்டு 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர நிலைமை கட்டளைகளுக்கு அமைவாக பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கண்டி மாவட்டத்திற்கு நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை 24 மணி நேர ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கமைய இக்காலப்பகுதியில் அரச சேவையாளர்கள் பொலிஸ், முப்படை வீரர்கள் தவிர ஏனையோர் ஊரடங்கு அமுலாக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பொதுப்பாதைகள், புகையிரத பாதைகள் பூங்காக்கள், திடல்கள் உள்ளிட்ட எந்தவொரு பொது இடங்களிலும் இருத்தல், அதனூடாக பயணம் செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவரேனும் குறித்த இடங்களூடாக பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அது தொடர்பில் ஏதேனும் பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியின் எழுத்துமூல அனுமதி பெறப்படல் வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

தென்னகும்பறை தாக்குதல்

தென்னகும்பறை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ஊடுருவிய இனவாத தாக்குதல்தாரிகள் அங்கு அகதியா பாடசாலையின் கண்ணாடிகளை பொல்களால் தாக்கியுள்ளதோடு, குறித்த அகதிய்யா பாடசாலைக்குள் பெற்றோல் குண்டுத்தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். இதனைவிட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தவிர தென்னகும்பர பாலத்துக்கு அருகாமையிலுள்ள ப்ளக் என்ட் வைட் எனும் தளபாட காட்சியறையொன்றை தீக்கிரையாக்கியுள்ளனர். அத்துடன் முச்சக்கரவண்டியொன்றும் இரு மோட்டார் சைக்கிள்களும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.

மெனிக்ஹேன

மெனிக்ஹேன பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் வர்த்தக நிலையங்கள், குடியிருப்புகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 400 க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட இனவாதக் குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் எட்டு பேரை கைதுசெய்துள்ளனர்.

பெனிதெனிய, எழுகொட பகுதியில் தாக்குதல்

பெனிதெனியவிலுள்ள சாவியா ஒன்றின் மீதும் எழுகொடயொன்றின் மீதும் நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அம்பத்தென்ன

நேற்றுக் காலை 9 மணியளவில் அம்பத்தனை பகுதிக்குள் புகுந்த இனவாதக் கும்பல் ஒன்று அங்குள்ள பன்சலையொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோதும் நிலைமை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய தாக்குதல்தாரிகள் கட்டுகஸ்தோட்டை நோக்கி நகர்ந்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை

கட்டுகஸ்தோட்டை நகரிலுள்ள உணவகம், ஆடையகம் மற்றும் மருந்தகம் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தக்கியா பள்ளியொன்றின் மீதும் பெற்றோல் குண்டுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அக்குறணை

நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் ஏ9 வீதி ஊடாக மாத்தளை பகுதியிலிருந்து அக்குறணை நகருக்குள் நுழைய முற்பட்ட தாக்குதல் தாரிகள் அக்குறணை 8ஆம் கட்டை மல்வானஹின்ன பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அங்குள்ள சில கடைகளை எரியூட்டியுள்ளனர். இதன்போது விரைந்த பொலிஸார் எதிர்தாக்குதல்களை மேற்கொண்டமையால் தாக்குதல்தாரிகள் பின்வாங்கியுள்ளனர்.

வத்தேகம

நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வத்தேகம ஜூம்ஆப் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் நொருக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோல் குண்டும் வீசப்பட்டுள்ளது.

மடவளை

மடவளை பிரதேசத்திலுள்ள இரும்புக் களஞ்சியம் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், அவ்விரும்புச் களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது.

மேலதிக பாதுகாப்பு

கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. உச்ச பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்றைய தினம் வரை தொடர்பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இதற்கு மேலதிகமாக கடற்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரதான சந்திகளில் குழுக்களாகவும் முஸ்லிம் கிராமங்கள் பள்ளிவாசல்களுக்கு அருகாமையிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மறுஅறிவித்தல்வரை பாடசாலைகள் மூடப்பட்டன

வன்முறைகள் தொடர்வதையடுத்து கண்டி மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மறுஅறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை முதல் கண்டி மாவட்டத்தில் பாடசாலைகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-08#page-1

 

 

கண்டிக்கு மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் விரைவு

 

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மூவர் பொலிஸ் அத்தியட்சர்கள் மூவர் அடங்கிய சிறப்புப் பொலிஸ் குழுக்கள் மூன்று நேற்று மாலை கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவிற்கமைவாக  வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­குடன், பாது­காப்பை பலப்­ப­டுத்தும் வகையில் கண்­டியில் முப்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் பெரு­ம­ளவில் குவிக்­கப்­பட்­டுள்­ளனர். 

அத்­துடன் நேற்­று­முன்­தினம் இரவு மெனிக்­ஹின்ன மற்றும் தென்­ன­கும்­புர பகு­தி­களில் பள்­ளி­வாசல், அக­தியா பாட­சாலை, மற்றும் வீடுகள் தாக்­கப்­பட்டும் எரி­யூட்­டப்­பட்டும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. இது தவிர, எலு­கொட, பெனி­தெ­னிய பகு­தி­க­ளிலும் பள்­ளி­வா­சல்கள் மீது கல்­வீச்சுத் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இத­னி­டையே, நேற்று மதியம் அம்­பத்­தென்ன, கட்­டு­கஸ்­தோட்டை, அக்­குரணை, பெனி­தெ­னிய, எலுகொட, வத்­தே­கம, மட­வளை, குருந்­து­கொல்ல ஆகிய பகு­தி­க­ளிலும் இன­வா­தி­க­ளினால் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன. இதன்­போது, பல வீடு­களும் வர்த்­தக நிலை­யங்களும் தாக்­கப்­பட்­டுள்­ளன.

தனிப்­பட்ட சம்­பவம் ஒன்று கார­ண­மாக நான்கு இளை­ஞர்­களால் தாக்­கப்­பட்ட பெரும்­பான்­மை­யின சாரதி சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­ததுடன், அவ­ரது இறு­திக்­கி­ரியை கடந்த திங்­க­ளன்று இடம்­பெற்­றது. இதன்­போது, குறித்த விவ­காரம் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக திட்­ட­மி­டப்­பட்டு திருப்­பி­வி­டப்­பட்­ட­மை­யை­ய­டுத்து இன­வா­திகள் முஸ்லிம் மக்­களை இலக்­கு­வைத்து தாக்­கு­தல்­களை நடத்த ஆரம்­பித்­தனர்.

இதனால், கடந்த திங்­கட்­கி­ழமை திகன மற்றும் தெல்­தெ­னிய பகு­தி­களில் பதற்றம் ஏற்­பட்­டது. அத்­துடன் மரண சடங்­கு­களின் பின்னர் திகன நகரில் உள்ள முஸ்லிம் பள்­ளிகள், வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள் திட்­ட­மிட்டு தாக்­கப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து அன்­றைய தினம் இரவு கண்­டியில் ஊர­டங்குச் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. மறுநாள் செவ்­வாய்க்­கி­ழமை காலை வரை ஊர­டங்கு அமுலில் இருந்­தது. இந்­நி­லையில், கண்டி பகு­தியில் மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து தெல்­தெ­னிய மற்றும் பொல்­கொல்ல பொலிஸ் பிரிவுப் பகு­தியில் ஊர­டங்கு அமு­லுக்கு வந்­தது.

வன்­முறைத் தாக்­கு­தல்கள் மேலும் பல இடங்­க­ளுக்கு பர­வி­ய­மை­யை­ய­டுத்து செவ்வாய் இரவு மீண்டும் ஊர­டங்கு அமு­லா­னது. நேற்று புதன்­கி­ழமை காலை கட்­டு­கஸ்­தோட்டை அக்­கு­றணை பகு­தி­களில் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து மறு அறி­வித்­தல்­வரை கண்டி மாவட்டம் முழு­வதும் ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்­டது.

பின்னர் அவ­ச­ர­கால கட்­டளைச் சட்­டத்தின் ஐந்­தா­வது அத்­தி­யா­யத்­திற்­க­மை­வாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவ­ச­ர­கால நிலை­மையை பிர­க­டனம் செய்­துள்­ள­மையை கருத்­திற்­கொண்டு 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவ­சர நிலைமை கட்­ட­ளை­க­ளுக்கு அமை­வாக பொலிஸ்மா அதி­ப­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி கண்டி மாவட்­டத்­திற்கு நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை 24 மணி நேர ஊர­டங்கு சட்டம் பிறப்­பிக்­கப்­பட்­டது.

இதற்­க­மைய இக்­கா­லப்­ப­கு­தியில் அரச சேவை­யா­ளர்கள் பொலிஸ், முப்­படை வீரர்கள் தவிர ஏனையோர் ஊர­டங்கு அமு­லாக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் உள்ள பொதுப்­பா­தைகள், புகை­யி­ரத பாதைகள் பூங்­காக்கள், திடல்கள் உள்­ளிட்ட எந்­த­வொரு பொது இடத்திலும் இருத்தல், அத­னூ­டாக பயணம் செய்தல் தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனினும், எவ­ரேனும் குறித்த இடங்­க­ளூ­டாக பய­ணிக்க வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்டால் அது தொடர்பில் ஏதேனும் பொலிஸ் நிலை­ய­மொன்றின் பொறுப்­ப­தி­கா­ரியின் எழுத்­து­மூல அனு­மதி பெறப்­படல் வேண்டும் என பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­துள்­ளது.

தென்­ன­கும்புர தாக்­குதல்

தென்­ன­கும்­புர பகு­தியில் நேற்­று­முன்­தினம் இரவு ஊடு­ரு­விய இன­வாத தாக்­கு­தல்­தா­ரிகள் அங்கு அக­திய்யா பாட­சா­லையின் கண்­ணா­டி­களை பொல்லு­களால் தாக்­கி­யுள்­ள­தோடு, குறித்த அக­திய்யா பாட­சா­லைக்குள் பெற்றோல் குண்­டுத்­தாக்­கு­த­லையும் மேற்­கொண்­டுள்­ளனர். இத­னை­விட ஐந்­துக்கும் மேற்­பட்ட வீடு­களின் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இது தவிர தென்­ன­கும்புர பாலத்­துக்கு அரு­கா­மை­யி­லுள்ள ப்ளக் என்ட் வைட் எனும் தள­பாட காட்­சி­ய­றை­யொன்றை தீக்­கி­ரை­யாக்­கி­யுள்­ளனர். அத்­துடன் முச்­சக்­க­ர­வண்­டி­யொன்றும் இரு மோட்டார் சைக்­கிள்­களும் எரித்து நாச­மாக்­கப்­பட்­டுள்­ளன.

மெனிக்ஹின்ன

மெனிக்ஹின்ன பகு­தியில் நேற்­று­முன்­தினம் இரவு பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. அத்­துடன் வர்த்­தக நிலை­யங்கள், குடி­யி­ருப்­புகள் மீதும் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. 400 க்கும் மேற்­பட்ட நபர்­களை கொண்ட இன­வாதக் குழு இந்த தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ளது. இதனை கட்­டுப்­ப­டுத்த விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் ஆகா­யத்தை நோக்கி துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் மேற்­கொண்­டுள்­ளனர். அத்­துடன் எட்டு பேரை கைது­செய்­துள்­ளனர்.

பெனி­தெ­னிய, எலுகொட பகு­தியில் தாக்­குதல்

பெனி­தெ­னி­ய­வி­லுள்ள சாவியா ஒன்றின் மீதும் எலுகொ­ட­யிலும் நேற்­று­முன்­தினம் இரவு இனந்­தெ­ரி­யாத நபர்­களால் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

அம்­பத்­தென்ன

நேற்றுக் காலை 9 மணி­ய­ளவில் அம்­பத்­தென்ன பகு­திக்குள் புகுந்த இன­வாதக் கும்பல் ஒன்று அங்­குள்ள விகாரையொன்றின் மீது தாக்­குதல் நடத்­தி­ய­துடன் பள்­ளி­வாசல் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள் மீதும் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது. இதன்­போது பொலிஸார் தாக்­கு­தல்­களை மேற்­கொண்டு அவர்­களை கட்­டுப்­ப­டுத்த முயன்­ற­போதும் நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது. இத­னை­ய­டுத்து விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் அழைக்­கப்­பட்­டுள்­ளனர். இதன் பின்னர் அங்­கி­ருந்து வெளி­யே­றிய தாக்­கு­தல்­தா­ரிகள் கட்­டு­கஸ்­தோட்டை நோக்கி நகர்ந்­துள்­ளனர்.

கட்­டு­கஸ்­தோட்டை

கட்­டு­கஸ்­தோட்டை நக­ரி­லுள்ள உண­வகம், ஆடை­யகம் மற்றும் மருந்­தகம் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அத்­துடன் தக்­கியா பள்­ளி­யொன்றின் மீதும் பெற்றோல் குண்­டு­ தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

அக்­கு­ரணை

நேற்று பிற்­பகல் ஒரு மணிக்கு பின்னர் ஏ9 வீதி ஊடாக மாத்­தளை பகு­தி­யி­லி­ருந்து அக்­கு­ரணை நக­ருக்குள் நுழைய முற்­பட்ட தாக்­குதல்தாரிகள் அக்­குரணை 8ஆம் கட்டை மல்­வா­ன­ஹின்ன பள்­ளி­வாசல் மீது கல்­வீச்சு தாக்­குதல் மேற்­கொண்­டுள்­ள­துடன், அங்­குள்ள சில கடை­களை எரி­யூட்­டி­யுள்­ளனர். இதன்­போது விரைந்த பொலிஸார் எதிர்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­மையால் தாக்­கு­தல்­தா­ரிகள் பின்­வாங்­கி­யுள்­ளனர்.

வத்­தே­கம

நேற்­று­முன்­தினம் நள்­ளி­ரவு 12 மணி­ய­ளவில் வத்­தே­கம ஜூம்ஆப் பள்ளி மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இதன்­போது பள்­ளி­வா­சலின் ஜன்னல் கண்­ணா­டிகள் நொறுக்­கப்­பட்­டுள்­ள­துடன், பெற்றோல் குண்டும் வீசப்­பட்­டுள்­ளது.

மட­வளை

மட­வளை பிர­தே­சத்­தி­லுள்ள இரும்புக் களஞ்­சியம் ஒன்றின் மீது மோட்டார் சைக்­கிளில் வந்த நபர்­களால் பெற்றோல் குண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இதனால், அவ்­வி­ரும்புச் களஞ்­சியம் முற்­றாக எரிந்து நாசமடைந்துள்ளது.

மேலதிக பாதுகாப்பு  கடந்த சில தினங்களாக கண்டி  

மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத் தப்பட்டிருந்தது. உச்ச பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இராணுவத் தினரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்றைய தினம் வரை தொடர்பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இதற்கு மேலதிகமாக கடற்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரதான சந்திகளில் குழுக்களாகவும் முஸ்லிம் கிராமங்கள் பள்ளிவாசல்களுக்கு அருகாமையிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மறுஅறிவித்தல் வரை பாடசாலைகள் மூடப்பட்டன

வன்முறைகள் தொடர்வதையடுத்து கண்டி மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மறுஅறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை முதல் கண்டி மாவட்டத்தில் பாடசாலைகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-08#page-1

  • தொடங்கியவர்

கண்டி ஊரடங்கு சட்டம் நீக்கம்.!

 

 

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 10.00 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மீண்டும் மாலை 6 மணி முதல் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இதற்கான உத்தரவை ஜனாதிபதியின் செயலாளர் பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி - திகன நகரில் ஏற்பட்ட  அசாதாரண சூழ்நிலை காரணமாக கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்  நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31379

  • தொடங்கியவர்

பூகொடை நகரில் 5 கடைகள் தீக்கிரை

p21-24fe857b9fb0b99c9bb13c511c664e20c46307df.jpg

 

(நமது நிருபர்)

பூகொடை நகரில் நேற்று அதிகாலை ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சொந்தமான 5 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அதிகாலை 1.30 மணியளவில் தீ பரவ ஆரம்பித்ததுடன் பூகொடை பொலிஸார் பூகொடை நகரில் உள்ள தொழிற்சாலையின் தீ அணை க்கும் வாகனத்தைக் கொண்டு தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தும் 4 கடைகள் முற்றுமுழுதாக தீக்கிரையாகின.  

இக்கடைகளில் முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான ஒரு ஹோட்டல், ஒரு கைப்பை விற்பனைக்கடை ஆகியவைகளில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. ஏனைய 3 கடைகளும் மூடி வைக்கப்பட்டிந்த கடைகளாகும். 

இதனால் பிரதேசத்தில் 2 மணி நேரமாக மின்சாரம் தடைப்பட்டிருந்ததுடன் பிரதேச முஸ்லிம் மக்களிடையே பதற்றநிலை காணப்பட்டது.

நேற்றுக் காலை இவ்விடத்திற்கு விஜயம் செய்த கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித புஸ்ஸல்ல, கம்பஹா பிரதி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த உடுகம மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர் ஹாபிரஹீம் ஆகியோர் பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் நடந்த சந்திப்பில் பூகொட நகருக்கும் குமாரிமுல்லை பிரதேசத்திற்கும் அதிரடிப்படையினரின் பாதுகாப்புத் தருவதாகத் தெரிவித்தனர்.

கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் பூகொட நகரிலும் இவ்வாறான அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-08#page-1

  • தொடங்கியவர்

கண்டியில் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மரஆலையில் தீ

 

கண்டி - அக்குரணை, அம்பதென்ன, வெலேகட, பூஜாபிட்டிய வீதியில்  முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மரஆலை தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

கண்டியில் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மரஆலையில் தீ

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இனவாதிகள் தீயிட்டுக் கொழுத்திய சம்பத்தை கேள்வியுற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், குறித்த இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தீயை முற்றாக அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறித்த இடத்திலேயே தற்பொழுது இருக்கின்றார்  என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கண்டியில் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மரஆலையில் தீ

https://news.ibctamil.com/ta/internal-affairs/kandy-fire

2 hours ago, நவீனன் said:

அத்துடன், தீயை முற்றாக அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறித்த இடத்திலேயே தற்பொழுது இருக்கின்றார்  என்பதும் குறிப்பிடத்தக்கது. 

திருட்டுக்காணி புகழ் ரிஷாட் பதியுதீன் வில்பத்துவில் இருந்து கடத்திய மரங்கள் எரிவதாக சந்தேகம் எழுந்துள்ளது?

  • தொடங்கியவர்

Update: கண்டி கலவரம் : 9 பேர் கைது, மீண்டும் மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம்

 

 

கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்த பிரதான சூத்திரதாரி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கருத்து தெரிவித்துள்ளார்.

கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 12 மணித்தியாலத்திற்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Image result for ஊரடங்குச் சட்டம் virakesari

கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை இன்று முற்பகல் 10 மணிக்கு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களின் வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு இன்று காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/31400

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.