Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்தின் கவனம் இலங்கையின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளது ; ஜெப்ரி பெல்ட்மன்

Featured Replies

சர்வதேசத்தின் கவனம் இலங்கையின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளது ; ஜெப்ரி பெல்ட்மன் 

 

 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்கள் தொடர்பான உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (Jeffrey Feltman) இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினார்.

tna.jpg

5 ஆவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

முக்கியமான தருணத்தில் அவர் இங்கு வந்திருப்பதை தமிழத் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது.

இந்நிலையில் சந்திப்புக் குறித்து பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்,

அவர் ஜனாதிபதியை சந்தித்ததாக எம்மிடம் தெரிவித்தார். தற்போது இங்கு இடம்பெறும் ஸ்தீரமற்ற அரசியல் சூழ்நிலையை அவருக்கு எடுத்துரைத்துள்ளோம்.

இந்த கூட்டரசாங்கம் மக்கள் ஆணையின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் எனவே அந்த ஆணையை அவர்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அவர்களது கடமை என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மக்கள் அவர்களுக்குக் கொடுத்த ஆணையை அவர்கள் உதாசீனம் செய்து கைவிடமுடியாதென்பதை நாம் மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளோம்.

அவரும் தான் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதை வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மிகவும் காலதாமதத்துடன் ஏற்பட்டதெனவும் தற்போது அந்த முன்னேற்றம் குறைந்துள்ளது என்பதையும் அவதானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் விசேடமாக உயர்ஸ்தானிகருடைய அறிக்கையில் இது பிரதிபலிக்கப்படுமெனத் தெரிவித்தார்.

சர்வதேசத்தினுடைய கவனம் வெகுவாக இலங்கையின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த அரசாங்கம் எந்த மக்கள் ஆணையின் மூலம் ஆட்சியில் அமர்த்தப்பட்டதோ அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையினதும் பொதுவாக சர்வதேச சமூகத்தனதும் எதிர்பார்ப்பு என்பதையும் தெரிவித்தார்.

இங்கு தான் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளைப்பற்றி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரோடு கலந்துரையாடுவதுடன் அதனை அவருக்கு எடுத்துரைப்பேன் என வாக்களித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையினுடைய விசேடமாக பொதுச் செயலாளருடைய ஆதரவு இலங்கையில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்குரிய முயற்சி வெற்றிபெறவேண்டும் எனபதில் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் 2015 இல் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் முற்றுமுழுதாக செயல் வடிவம் பெறவேண்டும் என்பதில் தம்முடைய ஆதரவு இருக்கும் என்பதையும் வலியுறுத்தினார் என அவர் மேலும் தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/31463

  • தொடங்கியவர்

அழுத்தம் தொடரும்

Sambanthan-a7f13c31e07430c9b55018a4429de11c2626471d.jpg

 

சம்பந்தனிடம் உறுதியளித்தார் ஐ.நா.அரசியல் செயலர்

(ஆர்.யசி, எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதிலும் 2015 ஆம்  ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் முற்றுமுழுதாக செயல்வடிவம் பெறவேண் டும் என்பதிலும் ஐ.நா. வினதும் பொதுச்செயலாளரினதும் ஆதரவு தொடர்ச்சியாக இருக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜெப்ரி பெல்த்மென்ட் தெரிவித்துள்ளார்.  

இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மிகவும்  கால தாமதத்துடன் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பதையும் இப்போதுள்ள நகர்வுகளில் அரசாங்கத்தின் முன்னேற்றம் குறைவடைந்துள்ளது என்பதையும் சர்வதேச சமூகம் உணருவதாகவும் கூட்டமைப்பிடம் ஐ.நா. பிரதிநிதி எடுத்துரைத்துள்ளார்.  

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜெப்ரி பெல்த்மென்ட் இலங்கை வந்துள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் விசேட சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு நேற்று பாரளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கலந்துகொண்ட கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.எ. சுமந்திரன் சந்திப்பு குறித்து கேசரிக்கு கருத்து தெரிவிக்கையில், 

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் ஜெப்ரி பெல்த்மென்ட் இன் ஐந்தாவது விஜயமாக இம்முறை இலங்கைக்கான விஜயம் அமைந்துள்ளது. இலங்கை இன்று முக்கியமான ஒரு தருணத்தில் நகரும் நிலையில் அவரது வருகையினை நாம் வரவேற்கின்றோம். அவரது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரை சந்தித்த பின்னர் எதிர்க்கட்சியான எம்மையும் சந்தித்து கலந்துரையாடினார். எம்முடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது நாட்டில் இன்று நிலவும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையினை அவருக்கு எடுத்துரைத்துள்ளோம். 

இந்த கூட்டு அரசாங்கம் மக்கள் ஆணையின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த அரசாங்கமாகும். ஆகவே அவர்கள் பெற்றுக்கொண்ட ஆணையினை முழுமையாக நிறைவேற்ற வேண்டியது அரசாங்கதின் கடமை என்பதை எடுத்துரைத்துள்ளோம். ஒரு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக மக்கள் அரசாங்கத்திற்கு கொடுத்த ஆணையினை எக்காரணம் கொண்டும் கைவிட முடியாது. இந்தக் காரணியை ஆணித்தனமாக நாம் தெரிவித்துள்ளோம். அதேபோல் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தட்டிக்கழிப்பு ஏற்பட முடியாது. ஆகவே அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை தெரிவித்தோம். 

மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதருடன் இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயங்களை வலியுறுத்தியுள்ளதாக அவர் எமக்கு தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மிகவும் கால தாமதத்துடன் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பதையும் இப்போதுள்ள நகர்வுகளின் அரசாங்கத்தின் முன்னேற்றம் குறைவடைந்துள்ளது என்பது சர்வதேச சமூகம் உணருகின்றது என்பதையும் எம்மிடம் தெரிவித்தார். மேலும் இப்போது இடம்பெற்றுக்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உயரிஸ்தானிகரின் அறிக்கையில் இதன் பிரதிபலிப்பு காணப்படும், மற்றும் சர்வதேசத்தின் கவனம் வெகுவாக இலங்கையின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளது என்பதையும் இந்த அரசாங்கம் எந்த மக்கள் ஆணையின் மீது ஆட்சியில் அமர்த்தப்பட்டதோ அது முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் ஐக்கிய நாடுகள் சபையினதும் பொதுவாக சர்வதேச சமூகத்தினதும் எதிர்பார்ப்பு என்பதையும் எம்மிடம் தெரிவித்தார். 

 

இலங்கையில் அரச தலைமைகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் குறித்து மனித உரிமைகள் உயரிஸ்தானிகரிடன் கலந்துரையாடி இலங்கையின் உண்மை நிலைமைகள் குறித்து தெரிவிப்பேன் என எம்மிடம் வாக்களித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவும் பொதுச்செயலாளரின் ஆதரவும் இலங்கையில் ஒரு புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் முயற்சி வெற்றிபெற வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக இருக்கும் என்பதிலும் , 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முற்றுமுழுதாக செயல்வடிவம் பெறவேண்டும் என்பதிலும் தமது ஆதரவு இருக்கும் என்பது தெரிவித்தார் எனக் குறிப்பிட்டார்.
 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-10#page-1

  • தொடங்கியவர்

நிரந்­தர தீர்­வினைக் காணும் பணியில் சர்­வ­தேசம் தமிழர்களுக்கு உதவ வேண்டும்: ஜெப்ரி பெல்ட்­ம­னு­ட­னான சந்­திப்பில் இரா.சம்­பந்தன்

 

நமது நிருபர்

இலங்கை அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­று­தி­களை சரி­யாக நிறை­வேற்­று­வ­தனை உறுதி செய்யும் வகையில் சர்­வ­தேச சமூகம் நெருங்­கிய ஈடு­பாட்­டினை அர­சாங்­கத்­துடன் கொண்­டி­ருக்க வேண்டும். இத்­தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­ப­டு­வதில் காணப்­படும் தேவை­யற்ற இழுத்­த­டிப்­புக்கள் கார­ண­மாக மக்கள் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்­கை­யி­ழந்து வரு­கின்­றனர்.

இவ்­வாறு எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் இலங்­கைக்கு விஜயம் செய்த ஐக்­கிய நாடு­களின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரதி செய­லாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்­ம­னிடம் தெரி­வித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, செல்வம் அடைக்­க­ல­நாதன், சித்­தார்த்தன், சுமந்­திரன் ஆகியோர் அடங்­கிய குழு­வி­ன­ருக்கும் இடையில் கடந்த வியா­ழ­னன்று பாரா­ளு­மன்ற கட்­டிட தொகு­தியில் அமைந்­துள்ள எதிர்க்­கட்சி தலை­வரின் அலு­வ­ல­கத்தில் இச்­சந்­திப்பு இடம்­பெற்­றது.

இதன்­போதே இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

  அண்­மையில் இடம்­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களின் பின்­ன­ரான அர­சியல் நிலை­வரம் குறித்து உதவி செய­லாளர் நாய­கத்­துக்கு இரா.சம்­பந்தன் தெளி­வு­ப­டுத்­தினார். அது குறித்து கருத்துத் தெரி­வித்த இரா. சம்­பந்தன் தற்­போ­தைய அர­சாங்­க­மா­னது அது பெற்­றுக்­கொண்ட மக்கள் ஆணையை நிறை­வேற்ற வேண்டும் என வலி­யு­றுத்­தினேன். எக்­கா­ரணம் கொண்டும் அந்த ஆணை­யினை நிறை­வேற்­று­வ­தி­லி­ருந்து விலக முடி­யாது. மேலும் இந்த அர­சாங்­க­மா­னது புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்க செயற்­பா­டு­களை கைவிட்­டு­விட முடி­யாது. அப்­ப­டி­யாக இச் செயற்­பா­டுகள் கைவி­டப்­ப­டு­மே­யானால் இவ் அர­சாங்­க­மா­னது இலங்கை ஒரு தனி பிரிக்­க­மு­டி­யாத, பிரிக்­கப்­ப­டாத நாடு என்னும் அடிப்­ப­டையில் ஒரு அர­சியல் யாப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்­தினால் புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்கும் முக­மாக ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்த தவ­றி­யுள்­ளது என்றே பொருள்­படும். மேலும் இந்த செயற்­பா­டு­களில் சர்­வ­தேச சமூகம் ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்­பினை வழங்க வேண்டும் என்று எடுத்துக் கூறினேன்.

மேலும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைப் பேர­வையின் தீர்­மானம் தொடர்பில் கருத்துத் தெரி­வித்த இரா. சம்­பந்தன் அத்­தீர்­மானம் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும். மேலும் இலங்கை அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் சரி­யாக நிறை­வேற்­று­வ­தனை உறுதி செய்யும் வகையில் சர்­வ­தேச சமூகம் நெருங்­கிய ஈடு­பாட்­டினை அர­சாங்­கத்­தோடு கொண்­டி­ருக்க வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினேன்.. இத்­தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­ப­டு­வதில் காணப்­பட்ட தேவை­யற்ற இழுத்­த­டிப்­புகள் கார­ண­மாக மக்கள் அர­சாங்கம் மீதும் அத­னது கட்­ட­மைப்­புகள் மீதும் நம்­பிக்கை இழந்து வரு­கி­றார்கள். இந்த தீர்­மா­னங்கள் மேலும் இழுத்­த­டிப்­பு­க­ளின்றி நிறை­வேற்­றப்­ப­டு­வ­தனை சர்­வ­தேச சமூகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்­டுக்­கொண்டேன். மேலும் இலங்­கையின் தேசிய பிரச்­சி­னைக்கு ஒரு நிரந்­தர தீர்­வினை காணும் பணியில் சர்­வ­தேச சமூகம் தமிழ் மக்­க­ளுக்கு உத­வு­வதில் கட­மைப்­பட்­டுள்­ளது எனவும் வலி­யு­றுத்­தினேன்.

இலங்கை ஜனா­தி­ப­தி­யுடன் தான் இந்தக் கரு­மங்கள் தொடர்பில் தனது கரி­ச­னையை தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­வித்த உதவி செய­லாளர் நாயகம் தனது விஜ­யத்தின் முடிவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் தெரி­வித்த கருத்­துக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் ஆணை­யா­ள­ரையும் தான் தெளி­வு­ப­டுத்த உள்­ள­தா­கவும் தெரி­வித்தார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரின் தொடர்ச்­சி­யான பங்­க­ளிப்­புக்கு நன்றி தெரி­வித்த உதவி செய­லாளர் நாயகம் இலங்கை தொடர்பில் ஐ.நாவின் நெருங்­கிய கண்­கா­ணிப்பும் தொடர்­பா­டலும் தொடர்ந்தும் ின் முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளரையும் தான் தெளிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தொடர்ச்சியான பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த உதவி செயலாளர் நாயகம் இலங்கை தொடர்பில் ஐ.நாவின் நெருங்கிய கண்காணிப்பும் தொடர்பாடலும் தொடர்ந்தும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-03-11#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.