Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவுக்கு பின்னால் நடப்பது என்ன?

Featured Replies

தேர்தல் முடிவுக்கு பின்னால் நடப்பது என்ன?

p3-b102d05f81d9701261383780ccf34ec58f0f220f.jpg

 

உள்­ளூ­ராட்சித் தேர்தல் எல்லா மட்­டங்­க­ளிலும் குழப்­பங்­களைத் தான் தீர்­வாகத் தந்­தி­ருக்­கி­றது.

தேர்தல் முடி­வுகள், மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கு சாத­க­மாக அமைந்­ததால், ஏற்­பட்­டுள்ள அர­சியல் குழப்­பங்கள் ஒரு புறம் நீடிக்­கி­றது. தற்­போ­தைய அர­சாங்கம் நீடிக்­குமா- நிலைக்­குமா என்ற கேள்­வியை அது உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றது.

இந்த அதி­காரப் போட்­டி­யினால் அர­சாங்­கத்தின் பெரும்­பா­லான செயற்­பா­டுகள் குழப்­ப­ம­டைந்து போயி­ருக்­கின்­றன. அடுத்து என்ன நடக்கும் என்று அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­க­ளாலும் சரி, நாட்டு மக்­க­ளாலும் சரி, கணிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இதனால் அர­சியல் உறு­திப்­பா­டற்ற நிலை தோற்­றி­யுள்­ளது. அதன் விளை­வாக பொரு­ளா­தார உறு­தி­யற்ற நிலையும், உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இப்­ப­டியே இதன் ஒவ்­வொரு விளை­வாக நீட்டிக் கொண்டே போகலாம்.

குழப்பம் நிறைந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் சட்­டத்தை உரு­வாக்­கி­யதன் மூலம், தேர்தல் நடந்து கிட்­டத்­தட்ட ஒரு மாத­மா­கியும், வெற்­றி­பெற்ற உறுப்­பி­னர்­களின் பெயர் விப­ரங்­களை வர்த்­த­மா­னியில் வெளி­யிட முடி­யாத நிலைக்குள் தேர்­தல்கள் ஆணைக்­குழு சிக்­கி­யி­ருக்­கி­றது. ( இந்தப் பத்தி எழு­தப்­படும் வரை வர்த்­த­மானி வெளி­யா­க­வில்லை)

உள்­ளூ­ராட்சித் தேர்தல் சட்­டத்தில் திருத்தம் செய்யும் போது, பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதி செய்­வ­தற்கு எடுக்­கப்­பட்ட வர­வேற்­கத்­தக்க முடிவை, நடை­மு­றைப்­ப­டுத்தும் சரி­யான ஒழுங்­கு­மு­றைகள் வகுக்­கப்­ப­ட­வில்லை.

சில­வே­ளை­களில் சட்­டங்­களை இயற்றும் போது, அதனால் எழக்­கூ­டிய பிரச்­சி­னை­களை முன்­கூட்­டியே கணிக்க முடி­வ­தில்லை. நடை­மு­றையில் பிரச்­சி­னைகள் ஏற்­படும் போது தான், எந்­த­ள­வுக்கு பார­தூ­ர­மா­னது என்­பது தெரி­ய­வரும். உள்­ளூ­ராட்சித் தேர்தல் திருத்­தச்­சட்­டத்தின் தெரிவு முறைக் குறை­பா­டுகள் பற்றி முன்­கூட்­டியே கணிக்க முடி­யாது என்­பது பற்றி, தேர்­த­லுக்கு முன்னர், சுட்­டிக்­காட்­டப்­பட்­டதும் நினை­வி­ருக்­கலாம்.

தேர்­த­லுக்குப் பின்னர் தான், இதி­லுள்ள பிர­தான குறை­பா­டுகள் தெரி­ய­வரத் தொடங்­கி­யுள்­ளன. இதற்குச் சட்­ட­ரீ­தி­யாகத் தீர்வு காணத் தெரி­யாமல் அர­சியல் கட்­சி­களும், தேர்தல் ஆணைக்­குழு அதி­கா­ரி­களும் தலையைப் பிய்த்துக் கொள்­கின்ற நிலையைக் காண முடி­கி­றது.

இதனால், மிகவும் இல­கு­ப­டுத்­தப்­பட்ட தேர்தல் முறை என்று வர்­ணிக்­கப்­பட்ட (வாக்­க­ளிப்பு மையத்­தி­லேயே வாக்­கு­களை எண்ணி முடி­வு­களை அறி­விக்கும் விட­யத்தில்) இந்த தேர்தல் முறை, ஒரு மாத­மா­கியும் முடி­வு­களை வெளி­யிட முடி­யா­த­ள­வுக்கு சிக்­க­லா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது.

இந்த இடி­யப்பச் சிக்­க­லுக்கு, உறுப்­பி­னர்­களின் விப­ரங்­க­ளுடன் வெளி­வரப் போகும், வர்த்­த­மானி அறி­வித்தல் கூட தீர்வைத் தரப் போவ­தில்லை. ஏனென்றால், பெண்­க­ளுக்­கான உரிய பிர­தி­நி­தித்­துவப் பட்­டி­யலை அர­சியல் கட்­சிகள் தராத பட்­சத்தில், அவை பெண் பிர­தி­நி­தி­க­ளுக்­கான வெற்­றி­ட­மா­கவே அறி­விக்­கப்­படும் என்று தேர்தல் ஆணைக் குழு கூறி­யி­ருக்­கி­றது. வரை­ய­றுக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு மேல­தி­க­மாக, Over Hang முறை­யிலும் கணி­ச­மான உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளதும் கூட, இந்தத் தேர்தல் முறையின் சிக்­கலை தெளி­வு­ப­டுத்­து­கி­றது. அடுத்து, இந்தத் தேர்தல் முடி­வுகள் பெரும்­பாலும், தொங்கு சபை­க­ளையே உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றது, கிட்­டத்­தட்ட பாதிக்கும் மேற்­பட்ட உள்­ளூ­ராட்சி சபைகள் இன்­னொரு கட்­சியின் ஆத­ரவு இல்­லாமல் ஆட்­சி­ய­மைக்க முடி­யாத சூழலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

கொள்கை ரீதி­யாக முரண்­பட்ட கட்­சி­க­ளாக இருந்­தாலும் கூட, வேறு வழி­யின்றி அவற்றின் ஆத­ரவை தேட வேண்­டிய சிக்­க­லான நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பிரி­வி­னை­வாதக் கட்­சி­யாக அடை­யா­ளப்­ப­டுத்தும் பொது­ஜன முன்­ன­ணியே, கூட திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள மொர­வெவ பிர­தேச சபையில் ஆட்­சியை நிறு­வு­வ­தற்கு கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெற­வேண்­டிய நிலையில் இருக்­கி­றது.

கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெற விரும்­பா­விடின், ஐ.தே.க.வின் ஆத­ரவைப் பெற வேண்டும். அல்­லது பெரும்­பான்மை பல­மில்­லாத ஒரு சபையைத் தான் அமைக்க வேண்­டி­யி­ருக்கும்.

வடக்கு- கிழக்கில் அதி­க­மாக இந்த நிலை காணப்­பட்­டாலும், நாட்டின் ஏனைய பகு­தி­க­ளிலும் இதே நிலை உள்­ளது. பிர­தான கட்­சிகள் அனைத்­துமே, இவ்­வா­றான சிக்­கலை எதிர்­கொண்­டுள்­ளன.

இந்த தேர்­தலில் மோச­மான பின்­ன­டைவைக் கண்­டி­ருந்த கட்சி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி- ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி கூட்டு தான், ஆனாலும், தாங்கள்,தான் 167 சபை­களில் கிங் மேக்கர் என்று அந்தக் கட்சி பெரு­மை­யோடு கூறிக் கொள்­கி­றது.

அந்­த­ள­வுக்கு கொள்கை ரீதி­யாக முரண்­பட்ட கட்­சி­க­ளையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்­கின்ற முடி­வு­களை இந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் தந்­தி­ருக்­கி­றது,

இந்தத் தேர்தல் முறை சிறிய கட்­சி­க­ளுக்குச் சாத­க­மான வகையில் அமைந்­தி­ருந்­ததால், தனித்து ஆட்­சி­ய­மைக்­கின்ற பெரும்­பான்மை பலத்தைப் பெற முடி­யாமல் தடு­மா­று­கின்ற நிலை பெரிய கட்­சி­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

ஒவ்­வொரு சபை­யிலும் 55 வீதம் வரை­யான வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ளும் கட்­சி­யினால் தான், அறு­திப்­பெ­ரும்­பான்­மை­யுடன் ஆட்­சி­ய­மைக்க முடியும் என்ற நிலை, இந்த தேர்தல் முறை­யினால் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

வெஸ்ட் மினிஸ்டர் முறையில் ஜன­நா­யகம் என்று போற்­றப்­படும், அதி­க­ளவு மக்­களின் ஆத­ரவைப் பெற்­றவர் பிர­தி­நி­தி­யாகத் தெரிவு செய்­யப்­படும் முறை குறை­பா­டா­னது என்று கருதி, விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­துவ முறைக்குள் நுழைந்த இலங்கை, அதுவும் சரி­யில்லை என்று, இரண்டும் கலந்த கலப்புத் தேர்தல் முறைக்குள் நுழைந்­தது.

இப்­போது சட்­டிக்குள் இருந்து அடுப்­புக்குள் விழுந்த கதை­யாக, இதுவும் சிக்­க­லா­னது. குறை­பா­டா­னது என்று முணு­மு­ணுக்­கின்ற நிலைக்கு வந்­தி­ருக்­கி­றது.

இப்­ப­டி­யாக, பல்­வேறு குழப்­ப­மான நிலை­மை­களை ஏற்­ப­டுத்தி விட்­டி­ருக்­கின்ற உள்­ளூ­ராட்சித் தேர்தல் வடக்கு அர­சியல் களத்­திலும் கன­தி­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கொண்­டி­ருந்த ஏக­போ­கத்தை கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருப்­ப­துடன், தமிழர் பிர­தே­சங்­களில் உள்ள உள்­ளூ­ராட்சி சபை­களில் பெரும்­பா­லா­ன­வற்றில் நிலை­யான ஆட்சி ஒன்றை அமைக்க முடி­யாத நிலை­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஒரு­பக்­கத்தில், உள்­ளூ­ராட்சி சபை­களின் உறுப்­பி­னர்­களின் பெயர்கள் அடங்­கிய பட்­டி­யலை வெளி­யிட முடி­யாமல் தேர்தல் திணைக்­கள அதி­கா­ரிகள் திணறிக் கொண்­டி­ருக்க, இன்­னொரு பக்­கத்தில் உள்­ளூ­ராட்சி சபை­களில் எப்­படி ஆட்­சி­ய­மைப்­பது என்ற முடி­வுக்கு வர முடி­யாமல் அர­சியல் கட்­சிகள் திண­று­கின்­றன.

தமிழ்த் தேசி­யத்தை முன்­னி­றுத்தி அர­சியல் செய்யும் கட்­சி­க­ளுக்­கி­டையில் தோன்­றி­யி­ருக்­கின்ற முறு­கல்கள் தேர்­த­லுக்குப் பின்­னரும் கூட குறை­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­ட­வில்லை.

வடக்­கிலும் கிழக்­கிலும் தமிழ்த் தேசி­யத்தை வலி­யு­றுத்திப் போட்­டி­யிட்ட அர­சியல் கட்­சி­களின் வாக்கு வங்கி கணி­ச­மான சரிவைச் சந்­தித்­தி­ருக்­கி­றது என்­பதை மறந்து. இந்தக் கட்­சிகள் தமக்­கி­டை­யி­லான மோத­லுக்கே முன்­னு­ரிமை கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

தமிழ்த் தேசி­யத்தை முன்­னி­றுத்தி போட்­டி­யிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, தமிழர் விடு­தலைக் கூட்­டணி என்­பன, 2015ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும், 2018 உள்­ளூ­ராட்சித் தேர்­த­லிலும் பெற்றுக் கொண்ட வாக்­கு­களின் வீதத்தை உற்று நோக்கும் போது, சரி­வு­களின் போக்கின் ஆபத்தை உணர முடி­கி­றது.

வடக்கு மாகா­ணத்தில் 2015ஆம் ஆண்டு இந்தக் கட்­சிகள் 62.4 4வீத வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­தன. ஆனால், 2018இல் இந்தக் கட்­சி­க­ளுக்கு வெறு­மனே, 54.18 வீத­மான வாக்­குகள் தான் கிடைத்­தி­ருக்­கின்­றன.

2015இல் கிழக்கு மாகா­ணத்தில், 28.18 வீத வாக்­கு­களை பெற்­றி­ருந்த இந்தக் கட்­சி­க­ளுக்கு இம்­முறை, 20.27 வீத வாக்­குகள் தான் கிடைத்­தி­ருக்­கின்­றன.

மாவட்ட வாரி­யாக, யாழ்ப்­பாண மாவட்­டத்தில் பெரி­ய­ள­வி­லான மாற்றம் இல்­லாத போதிலும், ஏனைய மாவட்­டங்­களின் நிலை­மைகள் அபா­ய­க­ர­மான கட்­டத்தை எட்­டி­யுள்­ளன.

தமிழ்த் தேசிய கட்­சி­களின் வாக்கு வங்­கிகள் எப்­படி உடைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன, அந்த வாக்­குகள் எங்கு சென்­றி­ருக்­கின்­றன என்ற எந்த வித­மான கவ­லையும் இல்­லாமல், தமிழ்த் தேசியக் கட்­சிகள் அதி­கா­ரத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­திலும், அதனைக் கைப்­பற்­று­வ­திலும் தான் இன்­னமும் குறி­யாக இருக்­கின்­றன.

வடக்கு, கிழக்கில் உள்ள சபை­களை ஒற்­று­மை­யாக நிர்­வ­கிக்­கின்ற ஒரு வாய்ப்பை பற்றிப் பரி­சீ­லிக்க, அதிக ஆச­னங்­களை வென்ற கட்­சி­களும் சரி, அவற்­றுடன் மல்­லுக்­கட்ட நினைக்கும் கட்­சி­களும் சரி தயா­ராக இல்லை. இதனால், உள்­ளூ­ராட்சி சபை­களின் நிர்­வா­கத்தை முரண்­பா­டு­க­ளின்றி- கொண்டு செல்லும் முதல் வாய்ப்பு இல்­லாமல் போயி­ருக்­கி­றது.

இப்­போது பெரும்­பான்­மையை நிரூ­பிக்க இன்­னொரு கட்­சி­யி­னது அல்­லது ஒன்­றுக்கு மேற்­பட்ட கட்­சி­க­ளி­னது தயவை நாடு­கின்ற நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. ஆனாலும், எந்த இடத்­திலும் யாரு­ட­டைய ஆத­ரவைப் பெற்று ஆட்­சி­ய­மைப்­பது என்ற முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை.

தமக்குள் சபை­க­ளுக்­கான தலை­வர்­களைத் தெரிவு செய்து விட்டு, ஓடித் திரிக்­கின்ற நிலை தான் காணப்­ப­டு­கி­றது.

யாழ்ப்­பாண மாந­க­ர­ச­பையில் ஆட்­சி­ய­மைக்க, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்­கின்­றன. இங்கு ஈ.பி.டி.பி. மூன்­றா­வது தீர்­மா­ன­க­ர­மான கட்­சி­யாக இருக்­கி­றது.

இர­க­சிய வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி கோரு­கி­றது. ஆனால் வெளிப்­ப­டைத்­தன்­மை­யான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்­கி­றது கூட்­ட­மைப்பு.

மாந­கர மேயர் பத­விக்கு எத்­த­கைய வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்று, ஒன்­றுக்­கொன்று சவால் விடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. பகி­ரங்க வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டால், உறுப்­பி­னர்கள் கட்­சி­களின் முடி­வு­க­ளுக்குக் கட்­டுப்­பட வேண்டும். அதனை மீறினால், கட்சித் தலை­மையால் அவர்­களின் பத­விகள் பறிக்­கப்­படும் நிலை ஏற்­படும்.

கூட்­ட­மைப்பை விட குறைந்­த­ளவு ஆச­னங்­களைக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களின் இர­க­சிய ஆத­ர­வுடன் மேயர் பத­வியைக் கைப்­பற்ற முனை­கி­றது. அதனால் தான் இர­க­சிய வாக்­கெ­டுப்பைக் கோரு­கி­றது.

இந்த இழு­ப­றி­யினால், கட்­சி­களின் உறுப்பினர்களை வளைத்துப் போடுகின்ற குதிரை பேரங்களும் நடக்கின்றன. கூட்டமைப்பை எதிர்க்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அதே கூட்டமைப்பின் கொள்கை, சின்னத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை மாத்திரம் தன்பக்கம் இழுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

யாழ்ப்பாண மாநகரசபை கூட்டமைப்புக்கு ஒரு கௌரவப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. அதனைக் கைப்பற்றினால், தமக்கான பெரிய வெற்றியாக அமையும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கருதுகிறது.

இவையெல்லாவற்றையும் பார்க்கின்ற போது, யாழ்ப்பாண மாநகர சபையின் நிர்வாகம், அடுத்த நான்கு ஆண்டுகளிலும் உருப்படியாக எதையும் செய்யப் போவதில்லை என்றே தெரிகிறது,

இதேநிலை ஏனைய பெரும்பாலான சபைகளிலும் இருக்கலாம். உள்ளூராட்சித் தேர்தலின் பிளவுபட்டு மோதிக் கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகள், உள்ளூராட்சி நிர்வாகங்களையாவது முரண்பாடுகளின்றி, முன்னகர்த்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் சிதைந்து வருகிறது.

ஆக, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிந்திய அரசியல் என்பது எல்லா மட்டங்களிலுமே, நம்பிக்கையீனங்களைத் தான் அதிகரித்திருக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-11#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.