Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா?

Featured Replies

ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா?

 

இந்த நூற்றாண்டு தரவுகளுக்கான (Data) நூற்றாண்டு. அதுவும் ஃபேஸ்புக்கிற்கு `தரவு` எண்ணெய் போன்றது. எப்படி எண்ணெய் வளம் பல நாடுகளுக்கு செல்வத்தை கொண்டு வந்ததோ, அதுபோல `தரவு`தான் இப்போது நிறுவனங்களுக்கு செல்வத்தை கொண்டு வருகிறது.

facebookபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க தேர்தல் முதல் இந்திய தேர்தல் வரை இந்த தரவுகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் 5 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளின் தரவுகளை தவறாக பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள், நமது `ஃபேஸ்புக்` தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்ற விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

facebookபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சரி... ஃபேஸ்புக்கில் நமது தகவல்களை காப்பது எப்படி?

நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள்?

நீங்கள் போன ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள்? நீங்கள் எந்த நடிகரை போல உள்ளீர்கள் என்பது போன்ற புதிர்கள் நமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வபோது தோன்றும். நாமும் அதில் ஆர்வமாக பங்கேற்போம். நமது தரவுகள் பெரும்பாலும் களவு போவது இங்கிருந்துதான்.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இது போன்ற ஒரு புதிர் போட்டியின் மூலமாகதான் ஏறத்தாழ 5 கோடி மக்களின் தரவுகளை அறுவடை செய்ததாக கூறப்படுகிறது.

Facebookபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த புதிர் போட்டிகள் பயனாளிகளை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இது போன்ற புதிர்போட்டிகள்,'உங்களது தரவுகள் காக்கப்படும்` என்று உறுதி தரும். ஆனால், நம்மை அறியாமலே நாம் அவர்களுக்கு தரவுகள் கொடுத்து கொண்டிருப்போம்.

மூன்றாம் நபர் (third party), இதுபோல தரவுகளை எடுக்க முடியாத வண்ணம் ஃபேஸ்புக் இப்போது தமது சட்டத் திட்டங்களை மாற்றி உள்ளது.

எப்படி நமது தரவுகளை பாதுகாப்பது?

  • ஃபேஸ்புக்கை லாக் இன் செய்யுங்கள். ஆப் செட்டிங் பக்கத்தை பாருங்கள்.
  • பின், ஆப், வெப்சைட்ஸ் மற்றும் பிளகின் கீழ் இருக்கும் எடிட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
facebook
  • பின், disable பட்டனை கிளிக் செய்யுங்கள்.
facebook

இது மூன்றாவது நபர்கள் (Third Party) நமது தரவுகளை கையாள்வதை தடுக்கும்.

ஃபேஸ்புக்கை செயலிழக்க செய்தல்

ஃபேஸ்புக் நமக்கு அலுப்புத் தட்டினால், நாம் தற்காலிகமாக அதை சில காலம் செயலிழக்க செய்யல்லாம். அந்த வாய்ப்பை நமக்கு ஃபேஸ்புக் வழங்குகிறது. ஆனால், நம்மை குறித்த பல தகவல்கள் அப்படியேதான் இருக்கும்.

செய்யக் கூடாதவை:

  • பெரும்பாலும் பொருட்கள் விற்கும் நிறுவனங்களின் பக்கத்தை, 'லைக்' செய்வதை தவிருங்கள்.
  • நீங்கள் புதிர்போட்டி விளையாட விரும்பினால், ஃபேஸ்புக்கை `லாக் அவுட்` செய்வதை தவிருங்கள்.

இவை கிழக்கு ஆங்கிலியா சட்டப்பள்ளியின் பேராசிரியர் பால் பெர்னல் சொல்லும் வழிமுறைகள்.

http://www.bbc.com/tamil/science-43487957

  • தொடங்கியவர்

டெவலப்பர்களுக்குக் கட்டுப்பாடு... பயனாளருக்குப் புதிய வசதி... இன்னும் என்ன செய்யும் ஃபேஸ்புக்? #CambridgeAnalytica

 
 

கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் தகவல் பாதுகாப்பு தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் என்ன சொல்லப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க். தனியார் தொலைக்காட்சியான சி.என்.என் (CNN) -க்கு அளித்த பேட்டியில் தகவல் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டதோடு மட்டுமன்றி இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அதற்கு முன்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்திருந்தார் மார்க் ஸக்கர்பெர்க். என்ன தவறு நடந்தது, இனிமேல் தவறுகளைக் குறைப்பதற்காக வழிகள் ஆகியவற்றை விளக்கியிருந்தார் . "உங்களது தகவல்களைப் பாதுகாப்பது என்பது எங்களின் கடமை, அதை செய்ய முடியாமல் போனால் உங்களுக்குச் சேவை செய்ய எங்களுக்குத் தகுதி கிடையாது. என்ன நடந்திருக்கும் என்பதை முழுவதுமாகப் புரிந்து கொள்ளவும், இதுபோல மற்றொரு முறை நடப்பதைத் தடுக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதே வேளையில் இது போன்று எழும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் பல வருடங்களுக்கு முன்னரே உருவாக்கி விட்டோம். ஆனாலும், நாங்கள் தவறு செய்திருக்கிறோம், அதை சரி செய்து தொடர்ந்து முன்னேறுவோம்"   என்று தனது பதிவில் தெரிவித்திருக்கிறார் மார்க். இது மட்டுமன்றி கேம்பிரிட்ஜ் அனலிடிகா சம்பவம் தொடர்பாக வேறு சில தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.

 

மார்க் ஸக்கர்பெர்க் 

2013-ம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான அலெக்ஸாண்டர் கோகன் என்பவர் ஃபேஸ்புக்கில் பயன்படுத்தும் ஆப் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்த ஆப் மூலமாகவே பெரும்பாலானவர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன. இந்த ஆப்பை பயன்படுத்துவதற்கு ஒருவரின் தனிப்பட்ட சில தகவல்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்கும். thisisyourdigitallife என்ற இந்த ஆப் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்திருக்கிறது. அந்தத் தகவல்களை அவருடைய ஆப்பை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் ஃபேஸ்புக் அவருக்குக் கொடுத்திருந்த அனுமதி. ஆப்பை பயன்படுத்தி 3,00,000 பேரிடமிருந்து அவர்களுடைய தகவல்கள் மட்டுமன்றி, அவர்களுடைய நண்பர்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டதாகவும் அவற்றை அலெக்ஸாண்டர் கோகன் மற்ற நிறுவனங்களுக்கும் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் மார்க். 

ஆப்

2015-ம் ஆண்டில் அலெக்ஸாண்டர் கோகன் அவரது ஆப் மூலமாகச் சேகரித்த தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்டதை அறிந்துகொண்ட பின்னர் உடனடியாக நிறுவனத்தின் சேவை நிறுத்தப்பட்டு, சேகரிக்கப்பட்ட அனைத்துத் தரவுகளும் அழிக்கப்பட்டதை உறுதி செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார் மார்க் ஸக்கர்பெர்க். அப்படியிருந்தும் மீண்டும் மீண்டும் தனிநபர் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் அவர்கள் சேகரித்த தகவல்களை இன்னும் அழிக்கவில்லை என்ற தகவலை கடந்த வாரம் சில ஊடகங்கள் மூலம் தெரிந்துகொண்ட பின்னர் ஃபேஸ்புக் நிறுவனம் அவர்களை முற்றிலுமாகத் தடை செய்திருப்பதாகவும், இது தொடர்பாக விசாரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். 

என்ன செய்யப்போகிறது ஃபேஸ்புக் 

ஃபேஸ்புக்

 

எப்படி இருப்பினும் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது; அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பும் ஃபேஸ்புக்கைச் சார்ந்ததே. இந்நிலையில், 2014-ம் ஆண்டிலேயே சில பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டாலும்கூட பாதுகாப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் விரைவில் சில மாற்றங்களைச் செய்யவிருப்பதாகக் கூறியிருக்கிறார் மார்க். அதன்படி முதலாவதாக அனைத்து ஆப்களும் முறையான தணிக்கைக்கு உட்படுத்தப்படும், தணிக்கைக்கு உடன்படாத எந்த ஆப்பும் தடை செய்யப்படும். ஒரு வேளை ஏதாவது ஆப்பால் யாராவது பாதிக்கப்படுவார்களேயானால் அவர்களுக்கு அது தொடர்பாக எச்சரிக்கை செய்யப்படும். இரண்டாவது டெவலப்பர்கள் தேவையில்லாத டேட்டாவை அணுகுவது தடை செய்யப்படும். மூன்று மாதத்திற்கு மேல் ஒருவர் ஒரு ஆப்பை பயன்படுத்தவில்லை என்றால் அது தானாகவே நீக்கப்படும். இனிமேல் ஒரு ஆப் ஒருவரது பெயர், ப்ரொஃபைல் போட்டோ, மற்றும் ஈமெயில் முகவரி ஆகியவற்றை மட்டுமே அணுக முடியும். அதைத் தவிர வேறு ஏதாவது தகவல்கள் வேண்டுமென்றால் பயன்படுத்துபவரிடம் அனுமதி பெற வேண்டும். இனிமேல், பெர்மிஷன்கள் பற்றி ஒரு பயனாளருக்குத் தெளிவாகத் தெரிவிக்கப்படும். நியூஸ் பீட் பக்கத்தின் மேற்பகுதியில் அதற்கான இடம் உருவாக்கப்படும். இது அடுத்த மாதத்திலிருந்து இது நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். 

https://www.vikatan.com/news/information-technology/119925-mark-zuckerberg-apologies-for-data-breach.html

  • கருத்துக்கள உறவுகள்

இலவசமாய் ஒன்றும் இந்த உலகில் கிடையாது .இணைய உலகில் உண்மையான தகவல்கள் இதுவரை குடுத்தது கிடையாது அப்படி எடுத்தாலும் ஒன்றுக்கும் பிரயோசனம் கிடையாது . 

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி: ஃபேஸ்புக் கணக்கை அழித்துவிடலாமா?

23032018

 

ப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும் - நீங்கள் ஒரு அடிமுட்டாள். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தொடக்கத்தில் சொன்ன கருத்துதான் இது. 2004-ல் ஃபேஸ்புக்கை உருவாக்கத் தொடங்கியபோது (அப்போது அவருக்கு வயது 19) தன் நண்பர்களுக்குத் தொடர்ந்து குறுந்தகவல்களை அனுப்பிய மார்க், தான் உருவாக்கிவரும் சமூக வலைதளத்தில் 4,000 பேர் இணைந்திருந்ததைப் பற்றிக் குறிப்பிடும்போது சொன்னார்: “மக்கள் தங்கள் சுயவிவரங்களை என்னிடம் வழங்கியிருக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. என்னை நம்புகிறார்கள், அடிமுட்டாள்கள்!”

 

இந்தப் பதினான்கு ஆண்டுகளில், மார்க் ஸக்கர்பெர்க்கை நம்பிய ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 4,000-லிருந்து 200 கோடியாகியிருக்கிறது. மார்க்கும் வளர்ந் திருக்கிறார். 2010-ல் நியூயார்க்கர் இதழுக்கு அளித்த பேட்டியில், “பெரும் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு சேவையைக் கட்டமைக்கிறோம், அதன் மீது பலர் நம்பிக்கை கொள்கிறார் கள் என்றால், நாம் முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும், அல்லவா? நான் முதிர்ச்சியடைந்திருக்கிறேன், நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்று கூறினார். ஆனால், தன்னை நம்பி மக்கள் வழங்கிய சுயவிவரங்களை மதிப்பது, பாதுகாப்பது தொடர்பாக மார்க் நிஜமாகவே கற்றுக்கொண்டிருக்கிறாரா? இல்லை என்றே சமீபத்திய நிகழ்வுகள் சொல்கின்றன.

 

தரவுகள் அறுவடை

கோடீஸ்வரர் ராபர்ட் மெர்சர் அளித்த நிதியில் இயங்கிவரும் ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ நிறுவனம், எப்படி 5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளில் உள்ள தரவுகளைப் பெற்று, தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது என்று ‘அப்சர்வர்’ இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இல்லாத அளவுக்குத் தரவுகள் ‘அறுவடை’ செய்யப்பட்டிருப்பதாக ‘அப்சர்வர்’ இதழ் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்திருக்கும் இந்த விஷயம் பற்றித் தெரிந்திருந்தும், தனது பயனாளர்களிடம் இதுகுறித்துத் தெரிவிக்கவில்லை ஃபேஸ்புக்.

அதுமட்டுமல்ல, தொடக்கத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இதற்குப் பொறுப்பேற்காமல் தங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை என்று ட்விட்டரில் வாதம் செய்துகொண்டிருந்தார்கள். “தரவுகள் கசியவிடப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது” என்றார் ஃபேஸ்புக் துணைத் தலைவர் ஆண்ட்ரூ போஸ்வர்த். “மக்கள் தங்கள் தரவுகளை மூன்றாம் தரப்புச் செயலிகளிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினார்கள். இதுதொடர்பான ஒப்பந்தங்களை அந்தச் செயலி கள் பின்பற்றவில்லை என்றால், அது விதிமீறல். இவ்விஷயத்தில், எந்தக் கணினியும் ஊடுருவப்படவில்லை, கடவுச்சொல், தகவல்கள் திருடப்படவில்லை, ‘ஹேக்’ செய்யப்படவில்லை” என்றார் அவர். கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் செயல் ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சியைவிட, ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்த எதிர்வினைதான் பெரும் அதிர்ச்சி தருகிறது. இவ்விஷயத்தில், தொடர்ந்து மெளனம் சாதித்த மார்க் ஸக்கர்பெர்க், இப்போதுதான் வாய்திறந் திருக்கிறார். பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் நிறுவனப் பங்கு கள் 7% சரிந்தன. அப்போதும் மார்க் ஸக்கர்பெர்க் அமைதி யாக இருந்தார். தற்போது, “இப்படி நடந்துவிட்டது உண்மையிலேயே வருத்தம் தருகிறது” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

 

என்னைப் பொறுத்தவரை, ஒருவழியாக ஃபேஸ்புக்கி லிருந்து வெளியேறுவது என்று கடைசியாக முடிவெடுக்க ‘கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா’ விவகாரம் ஒரு காரணமாகிவிட் டது. நீண்ட நாட்களாகவே ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று முயற்சிசெய்துகொண்டிருந்தேன். விளம்பரத் துறையில் பணிபுரிந்துவருபவள் எனும் முறையிலும், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்டவற்றிலிருந்து பயனாளர்களின் தரவுகளை வைத்து மேற்கொள்ளப்படும் வணிகம் எந்த அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தவள் எனும் முறையிலும் இந்த முடிவை எடுத்திருந்தேன்.

உண்மையில், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கும் சேவைக்கு முற்றிலும் மாறாக சந்தை யாளர்களிடம் நடந்துகொள்ளும். ஆனால், இதுதொடர்பாக ஊடகங்கள் கேள்வியெழுப்பினால், இதுபோன்ற விஷயங்களில் தங்களுக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இருப்பதில்லை என்று அடக்கமாகச் சொல்லிக்கொள்ளும். 2016 அமெரிக்கத் தேர்தலில் சமூக வலைதளங்களின் தலையீடு இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தபோதும் அப்படித்தான் நடந்தது. இணையத்தில் அவமதிப்புகளும் தவறான செய்திகளும் பரவியபோது, அதைக் கையாள்வதில் தங்களுக்குப் பெரிய அளவில் அதிகாரமில்லை என்றே சமூக வலை தளங்கள் கூறின. ஆனால், விளம்பரம் செய்யப் போதுமான பணம் இருக்கிறது; உங்கள் தயாரிப்புகளை வாங்கச் செய்யும் அளவுக்கு நுகர்வோரைத் தூண்டும் வகையில் ஃபேஸ்புக் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் கதை வேறு மாதிரியாக இருக்கும். அப்போதுதான், ஃபேஸ்புக் என்பது எதையும் செய்யக்கூடிய ஒரு நிறுவனம் என்பது உங்களுக்குப் புரியும். தன்னை ஒரு சமூக வலைதளம் என்று ஃபேஸ்புக் மக்களிடம் காட்டிக்கொண்டாலும், விளம்பர நிறுவனங்கள் என்று வரும்போது தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிடும்: தான் ஒரு கண்காணிப்பு அமைப்பு என்று!

 

பதிவிறக்கம் செய்யலாம்

ஃபேஸ்புக் தனது பயனாளர்கள் தொடர்பான தகவல்களை எந்த அளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறது என்று தெரிந்தவுடனேயே ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதிலிருந்து ஒதுங்கத் தொடங்கிவிட்டேன். மெஸெஞ்சர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அதன் செயலிகளைப் பயன்படுத்து வதையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்திக்கொண்ட நான், ஃபேஸ்புக்கில் எனது கணக்கை முழுவதுமாக அழித்துவிடுவது என்று சமீபத்தில்தான் முடிவெடுத்தேன். அப்படிச் செய்வதற்கு முன்னர், ஃபேஸ்புக்கில் நான் பதிவேற்றிய எல்லாத் தரவுகளின் தொகுப்பையும் பதிவிறக் கம் செய்துவிட்டேன். ஆம், ஃபேஸ்புக் ‘செட்டிங்ஸ்’ பகுதியில் இதற்கான வசதி உண்டு. இது எளிதானது.

கவனிக்கவும்! நீங்களும் என்னைப் போல் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதல்ல என் நோக்கம். தெற்கு கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் சஃபியா நோபள் சொல்வதுபோல், ஃபேஸ்புக் என்பது பலருக்கும் இணையத்துக்கான ஒரு பாலமாக இருப்பது. பிறருடன் தொடர்புகொள்வது, சமூகக் குழுக்களை உருவாக்குவது, பங்கேற்பது என்று பல்வேறு விஷயங்களைச் செய்வதற்கு உதவிசெய்யும் ஒரே இணைய அமைப்பு ஃபேஸ்புக். இவ்விஷயத்தில் ஃபேஸ்புக்குக்கு நல்ல மாற்று ஒன்று இல்லை. உங்கள் நண்பர்களின் பிறந்த நாள் நினைவுபடுத்துவதுடன், வெவ்வேறு இடங்களில் உள்ள உங்கள் உறவினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் ஃபேஸ்புக்கைப் போல் இன்னொரு அமைப்பு இல்லை. எனினும், பயனாளர்களின் சுயவிவரங்கள், பதிவுகள் மூன்றாம் நபர்களுக்குத் தாரைவார்க்கப்படும் சூழலில், ஃபேஸ்புக்கிலிருந்து விலகி நிற்பது சிறந்தது என்பேன்.

 

மதிப்பீடுகளும் விளம்பரங்களும்

கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் என்பது பெரிய அளவிலான பிரச்சினையின் சிறு துளிதான். உங்களது ‘ஆன்லைன்’ மற்றும் ‘ஆஃப்லைன்’ தகவல்கள் எப்படிக் கண்காணிக்கப்படுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, சில செயலிகள் உங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை வைத்தே உங்களைப் பற்றிய மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்ளும். நீங்கள் விளையாட்டு ரசிகரா, ஒயினை விரும்பி அருந்துபவரா என்று தெரிந்துகொள்ளும். அதனால் என்ன, நான் ஒயின் அருந்துகிறேன் என்று தெரிந்துகொண்டு எனக்குத் தேவைப்படும் தகவல்களை அது என்னிடம் விற்கிறது, அவ்வளவுதானே என்று நீங்கள் கேட்கலாம்.

ஏதோ ஒரு சில விஷயம் என்றால், அது ஒரு பிரச்சினை யாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லாத் தரவுகளும் மொத்தமாக எடுக்கப்படுகின்றது என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் தொடர்பான விசாரணையில் தெரியவரும் விஷயம் இது: ஃபேஸ்புக்கில் நீங்கள் போடும் சில ‘லைக்’குகளை வைத்தே உங்கள் பாலியல் தேர்வையும், எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட விரும்புகிறீர்கள் எனும் தகவலையும் தெரிந்துகொள்ள முடியும்.

ஃபேஸ்புக் வழியாக உங்கள் செல்போனில் பல செயலி கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும். அந்தச் செயலிகள் ஃபேஸ்புக்கில் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டிருக்கும். இதைத் தெரிந்துகொள்ள ‘செட்டிங்ஸ்’ பகுதிக்குச் சென்று ‘ஆப்ஸ்’ எனும் பகுதியை ‘க்ளிக்’ செய்து பாருங்கள். நான் இப்படிச் செய்து பார்த்தபோது 68 செயலி களுக்கு எனது ஃபேஸ்புக் தரவுகளை எடுத்துக்கொள்ள அனுமதித்திருந்தது தெரியவந்தது - என்னை அறியாமலேயே! சில செயலிகளை நீக்கிவிட்டாலும் அவற்றால் எனது ஃபேஸ்புக் தகவல்களைப் பெற முடியும் என்று தெரியவந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

 

சரி, இந்தப் பிரச்சினைகளை எப்படித் தவிர்ப்பது? இணையத்தில் அந்தரங்க உரிமைகளைப் பாதுகாப்பது தொடர் பான பணியில் ஈடுபடும் ‘ஓப்பன் ரைட்ஸ் க்ரூப்’ நிறுவனத் தைச் சேர்ந்த ஜிம் கில்லாக் சொல்கிறார்: “பதிவிடுவதைக் குறைப்பது, பகிர்ந்துகொள்வதைக் குறைப்பது, மிக முக்கிய மாக ஃபேஸ்புக் பக்கங்களுக்கு (பேஜஸ்) ‘லைக்’ இடுவதைக் குறைப்பது (இதைப் பயன்படுத்தி உங்களைப் பற்றிய சித்திரத்தை ஃபேஸ்புக் உருவாக்கிக்கொள்ளும்) போன்றவை பலன் தரும். அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாத்துக்கொள்ள ‘பிரைவஸி ப்ளக் - இன்ஸ்’ போன்றவற்றைப் பயன் படுத்தலாம். நெறியாளர்களும் இதைக் கண்காணிக்க வேண்டும்.”

இணையத்தில் தங்கள் செயல்பாடுகள் குறித்த பிரக்ஞை யும் அவசியம் என்று சொல்கிறார், ‘ப்ரைவஸி இண்டர்நேஷ னல்’ எனும் அறக்கட்டளையின் தலைவர் ஃபிரடரிக் கால்தியூனர். தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பான விழிப்புணர்வை வழங்கும் அறக்கட்டளை இது. “பயனாளர்களே தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் முழு நேர நிபுணர்களாகச் செயல்பட வேண்டும் என்றில்லாமல், பயனாளர்களின் தரவுகளைப் பாதுகாக்கும் பொறுப்பை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஃபிரடரிக் கால்தியூனர்.

நெறியாளர்கள் மெள்ளச் செயல்படத் தொடங்கியிருக் கிறார்கள். மே 25-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘பொதுத் தகவல் பாதுகாப்பு கண்காணிப்பு (ஜிடிபிஆர்)’ நடை முறைக்கு வரவிருக்கிறது. இது, தரவுகளை நிறுவனங்களிடமிருந்து தனிநபர்கள் வசம் கொண்டுசெல்வதற்கான மிக முக்கியமான நடவடிக்கை. “ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருக்கும் நிறுவனமாக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பொருட்களையோ சேவை களையோ விற்கிறது என்றால், அந்நிறுவனமும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். தரவுகள் பாதுகாப்பில் விரிவான நடைமுறைகள் இல்லாத அமெரிக்கா போன்ற நாடுகளில் இது முக்கியமானது” என்கிறார் ஃபிரடரிக் கால்தியூனர்.

 

சிக்கலான தருணம்

‘சோஷியல் க்ரெடிட்’ எனும் பெயரில் பொதுமக்கள் தொடர்பான அரசின் தரவுகளை வைத்து ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கிறது சீனா. அதன் அடிப்படையில் மக்கள் பெறும் மதிப்பெண்கள் குறைவாக இருந்தால், அவர்கள் ரயிலிலும் விமானத்திலும் பயணம் செய்யத் தடை விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்திருக்கிறது. இதுபோன்ற மதிப்பீடுகளை வைத்து நமது வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிப்பது சீனா மட்டுமல்ல. நாம் அனைவரும் கண் காணிப்பு முதலாளித்துவத்தின் சமூக அரசியல் விளைவு களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைத்தான் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம் உணர்த்துகிறது.

நெறியாளர்களோ, கட்டுப்பாட்டு அமைப்புகளோ நம்மைக் காப்பாற்றும் என்று நாம் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. மாற்றங்கள் நிகழும் என்று வழக்கம்போல் ‘லைக்’ இடுவதிலும் பகிர்ந்துகொள்வதிலும் நேரத்தைக் கழிக்க முடியாது. நம்மை ஆட்கொண்டிருக்கும் கார்ப்பரேட் கண் காணிப்பு மேலும் மோசமடையலாம் எனும் சிக்கலான தருணத்தில் நாம் இருக்கிறோம் என்று கருதுகிறேன். எனவே, சமூக வலைதளங்களிலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலகியிருங்கள். ஃபேஸ்புக் கணக்கை அழித்துவிடுவதன் மூலம் நாம் கண்காணிக்கப்படுவதற்கு முடிவு கட்டிவிட முடியாதுதான். ஆனால், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை நாம் இனியும் நம்பப்போவதில்லை எனும் உறுதியான செய்தியை இதன்மூலம் அவர்களுக்குத் தெரிவிக்க முடியும்!

© தி கார்டியன்

தமிழில்: வெ.சந்திரமோகன்

http://tamil.thehindu.com/opinion/columns/article23330226.ece

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணணி யுகம்  ஐ மீன் பேஸ்புக் ரிவிட்டர் வாறதுக்கு முதலும் சனம் சந்தோசமாய்த்தான் திரிஞ்சது.

இப்ப இதுகள் வேறை புதுப்பிரச்சனை...:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.